Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, vasee said:

எனக்கு தெரியும் உங்களுக்கு இவற்றை பார்க்க இரத்த கொதிப்பு ஏற்படும் என🤣, ஆனால் இப்படியான விளம்பர உலகில் வாழ்கிறோம், விளம்பரத்திற்காக அந்த மக்களுக்கு உதவி என செய்வது போல காட்டிக்கொண்டு அவர்களுக்குள்ளே இருக்கும் வக்கிரங்களை அம்மக்களை மோசமாக நடத்தவதன் மூலம் வெளிப்படுத்தும் போலிகள் ஆக பெரும்பாலான புலம்பெயர்ஸ் இருக்கிறார்கள் ஆனால் அதனை அறிய முடியாதவர்களாக இருப்பது அதனை விட கொடுமை.🤣

அதுதான் எல்லா இடமும் கழுவி ஊத்தினமே. வெளியில இருக்கிற ஆக்களும் சரி அங்கே இருக்கிற அவர்களின் நிழல்களும் சரி, செய்கின்ற செயல்கள் மிகவும் வருந்தத்தக்கது.

நல்லவற்றையே பார்ப்போம். நல்லவற்றையே யோசிப்போம்.

  • Replies 161
  • Views 10k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • மெசொபொத்தேமியா சுமேரியர்
    மெசொபொத்தேமியா சுமேரியர்

    பத்து   அடுத்தநாள் காலை வழமைபோல வீட்டுக்கு வரும் போது மருதனார் மடத்துக்கும் சுண்ணாகத்துக்கும் இடையே உள்ள பூங்கன்றுகள் விற்கும் கடைக்குச் சென்று விதவிதமாக பூத்திருந்த செவ்வரத்தங் கன்றுகளில் 15 ஐ வாங்கி

  • மெசொபொத்தேமியா சுமேரியர்
    மெசொபொத்தேமியா சுமேரியர்

    மூன்று   வீட்டில் இருப்பவர் இரண்டு வாரங்கள் வங்கி அலுவலாக  வெளிமாவட்டம் சென்றதனால் உடனே வாடகை ஒப்பந்தம் எழுத முடியவில்லை. இரண்டு நாழின்பின் வந்துசேர அவரை வரச்சொல்லிவிட்டு மணிவண்ணனிடம் போகிறேன். ஒப்பந்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, செம்பாட்டான் said:

மிகவும் அருமையாக இருந்தது. நீண்ட நாட்களின் பின் ஒரு தொடர்கதை வாசித்த அனுபவம். முந்தி எவ்வளவு தொடர்கதைகளை வாரம் வாரம் வாசிப்போம்.

முடிந்தது என்பதை இட்டு மகிழ்வதா கவலைப் படுவதா. இதன் பின் என்ன என்று பாகம் இரண்டு வருமோ. இப்போதெல்லாம் அதுதானே.

சொல்ல முடியும் என்றால் சொல்லுங்க. எந்தக் காலப்பகுதியில் இது நடந்தது. எப்போது ஊருக்கு நிரந்தரமாகப் போறது.

ஊருக்குப் போனாப் பிறகு பாகம் 3 எழுதலாம். வெளிநாடுகளில் இருக்கும் பலபேர் இதைப்பத்தி கதைப்பது உண்டுதானே. ஆனால் உண்மையில் எத்தனை பேர் அங்கே திரும்பிப் போய்விட்டார்கள்.

இது 2022- 24 ஒக்டோபரில நடந்த கதை. பத்தாம் பாகம் புத்தம்புதிது. 😃

14 hours ago, சுவைப்பிரியன் said:

இப்ப யார் இருக்கினம்.நீங்கள் ஊருக்கு வந்தால சொல்லுங்கோ.

இப்ப ஒரு குடும்பம் இருக்குது. செப்டெம்பர் அல்லது ஒக்டோபர் நானும் கணவரும் வருவோம். ஆனால் உங்களுக்கு எப்பிடிக்க சொல்லுறது. ஊரிலையா இருக்கிறீர்கள்? தொலைபேசி இலக்கத்தைப் போடுங்கள். கட்டாயம் சந்திக்கலாம்.

14 hours ago, செம்பாட்டான் said:

உண்மைதான். ஜீரணிக்க முடியாத ஆனால் சத்தியமான கேள்வி. ஊரில் நாங்களும் இப்போ வெளிநாட்டினர் தான். சுற்றுலாப் பயணிகளுக்கும் நமக்கும் நூலிழையே வித்தியாசம்.

