Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 8 விக்கெட் இழப்பிற்கு 174 ஓட்டங்களை எடுத்தது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ராயல் சலஞ்சேர்ஸ் பெங்களூரு ஃபில் சால்ட்டினதும் விராட் கோலியினதும் அதிரடியான அரைச் சதங்களுடன் 16.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 177 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை எட்டியது.

முடிவு: ராயல் சலஞ்சேர்ஸ் பெங்களூரு 7 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

யாழ்களப் போட்டியாளர்களில் ராயல் சலஞ்சேர்ஸ் பெங்களூரு வெல்லும் எனக் கணித்தவர்களுக்கு தலா இரு புள்ளிகள் வழங்கப்படும்.

  • Replies 3.3k
  • Views 94.9k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • வாத்தியார்
    வாத்தியார்

    பிஸ்கட் தருவார்கள் என்று பள்ளிக்குச் சென்றோம் 😅 பலகாரம் தருவார்கள் எனது திருமண வீடு செல்வோம் 🤣 கோவிலுக்குச் சென்றால் சுண்டல் கிடைக்கும் 😂 இந்தத் திரியில் புள்ளி கிடைக்கும் என வந்தோம் 😛 ஆனால் இப்போது

  • கிருபன்
    கிருபன்

    யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட் போட்டி 2025 இறுதி நிலைகள்: தொடர்ந்து பல போட்டிகளிலும் முன்னணியில் நின்று வெற்றி பெற்ற @நந்தன் க்கு வாழ்த்துக்கள்! இரண்டாவது இடத்தில் நிற்கும் @ரசோதரன் க்கும், மூன்றாவது

  • கிருபன்
    கிருபன்

    நேற்றுவரை நடந்து முடிந்த மூன்று போட்டிகளினதும் யாழ்களப் போட்டியாளர்களின் கணிப்புக்கள்: 1) சனி 22 மார்ச் 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் KKR எதி

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, வீரப் பையன்26 said:

.............................வ‌ருன் ச‌க்க‌ர‌வ‌த்தி தான் சூப்ப‌ர் கீரோ எந்த‌ மைதான‌ம் என்றாலும் ச‌ரி ப‌ந்தை சுழ‌ட்டி போடுவார்...............................

அதானே..வருணின் பந்தை சால்ட்டு ..பெப்பர் போட்டு சாபிடுறமாதிரி சாப்பிட்டனே..பழைய கோபம் ஏதும் இருக்குமோ

6 minutes ago, கிருபன் said:

இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 8 விக்கெட் இழப்பிற்கு 174 ஓட்டங்களை எடுத்தது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ராயல் சலஞ்சேர்ஸ் பெங்களூரு ஃபில் சால்ட்டினதும் விராட் கோலியினதும் அதிரடியான அரைச் சதங்களுடன் 16.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 177 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை எட்டியது.

முடிவு: ராயல் சலஞ்சேர்ஸ் பெங்களூரு 7 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

யாழ்களப் போட்டியாளர்களில் ராயல் சலஞ்சேர்ஸ் பெங்களூரு வெல்லும் எனக் கணித்தவர்களுக்கு தலா இரு புள்ளிகள் வழங்கப்படும்.

என்ன சொன்னாலும்...இடத்தைவிட்டு அசையமுடியாதபடி மச் இருந்தது...வாழ்த்துக்கள் ...இரு பக்கத்துக்கும்

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, Eppothum Thamizhan said:

வருணுக்கு கோல்கட்டா மைதானத்திலேயே இந்த அடியென்றால் மற்ற இடங்களில்?

அதேதான். இதுதான் நானும் சொன்னது. யாராவது ஒருவர் வருணின் மாய சுழற்சியைக் கண்டுபிடித்துவிட்டால், அவர்கதி அதோகதிதான். பார்ப்போம் அடுத்த போட்டியில் எப்பிடி என்று.

