Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த மட்ச் நடக்கும்போது கேம்பிரிட்ஜுக்குப் போய் முடியும்போது மோட்டர்வேயில் வந்துகொண்டிருந்தேன். ஃபோனை கோல்டரில் போட்டுவிட்டு கிரிக் இன்ஃபோவைத்தான் பார்த்துக்கொண்டு காரை ஓட்டினேன்.. கடைசி நான்கு ஓவர்கள் திக்திக்கென்று போய்க்கொண்டிருந்தது! ஒரு மாதிரி RCB வென்றதால் இரண்டு புள்ளிகள் கிடைத்தது.😀

  • Replies 3.3k
  • Views 94.9k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • வாத்தியார்
    வாத்தியார்

    பிஸ்கட் தருவார்கள் என்று பள்ளிக்குச் சென்றோம் 😅 பலகாரம் தருவார்கள் எனது திருமண வீடு செல்வோம் 🤣 கோவிலுக்குச் சென்றால் சுண்டல் கிடைக்கும் 😂 இந்தத் திரியில் புள்ளி கிடைக்கும் என வந்தோம் 😛 ஆனால் இப்போது

  • கிருபன்
    கிருபன்

    யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட் போட்டி 2025 இறுதி நிலைகள்: தொடர்ந்து பல போட்டிகளிலும் முன்னணியில் நின்று வெற்றி பெற்ற @நந்தன் க்கு வாழ்த்துக்கள்! இரண்டாவது இடத்தில் நிற்கும் @ரசோதரன் க்கும், மூன்றாவது

  • கிருபன்
    கிருபன்

    நேற்றுவரை நடந்து முடிந்த மூன்று போட்டிகளினதும் யாழ்களப் போட்டியாளர்களின் கணிப்புக்கள்: 1) சனி 22 மார்ச் 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் KKR எதி

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, ஈழப்பிரியன் said:

தோல்விக்கு யாரையாவது ஒராளை தூக்கி துவைத்து எடுத்து விடுவீர்கள்.

இந்த தடவை பாவம் அம்பயர் தான் பயர் ஆகிறார்.

சிறந்த மறுமொழிக்கான விருது உங்களுக்கு. உருண்டு பிரண்டு சிரித்தபடி.

Edited by செம்பாட்டான்

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, கிருபன் said:

இந்த மட்ச் நடக்கும்போது கேம்பிரிட்ஜுக்குப் போய் முடியும்போது மோட்டர்வேயில் வந்துகொண்டிருந்தேன். ஃபோனை கோல்டரில் போட்டுவிட்டு கிரிக் இன்ஃபோவைத்தான் பார்த்துக்கொண்டு காரை ஓட்டினேன்.. கடைசி நான்கு ஓவர்கள் திக்திக்கென்று போய்க்கொண்டிருந்தது! ஒரு மாதிரி RCB வென்றதால் இரண்டு புள்ளிகள் கிடைத்தது.😀

உங்களுக்கு அவ்வளவு ஆர்வம். அவங்களும் போட்டிய இப்பிடிக் கொண்டுபோய் முடிச்சா.... இப்பிடித்தான் இருக்கும். கவனமாக வேற கார ஓட்டவேணும்.

ஏன் உங்கின ரேடியோவில போட்டி வாறேலையோ.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐபிஎல் 2025இன் இன்று நடந்த 52வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் ஜாகப் பெதலினதும் விராட் கோலியினதும் வேகமான அரைச் சதங்களுடனும், பின்னர் வந்து மரண அடி கொடுத்து 14 பந்துகளில் ஆட்டமிழக்காது 53 ஓட்டங்கள் எடுத்த ரொமாரியோ ஷெப்பேர்ட்டினது ஆட்டத்துடனும் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 213 ஓட்டங்களை அள்ளிக் குவிக்கமுடிந்தது.