உண்மைதான். நாம் 2026 இல் செல்வதாக இருக்கிறோம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, vasee said:

புலம்பெயர் தமிழர்கள் தமது பண மேலாதிக்கத்தில் அங்குள்ள மக்களை இரண்டாம் தர பிரஜைகளாக நடத்தும் மோசமான நிலை கானப்படுகிறது, இந்த நிலையில் புலம்பெயர் தமிழர்கள் அங்கு குடியேறினால் அங்கு இவர்களின் பணபலம் மூலம் மேலும் அங்குள்ள மக்கள் வறுமைக்கோட்டிற்கு தள்ளப்படுவர் அதனால் புலம்பெயர் தமிழர்கள் அங்குள்ள மக்களுக்கு செய்யும் உபகாரமாக அங்கு போய் குடியேறாமால் இங்கு வெளிநாட்டில் இருப்பது நல்லது.

இரண்டாந்தரப் பிரஜைகளாக அவர்கள் தான் எம்மை வெறுக்கின்றனர். உழைக்கவே விரும்பாதவர்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழேதான் செல்ல முடியும். வெளிநாட்டினர் சென்று அங்குள்ளவர்களின் எதைப் பறித்தார்கள்? எதைச் செய்யவிடாது தடுத்தார்கள்? எதுக்குத்தான் வெளிநாட்டவரைச் சாட்டுவது என்று இல்லையா ????

7 hours ago, Kavi arunasalam said:

IMG-8260.jpg

இது எவ்வளவு நல்லாய் இருக்கு. நன்றி அண்ணா.

4 hours ago, செம்பாட்டான் said:

நல்ல உள்ளம் அவவுக்கு. வீட்ட விட்டு ஆள எழுப்பிறதுக்கும் தானே காசு குடுத்து லான்ட்மாஸ்டர் பிடிச்சு விடுறா. நீங்கள் வேற.

😃😂

நிதர்சனமான உண்மை வசி. படங்காட்டுறதில நம்ம ஆக்கள அடிச்சிக்க முடியாது. படங்காட்ட வெளிக்கிட்டு மற்றவையை மதிப்பதில்லை. ஆனால் அப்பிடியான ஆக்கள் அங்கே கனநாள் வாழமாட்டினம். அவையால முடியாது.

அங்க போய் இருக்க விரும்புற ஆட்கள் படாம் காட்ட மாட்டினை. விடுமுறைக்குப் போய் வருபவர்கள் சிலர் தான் படம் காட்டுவது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, vasee said:

எனக்கு தெரியும் உங்களுக்கு இவற்றை பார்க்க இரத்த கொதிப்பு ஏற்படும் என🤣, ஆனால் இப்படியான விளம்பர உலகில் வாழ்கிறோம், விளம்பரத்திற்காக அந்த மக்களுக்கு உதவி என செய்வது போல காட்டிக்கொண்டு அவர்களுக்குள்ளே இருக்கும் வக்கிரங்களை அம்மக்களை மோசமாக நடத்தவதன் மூலம் வெளிப்படுத்தும் போலிகள் ஆக பெரும்பாலான புலம்பெயர்ஸ் இருக்கிறார்கள் ஆனால் அதனை அறிய முடியாதவர்களாக இருப்பது அதனை விட கொடுமை.🤣

உங்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான். உதவி செய்யப்போய் நாம் கஷ்ரப்பட்டு உழைத்த காசையும் இழந்து அவர்கள் அதைப் பயன்படுத்தாமல் எங்களை முட்டாளாக்கிய கதை எத்தனையோ இருக்கு. அதை இன்னொருநாள் எழுதிறன்.

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இது 2022- 24 ஒக்டோபரில நடந்த கதை. பத்தாம் பாகம் புத்தம்புதிது. 😃

இப்ப ஒரு குடும்பம் இருக்குது. செப்டெம்பர் அல்லது ஒக்டோபர் நானும் கணவரும் வருவோம். ஆனால் உங்களுக்கு எப்பிடிக்க சொல்லுறது. ஊரிலையா இருக்கிறீர்கள்? தொலைபேசி இலக்கத்தைப் போடுங்கள். கட்டாயம் சந்திக்கலாம்.

உண்மைதான். நாம் 2026 இல் செல்வதாக இருக்கிறோம்

தகவலுக்கு நன்றி. உங்கள் பிரயாசை மேன்மேலும் வலுப்பெற வாழ்த்துகள்.

20 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அங்க போய் இருக்க விரும்புற ஆட்கள் படாம் காட்ட மாட்டினை. விடுமுறைக்குப் போய் வருபவர்கள் சிலர் தான் படம் காட்டுவது.

அதையேதான் நானும் சொன்னேன். அவர்களால் அங்கு வாழ முடியாது. களைகள் எல்லாம் அழிந்து நல்ல நெற்கதிர்களே மிஞ்சியிருக்கும்.

13 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உங்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான். உதவி செய்யப்போய் நாம் கஷ்ரப்பட்டு உழைத்த காசையும் இழந்து அவர்கள் அதைப் பயன்படுத்தாமல் எங்களை முட்டாளாக்கிய கதை எத்தனையோ இருக்கு. அதை இன்னொருநாள் எழுதிறன்.