வெறும் இலக்கங்களை வைத்து, வீரரை எடுபோடக்கூடாது. அதுவும் கிரிக்கட் போன்ற ஒரு விளையாட்டில். வேறுபாடுகள் நிறைந்த விளையாட்டு இது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாளை ஞாயிறு (23 மார்ச்) இரு போட்டிகள் நடைபெறவுள்ளன.

2) ஞாயிறு 23 மார்ச் 10:00 am GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ்

SRH எதிர் RR

3) ஞாயிறு 23 மார்ச் 2:00 pm GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ்

CSK எதிர் MI

இப்போட்டியில் யாழ்களப் போட்டியாளர்களில் எவருக்குப் புள்ளிகள் கிடைக்கும் என்பதை திங்கள் அன்று தெரிந்துகொள்வோம்!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Eppothum Thamizhan said:

Andre Russell பந்து போடா முடியாவிட்டால் அடுத்த போட்டியில் Moen Ali யை விளையாடலாம்! Quinton Dekock உம் தேவையில்லாத ஆணிதான்!

Andre Russell ஓய்வை அறிவிப்ப‌து ந‌ல்ல‌ம்

இவ‌ருக்கு ப‌தில் மோன் அலிய‌ தெரிவு செய்து இருக்க‌னும்

விக் கிட்ட‌ர் Andre Russell என்ர‌ பெய‌ர் போய் சில‌ ஆண்டு ஆச்சு..................

மும்பை அணியில் இருந்து ( கேர‌ன் போலாட்ட‌ ) நீக்கின‌ மாதிரி KKR அணியில் இருந்து Andre Russellஅ நீக்க‌னும்......................

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Eppothum Thamizhan said:

Andre Russell பந்து போடா முடியாவிட்டால் அடுத்த போட்டியில் Moen Ali யை விளையாடலாம்! Quinton Dekock உம் தேவையில்லாத ஆணிதான்!

10 , 11 வ‌ருட‌த்துக்கு முத‌ல் கொல்க‌ட்ட‌ மைதான‌த்தில் 160ர‌ன்ஸ் அடிப்ப‌து மிக‌ சிர‌ம‌ம்

ஆர‌ம்ப‌ கால‌ ஜ‌பிஎல்ல‌ கூட‌ உந்த‌ மைதான‌த்தில் பெரிய‌ ஸ்கோர் அடிக்க‌ முடியாது

ம‌ட்டை அடிக்கும் முத‌ல் வாய்ப்பு கிடைச்சா குறைந்த‌து 218 ர‌ன்ஸ் அடிச்சால் தான் எதிர் அணிய‌ ம‌ட‌க்க‌லாம் ,

கே கே ஆர் க‌ப்ட‌னும் சுனில் ந‌ர‌னும் ந‌ல்ல‌ பாட்ன‌ சிப் போட்டு 10 ஓவ‌ருக்கை 100ர‌ன்ஸ் அடித்து விட்டின‌ம் மீத‌ம் உள்ள‌ 10ஓவ‌ருக்கை இவையால் 75ர‌ன்ஸ்சுக்குள்ள‌ தான் அடிக்க‌ முடிஞ்ச‌து..........................

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Eppothum Thamizhan said:

Andre Russell பந்து போடா முடியாவிட்டால் அடுத்த போட்டியில் Moen Ali யை விளையாடலாம்! Quinton Dekock உம் தேவையில்லாத ஆணிதான்!

Quinton Dekock அனுப‌வ‌ம் மிக்க‌ வீர‌ர்

என்ன‌ நிறைய‌ ச‌ர்வ‌தேச‌ போட்டிக‌ளில் இன்னும் விளையாடி இருக்க‌னும் , ம‌ற்ற‌ நாடுக‌ளில் ந‌ட‌க்கும் தொட‌ர்க‌ளில் விளையாடுவ‌தால் தாய் நாட்டுக்கு விளையாடுவ‌தை பெரிதாக‌ விரும்ப‌ வில்லை , 2027 சொந்த‌ நாட்டில் ந‌ட‌க்கும் 50 ஓவ‌ர் உல‌க‌ கோப்பையோட‌ ச‌ர்வ‌தேச‌ போட்டிக‌ளில் இருந்து ஓய்வை அறிவிப்பார்...................ஜ‌பிஎல் மூல‌ம் நிறைய‌ காசு ச‌ம்பாதித்து விட்டார் அதோட‌ ம‌ற்ற‌ நாட்டு தொட‌ர்க‌ளிலும் விளையாடி காசை குவித்து விட்டார்..............

