Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-133.jpg?resize=750%2C375&ssl

சீனா மீது அமெரிக்கா 104% வரி; பங்குச் சந்தைகள் மீண்டும் சரிவு!

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 104 சதவீத வரிகள் நள்ளிரவுக்குப் பின்னர் விரைவில் அமலுக்கு வரும் என்று அமெரிக்கா செவ்வாயன்று (08) கூறியது.

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் கடுமையான வரிகளால் இலக்காகக் கொண்ட பிற வர்த்தக பங்காளிகளுடன் விரைவாக பேச்சுவார்த்தைகளைத் தொடங்க நகர்வுகளை முன்னெடுக்கும் நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

இதனிடையே, கடந்த வாரம் ட்ரம்பின் கட்டண அறிவிப்புக்குப் பின்னர், செவ்வாய்க்கிழமை அமெரிக்க பங்குகள் தொடர்ந்து நான்காவது வர்த்தக நாளாக சரிந்தன.

கிட்டத்தட்ட ஒரு வருடத்தில் முதல் முறையாக S&P உலகளாவிய மதிப்பீடு அளவுகள் 5,000 க்குக் கீழே முடிந்தது.

பெப்ரவரி 19 அன்று அதன் மிக அண்மைய உச்சத்தை விட குறியீட்டெண் இப்போது 18.9% குறைவாக உள்ளது.

கடந்த புதன்கிழமை ட்ரம்பின் கட்டண அறிவிப்பிலிருந்து S&P 500 நிறுவனங்கள் பங்குச் சந்தை மதிப்பில் 5.8 டிரில்லியன் அமெரிக்க டொலர் இழப்பைச் சந்தித்துள்ளன.

இது 1950 களில் அளவுகோல் உருவாக்கப்பட்டதிலிருந்து நான்கு நாட்களில் ஏற்பட்ட மிக ஆழமான இழப்பாகும் என்று தரவுகள் தெரிவிக்கின்றன.

GoDlsrjXQAA6VaO?format=jpg&name=medium

உலகின் மிகப்பெரிய நுகர்வோர் சந்தையைச் சுற்றி ட்ரம்ப் அமைத்து வரும் நாடு மற்றும் தயாரிப்பு சார்ந்த வர்த்தகத் தடைகளை பேச்சுவார்த்தை மூலம் குறைக்கத் தயாராக இருக்கலாம் என்ற நம்பிக்கையில் உலகளாவிய சந்தைகள் முன்பு இலாபத்தைப் பதிவு செய்தன.

மேலும், வரிகள் அமலுக்கு வருவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பே புதன்கிழமை (09) காலை ஜப்பானின் நிக்கேய் பங்குச் சந்தை பரந்த அளவில் விற்பனையைக் கண்டது.

மேலும் பிற ஆசிய சந்தைகள் சரிவை எதிர்கொள்ளத் தயாராக இருந்தன.

நெருங்கிய நட்பு நாடுகள் மற்றும் முக்கிய வர்த்தக பங்காளிகளான தென் கொரியா மற்றும் ஜப்பானுடன் பேச்சுவார்த்தை நடத்த ட்ரம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

மேலும், இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி அடுத்த வாரம் அமெரிக்கா பயணம் செய்ய உள்ளார்.

திட்டமிட்டபடி, நாடுகள் சார்ந்த 50% வரையிலான கட்டணங்கள் கிழக்கு நேரப்படி (0401 GMT) நள்ளிரவு 12:01 மணிக்கு அமலுக்கு வரும் என்று வெள்ளை மாளிகை தெளிவுபடுத்தியது.

கடந்த வாரம் பீஜிங் அறிவித்த எதிர் வரிகளுக்கு பதிலளிக்கும் விதமாக ட்ரம்ப் அதன் இறக்குமதிகள் மீதான வரிகளை 104% ஆக உயர்த்தியுள்ளதால், அந்த வரிகள் சீனாவிற்கு மிகவும் கடுமையாக இருக்கும்.

அதேநேரம் சீனா, அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்கு அடிபணிய மறுத்து, இறுதிவரை போராடுவதாக சபதம் செய்துள்ளது.

உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசுடன் பேச்சுவார்த்தைகளுக்கு முன்னுரிமை அளிக்க மாட்டோம் என்று நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

https://athavannews.com/2025/1427982

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

489347074_1082316353933336_2648504859981

489621596_1082315797266725_6534724017822

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவிற்கு எதிராக 104 வீத வரி – டிரம்ப்

09 APR, 2025 | 08:02 AM

image

அமெரிக்கா சீனாவிற்கு எதிராக 104 வீத வரியை விதிக்கவுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

சீனாவின் ஏற்றுமதிகளிற்கு  எதிராக 34 வீத வரியை விதிக்கவுள்ளதாக ஏற்கனவே தெரிவித்திருந்த டிரம்ப் இதற்கு எதிராக சீனா பதில் நடவடிக்கை எடுத்தால் மேலதிகமாக 50 வீத வரியை விதிக்கப்போவதாக எச்சரித்துள்ளார்.

சீனாவிற்கு எதிராக அமெரிக்கா ஏற்கனவே 20 வீத வரியை விதித்துள்ள நிலையில் தற்போது சீனா 104வீத வரியை எதிர்கொள்ளும் நிலையில் உள்ளது.

https://www.virakesari.lk/article/211551

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

489347074_1082316353933336_2648504859981

489621596_1082315797266725_6534724017822

இவர் வேண்டி கட்டப் போகிறார் சீனா தனது நாணயத்தில். பல நாடுகளுடன். வியாபாரம் செய்ய தொடங்கி விட்டது கொடுக்கல் வாங்கல்கள் மிகவும் விரைவில் நடைபெறுகிறது அதாவது பணம் மிக மிக விரைவில் செலுத்தப்படும் டொலரை விட அதி விரைவு ......இதனால் டொலரின். பாவனை குறையும். குறைந்துள்ளது இதனால் அமெரிக்காவுக்கு வருமானம் குறையும்

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவுக்கு பதிலடியாக 84% வரி விதித்த சீனா - எங்கு போய் முடியும் வர்த்தகப் போர்?

டொனால்ட் டிரம்ப், ஷி ஜின்பிங் , சீனா, அமெரிக்கா, வர்த்தகப் போர், பதிலடி வரி விதிப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • எழுதியவர், பென் சூ

  • பதவி, பிபிசி வெரிஃபை

  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

ஏப்ரல் 9, புதன்கிழமை (இன்று) முதல் சீனப் பொருட்களுக்கு 100 சதவிகிதத்துக்கும் அதிகமான இறக்குமதி வரி விதிப்பை அமெரிக்கா அமலாக்கிய நிலையில், சீனா 84 சதவிகித வரி விதிப்பால் பதிலடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்கள் அனைததுக்கும் இந்த 84 சதவிகிதம் வரி அமலாகும் என சீனா அறிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையில் முழு அளவிலான வர்த்தகப் போர் ஏற்பட்டுள்ளது. டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ள வரிவிதிப்புகளுக்கு எதிராக தேவைப்பட்டால் "கடைசி வரை போராடுவோம்" என சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. வெள்ளை மாளிகை "கொடுமையான நடைமுறைகளை" பின்பற்றுவதாகவும் சீனா குற்றம் சாட்டியுள்ளது.

மேலும் 6 அமெரிக்க நிறுவனங்களை நம்பகத்தன்மையற்ற நிறுவனங்கள் பட்டியலில் சீனா இணைத்துள்ளது.

சீனாவின் பதிலடி வரி விதிப்பு தொடர்பாக சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இது வர்த்தக நிறுவனங்கள் சீனாவிலிருந்து , அமெரிக்காவுக்கு திரும்புவதற்கான நேரம் என குறிப்பிட்டுள்ளார்.

அதிகரித்து வரும் இந்த வர்த்தக மோதல் உலகப் பொருளாதாரத்தை என்ன செய்யும்?

இரு நாடுகளுக்கும் இடையே நடைபெறும் வர்த்தகம் எவ்வளவு?

இரண்டு பொருளாதார சக்திகளுக்கும் இடையே கடந்த ஆண்டு நடைபெற்ற வர்த்தகத்தின் அளவு சுமார் 585 பில்லியன் டாலர் (சுமார் 50,65,661 கோடி ரூபாய்கள்).

ஆனால், சீனா அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்ததை விட (145 பில்லியன் டாலர்), அமெரிக்கா வெகு அதிகமாக (440 பில்லியன் டாலர்) சீனாவில் இருந்து இறக்குமதி செய்துள்ளது.

இதனால் அதன் ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் இடையிலான வர்த்தக வித்யாசமான 295 பில்லியன் டாலர் வர்த்தகப் பற்றாக்குறையை அமெரிக்கா கடந்த 2024 ம் ஆண்டு சந்தித்துள்ளது. இந்தக் கணிசமான வர்த்தகப் பற்றாக்குறை அமெரிக்கப் பொருளாதரத்தில் சுமார் 1 சதவிகிதத்துக்கு சமம்.

