Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விமானத்தில் உயிரிழந்த பயணியின் உடலிற்கு அருகில் அமர்ந்து நான்கு மணிநேரம் பயணம் - தங்கள் மனஉளைச்சல் குறித்து அவுஸ்திரேலிய தம்பதியினர் தகவல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: RAJEEBAN

26 FEB, 2025 | 12:59 PM

image

கட்டார் எயர்வேய்ஸ் விமானத்தில் உயிரிழந்த பயணியொருவரின் உடலுடன் பயணித்த அனுபவங்களை அவுஸ்திரேலிய தம்பதியினர் பகிர்ந்துகொண்டுள்ளனர்.

வெனிசிலிருந்து தங்களின் கட்டார் எயர்வேய்ஸ் விமானத்தில் பயணித்த மிச்செல் ரிங்கும் ஜெனிபர் கொலினும் மெல்பேர்னிலிருந்து டோஹா பயணத்தின்போது தங்கள் விமானத்தில் பயணித்த பெண்ணொருவர் உயிரிழந்தார் என அவுஸ்திரேலியாவின் சனல் 9 க்கு தெரிவித்துள்ளனர்.

flying_with_dead_body1.jpg

விமான பணியாளர்கள் போர்வையால் சுற்றி அந்த உடலை தங்களிற்கு அருகில் வைத்தனர் என தெரிவித்துள்ள அவுஸ்திரேலிய தம்பதியினர்  விமானத்தில் வேறு ஆசனங்கள் காலியாகயிருந்த போதிலும் நான்கு மணித்தியாலங்கள் அந்த உடலை தங்களிற்கு அருகிலேயே வைத்திருந்தனர் என தெரிவித்துள்ளனர்.

கட்டார் எயர்வேய்ஸ் இதனால் ஏற்பட்ட அசௌகரியத்திற்காக மனம் வருந்துவதாக தெரிவித்துள்ளதுடன் குறிப்பிட்ட பயணிகளை தொடர்புகொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

எனினும் இதுவரை எவரும் தங்களை தொடர்புகொள்ளவில்லை என அவுஸ்திரேலிய தம்பதியினர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் பயணிகளை கவனித்துக்கொள்வதற்கான விதிமுறைகள் அவசியம் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தங்களுடன் விமானத்தில் பயணித்த பெண் மயங்கி விழுந்ததும் விமான பணியாளர்கள் உடனடியாக தங்களால் முடிந்த அனைத்தையும் செய்தனர் என தெரிவித்துள்ள ரிங் ஆனால் அந்த பெண்ணை காப்பாற்ற முடியவில்லை அதனை பார்ப்பது துரதிஸ்டவசமானதாகயிருந்தது என குறிப்பிட்டுள்ளார்.

உயிரிழந்த பெண்ணின் உடலை வேறு பகுதிக்கு கொண்டு செல்ல முயன்றனர், ஆனால் அவர் மிகவும் பருமனானவராக காணப்பட்டதால் அது முடியவில்லை, எங்களிற்கு பின்னால் ஆசனங்கள் இருப்பதை விமானப்பணியாளர்கள் அவதானித்தனர், சற்றே விலக முடியுமா என கேட்டனர் நாங்கள் ஆம் என்றோம் அவர்கள் நான் இருந்த ஆசனத்தில் உடலை வைத்தனர் என ரிங் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/207721

  • கருத்துக்கள உறவுகள்

4 minutes ago, ஏராளன் said:

விமான பணியாளர்கள் போர்வையால் சுற்றி அந்த உடலை தங்களிற்கு அருகில் வைத்தனர் என தெரிவித்துள்ள அவுஸ்திரேலிய தம்பதியினர்  விமானத்தில் வேறு ஆசனங்கள் காலியாகயிருந்த போதிலும் நான்கு மணித்தியாலங்கள் அந்த உடலை தங்களிற்கு அருகிலேயே வைத்திருந்தனர் என தெரிவித்துள்ளனர்.

இறந்த பயணி பருமனானவர் என்ற படியால், அவர் விழுந்த இடத்திற்கு அருகில் உள்ள இருக்கையில் அமர வைக்கப் பட்டு இருக்கின்றார்.

