Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

CIVIL_SERVICE_NATIONALITY_RULES_-_GUIDAN

அரச உத்தியோகத்தில் நேஷாலிட்டி என்ன பாதிப்பை செலுத்தும் என்ற அரசின் கொள்கை அறிக்கை👆

  • Replies 56
  • Views 2.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • goshan_che
    goshan_che

    இதுவரைக்கும் பிரித்தானியாவில் இல்லை. இங்கே AfD யுடன் ஒப்பிட கூடியவர்கள் Britain First, BNP, National Front, English Defense League போன்றவை. இவர்களுக்கு ஒரு உள்ளாட்ட்சி மன்ற சீட் கூட இல்லை. அண்மையில் உ

  • விளங்க நினைப்பவன்
    விளங்க நினைப்பவன்

    செய்திகளில் நான் கவனமாக அவதானித்தேன். கம்யுனிச ஆக்கிரமப்பின் கீழ் முன்பு இருந்த யேர்மனின் கிழக்கு பகுதி தொகுதிகளில் பேர்லின் தலைநகர தொகுதியை தவிர இனவெறி AFD கட்சி மிக பெரிய வெற்றி பெற்றுள்ளது. பல இடங

  • goshan_che
    goshan_che

    பிரான்சில் நிலைமை சற்று வேறுபாடானது. அங்கே AfD யுடன் ஒப்பிடுகூடிய கட்சி என்றால் லிபென்னின் நேசனல் ரலிதான். ஆனால் செனெட்டில் இவர்கள் பலம் 3/348. கீழ் சபையில் 126/577. மிகுதி இருப்பவர்கள் எல்லாம் ஒன்றி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

அரச உத்தியோகத்தில் நேஷாலிட்டி என்ன பாதிப்பை செலுத்தும் என்ற அரசின் கொள்கை அறிக்கை

civil service rules, அது ஒரு guidance மாத்திரம்.

அதனால், எல்லோருக்கும் civil service இல் கூட அப்படியே நடக்கும் என்பது இல்லை.

அனால், இது அரசின் சிவில் service க்கு மட்டுமே செல்லுபடி.

அரசின் மற்ற அங்கங்கள், அவர்களுக்கு என்று rules வைத்து இருக்கிறார்கள்.

உ.ம். military service, civil service அல்ல.

அதனால் உங்களுக்கு நடக்கவில்லை அல்லது அறியாததை வைத்து, தவறு முடிவெடுப்பது பிழையானது.

அண்மையில் தண்டனை பெற்ற அந்த ஈரானிய பெற்றோருக்கு பிரித்தானியாவில் பிறந்த பிரித்தானியா பிரஷையின் பிரச்சனையின் தொடக்கமே, அவருக்கு இராணுவத்தில் விரும்பிய வேலை கிடைக்காது (பயிற்சியில் சிறப்பாகசெய்தும்) , ஏனெனில் பெற்றோர் பிரித்தானியாவில் பிறக்கவில்லை, ஆயினும் அவர்களும் பிரித்தானிய பிரசைகள்.

அனால், இராணுவத்துறையில் அல்ல எனக்கு நடந்தது.

மற்றது, எனது பெற்றோர் பிரித்தானியரும் அல்ல, நன் பிரிதானியாவில் பிறக்கவில்லை

எனவே மிகவும் தள்ளி.

Edited by Kadancha
add info.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, Kadancha said:

civil service rules, அது ஒரு guidance மாத்திரம்.

அதனால், எல்லோருக்கும் civil service இல் கூட அப்படியே நடக்கும் என்பது இல்லை.

அனால், இது அரசின் சிவில் service க்கு மட்டுமே செல்லுபடி.

அரசின் மற்ற அங்கங்கள், அவர்களுக்கு என்று rules வைத்து இருக்கிறார்கள்.

இல்லை இது guidance, வழிகாட்டி என்ற அர்த்தத்தில் இல்லை. இதுதான் கடைபிடிக்க வேண்டிய Recruitment policy framework. இதை மீறினால் பல சட்ட சிக்கல்கள் வரும்.

54 minutes ago, Kadancha said:

அரசின் மற்ற அங்கங்கள், அவர்களுக்கு என்று rules வைத்து இருக்கிறார்கள்.

உ.ம். military service, civil service அல்ல.

ஆதாரம் ஏதும் இல்லாமல் இப்படி கற்பனையாக சொல்வீர்கள் என தெரிந்தே - இந்த ஆதாரத்தை தேடி வைத்தேன்.

இது பிரிட்டனின் வெளியக உளவு அமைப்பின் வெப்சைட்டில் இருப்பது.

Your nationality

We protect British interests both at home and overseas. Because of this, to be eligible to apply you must be a British Citizen. If you hold dual nationality, of which one component is British, you will nonetheless be considered but you may be required to give up your non-British citizenship before you can take up employment with us. Each case will be carefully considered on its own facts.

Candidates must normally have been resident in the UK for seven out of the last ten years. This is particularly important if you were born outside the UK. You can apply from the age of 17 years. If successful, you will not be offered a start date prior to your 18th birthday.

https://www.sis.gov.uk/eligibility.html

வெளியக உளவு அமைப்பை விட சென்சிட்டிவ் ஏதுமில்லை. அதில் கூட நீங்கள் சொன்னபடி இல்லை. நான் சொன்னதுதான் உள்ளது.