கேள்விப் பட்டிருக்கிறேன்.

நீங்கள் அங்கே போய் இருந்தபின்பு, வடிவாக விசாரிச்சு மேன்மேலும் செய்யலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, செம்பாட்டான் said:

அதுதான் எல்லா இடமும் கழுவி ஊத்தினமே. வெளியில இருக்கிற ஆக்களும் சரி அங்கே இருக்கிற அவர்களின் நிழல்களும் சரி, செய்கின்ற செயல்கள் மிகவும் வருந்தத்தக்கது.

நல்லவற்றையே பார்ப்போம். நல்லவற்றையே யோசிப்போம்.

இயல்பியல் விதியின்படி எல்லாம் ஒரு சமனிலைப்படுத்தும் இயல்பாகவே, எந்த வினைக்கும் சமனும் எதிரான வினை இருக்காவிட்டால் நிலமை மோசமாகிவிடும்.

  • கருத்துக்கள உறவுகள்
On 9/4/2025 at 18:01, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அதன் பின்னர் அவர் எதுவும் பேசவில்லை. லாண்ட்மாஸ்டர் வந்தவுடன் பொருட்களை எல்லாம் ஏற்றிக்கொண்டு செல்ல என்  மனம் நீண்ட பெருமூச்சுடன் நிம்மதி அடைகிறது.  

என்றாலும் ரதியை சும்மா விட்டிருக்கக் கூடாது.

வெளிநாட்டு குடியுரிமை உள்ளோர் ஊரில் வீடுவாசல் வைத்திருக்க முடியாதா?

சிலர் வைத்திருக்கலாம் என்கிறார்கள்.சிலர் இயலாது என்கிறார்கள்.

இதுபற்றி சரியான விபரம் தெரிந்தவர்கள் யாரேனும்?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

இல்லை. சொத்து/காணி எதுவும் வாங்க முடியாது. High rise builidingல முழுக் காசும் கொடுத்து flat வாங்கலாம் என்று நினைக்கிறன்.

குத்தகைக்கு காணி எடுக்கலாம்.

NRS ஆக வங்கிக் கணக்கில பணம் வைத்திருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

😀😂

உள்ளூர் காரரோடை எப்பிடி இருக்கினாமோ தெரியாது. வெளிநாட்டவர் என்றாலே அவர்களுக்கு தலையில பல்ப் ஏரியா ஆரம்பிச்சிடும்போல. நீங்கள் சொல்வது சரிதான். நாங்கள் பாதுகாப்பாக இருக்காட்டில் நாங்களே காணாமல் போயிடுவம்.

நான் செய்த பெரிய தவறு ஊருக்குள்ளையே காணி வாங்காததுதான்.

வாரம் செய்தறி, வழி நடந்தறி, தோழமை கூடியறி என்பார்கள். அனுபவமே சிறந்த ஆசிரியர். இனி ஊரிலை வசிக்கிற எண்ணம் இருந்தால்; எதற்கும் அவசரப்படாமல் நன்றாக விசாரித்து அறிந்து வேலைக்கு ஆட்களை அமர்த்துங்கள், பழகுங்கள். பழையவர்களை பகைமை பாராட்டாமல் விலத்தி நடவுங்கள். உங்களை ஏமாற்றியவர்கள் உங்களுடன் நட்பாக இருப்பவர்களை உங்களுக்கு எதிராக திருப்புவார்கள். கவனம்!

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, செம்பாட்டான் said:

இல்லை. சொத்து/காணி எதுவும் வாங்க முடியாது. High rise builidingல முழுக் காசும் கொடுத்து flat வாங்கலாம் என்று நினைக்கிறன்.

குத்தகைக்கு காணி எடுக்கலாம்.

NRS ஆக வங்கிக் கணக்கில பணம் வைத்திருக்கலாம்.

எனது தாயார் எனக்கு எழுதிவைத்த வீடு இருக்கிறது.

முன்னர் சுமே போல அங்கே போய இருக்கவே மனைவியும் நானும் விரும்பினோம்.

இப்போது அந்த எண்ணம் இல்லை.

வீட்டை விற்றுவிடுவமா என்று யோசிக்கிறோம்.

அந்தநேரம் ஏதும் சிக்கல் வருமா தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

எனது தாயார் எனக்கு எழுதிவைத்த வீடு இருக்கிறது.

முன்னர் சுமே போல அங்கே போய இருக்கவே மனைவியும் நானும் விரும்பினோம்.

இப்போது அந்த எண்ணம் இல்லை.

வீட்டை விற்றுவிடுவமா என்று யோசிக்கிறோம்.

அந்தநேரம் ஏதும் சிக்கல் வருமா தெரியவில்லை.

