Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நித்தியானந்தா இறந்துவிட்டார்? சகோதரி மகன் பகீர் தகவல்

நித்தியானந்தா இறந்துவிட்டதாக அவரது சகோதரி மகன் தகவல் தெரிவித்துள்ளார்.

நித்தியானந்தா

திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் நித்தியானந்தா. கர்நாடகா, பிடதியில் ஆசிரமத்தை தொடங்கி நடத்தி வந்தார். தொடர்ந்து பல்வேறு இடங்களில் ஆசிரமங்களை நிறுவினார்.

nithyananda

பின் நடிகை ஒருவருடன் தனிமையில் இருந்ததாக வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதிலிருந்து பெண் சீடர்களைத் தவறாக நடத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அதன் அடிப்படையில் பெங்களூரில் பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டு தேடப்பட்ட நிலையில், தலைமறைவானார்.

சகோதரி மகன் தகவல்

அதனையடுத்து திடீரென கைலாசா என்ற தனித் தீவை உருவாக்கியிருப்பதாக அறிவித்தார். அது இந்துக்களுக்கான நாடு, தனி கரன்சி, பாஸ்போர்ட், கொடி ஆகியவற்றை உருவாக்கியிருப்பதாகவும் தெரிவித்தார். குறிப்பாக, தமிழக மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.

நித்தியானந்தா இறந்துவிட்டார்? சகோதரி மகன் பகீர் தகவல் | Nithyananda Died His Sister Son Announces

தொடர்ந்து 5 ஆண்டுகளாக சிறிது அமைதியாக இருந்த நித்தியானந்தா, டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வருவதாகவும், சுயநினைவின்றி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியது. ஆனால் சில நாட்களில் வீடியோ வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார்.

இந்நிலையில், நித்தியானந்தா கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டதாக அவரது சகோதரி மகன் சுந்தரேஸ்வரன், இந்து தர்மத்தைக் காக்க நித்தியானந்தா உயிர் தியாகம் செய்துவிட்டதாக வீடியோவில் தெரிவித்துள்ளார். ஆனால், இந்தத் தகவல்கள் எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

https://ibctamilnadu.com/article/nithyananda-died-his-sister-son-announces-1743488615

  • கருத்துக்கள உறவுகள்

April Fool

  • கருத்துக்கள உறவுகள்

ஆளாளுக்கு ஏப்ரல் 1ம் திகதின்னா கிளம்(ப்பி)டுறானுவோ🤣

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, S. Karunanandarajah said:

April Fool

3 minutes ago, goshan_che said:

ஆளாளுக்கு ஏப்ரல் 1ம் திகதின்னா கிளம்(ப்பி)டுறானுவோ🤣

சரியாக கண்டு கொண்டீர்கள்

இது தமிழ் ஏப்பிரல் ஒன்று தினம் செய்தி

இவர் சாமியார் மனிதர்கள் போன்று இறக்க மாட்டார்

இறப்பில்லாதவர்

Edited by விளங்க நினைப்பவன்

  • கருத்துக்கள உறவுகள்

images?q=tbn:ANd9GcR8mi9SS6NGdXNHqg_abws

நான், சற்று முன்... ரஞ்சிதாவை தொடர்பு கொண்டு,

நித்தியானந்தாவின் உடல் நலத்தை கேட்ட போது....

அது வசந்தி என்றும், இன்று காலை கூட...

இரண்டு இட்லியும், ஒரு ஓட்டை வடையும் சாப்பிட்டதாக கூறினார். 😂 animiertes-gefuehl-smilies-bild-0090.gif

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, தமிழ் சிறி said:

images?q=tbn:ANd9GcR8mi9SS6NGdXNHqg_abws

நான், சற்று முன்... ரஞ்சிதாவை தொடர்பு கொண்டு,

நித்தியானந்தாவின் உடல் நலத்தை கேட்ட போது....

அது வசந்தி என்றும், இன்று காலை கூட...

