Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

maxresdefault.jpg?resize=750%2C375&ssl=1

மீனவர்கள் பிரச்சனை: அதிரடி அறிவிப்பை வெளியிட்ட தமிழக வெற்றிக் கழகம்!

இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வை வலியுறுத்தி தமிழகத்தில் பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுக்கப்போவதாக விஜயின் கட்சியான தமிழக வெற்றி கழகம் அறிவித்துள்ளது.

இந்த போராட்டத்தில் தளபதி விஜய்யும் கலந்து கொள்ளவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அடுத்தவராம் இந்த போராட்டம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் இதற்கான அனுமதியை தமிழக வெற்றி கழகம் பொலிசாரிடம் முன்வைத்துள்ளது.

தமிழக வெற்றி கழகத்தின் கடலூர் மாவட்ட நிர்வாகிகள் இந்த போராட்டத்தினை ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1424675

  • Replies 64
  • Views 2.4k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • நிழலி
    நிழலி

    விஜய் மட்டுமல்ல, நியாயமாக சிந்திக்க கூடிய ஒரு அரசியல்வாதி தமிழகத்தில் இருப்பின், அவர்கள் செய்யக் கூடியது மக்களைத் திரட்டி போராட்டம் அல்ல. மீனவர்களை நோக்கி, எல்லை தாண்டிச் சென்று, அயலக மீனவர்களின் மீன்

  • ஏராளன்
    ஏராளன்

    மத்திய அரசு ஆழ்கடல் மீன்பிடியை ஊக்குவிப்பதாகவும் மத்திய அரசும் சர்வதேச அளவில் தடைசெய்யப்பட்ட வலை, மீன்பிடி முறைகளை தடை செய்துள்ளதாம்! ஆனால் கடலுக்கு செல்லும் மீனவப்படகு அனுமதி முதல் பரிசோதனைகள் எல்லாம

  • goshan_che
    goshan_che

    கிரெடிபிலிட்டி காற்றில் போய்விட்டது என வேலிபாய்ந்தோடியவர்கள் யார் என்பது யாழ்களத்துக்கு வாசகருக்கு என்றும் நினைவில் இருக்கும்🤣. ஆகவே யாருக்கு, யார், யாரை இனங்காட்டுவது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தமிழ் சிறி said:

maxresdefault.jpg?resize=750%2C375&ssl=1

மீனவர்கள் பிரச்சனை: அதிரடி அறிவிப்பை வெளியிட்ட தமிழக வெற்றிக் கழகம்!

இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வை வலியுறுத்தி தமிழகத்தில் பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுக்கப்போவதாக விஜயின் கட்சியான தமிழக வெற்றி கழகம் அறிவித்துள்ளது.

இந்த போராட்டத்தில் தளபதி விஜய்யும் கலந்து கொள்ளவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அடுத்தவராம் இந்த போராட்டம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் இதற்கான அனுமதியை தமிழக வெற்றி கழகம் பொலிசாரிடம் முன்வைத்துள்ளது.

தமிழக வெற்றி கழகத்தின் கடலூர் மாவட்ட நிர்வாகிகள் இந்த போராட்டத்தினை ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1424675

ஐயா இந்த போராட்டத்தில் மீனவர்களுக்கு என்ன தீர்வு வைத்து போராடுகிறார் என்று சொல்லவே இல்லையே?

மனைவி இலங்கை என்றபடியால் தனக்கும் இலங்கைக் கடலில் உரிமை உள்ளது என்று சொல்ல வருகிறாரோ?

6 minutes ago, தமிழ் சிறி said:

அடுத்தவராம் இந்த போராட்டம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் இதற்கான அனுமதியை தமிழக வெற்றி கழகம் பொலிசாரிடம் முன்வைத்துள்ளது.

பொலிசார் எப்படியும் தடுப்பார்கள் என்ற நம்பிக்கையோ?

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, ஈழப்பிரியன் said:

ஐயா இந்த போராட்டத்தில் மீனவர்களுக்கு என்ன தீர்வு வைத்து போராடுகிறார் என்று சொல்லவே இல்லையே?

மனைவி இலங்கை என்றபடியால் தனக்கும் இலங்கைக் கடலில் உரிமை உள்ளது என்று சொல்ல வருகிறாரோ?

பொலிசார் எப்படியும் தடுப்பார்கள் என்ற நம்பிக்கையோ?

இப்ப தானே வெளியே வருகிறார். ஆழம் தெரியாமல் காலை விடுகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

சீமானை போல் - அதிகாரம் இல்லாத தமிழக அரசின் மீது வீண்பழியை போட்டு விட்டு, திரள்நிதியில் கவனம் செலுத்தாமல்….

விஜை இந்த விடயத்தில் ஒரு தமிழ் நாட்டு கட்சி செய்ய கூடிய அதிகபட்ச நடவடிக்கை -மக்களை கூட்டி போராடுவது - அதை செய்ய விழைகிறார்.

அதிமுக, பிஜேபி, சீமான் இப்படி போராடினால் அது மத்திய அரசுக்கு எதிரான போராட்டமாக அமையும் என்பதால் செய்ய மாட்டார்கள்.

Edited by goshan_che

5 minutes ago, goshan_che said:

விஜய் மட்டுமல்ல, நியாயமாக சிந்திக்க கூடிய ஒரு அரசியல்வாதி தமிழகத்தில் இருப்பின், அவர்கள் செய்யக் கூடியது மக்களைத் திரட்டி போராட்டம் அல்ல. மீனவர்களை நோக்கி, எல்லை தாண்டிச் சென்று, அயலக மீனவர்களின் மீன்வளத்தை கொள்ளையடிக்க வேண்டாம் என்று சொல்வதே.