இருக்கிற சொத்தை விக்கலாம். ஆனால் அந்தப் பணத்தை என்ன செய்யப் போகிறீர்கள். Non resident கணக்கு தொடங்க வேணும். இல்லாட்டி நகை வாங்கலாம். அங்கேயே செலவழிக்கலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஈழப்பிரியன் said:

என்றாலும் ரதியை சும்மா விட்டிருக்கக் கூடாது.

வெளிநாட்டு குடியுரிமை உள்ளோர் ஊரில் வீடுவாசல் வைத்திருக்க முடியாதா?

சிலர் வைத்திருக்கலாம் என்கிறார்கள்.சிலர் இயலாது என்கிறார்கள்.

இதுபற்றி சரியான விபரம் தெரிந்தவர்கள் யாரேனும்?

தாராளமாக வெளிநாட்டினர் சொத்து வைத்திருக்கலாம். நாம் வீடோ நிலமோ வாங்கும்போது இருமடங்கு வரி செலுத்தியே வாங்கவேண்டும். மற்றப்படி ஒன்றும் இல்லை.

நான் விசாரித்துவிட்டுத்தான் வாங்கினேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, செம்பாட்டான் said:

இல்லை. சொத்து/காணி எதுவும் வாங்க முடியாது. High rise builidingல முழுக் காசும் கொடுத்து flat வாங்கலாம் என்று நினைக்கிறன்.

குத்தகைக்கு காணி எடுக்கலாம்.

NRS ஆக வங்கிக் கணக்கில பணம் வைத்திருக்கலாம்.

யார் உங்களுக்குச் சொன்னது. நான் இங்கு இருந்தபோது NRS தான் வைத்திருந்தேன். அங்கு சென்றபின் வங்கியில் சென்று விசாரித்தபோது நாம் இங்கு வந்து இருக்கப்போகிறோம் என்று கூற உடனேயே எனக்கும் கணவருக்கும் திறந்துவிட்டனர். காணியும் என் பெயரில் தான் இருக்கிறது. காணி வாங்கும்போது காட்டும் வரிதான் வெளிநாட்டினருக்கு இருமடங்கு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, satan said:

வாரம் செய்தறி, வழி நடந்தறி, தோழமை கூடியறி என்பார்கள். அனுபவமே சிறந்த ஆசிரியர். இனி ஊரிலை வசிக்கிற எண்ணம் இருந்தால்; எதற்கும் அவசரப்படாமல் நன்றாக விசாரித்து அறிந்து வேலைக்கு ஆட்களை அமர்த்துங்கள், பழகுங்கள். பழையவர்களை பகைமை பாராட்டாமல் விலத்தி நடவுங்கள். உங்களை ஏமாற்றியவர்கள் உங்களுடன் நட்பாக இருப்பவர்களை உங்களுக்கு எதிராக திருப்புவார்கள். கவனம்!

அங்குள்ள பெரும் பிரச்சனையே கூலி வேலை செய்வதற்கு ஆட்கள் இல்லை. ஒரு சிலர் நன்றாக வேலை செய்பவர்களிருந்தாலும் அவர்கள் தாம் தொடர்ந்து செய்யும் வேலையை விட்டுவிட்டு எம்மிடம் வரமாட்டார்கள். புற்கள் பிடுங்குவதுதான் பெரிய வேலை. மற்றப்படி கணவரும் நானுமே சேர்ந்து பல வேலைகளைச் செய்வோம். அந்த வெயில் களைப்புத்தான் என்னை வேலை செய்ய விடாது.ரதியுடன் நான் பிரச்சனைப் படாததற்குக் காரணம் அவர்கள் அங்கேயே நிரந்தரமாக இருப்பவர்கள். வேண்டுமென்றே ஏதாவது செய்ய நினைக்கலாம். வெளிநாட்டில் எமது வீரத்தைக் காட்டுவதுபோல் அங்கு காட்ட முடியாது. வரும் கோபதாபத்தை அடக்கி எம்பாட்டில் வாழ்ந்தால் தொடர்ந்தும் அங்கு இருக்க முடியும் என்று எண்ணுகிறேன். நாம் போய் இருந்துகொண்டு ஒரு நல்ல தோட்டவேலைகளில் ஆர்வமுள்ள நேர்மையானவர்களைத் தேடிப் பிடித்து எம்முடன் வைத்திருக்கவேண்டும் என்ற எண்ணமும் உண்டு. ஆனாலும் ஆரையும் எப்படி நம்புவது என்ற எண்ணமும் பெரிய யோசனைதான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

தாராளமாக வெளிநாட்டினர் சொத்து வைத்திருக்கலாம். நாம் வீடோ நிலமோ வாங்கும்போது இருமடங்கு வரி செலுத்தியே வாங்கவேண்டும். மற்றப்படி ஒன்றும் இல்லை.