58 minutes ago, Kadancha said:

அதனால் உங்களுக்கு நடக்கவில்லை அல்லது அறியாததை வைத்து, தவறு முடிவெடுப்பது பிழையானது.

எனக்கு நடப்பதை வைத்து மட்டும் அல்ல. சில ஆயிரகணக்கான அனுபவங்களின் அடிப்படையில் எழுதுகிறேன்.

Edited by goshan_che

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, Kadancha said:

அண்மையில் தண்டனை பெற்ற அந்த ஈரானிய பெற்றோருக்கு பிரித்தானியாவில் பிறந்த பிரித்தானியா பிரஷையின் பிரச்சனையின் தொடக்கமே, அவருக்கு இராணுவத்தில் விரும்பிய வேலை கிடைக்காது (பயிற்சியில் சிறப்பாகசெய்தும்) , ஏனெனில் பெற்றோர் பிரித்தானியாவில் பிறக்கவில்லை, ஆயினும் அவர்களும் பிரித்தானிய பிரசைகள்.

இதில் பெற்றாரின் பிறந்த இடம் அல்ல, அவர்களின் செக்யூரிட்டி கிளியரஸ்ல் ஒரு பிரச்சினையாக இருந்திருக்கலாம்.

இதுவே ஜமைகாவில் பிறந்த ஒரு கறுப்பு ஆள் என்றால் பிரச்சனை இராது.

பில்லேடனின் மகனுக்கு சில வேலைகள் கிடைக்காதுதானே 😜

ஆனால் ஈரானியர் என்ற ஒரு காரணதுக்காக மட்டுமே இப்படி நடந்திராது.

அப்படி நடந்திருப்பின் அது சட்டமீறல் - டிரைபியுனல் அல்லது இராணுவ சமாந்தர அமைபுக்கு போனால் வெல்லலாம்.

1 hour ago, Kadancha said:

அனால், இராணுவத்துறையில் அல்ல எனக்கு நடந்தது.

மற்றது, எனது பெற்றோர் பிரித்தானியரும் அல்ல, நன் பிரிதானியாவில் பிறக்கவில்லை

எனவே மிகவும் தள்ளி.

நிச்சயமாக நீங்கள் பிரிதானியாவில் பிறக்கவில்லை, அல்லது உங்கள் பெற்றார் பிரித்தானியர் இல்லை என்பது காரணமாக இருந்திராது.

நீங்கள் செக்யூரிட்டி கிளியரன்ஸ் பாஸ் பண்ணவில்லை என கூட சொல்லி இருக்க வாய்ப்பு குறைவு.

ஆகவே நீங்கள் இதை ஒரு காரணமாக நினைக்கலாம்.

ஆனால் இது ஒரு காரணம் இல்லை.

அப்படி எழுத்தில் இதை காரணம் என சொல்லி இருந்தால் - வழக்கு போடுங்கள் நல்ல காசு பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

இல்லை இது guidance இல்லை. Recruitment policy framework. இதை மீறினால் பல சட்ட சிக்கல்கள் வரும்.

உங்களின் இணைப்பில் guidance என்றே இருந்தது.

ஆயினும், இதில் உள்ள முன்னனுபவதாலும் நான் சொன்னது

அரசாங்கத்தின் இணைய தளமும் அதையே சொல்கிறது. கீழே இணைக்கப்பட்டு உள்ளது.

அனால், நீங்கள் கொள்கை என்பது (அப்படி இருந்தால்) guidance ஐ விட தளர்வானது. சட்டப்பிடி இல்லை என்றே சொல்லலலாம்.

ஆனால், எதுவென்றாலும் civil service க்கு மட்டுமே செல்லுபடி.

GOV.UK
No image preview

Civil Service recruitment: nationality rules

This guide is intended to assist departments with managing their responsibilities on nationality rules related to Civil Service recruitment.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kadancha said:

இல்லை.

  1. நீங்கள் இதில் தந்த இணைப்பும் நான் தந்த இணைப்பும் ஒன்றேதான்.

  2. நான் guidance என்பதை விளக்கி அதை எடிட் பண்ணி உள்ளேன் பார்க்கவும்.

  3. Policy என்பது கொள்கை நிலை அதன் நடைமுறை விளக்கம் guidance. ஒரு public body, தனது அல்லது தனக்கு வழங்கப்பட்ட policy/guidance ஐ மீற முடியாது. மீறினால் Judicial Review வுக்கு முகம் கொடுக்க வேண்டி வரும்.

  4. பிரித்தானிய மத்திய அரசின் சகல வேலைகளும் சிவில் சேர்விஸ்தான்.

  5. இதற்கு வெளியே உள்ள arms length bodies கூட இந்த பொலிசிகளுக்கு கட்டுப்பட்டவையே.

  6. அதனால்தான் மேலே MI6 இணைப்பை தந்தேன். இதைவிட வேலை எடுக்க கெடுபிடியான இடம் எதுவும் இல்லை.

நான் இவற்றை இங்கே சொல்லுவது உங்களில் குறைகாண அல்ல.

