Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, island said:

@goshan_che இளையராஜாவின் இந்த சிம்பொனி பற்றிய உலக இசை ஊடகங்களில் வெளிவந்த கட்டுரைகள் உள்ளனவா? கூகிள் தேடலில் அகப்படவில்லை.

Royal Philharmonic Orchestra விந்தளத்தின் எதிர்வரும் நிகழ்வுகள் பகுதியில் ஒரு விபரிப்பு இருந்தது.

வேறு எதுவும் என் கண்ணில் படவில்லை.

ஆராய்ச்சி கட்டுரைகள் போல் இதுவும் கட்டாயம் peer review வுக்கு உட்படுத்தபடும் என நினைக்கிறேன்.

சுப்புடு மாரி யாராவது எழுதி இருக்க கூடும்.

கண்ணில் படவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, goshan_che said:

Royal Philharmonic Orchestra விந்தளத்தின் எதிர்வரும் நிகழ்வுகள் பகுதியில் ஒரு விபரிப்பு இருந்தது.

வேறு எதுவும் என் கண்ணில் படவில்லை.

ஆராய்ச்சி கட்டுரைகள் போல் இதுவும் கட்டாயம் peer review வுக்கு உட்படுத்தபடும் என நினைக்கிறேன்.

சுப்புடு மாரி யாராவது எழுதி இருக்க கூடும்.

கண்ணில் படவில்லை.

நன்றி. இளையராஜாவின் பாடல்களை நானும் விருப்பத்துடன் ரசிப்பவன் தான். Spotify ல் இளையராஜாவின் பாடல்களின் playlist வைத்திருக்கிறேன். அதனால் தமிழ் நாட்டு ஊடகங்களில், “மொசாட், பீத்தோவன் வரிசையில் உலகம் தலையில் தூக்கி கொண்டாடும் இளையராஜா” என்பது போன்ற செய்திகளை பார்தததால் உலக ஊடகங்களில் இவை தலைப்பு செய்தியாக இது வந்திருக்க வேண்டுமே என்ற பேராவலுடன் என்று தேடினால் எதையுமே காணவில்லை. தமிழக ஊடகங்களின் சுய தம்பட்டங்ங்களில் குளிர் காயாது உலக ஊடகங்களில் எமது பெருமைகள் கொண்டாடப்படுவதே உண்மையான பெருமை.

கடந்த ஆண்டு என்று நினைக்கிறேன் ஒரு இசை நிகழ்வுக்காக அவுஸ்திரேலியா சென்ற இளையராஜா தனது பயணத்திற்காக ஶ்ரீலங்கன்ஸ் எயர்லைன்ஸ் விமானத்தைப் பயன்படுத்தி இருந்தார். அந்த விமான நிறுவனம் அவருக்கு தகுந்த மரியாதையுடனான வரவேற்பை கொடுத்ததுடன் அதை தமது நிறுவன பக்கத்திலும் பிரசுரித்து தெற்காசியாவின் ஒரு இசை ஜாம்பவான் (Music legend) எமது விமானத்தில் பயணம் செய்வது எமக்கு பெருமை தருவதாக குறிப்பிட்ட போது ஒரு தமிழனாக பெருமையாக இருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

எழுத்தாளர் சாரு இந்த வாரம் இந்த நிகழ்வு பற்றி இரண்டு கட்டுரைகள் எழுதியிருக்கின்றார். இளையராஜாவின் மீதான சாருவின் பார்வை முன்னரே தெரிந்தவர்களுக்கு 'இசையும் சமூகமும்' என்னும் கட்டுரையால் அதிர்ச்சி ஏதும் ஏற்படாது. அவரின் தளத்தில் பல கட்டுரைகள் இதே பார்வையுடன் இருக்கின்றன.

'ஸிம்ஃபனி' என்னும் கட்டுரை மிகச் சிறியது, ஆனால் முக்கியமானது.

