Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கோவை: கோவையில் 17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில், கல்லூரி மாணவர்கள் 7 பேரை போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

கோவை மாநகர போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் தம்பதிக்கு 17 வயதில் மகள் உள்ளார். பிளஸ் 2 படித்து வந்த இவர், குடும்பச் சூழல் காரணமாக படிப்பை நிறுத்திவிட்டார். தனது தாத்தா உயிரிழந்ததால் பாட்டிக்கு துணையாக அவரது வீட்டில் இச்சிறுமி தங்கி வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த 16-ம் தேதி இரவு சிறுமி மாயமானார். இதையடுத்து சிறுமியின் பாட்டி, பெற்றோர் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. தொடர்ந்து சிறுமி மாயம் குறித்து அவரது பாட்டி, உக்கடம் போலீஸாரிடம் புகார் அளித்தார். போலீஸார் வழக்குப் பதிந்து தேடி வந்தனர். சிறுமியின் செல்போனும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், மறுநாள் அதிகாலை சிறுமி வீட்டுக்கு வந்தார். அவரிடம் பெற்றோர் மற்றும் பாட்டி விசாரித்த போது, நண்பர் வீட்டுக்குச் சென்றிருந்ததாக கூறினார். தொடர்ந்து உக்கடம் போலீஸார், சிறுமியிடம் விசாரித்தனர். அப்போது, சமூக வலைதளம் மூலம் பழக்கமான கல்லூரி மாணவர்கள் தங்கியிருந்த அறைக்கு சென்றிருந்தாகவும், அங்கு கல்லூரி மாணவர்கள் 7 பேர் தன்னை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் தெரிவித்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

இதுகுறித்து விசாரணையில் கிடைத்த தகவல்கள் குறித்து போலீஸார் கூறும்போது, “மாயமானது தொடர்பாக சிறுமியிடம் விசாரிக்கப்பட்டது. சிறுமிக்கு ஸ்னாப்சாட் எனப்படும் சமூக வலைதள செயலி பயன்படுத்தும் பழக்கம் உள்ளது. அதன் மூலம் கோவையில் உள்ள கோவைப்புதூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் ஜெபின் (20), ரக்‌ஷித் (19) ஆகியோர் அறிமுகமாகியுள்ளனர்.

தொடர்ந்து சில நாட்கள் பேசிய பின்னர், அந்த சிறுமியை தாங்கள் தங்கியிருக்கும் அறைக்கு வருமாறு சிறுமியை அழைத்துள்ளனர். அதன்படி, கடந்த 16-ம் தேதி சிறுமி, மேற்கண்ட இருவருடன் சேர்ந்து அவர்கள் தங்கியுள்ள அறைக்குச் சென்றுள்ளார். அந்த அறையில் அபினேஷ்வரன்(19), தீபக் (20), யாதவ்ராஜ் (19), முத்து நாகராஜ் (19), நித்தீஷ் (19) ஆகிய மேலும் 5 மாணவர்கள் இருந்துள்ளனர்.

தொடர்ந்து மேற்கண்ட 7 பேரும் சேர்ந்து சிறுமியை கூட்டாகவும், தனித்தனியாகவும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதையடுத்து சிறுமி மாயம் என்ற பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டிருந்த வழக்கை போக்சோ பிரிவுக்கு மாற்றி, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த ஜெபின், ரக்‌ஷித், அபினேஷ்வரன், தீபக், யாதவ்ராஜ், முத்து நாகராஜ், நித்தீஷ் ஆகியோர் இன்று (பிப்.18) கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் திருநெல்வேலி, தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்.

இவர்கள் 7 பேரும் கோவைப்புதூர், குனியமுத்தூர் ஆகிய இடங்களில் உள்ள 3 தனியார் கல்லூரிகளில் இரண்டாம் ஆண்டு, 3-ம் ஆண்டு படித்து வருபவர்கள் ஆவர். கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைக்கு பின்னர், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.சிறுமியை அழைத்துச் செல்ல பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது,” என்றனர்.

கோவையில் 17 வயது சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை - கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது | 7 college students arrested for gang-raping 17-year-old girl in Coimbatore - hindutamil.in

  • கருத்துக்கள உறவுகள்

கோவையில் 17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை

கடந்த 16-ம் தேதி இரவு சிறுமி மாயமானார்

மறுநாள் அதிகாலை சிறுமி வீட்டுக்கு வந்தார்.