  1. நான் சொன்னது சரி என நிறுவ. அதை விட,

  2. இப்படியான பிழையான தகவல்கள் ஒரு ஈழத்தமிழ் பிரிட்டிஷ் பிள்ளையின் career இல் மண் அள்ளி போட்டு விடக்கூடாது. இன்னும் இன்னும் எம் பிள்ளைகள் இவற்றுள் செல்லவேண்டுமே தவிர, எமது பிழையான கற்பிதங்கள் அவருக்கு ஒரு தடையாய் இருக்க கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, goshan_che said:

ஆதாரம் ஏதும் இல்லாமல் இப்படி கற்பனையாக சொல்வீர்கள் என தெரிந்தே - இந்த ஆதாரத்தை தேடி வைத்தேன்.

இது பிரிட்டனின் வெளியக உளவு அமைப்பின் வெப்சைட்டில் இருப்பது.

உளவு அமைப்பு சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்ளவது, அதை ஆதாரமாக எடுப்பது உங்களின் விருப்பம். இதை நான் அறிவேன்

அதிலேயே இடம் விடப்பட்டு இருக்கிறது வேறுபடுத்த.

உளவு அமைப்பு செய்வதை வெளியில் சொல்ல தேவையில்லை. அப்படி வந்தாலும் அது இரகசியமாக செய்யப்படும், எனவே மறைக்கப்படும். பிரித்தானிய இதில் கைதேர்ந்தது.

armed forces மற்றும் உளவு அமைப்புகள் civil service அல்ல.

அனால், அவை அரச அங்கங்கள்.

அவற்றின் ஓய்வூதியம் கூடி வேறு வேறானவை.

நீங்கள் தான் தெரியாது கற்பனையில் இருப்பது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இதில் பெற்றாரின் பிறந்த இடம் அல்ல, அவர்களின் செக்யூரிட்டி கிளியரஸ்ல் ஒரு பிரச்சினையாக இருந்திருக்கலாம்.

ஆம் அதை சொன்னது, அனால், உத்தியோக பற்றற்ற முறையில், அவர் பெற்றோரின் பிறப்பு இரான் என்பதால் என்றும்.

ஆகவே, கடைசியில் எல்லா பிரித்தானிய பிரசைகளும் (வேறு எந்த பிரச்னை இல்லாவிட்டாலும்) சமமானவர்கள் இல்லை.

Edited by Kadancha
add info.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, Kadancha said:

உளவு அமைப்பு சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்ளவது, அதை ஆதாரமாக எடுப்பது உங்களின் விருப்பம். இதை நான் அறிவேன்

அதிலேயே இடம் விடப்பட்டு இருக்கிறது வேறுபடுத்த.

உளவு அமைப்பு செய்வதை வெளியில் சொல்ல தேவையில்லை. அப்படி வந்தாலும் அது இரகசியமாக செய்யப்படும், எனவே மறைக்கப்படும். பிரித்தானிய இதில் கைதேர்ந்தது.

நீங்கள் உங்கள் modus operandi (வழமையான செயல்படுமுறை) - ஆகிய சதி கோட்பாட்டுக்குள் இறங்கி விட்டீர்கள்.

இனி என்ன பவுண்டரி சிக்சர்தான்😀.

உங்கள் வாதப்படி பார்த்தால் - நீல கண் உடையவர்களை சில வேலைகளுக்கு எடுக்க மாட்டார்கள், ஆனால் அதற்கு எந்த ஆதாரமும் இல்லை, கடஞ்சா சொல்கிறேன் நம்புங்கள் என்பதே அடுத்த வாதமாக இருக்கும்.

இப்படியானவற்றைதான் trust me bro என்பார்கள் சமூகவலை உலகில்.

34 minutes ago, Kadancha said:

armed forces மற்றும் உளவு அமைப்புகள் civil service அல்ல.

இப்படி நான் சொல்லவில்லை.

ஆனால் உளவு அமைப்பு பற்றிய விபரம் மேலே தந்துள்ளேன்.

Armed Forces இல் சேர பிரித்தானிய பிரஜையாக கூட இருக்க தேவையில்லை. Common Wealth citizenship போதும்.

6 minutes ago, Kadancha said:

ஆம் அதை சொன்னது, அனால், உத்தியோக பற்றற்ற முறையில், அவன் பெற்றோரின் பிறப்பு இரான் என்பதால் என்றும்

இது உங்கள் அரைகுறை புரிதல், தப்பான வியாக்கியானம்.

இல்லாத இடைவெளியை உங்கள் கற்பனையால் நிரப்புகிறீர்கள்.

உத்தியோக பற்றற்ற காராணம் எது என்பதை உங்களின் காதுக்குள் வந்து சொல்லவில்லைதானே?

இது உங்கள் pure speculation.

அவரின் பெற்றார் ஈரானில் செய்த விடயங்கள் காரணமாக இருக்கும். ஈரானில் பிறந்தது காரணம் என குறிப்பிடபட்டிருக்காது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Kadancha said:

ஆகவே, கடைசியில் எல்லா பிரித்தானிய பிரசைகளும் (வேறு எந்த பிரச்னை இல்லாவிட்டாலும்) சமமானவர்கள் இல்லை

நிச்சயம் சமமானவர்களே. ஆனால் கடந்த காலத்தை வைத்து சிலருக்கு கிளியரன்ஸ் கிடைக்காது.

