Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, செம்பாட்டான் said:

மும்பையின் இன்றைய பந்து வீச்சுத் தெரிவுகள். ரீஸின் பந்துப் பரிமாற்றம் மிகவும் தப்பு. எப்பிடி அந்த இடத்தில. சான்டனர இல்லாட்டி பும்ராவ கொண்டு வந்திருக்கணும்.

பாண்டியா, சான்ட்னருக்கு 2 + 2 ஓவர்கள் இருந்துள்ளது, அளவு குறைந்த மெதுவான பந்து விளையாட சிரமாக காணப்பட்ட போதும் இறுதி ஓவர்களில் புல் லெந்தில் போட்டு வாங்கி கட்டிக்கொண்டார்கள், ஆனாலும் பஞ்சாப் சிறப்பாக விளையாடியது.

பெங்களூர் அணிக்கு இறுதி போட்டி இலகுவாக இருக்கபோவதில்லை, பஞ்சாப் மிக சிறந்த அணியாக உள்ளது.

  • Replies 3.3k
  • Views 94.9k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • வாத்தியார்
    வாத்தியார்

    பிஸ்கட் தருவார்கள் என்று பள்ளிக்குச் சென்றோம் 😅 பலகாரம் தருவார்கள் எனது திருமண வீடு செல்வோம் 🤣 கோவிலுக்குச் சென்றால் சுண்டல் கிடைக்கும் 😂 இந்தத் திரியில் புள்ளி கிடைக்கும் என வந்தோம் 😛 ஆனால் இப்போது

  • கிருபன்
    கிருபன்

    யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட் போட்டி 2025 இறுதி நிலைகள்: தொடர்ந்து பல போட்டிகளிலும் முன்னணியில் நின்று வெற்றி பெற்ற @நந்தன் க்கு வாழ்த்துக்கள்! இரண்டாவது இடத்தில் நிற்கும் @ரசோதரன் க்கும், மூன்றாவது

  • கிருபன்
    கிருபன்

    நேற்றுவரை நடந்து முடிந்த மூன்று போட்டிகளினதும் யாழ்களப் போட்டியாளர்களின் கணிப்புக்கள்: 1) சனி 22 மார்ச் 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் KKR எதி

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, செம்பாட்டான் said:

பும்ராவ கொண்டு வந்திருக்கணும்

பும்ரா 18 வது ஓவரில் போட்டது நல்ல முடிவுதான், அந்த ஓவரில் ஒரு விக்கெட் விழுந்திருந்தால் நிலமை சில வேளை பம்பாயிற்கு சாதகமாக அமைந்திருக்கலாம், 19 ஓவர் மிக தாமதமகிவிடும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய மூன்றாவது Play-off Qualifier 2 போட்டி மழை காரணமாகத் தாமதமாக ஆரம்பித்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர்கள் ஜொனி பெயிர்ஸ்ரோ, திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், நமன் தீர் ஆகியோரின் அதிரடியான ஆட்டங்களினால் 6 விக்கெட்டுகளை இழந்து 203 ஓட்டங்களை எடுத்தது.

பதிலுக்குத் துடுப்பாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களை விரைவில் இழந்தாலும், ஜொஷ் இங்கிலிஸினதும், நெஹால் வதேராவினதும் அதிரடியான ஆட்டங்களுடனும், 8 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள் என நாலா பக்கமும் பந்தை சிதறடித்து ஆட்டமிழக்காமல் 87 ஓட்டங்கள் எடுத்த அணித்தலைவர் ஷ்ரேயஸ் ஐயரின் மரண அடியுடனும் 19 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 207 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை எட்டியது.

முடிவு: பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டி இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடன் மோதவுள்ளது.

பஞ்சாப் கிங்ஸ் வெல்லும் என ஒருவரும் கணிக்காததாலும், மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியைத் தழுவியதாலும், போட்டியில் இல்லாத ஏனைய அணிகளை வெல்லும் கணித்ததாலும் யாழ்களப் போட்டியாளர்கள் ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது!

பஞ்சாப் கிங்ஸ் அணியின் புரவலர் பிரீத்தி ஸிந்தா எல்லோருக்கும் புஷ்டியான முட்டைகளைப் பரிமாறியுள்ளார்!

 spacer.png

இன்றைய போட்டி முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள் (மாற்றம் இல்லை):

large.IMG_1179.jpeg

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரேயாஸ் வெறி கொண்டு அடித்த மாதிரி பொளந்து கட்டிட்டார் ......... சும்மா சொல்லக்கூடாது அருமையயான விளையாட்டு .......! 😂

502574180_1933873460729606_3755679926581

பிரீத்தி ஹாப்பி அண்ணாச்சி ....... ! 😂

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, கிருபன் said:

இன்றைய மூன்றாவது Play-off Qualifier 2 போட்டி மழை காரணமாகத் தாமதமாக ஆரம்பித்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர்கள் ஜொனி பெயிர்ஸ்ரோ, திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், நமன் தீர் ஆகியோரின் அதிரடியான ஆட்டங்களினால் 6 விக்கெட்டுகளை இழந்து 203 ஓட்டங்களை எடுத்தது.

