Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people, slow loris and text that says 'ஏற்கனவே தேங்காய் தட்டுப்பாட்டிற்கும் நாம் தான் காரணம் என்று எம்மீது வீண்பழி போடப்பட்டுள்ள நிலையில் எமது இனத்தை முற்றாக அழிப்பதற்கான சதித்திட்டம் தான் இதுவோ எனும் சந்தேகம் எமக்கு ஏற்பட்டுள்ளது.'

May be an image of 2 people, slow loris and text that says 'ano Vaanam.Ik வா Vaenam.lk னம் TV HIRU TV NEWS GWS T TW 10 NEWS 1ST SHLAKTHI VK இலங்கையில் மீண்டும் மின்வெட்டாம், தொடரும் இந்த மின்வெட்டுக்கும் எமக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை எமது மானுட நண்பர்களுக்கு தெரிவித்து கொள்கிறோம், இப்படித்தான் தேங்காய் தட்டுப்பாட்டுக்கும், விவசாய பாதிப்புக்கும் எம்மையே குற்றம் சாட்டப்படுகிறது, இதனை வன்மையாக கண்டிக்கிறோம்! Vaanam.lk'

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

இந்த ஊடகப் பேச்சாளரின் படம் அச்சா....அந்த உணர்வு...அச்சொட்டாக வெளிப்படுகிறது..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மின்வெட்டு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் அறிக்கை!

மின்வெட்டு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் அறிக்கை!

நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்வெட்டு தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது எக்ஸ் கணக்கில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு அரசாங்கத்தை விமர்சித்துள்ளார்.

மின்சாரத் தடைக்கு முதலில் குரங்கு மீது பழி சுமத்திய அரசாங்கம், பின்னர் முன்னைய அரசாங்கங்கள் மீது பழி சுமத்துவதாக அவர் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

எனினும், தற்போதைய அரசாங்கம் உண்மையான பிரச்சினையை அடையாளம் காண நடவடிக்கை எடுக்கவில்லை.

சூரிய மின் உற்பத்தியை அதிகரிக்காமல் இருப்பதும், குறைந்த தேவைக் காலத்தை நிர்வகிக்காத மோசமான நிர்வாகமே மின்வெட்டுக்கு முக்கிய காரணம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

https://athavannews.com/2025/1420729

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be a graphic of text that says 'Kaputas hit the pian..........anduras plane, ...Wanduras hit the CEB! counterpant Yasanthadena Xasanjha Siriwardena riwardena'

May be an illustration of text

May be a doodle of lumberyard

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people, slow loris and text that says 'ஏற்கனவே தேங்காய் தட்டுப்பாட்டிற்கும் நாம் தான் காரணம் என்று எம்மீது வீண்பழி போடப்பட்டுள்ள நிலையில் எமது இனத்தை முற்றாக அழிப்பதற்கான சதித்திட்டம் தான் இதுவோ எனும் சந்தேகம் எமக்கு ஏற்பட்டுள்ளது.'

12 hours ago, alvayan said:

இந்த ஊடகப் பேச்சாளரின் படம் அச்சா....அந்த உணர்வு...அச்சொட்டாக வெளிப்படுகிறது..

தமிழரசு கட்சியின்... "டுபாக்கூர்" டம்மி   ஊடக பேச்சாளரை விட,
🐵 மங்கிகளின்....  ஊடக பேச்சாளர் திறமைமயானவராகவும், 
புத்திசாலியாகவும் தெரிகின்றார். 🐒  animiertes-gefuehl-smilies-bild-0090

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Paanch said:

பாஞ்ச் அண்ணே..... இந்த ஊடக அறிக்கை, இன்று காலை வெளியிடப் பட்டதா. 😁
அவர்கள் சொல்வதிலும் நியாயம் உள்ளது. 😂
அனுரா அரசாங்கத்துக்கு,  அனுமாரின் சாபம் கிடைக்கப் போவது உண்மை. 🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நமது யாழ்.களத்து... மின்சார பொறியியலாளர் @ராசவன்னியன்  அவர்களை,
உடனடியாக மேடைக்கு வரும்படி அழைக்கின்றோம். 😂
ஸ்ரீலங்காவில்  மின்தடை ஏற்பட்டால்.... குரங்குகளில்  பழியை போட்டு 
அரசியல்வாதிகள் தப்பித்து விடுகின்றார்கள். இது உண்மையா... என கண்டறிந்து 
சொல்லுங்கள் வன்னியன் சார். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

நமது யாழ்.களத்து... மின்சார பொறியியலாளர் @ராசவன்னியன்  அவர்களை,
உடனடியாக மேடைக்கு வரும்படி அழைக்கின்றோம். 😂
ஸ்ரீலங்காவில்  மின்தடை ஏற்பட்டால்.... குரங்குகளில்  பழியை போட்டு 
அரசியல்வாதிகள் தப்பித்து விடுகின்றார்கள். இது உண்மையா... என கண்டறிந்து 
சொல்லுங்கள் வன்னியன் சார். 🤣