கடல்வள கொள்ளையர்கள் தம் செயல்களை நிறுத்துவதைத் தவிர இந்த பிரச்சனைக்கு எந்த தீர்வும் இல்லை. ஸ்டாலினில் இருந்து, சீமான் மற்றும் விஜய் வரைக்கும் இதைச் சொல்லும் துணிவு அற்றவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, goshan_che said:

சீமானை போல் - அதிகாரம் இல்லாத தமிழக அரசின் மீது வீண்பழியை போட்டு விட்டு, திரள்நிதியில் கவனம் செலுத்தாமல்….

விஜை இந்த விடயத்தில் ஒரு தமிழ் நாட்டு கட்சி செய்ய கூடிய அதிகபட்ச நடவடிக்கை -மக்களை கூட்டி போராடுவது - அதை செய்ய விழைகிறார்.

அதிமுக, பிஜேபி, சீமான் இப்படி போராடினால் அது மத்திய அரசுக்கு எதிரான போராட்டமாக அமையும் என்பதால் செய்ய மாட்டார்கள்.

கடலூர் கொள்ளையர்களுடன் சேர்ந்து போராட்டம்??? யாருக்கு நீதி வேண்டி???

இதற்குள்ளும் எதுக்கு சீமான்?????

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, நிழலி said:

மீனவர்களை நோக்கி, எல்லை தாண்டிச் சென்று, அயலக மீனவர்களின் மீன்வளத்தை கொள்ளையடிக்க வேண்டாம் என்று சொல்வதே.

இது எம் தரப்பு நியாயம் மட்டும் அல்ல இதுதான் நடுநிலை நியாயமும் கூட.

ஆனால் விஜையின் பெயர்தான் ஜோசேப். அவரே யேசுநாதரின் தகப்பன் அல்ல.

விஜை ஒரு சாம்ன்ய அரசியல்வாதி. சாமன்ய அரசியல்வாதி அப்படித்தான், தன் வாக்காளர் நலன் பற்றியே சிந்திப்பான்.

நியாயத்தை விட நடப்பதை கதைப்பதுதான் சமான்ய அரசியல், இதைத்தான் பிரெஞ்சுகாரார் real politik என்பார்கள்.

இது எல்லோரும் எல்லா நாட்டிலும் செய்வதுதான்.

ஆனால் - அதிகாரம் இல்லாத தமிழக அரசை விமர்சித்து, நெய்தல் படை அமைப்பேன் என விஜை பம்மாத்து அரசியல் செய்யவில்லை.

22 minutes ago, நிழலி said:

ஸ்டாலினில் இருந்து, சீமான் மற்றும் விஜய் வரைக்கும் இதைச் சொல்லும் துணிவு அற்றவர்கள்.

அரசியல் தற்கொலை செய்யும் துணிச்சல் அற்றவர்கள்.

20 minutes ago, விசுகு said:

கடலூர் கொள்ளையர்களுடன் சேர்ந்து போராட்டம்??? யாருக்கு நீதி வேண்டி???

விளக்கம் மேலே.

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, விசுகு said:

இதற்குள்ளும் எதுக்கு சீமான்?????

ஏன் என்றால் முழுக்க முழுக்க மத்திய அரசு சம்பந்தபட்ட விடயத்தில் மாநில முதல்வர்தான் பிழை விட்டார் என்பது போல் அண்ணன் வாயை வாடகைக்கு விட்டதால்.

ஆதாரம் கீழே 👇

அடங்காமல் அத்துமீறும் இலங்கை.. கடிதம் மட்டுமே எழுதும் முதல்வர்! விடிவு காலம் எப்போது? சீமான் நறுக்!

Rajkumar RUpdated: Monday, March 10, 2025, 18:51 [IST]

Seeman Fishermen Sri Lanka

சென்னை: இலங்கை சிறையில் வாடும் அனைத்து மீனவர்களையும், பறித்து வைக்கப்பட்டுள்ள படகுகளையும் மீட்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்வதாகவும், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ் மீனவர்கள் கைது செய்யப்படும் ஒவ்வொரு முறையும், கடமைக்கு கடிதம் மட்டுமே எழுதுவதைக் கைவிட்டு, இந்திய ஒன்றிய அரசிற்கு உரிய அழுத்தம் கொடுக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

Also Read

இது இந்திய அணி இல்ல..

வழக்கம் போலத் திராவிட மாடல் முதலமைச்சர் ஐயா ஸ்டாலின் அவர்கள், இந்திய ஒன்றிய அரசிற்கு கடிதம் மட்டுமே எழுதி தம்முடைய கடமையை முடித்துக்கொண்டது வன்மையான கண்டனத்துக்குரியது.

தஞ்சையில் 35 வயது பெண்ணுக்கு பாலியல் தொல்லை தந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் | Oneindia Tamil

தஞ்சையில் 35 வயது பெண்ணுக்கு பாலியல் தொல்லை தந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் | Oneindia Tamilதஞ்சையில் 35 வயது பெண்ணுக்கு பாலியல் தொல்லை தந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் | Oneindia Tamil

திமுக ஆட்சிக்கு வந்தது முதல் இலங்கை கடற்படையால் தமிழ் மீனவர்கள் கைது செய்யப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு 74 மீனவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், 2021 ஆம் ஆண்டு 143 மீனவர்களும், 2022 ஆம் ஆண்டு 229 மீனவர்களும், 2023 ஆம் ஆண்டு 220 மீனவர்களும், 2024 ஆம் ஆண்டு 528 மீனவர்களும் கைது செய்யப்பட்டனர். நடப்பு 2025 ஆம் ஆண்டில், தற்போது வரை 9 முறை இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களின் எண்ணிக்கை மட்டும் 75 ஆகும். கடந்த ஐந்து ஆண்டுகளில் இலங்கை கடற்படையால் மொத்தமாக 1250க்கும் மேற்பட்ட மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது, மீனவர்கள் நிம்மதியாக மீன்பிடிக்கவே முடியாத அளவிற்கு அவர்களது வாழ்வினை அழித்தொழிக்கும் கொடுஞ்செயலாகும்.