ஆனால், இந்த வாரம் முழுக்க டிரம்ப் பலமுறை கூறிய 1 டிரில்லியன் டாலர் அளவிலான பற்றாக்குறை என்பதை விட குறைவானதே.

ஏற்கெனவே டிரம்பின் முதல் பதவிக்காலத்தில் அவர் சீனாவின் மீது குறிப்பிடத்தக்க இறக்குமதி வரி விதித்திருந்தார். அவர் பதவிக் காலத்துக்குப் பின்பும் தொடர்ந்த அந்த இறக்குமதி வரிகளை ஜோ பைடன் அரசும் அதிகரித்தது.

இந்த வர்த்தகத் தடைகள் சேர்ந்து 21 சதவிகிதமாக அமெரிக்காவில் இருந்த சீன இறக்குமதியை சென்ற ஆண்டு 13 சதவிகிதமாகக் குறைத்துள்ளது.

இதனால், கடந்த பத்து ஆண்டுகளில் வர்த்தகத்துக்காக சீனாவை அமெரிக்கா நம்பி இருப்பது குறைந்துள்ளது.

அமெரிக்கா - சீனா வர்த்தகம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

எனினும், சில சீனப் பொருட்கள் நேரடியாக அல்லாமல் சில தென்கிழக்கு ஆசிய நாடுகள் வழியாக அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.

உதாரணமாக சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சூரியசக்தி தகடுகளுக்கு, 2018ல் டிரம்ப் நிர்வாகம் 30 சதவிகிதம் இறக்குமதி வரி விதித்தது.

ஆனால், அதன்பிறகு சீனத் தயாரிப்பாளர்கள் தங்கள் சூரிய சக்தித் தகடுகளை ஒருங்கிணைக்கும் செயல்பாடுகளை (assembly operations) மலேஷியா, தாய்லாந்து, கம்போடியா, வியட்நாம் போன்ற இடங்களுக்கு மாற்றி முடிக்கப்பட்ட தயாரிப்புகளை அங்கிருந்தே அமெரிக்காவுக்கு அனுப்புவதன் மூலம் இறக்குமதி வரியைத் தவிர்க்கிறார்கள் என, 2023ல் அமெரிக்க வர்த்தகத் துறை ஆதாரங்களை சமர்ப்பித்தது.

அந்த நாடுகள் மீது அமெரிக்கா விதிக்க இருக்கும் 'பரஸ்பர வரிகள்', அடிப்படையில் சீனாவில் உற்பத்தியான கணிசமான பொருட்களுக்கு அமெரிக்காவில் விலை ஏறும்.

சீனாவும், அமெரிக்காவும் பரஸ்பரம் இறக்குமதி செய்யும் பொருட்கள்

2024 இல் அமெரிக்கா சீனாவுக்கு ஏற்றுமதி செய்ததில் முதன்மையானது சோயாபீன்ஸ் - சீனாவின் 44 கோடி பன்றிகளின் உணவாக அவை பயன்படுத்தப்படுகின்றன.

அமெரிக்கா சீனாவுக்கு மருந்துகளையும், கச்சா எண்ணெயையும் கூட ஏற்றுமதி செய்கிறது.

மறுபுறம் சீனாவிடம் இருந்து அமெரிக்கா மிக அதிக அளவிலான மின்னணு சாதனப் பொருட்கள், கணினிகள், பொம்மைகள் போன்றவற்றை வாங்குகிறது. மின்சார வாகனங்களுக்கு இன்றியமையாத தேவையான பெருமளவிலான மின்கலன்களும் (battery) சீனாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதியாகும் பொருட்களில் ஸ்மார்ட்ஃபோன் வகைகள் மிக முக்கியமானவை. இவை மொத்த இறக்குமதியில் 9 சதவிகிதத்தைப் பிடித்துள்ளன. இதில் பெரும்பகுதி, அமெரிக்காவைத் தலைமையகமாகக் கொண்டுள்ள பன்னாட்டு நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்துக்காக சீனாவில் தயாரிக்கப்படுபவை.

கடந்த சில வாரங்களில் ஆப்பிளின் சந்தை மதிப்பு இறங்குவதற்கு அமெரிக்கா சீனாவின் மீது விதித்திருக்கும் இறக்குமதி வரிகள் மிக முக்கிய காரணியாகும். கடந்த மாதத்தில் மட்டும் ஆப்பிள் பங்குகளின் மதிப்பு 20 சதவிகிதம் குறைந்திருக்கிறது.