பதிலுக்குத் துடுப்பாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் 17 வயதேயான வீரர் ஆயுஷ் மாத்ரேயின் புயல்வேக 94 ஓட்டங்களுடனும், கூட இணைப்பாட்டத்தில் ஆட்டமிழக்காமல் 77 ஓட்டங்கள் எடுத்த ரவீந்திரா ஜடேயாவினது பங்களிப்புடனும் வெற்றி இலக்கை நோக்கி வேகமாக முன்னேறினர். எனினும் ஆயுஷ் மாத்ரே 16.2 ஓவரில் ஆட்டமிழக்க அடுத்த பந்தில் டெவால்ட் ப்ரெவிஸும் ஆட்டமிழக்க போட்டி திசை மாறியது. 18வது ஓவரை சுயாஷ் ஷர்மா இறுக்கமாகப் போட்டு ஆறு ஓட்டங்கள் மாத்திரமே கொடுத்தார். இறுதி ஓவரில் வெற்றிபெற 15 ஓட்டங்கள் இருந்த நிலையில் மூன்றாவது பந்தில் தோனி அவுட்டாகி வெளியேறினாலும், அடுத்த பந்து ஷிவம் டுபேயால் சிக்ஸருக்குப் போனதும், அது உயரம் காரணமாக நோபோல் ஆனதும் வெற்றியை சென்னை சூப்பர் கிங்ஸ் பக்கம் திசை மாற்றியது. மூன்று பந்துகளில் ஆறு ஓட்டங்கள் எடுக்கவேண்டிய நிலையில் யஷ் தயாலின் இறுக்கமான பந்துவீச்சால் மூன்று ஓட்டங்களே எடுக்கமுடிந்தது. இறுதியில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 211 ஓட்டங்களையே எடுத்தனர்.

முடிவு: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இரண்டே இரண்டு ஓட்டங்களால் வெற்றியீட்டியது

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெல்லும் எனக் கணித்த 08 பேருக்குத் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 15 பேருக்குப் புள்ளிகள் இல்லை!

இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

large.IMG_0788.jpeg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாளை ஞாயிறு 04 மே GMT நேரப்படி முற்பகல் 10:00 மணிக்கும் பிற்பகல் 2:00 மணிக்கும் இரு போட்டிகள் நடைபெறவுள்ளன.

 

யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

 

backhand-index-pointing-down_1f447.png

53) ஞாயிறு 04 மே 10:00 am GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ்

KKR எதிர் RR

17 பேர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெல்லும் எனவும் ஆறு பேர் மாத்திரம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர்.

 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

  • வசீ

  • ஈழப்பிரியன்

  • அல்வாயன்

  • வாத்தியார்

  • வீரப் பையன்26

  • நிலாமதி

  • பிரபா

  • கந்தப்பு

  • வாதவூரான்

  • ஏராளன்

  • நுணாவிலான்

  • தமிழ் சிறி

  • கிருபன்

  • குமாரசாமி

  • எப்போதும் தமிழன்

  • கோஷான் சே

  • அகஸ்தியன்

ராஜஸ்தான் ராயல்ஸ்

  • சுவி

  • சுவைப்பிரியன்

  • செம்பாட்டான்

  • ரசோதரன்

  • நந்தன்

  • புலவர்

இப்போட்டியில் போட்டியில் யாருக்கு புள்ளிகள் கிடைக்கும்? zebra_1f993.png

 

backhand-index-pointing-down_1f447.png

54) ஞாயிறு 04 மே 2:00 pm GMT தர்மசாலா - பஞ்சாப் கிங்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்

PBKS எதிர் LSG

13 பேர் பஞ்சாப் கிங்ஸ் அணி வெல்லும் எனவும் 10 பேர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர்.