நாட்டை ஆளும் ஆட்சியாளர் பெருமக்கள் தற்போது இலங்கை சிறையில் வாடும் 107 மீனவர்களையும், பிடித்து வைக்கப்பட்டுள்ள 227 படகுகளையும் எப்போது மீட்கப்போகிறீர்கள்? இன்னும் எத்தனை காலத்திற்கு மீனவர்கள் இப்படித் துயரக்கடலில் தத்தளிக்கச் செய்யப் போகிறீர்கள்? மீனவர்கள் கைது செய்யப்படும் சிக்கலுக்கு நிலைத்த தீர்வு காணப்போவது எப்போது? தமிழ்நாட்டு மீனவர்கள் இந்த நாட்டின் குடிமக்களா இல்லையா? இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசிற்கு குஜராத் மீனவர்கள் கைது செய்யப்பட்டால் வரும் பரிவும், பற்றும், ஆத்திரமும், அக்கறையும் அணுவளவாவது தமிழ் மீனவர்கள் கைது செய்யப்படும்போது வராதது ஏன்?

Recommended For You

மகளிர் தினத்தில் விவாதமாகிய சீமானின்

அகண்ட பாரதம் பேசும் பாஜக, காங்கிரசு ஆட்சிக்காலத்தில் தாரைவார்க்கப்பட்ட தமிழ்நாட்டுக்கு சொந்தமான கட்சத்தீவை மீட்க எந்த முயற்சியும் எடுக்காதது ஏன்? நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 50க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை வைத்துள்ள திமுக கூட்டணி, நாடாளுமன்றத்திற்கு உள்ளே போராடாமல் வெளியே வந்து குரல் எழுப்புவதால் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு விளைந்த நன்மை என்ன? நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைப்பிற்காக பதறி துடித்து அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டிய திமுக அரசு, கட்சத்தீவை மீட்கவும், தமிழ்நாட்டு மீனவர்கள் நலனைப் பாதுகாக்கவும் கடந்த 4 ஆண்டுகளில் ஒருமுறை கூட அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டாதது ஏன்?

தமிழ்நாட்டு மீனவர் நலனைப் பாதுகாக்கவும், இலங்கை இனவெறி கடற்படையால் தமிழ் மீனவர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்படும் பேரவலத்துக்கு கட்சத்தீவை மீட்டு நிலைத்த தீர்வை காணவும் இந்திய ஒன்றிய அரசையும், தமிழ்நாடு அரசையும் வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி வருகின்ற பங்குனி 8 ஆம் நாள் (22.03.2025) அன்று இராமநாதபுரம் மாவட்டம் இராமேசுவரம் - தங்கச்சி மடத்தில் மாபெரும் மக்கள் திரள் கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஆகவே, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ் மீனவர்கள் கைது செய்யப்படும் ஒவ்வொரு முறையும், கடமைக்கு கடிதம் மட்டுமே எழுதுவதைக் கைவிட்டு, இந்திய ஒன்றிய அரசிற்கு உரிய அழுத்தம் கொடுத்து, தற்போது இலங்கை சிறையில் வாடும் அனைத்து மீனவர்களையும், பறித்து வைக்கப்பட்டுள்ள படகுகளையும் மீட்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள கட்சத்தீவை மீட்கும் வழக்கை விரைவுபடுத்தி, தமிழ்நாட்டு மீனவர் சிக்கலுக்கு நிலையான தீர்வினைப் பெற்றுத்தர வேண்டுமென வலியுறுத்துகிறேன்." என கூறியுள்ளார்.

https://tamil.oneindia.com/news/chennai/seeman-demands-immediate-action-to-rescue-tamil-fishermen-jailed-in-sri-lanka-686515.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards

38 minutes ago, goshan_che said:

அதிமுக, பிஜேபி, சீமான் இப்படி போராடினால் அது மத்திய அரசுக்கு எதிரான போராட்டமாக அமையும் என்பதால் செய்ய மாட்டார்கள்.

திருத்தம்: அண்ணனும் ஒரே ஒரு போராட்டம் தங்கச்சி மடத்தில் செய்ய போகிறாராம்.

  • கருத்துக்கள உறவுகள்

நாம் தமிழர் கட்சியின் தலைவரான சீமான் மற்றும் அவரது கட்சி, இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது மற்றும் கொல்லப்படுவதைக் கண்டித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்துள்ளனர்... அவர்கள் மத்திய அரசின் நடவடிக்கையின்மையை விமர்சித்து, தமிழக மீனவர்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்புக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்...

உதாரணமாக, எனக்கு நினைவில் நிற்கும் இரண்டு போராட்டங்களை கீழே தருகிறேன்..👇

2021ஆம் ஆண்டு, இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டதை எதிர்த்து, நாம் தமிழர் கட்சி போராட்டங்களை நடத்தி, மத்திய அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்தது... அவர்கள் தமிழக மீனவர்களின் பாதுகாப்புக்காக தக்க நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசை வலியுறுத்தினர்...

இது குறித்து வந்த செய்தி ஒன்று..👇

மேலும், 2017ஆம் ஆண்டில், தமிழக மீனவர் பிரான்சிஸ் ஜெயராஜ் இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து, சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சி பல்வேறு போராட்டங்களை நடத்தி, மத்திய அரசின் நடவடிக்கையின்மையை கண்டித்தது. அவர்கள் தமிழக மீனவர்களின் உயிர்களை பாதுகாக்க தக்க நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசை வலியுறுத்தினர்..👇

இவை உடனும் எனக்கு நினைவுக்கு வந்தவை.. இதைவிட பல போராட்டங்கள் இருக்கின்றன..