நான் விசாரித்துவிட்டுத்தான் வாங்கினேன்.

காணிய வெளிநாட்டு பிரஜைக்கு மாற்றி உறுதி முடிக்கிறதெண்டால் என்ன மாதிரி?

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

யார் உங்களுக்குச் சொன்னது. நான் இங்கு இருந்தபோது NRS தான் வைத்திருந்தேன். அங்கு சென்றபின் வங்கியில் சென்று விசாரித்தபோது நாம் இங்கு வந்து இருக்கப்போகிறோம் என்று கூற உடனேயே எனக்கும் கணவருக்கும் திறந்துவிட்டனர். காணியும் என் பெயரில் தான் இருக்கிறது. காணி வாங்கும்போது காட்டும் வரிதான் வெளிநாட்டினருக்கு இருமடங்கு.

நீங்கள் இரட்டைக்குடியுரிமை பற்றி பேசுகிறீர்கள் என எண்ணுகிறேன்.

எனக்கு அந்த எண்ணமே இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

யார் உங்களுக்குச் சொன்னது. நான் இங்கு இருந்தபோது NRS தான் வைத்திருந்தேன். அங்கு சென்றபின் வங்கியில் சென்று விசாரித்தபோது நாம் இங்கு வந்து இருக்கப்போகிறோம் என்று கூற உடனேயே எனக்கும் கணவருக்கும் திறந்துவிட்டனர். காணியும் என் பெயரில் தான் இருக்கிறது. காணி வாங்கும்போது காட்டும் வரிதான் வெளிநாட்டினருக்கு இருமடங்கு.

சொந்தக்கார வக்கில் ஒருவராள், எனக்கு மாறிச் சொல்லப்பட்டது. இருக்கிற காணிய வைத்திருக்கலாம் ஆனால் வாங்க முடியாது என்றுதான் சொல்லப்பட்டது.

எனக்கு இப்போது இலங்கை குடியுரிமை இல்லை. ஏதேன் வாங்கிற என்டால், இரட்டைக் குடியுரிமை எடுக்கவேணுமாம்.

ஆனால் நீங்கள் வாங்கியிருக்கிறபடியால், எனக்குக் கிடைத்த தகவல் பிழை போல. ஜயகோ. ஈழப்பிரியன் சொன்னமாதிரி, ஆளுக்கொரு தகவலோட இருக்கிறம்.

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அங்குள்ள பெரும் பிரச்சனையே கூலி வேலை செய்வதற்கு ஆட்கள் இல்லை. ஒரு சிலர் நன்றாக வேலை செய்பவர்களிருந்தாலும் அவர்கள் தாம் தொடர்ந்து செய்யும் வேலையை விட்டுவிட்டு எம்மிடம் வரமாட்டார்கள். புற்கள் பிடுங்குவதுதான் பெரிய வேலை.

காலத்துக்கு ஏற்ப மாறி கொள்ளனும் இங்குள்ள புல்லு வெட்டும் மெசினை அங்கு கொண்டு போய் வாடகைக்கு விடலாம் அதேபோல் சிறு ரக இயந்திரம்களை கொண்டு போய் இறக்கி வாடகைக்கு விட்டு காட்ட பின்னால உங்கடை கொப்பி பண்ணிக்கொண்டு ஒரு நூறு பேர் வருவார்கள் உடனே உங்கடை வாடகை கொம்பனியை நல்ல விலைக்கு வித்து விட்டு அடுத்த சந்தர்ப்பத்தை தேட தொடங்குகள் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
17 minutes ago, பெருமாள் said:

காலத்துக்கு ஏற்ப மாறி கொள்ளனும் இங்குள்ள புல்லு வெட்டும் மெசினை அங்கு கொண்டு போய் வாடகைக்கு விடலாம் அதேபோல் சிறு ரக இயந்திரம்களை கொண்டு போய் இறக்கி வாடகைக்கு விட்டு காட்ட பின்னால உங்கடை கொப்பி பண்ணிக்கொண்டு ஒரு நூறு பேர் வருவார்கள் உடனே உங்கடை வாடகை கொம்பனியை நல்ல விலைக்கு வித்து விட்டு அடுத்த சந்தர்ப்பத்தை தேட தொடங்குகள் .

ஐடியா சொல்லிட்டியள் எல்லே...இனி கொத்தார் துலைஞ்சார் 😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, செம்பாட்டான் said:

இருக்கிற சொத்தை விக்கலாம். ஆனால் அந்தப் பணத்தை என்ன செய்யப் போகிறீர்கள். Non resident கணக்கு தொடங்க வேணும். இல்லாட்டி நகை வாங்கலாம். அங்கேயே செலவழிக்கலாம்.

On 11/4/2025 at 09:54, குமாரசாமி said:

காணிய வெளிநாட்டு பிரஜைக்கு மாற்றி உறுதி முடிக்கிறதெண்டால் என்ன மாதிரி?