லிடியன் நாதஸ்வரம் என்ற 20 வயதுகள் ஆன தமிழ் இளைஞர், இசைக் கலைஞர் அடுத்த வருடம் சர்வதேச இசை நாள் அன்று தான் ஒரு ஸிம்ஃபனி அரங்கேற்றப் போவதாகச் சொல்லியிருக்கின்றார். இணையத்தில் போய்க் கொண்டிருக்கும் லிடியன் - இளையராஜா உரசல்களின் பின்னணி இதுவே.

இசையும் சமூகமும்:

https://charuonline.com/blog/?p=15463

ஸிம்ஃபனி:

https://charuonline.com/blog/?p=15461

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, island said:

நிறுவன பக்கத்திலும் பிரசுரித்து தெற்காசியாவின் ஒரு இசை ஜாம்பவான் (Music legend) எமது விமானத்தில் பயணம் செய்வது எமக்கு பெருமை தருவதாக குறிப்பிட்ட போது ஒரு தமிழனாக பெருமையாக இருந்தது.

ஜாம்பவான் ஊட்டாண்ட போனதும்…

தன்னை வைத்து இலவச விளம்பரம் செய்துகொண்டார்கள் என வக்கீல் நோட்டீஸ் அனுப்பாதது சிறிலங்கன் ஏர்லைன் பூர்வ ஜென்ம புண்ணியம் 🤣

4 hours ago, ரசோதரன் said:

எழுத்தாளர் சாரு இந்த வாரம் இந்த நிகழ்வு பற்றி இரண்டு கட்டுரைகள் எழுதியிருக்கின்றார். இளையராஜாவின் மீதான சாருவின் பார்வை முன்னரே தெரிந்தவர்களுக்கு 'இசையும் சமூகமும்' என்னும் கட்டுரையால் அதிர்ச்சி ஏதும் ஏற்படாது. அவரின் தளத்தில் பல கட்டுரைகள் இதே பார்வையுடன் இருக்கின்றன.

'ஸிம்ஃபனி' என்னும் கட்டுரை மிகச் சிறியது, ஆனால் முக்கியமானது.

லிடியன் நாதஸ்வரம் என்ற 20 வயதுகள் ஆன தமிழ் இளைஞர், இசைக் கலைஞர் அடுத்த வருடம் சர்வதேச இசை நாள் அன்று தான் ஒரு ஸிம்ஃபனி அரங்கேற்றப் போவதாகச் சொல்லியிருக்கின்றார். இணையத்தில் போய்க் கொண்டிருக்கும் லிடியன் - இளையராஜா உரசல்களின் பின்னணி இதுவே.

இசையும் சமூகமும்:

https://charuonline.com/blog/?p=15463

ஸிம்ஃபனி:

https://charuonline.com/blog/?p=15461

அந்த சின்ன கட்டுரையில் பல இசைகளை கேட்க்ககூடிய லிங்குகள்.

உங்களுக்கும் சாருவுக்கும் நன்றி.

Cam girls மாதிரி ஜிபே டீடெய்லை எல்லாம் கொடுக்கும் அளவுக்கு சாரு இறங்கி விட்டது நெருடலாக உள்ளது.

நாங்கள்தான் பிழை விடுகிறோமோ? தெரிந்தது, பாதி தெரிந்தது, தெரியாதது பற்றி எல்லாம் யாழில் இலவசமாக எழுதி🤣.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, goshan_che said:

Cam girls மாதிரி ஜிபே டீடெய்லை எல்லாம் கொடுக்கும் அளவுக்கு சாரு இறங்கி விட்டது நெருடலாக உள்ளது.

நாங்கள்தான் பிழை விடுகிறோமோ? தெரிந்தது, பாதி தெரிந்தது, தெரியாதது பற்றி எல்லாம் யாழில் இலவசமாக எழுதி🤣.

🤣................