வேறு இருக்கைகள்… காலியாக இருந்தது என்று இந்தத் தம்பதிகளே சொல்கிறார்கள். அப்படி என்றால்… இவர்கள் அந்த இடத்தில் போய் அமர்ந்து இருக்கலாமே. அதைச் செய்யாமல்…. பிணத்துக்கு அருகில் இருந்து பயணம் செய்து விட்டு, பத்திரிகைக்கு பேட்டி கொடுக்கும் மர்மம் என்ன?

தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் இடம் மாறி இருந்து, அனுசரித்து போவதுதானே முறையான செயல்.

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, தமிழ் சிறி said:

இதனால் தங்களுக்கு மன உழைச்சலாகி விட்டது என்று விமான நிறுவனத்திடம் பணம் பறிக்கும் விதமாகவும் மாறலாம் இல்லயா.?

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, யாயினி said:

இதனால் தங்களுக்கு மன உழைச்சலாகி விட்டது என்று விமான நிறுவனத்திடம் பணம் பறிக்கும் விதமாகவும் மாறலாம் இல்லயா.?

விமான நிறுவனத்திடம் பணம் பறிக்கும் நோக்கமாக இருக்கலாம்.

அது எவ்வளவு வெற்றியளிக்கும் என தெரியவில்லை. எப்படியும்… விமான ஊழியர்கள், இவர்களை இருக்கை மாறி அமரச் சொல்லி நிச்சயம் கேட்டு இருப்பார்கள். இவர்கள் அதனை வெளியே சொல்லவில்லை என நினைக்கின்றேன்.

விமான ஊழியர்கள்…. இறந்த ஒருவரை, திடீரென்று பயணிகள் அருகில் கொண்டு வந்து வைப்பார்கள் என்பது நம்பக்கூடிய கதை மாதிரி தெரியவில்லை.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

வேறு இருக்கைகள்… காலியாக இருந்தது என்று இந்தத் தம்பதிகளே சொல்கிறார்கள். அப்படி என்றால்… இவர்கள் அந்த இடத்தில் போய் அமர்ந்து இருக்கலாமே.

இதைத்தான் நானும் நினைத்தேன் இதை வாசித்தபொழுது.

  • கருத்துக்கள உறவுகள்

வேறு இருக்கைகள் காலி என்றால் நாம் நினைத்தபடி எழுந்து சென்று அவற்றில் அமர முடியுமா? பிணத்துடன் பயணிகளை அமர்த்தியது மிகவும் தவறு. இறந்த உடலை பயணி அருகில் கிடத்துவது தவிர வேறு இடம் கிடைக்க இல்லை என்றால் விமான பணியாளர்கள் தான் அருகில் உள்ள இருக்கையில் உள்ள பயணிகளை காலியாக உள்ள இடக்திற்கு நகர்த்த வேண்டும். @satan @தமிழ் சிறி இலங்கையை விட்டு வெளிக்கிட்டபிறகு இன்னும் விமானத்தில் பயணம் செய்ய இல்லையோ.

  • கருத்துக்கள உறவுகள்

நான், ஒருதடவை பயணம் செய்தபோது எனக்கு அருகில் ஒரு பயணிக்கு ஆசனம் நியமிக்கப்பட்டிருந்தது. எனக்குப்பின்னால் மூன்று ஆசனங்கள் காலியாக இருந்தன. அருகில் இருந்த பயணி பின்னால் சென்று, அந்த மூன்று ஆசனங்களையும் ஆக்கிரமித்து, கால் கையை நீட்டி ஆசுவாசமாக தூங்கியெழுந்தார். அவருக்குரிய உணவும் அங்கேயே பரிமாறப்பட்டது. யாரும் கேள்வி கேட்கவில்லை.

அதிலும் இது ஒரு தவிர்க்க முடியாத அசாதாரண நிலை. காலியாக இருந்த ஆசனங்களை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டிருப்பர்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நியாயம் said:

வேறு இருக்கைகள் காலி என்றால் நாம் நினைத்தபடி எழுந்து சென்று அவற்றில் அமர முடியுமா? பிணத்துடன் பயணிகளை அமர்த்தியது மிகவும் தவறு. இறந்த உடலை பயணி அருகில் கிடத்துவது தவிர வேறு இடம் கிடைக்க இல்லை என்றால் விமான பணியாளர்கள் தான் அருகில் உள்ள இருக்கையில் உள்ள பயணிகளை காலியாக உள்ள இடக்திற்கு நகர்த்த வேண்டும். @satan @தமிழ் சிறி இலங்கையை விட்டு வெளிக்கிட்டபிறகு இன்னும் விமானத்தில் பயணம் செய்ய இல்லையோ.