இந்த நிகழ்வுகள் எல்லாம் மத்திய அரசை எதிர்த்து நாம் தமிழர் கட்சியின் தமிழக மீனவர்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்புக்கான போராட்டங்களை வெளிப்படுத்துகின்றன..

ஆகவே காழ்ப்புணர்ச்சியுடன் அவதூறுகளை பரப்பித்திரிவோரை யாழை வாசிப்பவர்கள் பிரித்தறிவார்களாக..

“எரிச்சலும் பொறாமையும் எஞ்ஞான்றும் எற்றாது

அறிசியார் மாணத் தரும்.”

(திருக்குறள் – 162)

இந்தக் குறளில், எரிச்சல் மற்றும் பொறாமை காழ்ப்புணர்ச்சிக்கே வழிவகுக்கும் என்பதையும், அவை அறிவில்லாதவர்களை மட்டுமே இழிவில் ஆழ்த்தும் என்பதையும் வள்ளுவர் உணர்த்துகிறார்…

Edited by பாலபத்ர ஓணாண்டி

47 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

சீமான் என்றாவது தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி சென்று, அதுவும் வடக்கு கடற்கரைகளுக்கு மிக அருகில் சென்று, போரால் பாதிக்கப்பட்ட தாயக மீனவர்களின் வயிற்றில் அடிக்கும் கொள்ளையை நிறுத்தச் சொல்லியோ, அதற்கு எதிராக கண்டனங்களையோ தெரிவித்தோ அல்லது அறிக்கை ஒன்றையாவது விட்டிருக்கின்றாரா?

அவ்வாறு செய்திருப்பின், அவற்றின் இணைப்புகளையும் இணைத்து விடுங்கள்.

நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை

அன்றே யொழிய விடல்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, நிழலி said:

ஒரு போதும் இல்லை.. நான் நினைக்கிறேன் கோசான் சொன்னதுபோல் அப்படி செய்தால் அது அவர்களின் அரசியல் தற்கொலை என்று.. தமிழ் நாட்டின் ஒரு அரசியல்வாதியும் அதை செய்யமாட்டார்கள்..

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

நாம் தமிழர் கட்சியின் தலைவரான சீமான் மற்றும் அவரது கட்சி, இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது மற்றும் கொல்லப்படுவதைக் கண்டித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்துள்ளனர்... அவர்கள் மத்திய அரசின் நடவடிக்கையின்மையை விமர்சித்து, தமிழக மீனவர்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்புக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்...

உதாரணமாக, எனக்கு நினைவில் நிற்கும் இரண்டு போராட்டங்களை கீழே தருகிறேன்..👇

2021ஆம் ஆண்டு, இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டதை எதிர்த்து, நாம் தமிழர் கட்சி போராட்டங்களை நடத்தி, மத்திய அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்தது... அவர்கள் தமிழக மீனவர்களின் பாதுகாப்புக்காக தக்க நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசை வலியுறுத்தினர்...

இது குறித்து வந்த செய்தி ஒன்று..👇

மேலும், 2017ஆம் ஆண்டில், தமிழக மீனவர் பிரான்சிஸ் ஜெயராஜ் இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து, சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சி பல்வேறு போராட்டங்களை நடத்தி, மத்திய அரசின் நடவடிக்கையின்மையை கண்டித்தது. அவர்கள் தமிழக மீனவர்களின் உயிர்களை பாதுகாக்க தக்க நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசை வலியுறுத்தினர்..👇

இவை உடனும் எனக்கு நினைவுக்கு வந்தவை.. இதைவிட பல போராட்டங்கள் இருக்கின்றன..

இந்த நிகழ்வுகள் எல்லாம் மத்திய அரசை எதிர்த்து நாம் தமிழர் கட்சியின் தமிழக மீனவர்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்புக்கான போராட்டங்களை வெளிப்படுத்துகின்றன..

ஆகவே காழ்ப்புணர்ச்சியுடன் அவதூறுகளை பரப்பித்திரிவோரை யாழை வாசிப்பவர்கள் பிரித்தறிவார்களாக..

“எரிச்சலும் பொறாமையும் எஞ்ஞான்றும் எற்றாது

அறிசியார் மாணத் தரும்.”

(திருக்குறள் – 162)

இந்தக் குறளில், எரிச்சல் மற்றும் பொறாமை காழ்ப்புணர்ச்சிக்கே வழிவகுக்கும் என்பதையும், அவை அறிவில்லாதவர்களை மட்டுமே இழிவில் ஆழ்த்தும் என்பதையும் வள்ளுவர் உணர்த்துகிறார்…

சீமான் போராடுவார்….

ஆனால் மத்திய அரசை பத்து வரி விமர்சித்து விட்டு, மாநில அரசை பெளந்து கட்டுவார்.

இது 100% மத்திய அரசு எல்லைக்குட்பட்ட விடயம்.

இதில் மாநில அரசை விமர்சிப்பது பம்மாத்து அரசியல்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

ஏன் என்றால் முழுக்க முழுக்க மத்திய அரசு சம்பந்தபட்ட விடயத்தில் மாநில முதல்வர்தான் பிழை விட்டார் என்பது போல் அண்ணன் வாயை வாடகைக்கு விட்டதால்.

ஆதாரம் கீழே 👇

அடங்காமல் அத்துமீறும் இலங்கை.. கடிதம் மட்டுமே எழுதும் முதல்வர்! விடிவு காலம் எப்போது? சீமான் நறுக்!