டிரம்ப் நிர்வாகம் பெய்ஜிங்கின் மீது விதித்துள்ள 20 சதவிகித இறக்குமதி வரியின் காரணமாக, சீனாவிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும், அமெரிக்காவில் கணிசமாக விலை ஏறும்.

எல்லாப் பொருட்களும் இறக்குமதி வரி – 100 சதவிகிதமாக உயர்ந்தால் – அதன் விளைவாக விலை ஐந்து மடங்கு அதிகரிக்கலாம்.

சீனாவின் பதிலடி வரி விதிப்பால் அமெரிக்க இறக்குமதிப் பொருட்களின் விலை சீனாவில் அதிகரித்து, இதேபோன்ற வழியில் சீன நுகர்வோரைத்தான் இறுதியாக பாதிக்கும்.

ஆனால், இறக்குமதி வரியைத் தவிரவும், இரண்டு நாடுகளும் வர்த்தகம் மூலமாக ஒன்றை ஒன்று சேதப்படுத்திக் கொள்வதற்கு பிற வழிகளிலும் முயற்சிக்கலாம்.

தொழில்துறைக்குத் தேவையான தாமிரம், லித்தியத்தில் இருந்து பல அரிய தாதுக்கள் வரையிலான முக்கிய உலோகங்களை சுத்திகரிப்பதில் சீனா முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்த உலோகங்கள் அமெரிக்காவுக்குக் கிடைக்காமல் செய்வதற்கான தடைகளை பெய்ஜிங் ஏற்படுத்தலாம்.

ராணுவ தெர்மல் இமேஜிங்கிலும், ரேடாரிலும் பயன்படுத்தப்படும் ஜெர்மானியம் மற்றும் கேலியம் இரண்டு பொருட்களின் விஷயத்திலும் சீனா இதை ஏற்கெனவே செய்துள்ளது.

லித்தியம், சீனா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,தாமிரம், லித்தியத்தில் இருந்து பல அரிய தாதுக்கள் வரையிலான முக்கிய உலோகங்களை சுத்திகரிப்பதில் சீனா முக்கிய பங்கு வகிக்கிறது

அமெரிக்காவைப் பொறுத்தவரை, அது ஏற்கெனவே ஜோ பைடன் தொடங்கிய சீனாவின் மீதான தொழில்நுட்ப முற்றுகையைத் தொடரலாம். இதன் மூலம், செயற்கை நுண்ணறிவுக்கு முக்கியமான மேம்பட்ட மைக்ரோசிப்கள் போன்ற சீனா இன்னமும் தயாரிக்க முடியாத பொருட்களின் இறக்குமதியை சீனாவுக்கு அமெரிக்க கடினமாக்க முடியும்.

அமெரிக்காவுக்குத் தொடர்ந்து ஏற்றுமதி செய்ய விரும்பினால் சீனாவுடன் வணிகப் பரிவர்த்தனை செய்யக்கூடாது என்று கம்போடியா, மெக்ஸிகோ, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுக்க முடியும் என்று இந்த வாரம் குறிப்பிட்டார் டொனால்ட் டிரம்பின் வர்த்தக ஆலோசகரான பீட்டர் நவாரோ.

மற்ற நாடுகளை இது எப்படி பாதிக்கும்?

சர்வதேச நாணய நிதியத்தின் படி (ஐ.எம். எஃப்), அமெரிக்காவும், சீனாவும் சேர்ந்து உலகப் பொருளாதாரத்தில் மிகப் பெரிய பங்கு , அதாவது 43 சதவிகிதத்தைக் கொண்டுள்ளன.

இந்த இரண்டு நாடுகளும் முழுமையான வர்த்தகப் போரில் ஈடுபட்டு அவற்றின் வளர்ச்சி குறைந்தாலோ, அல்லது பொருளாதார மந்தநிலையை நோக்கித் தள்ளப்பட்டாலோ, அது உலக வளர்ச்சியைக் குறைப்பதன் மூலம் மற்ற நாடுகளின் பொருளாதாரத்துக்கும் தீங்கு விளைவிக்கும்.

சர்வதேச முதலீடும் பாதிக்கப்படலாம்.

வேறு விளைவுகளுக்கும் சாத்தியக்கூறுகள் உள்ளன.

சீனா உலகின் மிகப்பெரிய உற்பத்தி நாடு. அது தன் சொந்த மக்கள் தொகை நுகர்வதை விட மிக அதிகமான பொருட்களைத் தயாரிக்கிறது.

