Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியிலே என்ன இருக்கிறது? | அண்ணா உரை

அறிஞர் அண்ணா அவரது புலமையின் காரணமாக அறிஞர் என்று அழைக்கப்பட்டவர். அவர் சிறந்த பேச்சாளர். அவரது காலத்தில் தமிழகத்தின் சிறந்த பேச்சாளர் அவர்தான். கணீரென்ற குரலில் கேட்பவரை கட்டுப்படுத்திவிடும் குரல் அவரது குரல்.

இந்த உரையில் அவர் இந்தி மொழியின் அவசியம் என்ன என்பதைக்கேள்விக்குள்ளாக்குகின்றார். அதை மக்களுக்கு விளங்கப்படுத்த அவர் ஆற்றிய உரை ஒவ்வோர் பேச்சாளரும் கேட்க வேண்டிய உரை. எவ்விதம் ஓர் உரையினைத் தெளிவாக, நிதானமாக, சுவையாக, அறிவு பூர்வமாக, தர்க்கபூர்வமாக உரையாற்றுகின்றார் என்பதைக் கவனியுங்கள். எவ்விதம் தன்னுரையால் அவையோரைக் கட்டிப்போட்டு விடுகின்றார் என்பதையும் அவதானியுங்கள்.

இவ்வுரையில் அவர் தமிழ் மொழி, தாய் மொழியின் அவசியம், இணைப்பு மொழி போன்ற பல விடயங்களைப்பற்றி விபரிக்கின்றார். இணைப்பு மொழியாக இந்திக்குப் பதிலாக ஏன் ஆங்கிலம் இருக்க வேண்டுமென்று தெளிவாக, தர்க்கபூர்வமாகத் தெளிவு படுத்துகின்றார்.

இன்றுள்ள தலைமுறை யு டியூப்பின் வம்பளப்புகளில் நேரம் செலுத்துவதை விட இது போன்ற அறிஞர்களின் உரைகளைக் கேட்க வேண்டும்.

அண்ணாவுக்குப் பிறகு இவ்விதமானதோர் ஆளுமையைத் தமிழ் நாடு காணவில்லை. அதனால்தான் அன்று அண்ணாவின் மறைவின்போது தமிழகமே திரண்டு வந்தது. அது ஒரு உலக சாதனை என்று கின்னஸ் பதிவு செய்திருக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

நான் காண்பது கனவா?

  • கருத்துக்கள உறவுகள்

👉 https://www.facebook.com/watch/?v=1137664734195084👈

(அமெரிக்காவில்  மோடி, டிரம்ப் பத்திரிகையாளர் சந்திப்பு.)

உள்நாட்டில் "ஹிந்தி படிங்கோ, ஹிந்தி படிங்கோ"னு சொல்ல வேண்டியது.

வெளிநாட்டுக்கு போய் என்ன கேட்கிறாங்கனே தெரியாம, பதிலும் தெரியாம, கேள்வியும் புரியாம translators வச்சும் பயன் இல்லாம அப்பாவியா பேந்த பேந்த முழிச்சிட்டு இந்தியா வந்து நேருவையும், காந்தியையும், அம்பேத்கரையும் குறை சொல்ல வேண்டியது.

காந்தி, நேரு, அம்பேத்கர் எல்லாம் ஹிந்தியை மட்டும் வைத்துக் கொண்டு ஆங்கிலேயனை வெல்லவில்லை. அந்த காலத்திலேயே கப்பலில் வெளிநாட்டுக்கு சென்று, அன்றே படித்து பட்டம் பெற்று வட்ட மேஜை மாநாடுகளை நடத்தி வென்ற தலைவர்கள்.

சீனா அதிபரும் translators வைத்து இருப்பார். அவர் கெமிகல் engineer. அவர் doctor of law படித்தவரும் கூட. மொத்த Chinese cabinet ல் 75% PhD பட்டமோ, Techinical Masters முடித்தவர்கள்.

கெத்தா உட்காந்து அவிங்க சீன மொழியில் பேசினால் English ல் translation செய்த கதையும் உண்டு.

நம்ம ஆளிடம் கேட்ட ஒரு கேள்விக்கு, இந்த கேள்விக்கு நானே பதில் சொல்கிறேன் என்கிறார் Trump.