இதற்கும் தோல் நிறத்துக்கும் சம்பந்தமில்லை.

கம்யுனிச, anarchist, white suprematism, anti animal cruelty, climate change போன்றவற்றில் ஈடுபட்டு வன்போக்கை எடுத்த வெள்ளையினத்தவருக்கும் இதே நிலைதான். ,

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மன் தேர்தல் முறை உலகில் சிறந்தது தனித்துவமானது வேறு எந்தவொரு நாட்டிலுமில்லாதது வேறு நாடுகளை பார்த்து பின்பற்றப்படவில்லை.

இங்கே கிட்டத்தட்ட 630. தொகுதிகளுண்டு

இதில் 290. தொகுதிகளுக்கு நேரடியாக தொகுதியில் போட்டியிட்டு கூடுதல் வாக்குகள். பெற்றவர் தெரிவு செய்யப்படுவார்.

இது பிரித்தானியா இந்தியா போல் தான் இங்கே ஒவ்வொரு வாக்காளருக்கும். இரண்டு வாக்குகளுண்டு ஒன்று நேரடியாக தொகுதியில் போட்டி இருபவர்களுக்கு இது முதலாவது வாக்கு ஆகும் இது கட்சிக்கு போடும் வாக்கு இல்லை போட்டி இடும் நபருக்கு போடும் வாக்கு இந்த வாக்குகள் விகிதாசாரப் பிரதிநிதித்துவக்கு கணக்கில் எடுக்கப்படுவதில்லை இதை முக்கியம் கவனத்தில் கொள்ளவும் 🙏

இரண்டாவது வாக்கு கட்சிக்கு போடும் வாக்கு இதில் வாக்காளர்கள். பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதில்லை கட்சிதான். தெரிவு செய்யும் இந்த இரண்டாவது வாக்கு விகிதாச்சார பிரதிநிதித்துவக்கு. மட்டுமே உரியது இரண்டாவது வாக்கு ஒவ்வொரு வாக்கும். பெறுமதி. மிக்கது அது கட்சி மாறி போடக்கூடாது கண்டிப்பாக கட்சி மாறி போடக்கூடாது அப்படி போட்டால் உங்கள் கட்சியை நீங்களோ தோல்வியடைய. செய்வீகள். 5% குறைந்த வாக்கு உடைய கட்சிகள் விகிதாசாரப் பிரதிநிதித்துவம். கோர முடியுமா??? ஆமாம் ஒரேயொரு சந்தர்ப்பமுண்டு அந்த கட்சி நேரடி மோதலில். குறைந்தது மூன்று பாராளுமன்ற அங்கத்துவம் பெற்றிருப்பது அவசியமாகும் அப்படியான நிலையில் அவர்கள் 2% வாக்கு பெற்றிருந்தாலும் விகிதாசாரப் பிரதிநிதித்துவம். பெறலாம்

இன்று அமெரிக்காவில் தேர்தல் வைத்தால் அக்கா கமலா தான் வெல்வார்.

அதேபோல தான் ஜேர்மனியிலும். இந்த Afd. ஒரேவொரு முறை தான் ஆட்சியில் அமர முடியும் அதுவும் வேறு கட்சி அல்லது கட்சிகளுடன். சேர்த்து தான் ஒருமுறை ஆட்சி செய்த பின்னர் இவரகளின். வாக்கு வீதம் வளராது மாறாக குறைத்து செல்லும் எதிர்கட்சியிலிருக்கும். வரை கூடிச் செல்லும் ஆனாலும் தனியாக ஆட்சி அமைக்க முடியாது 🙏 வணக்கம்…

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, goshan_che said:

இதுவரைக்கும் பிரித்தானியாவில் இல்லை

எப்போதும் பிரித்தானியாவில் இருக்காது ஏனெனில் தேர்தல் முறை அடுத்தது வெளிநாட்டு மக்களை எதிர்ப்போர். குறைவு அதாவது பெரும்பான்மை இல்லை 20 % என்பது மிகக்குறைந்தது 100-20= 80.% பெரிய எண். ஜேர்மனியில் நேரடி தேர்தலில் CDU. SPD. தான் பாராளுமன்ற உறுப்பினர்களை பெறும் அதில் GRUNE. யும். இணைந்து உள்ளது விகிதாசாரப் பிரதிநிதித்துவம் தான் மற்ற கட்சிகள் பாராளுமன்றம் போகிறது இப்படி பிரித்தானியாவில் இருக்குமாயின் வெளிநாட்டுகாரரை எதிர்ப்போர். அதிக எண்ணிக்கையில் பாராளுமன்றம் வரலாம்”

Just now, Kandiah57 said:

போகாது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

நீங்கள் சொல்வது மிக சரி.

விகிதாசார பிரநிதிதுவத்தில் உள்ள பாதகங்களில் ஒன்று - இனவாதிகள், இதர சமூகவிரோதிகளுக்கும் ஒரு களம் அமைத்து கொடுக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

இது உங்கள் அரைகுறை புரிதல், தப்பான வியாக்கியானம்.