அவசரப்படக்கூடாது.....இதிலை அடுத்தவர்களை பார்த்து விமானத்தில் பயணிக்கவில்லையா என்ற நக்கல் தொனி வேற. நானே விமான ஊழியர்களின் அனுமதியுடன் மூன்று ஆசனங்களில் நன்றாக கையையும் காலையும் நீட்டி உறங்கி சிங்கையிலிருந்து சன்பிரான்சிஸ்கோ சென்று இறங்கியுள்ளேன்

Edited by அக்னியஷ்த்ரா

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நியாயம் said:

வேறு இருக்கைகள் காலி என்றால் நாம் நினைத்தபடி எழுந்து சென்று அவற்றில் அமர முடியுமா? பிணத்துடன் பயணிகளை அமர்த்தியது மிகவும் தவறு. இறந்த உடலை பயணி அருகில் கிடத்துவது தவிர வேறு இடம் கிடைக்க இல்லை என்றால் விமான பணியாளர்கள் தான் அருகில் உள்ள இருக்கையில் உள்ள பயணிகளை காலியாக உள்ள இடக்திற்கு நகர்த்த வேண்டும். @satan @தமிழ் சிறி இலங்கையை விட்டு வெளிக்கிட்டபிறகு இன்னும் விமானத்தில் பயணம் செய்ய இல்லையோ.

பயணிகள் எல்லோரும் ஏறிய பின், இருக்கைகள் காலியாக இருந்தால்… மாறி அமர்வது சர்வ சாதாரணமானது. நானே பலமுறை மாறி அமர்ந்து இருக்கின்றேன். இதுவரை… எனக்கு எந்த விமான ஊழியரும் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இது வழமை போன்றது அல்லாத ஒரு அசாதாரணமான நிலமை. பயணி ஒருவர் பயணத்தின்போது விமானத்தில் இறந்துள்ளார். எனவே, சக பயணிகள் தங்கள் கையில் விடயங்களை எடுக்கக்கூடாது. நிலமையை சரிதாக கையாளவேண்டியது விமானத்தின் கப்டன் தலைமையிலான விமான பணியாளர் குழு ஆகும். இவர்கள் தமது பணியை சரியாக செய்யவில்லை. சக பயணிகள் மேற்கண்ட சம்பவத்தால் பாதிக்கப்பட்டால் இது விமான நிறுவனத்தின் பொறுப்பு.

பணியாளர்கள் பயிற்சி பெற்ற பின்னே பணியில் அமர்கின்றார்கள். அவர்கள் பயிற்சியின்போது இவ்வாறான மரணங்கள் பற்றி நிச்சயம் கற்று இருப்பார்கள். செத்தவரை போர்வையால் போர்த்தி சக பயணிகளுடன் பயணிக்க வைக்கவேண்டும் என்பதே அவர்களுக்கு கற்று கொடுக்கப்பட்டது என நான் நினைக்கவில்லை. இப்படி செய்வது தவறு என்பதால்தான் இது செய்தியாக வந்துள்ளது.

மற்றும்படி அக்கினி கொக்பிட்டில் இடம் இருந்தால் பணியாளர்களுடன் கதைத்துவிட்டு அங்குபோய் அமரக்கூடியவர் தேவை என்றால் பிளேனையும் ஓட்டக்கூடியவர் என நான் நம்புகின்றேன்.

ஒரு அசம்பாவிதம் நடக்கும்போதுதான் பயர் ஏன் இடம் மாறி உட்கார்ந்தான் என விசாரணை தொடங்கும்.

Edited by நியாயம்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நியாயம் said:

இது வழமை போன்றது அல்லாத ஒரு அசாதாரணமான நிலமை. பயணி ஒருவர் பயணத்தின்போது விமானத்தில் இறந்துள்ளார். எனவே, சக பயணிகள் தங்கள் கையில் விடயங்களை எடுக்கக்கூடாது.