நண்பர் வீட்டுக்குச் சென்றிருந்ததாக கூறினார்

சமூக வலைதளம் மூலம் பழக்கமான கல்லூரி மாணவர்கள் தங்கியிருந்த அறைக்கு சென்றிருந்தாகவும், அங்கு கல்லூரி மாணவர்கள் 7 பேர் தன்னை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

சிறுமிக்கு ஸ்னாப்சாட் எனப்படும் சமூக வலைதள செயலி பயன்படுத்தும் பழக்கம் உள்ளது. அதன் மூலம் கோவையில் உள்ள கோவைப்புதூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் ஜெபின் (20), ரக்‌ஷித் (19) ஆகியோர் அறிமுகமாகியுள்ளனர்.

அதன்படி, கடந்த 16-ம் தேதி சிறுமி, மேற்கண்ட இருவருடன் சேர்ந்து அவர்கள் தங்கியுள்ள அறைக்குச் சென்றுள்ளார்.

அந்த அறையில் அபினேஷ்வரன்(19), தீபக் (20), யாதவ்ராஜ் (19), முத்து நாகராஜ் (19), நித்தீஷ் (19) ஆகிய மேலும் 5 மாணவர்கள் இருந்துள்ளனர்.

தொடர்ந்து மேற்கண்ட 7 பேரும் சேர்ந்து சிறுமியை கூட்டாகவும், தனித்தனியாகவும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்

இதையடுத்து சிறுமி மாயம் என்ற பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டிருந்த வழக்கை போக்சோ பிரிவுக்கு மாற்றி, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த ஜெபின், ரக்‌ஷித், அபினேஷ்வரன், தீபக், யாதவ்ராஜ், முத்து நாகராஜ், நித்தீஷ் ஆகியோர் இன்று (பிப்.18) கைது செய்யப்பட்டனர்.

  • கருத்துக்கள உறவுகள்

மருதர் சிவப்பில் காட்டியிருக்கும் பகுதிகள் மூலம் "சிறுமியில் தான் தவறு, பெடியள் வீணாக மாட்டுப் பட்டு விட்டார்கள்" என்ற கருத்து உருவாக்கப் படுகிறதென ஊகிக்கிறேன்.

இந்தியாவில் 18 வயதுக்குக் குறைந்தோர் சட்டப் படி சிறுவர்கள்.

மருதர் உட்பட, எல்லோரும் வலு கவனமாக இருக்க வேண்டிய விடயம், எந்த நாட்டிலும் "சிறுவர்" என்று வகைப்படுத்தப் படும் நபர்களோடு உறவு வைத்துக் கொள்வது, சட்ட ரீதியான பாலியல் வல்லுறவாகத் (statutory rape) தான் வகைப் படுத்தப் படும். அது சிறுவர்/சிறுமி விரும்பி வந்தாலும் கூட சட்ட ரீதியான பாலியல் வல்லுறவு தான்!

Edited by Justin
statutory எழுத்துப் பிழை திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்

பாரதிதாசன் தனது துன்பம் நேர்கையில் பாட்டில் இப்படி எழுதி இருப்பார்….

அறமிதென்றும் யாம் மறமிதென்றுமே
அறிகிலாத போது - யாம்
அறிகிலாத போது - தமிழ்
இறைவனாரின் திருக்குறளிலே ஒரு சொல்
இயம்பிக் காட்ட மாட்டாயா? - நீ
இயம்பிக் காட்ட மாட்டாயா?

இது ஒரு பெண் குழந்தையை நோக்கி ஒரு வயதானவர் பாடும் பாட்டு.

அறம் எது அறமில்லாதது எது?

என தெரியாத மனநிலையில் இருக்கும் ஒரு வயதானவருக்கு, திருக்குறளை பாடிக்காட்டி அந்த பெண் பிள்ளை அறத்தை நினைவூட்டுவதாக இதை நான் விளங்கி கொள்வேன்.

சிலர் எழுதும் எழுத்துகள் அவர்களுக்கு பெண் பிள்ளைகள் இருக்க வாய்ப்பிலை என்றே நினைக்க வைக்கிறது (இந்த திரியிலும், ஏனையதொரு திரியிலும்).