இன்னும் சில‌ ஜ‌பிஎல் சீச‌னில் விளையாட‌க் கூடும்..........................

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய முதலமைச்சர் @vasee க்கு வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ஈழப்பிரியன் said:

இன்றைய முதலமைச்சர் வாழ்த்துக்கள்.

தற்போதைய முதல்வர், துணை முதல்வர் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படாவிட்டாலும் முறையே ஈழப்பிரியன் முதல்வர் அவர்களுக்கும் துணை முதல்வர் அல்வாயன் அவர்களுக்கும் வாழ்த்துகள்😂

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, ஈழப்பிரியன் said:

இன்றைய முதலமைச்சர் @vasee க்கு வாழ்த்துக்கள்.

உங்களுக்கு ஏன் என் மீது இப்படி ஒரு வன்மம்?🤣 நான் KKR தெரிவு செய்தேன் ஏனென்றால் போட்டி கொல்கொத்தாவில் நடப்பதன் அடிப்படையில்,

12 minutes ago, வாத்தியார் said:

தற்போதைய முதல்வர், துணை முதல்வர் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படாவிட்டாலும் முறையே ஈழப்பிரியன் முதல்வர் அவர்களுக்கும் துணை முதல்வர் அல்வாயன் அவர்களுக்கும் வாழ்த்துகள்😂

இப்போது புரிகிறது ஈழப்பிரியன், நீங்கள் ஓடிப்போன கோட்டா ரணிலை பதவியில் உக்கார வைத்த மாதிரி என்னை மாட்டிவிட்டுள்ளீர்கள்.🤣

2 hours ago, வீரப் பையன்26 said:

10 , 11 வ‌ருட‌த்துக்கு முத‌ல் கொல்க‌ட்ட‌ மைதான‌த்தில் 160ர‌ன்ஸ் அடிப்ப‌து மிக‌ சிர‌ம‌ம்

ஆர‌ம்ப‌ கால‌ ஜ‌பிஎல்ல‌ கூட‌ உந்த‌ மைதான‌த்தில் பெரிய‌ ஸ்கோர் அடிக்க‌ முடியாது

ம‌ட்டை அடிக்கும் முத‌ல் வாய்ப்பு கிடைச்சா குறைந்த‌து 218 ர‌ன்ஸ் அடிச்சால் தான் எதிர் அணிய‌ ம‌ட‌க்க‌லாம் ,

கே கே ஆர் க‌ப்ட‌னும் சுனில் ந‌ர‌னும் ந‌ல்ல‌ பாட்ன‌ சிப் போட்டு 10 ஓவ‌ருக்கை 100ர‌ன்ஸ் அடித்து விட்டின‌ம் மீத‌ம் உள்ள‌ 10ஓவ‌ருக்கை இவையால் 75ர‌ன்ஸ்சுக்குள்ள‌ தான் அடிக்க‌ முடிஞ்ச‌து..........................