ஏற்கெனவே ஒரு டிரில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை சீனா உபரியாக உற்பத்தி செய்து வருகிறது - அதாவது தான் இறக்குமதி செய்வதை விட உலகின் பிற பகுதிகளுக்கு அது ஏற்றுமதி செய்கிறது.

மலிவாகக் கிடைக்கும் கடன்கள் போன்ற அரசு நிதி உதவிகள், உள்நாட்டு மானியங்கள் போன்றவற்றால், சலுகை பெறும் நிறுவனங்கள், அந்தப் பொருட்களின் உண்மையான உற்பத்திச் செலவை விடவும் குறைவான விலைக்கே பொருட்களை உற்பத்தி செய்து கொள்கின்றன.

எஃகு இதற்கு ஒரு உதாரணம்.

இந்தப் பொருட்களை சீனா அமெரிக்காவுக்குள் நுழைக்க முடியவில்லை என்றால், சீன நிறுவனங்கள் இவற்றை உலகின் எங்கு வேண்டுமானாலும் 'தள்ளிவிடும்' ஆபத்து இருக்கிறது.

சில நுகர்வோருக்கு இதனால் நன்மை பயக்கும் என்றாலும், உலகெங்கும் இதே பொருட்களைத் தயாரிக்கும் மற்ற நாடுகளுக்கு சம்பளம் மற்றும் வேலை இழப்பை இது ஏற்படுத்தலாம்.

'லாபி' அமைப்பான யுகே ஸ்டீல், அதிகப்படியான எஃகு பிரிட்டன் சந்தைக்குள் நுழைய வாய்ப்பிருக்கிறது என்று எச்சரித்துள்ளது.

முழுமையான சீன- அமெரிக்க வர்த்தகப்போர் பாதிப்பின் எச்சம், உலகம் முழுவதும் உணரப்பட வாய்ப்பிருக்கிறது. இதன் விளைவுகள் மிகவும் எதிர்மறையாக இருக்கவே வாய்ப்பிருக்கிறது என்று பெரும்பான்மையான பொருளாதார வல்லுநர்கள் கருதுகிறார்கள்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c0jzzn1ep62o

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 hours ago, தமிழ் சிறி said:

சீனா மீது அமெரிக்கா 104% வரி; பங்குச் சந்தைகள் மீண்டும் சரிவு!

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 104 சதவீத வரிகள் நள்ளிரவுக்குப் பின்னர் விரைவில் அமலுக்கு வரும் என்று அமெரிக்கா செவ்வாயன்று (08) கூறியது.

உந்த விசயத்தில குளிர் காய்ஞ்சு ஜாலியா இருக்கிறது நம்ம ரஷ்ய அண்ணன் தான்.....சொல்லி வேலையில்லை.🤣

Gn6v24-RWs-AA-Mfq-2.png

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவைத் தவிர மற்ற நாடுகளுக்கு 90 நாள் வரிகளை நிறுத்தி வைக்க டிரம்ப் உத்தரவிட்டார்.

சீனாவைத் தவிர, அனைத்து "பரஸ்பர" வரிகளிலும் 90 நாள் இடைநிறுத்தத்தை ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்தார், இதன் மூலம் வரிகள் 125% ஆக அதிகரிக்கும். பெய்ஜிங் ஒரு உடன்பாட்டை எட்டும் என்று எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி கூறினார். "சீனா ஒரு ஒப்பந்தம் செய்ய விரும்புகிறது. அதை எப்படிச் செய்வது என்று அவர்களுக்குத் தெரியவில்லை," என்று அவர் கூறினார்.

https://www.cnn.com/politics/live-news/trump-tariffs-cnn-town-hall-04-09-25/index.html

  • கருத்துக்கள உறவுகள்

U turn - டிரம்ப் ? கொக்கா? தலிவா உன்னிடம் இன்னும் அதிகம் ஏதிர்பார்க்கின்றோம் 😂😃

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

main-2-1.webp?resize=750%2C375&ssl=1

சீனாவை தவிர பிற நாடுகளுக்கான வரி விதிப்பு தற்காலிகமாக நிறுத்தம்.

அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் சீன பொருட்களுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் 125 வீத வரி விதிக்கப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

மேலும், இலங்கை உள்ளிட்ட ஏனைய நாடுகளுக்கு கடந்த 2ஆம் திகதி அமெரிக்கா அறிவித்த புதிய வரி விதிப்பை 90 நாட்களுக்கு இடைநிறுத்தி வைக்க தீர்மானித்துள்ளதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான வரிகளை இரட்டிப்பாக்கியதைத் தொடர்ந்து அதற்கு பதிலடி வழங்கும் வகையில் சீனா இன்று அமெரிக்க பொருட்களுக்கு 84 வீத வரி விதிப்பை அமுல்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து தற்போது அமெரிக்கா சீன பொருட்களுக்கான வரியை 125 வீதமாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மருந்துப் பொருட்கள் மீதும் விரைவில் வரி உயர்வு

மருந்துப் பொருள்கள் மீதான வரி உயர்வு விரைவில் அறிவிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

அமெரிக்காவில் மருந்துப் பொருள்களின் உற்பத்தி அதிக அளவு இல்லையென்றாலும், மருத்துவத் துறை வணிகத்தைக் கட்டுப்படுத்தும் முக்கிய நாடாக அமெரிக்கா இருந்து வருகிறது.

இதனால், மற்ற நாடுகளின் மருத்துவ இறக்குமதிகளுக்கு விரைவில் புதிய வரியை டிரம்ப் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவின் குடியரசுக் கட்சியினருக்கான நிதி திரட்டும் விழாவின் இரவு உணவு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ஜனாதிபதி டிரம்ப், ”புதிய வரி விதிப்பின் மூலம் உலக நாடுகள் அமெரிக்காவுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றன.

இது அமெரிக்காவுக்குக் கிடைத்த வெற்றி. விரைவில் மருந்துப் பொருட்களுக்கான வரி உயர்வை எதிர்பார்க்கலாம். மருந்துப் பொருட்களின் விற்பனை சந்தையாக அமெரிக்கா தொடர்ந்து முன்னிலை வகிப்பதால், இந்த விலையேற்றத்தால் உலக நாடுகள் நம்மிடம் வரவேண்டிய நிலை ஏற்படும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டு மருந்து உற்பத்தி கணிசமாக இல்லாதது குறித்து நீண்ட காலமாக அமெரிக்கா வருந்திவரும் நிலையில், நாட்டிற்குள் அதிக மருத்துவத் துறை உற்பத்திகளைக் கொண்டுவர வரிகளை உயர்த்தும் திட்டத்தை கையில் எடுத்துள்ளது.

எஃகு, அலுமினியம், ஆட்டோமொபைல், தாமிரம் மற்றும் மின்னணு சில்லுகள் (சிப்) உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கு ஏற்கனவே வரி உயர்வை அறிவித்துள்ள நிலையில், விரைவில் மருந்து பொருள்களுக்கும் புதிய வரி விதிக்கப்படும் என்ற டிரம்ப்பின் அறிவிப்பு சந்தை முதலீட்டாளர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

https://athavannews.com/2025/1428133

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

489553011_1083770490454589_3490573976352

489874866_1083689967129308_6455820473875

489632947_1083684710463167_6323870317637

489566258_1083677683797203_1805917165056

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

New-Project-151.jpg?resize=750%2C375&ssl

சீனாவுக்கு 125% வரி; ஏனைய நாடுகளுக்கான கட்டணம் இடைநிறுத்தம் – ட்ரம்ப் உத்தரவு!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் புதன்கிழமை (10) பல நாடுகளுக்கான தனது பரஸ்பர கட்டணத்தை 90 நாள் இடைநிறுத்துவதாக அறிவித்துள்ளார்.

இந்த 90 நாள் காலகட்டத்தில், கணிசமாகக் குறைக்கப்பட்ட 10 சதவீத பரஸ்பர கட்டணம் மட்டுமே அமுலில் இருக்கும் என்று அவர் கூறினார்.

எனினும், சீனா மீதான வரிகளை உடனடியாக 125 சதவீதமாக அதிகரிப்பதாக அவர் அறிவித்தார்.

இது முன்னர் அறிவிக்கப்பட்ட 104 சதவீதத்திலிருந்து அதிகமாகும்.

இந்த அறிவிப்பானது உலகின் இரண்டு பெரிய பொருளாதார நாடுகளுக்கு இடையேயான உயர்மட்ட மோதலை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.

கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட ட்ரம்பின் பரஸ்பரக் கட்டணங்கள் நடைமுறைக்கு வந்த 24 மணி நேரத்துக்குப் பின்னர், ஒரு பெரிய வர்த்தகப் போர் குறித்த அச்சங்களைத் தூண்டியதுடன், மந்தநிலை குறித்த கவலைகளையையும் எழுப்பியது.