சாரு இந்த வாரம் இன்னோரு கட்டுரையில் கிட்டத்தட்ட இப்படி எழுதியிருந்தார்:

என்னுடைய 75 புத்தகங்கள் இப்பொழுது விற்பனையில் இருக்கின்றது. விற்பனையின் மூலம் எனது பங்காக வருடத்திற்கு ஒரு இலட்சத்திற்கும் கொஞ்சம் அதிகமாக வருகின்றது. மாத வருமானம் பத்தாயிரம் ரூபாய் சொச்சம். இதை வைத்துக்கொண்டு நான் சென்னையில் எப்படி வாழ்வது....................... நான் இந்தச் சமூகத்திற்காகத்தானே என்னை வருத்தி எழுதிக் கொண்டிருக்கின்றேன். நீங்கள் தான் என்னைப் பார்க்கவேண்டும்..................தெருமுனையில் இஸ்திரி போடுபவரே மாதம் இருபதினாயிரத்தை விட அதிகமாக பெறுகின்றார்.

இந்த விடயத்தில் சாருவில் அன்றிலிருந்து இன்றுவரை எந்த மாற்றமும் இல்லை.

தமிழில் முழுநேர எழுத்தாளராக வாழவே முடியாது, விதிவிலக்கு ஜெயமோகன் போன்ற ஓரிருவர், அதுவும் விட்டுக் கொடுப்புடன் சினிமாவில் பணியாற்றுவதால்........ தமிழில் இலக்கியம் எழுதி சம்பாதிக்கவே முடியாது.......

முடிந்தால் இலவசமாக எழுதுவதே உள்ளவற்றில் நல்ல தெரிவு.................🤣.

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ரசோதரன் said:

உண்மைதான்.

ஏதாவது ஒரு சஞ்சீகையோடு வாரம் இத்தனை பக்கத்தை நிரப்புவேன் என டீலுக்குகாவது போகாமல் சமாளிக்க முடியாது.

தமிழில் ghost writers போல் இன்னொருவருக்காக எழுதி உழைக்க மார்கெட் உள்ளதா?

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

ரஜேந்தர், சங்கர் கணேஷ், சிற்பி இவர்களின் படைப்புகள் அற்புதம். பலர் இதை ராஜா பாட்டு என்றே நினைப்பார்கள்.

அதே போல் ராஜா, ரஹ்மான் ஏனோ தானோ என போட்ட பாடல்களும் உண்டு.

எனக்கு இவர்கள் எல்லோரையும் விட s.a rajkumar பாடல்கள் வெறியன் நான்..

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

தமிழில் ghost writers போல் இன்னொருவருக்காக எழுதி உழைக்க மார்கெட் உள்ளதா?

தமிழ் இலக்கிய உலகில் அறவே இல்லை என்று நினைக்கின்றேன்.

ஆனால் தமிழ்ச் சினிமா உலகில் இப்படி இருக்கின்றார்கள் என்று கேள்விப்பட்டிருக்கின்றேன். இப்பொழுது இயக்கம் என்று மட்டும் போடும் இயக்குனர்களே கிடையாது................ எழுத்து & இயக்கம் என்று போடுபவர்களே எல்லோரும். இந்த எழுத்து எனப்படும் கதை & திரைக்கதையின் முதல் பிரதியில் உதவி இயக்குனர்களின் பங்கில்லை. வேறு சிலரே மறைவில் இருந்து எழுதிக் கொடுக்கின்றார்கள் போல..............

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

எனக்கு இவர்கள் எல்லோரையும் விட s.a rajkumar பாடல்கள் வெறியன் நான்..

ஆம் இந்த லிஸ்டில் சேர வேண்டியவர்தான் இவரும்.

எஸ் ஏ ராஜ்குமார் பிடிக்கும் எண்டால் உங்களுக்கு மரகதமணியும் பிடிக்கும்.

வித்யாசாகர், ஹாரிஸ் ஜெயராஜ், தேவா…அத்தோடு எஸ் பி பி (சிகரம்), ஹரிகரன் (காதல் வேதம் ஆல்பம்) - உண்மையில் புண்ணியம் செய்த காதுகள் நம் காதுகள்.

எனது இசை ரசனை கொஞ்சம் bipolar நோய் போல🤣

ஒரு நாள் ரஹ்மானை கேட்க எரிச்சலாக இருக்கும் … அன்று பட்டுகோட்டையார், கண்ணதாசன், அப்படியே ஓ ரசிக்கும் சீமானே, பம்பாய் சகோதரிகள், சஞ்சய் சுப்ரமணியம் என ஜூக்பாக்ஸ் ஓடும்.