 

பஞ்சாப் கிங்ஸ்

  • ஈழப்பிரியன்

  • வாத்தியார்

  • வீரப் பையன்26

  • நிலாமதி

  • பிரபா

  • செம்பாட்டான்

  • நுணாவிலான்

  • தமிழ் சிறி

  • கிருபன்

  • குமாரசாமி

  • எப்போதும் தமிழன்

  • கோஷான் சே

  • அகஸ்தியன்

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்

  • வசீ

  • அல்வாயன்

  • சுவி

  • சுவைப்பிரியன்

  • கந்தப்பு

  • வாதவூரான்

  • ஏராளன்

  • ரசோதரன்

  • நந்தன்

  • புலவர்

இப்போட்டியில் போட்டியில் எவருக்குப் புள்ளிகள் கிடைக்கும்? chicken_1f414.webp

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

ஜடேஜா பிடிச்ச கட்சை பத்திரானா தட்டிவிட்டார்!

CSK பரிதாபங்கள்😩

அது மட்டுமில்ல லாபாய் லாபாய்....லாபட்ட லாபாய் என்கிற மதிரி ..கடசி ஒவரில் 28 ரன் கொடுத்தாரே ..அதுவல்லோ கண் கொள்ளாக் காட்சி

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, alvayan said:

அது மட்டுமில்ல லாபாய் லாபாய்....லாபட்ட லாபாய் என்கிற மதிரி ..கடசி ஒவரில் 28 ரன் கொடுத்தாரே ..அதுவல்லோ கண் கொள்ளாக் காட்சி

அப்பிடி அடி. அந்தமாதிரி ஒருத்தன் அடிச்சுக் கொண்டிருக்கும் போது, ஒன்றுமே செய்ய முடியாது. காட்டடி

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, செம்பாட்டான் said:

இனித்தான் எல்லா வழத்தாலையும் சுத்திச்சுத்தி கணக்குப் போட வேணும். பாத்தா, மும்பைக்கும் ஆப்பு இருக்கும். இருக்கும் மூன்றில் இரண்டு என்றாலும் வெல்ல வேணும்.

கொல்கத்தாதான் மிகக் குறைந்த வாய்ப்பு உள்ள அணி என்று நினைக்கிறேன்.

சென்னை மன்னர்களின் ஆட்டத்தை ஒரு மாதிரி அடக்கியாச்சு

ராஜஸ்தான் அரச பரம்பரையும் ஆட்டம் ஆடி அடங்கி விட்டது

அடுத்து அடுத்து ஹைதராபாத்..... கொல்கத்தா..... அடங்க.....

ஒரு நெருப்பு அலை வரும் அந்த அலையில் டெல்லியும் லக்னோவும் கருகிவிட

பஞ்சாப்பும் குஜராத்தும் மும்பாயும்..... பெங்களூருக்கு எதிராக...... தனித்து நிற்கும்.... எனக் காண்டம் கதை சொல்கின்றது 😇

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, வாத்தியார் said:

சென்னை மன்னர்களின் ஆட்டத்தை ஒரு மாதிரி அடக்கியாச்சு

ராஜஸ்தான் அரச பரம்பரையும் ஆட்டம் ஆடி அடங்கி விட்டது

அடுத்து அடுத்து ஹைதராபாத்..... கொல்கத்தா..... அடங்க.....

ஒரு நெருப்பு அலை வரும் அந்த அலையில் டெல்லியும் லக்னோவும் கருகிவிட

பஞ்சாப்பும் குஜராத்தும் மும்பாயும்..... பெங்களூருக்கு எதிராக...... தனித்து நிற்கும்.... எனக் காண்டம் கதை சொல்கின்றது 😇

பஞ்சாபுக்கு கஷ்டமான பாதை. அடுத்த போட்டி LSG ஓட. அதை வென்றால்தான் அவர்களுக்கு பாதை தெளிவாகும். தோற்றால், அனேகமா மூட்டையைக் கட்ட வேண்டியதுதான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, செம்பாட்டான் said:

ஏன் உங்கின ரேடியோவில போட்டி வாறேலையோ.

ஏதாவது டிஜிரல் ரேடியோவில் இருக்கும். கிரிக்கெட்டில் பிபிசி ரேடியோ கொமென்ரரியைத் தவிர வேறு ஏதும் கேட்டுப் பழக்கமில்லை. டெஸ்ட் மட்ச் கொமென்ரரியளை ரேடியோவில் கேட்பதில் உள்ள த்ரில்லிங் நேரே பார்ப்பதில்கூட வராது!