பதிலுக்குத் துடுப்பாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களை விரைவில் இழந்தாலும், ஜொஷ் இங்கிலிஸினதும், நெஹால் வதேராவினதும் அதிரடியான ஆட்டங்களுடனும், 8 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள் என நாலா பக்கமும் பந்தை சிதறடித்து ஆட்டமிழக்காமல் 87 ஓட்டங்கள் எடுத்த அணித்தலைவர் ஷ்ரேயஸ் ஐயரின் மரண அடியுடனும் 19 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 207 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை எட்டியது.

முடிவு: பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டி இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடன் மோதவுள்ளது.

பஞ்சாப் கிங்ஸ் வெல்லும் என ஒருவரும் கணிக்காததாலும், மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியைத் தழுவியதாலும், போட்டியில் இல்லாத ஏனைய அணிகளை வெல்லும் கணித்ததாலும் யாழ்களப் போட்டியாளர்கள் ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது!

பஞ்சாப் கிங்ஸ் அணியின் புரவலர் பிரீத்தி ஸிந்தா எல்லோருக்கும் புஷ்டியான முட்டைகளைப் பரிமாறியுள்ளார்!

 spacer.png

இன்றைய போட்டி முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள் (மாற்றம் இல்லை):

large.IMG_1179.jpeg

தோற்றுப்போன மும்பாய் அணியினை தேர்வு செய்தவர்களை விட்டு விட்டு நண்டுகள் குலாமிற்கு அந்த 3 புள்ளிகலை வழங்கலாம்தானே🤣.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, செம்பாட்டான் said:

இத நானும் தொலைக்காட்சியில பார்த்தன். இப்பிடி அவவக் காட்டுவினம் என்டு கைப்பேசிய கையிலேயே வைத்திருந்த மாதிரிக் கிடக்கே. என்னா சாரே. மனசே அறியில்லா.

அப்படி எல்லாம் கிடையாது! ரிவைண்ட் என்று ஒரு பட்டன் இப்பவும் வேலை செய்யுது! லைவ்விலும் ரிவைண்ட் பண்ணலாம்😀

6 minutes ago, vasee said:

தோற்றுப்போன மும்பாய் அணியினை தேர்வு செய்தவர்களை விட்டு விட்டு நண்டுகள் குலாமிற்கு அந்த 3 புள்ளிகலை வழங்கலாம்தானே🤣.

ஆசை, தோசை, அப்பளம், வடை!

  • கருத்துக்கள உறவுகள்

502993194_1014151804255570_9693109207582

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

பாண்டியா, சான்ட்னருக்கு 2 + 2 ஓவர்கள் இருந்துள்ளது, அளவு குறைந்த மெதுவான பந்து விளையாட சிரமாக காணப்பட்ட போதும் இறுதி ஓவர்களில் புல் லெந்தில் போட்டு வாங்கி கட்டிக்கொண்டார்கள், ஆனாலும் பஞ்சாப் சிறப்பாக விளையாடியது.

பெங்களூர் அணிக்கு இறுதி போட்டி இலகுவாக இருக்கபோவதில்லை, பஞ்சாப் மிக சிறந்த அணியாக உள்ளது.

அதேதான். இந்தமுறை தங்கள் வியுகத்தில் சொதப்பி விட்டினம். ரீஸுக்கு பந்தே குடுத்திருக்கக் கூடாது. நான் சொல்லிக்கொண்டே இருந்தேன். குடுக்காத குடுக்காத என்று. அதுவும் அந்தப் பரிமாற்றம். குடுத்தான். அவன் பிளந்தான்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

அப்படி எல்லாம் கிடையாது! ரிவைண்ட் என்று ஒரு பட்டன் இப்பவும் வேலை செய்யுது! லைவ்விலும் ரிவைண்ட் பண்ணலாம்😀

ஆசை, தோசை, அப்பளம், வடை!

எல்லாத்துக்கும் ஒரு பதில் வைத்துருங்கோ. பின்னால போய்ப் பாக்கிற அளவுக்கு ப்ரித்தி மேல அவ்வளவு அன்பு. ம்ம்ம்.....