மறுநாள் நானும் ரஹ்மானும் மட்டும் ஒரு லோங் டிரைவ், இடையில் ஆங்கில பாடகர்களும் ஏறி கொள்வார்கள். ஹாரிசும் ஓடி வந்து தொத்திகொள்வார்.

மூன்றாம் நாள் ராஜா, விஜயகாந்த், ராமராஜன், பிரபு நேரே வண்டி கிராமத்துக்கு போய்விடும்.

வாக்கிங் போகும் போது அனிருத் அநேகம் கூடவே சத்தம் போட்டுகொண்டே வருவார். சில நாட்களில் அதுவே இரைச்சலாக இருக்கும், திரத்தி விடுவேன். சிட் சிறிராமை சேர்த்து கொள்வேன்.

இப்படி ஒவ்வொருவரும் ஒரு லூப்பில் வந்து கொண்டே இருப்பார்கள்.

18 minutes ago, ரசோதரன் said:

தமிழ் இலக்கிய உலகில் அறவே இல்லை என்று நினைக்கின்றேன்.

ஆனால் தமிழ்ச் சினிமா உலகில் இப்படி இருக்கின்றார்கள் என்று கேள்விப்பட்டிருக்கின்றேன். இப்பொழுது இயக்கம் என்று மட்டும் போடும் இயக்குனர்களே கிடையாது................ எழுத்து & இயக்கம் என்று போடுபவர்களே எல்லோரும். இந்த எழுத்து எனப்படும் கதை & திரைக்கதையின் முதல் பிரதியில் உதவி இயக்குனர்களின் பங்கில்லை. வேறு சிலரே மறைவில் இருந்து எழுதிக் கொடுக்கின்றார்கள் போல..............

பாலசந்தருக்கே அனந்து இப்படிதான் என்பார்கள். ஆனால் திரைமறைவில்.

பாரதிராஜா வெளிப்படையாக பாக்யராஜ் போன்றோரின் திரைக்கதை, கதையைத்தான் பாவிதார், டைட்டிலிலும் போட்டார் என நினைக்கிறேன்.

ஒரு பேட்டியில் வேதம் புதிது கதை கூட யாரோ மதுரையில் அதை நாடகமாக போட்டவரின் கதை என பாக்யராஜ் சொல்லி இருப்பார்.

  • கருத்துக்கள உறவுகள்

சிம்பொனி அரங்கில் நடந்தது என்ன? அணுஅணுவாக விளக்கிய இளையராஜாவின் தீவிர ரசிகர்!

FotoJet-24-5.jpg

இளையராஜாவின் சிம்பொனி நிகழ்வை நேரில் காண ரவி பழனிவேலு என்பவர் அமெரிக்காவில் இருந்து லண்டனுக்கு சென்றிருந்தார். இளையராஜாவின் தீவிர ரசிகரான இவர் அரங்கத்தில் தனக்கு கிடைத்த அனுபவத்தை, தனது நண்பரான மகேந்திரன் என்பவருக்கு குரல் பதிவு வழியாக சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

அதனை அப்படியே தன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் மகேந்திரன்.

அதில் கூறியுள்ளதாவது, “கண்டேன் ராஜாவை. கேட்டேன் சிம்பொனியை. பரவச அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்தும் கொள்வதில் மகிழ்ச்சி. நிகழ்வு ஆரம்பமானவுடன் ரஷ்யன் சிம்பொனி இசை துணுக்கு ஒன்றை வாசித்து காண்பித்தார்கள். அதன் பிறகு ராஜா சார் மேடைக்கு வந்தார். வாத்திய கலைஞர்களை தலைமையேற்று நடத்தும் கண்டக்டர் மைக்கேல், ராஜாவிடம் அனுமதி பெற்று நிகழ்ச்சியை ஆர்மபித்தார். ராஜாவின் சிம்பொனி 4 பாகங்களாக வாசிக்கப்பட்டது. fan experience in ilayaraja symphony