இல்லாத இடைவெளியை உங்கள் கற்பனையால் நிரப்புகிறீர்கள்.

உத்தியோக பற்றற்ற காராணம் எது என்பதை உங்களின் காதுக்குள் வந்து சொல்லவில்லைதானே?

இது உங்கள் pure speculation.

அவரின் பெற்றார் ஈரானில் செய்த விடயங்கள் காரணமாக இருக்கும். ஈரானில் பிறந்தது காரணம் என குறிப்பிடபட்டிருக்காது.

BBC News
No image preview

Daniel Khalife jailed for spying for Iran and prison escape

The former British army soldier is sentenced after he was the subject of a nationwide manhunt in 2023.

"In his first interview in January 2022, Khalife told police he had an ambition to work in military intelligence or for an elite signals unit.

He said he had been informed by an officer that his ancestry meant he was unlikely to qualify for the high-level security vetting - called "developed vetting" - that would allow him to work in sensitive roles.

"After this I decided to start my own intel operation to prove that I was able to do this," he wrote in an electronic note in 2021."

(உண்மையில் நான் சொன்னதை விட ஆழம் கூடியது)

இதை Judge கூட கேள்விக்கு உள்ளாக்கவில்லை.

அவர் அதை எப்படி எதிர்கொண்டு, கையாண்டார் என்பதே (சட்டத்துக்கு முன்) குற்றமாக உள்ளது.

(ஆம், எனக்கு புரியாத ஆங்கிலத்தில் புரிந்தது. இவருக்கு சொன்னது என்னிடம் எழுத்தில் தந்த நிபந்தனைகளை விட, இறுக்கம் கூடியது.)

7 hours ago, goshan_che said:

நான் சொன்னது சரி என நிறுவ. அதை விட,

எனக்கு நிறுவ வேண்டிய அவசியம் இல்லை, நான் சொல்வது யதார்த்தம்

நிறுவப்பட முடியாது என்பதை ஒன்றில் அறியாது, அல்லது வேட்கையில் நிறுவ முயற்சிப்பது நீங்கள்.

எப்போதாவது, எல்லா பிரசாவுரிமையும் சமம் இல்லை என்பதை எந்த அரசாவது ஏற்றுக்கொள்ளுமா?

அது (பொதுவாக) clearance என்ற பொறிமுறை ஊடக மேவப்படுகிறது.

7 hours ago, goshan_che said:

இப்படியான பிழையான தகவல்கள் ஒரு ஈழத்தமிழ் பிரிட்டிஷ் பிள்ளையின் career இல் மண் அள்ளி போட்டு விடக்கூடாது

நல்ல நோக்கம். அனால்,யதார்த்தத்தை தள்ளிவைத்து.

எனவே, அரைகுறை அறிவை, முழு அறிவு என்று சொல்கிறோம் என்று தெரியாமல் தான் சொல்கிறீர்கள்.

பறக்க வெளிக்கிடும் போது எப்போது எங்கே இறங்க வேண்டும் என்பதை தெரிந்து, பழகி கொண்டு பறக்க ஆயத்தமாவது நல்லது என்கிறேன் நான்.

அப்படி இல்லாமல், பறக்க ஆயத்தமாக்கலாம் என்கிறீர்கள் நீங்கள்.

அப்படி பறக்க வெளிக்கிட்ட நிலை தான் அந்த இளைஞரின் நிலை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, Kadancha said:

informed by an officer

இது ஒரு அதிகாரி வாய்மூலம் சொன்னார், என சதி, உளவுபார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டவர் , குற்றம் தீர்க்கப்பட்டவர். தனது குற்றத்தை இல்லை என சொல்ல, சொல்லிய கதை.

இதை நீதி மன்றமே நம்பவில்லை.

அப்படித்தான் இருந்தாலும் அது ஒரு இனவாத அதிகாரியால் சொல்லபட்டாதவே இருக்கும்.

ஒழிய அது ஏற்று கொள்ளபட்ட நடைமுறை அல்ல.

எனக்கு UK MoD யில் DV எனப்படும் developed vetting பாஸ்பண்ணி, பலவருடம் எஞ்சினியாராக வேலை செய்த இலங்கையில் பிறந்த தமிழரை தெரியும். இப்போதும் இலண்டனில் தமிழ் மொழி முன்னேற்ற நடவடிக்கையில் ஈடுபடுகிறார்.

இந்த ஒற்றை உதாரணமே போதும்.

இன்னொன்றும் சொல்கிறேன் கேளுங்கள் - எனக்கு வேலை செய்த பம்பாயில் பிறந்த ஒரு பெண்மணிக்கு, DV க்கான referee யாகவும் நானே இருந்துள்ளேன்.

அவவும் DV பாஸ்பண்ணி புது வேலை எடுத்தும் போய்விட்டா.

நீங்கள் அடியும் தெரியாமல், நுனியும் புரியாமல் உங்கள் வியாக்கியாத்தை கொடுக்கிறீர்கள்.

இந்த DV பற்றிய Guidance கீழே. இதிலும் நான் சொன்னபடிதான் உள்ளது.