  • கருத்துக்கள உறவுகள்

முட்டைக்கோப்பியை விட நண்டுக்குழம்பு சுவை அதிகமோ?

  • கருத்துக்கள உறவுகள்

5 hours ago, செம்பாட்டான் said:

என்ன மாதிரிப் போகுது. எங்க ஒருத்தரையும் காணேல. வாங்கண்ண வாங்க. வந்து மும்பையை இறுதிப் போட்டிக்கு அனுப்பி வையுங்க.

இறுதிப் போட்டி என்ன உங்களை வீட்டுக்கே அனுப்பி வைக்கிறோம்.

4 hours ago, கிருபன் said:

large.IMG_1196.jpeg

ஆமா அந்த குட்டைப் பாவாடையோடு நிற்பது யாரூ?

முதலமைச்சர் நந்தனுக்கு வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரேயாஸ் செய்த வேலையில இது இன்னொன்று. யோக்கர் பந்தை எப்படி ஆடுவது என்று மட்டுமல்ல எப்படி அதை நாலு ஆக்குவது என்றும் காட்டி விட்டான் வீரன்.

Screenshot-20250601-220144-Chrome.jpg

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

இறுதிப் போட்டி என்ன உங்களை வீட்டுக்கே அனுப்பி வைக்கிறோம

அப்பிடி வேற யோசிச்சுக்கொண்டு இருக்கிறீங்களா. நந்தன ஒருத்தாராலும் தொட முடியாது. புலவரில இருந்து எல்லாரும் வீட்டதான்.

நமக்கு ஆறுதல் பரிசாக, கொஞ்சநாள் இருந்த முதலாம் இடம்தான். அதை நினைச்சே நித்திரையைக் கொள்ளவேண்டியதுதான்.

இன்னும் ஒரே போட்டி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, செம்பாட்டான் said:

நமக்கு ஆறுதல் பரிசாக, கொஞ்சநாள் இருந்த முதலாம் இடம்தான். அதை நினைச்சே நித்திரையைக் கொள்ளவேண்டியதுதான்.

குண்டக்க மண்டக்க கேள்விகளுக்கு கிடைக்கும் புள்ளிகள் நிலைகளை மாற்றலாம்!

@வீரப் பையன்26 ஐ இந்தப் பக்கம் காணோம்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, செம்பாட்டான் said:

அதேதான். இந்தமுறை தங்கள் வியுகத்தில் சொதப்பி விட்டினம். ரீஸுக்கு பந்தே குடுத்திருக்கக் கூடாது. நான் சொல்லிக்கொண்டே இருந்தேன். குடுக்காத குடுக்காத என்று. அதுவும் அந்தப் பரிமாற்றம். குடுத்தான். அவன் பிளந்தான்.

இரண்டுநாளாக எனக்கு யாழ் களம் வேலை செய்யவில்லை!

சான்டனெருக்கு பந்து கொடுக்காமல் விட்டது, ஹர்டிக் பாண்டியா ரீஸின் ஓவரை போடாமல் விட்டது என்று பல சொதப்பல்கள் நேற்று! போல்ட் வடேராவின் லட்டு கேட்சை விட்டதுடன் ஆட்டம் திசைமாறிவிட்டது!! சும்மாவா சொன்னார்கள் Catches Win Matches என்று.

ஆனாலும் ஷ்ரேயாசின் ஆட்டம் வேறு ரகம்!

  • கருத்துக்கள உறவுகள்

502457425_1933893210727631_6711843280197

அனைவருக்கும் இனிய காலை வணக்கம் . ......... ! 😂

  • கருத்துக்கள உறவுகள்

503096034_1135611185026103_6301932524004

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கிருபன் said:

குண்டக்க மண்டக்க கேள்விகளுக்கு கிடைக்கும் புள்ளிகள் நிலைகளை மாற்றலாம்!

@வீரப் பையன்26 ஐ இந்தப் பக்கம் காணோம்.

எனக்கு சில புள்ளிகள் இருக்கு. பார்ப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Eppothum Thamizhan said:

இரண்டுநாளாக எனக்கு யாழ் களம் வேலை செய்யவில்லை!

சான்டனெருக்கு பந்து கொடுக்காமல் விட்டது, ஹர்டிக் பாண்டியா ரீஸின் ஓவரை போடாமல் விட்டது என்று பல சொதப்பல்கள் நேற்று! போல்ட் வடேராவின் லட்டு கேட்சை விட்டதுடன் ஆட்டம் திசைமாறிவிட்டது!! சும்மாவா சொன்னார்கள் Catches Win Matches என்று.

ஆனாலும் ஷ்ரேயாசின் ஆட்டம் வேறு ரகம்!