ஒவ்வொரு பாகமும் 15 நிமிடம் நேரம் வரை வாசிக்கப்பட்டது. ஊசி விழுந்தால் கூட சத்தம் கேட்கும் அளவுக்கு நிசப்தமாக இருந்த அரங்கத்தில் ராஜாவின் இசை அங்கிருந்த அனைவரையும் ஊடுருவியது எனலாம். வாத்திய கலைஞர்கள் வாசிக்க வாசிக்க என்னில் எழுந்த உணர்வுகள் வார்த்தைகளால் விவரிக்க முடியாதவை.ஒவ்வொரு பாகம் வாசித்து முடித்தவுடன் எழுந்த கைதட்டல் அடங்க வெகு நேரமானது. அந்த கைதட்டலை கேட்கும் போதெல்லாம் உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் மேலிட ராஜாவை பார்த்துக் கொண்டிருந்தேன்.

FotoJet-2025-03-09T153125.983-1-1024x597

மூன்றாவது பாகம் ராஜாவின் உச்சம். மேடையில் இருந்த 77 இசைக் கலைஞர்களுக்கும் வேலை கொடுத்திருக்கிறார். இதை எப்படி ஒரு மனிதர் எழுதியிருக்க முடியும் என்று ஆச்சரியப்படாதவர்கள் இருக்க முடியாது. அந்த பாகத்தை கேட்கும் போது தான் ராஜாவை நாம் சினிமா இசை எனும் கூண்டுக்குள் வைத்திருக்கிறோம் என்று தோன்றியது.

ராஜா உலகம் எங்கும் பறக்க வேண்டிய ஒரு இசைப்பறவை. சினிமா பாடல்களை கொடுத்து 5 நிமிடத்திற்குள் ஒரு பாடல், அதில் 2 பி ஜி எம் என கூண்டுக்குள் இருந்த ஒரு பறவை, இன்று இந்த பிரபஞ்சத்தை ஆள கிளம்பி விட்டது என்றே தோன்றியது. மூன்றாவது பாகம் வாசிக்கும் போதும் திகைத்திருந்த ரசிகர் கூட்டம், அது முடிந்தவுடன் உச்சபட்ச ஆச்சரியத்தில் கைதட்டியது. பலத்த கைதட்டல் முடிய நேரம் ஆனது. அப்போதும் நான் உணர்வுகளின் பிடியில் இருந்தேன்.

நான்காவது பாகமும் அற்புதம். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நீடித்த இசை நிகழ்ச்சியில் எப்போதும் போல் அந்த மேடையிலேயே அமர்ந்து அவர் எழுதிய நோட்ஸ்களை கையில் வைத்து கொண்டு, அனைத்தும் சரியாக வாசிக்கப்படுகிறதா என்று சோதித்துக் கொண்டே இருந்தார் ராஜா. லைவ் கான்சர்டுகளில் 3 மணி நேரம் அசராமல் நின்று ஒவ்வொரு வாத்திய கலைஞர்களையும் தன் கண்ணசைவில் ஆட்டுவிக்கும் ராஜாவை நமக்கு தெரியாதா என்ன?

FotoJet-2025-03-09T164616.207-1024x597.j

நிகழ்வு முடிந்தவுடன் அரங்கமே எழுந்து கைதட்டியது. கண்டக்டரும் ராஜாவும் தலைகுனிந்து அந்த பாராட்டுகளை ஏற்றுக் கொண்டனர். ராஜாவை சில வார்த்தைகள் பேசுமாறு அழைத்தார் மைக்கேல்.

சிம்பொனியை நான் விளக்க செய்ய முடியாது, நீங்கள் எக்ஸ்பீரியன்ஸ் செய்வது தான் சரியாக இருக்கும்” என்று தனக்கே உரிய பாணியில் சொன்னார். அதன் பிறகு சிறிய இடைவேளை விடப்பட்டது. சிம்பொனி நிகழ்வில் ஒரு சர்ப்ரைஸ் இருப்பதாக ஏற்கனவே ராஜா சொல்லியிருந்தார்.