எந்த இடத்திலும் நீங்கள் சொன்னபடி இல்லை.

https://www.gov.uk/government/publications/united-kingdom-security-vetting-clearance-levels/dv-guidance-pack-for-applicants

41 minutes ago, Kadancha said:

நான் சொல்வது யதார்த்தம்

யதார்த்தம் என நீங்கள் தப்பாக புரிந்து வைத்துள்ளது.

இதுவரை நீங்கள் சொல்லியதற்கு (ஒரு நாள் முழுக்க கூகிள் பண்ணிய பின்னும்) ஒரு எழுத்து மூல ஆதாரத்தை, policy document ஐ தன்னும் உங்களால் காட்ட முடியவில்லை.

43 minutes ago, Kadancha said:

எனவே, அரைகுறை அறிவை, முழு அறிவு என்று சொல்கிறோம் என்று தெரியாமல் தான் சொல்கிறீர்கள்.

உங்கள் முழு அறிவை முடிந்தால் ஆவணங்கள் மூலம் நிறுவுங்கள்😀.

உங்களின் assumptions எல்லாம் யதார்த்தம் ஆகாது. அறிவும் ஆகாது.

45 minutes ago, Kadancha said:

அப்படி பறக்க வெளிக்கிட்ட நிலை தான் அந்த இளைஞரின் நிலை

இல்லை அவர் ஈரானுக்கு உளவுபார்த்த குற்றவாளி. நான் எம் பிள்ளைகளை இப்படி செய்ய சொல்லவில்லை.

அவர்கள் நாட்டுக்கு விசுவாசமாக வேலை செய்ய பெற்றார் வெளிநாட்டில் பிறந்தது ஒரு தடையே அல்ல.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, Kadancha said:

எப்போதாவது, எல்லா பிரசாவுரிமையும் சமம் இல்லை என்பதை எந்த அரசாவது ஏற்றுக்கொள்ளுமா?

பிரஜா உரிமை எப்போதும் சமம்தான்.

பிரிதானியாவில் மட்டும் அல்ல. மேற்கு முழுவதும்.

வெள்ளை பிரஜா உரிமை, கறுப்பு, பழுப்பு பிரஜா உரிமை என வேறுபாடுகள் இல்லை.

அதே போல் பெற்றாரின் பிறந்த இடம், இங்கே பிறந்த பிள்ளைகளின் பிரஜா உரிமையை தரம் குறைக்கவும் மாட்டாது.

ஒரே ஒரு வித்தியாசம் மட்டுமே உள்ளது

பெற்றார் அல்லது திருமணம் அல்லது வேறு எந்த வழியிலாவது உங்களுக்கு இன்னொரு நாட்டின் பிரஜா உரிமை இருந்து, நீங்கள் இந்த நாட்டின் பாதுகாப்பு நலனுக்கு விரோதமாக செயல்படின், உங்களின் பிரித்தானிய பிரஜா உரிமை மீளப்பெறப்படலாம்.

ஷைமைமா பேகம் வழக்கு போல.

ஆனால் இதுவும் கூட எல்லாருக்கும் பொதுவானதே, ஒரு அமெரிக்கா குடியுரிமைக்கு உரித்துள்ள, வெள்ளை பிரிதானிய குடிமகன், பேகம் போல ஐசிஸ் உடன் சேர்ந்தால், பேகத்துக்கு நடந்தது அவருக்கும் நடக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
On 25/2/2025 at 15:02, goshan_che said:

பிரஜா உரிமை எப்போதும் சமம்தான்.

பிரிதானியாவில் மட்டும் அல்ல. மேற்கு முழுவதும்.

வெள்ளை பிரஜா உரிமை, கறுப்பு, பழுப்பு பிரஜா உரிமை என வேறுபாடுகள் இல்லை.

அதே போல் பெற்றாரின் பிறந்த இடம், இங்கே பிறந்த பிள்ளைகளின் பிரஜா உரிமையை தரம் குறைக்கவும் மாட்டாது.

Theory என்ற அடிப்படையில் சரி.

அனல், யதார்த்தத்தில் அப்படி இல்லை.

அண்மைய உதாரணம் Windrush.

  • கருத்துக்கள உறவுகள்
On 25/2/2025 at 14:48, goshan_che said:

இது ஒரு அதிகாரி வாய்மூலம் சொன்னார், என சதி, உளவுபார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டவர் , குற்றம் தீர்க்கப்பட்டவர். தனது குற்றத்தை இல்லை என சொல்ல, சொல்லிய கதை.

அந்த இளைஞன் சொன்னதை, நீஇ மன்றம் கூட தலையிடவிலை. நீங்கள் உங்கள் வாதத்துக்காக திருப்புவது.

அகில் நீதிமன்றம் தலையிடாது, தலையிட முடியாது. இதுவே dv clearance இன் முக்கியமனா ஓர் அம்சம்.

அவர் பின்பு செய்ததை பறி மட்டுமே வழக்கும், குற்றமும்.

அந்த அதிகாரி சொன்னதும் யதார்த்தம்

இதில் முக்கியம், நடந்தது எல்லாவற்றையும் அவர் சொல்லி இருக்கிறார்.

தீர்ப்பிலும், தன்னிச்சையான ஆர்வத்தினால் முட்டாள் தனமாக நடந்து கொண்டது என்று.