பராவாயில்லை - குறைந்த பட்சம் statutory rape என்றால் என்ன என்பதை கூகிள் பண்ணியாவது பாருங்கள்.

On 18/2/2025 at 14:50, பிழம்பு said:

17 வயது சிறுமி

👆 இங்கே சிவப்படித்திருக்க வேண்டியது இதற்கு மட்டுமே.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

பராவாயில்லை - குறைந்த பட்சம் statutory rape என்றால் என்ன என்பதை கூகிள் பண்ணியாவது பாருங்கள்.

எழுத்துப் பிழையைக் கண்டறிய உதவியமைக்கு நன்றி.

இந்த "சட்ட ரீதியான பாலியல் வல்லுறவு" என்ற அடிப்படை விடயம் கூட இடது சாரி வலது சாரி என்ற கண்ணாடியூடாக எதிரெதிராகத் தான் பார்க்கப் படுகிறது.

இங்கே பல்கலை களில் பெண் மாணவிகளுக்கு பெரும் ஆபத்தான ஒரு விடயமாக இருக்கும் ஒன்று: அல்கஹோல் அல்லது Rohypnol என்ற தூக்க மாத்திரை கலந்த பானத்தைக் கொடுத்து விட்டு, அவர்களின் சம்மதமின்றி உடலுறவு கொள்ளும் கயவர்கள். இது statutory rape. இதற்கு தீர்வாக ஒபாமா நிர்வாகம் செய்தது, இத்தகைய கேஸ்களில் சந்தேக நபர்களாக இருப்போரை விசாரணை முடியும் வரை கல்லூரிகள் இடை நிறுத்தும் படி ஒரு ஆணையை அமல் படுத்தியது. ட்ரம்ப் 2017 இல் பதவிக்கு வந்தவுடன் ரத்துச் செய்த அரசு ஆணைகளில் இதுவும் ஒன்று. இது தொடர்பாக நடந்த வழக்கு ஒன்றில் ஒரு பழமை வாத நீதிபதி "பெண்கள் குறைவாக மது அருந்துவதால் இந்தக் குற்றங்களைக் குறைக்கலாம்" என்று கூறி பாரிய கண்டனங்களுக்குள்ளானார். இன்னொரு வழக்கில், இத்தகைய செயலைச் செய்த ஒரு பணக்கார வெள்ளையின மாணவரை சிறையில்லாமல் வெளியே விட்ட நீதிபதியை அகற்றி வழக்குகளை அவர் விசாரிக்காமல் தடுத்தார்கள்.

எல்லா சமூகங்களிலும் வலது சாரிகள் "ஆண்கள் சேறு கண்ட இடத்தில் மிதித்து, தண்ணி கண்ட இடத்தில் கழுவிக் கொள்ளலாம்" என்ற "தாராள"😎 சிந்தையுடையோர்!

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Justin said:

ஓ…நான் எழுத்துபிழையை கவனிக்கவே இல்லை…என்றாலும் இலவசமாக கொடுத்த நன்றியை ஏற்கிறேன்🤣.

அமெரிக்காவில் எங்கும் வியாபித்திருக்கும் வலது/இடது வியாதி இங்குவரை வந்துள்ளது என்பது அதிர்ச்சியான தகவல்.

யுகே யில் இப்படியான விடயங்களில் அரசியலுக்கு அப்பாலான பொதுமை இருக்கும்.

ஆனால் மிக வலதுசாரி அமெரிக்கர்கள் கூட பராயம் வராதவர் - பாலியல் உறவுக்கு அனுமதிக்கும் தகமை அற்றவர் - என்பதை ஏற்பார்கள் என நினைக்கிறேன்.

ஒரு குழந்தை (child) இடம் நான் அந்த குழந்தையின் விருப்போடு உறவு வைத்தேன் ஆகவே அது தவறில்லை என்பவர்கள், வலதோ, இடதோ அல்ல அவர்களுக்கு வேறு பெயர்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

ஆனால் மிக வலதுசாரி அமெரிக்கர்கள் கூட பராயம் வராதவர் - பாலியல் உறவுக்கு அனுமதிக்கும் தகமை அற்றவர் - என்பதை ஏற்பார்கள் என நினைக்கிறேன்.

