Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 2

15 MAR, 2025 | 05:12 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) 

இராணுவத்தில் ஒருசில படையினர் ஏதேனும் குற்றச்செயல்களில் ஈடுபட்டிருக்கலாம். இதனை முழு இராணுவத்தினர் மீதும் தொடர்புபடுத்தி இராணுவத்தினர்   யுத்தக் குற்றத்திலும், பாலியல் துஷ்பிரயோக செயற்பாடுகளிலும் ஈடுபட்டனர் என்று  குற்றஞ்சாட்டுவதை ஏற்க முடியாது. சாணக்கியன் முன்வைத்த குற்றச்சாட்டுக்கள்  காலத்துக்கு பொருத்தமற்றவையென  ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான  நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (15)  நடைபெற்ற  2025 ஆம் ஆண்டுக்கான  வரவு, செலவுத்திட்டத்தின்  வெளிவிவகாரம்,  வெளிநாட்டு வேலைவாய்ப்புகள்  மற்றும்  சுற்றுலாத்துறை அபிவிருத்தி  அமைச்சு மீதான விவாதத்தில்  உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

ராஜபக்‌ஷக்களை ரணில் விக்கிரமசிங்கமே பாதுகாத்தார் என்று  பாராளுமன்ற  உறுப்பினர் சாணக்கியன் குறிப்பிட்டிருந்தார்.எங்களுக்கு எதிராக  ரணில் விக்கிரமசிங்க செயற்பட்டார்.

அதிகளவில் வழக்குகளை தாக்கல் செய்தார். நல்லாட்சி அரசாங்கத்தில்  ஊழல் ஒழிப்பு அலுவலகத்தின் செயலாளராக  பதவி வகித்த   ஆனந்த விஜேபால  தற்போது  பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக செயற்படுகிறார். நீங்களே அந்த வழக்குகளை தாக்கல் செய்தீர்கள். அவற்றில் நாங்கள் நீதிமன்றத்தினால்  நாங்கள் விடுதலையாகியுள்ளோம்.

கடந்த காலங்களில்  ரணில் விக்கிரமசிங்க   நாட்டின் இறையாண்மைக்ககு எதிராக செயற்பட்டார். ஆனால் தற்போது  சர்வதேச ஊடகங்களில்  அவர் நாட்டை காட்டிக்கொடுக்காமை தொடர்பில் மகிழச்சியடைகின்றோம்.

எமது அரசியல் மாற்றங்கள் என்பது வேறு விடயமாகும். நம்மிடையே நட்புறவுகள் உள்ளன. 2005இல் ஒரே மேடையில் இருந்தோம். 2015 இல் நீங்களும் ரணிலும் ஒரே மேடையில் இருந்தீர்கள். இப்போது பட்டலந்த அறிக்கையை நீங்களே முன்வைக்கின்றீர்கள். அன்று அந்த அறிக்கையை மறைத்து வைத்துக்கொண்டு இருந்தீர்கள்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த  ராஜபக்‌ஷவுடன் 2005இல் உடன்படிக்கை கைச்சாத்திடும் போது குறித்த அறிக்கையை பாராளுமன்றத்தில் முன்வைக்க வேண்டும் என்று கூறவில்லை. முன்னாள் ஜனாதிபதி  சந்திரிக்கா பண்டாரநாயக்கவின்  அமைச்சரவையிலும் இருந்தீர்கள். அப்போதும் பட்டலந்த அறிக்கை தொடர்பில் பேசவில்லை. ஆனால் இப்போது சர்வதேச ஊடகம் கேட்டதும் அந்த அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளீர்கள்.

நாங்கள் நாட்டை பாதுகாக்க வேண்டும். நாட்டின் முன்னாள் தலைவர் ஒருவர் வெளிநாட்டுக்கு சென்று எமது இராணுவத்தினர் யுத்தக் குற்றத்தில் ஈடுபட்டனர் என்பதனை பகிரங்கமாக ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு சென்றால் மஹிந்த ராஜபக்ஷவுக்கோ, ரணில் விக்கிரமசிங்கவுக்கோ பாதகமாக அமையாது, முழு நாடும்  நெருக்கடிக்குள்ளாக நேரிடும்.

பாராளுமன்ற உறுப்பினர்  சாணக்கியன்,  இராணுவத்தினர் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றார். இராணுவத்தினர் யுத்தக் குற்றத்தில் ஈடுபட்டனர் என்பது மட்டுன்றி பாலியல் வன்கொடுமைகளிலும் ஈடுபட்டதாகவும் கூறுகின்றார். ஏதேனும் சம்பமொன்று முன்னாள் இராணுவ சிப்பாயால் நடந்திருக்கலாம். 