அழைப்பிற்கு நன்றி சிறீ.🙏

குரங்கு மின்சாரம் செல்லும் கம்பியை தொட்டு அதன் உடல் மூலம் கடத்தும் இணைப்பு ஏற்பட்டால் மின்சாரம் பாய்ந்து(Arc discharge) இறக்க வாய்ப்பு அதிகம். மின் துண்டிப்பு(Trip) ஏற்பட்டால் மாற்று வழியில் மின்சாரம் வருமாறுதான் மின்சார வலையமைப்பு இருக்கும்.

ஓரிரு இடங்களில் குரங்கு சேட்டையால் மின் தடை ஏற்பட்டால் நகரங்களே இருளில் மூழ்கும்படியான மிக மோசமான மின்சார வலையப்பா(Electrical Transmission and Distribution Network) இலங்கையில் இருக்கு..? வாய்ப்பே இல்லை. எந்த நாட்டிலும் அப்படி வடிவமைக்க மாட்டார்கள்.

Edited by ராசவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ராசவன்னியன் said:

ஓரிரு இடங்களில் குரங்கு சேட்டையால் மின் தடை ஏற்பட்டால் நகரங்களே இருளில் மூழ்கும்படியான மிக மோசமான மின்சார வலையப்பா(Electrical Transmission and Distribution Network) இலங்கையில் இருக்கு..? வாய்ப்பே இல்லை. எந்த நாட்டிலும் அப்படி வடிவமைக்க மாட்டார்கள்.

இதனை நான் உடனே யூகித்தேன்...நாம என்ன மணிகட்டின மாடா? ...அப்புறம் ஏன்  வம்பு..  தேங்காய்த் தட்டுப்பாடு...மின்வெட்டு...என்றவுடன் எழுந்த மானாத்தில்...அறிக்கைவிடும் அமைச்சரவைசரவை...உள்ள   நாடு  சிரி..🙃 லங்கா மட்டுமே

Edited by alvayan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ராசவன்னியன் said:

அழைப்பிற்கு நன்றி சிறீ.🙏

குரங்கு மின்சாரம் செல்லும் கம்பியை தொட்டு அதன் உடல் மூலம் கடத்தும் இணைப்பு ஏற்பட்டால் மின்சாரம் பாய்ந்து(Arc discharge) இறக்க வாய்ப்பு அதிகம். மின் துண்டிப்பு(Trip) ஏற்பட்டால் மாற்று வழியில் மின்சாரம் வருமாறுதான் மின்சார வலையமைப்பு இருக்கும்.

ஓரிரு இடங்களில் குரங்கு சேட்டையால் மின் தடை ஏற்பட்டால் நகரங்களே இருளில் மூழ்கும்படியான மிக மோசமான மின்சார வலையப்பா(Electrical Transmission and Distribution Network) இலங்கையில் இருக்கு..? வாய்ப்பே இல்லை. எந்த நாட்டிலும் அப்படி வடிவமைக்க மாட்டார்கள்.

தகவல்களுக்கு நன்றி ராஜவன்னியன்.
இங்கு ஒரு குரங்கால்… நாடு முழுக்க மின்சாரம் தடைப்பட்டதாக,
மின்சார துறை அமைச்சர் கருத்து கூறி… அரசாங்கத்தின் தவறை குரங்குகளின் மீது சுமத்தி இருந்தார்.

ஏற்கெனவே தேங்காய் தட்டுப்பாட்டிற்கும் குரங்குளின் மீது பழி சுமத்தி இருந்தது போதாது என்று… இது வேறு. 😂

சில வருடங்களுக்கு முன்பு… தமிழ் நாட்டில் மின்சாரம் தடைப் பட்டதற்கு… அணில்கள் காரணம் என்று ஒரு அமைச்சர் கூறியது உங்களுக்கு நினைவு இருக்கலாம். 🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின் போதே மின் தடை ஏற்படவில்லை – குரங்கு சேட்டை வேண்டாம்

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின் போதே மின் தடை ஏற்படவில்லை – குரங்கு சேட்டை வேண்டாம்.

தமிழீழ விடுதலைப் புலிகள் உள்நாட்டு யுத்தத்தின் போது 33,000 மெகாவோல்ட் மின் பிறப்பாக்கியை தீயிட்டு கொழுத்திய போது கூட, நாடளாவிய ரீதியில் மின்துண்டிக்கப்படவில்லை.