நீங்கள் கேட்பது உங்கள் பெயரில் உள்ளதை வேறு ஒருவருக்கு மாற்றுவது பற்றியா ? அல்லது அங்கு உள்ளதை உங்கள் பெயருக்கு மாற்றுவது பற்றியா?

23 hours ago, ஈழப்பிரியன் said:

நீங்கள் இரட்டைக்குடியுரிமை பற்றி பேசுகிறீர்கள் என எண்ணுகிறேன்.

எனக்கு அந்த எண்ணமே இல்லை.

எனக்கு இலங்கைக் குடியுரிமை இல்லை. யேர்மன் மற்றும் பிரித்தானியக் குடியுரிமை உள்ளதால் மூன்றாவது தரமாட்டார்கள். நான் வீடு வாங்கியது பிரிடிஷ் பாஸ்போட்டை வைத்துத்தான். நிரந்தர வதிவிட உரிமை எடுக்கலாம் என்று கூறுகின்றனர்.( PR ) இம்முறை போய்த்தான் அதுபற்றி கதைக்கவேண்டும்.

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, செம்பாட்டான் said:

சொந்தக்கார வக்கில் ஒருவராள், எனக்கு மாறிச் சொல்லப்பட்டது. இருக்கிற காணிய வைத்திருக்கலாம் ஆனால் வாங்க முடியாது என்றுதான் சொல்லப்பட்டது.

எனக்கு இப்போது இலங்கை குடியுரிமை இல்லை. ஏதேன் வாங்கிற என்டால், இரட்டைக் குடியுரிமை எடுக்கவேணுமாம்.

ஆனால் நீங்கள் வாங்கியிருக்கிறபடியால், எனக்குக் கிடைத்த தகவல் பிழை போல. ஜயகோ. ஈழப்பிரியன் சொன்னமாதிரி, ஆளுக்கொரு தகவலோட இருக்கிறம்.

நீங்கள் துணிந்து வாங்குங்கோ. எழுதுற விடயத்தில் உதவி தேவை என்றால் மணிவண்ணனின் போன் இலக்கம் தாறன் 😂

14 hours ago, பெருமாள் said:

காலத்துக்கு ஏற்ப மாறி கொள்ளனும் இங்குள்ள புல்லு வெட்டும் மெசினை அங்கு கொண்டு போய் வாடகைக்கு விடலாம் அதேபோல் சிறு ரக இயந்திரம்களை கொண்டு போய் இறக்கி வாடகைக்கு விட்டு காட்ட பின்னால உங்கடை கொப்பி பண்ணிக்கொண்டு ஒரு நூறு பேர் வருவார்கள் உடனே உங்கடை வாடகை கொம்பனியை நல்ல விலைக்கு வித்து விட்டு அடுத்த சந்தர்ப்பத்தை தேட தொடங்குகள் .

சமதரையில் புல்லு வெட்டுவதற்குத்தான் உந்த மெஷின் சரி. பாத்தி கட்டியிருக்கிற இடத்தில அதை நகர்த்துவது கடினம். உங்களுக்கு தோட்டத்தின் அனுபவம் இல்லை. அதனாலத்தான் உப்பிடிக்க சொல்கிறீர்கள். இந்தியாவில் எல்லாமே இருக்கு. எமது நாட்டில் எல்லாம் இறக்குமதி இல்லை. சிறிய உளவு இயந்திரங்கள், மரம் தடிகளை அரைக்கும் மிஷின் என்று எமக்கும் நிறைய ஐடியா இருக்கு. ஆனால் போய் இருக்காமல் எதையும் புதிதாக வாங்கி ஆரையும் நம்பி வைத்துவிட்டு வரும் எண்ணம் இல்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, குமாரசாமி said:

ஐடியா சொல்லிட்டியள் எல்லே...இனி கொத்தார் துலைஞ்சார் 😁

அத்தார் ஊருக்குப் போனால் ஐந்தாரைக்கே எழும்பி இருந்து தோட்டம் முழுதும் அலைவார். அவருக்கு எல்லாம் ஓகே

  • கருத்துக்கள உறவுகள்
On 9/4/2025 at 10:04, suvy said:

நீங்களும் புல்லு வெட்டுபவர்களிடம் இடத்தைக் காட்டிவிட்டு இவ்வளவும் செய்ய இவ்வளவு கூலி ........நீங்கள் இன்றைக்கு செய்து முடித்தாலும் சரி நாளைக்கு வந்து செய்து முடித்தாலும் சரி என்று சொல்லி இருக்க வேண்டும் ......... வேலை மின்னல் வேகத்தில் நடந்திருக்கும் . .......!

அதுக்கு வேலை வாங்குகிற வல்லமை இருக்கோணும்!