தளத்தில் அப்படியும் பிரச்சினை வருமா. மீண்டும் தளம் வேலை செய்வதில் மகிழ்ச்சி. இறுதிப் போட்டியில் சந்திப்பம்

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, செம்பாட்டான் said:

தளத்தில் அப்படியும் பிரச்சினை வருமா. மீண்டும் தளம் வேலை செய்வதில் மகிழ்ச்சி. இறுதிப் போட்டியில் சந்திப்பம்

எனது வீட்டு மடிக்கணணியில் யாழ் களம் வருகுதில்லை! என்ன காரணமாக இருக்கும்? வேலை இடத்தில் வருகிறது!

வீட்டில் this site took too long to respond என்று வருகுது!

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, Eppothum Thamizhan said:

எனது வீட்டு மடிக்கணணியில் யாழ் களம் வருகுதில்லை! என்ன காரணமாக இருக்கும்? வேலை இடத்தில் வருகிறது!

வீட்டில் this site took too long to respond என்று வருகுது!

வேற browserஅ பயன்படுத்திப் பாருங்க. இல்லாட்டி, உங்கட internet historyஅ அழிச்சுப் பாருங்க.

Modemத நிப்பாட்டிப் போட்டு திரும்பவும் தொடக்கியும் பாருங்க.

VPN பாவிக்கிறீங்களா. அதுவும் சிலவேலை அலுப்படிக்கும்.

தளத்தில பிரச்சினை இல்லை. நமக்கெல்லாம் தடை இல்லாம வேலை செய்தது. செய்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Eppothum Thamizhan said:

எனது வீட்டு மடிக்கணணியில் யாழ் களம் வருகுதில்லை! என்ன காரணமாக இருக்கும்? வேலை இடத்தில் வருகிறது!

வீட்டில் this site took too long to respond என்று வருகுது!

ஏதாவது ஒரு Antivirus software கூட காரணமாக இருக்கலாம், எப்போதும் தமிழன். அதுவே தானாக புதிதாக உங்களின் கவனத்தையும் மீறி உள்ளே இறங்கியிருக்கலாம். Please check all the running process in the task manager.

முன்னர் ஒரு தடவை சுவைப்பிரியனும் இப்படிச் சொல்லியிருந்ததாக ஞாபகம். Avast தான் அதன் காரணம் என்றும் ஒரு ஞாபகம்.

  • கருத்துக்கள உறவுகள்

501235580_9816549531769129_5944365027848

சசிக் குமரன்

Sooedntsprhic123lf5ac71g16f0 4u4iu60i29lait035f5643g275i879u  · 

நாங்க தோத்தது மேட்ச் தான்

போர்ல இல்லைன்னு சொல்லும் போதே

பையன் அடுத்து எதோ சம்பவம் பண்ண போறான்னு நினைச்சேன்

செஞ்சுட்டான் இல்லை இல்லை செதுக்கிட்டான்

கட்டபொம்மன் ஊர் எனக்கு

கெட்டவன்னு பேர் எனக்கு

எட்டப்பன்னு எவனும் வந்தா

எட்டி எட்டி மிதி இருக்கு

வாரான் வர்றான் வரான் வரான்ல

இவன் பைனலுக்கு வாரான் வரான் வரான்ல

இந்திய தொலைக்காட்சிகளில் முதன் முறையாக 17 வருசமாக கப் அடிக்காத இரு அணிகள் பைனலில் மோதுகின்றனர் 🙏🏻" ........ ! 😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

நக்கல் நல்லாருக்கு.

இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக..... உண்மைதானே. தொலைக்காட்சிக்காக ஆடப்படும் ஜபில்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாளை செவ்வாய் (03 ஜூன்) எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

77) செவ்வாய் 03 ஜூன் 2:00 pm GMT அஹமதாபாத் - இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்)

Final: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் பஞ்சாப் கிங்ஸ்

RCB எதிர் PBKS

ipl-2025-final-rcb-vs-pbks.webp

மூன்று பேர் மாத்திரம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஐபிஎல் 2025 சம்பியன்ஸ் எனக் கணித்துள்ளனர். ஒருவரும் போட்டியில் உள்ள பஞ்சாப் கிங்ஸ் அணி சம்பியன்ஸ் எனக் கணிக்கவில்லை. போட்டியில் இல்லாத வேறு அணிகள் வெல்லும் எனக் கணித்தவர்களுக்கு புள்ளிகள் எதுவும் கிடையாது! spacer.png

large.IMG_1197.jpeg

நாளைய இறுதிப் போட்டியில் ஐந்து புள்ளிகள் பெறுபவர்கள் யார்? 

spacer.png

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.