நம்ம கிட்ட இருக்கும் cabinet அப்படியா.

கோமியம் விக்கிற specialist, மாட்டு hospital கட்டும் சாமியார்கள், குறி சொல்லும் ஜோசியர்கள், மயில் தனது கண்ணீர் மூலம் இனப் பெருக்கம் செய்கிறது என்கிற பிரபலம், நம் முன்னோர்கள் ஒன்னும் முட்டாள்கள் இல்லை என்ற ஒரு uneducated bunch of people.

படித்தவர்கள் பிரதமராக வருவது நம் நாட்டுக்கு மட்டுமல்ல அயல் நாட்டு கொள்கை- foreign policy மற்றும் trade negotiations-ல் வெல்ல வாய்ப்புக்களை உருவாக்கித் தரும். International arena-வில் கெத்தா இருக்கும்.

இதுல ஹிந்தியை வேற தூக்கிட்டு வந்து இந்தி படி , இந்தி படினு உருட்ட வேண்டியது.

56"சீ இன்னும் கூட பேட்டி கொடுக்காம இருக்க ஒரே காரணம் பதில் சொல்லத் தெரியாது என்கிறது மட்டுமல்லாமல், அவருக்கு கேள்விகளே புரியாது என்பதால் தான். இந்த ஒரே காரணத்தினால் தான் அக்சய் குமார் போன்றோருக்கு scripted பேட்டி கொடுக்கிறது, அதாவது கேள்வியும் நானே...அதற்கு பதிலும் நானே, இந்த கேள்விகளைத் தான் நீ கேட்க வேண்டும்!

மும்மொழிக் கொள்கையின் மூலம் ஹிந்தி திணிப்பு தேவை இல்லாதது என்று நிரூபணம் ஆன தருணம், மோடியின் தற்போதைய அமெரிக்க பயணம்.

தமிழ், ஆங்கிலம் இரண்டே போதும் உலகையே வெல்லலாம்.

தமிழ்நாட்டின் பாதை தான் இந்தியாவுக்கு தேவை.

Regional Language + English.

#மும்மொழிக்கொள்கைதோல்வி #தமிழ் #தமிழ்நாடு

N Deva

😂 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

மோடியின் கொள்கைகளுக்கு நான் ஆதரவில்லை, ஆனால் "மோடிக்கு ஆங்கிலம் விளங்கவில்லை, அதனால் தான் அவர் இந்தியில் பேசினார், நிருபரின் ஒரு கேள்விக்குப் பதிலளிக்க முடியாமல் இருந்தார்" என்பது உலக அறிவு குறைவான முகநூல் ஆய்வாளரின் உருட்டல் மட்டுமே.

நாடுகளின் தலைவர்கள், வேறு நாடுகளில் உத்தியோக பூர்வமாகப் பேசும் போது அவர்களது தாய் மொழி அல்லது தேசிய மொழியில் பேசுவது வழமை. இது ஆங்கிலம் தெரியாமையால் அல்ல, ஒரு வகையான பாரம்பரியம் -diplomatic tradition என்று தான் கருதப் படுகிறது. புரின் ட்ரம்போடு சேர்ந்து பத்திரிகையாளரைச் சந்தித்தாலும் புரின் ரஷ்ய மொழியில் தான் பேசுவார். இதன் அர்த்தம் புரினுக்கு ஆங்கிலம் தெரியாது என்பதல்ல!

முகனூல் ஆய்வாளர் சொல்வதற்கு மாறாக, மோடிக்கு நன்கு ஆங்கிலம் தெரியும். கீழே இருக்கும் இணைப்பில் அவர் ஆங்கிலத்தில் ஆற்றிய உரை இருக்கிறது.

அப்படியானால் ஏன் நிருபரின் கேள்விக்குப் பதில் தரத் தாமதம்? ஏனெனில் அது கேள்வி என்பதை விட மோடி வாயால் டரம்பைப் புகழ வைக்க ஒரு வலதுசாரி ஊடக நிருபர் (Fox or NY Post) போட்ட தூண்டில். "பைடனின் பலவீனமான தலைமையோடு, ட்ரம்பின் பலமான நிர்வாகத்தை எப்படி ஒப்பிடுகிறீர்கள்?" என்பது தான் கேள்வியின் சுருக்கம். மோடி போன்ற பழுத்த அரசியல் ராஜதந்திரிகள் இது போன்ற ஒரு தூண்டில் கேள்விக்குப் பதில் சொல்லாமல் தான் இருப்பர்.