அவ்வாறிக்கையில் குரங்கின் மீது பழி சுமத்தி குரங்கு சேட்டைகள் காண்பிக்க வேண்டாம். அளவுக்கதிகமாக மக்களை ஏமாற்றவும் முற்பட வேண்டாம் என்று ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தை எச்சரித்துள்ளது.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் இவ்வாறு எச்சரிக்கை விடுத்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஞாயிறன்று ஏற்பட்ட மின்தடைக்கு மின்சக்தி அமைச்சர் குரங்குகள் மீது பழி சுமத்தினார். 33,000 மெகாவோல்ட் கொண்ட மின் பிறப்பாக்கி விடுதலைப் புலிகளால் தீ வைக்கப்பட்ட போது கூட இவ்வாறு தேசியளவில் மின்சாரம் துண்டிக்கப்படவில்லை.

அவ்வாறிருக்கையில் ஒரு குரங்கால் முழு நாட்டுக்கும் மின் துண்டிப்பை ஏற்படுத்த முடியுமா? அமைச்சரால் குறிப்பிடப்பட்ட இந்த கருத்து பாரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பின்னர் கடந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளே இதற்கு காரணம் என்று அமைச்சர் குறிப்பிட்டார் என சுட்டிக்காட்டியிருந்தார்.

https://athavannews.com/2025/1420934

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of ‎2 people, slow loris and ‎text that says '‎நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின் தடைக்கு கார ண மா காரணமான மான ன குரங்கு News M မီအ်တေ်င်ောင်ကာ ർ்சணி. علم ஒத்த குரங்கு நாட்டையே இருட்டாக்கிச்சி பாத்தையா அதான் டெக்னாலஜி..‎'‎‎

May be an image of 2 people and text that says 'அரசு ဂါမံတသေတောါ கிக்குவி.. E.tum SLmonkeys SL monkeys mt இன்னைக்கு Litro gas கம்பெனில பாயலாமுனு இருக்கம்'

May be an image of 2 people, meerkat, slow loris and text that says 'i மக்கள் பார்வைக்காக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட விலங்குகள் News 0 イ版人 VITN MNK அரசு GEORGIA lankans lank ans 容量 இருக்க குரங்குகளேயே சமாளிக்க சமா ണி ிக்க முடியல இத ஏன்டா கொண்டந்தங்க ந்தங்க'

May be an image of 1 person, slow loris and text that says '三 குரங்குகளுக்கு கருத்தடை செய்யும் திட்டமும் தோல்வியில் முடிந்தது News mt குரங்கையே வெல்ல முடியல எப்படி நாட்ட Develop பன்ன போரம்'

May be an image of 5 people, people smiling and text that says 'அர அரசு சு mt குரங்கால தேங்கா போச்சி mt குரங்கால அரிசி பருப்பு போச்சி O Sa മ்ടி Ba mt lankans இப்ப குரங்காலதான் ப்பகுரங்காலதான்கரன்டும் கரன்டும் போச்சு aahaaan..'

May be an image of 3 people and text that says 'முதல் முறையாக நாட்டிலுள்ள குரங்குகளைக் கணக்கெடுப்பதற்கு டுப்பதற்கு அரசு தீர்மானம்! 04.02.2025 1601M SOORIY SOORIYANFMNEWS ORIYANFM WS ww.smfbetfesses ජංගම ුත්ව MOBIL EPA'

May be an image of 5 people, slow loris and text that says 'ក្រាម្ Fs ક IN SL SLmonkeys SL monkeys lankans அடுத்து என்ன அநியாயம் செய்ய Plan பன் ன்னுதுகளோ'

  • கருத்துக்கள உறவுகள்

எமது ஆட்சியில் மின்துண்டிப்புக்கு மின்சார சபையின் உயர் அதிகாரியே காரணம் : சட்ட நடவடிக்கை எடுக்க கோட்டா இணங்கவில்லை - காமினி லொக்குகே

12 FEB, 2025 | 06:24 PM
image

எமது ஆட்சிக் காலத்தில் மின்சார சபையின் உயர் அதிகாரியின் முறையற்ற செயற்பாட்டின் காரணமாகவே மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது. இந்த அதிகாரிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானித்த போது அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதற்கு இணக்கம் தெரிவிக்கவில்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே தெரிவித்தார்.

பிலியந்தல பகுதியில் இன்று புதன்கிழமை (12) நடைபெற்ற ஆசன அமைப்பாளர்களுடனான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில், 

மின் விநியோக துண்டிப்பு தற்போதைய பிரதான பிரச்சினையாக காணப்படுகிறது. இதற்கு அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டும் என்று குறிப்பிடப் போவதில்லை. மின்சார சபையின் பொறியியலாளர்களே பொறுப்புக் கூற வேண்டும்.