ஒரு நபரின் செயற்பாட்டை முழு இராணுவத்தினருடனும் தொடர்புபடுத்த வேண்டாம். பாதாள கும்பல் தொடர்பில் ஏதேனும் பிரச்சினை இருந்தால் அதில் தலையீடு செய்து தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம். அந்த நடவடிக்களை எடுக்கும் போது நாங்கள் உங்களை பாதுகாக்கின்றோம்.

பாதாள உலக கும்பலை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் போது  பிலிப்பைன்ஸில் நடந்ததை போன்று மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக உங்களை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல நாங்கள் இடமளிக்கப் போவதில்லை. இதனால் இறுதியில் நாடே வீழ்ச்சியடையும்.

இங்கே சாணக்கியன்  முன்வைத்த குற்றச்சாட்டுகள் காலத்திற்கு பொருத்தமானது அல்ல. இராணுவத்தினர் அன்று யுத்தம் செய்தனர். அதன்போது ஏதேனும் சம்பவம் இடம்பெற்றிருந்தால் அது தொடர்பில் விசாரணை செய்வதல்ல பிரச்சினை,  இதனை அரசியல் விடயமாக மாற்றி, வருடங்கள் பலவற்றுக்கு பின்னரும் இதுபற்றி கூறிக்கொண்டு போனால் 1988 இல் நடந்த சம்பவத்தை 2028 இலும் கதைப்போம் என்றால், 2009இல் நடந்தவற்றை 2048 இலும் கதைக்க தயாராவோம் என்றால் அதனூடாக இந்த சமுகத்தில் வெறுப்புணர்வு உருவாகுவதை நிறுத்த முடியாது. வெறுப்புணர்வற்ற அரசியலை இங்கே கட்டியெழுப்ப வேண்டுமாயின் அரசு என்ற விடயத்தில் நாம் எல்லோரும் ஒரே நிலைப்பாட்டில் இருக்க வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/209297

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:

இராணுவத்தினர் மீதும் தொடர்புபடுத்தி இராணுவத்தினர்   யுத்தக் குற்றத்திலும், பாலியல் துஷ்பிரயோக செயற்பாடுகளிலும் ஈடுபட்டனர் என்று  குற்றஞ்சாட்டுவதை ஏற்க முடியாது.

large.IMG_8213.jpeg.891b73a2646bb1386102

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:

இங்கே சாணக்கியன்  முன்வைத்த குற்றச்சாட்டுகள் காலத்திற்கு பொருத்தமானது அல்ல. இராணுவத்தினர் அன்று யுத்தம் செய்தனர். அதன்போது ஏதேனும் சம்பவம் இடம்பெற்றிருந்தால் அது தொடர்பில் விசாரணை செய்வதல்ல பிரச்சினை,  இதனை அரசியல் விடயமாக மாற்றி, வருடங்கள் பலவற்றுக்கு பின்னரும் இதுபற்றி கூறிக்கொண்டு போனால் 1988 இல் நடந்த சம்பவத்தை 2028 இலும் கதைப்போம் என்றால், 2009இல் நடந்தவற்றை 2048 இலும் கதைக்க தயாராவோம் என்றால் அதனூடாக இந்த சமுகத்தில் வெறுப்புணர்வு உருவாகுவதை நிறுத்த முடியாது.

அது சரி ...சிங்களவர்களுக்கு நட‌ந்தால் அது சித்திரவதை படு கொலை ....

தமிழர்களுக்கு நடந்தால் அது தேசிய பாதுகாப்பு

அதை தான் நாங்களும் சொல்கின்றோம்...1958,77,83....நடந்த சம்பவங்களுக்கு உடனடி தீர்வை நீங்கள் வழங்கியிருந்தால் இன்று நீங்களும் உங்கன்ட அப்பாவும் இங்கு அரசியல் பேசும் நிலை வந்திருக்காது

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஏராளன் said:

பாராளுமன்ற உறுப்பினர்  சாணக்கியன்,  இராணுவத்தினர் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றார். இராணுவத்தினர் யுத்தக் குற்றத்தில் ஈடுபட்டனர் என்பது மட்டுன்றி பாலியல் வன்கொடுமைகளிலும் ஈடுபட்டதாகவும் கூறுகின்றார். ஏதேனும் சம்பமொன்று முன்னாள் இராணுவ சிப்பாயால் நடந்திருக்கலாம். 