Edited by Kadancha
add info.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kadancha said:

Theory என்ற அடிப்படையில் சரி.

அனல், யதார்த்தத்தில் அப்படி இல்லை.

அண்மைய உதாரணம் Windrush.

நான் சொல்வது தியரி அல்ல. Both in theory and in practice எழுத்திலும் நடைமுறையிலும். அதுதான் என் வாழ்ந்த அனுபவத்தை my own lived-experience எழுதினேன்.

Windrush - ஒரு scandal -அதாவது சட்டத்திலோ, guidance இலோ, இல்லாதாவிடயத்தை, சட்டத்தை மீறி செயல்பட்டது.

ஒரு இடத்தில், விடயத்தில் scandal நடந்தத்தால் அனைத்து விடயத்திலும் அப்படி என கூற முடியாது.

குறிப்பாக வாழ்ந்த அனுபவம் lived experience வேறாக இருக்கும் போது.

2 hours ago, Kadancha said:

அந்த இளைஞன் சொன்னதை, நீஇ மன்றம் கூட தலையிடவிலை. நீங்கள் உங்கள் வாதத்துக்காக திருப்புவது.

யாரும் தலையிடமாட்டார்கள் ஏன் என்றால் அது ஒருவர் தான் வழக்கில் இருந்து தப்ப சொன்ன பொய்.

எத்தனையோ வெளிநாட்டில் பிறந்தவர்களே DV கிளியரன்ஸ் எடுத்திருக்கும் போது, ஒருவர் தான் தப்ப, ஒரு defence case argument இல் இப்படி சொன்னால் அதை யாரும் கணக்கில் எடுப்பதில்லை.

Edited by goshan_che

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kadancha said:

அகில் நீதிமன்றம் தலையிடாது, தலையிட முடியாது. இதுவே dv clearance இன் முக்கியமனா ஓர் அம்சம்.

தலையிடமுடியாது என்பதை விட. தலையிட வேண்டிய தேவை இங்கே எழவில்லை.

நீதிமன்றம் ஏன் இதில் தலையிட வேண்டும்?

வழக்கு போட்டவர் குற்றத்தை நிருபிக்க வேண்டும். குற்றம்சாட்டப்பட்டவர் தன் நிரபராதி என ஆதாரத்தை சமர்பிக்க வேண்டும். பிரெஞ்சு நீதிமன்றங்கள் போல், பிரித்தானிய நீதிமன்றங்கள் inquisitorial அல்ல. அதேபோல் இது ஒரு public inquiry யும் அல்ல.

2 hours ago, Kadancha said:

அந்த அதிகாரி சொன்னதும் யதார்த்தம்

இது உங்கள் speculation.

  1. ஒரு ரேசிஸ்ட் அதிகாரி பொய்யாக அந்த பையனை discourage பண்ண சொல்லி இருக்கலாம்.

  2. உங்களை போல் விளக்கம் பத்தாமல் அந்த அதிகாரி இப்படி சொல்லி இருக்கலாம்.

  3. அந்த அதிகாரி அப்படி எதுவும் சொல்லாமல், வழக்கில் இருந்து தப்ப அந்த பையன் பொய் சொல்லி இருக்கலாம்

இதில் எதுவாவது ஒன்றாக இருக்கலாம்.

ஆனால் இதுதான் நடைமுறை என்பது அல்ல.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆக மொத்தத்தில்.

ஒரு பிரித்தானிய பிரஜைக்கு, அவரின் பெற்றார் எங்கே பிறந்தார்கள் என்பதை மட்டும் வைத்து, வேலை மறுக்கப்படாது.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, goshan_che said:

தலையிடமுடியாது என்பதை விட. தலையிட வேண்டிய தேவை இங்கே எழவில்லை.

நீங்கள் தான் முதலில் நம்பவில்லை என்றது. அது அந்த விடயத்தில் தலையீடு.

நான் சொன்னது, எப்போதும் தலையிட முடியாது. அதனால் அதை பற்றி எந்த கருத்தும் இல்லை நீதிபதியிடம்.

  • கருத்துக்கள உறவுகள்
On 25/2/2025 at 10:34, goshan_che said:

விகிதாசாரப் பிரதிநிதித்துவம் தான் மற்ற கட்சிகள் பாராளுமன்றம் போகிறது இப்படி பிரித்தானியாவில் இருக்குமாயின் வெளிநாட்டுகாரரை எதிர்ப்போர். அதிக எண்ணிக்கையில் பாராளுமன்றம் வரலாம்”

போகாது

நீங்கள் சொல்வது மிக சரி.