ஆட்சிக்கு வரும் அனைத்து அரசாங்கங்களையும் மின்சார சபையே நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளது. எமது அரசாங்கத்தில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டபோது அவ்விடயம் குறித்து மின்சாரத்துறை அமைச்சர் என்ற ரீதியில் குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடளித்தேன்.

விசாரணைகளில் மின்சார சபையின் உயர் அதிகாரியின் முறையற்ற செயற்பாட்டின் காரணமாகவே மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது என்பது தெரியவந்தது.

இந்த அதிகாரிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானித்த போது அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதற்கு இணக்கம் தெரிவிக்கவில்லை.

மின்சார சபையின் முறையற்ற செயற்பாடுகள் குறித்து முறையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். அத்துடன் மின்சார சபைக்குள் அரசியல் செயற்பாடுகள் தீவிரமடைந்துள்ளது.

மக்கள் விடுதலை முன்னணிக்கு சார்பான தொழிற்சங்கத்தினர் எப்போதும் நெருக்கடிகளை ஏற்படுத்தும் வகையில் தான் செயற்படுவார்கள் என்றார். 

https://www.virakesari.lk/article/206531

  • கருத்துக்கள உறவுகள்

மின் துண்டிப்பு – குரங்குகள் மீது பழி போட வேண்டாம் ; அரசாங்கத்திடம் சஜித் கோரிக்கை!

758479957.jpg

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் கருத்து தெரிவிக்க சந்தர்ப்பம் தர வேண்டும். மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கான பதில்களை நாடே எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறது. மின் துண்டிப்பு தொடர்ந்து நடக்குமா? அரசியல் பழிவாங்கல்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமா? போன்ற பிரச்சினைகளுக்கு பதில் வழங்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (14) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

”மின் துண்டிப்பு குறித்து இந்த சபையில் அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும். பிரதான செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் அரசியல் பழிவாங்கல்களுக்கு ஆளாகி வருகின்றனர். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கூட நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.

இந்த ஞாயிற்றுக்கிழமையும் மின்சாரம் துண்டிக்கப்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சூரிய சக்தி உற்பத்திக்கு ஏற்ப விநியோகம் இடம்பெறாவிட்டால் மின் தடை ஏற்படும் அபாயம் காணப்படுகிறது. இது தொடர்பில் அரசாங்க தரப்பில் பதில் வழங்க வேண்டும். புதிய உற்ப்பத்தி ஆலைகளைத் திறந்து சமநிலையற்ற தன்மையை ஏற்படுத்தாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இனிமேலும் குரங்குகள் மீது பழி போட வேண்டாம்.” என்றும் எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்தார்.

https://newuthayan.com/article/மின்_துண்டிப்பு_–_குரங்குகள்_மீது_பழி_போட_வேண்டாம்_;_அரசாங்கத்திடம்_சஜித்_கோரிக்கை!

  • கருத்துக்கள உறவுகள்

மின்தடைக்கான காரணம் வெளியானது

கடந்த 9ஆம் திகதியன்று நாடு முழுவதும் ஏற்பட்ட மின் தடை குறித்து நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, மின் பரிமாற்றத்தில் ஏற்பட்ட ஏற்றத்தாழ்வு காரணமாக இந்த மின்தடை ஏற்பட்டதாக அறிக்கை கூறுகிறது.எனவே, மீண்டும் மின்தடை ஏற்படுவதைத் தடுக்க குறுகிய மற்றும் நீண்ட கால நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

https://thinakkural.lk/article/315310

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, ஏராளன் said:

அட... பாவிங்களா....

அப்பாவி குரங்குகளை, மாட்டி விடப் பார்த்திங்களேடா...... 😂

அனுமாரின் சாபம்... உங்களை சும்மா விடாது. 🤣

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாட்டில்தான் காமெடி பீசுகள் அதிகமிருக்கே? என எண்ணினால் இலங்கையிலுமா?

பக்கத்தில் 18 மைல் இருப்பதால் நோய் தொற்றி இருக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ராசவன்னியன் said:

தமிழ் நாட்டில்தான் காமெடி பீசுகள் அதிகமிருக்கே? என எண்ணினால் இலங்கையிலுமா?

பக்கத்தில் 18 மைல் இருப்பதால் நோய் தொற்றி இருக்கும்.

எனக்குப் பிடித்த காமெடி பீசு…. தெர்மகோல் செல்லூர் ராஜுதான். 😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, தமிழ் சிறி said:

எனக்குப் பிடித்த காமெடி பீசு…. தெர்மகோல் செல்லூர் ராஜுதான். 😂 🤣

நாளொரு மேனியும், பொழுதொரு பொய்யும் சொல்லும் ஆ* தான் நல்ல நகைச்சுவை..

Good entertainer..!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.