என் பலமான சந்தேகம், இந்தப் பதிவை எழுதிய முகனூல் பதிவருக்கு ஆங்கிலத்தில் கேட்ட கேள்வி விளங்கவில்லை😂!

  • கருத்துக்கள உறவுகள்

ஆங்கிலத்தில் leading questions என்பார்கள்.

எந்த பதில் சொன்னாலும் தர்மசங்கடத்தில்தான் முடியும் படி கேட்கப்படும் கேள்விகள் இவை.

இந்திய பிரதமரை, அமெரிக்க அரசியலில் கட்சிசார்ப்பு நிலை எடுக்கும் வண்ணம் பதில் சொல்ல நிர்பந்தித்த ஒரு leading question கேள்வியை பதில் சொல்லாமல் மோடி தவிர்க்க, அதை புரிந்த டிரம்ப் தானே பதில் கூறினார்.

இதற்கு மோடி மீது ஒரு விமர்சனத்தை வைக்கலாம்.

“இந்திய பிரதமராக, அமெரிக்க உள்நாட்டு அரசியலில் நான் கருத்து சொல்வதை, டிரெம்போ, பைடனோ, சாதாரண அமெரிக்கரோ விரும்பமாட்டார்கள், எனவே கேள்வியை தவிர்கிறேன்” என ஒரு இராஜதந்திர பதிலை கூறி இருக்கலாம்.

நேரு அப்படித்தான் தன்னிச்சையாக சிந்தித்து நழுவி இருப்பார்.

நம்மாளுக்கு எல்லாம் சொல்லி கொடுத்து செய்துதானே பழக்கம்.

அதான் பேந்த பேந்த முழிச்சார்🤣

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Justin said:

மோடிக்கு ஆங்கிலம் விளங்கவில்லை, அதனால் தான் அவர் இந்தியில் பேசினார், நிருபரின் ஒரு கேள்விக்குப் பதிலளிக்க முடியாமல் இருந்தார்" என்பது உலக அறிவு குறைவான முகநூல் ஆய்வாளரின் உருட்டல் மட்டுமே.

நாடுகளின் தலைவர்கள், வேறு நாடுகளில் உத்தியோக பூர்வமாகப் பேசும் போது அவர்களது தாய் மொழி அல்லது தேசிய மொழியில் பேசுவது வழமை. இது ஆங்கிலம் தெரியாமையால் அல்ல, ஒரு வகையான பாரம்பரியம் -diplomatic tradition என்று தான் கருதப் படுகிறது. புரின் ட்ரம்போடு சேர்ந்து பத்திரிகையாளரைச் சந்தித்தாலும் புரின் ரஷ்ய மொழியில் தான் பேசுவார். இதன் அர்த்தம் புரினுக்கு ஆங்கிலம் தெரியாது என்பதல்ல!

முகனூல் ஆய்வாளர் சொல்வதற்கு மாறாக, மோடிக்கு நன்கு ஆங்கிலம் தெரியும். கீழே இருக்கும் இணைப்பில் அவர் ஆங்கிலத்தில் ஆற்றிய உரை இருக்கிறது.

இந்த முகநூல் கோமாளிதனத்திற்கு நல்ல விளக்கம் கொடுத்தீர்கள்

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Justin said:

மோடியின் கொள்கைகளுக்கு நான் ஆதரவில்லை, ஆனால் "மோடிக்கு ஆங்கிலம் விளங்கவில்லை, அதனால் தான் அவர் இந்தியில் பேசினார், நிருபரின் ஒரு கேள்விக்குப் பதிலளிக்க முடியாமல் இருந்தார்" என்பது உலக அறிவு குறைவான முகநூல் ஆய்வாளரின் உருட்டல் மட்டுமே.