உங்களின் இராணுவம் தந்த சாட்சிகளை தானே chanel 4 வெளியிட்டது. அதற்கு என்ன சொல்ல போகிறீர்கள்??

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஏராளன் said:

ஒரு நபரின் செயற்பாட்டை முழு இராணுவத்தினருடனும் தொடர்புபடுத்த வேண்டாம்.

ஒரு நபரல்ல, பல நபர்கள் பல குற்றங்களில் சிக்கியிருக்கிறார்கள். "ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்." எல்லா தமிழர்களையும் புலி என்று அடையாளப்படுத்தி கொன்று குவிக்கும்போது எங்கே போனது உந்த வாதம்?

5 hours ago, ஏராளன் said:

அதிகளவில் வழக்குகளை தாக்கல் செய்தார்.

அது உங்களை புனிதர்களாக்குவதற்கே!

5 hours ago, ஏராளன் said:

இராணுவத்தினர் அன்று யுத்தம் செய்தனர். அதன்போது ஏதேனும் சம்பவம் இடம்பெற்றிருந்தால் அது தொடர்பில் விசாரணை செய்வதல்ல பிரச்சினை, 

அதை நீங்கள் யாராவது செய்திருந்தால், இங்கு யாரும் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்க மாட்டார்கள். ஆனால் உங்கள் ஆதங்கமெல்லாம் இவற்றை பேசிக்கொண்டிருப்பதால், உங்கள் எதிர்கால அரசியல் கனவு சிதைக்கப்படுகிறேதே என்பதேயாம்.

5 hours ago, ஏராளன் said:

தற்போது  சர்வதேச ஊடகங்களில்  அவர் நாட்டை காட்டிக்கொடுக்காமை தொடர்பில் மகிழச்சியடைகின்றோம்.

இரண்டு கட்சிகளும் மாறி மாறி ஆட்சிக்கு வந்து நாட்டை சீரழித்ததன் இரகசியம் அதுதான். அவரே சொல்லியிருக்கிறார், "மஹிந்தவை மின்சாரக்கதிரையிலிருந்து காப்பாற்றியது தனது அரசாங்கமே." என்று. பட்டலந்த தண்டனையிலிருந்து அவரை காப்பாற்றியது அடுத்து வந்த அரசாங்கம். எல்லோரின் கைகளிலும் இரத்தம் தோய்ந்துள்ளது.

5 hours ago, ஏராளன் said:

பாதாள கும்பல் தொடர்பில் ஏதேனும் பிரச்சினை இருந்தால் அதில் தலையீடு செய்து தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம்.

அப்போ, நாட்டில் நீதிமன்றங்கள் எதற்கு? இழுத்து மூடுங்கள்! அவர்கள் தண்டிக்கப்படவேண்டும், நீங்கள் தண்டிக்கப்படக்கூடாது. நல்லாய் இருக்கு உங்கள் சித்தாந்தம்! படிக்காமல், பரீட்சை எழுதாமல், சித்தியடைந்த சட்டத்தரணி விவாதம் அப்படித்தான் இருக்கும் என்று தெரியும்.   

 

  • கருத்துக்கள உறவுகள்

புதிய லக்சரி பஸ் வாங்கி அதனை உல்ல்லாசவாகனமாக்கி...பாடசாலை மாணவிகளை பலவந்தமாக கடத்திச் சென்று...அட்டகாசம் புரிந்த நாமல் இன்று மற்றவர்களுக்கு துணிந்து பார்மென்டில் கதைபதற்கு யார் காரணம்...

எமது மக்கள் போரினால் பாதிக்கப் பாடு வன்னியில் கம்பிவேலிக்குள் அடைபட்டிருந்தநிலையில்லும் தினமும் வதைபடும் பெண்களை..தந்து இச்சைக்குள்ளாக்கின ரிசாத்து அவையில் அமசடக்காக இருப்பதற்கு யார் காரணம்..

கிழக்கில் வலிமைகுறைந்த தமிழரின் காணிகளை காவாலித்தனத்திமூலம் பறிப்புச்செய்து ..நிலச்சுவாந்தராகிய புல்லாமூச்சுவிடாமல் இருப்பது ஏன்.. இப்படிபலர்

அனுரவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தபடியால்...தமிழருக்கு சண்டித்தனம் காட்ட அவையில் இருக்கினம்...இவர்கள் செய்த ஊழல்கள் அரசுக்கு தெரியும் ...வாய்மூடி இருக்கினம்...தமிழர் என்றால் மட்டும்...பாயும் நடவடிக்கை

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.