ஒரு குழந்தை (child) இடம் நான் அந்த குழந்தையின் விருப்போடு உறவு வைத்தேன் ஆகவே அது தவறில்லை என்பவர்கள், வலதோ, இடதோ அல்ல அவர்களுக்கு வேறு பெயர்.

நீங்கள் சொல்வது சரியே, இங்கு அமெரிக்காவிலும் சிறு பிள்ளைகளுக்கான சட்டமும், அமெரிக்க சமூகமும் அப்படித்தான் இருக்கின்றது. இந்த நடவடிக்கைகளையும், குற்றங்களையும் எவரும் பொதுவெளியில் இங்கு நியாயப்படுத்தவே முடியாது. மிகக் கடுமையான சட்டங்கள்.

யாழ் களத்திலேயே ஈரானில் போராடின அந்தப் பெண்ணுக்கு எதிரான கருத்துகளையும், இந்தச் சிறுபெண்ணுக்கு எதிரான கருத்துகளையும் நான் பார்த்தேன்.........😞.

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, ரசோதரன் said:

நீங்கள் சொல்வது சரியே, இங்கு அமெரிக்காவிலும் சிறு பிள்ளைகளுக்கான சட்டமும், அமெரிக்க சமூகமும் அப்படித்தான் இருக்கின்றது. இந்த நடவடிக்கைகளையும், குற்றங்களையும் எவரும் பொதுவெளியில் இங்கு நியாயப்படுத்தவே முடியாது. மிகக் கடுமையான சட்டங்கள்.

நல்லது. இப்படித்தான் இருக்கும் என்றே எண்ணினேன்.

58 minutes ago, ரசோதரன் said:

யாழ் களத்திலேயே ஈரானில் போராடின அந்தப் பெண்ணுக்கு எதிரான கருத்துகளையும், இந்தச் சிறுபெண்ணுக்கு எதிரான கருத்துகளையும் நான் பார்த்தேன்.........😞.

🥺 யாழ் எம் சமூகத்கின் ஒரு குறுக்கு வெட்டுத்தானே.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

🥺 யாழ் எம் சமூகத்கின் ஒரு குறுக்கு வெட்டுத்தானே.

யாழ் களத்திற்கு வந்து போகும் உறவுகள் எங்கள் உலகளாவிய ஈழத் தமிழர்கள் சமூகத்தின் ஒரு குறுக்கு வெட்டு என்பது மிகச்சரி.

ஆனால் என்ன, தனி மனிதர்களின் பாவனைகள் இணையத்தில் வேறு விதமாக வெளிப்படுகின்றது. இந்தப் பாவனைகளை, இதே வேகத்தை, இதே ஆக்ரோசத்தை மனிதர்கள் சமூக உறவுகளில், நட்பு வட்டங்களில் கூட வெளிப்படுத்துவதில்லை. முகம் பார்த்து கதைக்கும் இடங்களில் மற்றும் உறவுகளில் கட்டுப்பாடாக, பொதுப்புத்தியின் படி ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிகளின் படி நடக்க முயல்கின்றனர். இணையத்தில் கட்டற்று கருத்துகள் வெளிப்படுகின்றன................

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே சிங்கையில் சீனாவிலிருந்து விலை மாதுக்களை விசிட்டிங் விசாவில் உள்ளெயெடுத்து அவர்களை வைத்து கல்லாகட்டுவது ஒருகாலத்தில் பிரபலம் இதனை சிங்கை அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்கியது. ஒரு தடவை இப்படியான ரைடில் மாட்டிய சீன பெண் பதினெட்டுவயது வராத மைனர் என்பதை அவரது கடவுச்சீட்டை பரிசீலித்து கண்டு கொண்ட சிங்கை போலீஸ் அவரை பாலியல் தேவைக்கு பயன்படுத்திய அனைவரையும் வீடு புகுந்து தூக்கியது.வீட்டிற்கு நல்ல பையன்கள் உட்பட கிழ போல்ட்டுக்கள் பலர் மாட்டினர். அதாவது சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்டனர்

  • கருத்துக்கள உறவுகள்
On 19/2/2025 at 10:57, Justin said:

மருதர் சிவப்பில் காட்டியிருக்கும் பகுதிகள் மூலம் "சிறுமியில் தான் தவறு, பெடியள் வீணாக மாட்டுப் பட்டு விட்டார்கள்" என்ற கருத்து உருவாக்கப் படுகிறதென ஊகிக்கிறேன்.