இரண்டு இட்லியும், ஒரு ஓட்டை வடையும் சாப்பிட்டதாக கூறினார். 😂 animiertes-gefuehl-smilies-bild-0090.gif

ஒரே ஒரு வடையாண்ண

  • கருத்துக்கள உறவுகள்

தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக்கெட்டு பாழ்பட்டுக் கிடக்குமிந்தப் பைந்தமிழ் இனத்திற்குற்ற ஊழ்வினையகற்றவந்த உத்தமன் நித்தி. ஆளவோர் நாடுகண்டு அன்னையெம் தமிழை அங்கே வாழ்விக்க முயலும் போது வஞ்சகர் அவனை வீழ்த்த கோழைகளாக நின்று குரைப்பதேன்? வேண்டாமிந்தக் கீழ்நிலை.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, நந்தன் said:

ஒரே ஒரு வடையாண்ண

அது தானே? அதுவும் எங்கள் குருஜி நித்தியானந்தாவுக்கு....???

ஒரு வேளை எதை எடுப்பது என்பது கடினமாக இருக்க வாய்ப்புண்டு...

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நந்தன் said:

ஒரே ஒரு வடையாண்ண

57 minutes ago, விசுகு said:

அது தானே? அதுவும் எங்கள் குருஜி நித்தியானந்தாவுக்கு....???

ஒரு வேளை எதை எடுப்பது என்பது கடினமாக இருக்க வாய்ப்புண்டு...

காலைச் சாப்பாட்டுக்குதான் ஒரு வடை.

மதியம், இரவு சாப்பாடு என்று நிறைய சாப்பிட வேண்டி வரும்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, விளங்க நினைப்பவன் said:

இவர் சாமியார் மனிதர்கள் போன்று இறக்க மாட்டார்

இறப்பில்லாதவர்

ஆனந்தாவுக்கு ஆனந்தமே ஆனந்திகளுடன் ஆனந்தப்படுவது. ஆனந்திகள் உள்ளவரை ஆனந்தாவும் உள்ளவரே.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நித்தி உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? – கைலாசா சொன்ன தகவல்!

2 Apr 2025, 7:48 AM

Screenshot-2025-04-02-074353.jpg

பாலியல் வழக்குகளில் சிக்கியுள்ள நித்யானந்தா, தலைமறைவாக இருந்து வருகிறார். ஈகுவடார் நாட்டில் உள்ள நிலத்தில் தீவை வாங்கி அதற்கு கைலாசா என்று பெயரிட்டு நித்யானந்தா அங்கு வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், நித்யானந்தா சமாதி அடைந்து விட்டதாக அவரது சகோதரி மகன் சுந்தரேஸ்வரன் வீடியோ வெளியிட்டிருந்தார். இதனையடுத்து இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

நித்யானந்தா உயிரிழந்ததாக தகவல்கள் வெளியான நிலையில், அவர் மிகவும் பாதுகாப்பான உடல்நலத்துடன் இருப்பதாக கைலாசா நேற்று (ஏப்ரல் 1) தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக கைலாசா வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், “இந்து மதத்தின் உச்சப் போதகர் (SPH) நித்யானந்தா இறந்துவிட்டதாக இந்துத்துவ வெறுப்பு ஊடகங்கள் வேண்டுமென்றே தீங்கிழைக்கும் விதமாக குற்றவியல் ரீதியாக தகவல்களை பரப்பி வருகின்றன.

நித்யானந்தா மிகவும் ஆரோக்கியமுடனும் பாதுகாப்புடனும் சுறுசுறுப்புடனும் இருக்கிறார். மார்ச் 30-ஆம் தேதி உகாதி பண்டிகையை ஒட்டி, நித்யானந்தா நேரலையில் தோன்றி அனைத்து இந்து பக்தர்களுக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

நித்யானந்தாவை இழிவுபடுத்தவும், தீங்கிழைக்கவும் மேற்கொள்ளப்படும் இந்த அவதூறு பிரச்சாரத்தை கைலாசா சந்தேகத்திற்கிடமின்றி கண்டிக்கிறது. மேலும், இந்த செய்தியால் உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான இந்து பக்தர்களின் மத உணர்வுகள் புண்படுத்தப்பட்டுள்ளது.

பல ஊடகங்களிலும் ஒரே நேரத்தில் இந்த செய்தியை வெளியிடுவதன் மூலம், நித்யானந்தாவுக்கு எதிராக ஒரு உத்தியை கையாளுகின்றனர்.

இந்து விரோத சக்திகளால் நித்யானந்தா மீது 70-க்கும் மேற்பட்ட கொலை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்துள்ளன. நேரடி தாக்குதலால் தோல்வியடைந்தவர்கள், தற்போது மறைமுகமாக வதந்திகளை பரப்ப ஊடகங்களை பயன்படுத்துகிறார்கள்.