இடைவேளைக்கு பிறகு ராஜாவின் அதி அற்புத சினிமா பாடல்களை ராயல் ஆர்கெஸ்டரா குழுவினர் வாசிக்க கேட்கும் பாக்கியம் கிடைத்தது. எத்தனையோ ஆயிரம் முறை கேட்ட பாடல்கள் நேற்று புதியதாக கேட்டன.fan experience in ilayaraja symphony

மடை திறந்து, ராஜா ராஜாதி ராஜனிந்த ராஜா, தும்பி வா, கண்ணே கலைமானே, பூவே செம்பூவே பாடல்கள் தொடர்ச்சியாக வாசிக்கப்பட்டது. இதை கேட்கும் போது தான் தெரிந்தது, இந்த சிம்பொனியை நமக்கு ராஜா எப்போதோ கொடுத்து விட்டார் என்று. அதன் பிறகு முடிவடையாத சிம்பொனி என்ற தலைப்பில் மீண்டும் ஒரு இசை விருந்து ஆரம்பித்தது. அது என்ன பாடல் தெரியுமா? புதிய வார்ப்புகள் படத்தில் இடம் பெற்ற “இதயம் போகுதே” பாடல். ” டேய் உங்களுக்கெல்லாம் 45 வருஷத்துக்கு முன்னாடியே நான் சிம்பொனியை கொடுத்திருக்கேண்டா” என்று சொல்லாமல் சொல்கிறார் என்று நினைத்துக் கொண்டேன்.

FotoJet-2025-03-09T164715.077-1024x597.j

ஜெயா டிவி நிகழ்ச்சி ஒன்றில் “சிம்போனினா என்ன சார்” என்று பிரகாஷ் ராஜ் கேட்கும் போது, இந்தப் பாடலைத்தான் வாசித்து காண்பித்தது நினைவு வந்தது. அப்படியானால் என் எண்ணம் சரிதான். அவர் சிம்பொனி செய்து 45 வருடங்கள் ஆகிவிட்டது. நமக்கு தான் புரியவில்லை. இதயம் போகுதே பாடல் வாசிக்கும் போதே மெய் சிலிர்த்து போனேன். கூடுதல் போனஸாக அவர்கள் வாசிக்க ராஜா பாட ஆரம்பித்தார். அதுவும் ஆர்கெஸ்டரா வாசிப்பதற்கு ஏற்ப பாடியது ராஜாவின் திறமையை பறைசாற்றியது.

நிகழ்ச்சி டிஜிட்டலில் வரும் போது மறக்காமல் பார்த்து விடுங்கள். அதன் பிறகு ராஜாவின் ஐகானிக் பிஜிஎம்கள் வாசிக்கப்பட்டது. ஏற்கனவே கேட்டது தான் என்றாலும், 77 இசை விற்பன்னர்கள் சேர்ந்து வாசிக்க கேட்கும் போது, பிரம்மாண்டமாக இருந்தது. “இன்று என் வாழ்வில் மிக முக்கியமான நாள்” என்று ராஜா சொன்ன போது, ராஜா சாருடைய எதிர்பார்ப்பு தெரிந்தது. அவரது பேச்சில் மிகுந்த மனநிறைவு தெரிந்தது.fan experience in ilayaraja symphony

நமது கலாச்சாரப்படி இசை நிகழ்ச்சியை கண்டக்ட் செய்த மைக்கேல் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செய்தார். அதன் பிறகு வாசித்த 77 கலைஞர்களையும் பொன்னாடை போர்த்தி கவுரவிக்க இருப்பதாக தெரிவித்தார். இசை நிகழ்ச்சி முடிந்து அறைக்கு வந்த பின்னும் பிரமிப்பு அடங்கவில்லை. ராஜா சார் வாழும் காலத்தில் நாமும் வாழ்வதே நமக்கு கொடுப்பினை தான். கோடிக்கணக்கான ராஜாவின் ரசிகர்களின் பிரதிநிதியாக இந்த நிகழ்ச்சியை பார்த்த அனுபவத்தை உங்கள் முன் பகிர்ந்து கொள்கிறேன்”