இந்த ஆடுகளத்தில் 262 ஓட்டங்களை SRH எடுத்துள்ளது என கருதுகிறேன், அதிக ஓட்டங்களை வாரி வழங்கும் மைதானம், சிறிய எல்லைகள் என குறிப்பிட்டுள்ளார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, vasee said:

உங்களுக்கு ஏன் என் மீது இப்படி ஒரு வன்மம்?🤣 நான் KKR தெரிவு செய்தேன் ஏனென்றால் போட்டி கொல்கொத்தாவில் நடப்பதன் அடிப்படையில்,

இப்போது புரிகிறது ஈழப்பிரியன், நீங்கள் ஓடிப்போன கோட்டா ரணிலை பதவியில் உக்கார வைத்த மாதிரி என்னை மாட்டிவிட்டுள்ளீர்கள்.🤣

எங்க‌ட‌ அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை அண்ணைக்கு சிங்சாங் இசையுட‌ன் வ‌ந்து முத‌ல‌மைச்ச‌ர் வாழ்த்து சொல்லாட்டி அவ‌ருக்கு தூக்க‌ம் வ‌ராது லொள்

நீங்க‌ளும் கே கே ஆர‌யா தெரிவு செய்திங்க‌ள்

பாவி ப‌ய‌லுங்க‌ள் எங்க‌ளுக்கு முட்டைய‌ வேண்டி த‌ந்து விட்டாங்க‌ள்☹️...........................

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, vasee said:
6 minutes ago, vasee said:

நான் KKR தெரிவு செய்தேன் ஏனென்றால் போட்டி கொல்கொத்தாவில் நடப்பதன் அடிப்படையில்,

இந்த விளையாட்டில் இரு தரப்பும் வெல்லலாம் என்ற ஒரு கணிப்பு இருந்தது

salt உம் கோலியும் சேர்ந்து ஆடிய ஆட்டமும் வருணின் இன்றைய பந்து வீச்சும் பெங்களூருக்கு சாதகமாக அமைந்துவிட்டது என்று நான் நினைக்கின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, vasee said:

உங்களுக்கு ஏன் என் மீது இப்படி ஒரு வன்மம்?🤣 நான் KKR தெரிவு செய்தேன் ஏனென்றால் போட்டி கொல்கொத்தாவில் நடப்பதன் அடிப்படையில்,

இப்போது புரிகிறது ஈழப்பிரியன், நீங்கள் ஓடிப்போன கோட்டா ரணிலை பதவியில் உக்கார வைத்த மாதிரி என்னை மாட்டிவிட்டுள்ளீர்கள்.🤣

இந்த ஆடுகளத்தில் 262 ஓட்டங்களை SRH எடுத்துள்ளது என கருதுகிறேன், அதிக ஓட்டங்களை வாரி வழங்கும் மைதானம், சிறிய எல்லைகள் என குறிப்பிட்டுள்ளார்கள்.

நாண‌ய‌த்தில் வென்ற‌ பெங்க‌ளூர் அணி ப‌ந்து வீச்சை தெரிவு செய்த‌வை

முத‌ல் மூன்று ஓவ‌ரை ந‌ல்லா போட்டு தென் ஆபிரிக்கா தொட‌க்க‌ வீர‌ர் கொக்க‌ அவுட் ஆக்கி விட்டின‌ம்

பிற‌க்கு சுனில் ந‌ர‌ன் ம‌ற்றும் ர‌க‌னா இருவ‌ரும் சேர்ந்து 9ஓவ‌ருக்கு 100ர‌ன்ஸ் அடிச்ச‌வை , ந‌டுத்த‌ர‌ வீர‌ர்க‌ள் ச‌ரியாக‌ விளையாட‌ வில்லை

ப‌ந்து வீச்சில் வ‌ரும் மாஜிக் காட்டுவார் என்று பார்த்தால் வ‌ருன் போட்ட‌ முத‌ல் ஓவ‌ரில் 22ர‌ன்ஸ் கொடுத்து விட்டார்

போன‌ ஜ‌பிஎல்ல‌ இர‌ண்டு முறை 250 ர‌ன்ஸ்சுக்கு மேல் SHR அடிச்ச‌வை

ஒருக்கா அவேன்ட‌ மைதான‌த்தில் ம‌ற்ற‌து கொல்க‌ட்டா ஹாட‌ன் மைதான‌த்தில் அடிச்சு இருக்க‌ கூடும்.......................