இந்த எழுச்சி சர்வதேச பங்குச் சந்தைகளில் இருந்து டிரில்லியன் கணக்கான டொலர்களை அழித்தது மற்றும் ட்ரம்பின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தோன்றிய அமெரிக்க அரசாங்க திறைசேரி வருவாயில் கொந்தளிப்புக்கு வழிவகுத்தமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1428138

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

New-Project-156.jpg?resize=750%2C375&ssl

அமெரிக்காவின் வரிகள்; சீனாவின் அழைப்பை நிராகரித்த அவுஸ்திரேலியா!

அமெரிக்காவின் வரிகளை எதிர்கொள்ள இணைந்து செயல்படுவதற்கான பீஜிங்கின் முன்மொழிவை அவுஸ்திரேலியா இன்று (10) நிராகரித்தது.

அதற்கு பதிலாக அதன் வர்த்தகத்தை தொடர்ந்து பன்முகப்படுத்துவதாகவும், அதன் மிகப்பெரிய வர்த்தக பங்காளியான சீனாவை நம்பியிருப்பதைக் குறைப்பதாகவும் அவுஸ்திரேலியா கூறியுள்ளது.

உலகில் நடக்கும் எந்தவொரு போட்டியிலும் நாங்கள் சீனாவுடன் கைகோர்க்கப் போவதில்லை என்று அவுஸ்திரேலியாவின் துணைப் பிரதமர் ரிச்சர்ட் மார்லஸ் கூறியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியம், இந்தோனேசியா, இந்தியா, பிரித்தானியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுடன் வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதன் மூலம் அவுஸ்திரேலியா தனது பொருளாதார மீள்தன்மையை உருவாக்கும் என்று அவர் கூறினார்.

எனினும் இந்த அறிவிப்பானது அவுஸ்திரேலியாவிற்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும்.

ஏனெனில் அது தனது பொருட்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கை சீனாவிற்கு அனுப்புகிறது.

அமெரிக்காவிற்கான ஏற்றுமதிகள் அவுஸ்திரேலியாவின் மொத்த பொருட்கள் ஏற்றுமதியில் 5% க்கும் குறைவாகவே உள்ளன.

அமெரிக்காவிற்கும் பிற முக்கிய பொருளாதாரங்களுக்கும் இடையிலான வரிகள் மற்றும் பிற வர்த்தக கட்டுப்பாடுகள் குறித்த தொடர்ச்சியான நிச்சயமற்ற தன்மை, நாட்டில் வணிக முதலீடு மற்றும் வீட்டுச் செலவு முடிவுகளில் குளிர்ச்சியான விளைவை ஏற்படுத்தக்கூடும் என்று அவுஸ்திரேலியாவின் மத்திய வங்கி எச்சரித்துள்ளது.

இதனிடையே, அதிர்ச்சியூட்டும் வகையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் புதன்கிழமை (09), பல நாடுகள் மீதான அதிக வரிகளை தற்காலிகமாகக் குறைப்பதாகக் கூறினார்.

ஆனால் சீனாவை குறிவைத்து தொடர்ந்து வரிகளை உயர்த்தினார்.

அதன்படி 104% இலிருந்து 125% ஆக வரி உயர்த்தப்பட்டது.

இது உலகின் இரண்டு பெரிய பொருளாதாரங்களுக்கு இடையிலான வர்த்தகப் போரை மேலும் அதிகரித்தது.

இதனிடையே, சீனா அனைத்து அமெரிக்க இறக்குமதிகளுக்கும் 84% பதிலடி வரிகளை விதித்துள்ளது, இது பீஜிங்கிற்கும் வொஷிங்டனுக்கும் இடையிலான வர்த்தகப் போரை ஆழப்படுத்துகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1428170

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

New-Project-165.jpg?resize=750%2C375&ssl

சீனப் பொருட்கள் மீதான அமெரிக்க வரிகள் 145% உயர்வு!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சீனப் பொருட்கள் மீதான வரிகளை கடுமையாக உயர்த்தியதால், பெரும்பாலான பொருட்கள் மீதான வொஷிங்டனின் மேலதிக வரி விகிதம் 145 சதவீதமாக உயர்ந்துள்ளதாக வெள்ளை மாளிகை வியாழக்கிழமை (10) உறுதிப்படுத்தியுள்ளது.