ரிச்சி பேர்னாட், ஜெஃப்ரி போய்கொட்டின் கொமென்ரரி எப்போதும் பிடிக்கும்!

  • கருத்துக்கள உறவுகள்

493467868_122356004180004048_40148225651

அனைவருக்கும் இனிய காலை வணக்கம் . .......... ! 😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Virat-Kohli-and-Avneet-Kaur.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்


KKR FlagKKR 206/4

RR FlagRR (13/20 ov, T:207) 134/5

RR need 73 runs in 42 balls.

CRR: 10.30

 • RRR: 10.42

 • Last 5 ov (RR): 62/0 (12.40)

  • கருத்துக்கள உறவுகள்

மொயீன் அலி எல்லாத்தையும் கெடுத்து விட்டான்!

  • கருத்துக்கள உறவுகள்

மொயின் முதல் 2 ஓவர் சிறப்பாக வீசினாலும் 3 வது ஓவரில் 5 ஆறு ஓட்டங்களை வழங்கினார். அந்த ஓவரில் 32 ஓட்டங்களை ராஜஸ்தான் பெற்றது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு ஓவர்கள் உள்ளன. KKR வெல்லுமா?

KKR FlagKKR

206/4

RR FlagRR

(18/20 ov, T:207) 174/7

RR need 33 runs in 12 balls.

CRR: 9.66

 • RRR: 16.50

 • Last 5 ov (RR): 40/2 (8.00)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

KKR வெற்றி!

ஹார்ட் அற்றாக் வராத குறை!

  • கருத்துக்கள உறவுகள்

KKR ஒரு ஓட்டத்தினால் வெற்றி

எனக்கு இரண்டு புள்ளிகள்

நேற்று சென்னை 2 ஓட்டத்தினால் தோல்வி. எனக்கு புள்ளிகள் கிடைக்கவில்லை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலகுவாக வெல்லவேண்டிய மட்ச்.. இப்படி ரண் அவுட்டில் வெல்லவேண்டியதாகப் போச்சு!

ரிங்கு சிங் நொண்டுவதைப் பார்த்தால் அவர் இனி விளையாடமாட்டார் போலிருக்கு

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, கிருபன் said:

இலகுவாக வெல்லவேண்டிய மட்ச்.. இப்படி ரண் அவுட்டில் வெல்லவேண்டியதாகப் போச்சு!

ரிங்கு சிங் நொண்டுவதைப் பார்த்தால் அவர் இனி விளையாடமாட்டார் போலிருக்கு

ரிங்கு களத்தடுப்பில் அபாரம். அவர் சேமித்த ஓட்டங்கள்தான் இன்று வெற்றிக்குக் காரணம். கடைசியில் அவர்தான் ஓட்டமிழப்பும் செய்தார்.

  • கருத்துக்கள உறவுகள்

494735578_623777184029106_28201162114576

Shubham Mishra  ·

Anushka Sharma Amazing Reaction When Virat Kohli Hug Ms Dhoni after RCB win vs CSK in Last Over 😮

  • கருத்துக்கள உறவுகள்

அன்ரு ரசல் இன்று முதல் 9 பந்துகளில் 2 ஒட்டங்களை பெற்றார். ஆனால் அடுத்த 16 பந்துகளில் 55 ஓட்டங்கள் பெற்று இன்றைய போட்டியின் சிறந்த வீராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்

  • கருத்துக்கள உறவுகள்

Shubham Mishra  ·

Riyan Parag Hit 6 Sixes in 6 Balls vs KKR 😮

494949495_624259493980875_40956993439612

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

KKR வெற்றி!

ஹார்ட் அற்றாக் வராத குறை!

அவங்களும் தோற்கிறதுக்கு என்னவெல்லாமோ செய்து பார்த்தாங்கள்! கடைசி மட்டும் முடியேல்லை!

  • கருத்துக்கள உறவுகள்

238 கடினமான எண்ணிக்கை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.