Rajkumar RUpdated: Monday, March 10, 2025, 18:51 [IST]

Seeman Fishermen Sri Lanka

சென்னை: இலங்கை சிறையில் வாடும் அனைத்து மீனவர்களையும், பறித்து வைக்கப்பட்டுள்ள படகுகளையும் மீட்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்வதாகவும், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ் மீனவர்கள் கைது செய்யப்படும் ஒவ்வொரு முறையும், கடமைக்கு கடிதம் மட்டுமே எழுதுவதைக் கைவிட்டு, இந்திய ஒன்றிய அரசிற்கு உரிய அழுத்தம் கொடுக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

Also Read

இது இந்திய அணி இல்ல..

வழக்கம் போலத் திராவிட மாடல் முதலமைச்சர் ஐயா ஸ்டாலின் அவர்கள், இந்திய ஒன்றிய அரசிற்கு கடிதம் மட்டுமே எழுதி தம்முடைய கடமையை முடித்துக்கொண்டது வன்மையான கண்டனத்துக்குரியது.

தஞ்சையில் 35 வயது பெண்ணுக்கு பாலியல் தொல்லை தந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் | Oneindia Tamil

தஞ்சையில் 35 வயது பெண்ணுக்கு பாலியல் தொல்லை தந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் | Oneindia Tamilதஞ்சையில் 35 வயது பெண்ணுக்கு பாலியல் தொல்லை தந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் | Oneindia Tamil

திமுக ஆட்சிக்கு வந்தது முதல் இலங்கை கடற்படையால் தமிழ் மீனவர்கள் கைது செய்யப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு 74 மீனவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், 2021 ஆம் ஆண்டு 143 மீனவர்களும், 2022 ஆம் ஆண்டு 229 மீனவர்களும், 2023 ஆம் ஆண்டு 220 மீனவர்களும், 2024 ஆம் ஆண்டு 528 மீனவர்களும் கைது செய்யப்பட்டனர். நடப்பு 2025 ஆம் ஆண்டில், தற்போது வரை 9 முறை இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களின் எண்ணிக்கை மட்டும் 75 ஆகும். கடந்த ஐந்து ஆண்டுகளில் இலங்கை கடற்படையால் மொத்தமாக 1250க்கும் மேற்பட்ட மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது, மீனவர்கள் நிம்மதியாக மீன்பிடிக்கவே முடியாத அளவிற்கு அவர்களது வாழ்வினை அழித்தொழிக்கும் கொடுஞ்செயலாகும்.

நாட்டை ஆளும் ஆட்சியாளர் பெருமக்கள் தற்போது இலங்கை சிறையில் வாடும் 107 மீனவர்களையும், பிடித்து வைக்கப்பட்டுள்ள 227 படகுகளையும் எப்போது மீட்கப்போகிறீர்கள்? இன்னும் எத்தனை காலத்திற்கு மீனவர்கள் இப்படித் துயரக்கடலில் தத்தளிக்கச் செய்யப் போகிறீர்கள்? மீனவர்கள் கைது செய்யப்படும் சிக்கலுக்கு நிலைத்த தீர்வு காணப்போவது எப்போது? தமிழ்நாட்டு மீனவர்கள் இந்த நாட்டின் குடிமக்களா இல்லையா? இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசிற்கு குஜராத் மீனவர்கள் கைது செய்யப்பட்டால் வரும் பரிவும், பற்றும், ஆத்திரமும், அக்கறையும் அணுவளவாவது தமிழ் மீனவர்கள் கைது செய்யப்படும்போது வராதது ஏன்?

Recommended For You

மகளிர் தினத்தில் விவாதமாகிய சீமானின்

அகண்ட பாரதம் பேசும் பாஜக, காங்கிரசு ஆட்சிக்காலத்தில் தாரைவார்க்கப்பட்ட தமிழ்நாட்டுக்கு சொந்தமான கட்சத்தீவை மீட்க எந்த முயற்சியும் எடுக்காதது ஏன்? நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 50க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை வைத்துள்ள திமுக கூட்டணி, நாடாளுமன்றத்திற்கு உள்ளே போராடாமல் வெளியே வந்து குரல் எழுப்புவதால் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு விளைந்த நன்மை என்ன? நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைப்பிற்காக பதறி துடித்து அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டிய திமுக அரசு, கட்சத்தீவை மீட்கவும், தமிழ்நாட்டு மீனவர்கள் நலனைப் பாதுகாக்கவும் கடந்த 4 ஆண்டுகளில் ஒருமுறை கூட அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டாதது ஏன்?

தமிழ்நாட்டு மீனவர் நலனைப் பாதுகாக்கவும், இலங்கை இனவெறி கடற்படையால் தமிழ் மீனவர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்படும் பேரவலத்துக்கு கட்சத்தீவை மீட்டு நிலைத்த தீர்வை காணவும் இந்திய ஒன்றிய அரசையும், தமிழ்நாடு அரசையும் வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி வருகின்ற பங்குனி 8 ஆம் நாள் (22.03.2025) அன்று இராமநாதபுரம் மாவட்டம் இராமேசுவரம் - தங்கச்சி மடத்தில் மாபெரும் மக்கள் திரள் கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஆகவே, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ் மீனவர்கள் கைது செய்யப்படும் ஒவ்வொரு முறையும், கடமைக்கு கடிதம் மட்டுமே எழுதுவதைக் கைவிட்டு, இந்திய ஒன்றிய அரசிற்கு உரிய அழுத்தம் கொடுத்து, தற்போது இலங்கை சிறையில் வாடும் அனைத்து மீனவர்களையும், பறித்து வைக்கப்பட்டுள்ள படகுகளையும் மீட்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள கட்சத்தீவை மீட்கும் வழக்கை விரைவுபடுத்தி, தமிழ்நாட்டு மீனவர் சிக்கலுக்கு நிலையான தீர்வினைப் பெற்றுத்தர வேண்டுமென வலியுறுத்துகிறேன்." என கூறியுள்ளார்.

https://tamil.oneindia.com/news/chennai/seeman-demands-immediate-action-to-rescue-tamil-fishermen-jailed-in-sri-lanka-686515.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards

திருத்தம்: அண்ணனும் ஒரே ஒரு போராட்டம் தங்கச்சி மடத்தில் செய்ய போகிறாராம்.