ஆன்ரிக்கு இருக்கிறமாதிரித் தெரியவில்லை.. விறாய்ப்பாய்க் கதைச்சு வேலை வாங்கமுடியாது!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உதிரி

இன்னும் ஒன்று அல்ல நிறையவே இருக்குத்தான் அங்கு உள்ள நிலமைகள் சொல்ல. ஆனால்எனக்கு எழுதப்பஞ்சி வந்ததால் முழுதும் எழுதவில்லை. இன்னும் ஒன்றே ஒன்றை எழுதவேணும்.

முதல் எட்டுக் கமறா பூட்டிப்போட்டு வந்தனாங்கள். பிறகு உழண்டி எல்லாம் களவு போனபிறகு இன்னும் நான்கு பூட்டச்சொல்லி மனிசன் சொன்னவுடன கிரி என்ற பெடிதான் நல்ல பழக்கமான பெடி. அவருக்கு அடிச்சு விடயத்தைக் கூற அடுத்தநாளே வந்துவிட்டார். கொம்பனியின் பெயர் Telechoice Lanka LTD. அக்கா கொம்பனிக்குமொரு மெசேஜ் போடுங்கோ என்று சொல்ல வற்சப்பில் அதையும் நான் போட்டாச்சு.

சாதாரணமா வயர்கள் , கமரா பூட்டுவது கிரிதான். மற்றவர் பெயர் சபேசன். கிரி கேட்கும் பொருட்களை எடுத்துக் கொடுத்துவிட்டு போனிலதான் எந்நேரமும் நிற்பார். எல்லாம் முடிந்தபின் செக் பண்ணி பாக்ஸ் இல் எலாம் சரிபார்ப்பது மட்டும்தான் சபேசனின் வேலை. நான் நான்கு இடங்களைக் காட்டி இந்த இடங்களில் கமரா பூட்டுங்கோ என்று சொன்னால் அவர்கள் இரண்டு இடங்களில் நான் சொன்னது போல் பூட்டிவிட்டு இரண்டு இடங்கள் அக்கா நீங்கள் சொல்வதிலும் பார்க்க இப்பிடிப் பூட்டினாலத்தான் நன்றாக இருக்கும் என்று கூறி மிகுதி இரண்டையும் பூட்டிவிட்டுச் செல்ல அடுத்தநாள் பார்த்தால் அவர்கள் பூட்டிய இடம் சரியாக இல்லை. மீண்டும் கிரியை அழைத்து நீங்கள் பூட்டிய இரண்டும் சரியான இடம் அல்ல. திரும்பக் கழற்றி நான் சொன்ன இடத்தில் பூட்டவேண்டும் என்கிறேன்.

கிரி சரியக்கா உங்கள் விருப்பத்துக்கே பூட்டிவிடுறன் என்று கூற, சபேசன்

"என்னக்கா நீங்கள், நேற்று சரி சரி என்று சொல்லீற்று இன்று இப்படிச் சொல்கிறீர்கள். இனி எல்லாம் திரும்பக் களற்றிப் பூட்ட வேண்டும்" என்றவுடன் நான் கோபத்துடன்

"நேற்றே நான் சொன்னதுபோல் பூட்டியிருந்தால் உந்தப் பிரச்சனை இல்லை. உங்களுக்குத்தான் எல்லாம் தெரிஞ்சமாதிரி இதில பூட்டினாலத்தான் நல்லாய் இருக்கும் என்று பூட்டிவிட்டீர்கள். இப்ப பாக்கத்தான் அது பிழையாக இருக்கு"

"அக்கா நீங்கள் ஓம் என்று சொன்ன பிறக்குதானே பூட்டினனாங்கள்" என்று கதைத்துக்கொண்டிருக்கும்போதே இடையில் நுழைகிறார் சபேசன்.

" நீர் வாயை மூடும். நான் கிரியுடன் கதைக்கிறன். கிரி ,நான் முதலே உங்களுக்குச் சொன்னனான் தானே. இப்ப எனக்குத்தான் காசு நட்டம். இவர் ஏதோ தான் எனக்கு ஓசியில வேலை செய்து தாரமாதிரிக்க கதைக்கிறார்" என்றவுடன் கிரி "சபேசன் நீ பேசாமல் இரு" என்றுவிட்டு நான் கூறியபடி இரண்டு கமராக்களையும் பூட்டி முடிய நான் ஜன்னலால் வெளியே பார்த்தபோது சபேசன் கமரா பூட்ட எடுத்த எமது ஏணியை எடுத்து நிலத்தில் சாய்கிறார்.