செய்திகளில் நான் கவனமாக அவதானித்தேன். கம்யுனிச ஆக்கிரமப்பின் கீழ் முன்பு இருந்த யேர்மனின் கிழக்கு பகுதி தொகுதிகளில் பேர்லின் தலைநகர தொகுதியை தவிர இனவெறி AFD கட்சி மிக பெரிய வெற்றி பெற்றுள்ளது. பல இடங்களில் 43 வீதம் வாக்குகளை பெற்றுள்ளது.கம்யுனிச ஆக்கிரமப்பின் கீழ் வாழ்ந்த யேர்மனிய மக்கள் ஏன் இனவெறி சிந்தனை பெற்றார்கள் என்பது விளங்கவில்லை.யேர்மன் மேற்கு பகுதிகளில் இனவெறி AFD கட்சி தோல்வி அடைந்து மூன்றாவது இடத்திற்கு வந்துள்ளது 16 -18 வீதம் வாக்குகளை பெற்றுள்ளது. ஆனால் பிரித்தானியாவில் இனவாதிகள் 16 வீதம் பெறுவார்களா தமிழ்நாட்டில் சீமான் இவ்வளவு வாக்குகள் பெற்று கொள்ள முடியாது. ஈரோடு இடை தேர்தலில் மற்ற கட்சிகள் போட்டியிடாததால் பிஜேபி அதிமுக வாக்குகள் அவருக்கு கிடைத்தபடியால் 15 வீதம் வந்தது இனவெறியை நிராகரிக்கும் தமிழ்நாட்டு பிரித்தானிய மக்கள் உயர் மக்கள்👍

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, விளங்க நினைப்பவன் said:

உண்மை தான் அவர்கள் அப்படி தான் அவர்களை மாற்றுவது கொஞ்சம் கடினம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kadancha said:

நீங்கள் தான் முதலில் நம்பவில்லை என்றது. அது அந்த விடயத்தில் தலையீடு.

நான் சொன்னது, எப்போதும் தலையிட முடியாது. அதனால் அதை பற்றி எந்த கருத்தும் இல்லை நீதிபதியிடம்.

இல்லை.

வழக்கை விசாரிக்குக் நீதிபதி அல்லது ஜூரி - ஒட்டுமொத்தமாக குற்றசாட்டை ஆம் இல்லை என முடிவு செய்யும் போது, ஒவ்வொரு defence புள்ளியையும் துறை போக ஆராய தேவையில்லை. அதை நம்புவதா இல்லையா என்பதை மட்டுமே முடிவு செய்வார்கள்.

இந்த பையன் எந்த corroborating evidence ஆதாரமும் இல்லாமல் இப்படி ஒரு அதிகாரி எனக்கு சொன்னார் என சொன்னால் - அதை நம்பாமல் விடுவார்கலே ஒழிய பையன் சொல்லுவதற்கு ஆதாரம் தேடுவது நீதிமன்றின் வேலை அல்ல.

அதை பற்றி வியாக்கியானம் செய்வதும் நீதிபதியின் வேலை அல்ல.

2 hours ago, விளங்க நினைப்பவன் said:

செய்திகளில் நான் கவனமாக அவதானித்தேன். கம்யுனிச ஆக்கிரமப்பின் கீழ் முன்பு இருந்த யேர்மனின் கிழக்கு பகுதி தொகுதிகளில் பேர்லின் தலைநகர தொகுதியை தவிர இனவெறி AFD கட்சி மிக பெரிய வெற்றி பெற்றுள்ளது. பல இடங்களில் 43 வீதம் வாக்குகளை பெற்றுள்ளது.கம்யுனிச ஆக்கிரமப்பின் கீழ் வாழ்ந்த யேர்மனிய மக்கள் ஏன் இனவெறி சிந்தனை பெற்றார்கள் என்பது விளங்கவில்லை.யேர்மன் மேற்கு பகுதிகளில் இனவெறி AFD கட்சி தோல்வி அடைந்து மூன்றாவது இடத்திற்கு வந்துள்ளது 16 -18 வீதம் வாக்குகளை பெற்றுள்ளது. ஆனால் பிரித்தானியாவில் இனவாதிகள் 16 வீதம் பெறுவார்களா தமிழ்நாட்டில் சீமான் இவ்வளவு வாக்குகள் பெற்று கொள்ள முடியாது. ஈரோடு இடை தேர்தலில் மற்ற கட்சிகள் போட்டியிடாததால் பிஜேபி அதிமுக வாக்குகள் அவருக்கு கிடைத்தபடியால் 15 வீதம் வந்தது இனவெறியை நிராகரிக்கும் தமிழ்நாட்டு பிரித்தானிய மக்கள் உயர் மக்கள்👍

மிகவும் யோசிக்க வேண்டிய விடயம் - ஒட்டுமொத்த ஜேர்மனியில் 30 வயதுக்கு கீழான ஆண்களிடம் AfD தான் முதலாம் இடம்!!!

2 hours ago, விளங்க நினைப்பவன் said:

ஆனால் பிரித்தானியாவில் இனவாதிகள் 16 வீதம் பெறுவார்களா தமிழ்நாட்டில் சீமான் இவ்வளவு வாக்குகள் பெற்று கொள்ள முடியாது. ஈரோடு இடை தேர்தலில் மற்ற கட்சிகள் போட்டியிடாததால் பிஜேபி அதிமுக வாக்குகள் அவருக்கு கிடைத்தபடியால் 15 வீதம் வந்தது இனவெறியை நிராகரிக்கும் தமிழ்நாட்டு பிரித்தானிய மக்கள் உயர் மக்கள்👍

இதில் உண்மை இல்லாமலும் இல்லை. பிரித்தானியாவிலும், தமிழ் நாட்டிலும், first past the post முறை என்பது உண்மை ஆகினும், இனவாத கட்சிகள் விகிதாசாரம் இப்படி வராது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.