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, vasee said:

பெங்களூரு அணியில் சுயாஸ் எனும் ஒரு இளம் மணிக்கட்டினால் பந்து வீசும் பந்து வீச்சாளர் உள்ளார் என கூறப்படுகிறது, அவருக்கு பெங்களூரு அணி போட்டிகளில் வாய்ப்பளிக்குமா என தெரியவில்லை.

பெங்களூரு அணி இவருக்கு முதலாவது போட்டியிலேயே வாய்ப்பளித்துள்ளது, ஆனால் அதிக ஓட்டங்களை விட்டுக்கொடுத்துள்ளார், ஆனால் தொடர்ந்தும் இவருக்கு வாய்ப்பளிப்பார்கள் என்றே தோன்றுகிறது, பெங்களூரு அணி தனது மத்திய ஓவர்களில் (12 ஓவர்கள்) சுழலை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பயன்படுத்த உள்ளது போல தெரிகிறது (10/12), சுயாஸிற்கும் குருணலுக்கும் முழுமையான பந்து வீச்சினையும் லிவிங்ஸ்டனுக்கு 2 ஓவர்களையும் வழங்கியுள்ளது, பெங்களூரு அணிமுழுக்க முழுக்க வேக பந்து வீச்சாளர்களிலும் துடுப்பாட்டக்காரர்களிலும் தங்கியுள்ளது போல தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, vasee said:

ஜ‌பிஎல் 10 மைதான‌மும் ம‌ட்டைக்கு சாத‌க‌மான‌ மைதான‌ம்

அன்மையில் ந‌ட‌ந்து முடிந்த‌ ம‌க‌ளிர் ஜ‌பிஎல்ல‌

ல‌க்னோ மைதான‌த்தில் ம‌க‌ளிர் 200ர‌ன்ஸ்சுக்கு மேல் அடிச்ச‌வை

ஆண்க‌ளின் அடி ம‌க‌ளிர்க‌ளின் அடிய‌ விட‌ வேக‌ம்................

ப‌ந்து வீச்சும் வீர‌ர்க‌ளை குறை சொல்ல‌ முடியாது அண்ணா

மைதான‌ம் அனைத்தும் கிட்ட‌த‌ட்ட‌ ம‌ட்டைக்கு சாத‌க‌மான‌ மைதான‌ம்...............

சென்னை மைதானத்தில் ப‌க‌ல் பொழுதில் ர‌ன்ஸ் அடிப்ப‌து சிர‌ம‌ம்

இர‌வு நேர‌த்தில் கூடின‌ ஸ்கோர் 175 தாண்ட‌ வாய்ப்பில்லை.........................

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, செம்பாட்டான் said:

அதேதான். இதுதான் நானும் சொன்னது. யாராவது ஒருவர் வருணின் மாய சுழற்சியைக் கண்டுபிடித்துவிட்டால், அவர்கதி அதோகதிதான். பார்ப்போம் அடுத்த போட்டியில் எப்பிடி என்று.

வெறும் இலக்கங்களை வைத்து, வீரரை எடுபோடக்கூடாது. அதுவும் கிரிக்கட் போன்ற ஒரு விளையாட்டில். வேறுபாடுகள் நிறைந்த விளையாட்டு இது.

ஆசிய ஆடுகளங்கள் திரும்ப கூடிய ஆனால் பந்து தாழ்வாக வரக்கூடிய ஆடுகளங்கள், வருண் தனது பந்து வீச்சு முறைமையில் மாற்றம் செய்ததாக கருதுகிறேன்.

பந்தின் கட்டு 45 பாகை கோணத்தில் இவ்வாறு வீசும் போது பந்து அதிகமாக எழும் ஆடுகளத்தில் மிக சாதகமாக இருக்கும் ஆனால் இந்த ஆடுகளங்கள் பெரிதளவில் திரும்ப்பது என்பதால் இந்த ஆடுகளங்களில் இது வாய்ப்பாக இருக்காது என கருதுகிறேன்.