சாதாரணமான நாட்களில் செய்ய முடியுமென்றால், அசாதாரண நாட்களில் செய்வதற்கு தக்க காரணம் இருக்கிறது. அதுதானே அவர் தனது மனநிலையை வெளிப்படுத்தியிருக்கிறார், கேள்வி கேட்க்கும் போது இடம் மாறி அமர்ந்ததற்கான காரணத்தை வெளிப்படுத்த முடியும், இது ஏற்றுக்கொள்ளக்கூடியது. வேறு ஆசனங்கள் காலியாக இருந்தது என்கிறார், அவற்றில் ஒன்றை அவர்கள் இறந்தவரை அமரவைக்க முடியாமைக்கான காரணத்தையும் ஏற்றுக்கொள்கிறார், அதே நேரம் இவர்களுக்கு உயிரிழந்தவரின் அருகில் அமர்வதால் அசௌகரியம் ஏதும் இல்லையோ என்றும் பாதிக்கப்பட்டவரென கூறுபவரையும் கேட்டுள்ளனர். அவர் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை என்றே தோன்றுகிறது. ஒருவரை அவர் விருப்பத்திற்கு மாறாக வற்புறுத்தி இடம் மாற்ற முடியாது. ஆகவே இதில் குறை கூறுபவரிற்தான் ஏதோ தவறு.

3 hours ago, நியாயம் said:

ஒரு அசம்பாவிதம் நடக்கும்போதுதான் பயர் ஏன் இடம் மாறி உட்கார்ந்தான் என விசாரணை தொடங்கும்.

அதுதான் அவரருகில் இறந்த ஒருவரின் உடல் இருந்ததே. ஏதாவது பயங்கரவாத செயல் நடந்திருந்தால், சக பயணி தாக்கப்பட்டிருந்தால் இந்த கேள்வி கட்டாயம் கேட்கப்படவேண்டியது, கேட்க்கப்படும்.

  • கருத்துக்கள உறவுகள்

பொதுவாக ஒரு பயணிக்கு உடல் உபாதை: உயிராபத்து என்றால் விமானத்தை திசை திருப்பி அருகில் உள்ள சிகிச்சை வசதி உள்ள ஒரு விமானநிலையத்தில் இறக்குவார்கள். சாகும் நிலையில் உள்ள ஒருவரை வைத்துக்கொண்டு தொடர்ந்து பறக்க மாட்டார்கள். இந்த செய்தி பற்றி விரிவாக தெரியாமையால் விமானம் ஏன் திசை திருப்பப்படவில்லை என கூறமுடியவில்லை. ஆனால், மறுபுறம் இறந்த பயணியின் உறவினர்கள் இது பற்றி புகார் அளிக்கலாம்/சட்ட நடவடிக்கை எடுக்கலாமோ என ஊகிக்கின்றேன். இந்த நடைமுறை நாட்டுக்கு நாடு வேறுபடுமோ தெரியாது.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, நியாயம் said:

மற்றும்படி அக்கினி கொக்பிட்டில் இடம் இருந்தால் பணியாளர்களுடன் கதைத்துவிட்டு அங்குபோய் அமரக்கூடியவர் தேவை என்றால் பிளேனையும் ஓட்டக்கூடியவர் என நான் நம்புகின்றேன்.

அவசியமற்ற அலம்பல்.

HuffPost
No image preview

Here’s Exactly What Happens When Someone Dies On A Plane...

In-flight deaths are rare, but there's a process for handling the situation when it does arise.

There are specific procedures for securing the deceased person’s body in a way that respects their dignity and shows sensitivity to their travel companions and others on the plane.

To handle the body with dignity and respect while ensuring minimal disruption to other passengers, the crew covers the deceased passenger with a blanket,” Alves said. “Nearby passengers may be moved to other seats if space permits. The body may be moved to a less populated area, such as an empty row, if available. Otherwise, the body is secured in the original seat with the seatbelt fastened to prevent movement during the flight.”

Dead body placed beside Australi...
No image preview

Dead body placed beside Australian couple on Qatar Airway...

Cabin crew placed the body of a passenger who died mid-flight in an empty seat beside the pair.

செய்தியின் அடிப்படையில் இறந்தவரை இவர் அருகில் கொண்டுவந்து வைத்துள்ளனர்.

Mr Eustance said that, while he was not being judgemental as he did not know the full situation, he was surprised that the crew did not move Mr Ring if there had been spare seats.

"I would expect the crew would do all they could to avoid that. You are creating potential future liabilities in terms of the trauma of the people next to whom the body was placed," he said.