இந்த விஷயத்தில் நான் இலங்கை கடற்படையினர் பக்கம் என்று ஏற்கனவே இங்கே எழுதியது தான்.

ஆனால் சீமானிம்ஸ் நோய் பொல்லாதது. எனவே தள்ளி நிற்க சகோ.🤣

Edited by விசுகு
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த ஆறு மாதங்களுக்கு தமிழகத்திற்கு போராட்ட காலம் தான்.......... பலத்தை காட்டினால் தானே பேரம் பேசலாம்..............

தவெக ஆயிரம் பேருக்கு மட்டன், சிக்கன் பிரியாணி கொடுத்த நோன்பு திறப்பு விழாவில் வெளியில் இலட்சம் பேர்கள் நின்றார்கள் என்கின்றார்கள்.

ஐம்பது சீட்டெல்லாம் பத்தாது, 234 இல் அரைவாசி கொடுங்கள் என்று எதுவுமே செய்யாமலே, கூட்டத்தை கூட்டிக் காட்டாமல் கேட்க முடியாது தானே...............

ஆயிரம் பேர்கள் சாப்பிட்டு விட்டு போட்ட கழிவுகளை எவருமே அகற்றவில்லை. அங்கங்கே கழிவுகள் கொட்டப்பட்டு அந்த இடமே அலங்கோலமாக இருந்தது.

தானாக எழுதிக் கொடுக்காத ஒன்றைப் பேசப் போகின்றேன் என்று வெளிக்கிட்டு, என்ன சொல்லப் போகின்றாரோ என்று திக்திக்கென்று நெஞ்சு அடிக்குது............... சொந்தத்தில் ஒரு வசனம் கோர்வையாக வராது போல.................

அர்ணாப் கோஸ்வாமியிடம் கமல் மாட்டி முழித்ததை விட, ஒரு பெரிய சம்பவம் விரைவில் நடக்கப் போகின்றது.................

மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு வேண்டி நீங்களே போராடுவீர்களா...................... லூசுக் கூட்டம், பிரச்சனையே நீங்கள் மட்டும் தானே......................🫣.

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, goshan_che said:

இது 100% மத்திய அரசு எல்லைக்குட்பட்ட விடயம்.

இதில் மாநில அரசை விமர்சிப்பது பம்மாத்து அரசியல்.

மத்திய அரசு ஆழ்கடல் மீன்பிடியை ஊக்குவிப்பதாகவும் மத்திய அரசும் சர்வதேச அளவில் தடைசெய்யப்பட்ட வலை, மீன்பிடி முறைகளை தடை செய்துள்ளதாம்! ஆனால் கடலுக்கு செல்லும் மீனவப்படகு அனுமதி முதல் பரிசோதனைகள் எல்லாம் மாநில அரசிடம் தானே அண்ணை அதிகாரம் இருக்கிறது. அவர்கள் தடைசெய்யப்பட்ட முறைகளை கண்காணித்து பிடித்தாலே போதுமே!

தமிழக மீன்பிடி படகு முதலாளிகள் அரசியல்வாதிகள் எனில் அவர்கள் எப்போதும் விதிமுறை மீறல்களில் ஈடுபடுவது வழமை தானே!

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, விசுகு said:

ஆனால் சீமானிம்ஸ் நோய் பொல்லாதது. எனவே தள்ளி நிற்க சகோ.🤣

நீங்கள் கேட்டது இதற்குள் ஏன் சீமான் என. அதற்கான விளக்கம் மேலே கொடுக்கப்பட்டுள்ளது அண்ணை.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

நீங்கள் கேட்டது இதற்குள் ஏன் சீமான் என. அதற்கான விளக்கம் மேலே கொடுக்கப்பட்டுள்ளது அண்ணை.

அதற்கு தான் நன்றி சொல்லி வாக்களித்தேனே சகோ...

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, ஏராளன் said:

மத்திய அரசு ஆழ்கடல் மீன்பிடியை ஊக்குவிப்பதாகவும் மத்திய அரசும் சர்வதேச அளவில் தடைசெய்யப்பட்ட வலை, மீன்பிடி முறைகளை தடை செய்துள்ளதாம்! ஆனால் கடலுக்கு செல்லும் மீனவப்படகு அனுமதி முதல் பரிசோதனைகள் எல்லாம் மாநில அரசிடம் தானே அண்ணை அதிகாரம் இருக்கிறது. அவர்கள் தடைசெய்யப்பட்ட முறைகளை கண்காணித்து பிடித்தாலே போதுமே!

இதைதான் எந்த தமிழ் நாட்டு கட்சியும் செய்யாது என மேலே நிழலிக்கு எழுதினேன்.

சீமான் தமிழ் நாட்டு அரசை குறைகூறுவதும் இப்படி செய்யவில்லை என்றல்ல.

மாறாக மீனவர்களை காப்பாற்றாமல்விடுகிறார்கள் என்றே.

முதலில் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள்.

அவர்கள் இந்தியர்கள்.

நீங்கள் நினைப்பது போல் அங்கே எவரும் இதில் நியாயத்தை பார்ப்பதில்லை.

எமது இந்திய மீனவர் மீன்பிடிப்பதை இலங்கை தடுக்கிறது. இந்தியா தட்டி கேட்கவேண்டும் என்பதே அங்கே மக்கள், அரசியல்வாதிகள் அனைவரினும் நிலைப்பாடு.

3 minutes ago, விசுகு said:

அதற்கு தான் நன்றி சொல்லி வாக்களித்தேனே சகோ...