அத்துடன் இது சிறிய மைதான எல்லைகள் கொண்ட ஆடுகளத்தில் பந்து திரும்பாமல் தாழ்வாக வரும் பந்தை நேரான மட்டையால் எதிர்கொள்வது இலகு தவறான கணிப்பு கூட 6 ஓட்டங்களை சிறிய மைதான எல்லைகளால் கிடைக்கும்.

இந்திய ஆடுகளங்களில் வழ்மையான முறையில் பந்தின் கட்டு கிடையாக (90 பாகை) வீசினால் பந்து அதிகமாக திரும்பும் அத்துடன் பந்து அதிகமாக drift ஆகும், அதனால் பந்தின் line and length கணிப்பது கடினமாக இருக்கும் என கருதுகிறேன்.

ஆனால் வருணின் புதிய பந்து வீச்சு முறை அவரரது பந்தினை கணிப்பது கடினமாக இருக்கும் என்பதால் இந்த மைதானத்திற்கு ஒவ்வாத முறையில் பந்து வீசுகிறாரோ என கருதுகிறேன்.

சிறிய எல்லைகள் கொண்ட ஆடுகளத்தில் வருண் சாதாரணமான சுழல் பந்து வீச்சினை தொடரலாம் என கருதுகிறேன்.

சாதாரணமான சுழல் பந்து (side spin)

45 பாகை கோணத்தில் பந்து (over spin)

18 minutes ago, வீரப் பையன்26 said:

ஜ‌பிஎல் 10 மைதான‌மும் ம‌ட்டைக்கு சாத‌க‌மான‌ மைதான‌ம்

அன்மையில் ந‌ட‌ந்து முடிந்த‌ ம‌க‌ளிர் ஜ‌பிஎல்ல‌

ல‌க்னோ மைதான‌த்தில் ம‌க‌ளிர் 200ர‌ன்ஸ்சுக்கு மேல் அடிச்ச‌வை

ஆண்க‌ளின் அடி ம‌க‌ளிர்க‌ளின் அடிய‌ விட‌ வேக‌ம்................

ப‌ந்து வீச்சும் வீர‌ர்க‌ளை குறை சொல்ல‌ முடியாது அண்ணா

மைதான‌ம் அனைத்தும் கிட்ட‌த‌ட்ட‌ ம‌ட்டைக்கு சாத‌க‌மான‌ மைதான‌ம்...............

சென்னை மைதானத்தில் ப‌க‌ல் பொழுதில் ர‌ன்ஸ் அடிப்ப‌து சிர‌ம‌ம்

இர‌வு நேர‌த்தில் கூடின‌ ஸ்கோர் 175 தாண்ட‌ வாய்ப்பில்லை.........................

இந்திய ஆடுகளங்கள் (ஆசிய ஆடுகளங்கள் அதிகமாக திரும்பும் ஆனால் பந்து தாழ்வாக வரும்), மற்ற ஆடுகளங்கள் பந்து அதிகமாக திரும்பாது ஆனால் பந்து உயர்ந்து வரும், ஆசிய ஆடுகளங்களில் side spin வீசுவது நல்லது ஆனால் அவுஸ்ரேலியா போன்ற ஆடுகளங்களில் over spin வீசுவது நல்லது என கருதுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Eppothum Thamizhan said:

குருனால் பாண்டியா அளவிற்கு கூட வருணிடம் பந்துவீச்சில், வேகத்தில் மாற்றங்கள் இருக்கவில்லை. எல்லா பந்துகளும் 97 - 100 km/h இலதான் போட்டார்!

இது ஒரு முக்கியமான விடயம்தான் நீங்கள் கூறுவது மிக சரி என்றே கருதுகிறேன், ஆனால் வருணின் பந்து வீச்சு முறைமைக்கு அது தேவையாக இருக்கிறது என கருதுகிறேன் இந்த சிறிய மைதானத்தில் குறிப்பாக சுழல் பந்து வீச்சிற்கு பந்தின் வேகம் குறைவாக இருப்பது சிற்ப்பு.