புதன்கிழமை பல நாடுகள் மீதான புதிய வரிகளை 90 நாட்களுக்கு ட்ரம்ப் இடைநிறுத்தியிருந்தாலும், சீன இறக்குமதிகள் மீதான புதிய வரிகளை 125% ஆக உயர்த்தியதன் மூலமாக பீஜிங்கின் மீது அழுத்தத்தை தீவிரப்படுத்தியுள்ளார்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட 20% வரியை அடிப்படையாகக் கொண்டு இந்த எண்ணிக்கை உருவாக்கப்பட்டுள்ளது.

கடந்த புதன்கிழமை சீனப் பொருட்களுக்கு 125 சதவீத வரி விதிப்பதாக ட்ரம்ப் அறிவித்தார், ஆனால் பின்னர் வெள்ளை மாளிகை இது முந்தைய 20 சதவீத வரியுடன் கூடுதலாகும் என்று தெளிவுபடுத்தியது.

இதற்கு பதிலடியாக, சீனா வியாழக்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் அமெரிக்க பொருட்களுக்கு 84% வரிகளை விதித்துள்ளது.

இதற்கிடையில், வொஷிங்டனை வரிக் கொள்கையில் இருந்து பின்வாங்க கட்டாயப்படுத்தும் ஒரு கூட்டணியை உருவாக்குவதற்காகவும், பதிலடி கொடுக்கவும் சீனா சர்வதேச நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

https://athavannews.com/2025/1428289

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க பொருட்களிற்கு எதிராக 125 வீத வரி - சீனா

11 APR, 2025 | 02:41 PM

image

அமெரிக்க பொருட்களிற்கு எதிராக 125 வீதவரியை விதிக்கப்போவதாக சீனா  அறிவித்துள்ளது.

அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் சில சீனபொருட்களிற்கு டிரம்ப் நிர்வாகம் 145 வீத வரியை விதித்துள்ள நிலையிலேயே சீனா இந்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அமெரிக்கா எதிர்காலத்தில் விதிக்கவுள்ள வரிகளிற்கு பதிலளிக்கப்போவதில்லை என சீனா தெரிவித்துள்ளது.

அமெரிக்கா விதித்த அசாதாரணமான வரிகள் சர்வதேச மற்றும் பொருளாதார விதிமுறைகளை அடிப்படை பொருளாதார சட்டங்களை மீறும் வகையில் அமைந்துள்ளதாக தெரிவித்துள்ள சீனா இது ஒரு தலைப்பட்சமான மிரட்டும் வற்புறுத்தும் தன்மையை கொண்டது எனவும் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/211801

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

james-mcavoy-trance.gif

145 ஒரு தரம்

145 இரண்டு தரம்

145...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

490538819_1084800920351546_5602891974625

490515749_1084809757017329_5949114094150

490334457_1084802847018020_7648287090433

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

usa-3.jpg?resize=604%2C375&ssl=1

வரி கொள்கையில் நாங்கள் மிகவும் சிறப்பாக செயல்படுகிறோம்-ட்ரம்ப்!

அமெரிக்காவின் வரிக் கொள்கை சிறப்பாக செயல்படுகிறது என்றும் அமெரிக்காவும் உலகிற்கும் மிகவும் உற்சாகமாக இருக்கிறது என்றும் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிப்பில் ,”எங்கள் வரி கொள்கையில் நாங்கள் மிகவும் சிறப்பாக செயல்படுகிறோம். இது அமெரிக்காவிற்கும் உலகிற்கும் மிகவும் உற்சாகமாக இருக்கிறது!

இந்த மாற்றம் வேகமாக முன்னேறி வருகிறது,” என்று தெரிவித்துள்ளார்.

இதேவேளை அமெரிக்காவின் வரி விதிப்புக்கு சீனா பதிலடி கொடுத்து வருகிறதுடன் சீன பொருட்களுக்கான வரியை அமெரிக்கா தற்போது 145% ஆக உயர்த்தி உளள நிலையில், பதிலுக்கு சீனாவும் அமெரிக்கப் பொருட்களுக்கான வரியை 125% ஆக உயர்த்தி உள்ளது.

உலகின் முதல் இரண்டு பெரிய பொருளாதாரங்களாக அமெரிக்காவும் சீனாவும் இருந்து வரும் நிலையில், அவர்களுக்குள் தற்போது ஏற்பட்டிருக்கும் பொருளாதார மோதல் குறிப்பாக இரு நாடுகளுக்கும் பரவலாக உலக நாடுகளுக்கும் சவால்களை ஏற்படுத்தி உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1428405

  • கருத்துக்கள உறவுகள்

China_Dependence_on_US_Trade_SITE.jpg

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.