நித்யானந்தா உயிரிழந்தாக வெளியாகும் செய்தியை இந்து விரோத சக்திகள், கொண்டாடுவது அவர்களின் உண்மையான முகத்தை அம்பலப்படுத்தி காட்டுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

https://minnambalam.com/tamil-nadu/kailasa-denies-nithyananda-health-condition/

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

நித்யானந்தா மிகவும் ஆரோக்கியமுடனும் பாதுகாப்புடனும் சுறுசுறுப்புடனும் இருக்கிறார். மார்ச் 30-ஆம் தேதி உகாதி பண்டிகையை ஒட்டி, நித்யானந்தா நேரலையில் தோன்றி அனைத்து இந்து பக்தர்களுக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

அது சரிதான், எதற்கு அவர் மறைந்து வாழ்ந்து, நேரலையில் தோன்றவேண்டும்? நேரடியாகவே தரிசனம் தந்தால் நம்புவோமில்ல.

  • கருத்துக்கள உறவுகள்
On 1/4/2025 at 10:47, goshan_che said:

ஆளாளுக்கு ஏப்ரல் 1ம் திகதின்னா கிளம்(ப்பி)டுறானுவோ🤣

ஏப்பிரல் 1´ம் திகதி என்றால்... சின்ராசு பாடத் தொடங்கி விடுவான். 🤣

  • கருத்துக்கள உறவுகள்

487707459_653711680604058_94367730118950

487419130_122169656222312947_71990409244

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இறந்துவிட்டதாக கூறப்பட்ட நித்தியானந்தா நேரலையில் வந்தார்!

தான் உயிருடனும், நலமாகவும், மிகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதாக பெரும் சர்ச்சசைகளுக்கு மத்தியில் தலைமறைவாக வாழ்ந்து வரும் நித்தியானந்தா தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் நித்தியானந்தா உயிரிழந்துவிட்டதாக செய்திகள் வெளியாகியிருந்த பின்னணியில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
பேஸ்புக் நேரலையில் வந்த அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இன்று அதிகாலை இந்திய நேரப்படி 4.30 மணிக்கு நேரலையில் தோன்றிய நித்தியானந்தா, தான் உயிருடனும், நலமாகவும், மிகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
“இன்று, ஏப்ரல் மூன்றாம் திகதி, வியாழக்கிழமை இந்திய நேரப்படி 4.39 மணிப்படி நான் உயிரோடு, ஆரோக்கியமாக, மகிழ்ச்சியாக இருக்கிறேன். கடைசியாக வெளியிட்ட காணொளி பழையது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்து சாஸ்திரங்களுக்கான உலகின் முதல் ஆன்மிக ஏஐ செயலியை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தேன். அதனால் நேரலையில் வருவதை குறைத்து கொண்டேன்
மற்ற நாடுகளின் உள்நாட்டு பிரச்னைகள் பற்றி கேள்வி கேட்பார்கள் என்பதால் மட்டுமே நேரலையில் பேட்டி கொடுப்பதை தவிர்க்கிறேன். கைலாசா பற்றியும் என்னை பற்றியும் கேட்டால் எப்போதும் பதில் தர காத்திருக்கிறேன்.
பலபேர் கைலாசாவை கட்டுப்படுத்த நினைத்தாலும் அவர்கள் நினைக்கும் போக்கிலே கைலாசாவை நடத்த நினைத்தாலும் அது நடக்காமல் போவதால் அவர்களுக்கு ஏற்படும் கோபம், அவர்கள் நடத்தும் தாக்குதல்களை நான் அறிவேன்.
எவ்வாறாயினும், அண்ணாமலையார் (இறைவன்) சொல்வதைத்தான் செய்வேன்” என்றார். மேலும், இந்த காணொளி நேரலை தான் என்பதை உறுதிப்படுத்த யூடியூப் லைவில் கமென்ட் ஒன்றை அவர் படித்து காட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

https://www.samakalam.com/இறந்துவிட்டதாக-கூறப்பட்/

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

இறந்துவிட்டதாக கூறப்பட்ட நித்தியானந்தா நேரலையில் வந்தார்!

கோஷான் சே, எஸ்.கருணானந்தராஜா எல்லோரும் முதலே சொன்னோம் தானே

அவர் சாமியார் மனிதர்கள் போன்று இறக்க மாட்டார்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.