துடுப்பாட்ட வீரர்கள் இறங்கி வந்து விளையாடுவதனை தவிர்ப்பது மற்றும் பந்து வீச்சை கணிக்க முடியாமல் இருப்பதற்கும் அவ்வாறு வீசுகிறார் ஆனால் நீங்கள் கூறுவது போல பந்தின் வேக மாற்றம் செய்வது முக்கியம், போட்டியினை பார்க்கவில்லை எனவே எவ்வாறு பந்து வீசினார் என தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

https://www.facebook.com/Cricketcom/videos/what-is-sidespin-what-is-overspin-we-tell-you-in-this-cricketdotcom-explainerscr/2754349758061487/

Side spin vs over spin

வருணின் பந்து வீச்சு தொடர்பான ஆய்வு

https://www.youtube.com/watch?v=GIpRpbSxJNc

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வீரப் பையன்26 said:

எங்க‌ட‌ அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை அண்ணைக்கு சிங்சாங் இசையுட‌ன் வ‌ந்து முத‌ல‌மைச்ச‌ர் வாழ்த்து சொல்லாட்டி அவ‌ருக்கு தூக்க‌ம் வ‌ராது லொள்

தம்பீ எங்க தாத்தாவைக் காணோம்?

பொறுத்த நேரத்தில் கிருபன் ஆபிரிக்க காட்டில் அலைகிறாரே.

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, ஈழப்பிரியன் said:

தம்பீ எங்க தாத்தாவைக் காணோம்?

பொறுத்த நேரத்தில் கிருபன் ஆபிரிக்க காட்டில் அலைகிறாரே.

ப‌னையில் இற‌க்கின‌ க‌ள்ளை அடிக்கிறார்

லேட்டா வ‌ருவார்

முத‌ல‌மைச்ச‌ர் உங்க‌ளுக்கு வாழ்த்துக்க‌ள்..........................................

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, வீரப் பையன்26 said:

ப‌னையில் இற‌க்கின‌ க‌ள்ளை அடிக்கிறார்

லேட்டா வ‌ருவார்

லேட்டா வந்து மேலே நிற்கிற என்னைப் பார்க்க மயக்கம் வரப் போகுது.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, வீரப் பையன்26 said:

எங்க‌ட‌ அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை அண்ணைக்கு சிங்சாங் இசையுட‌ன் வ‌ந்து முத‌ல‌மைச்ச‌ர் வாழ்த்து சொல்லாட்டி அவ‌ருக்கு தூக்க‌ம் வ‌ராது லொள்

நீங்க‌ளும் கே கே ஆர‌யா தெரிவு செய்திங்க‌ள்

பாவி ப‌ய‌லுங்க‌ள் எங்க‌ளுக்கு முட்டைய‌ வேண்டி த‌ந்து விட்டாங்க‌ள்☹️...........................

இதுதானே முதலாவது போட்டி. இன்னும் 69 போட்டி இருக்கு. ஏன் கனக்க யோசிப்பான். அதுவும் முக்காவாசி, சும்மா அடிச்சு விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, வாத்தியார் said:

தற்போதைய முதல்வர், துணை முதல்வர் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படாவிட்டாலும் முறையே ஈழப்பிரியன் முதல்வர் அவர்களுக்கும் துணை முதல்வர் அல்வாயன் அவர்களுக்கும் வாழ்த்துகள்😂

நன்றி வாத்தியாரே....துணைமுதல்வர் என்றாலும்....யாழ்ப்பாணத்துக்கு...இராமலிங்கம் அமைச்சர் மாதிரி..யாழுக்கு நான்தான் ...முதலமச்சர் என்ற நினைப்பில்தான் இருக்கின்றேன்🤣

5 hours ago, வாத்தியார் said:

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, vasee said:

இது ஒரு முக்கியமான விடயம்தான் நீங்கள் கூறுவது மிக சரி என்றே கருதுகிறேன், ஆனால் வருணின் பந்து வீச்சு முறைமைக்கு அது தேவையாக இருக்கிறது என கருதுகிறேன் இந்த சிறிய மைதானத்தில் குறிப்பாக சுழல் பந்து வீச்சிற்கு பந்தின் வேகம் குறைவாக இருப்பது சிற்ப்பு.