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. https://minnambalam.com/cinema/fan-experience-in-ilayaraja-symphony/

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, island said:

கடந்த ஆண்டு என்று நினைக்கிறேன் ஒரு இசை நிகழ்வுக்காக அவுஸ்திரேலியா சென்ற இளையராஜா தனது பயணத்திற்காக ஶ்ரீலங்கன்ஸ் எயர்லைன்ஸ் விமானத்தைப் பயன்படுத்தி இருந்தார். அந்த விமான நிறுவனம் அவருக்கு தகுந்த மரியாதையுடனான வரவேற்பை கொடுத்ததுடன் அதை தமது நிறுவன பக்கத்திலும் பிரசுரித்து தெற்காசியாவின் ஒரு இசை ஜாம்பவான் (Music legend) எமது விமானத்தில் பயணம் செய்வது எமக்கு பெருமை தருவதாக குறிப்பிட்ட போது ஒரு தமிழனாக பெருமையாக இருந்தது.

👍

எனக்கும் நினைவில் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

இளையராஜா தனது பாடல்களில் 6/8 , 3/4 தாளத்தில் பாடல்களை அமைத்திருக்கிறார் என கருதுகிறேன் (மென்மையான பாடல்கள்), ரகுமான் பெரும்பாலும் 4/4 தாளப்பாடல்களாக இருந்தாலும் அவரது மென்மையான பாடல்கள் 6/8 தாளத்தில் இருக்கின்றது, அண்மையில் வந்த மாமன்னன் திரைப்படத்தில் வந்த நெஞ்சமே நெஞ்சமே பாடல் 6/8 என கருதுகிறேன்.

பொதுவாக மென்மையான இசை விரும்பிகள் குறித்த காலப்பகுதியினராக இருக்கிறார்கள், அதனை அடுத்துவரும் காலப்பகுதியினர் வெறுவகையான இசையினை விரும்புகிறார்கள், அதனால் பெரும்பான்மையான இரண்டு தலைமுறை தற்போதய தலைமுறையினரை விட அதிகம் என்பதால் ஒரு குறிப்பிட்ட தரப்பு இசை அமைப்பாளர்கள் கொண்டாடப்படுகிறார்கள், காலப்போக்கில் இன்னொருவர் வருவார் என கருதுகிறேன்.

எனக்கும் மென்மையான இசை பிடிக்கும் ஆனால் பிராண்ட் பற்றிய கவலை எப்போதும் இருந்ததில்லை(எனக்கு இசை பற்றி எதுவும் தெரியாது).

4/4 தாளம் ஒரு பொதுவானது பெரும்பாலும் பயன்படுத்தப்படுவது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

484652666_1091958326280358_6106467053813

485611059_1091958376280353_3422335580953

485106402_1091958382947019_8171250459450

484626817_1091958366280354_2032920658768

இசைஞானி இளையராஜாவை சந்தித்தது பெருமை மற்றும் மகிழ்ச்சி என இந்திய பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு இளையராஜா அவர்களை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இசைஞானியான அவரது மேதைமை நமது இசை மற்றும் கலாச்சாரத்தில் மகத்தான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

எல்லா வகையிலும் முன்னோடியாக இருக்கும் அவர், சில நாட்களுக்கு முன் லண்டனில் தனது முதலாவது மேற்கத்திய செவ்வியல் சிம்பொனியான வேலியண்ட்டை வழங்கியதன் மூலம் மீண்டும் வரலாறு படைத்துள்ளார். இந்த நிகழ்ச்சி, உலகப் புகழ்பெற்ற ராயல் பில்ஹார்மோனிக் இசைக்குழுவுடன் இணைந்து நடத்தப்பட்டது. இந்த முக்கியமான சாதனை, அவரது இணையற்ற இசைப் பயணத்தில் மற்றொரு அத்தியாயத்தைக் குறிக்கிறது - உலக அளவில் தொடர்ந்து மேன்மையுடன் விளங்குவதை இது எடுத்துக்காட்டுகிறது.”

Vaanam.lk

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.