அதிலேயே ஏன் சீமானினை உள்ளே கொண்டுவந்தேன் என்ற விளக்கமும் இருக்கும் போது அது நோயின் அறிகுறி அல்லவே அண்ணை🤣.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

நாம் தமிழர் கட்சியின் தலைவரான சீமான் மற்றும் அவரது கட்சி, இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது மற்றும் கொல்லப்படுவதைக் கண்டித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்துள்ளனர்... அவர்கள் மத்திய அரசின் நடவடிக்கையின்மையை விமர்சித்து, தமிழக மீனவர்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்புக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்...

உதாரணமாக, எனக்கு நினைவில் நிற்கும் இரண்டு போராட்டங்களை கீழே தருகிறேன்..👇

2021ஆம் ஆண்டு, இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டதை எதிர்த்து, நாம் தமிழர் கட்சி போராட்டங்களை நடத்தி, மத்திய அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்தது... அவர்கள் தமிழக மீனவர்களின் பாதுகாப்புக்காக தக்க நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசை வலியுறுத்தினர்...

இது குறித்து வந்த செய்தி ஒன்று..👇

மேலும், 2017ஆம் ஆண்டில், தமிழக மீனவர் பிரான்சிஸ் ஜெயராஜ் இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து, சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சி பல்வேறு போராட்டங்களை நடத்தி, மத்திய அரசின் நடவடிக்கையின்மையை கண்டித்தது. அவர்கள் தமிழக மீனவர்களின் உயிர்களை பாதுகாக்க தக்க நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசை வலியுறுத்தினர்..👇

இவை உடனும் எனக்கு நினைவுக்கு வந்தவை.. இதைவிட பல போராட்டங்கள் இருக்கின்றன..

இந்த நிகழ்வுகள் எல்லாம் மத்திய அரசை எதிர்த்து நாம் தமிழர் கட்சியின் தமிழக மீனவர்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்புக்கான போராட்டங்களை வெளிப்படுத்துகின்றன..

ஆகவே காழ்ப்புணர்ச்சியுடன் அவதூறுகளை பரப்பித்திரிவோரை யாழை வாசிப்பவர்கள் பிரித்தறிவார்களாக..

“எரிச்சலும் பொறாமையும் எஞ்ஞான்றும் எற்றாது

அறிசியார் மாணத் தரும்.”

(திருக்குறள் – 162)

இந்தக் குறளில், எரிச்சல் மற்றும் பொறாமை காழ்ப்புணர்ச்சிக்கே வழிவகுக்கும் என்பதையும், அவை அறிவில்லாதவர்களை மட்டுமே இழிவில் ஆழ்த்தும் என்பதையும் வள்ளுவர் உணர்த்துகிறார்…

தயவு செய்து ப ஜ கா பார்க்க முன்னம் அழியுங்கய்யா 🤣

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

இதற்குள்ளும் எதுக்கு சீமான்?????

இதற்குத்தான் மேலே எரிச்சல் பொறாமை காழ்ப்புணர்ச்சிக்கு இட்டுச்செல்லும் எனும் திருக்குறளை மேற்கோளுடன் ஒரு பந்தி எழுதி உள்ளேன்.. அதற்கும் கீழே வந்து ஒரு சடையல்.. தொடர்ச்சியாக பொய்களை ஆதாரங்களுடன் மறுக்கும்போது அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவமற்றவர்கள் அதை சடைஞ்சு விட ஒரு கதையுடன் வருகிறார்கள்..

இது ஒரு நோய்.. கடைசிக்கட்டத்தில் முற்றிய நோய்.. இதை யாழை வாசிப்பவர்களுக்கு இனங்காட்டுவதை தொடர்ந்து செய்வோம் காழ்ப்புணர்ச்சி இல்லாமல் அவர்கள் விமர்சிக்கும் வரை..

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

நோன்பு திறக்கும் விழாவுக்கு போகும் போது இந்த லூசு சுவிங்கம் சாப்பிட்டபடி இருந்துதான் என்றொரு செய்தி பார்த்தேன். நோன்பு என்றால் என்ன என்றே புரியாத ஜடம்.

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

இதற்குத்தான் மேலே எரிச்சல் பொறாமை காழ்ப்புணர்ச்சிக்கு இட்டுச்செல்லும் எனும் திருக்குறளை மேற்கோளுடன் ஒரு பந்தி எழுதி உள்ளேன்.. அதற்கும் கீழே வந்து ஒரு சடையல்.. தொடர்ச்சியாக பொய்களை ஆதாரங்களுடன் மறுக்கும்போது அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவமற்றவர்கள் அதை சடைஞ்சு விட ஒரு கதையுடன் வருகிறார்கள்..

இது ஒரு நோய்.. கடைசிக்கட்டத்தில் முற்றிய நோய்.. இதை யாழை வாசிப்பவர்களுக்கு இனங்காட்டுவதை தொடர்ந்து செய்வோம் காழ்ப்புணர்ச்சி இல்லாமல் அவர்கள் விமர்சிக்கும் வரை..

கிரெடிபிலிட்டி காற்றில் போய்விட்டது என வேலிபாய்ந்தோடியவர்கள் யார் என்பது யாழ்களத்துக்கு வாசகருக்கு என்றும் நினைவில் இருக்கும்🤣.

ஆகவே யாருக்கு, யார், யாரை இனங்காட்டுவது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்🤣.

மேலே சீமான் மேலே சொல்லியது சடையல் அல்ல.

நான் சீமான் பிஜேபி ஏ டீம் என சொல்லவில்லையே?

அவர் பி டீம்.

அவர் அடிப்பதுமாரி அடிப்பார், பிஜேபி அழுவதுமாரி அழும்.

சீமானை பார்த்து அழுக்காறு நான் அடைய தேவையில்லை. ஏன்?

  1. நான் சொந்த உழைப்பில் சாப்பிடுகிறேன்.