இந்தியாவில் 18 வயதுக்குக் குறைந்தோர் சட்டப் படி சிறுவர்கள்.

மருதர் உட்பட, எல்லோரும் வலு கவனமாக இருக்க வேண்டிய விடயம், எந்த நாட்டிலும் "சிறுவர்" என்று வகைப்படுத்தப் படும் நபர்களோடு உறவு வைத்துக் கொள்வது, சட்ட ரீதியான பாலியல் வல்லுறவாகத் (statutory rape) தான் வகைப் படுத்தப் படும். அது சிறுவர்/சிறுமி விரும்பி வந்தாலும் கூட சட்ட ரீதியான பாலியல் வல்லுறவு தான்!

உங்களின் கேவலமான புத்தி அவ்வாறு சிந்திக்காது போனால்தான் ஆச்ரயம்!

நவீன தொலைபேசி எத்தனை சிறுவர்க்ளின் வாழ்வை சீரழிகிறது? என்பதையே நான் மேலே சுட்டி காட்டியிருந்தேன். மறுமுனையில் யார் இருக்கிறார்? எங்கே போகிறோம்? ஏன் போகிறோம்? என்ற எழக்கூடிய அடிப்படை அறிவை கூட மழுங்கடிக்க வைத்திருக்கிறது.

நீங்கள் உத்தமன்கள் என்று அட்டை படம் போட்டு வலம் வாருங்கள்

அடுத்தவுனுக்கு சிறுமிகளை பற்றி பாடம் எடுத்து நிரூபிக்க தேவை இல்லை

இந்த கேவலாமான வேலைக்கு சின்சக்குகள் வேறு

இன்னொருத்தரம் மேலே இருக்கும் கருத்தை வாசிக்கவும்

இனி அவர்களை போஸ்க்கோவில் போடடாள் என்ன சிஸ்கோவில் போட்டால் என்ன? அந்த பெண் இதற்குள் இருந்து இனி மீளவே முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Maruthankerny said:

இந்த அர்த்தத்தில் தான் நீங்கள் சிவப்பு வர்ணம் தீட்டினீர்கள் என்று நீங்கள் சொன்னால் யார் அதை மறுக்க முடியும்?

ஆனால், ஒரு சிறு சந்தேகம் வருவது இயல்பானது: நீங்கள் குறிப்பிட்ட படி நவீன தொலைபேசி, அதில் இருக்கும் மென்பொருள் ஆகியவை பற்றிப் பேசியிருந்தால், அந்தப் பகுதிகள் சிவப்பு வர்ணமில்லாமல் இருக்கின்றனவே, ஏன்?

மற்றபடி, இது பெண் குழந்தையின் வாழ்க்கை முடிவெல்லாம் அல்ல என்று நான் நினைக்கிறேன். இது அவரது தவறல்ல என்ற எண்ணத்தை உருவாக்கி, அவரை நகர்ந்து செல்ல வைக்க முடியும்! இதை வலியுறுத்தித் தான் பாலியல் இம்சைக்குள்ளான வளர்ந்தவர்களை மன ஆற்றுப் படுத்தல் மூலம் வழமை நிலைக்குத் திருப்புகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சிறுமிகள் மீது கைவைக்கும் ஈனப்பிறப்புகள் ஸ்மார்ட் தொலைபேசிக்கு முன்பும் இருந்தார்கள்.

அதற்கு வக்காலத்து வாங்கும் ஈனர்களும் அப்போதும் இருந்தார்கள்.

நமது செயல்களுக்கு நாம்தான் பொறுப்பு.

இங்கே ரேபிஸ்ட் அத்தனை பேரும் 19, 20 வயது ஆட்கள். இவர்கள் எல்லாம் பபா குஞ்சுகள் - 18 வயதுக்கு குறைந்த பிள்ளையை தொடக்கூடாது என்ற அறிவில்லாதவர்கள், பாவங்கள் போன் பார்த்து கெட்டுப்போய்விட்டார்கள் 🤣.

கேக்கிறவன் கேனையனாக இருந்தா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.