நாடுகளின் தலைவர்கள், வேறு நாடுகளில் உத்தியோக பூர்வமாகப் பேசும் போது அவர்களது தாய் மொழி அல்லது தேசிய மொழியில் பேசுவது வழமை. இது ஆங்கிலம் தெரியாமையால் அல்ல, ஒரு வகையான பாரம்பரியம் -diplomatic tradition என்று தான் கருதப் படுகிறது. புரின் ட்ரம்போடு சேர்ந்து பத்திரிகையாளரைச் சந்தித்தாலும் புரின் ரஷ்ய மொழியில் தான் பேசுவார். இதன் அர்த்தம் புரினுக்கு ஆங்கிலம் தெரியாது என்பதல்ல!

முகனூல் ஆய்வாளர் சொல்வதற்கு மாறாக, மோடிக்கு நன்கு ஆங்கிலம் தெரியும். கீழே இருக்கும் இணைப்பில் அவர் ஆங்கிலத்தில் ஆற்றிய உரை இருக்கிறது.

அப்படியானால் ஏன் நிருபரின் கேள்விக்குப் பதில் தரத் தாமதம்? ஏனெனில் அது கேள்வி என்பதை விட மோடி வாயால் டரம்பைப் புகழ வைக்க ஒரு வலதுசாரி ஊடக நிருபர் (Fox or NY Post) போட்ட தூண்டில். "பைடனின் பலவீனமான தலைமையோடு, ட்ரம்பின் பலமான நிர்வாகத்தை எப்படி ஒப்பிடுகிறீர்கள்?" என்பது தான் கேள்வியின் சுருக்கம். மோடி போன்ற பழுத்த அரசியல் ராஜதந்திரிகள் இது போன்ற ஒரு தூண்டில் கேள்விக்குப் பதில் சொல்லாமல் தான் இருப்பர்.

என் பலமான சந்தேகம், இந்தப் பதிவை எழுதிய முகனூல் பதிவருக்கு ஆங்கிலத்தில் கேட்ட கேள்வி விளங்கவில்லை😂!

முட்டாள்த்தனம் மோடியிடமும் இருந்தது, முகநூல் முக்கால்வாசிக்களிடமும் இருந்தது.

முகநூல் முக்கால்வாசிகளைப் பற்றி சொல்லி விட்டீர்கள், ஆனால் மோடி இந்தக் கேள்விக்கு தான் பதிலளிப்பது சரியாகஇருக்காது என்று சொல்லி இருக்க வேண்டும்.

தவிர மோடிக்கு அந்தக் கேள்வி முழுமையாக விளங்கவில்லை என்றொ அல்லது அவர் அதை விளங்கி பதிலை process செய்யும் நேரத்துக்குள் டிரம்ப் முந்தி விட்டார் என்றொ இதை எடுத்துக்கொள்ளலாம்

ஒன்று தனக்கு ஆங்கிலத்தில் நன்கு புலமை இல்லை என்று ஒதுங்கி இருந்து ஹிந்தி மொழிபெயர்ப்புக்கு காத்திருக்க வேண்டும். அல்லது ப சிதம்பரம் போல சாரளமாக ஆங்கிலதில் பேசவும் கேள்விகளை உடனுக்குடன் process செய்யவும் தெரிந்து இருக்க வேண்டும். மோடிக்கு இரண்டும் கெட்டான் நிலை. தான் வல்லவர், சூரர் என்று காட்டவும் வேண்டும், மாட்டவும் கூடாது.

9 hours ago, தமிழ் சிறி said:

கோமியம் விக்கிற specialist, மாட்டு hospital கட்டும் சாமியார்கள், குறி சொல்லும் ஜோசியர்கள், மயில் தனது கண்ணீர் மூலம் இனப் பெருக்கம் செய்கிறது என்கிற பிரபலம், நம் முன்னோர்கள் ஒன்னும் முட்டாள்கள் இ

பிள்ளையார் என்பது அந்தக் காலத்தில் இந்தியா பிளாஸ்டிக் சத்திர சிகிச்சையில் முன்னோடியாக இருந்தது என்பதற்கு ஆதாரம் என்று மோடி இந்திய மருத்துவ மாநாட்டில் கூறியதை மறந்து விட்டேர்களே...

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.