  2. சீமானை போல (சினிமா) எனது துறையில் தோல்வி அடைந்து விட்டு இன்னொரு துறைக்கு நான் பாயவில்லை.

  3. திருமணம் ஒன்றுதான்

  4. எந்த பெண்ணும் என்னை ஏமாற்றிவிட்டார் என சொல்ல இடமில்லாமல் வாழ்கிறேன்.

  5. என்னை ஒத்த தோற்றமுடைய 15 வயது பையனை மனைவியின் வளப்பு மகன் என நான் திடீரென அறிமுகம் செய்யவில்லை.

  6. போன தேர்தலில் இல்லாத 8 கோடி நீலாங்கரை பங்களா என்னிடம் இல்லை.

  7. எனது உற்ற தோழன் இறந்தபின் அவன் சாவுகட்டை இடிப்பித்து, அவன் யாரென்றே தெரியாது என பொய் கூறும் வஞ்சகன் நான் இல்லை.

இன்னும் பல காரணங்கள் உளன. தேவைபட்டால் கேட்கவும்.

என்னை கேவலப்படுத்துவது யாழில் எழுதுவதோடு கூடவே வரும் occupational hazard அதை நான் கிஞ்சித்தும் கனம் பண்ணுவதில்லை.

ஆனால் இப்படிபட்ட கேவலமான மனிதனோடு எனக்கு அழுக்காறு என கேவலப்படுத்துவது ஓவர் 🤣.

அண்டைக்கு 100 லைக்ஸ் யூடியூபரோடு அழுக்காறு எண்டீர்கள். இப்போ இது🤣

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தமிழ் மீனவர்கள் மீன்பிடிக்கவே முடியாத படி அவர்களது வாழ்வினை அழித்து ஒழிப்பதே தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் போராடும் நிரந்தர தீர்வு

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

சீமான் போராடுவார்….

ஆனால் மத்திய அரசை பத்து வரி விமர்சித்து விட்டு, மாநில அரசை பெளந்து கட்டுவார்.

இது 100% மத்திய அரசு எல்லைக்குட்பட்ட விடயம்.

இதில் மாநில அரசை விமர்சிப்பது பம்மாத்து அரசியல்.

மாநில அரசை விமர்சிப்பது “பம்மாத்து அரசியல்” என நீங்கள் கூறியுள்ளீர்கள்... ஆனால் மத்திய அரசை மட்டுமே குறிவைப்பது அரசியலில் சரியான அணுகுமுறை அல்ல... மீனவர்களின் பாதுகாப்பு ஒரு கூட்டுப் பொறுப்பு... மாநில அரசு தலையிட்டு மத்திய அரசை நடவடிக்கை எடுக்க வற்புறுத்தினால் மட்டுமே, மீனவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்…

மத்திய அரசு மட்டும் இதை கவனிக்க வேண்டும் என்பதில்லை… மாநில அரசும் மத்திய அரசு மேல் தொடர்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டும்… தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும்போது, தமிழக அரசு மத்திய அரசை உடனடியாக தலையிடச் செய்ய வேண்டியது அவர்களின் கடமையாகும்…

கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பது மட்டுமன்றி மாநில அரசு அவர்களின் குடும்பங்களுக்கு உதவிகள் (உதவித்தொகை, வழக்கறிஞர் உதவி, உடனடி நிவாரணம்) வழங்கும் கடப்பாடும், பொறுப்பும் கொண்டுள்ளது …

ஆகவே, சீமான் மத்திய அரசை விமர்சிப்பதுடன் மாநில அரசையும் கண்டிப்பது தவறு அல்ல... இது மீனவர்களின் பாதுகாப்புக்கான உண்மையான சட்டப்பூர்வ அணுகுமுறை... இதை அரசியல் எனக் கூறி அலட்சியம் செய்வது தவறான விடயம்…

👉“போராட்டம் செய்பவர் செயல்முறையைப் புரிந்து செய்கிறார்; விமர்சனம் செய்பவர் அரசியலை மட்டுமே புரிந்துள்ளார்..”

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

மீனவர்களின் பாதுகாப்பு ஒரு கூட்டுப் பொறுப்பு... மாநில அரசு தலையிட்டு மத்திய அரசை நடவடிக்கை எடுக்க வற்புறுத்தினால் மட்டுமே, மீனவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்…

ஸ்டாலின் மோடிக்கு எழுதிய கடிதம் எல்லாம் லீவு லெட்டரா அல்லது லவ் லெட்டரா?

கடிதம் மூலம் தலையிடுங்கள் என கேளாமலே மத்திய அரசு தலையிடலாம் ஏன் என்றால் இந்திய சட்டப்படி நிலம் மட்டுமே மாநிலத்தின் ஆளுகை, Indian territorial waters எனப்படும் கடல்பகுதி முழுக்க முழுக்க மத்திய அரசின் கீழ், இதை navy, coast guard, customs போன்ற மத்திய அரசு ஏஜென்சிகள்தான் பராமரிக்கும்.

அப்படி இருந்தும், தமிழகமுதல்வர் (எந்த கட்சியாயினும்) கடிதம் மூலம் கேட்டும் மத்திய அரசு தலையிடுவது இல்லை.

31 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

மத்திய அரசு மட்டும் இதை கவனிக்க வேண்டும் என்பதில்லை… மாநில அரசும் மத்திய அரசு மேல் தொடர்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டும்… தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும்போது, தமிழக அரசு மத்திய அரசை உடனடியாக தலையிடச் செய்ய வேண்டியது அவர்களின் கடமையாகும்…

இதை திமுக, அதிமுக அரசுகள் தவறாமல் செய்தே வந்தனன்வருகிறன.

இதுக்கு மேல் என்ன மோடி வீட்டு கூரையில் ஏறி நின்றா கத்த முடியும்.

Edited by goshan_che

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.