என்னடா, அக்கறையாய் வேலை செய்கிறானே என்றுதான் நான் நினைத்தேன். உள்ளே வந்தவன் கணனியில் எல்லாம் சரியோ எண்டு பாருங்கோ அக்கா என்று 12 கமறாக்களின் வியூ வையும் எனக்குக் காட்டிவிட்டு எனது போனில் பழையதை அழித்துவிட்டு புதிதாகப் போட்டுவிடுறன் என்று கூற. நானும் அட பெடியும் நல்ல பெடிதான். நான் தான் சும்மா ஏசிவிட்டேன் என்று எண்ணி இருவருக்கும் பால்த்தேனீரும் போட்டு குடுத்து அனுப்பிவிட்டு நானும் இணுவிலுக்குச் சென்றுவிட்டேன்.

இரவில் ஒரு பக்க லைற்றைப் போட்டுவிட்டுத்தான் செல்வேன். அடுத்த நாள் காலை வீட்டுக்கு வரும்போது பின் வீட்டு பிள்ளையை எமது வீட்டுக்கு முன்னால் காண்கிறேன். "என்னக்கா நேற்று லைற்றைப் போட மறந்துபோனியளோ? என்கிறா. இல்லையே நான் போட்டுவிட்டுத்தானே போனேன். சுட்டுப்போட்டுதோ. 1500 ரூபாய் வல்ப். ஒரு வருடம் ஆகேல்லை. கறன்ரி இருக்கு என்றபடி வீட்டுக்குச் சென்று பின்பக்கம் சென்று பார்த்தால் மூன்று வல்ப்புகள் கழற்றப்பட்டிருக்கு.

உடனேயே ஆரோ வளவுக்குள்ள வந்திட்டினாமோ இரவு என்ற பதட்டத்துடன் கணவருக்கு போன்செய்து விபரம் கூற, இத்தனை கமரா இருக்கு. ஒருத்தரும் வந்திருக்கமாட்டினம். நீ நேற்று அந்தப் பேடியனுக்கு ஏசின்னி எல்லோ. அவன்தான் கோபத்தில பல்ப்பைக் கழட்டி உங்கினேக்க எறிஞ்சிருப்பான். தேடிப்பார் என்கிறார். உடனே நான் சென்று தேடிப் பார்த்தால் ஒரு இரண்டு மீற்றர் தள்ளி ஒரு பல்ப் இருக்க, மற்றது ஒண்டையும் காணவில்லை. நல்லகாலம் பல்ப் உடையாவோ பழுதடையாவோ இல்லை. புற்களின் மேவிழுந்ததில் தப்பியிருந்தது.

அவன் இரண்டை தன் பொக்கற்றுக்குள் வைத்துக்கொண்டு போயிருப்பான். மூண்டாவதை வைக்கஇடமில்லாததால போட்டுட்டுப் போட்டான் என்கிறார். அப்போதுதான் எனக்கு விளங்குகிறது அவன் ஏன் ஏணியைச் சரித்து வைத்தான் என்றும் போனில் பழையதை ஏன் அழித்துவிட்டுப் புதியதைப் போட்டான் என்றும்.

உடனே கொம்பனிக்கு போன்செய்து நடந்ததைக் கூறி சபேசனிடம் கூறுங்கள் அவன்தான் எடுத்தது என்று எனக்குத் தெரியும் என்று. இதுவரை அப்பிடி ஒன்றும் நடக்கவில்லை அக்கா என்கிறார் அவர். அவன் எல்லாத்தையும் உங்களுக்குச் சொல்லிக்கொண்டா செய்கிறான் என்று அவர் வாயை அடைக்கிறேன். நானும் வேண்டும் என்று 3 நாட்கள் போன் செய்து வேறு வேறு வேலை செய்யும் ஆண்கள் பெண்கள் என்று அவனைப்பற்றிக் கூறுகிறேன். உங்கள் முதலாளியிடம் கதைக்கவேண்டும். அவருக்கு போன் செய்தால் அவர் போன் நிப்பாட்டி இருக்கு எந்நேரமும். எப்பிடி அவருடன் கதைப்பது என்றதற்கு அவர் கனடா விசாவில் அங்கு சென்றுவிட்டார் அக்கா. இப்போதைக்கு வரமாட்டார் என்கின்றனர் வேலை செய்பவர்கள்.

கிரிக்கு போன் செய்து கதைத்தபோது சொறி அக்கா. எனக்கு எதுவும் தெரியாது. இனி நானும் நீங்கள் கூப்பிட்டால் வரமுடியாது அக்கா. எனக்கும் கனடா விசா வந்திட்டுது என்கிறாரர்.

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

அதுக்கு வேலை வாங்குகிற வல்லமை இருக்கோணும்!

ஆன்ரிக்கு இருக்கிறமாதிரித் தெரியவில்லை.. விறாய்ப்பாய்க் கதைச்சு வேலை வாங்கமுடியாது!!

உண்மைதான். எனக்கு அன்பாய் கதைச்சு அப்பு ராசா என்று நடித்து வேலை வாங்க எல்லாம் தெரியாது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.