துடுப்பாட்ட வீரர்கள் இறங்கி வந்து விளையாடுவதனை தவிர்ப்பது மற்றும் பந்து வீச்சை கணிக்க முடியாமல் இருப்பதற்கும் அவ்வாறு வீசுகிறார் ஆனால் நீங்கள் கூறுவது போல பந்தின் வேக மாற்றம் செய்வது முக்கியம், போட்டியினை பார்க்கவில்லை எனவே எவ்வாறு பந்து வீசினார் என தெரியவில்லை.

சுனில் நாராயன் இன்னும் மெதுவாக வீசுபவர். அவர் 27 ஓட்டங்களுக்கு 1 விக்கட்டையும் வருண் 43 ஓட்டங்களுக்கு 1 விக்கட்டையும் பெற்றனர். இங்கு மிதமான வேகம்தான் வேலை செய்திருக்கிறது. இப்படியான நேரங்களில் வருண் தனது வேகத்தை மட்டுப்படுத்தி இருக்கலாம். ஆனாலும் கோலி ஆடின ஆட்டத்தினால் RCB எப்பிடியும் வெற்றி பெற்றிருக்கும். அவர்களின் நேரம் அது.

அனில் கும்ளேவும் முரளி வார்ன் போன்றோரை விட வேகமாக வீசுபவர். மூவரும் எவ்வாறு ஆட்சி செய்தார்கள் என்று தெரியும். இவர்களைப் போல் வருணும் வருவாரா.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

தம்பீ எங்க தாத்தாவைக் காணோம்?

பொறுத்த நேரத்தில் கிருபன் ஆபிரிக்க காட்டில் அலைகிறாரே.

பார்த்தா, இப்ப ஒரு நாலஞ்சு பேர்தான் இதுக்குள்ள குதிரை ஓடுறம். எங்க மிச்ச எல்லோரும். எல்லாரையும் இதுக்குள்ள இறக்கினாத்தான் பம்பல் கூடும்.

5 hours ago, vasee said:

பெங்களூரு அணி இவருக்கு முதலாவது போட்டியிலேயே வாய்ப்பளித்துள்ளது, ஆனால் அதிக ஓட்டங்களை விட்டுக்கொடுத்துள்ளார், ஆனால் தொடர்ந்தும் இவருக்கு வாய்ப்பளிப்பார்கள் என்றே தோன்றுகிறது, பெங்களூரு அணி தனது மத்திய ஓவர்களில் (12 ஓவர்கள்) சுழலை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பயன்படுத்த உள்ளது போல தெரிகிறது (10/12), சுயாஸிற்கும் குருணலுக்கும் முழுமையான பந்து வீச்சினையும் லிவிங்ஸ்டனுக்கு 2 ஓவர்களையும் வழங்கியுள்ளது, பெங்களூரு அணிமுழுக்க முழுக்க வேக பந்து வீச்சாளர்களிலும் துடுப்பாட்டக்காரர்களிலும் தங்கியுள்ளது போல தெரிகிறது.

பல வருடங்களாக இப்பிடியான அணியுடன்தான் அவர்கள் விளையாடுகிறார்கள். இதனால்தான் கோப்பையை அடிக்க கஷ்டப் படுகினமோ. இம்முறையாவது, நடக்குமா. பாவம் கோலி. அணி விசுவாசத்தினால், இதுக்குள்ளேயே மாட்டுப்பட்டு இருக்கிறார்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.