"In my experience the crew would normally try to isolate the body, so there is no passenger exposure to the body and vice versa, for respect and privacy but also for medical reasons. You have a dead body that is uncontained and all that goes with it."

சிலவேளை விமான ஊழியர்களுக்கு வழங்கப்படாத ஸ்பெஷல் ட்ரைனிங் இன் க்ரைம் இன்வெஸ்டிகேஷன் மிஸ்டர் நியாயத்திற்கு மட்டும் வழங்கப்பட்டிருக்கலாம்

Edited by அக்னியஷ்த்ரா
Additional clause

  • கருத்துக்கள உறவுகள்

மிக சாதாரண விடயம்.

ஒரு முறை எமிரேட்சில் எனக்கு அருகில் இரெண்டு சீட்டை எடுத்து ஒருவரை பேச்சு மூச்சு இல்லாமல் வைத்திருந்தார்கள்.

விமானத்தில் இறந்த உடலை இப்படி ஏற்ற முடியாது என்பதால் - யாரோ ஒரு சீவன் சாவயதற்க்காக டுபாய் கூட்டி போவதை ஊகித்து கொண்டேன்.

Full flight - என்ன பண்ணலாம் என யோசித்து cabin upgrade க்கு நூல் விட்டேன் நடக்கவில்லை.

நமக்கு அருகில் இருப்பவரின் உடல் நிலை நம் கட்டுப்பாட்டில் இல்லை. அவர் செத்து கொண்டிருக்கலாம், அல்லது சாகலாம்.

எம்மையும் கூட்டி போகவில்லை என ஆறுதல் அடைய மட்டுமே முடியும்🤣.

வேறு சீட் காலியாக இருந்தால் மாறி இருக்க கேட்டிருந்தால் நிச்சயம் விமான பணியாளர் விட்டிருப்பார்கள். அவர்களாகவே கேட்டிருக்கவும் கூடும்.

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, அக்னியஷ்த்ரா said:

அவசியமற்ற அலம்பல்.

HuffPost
No image preview

Here’s Exactly What Happens When Someone Dies On A Plane...

In-flight deaths are rare, but there's a process for handling the situation when it does arise.

There are specific procedures for securing the deceased person’s body in a way that respects their dignity and shows sensitivity to their travel companions and others on the plane.

To handle the body with dignity and respect while ensuring minimal disruption to other passengers, the crew covers the deceased passenger with a blanket,” Alves said. “Nearby passengers may be moved to other seats if space permits. The body may be moved to a less populated area, such as an empty row, if available. Otherwise, the body is secured in the original seat with the seatbelt fastened to prevent movement during the flight.”

Dead body placed beside Australi...
No image preview

Dead body placed beside Australian couple on Qatar Airway...

Cabin crew placed the body of a passenger who died mid-flight in an empty seat beside the pair.

செய்தியின் அடிப்படையில் இறந்தவரை இவர் அருகில் கொண்டுவந்து வைத்துள்ளனர்.

Mr Eustance said that, while he was not being judgemental as he did not know the full situation, he was surprised that the crew did not move Mr Ring if there had been spare seats.

"I would expect the crew would do all they could to avoid that. You are creating potential future liabilities in terms of the trauma of the people next to whom the body was placed," he said.

"In my experience the crew would normally try to isolate the body, so there is no passenger exposure to the body and vice versa, for respect and privacy but also for medical reasons. You have a dead body that is uncontained and all that goes with it."

சிலவேளை விமான ஊழியர்களுக்கு வழங்கப்படாத ஸ்பெஷல் ட்ரைனிங் இன் க்ரைம் இன்வெஸ்டிகேஷன் மிஸ்டர் நியாயத்திற்கு மட்டும் வழங்கப்பட்டிருக்கலாம்

மற்றையோருக்கு எதுவும் தெரியாது, அவர்களுக்கு எந்த அனுபவமுமில்லை, தாம்தாம் எல்லாம் தெரிந்தவர்கள், அனுபவசாலிகள் எனும் நினைப்பில் மற்றயோரை மட்டந்தட்டி எழுதுவோருடன் வாதாடி நேரம் இழப்பதைத்தவிர, நமக்கு தெரிந்ததை எழுதி விட்டு விலகி விடவேண்டும். அவர்கள் தாங்களே கெட்டிக்காரர் என மகிழ்வதில் நமக்கு என்ன பிரச்சனை?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.