Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மிழக பா.ஜ.க-வின் மாநில தலைவராக இருக்கும் அண்ணாமலை மாற்றப்பட்டு புதிய தலைவர் அறிவிக்கப்படுவார் என்கிற தகவல் கடந்த சில வாரங்களாக தீயாக பரவியது. இந்தசூழலில்தான் புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். அதன் பின்னணி என்ன?

கடந்த 2021-ம் ஆண்டு தமிழக பா.ஜ.க தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டார். பின்னர் நடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்துத் தேர்தலைச் சந்தித்தது, பா.ஜ.க. முடிவில் அந்த கட்சிக்கு நான்கு இடங்கள் கிடைத்தன. பிறகு அ.தி.மு.க தலைவர்கள் குறித்து அண்ணாமலை கடுமையாக விமர்சனம் செய்ததால் தே.ஜ கூட்டணியிலிருந்து அ.தி.மு.க வெளியேறியது. இதனால் கடந்த ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் சிறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க வேண்டிய சூழலுக்கு பா.ஜ.க தள்ளப்பட்டது. முடிவில் போட்டியிட்ட ஒரு தொகுதியில் கூட பா.ஜ.க வெற்றிபெறவில்லை. இதற்கு அ.தி.மு.க-வுடனான உறவை முறித்துக்கொண்டதுதான் காரணம் என பா.ஜ.க-வுக்குள் சர்ச்சை வெடித்தது.

பாஜக தலைவர் அண்ணாமலை

பாஜக தலைவர் அண்ணாமலை

இந்தசூழலில்தான் தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதில், அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைக்க வேண்டும் என பா.ஜ.க-வின் டெல்லி தலைமை விரும்புகிறது. இப்படியான பரபர சூழலில்தான் அமித் ஷா, எடப்பாடி இடையிலான சந்திப்பு நடைபெற்றது. அதில், 'அண்ணாமலையை தலைவராக வைத்துக்கொண்டு பா.ஜ.க-வுடன் கூட்டணி வைக்க முடியாது' என எடப்பாடி தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. மேலும், 'சீனியர் தலைவர்களை அண்ணாமலை மதிக்கவில்லை' என தமிழக பாஜகவில் இருந்தும் மூத்த நிர்வாகிகள் பலர் தலைமைக்கு புகார் தெரிவித்திருக்கிறார்கள்.

இதையடுத்து புதிய தலைவரை நியமிக்கும் முடிவுக்கு டெல்லிக்கு வந்தது. இதையடுத்து தலைவர் பதவியை பிடிக்க நயினார் நாகேந்திரன், பொன்.ராதாகிருஷ்ணன், எல்.முருகன், வானதி சீனிவாசன், கருப்பு முருகானந்தம் உள்ளிட்ட தலைவர்கள் கோதாவில் குதித்தனர். இந்த போட்டியின் முடிவில் நயினார் நாகேந்திரன் தலைவர் பதவியை தட்டி சென்றிருக்கிறார்.

இதன் பின்னணி குறித்து பேசும் கமலாலய சீனியர்கள், "ஆரம்பத்தில் இருந்தே மாநில தலைவர் பதவிக்கான ரேஸில் நயினார்தான் முதலிடத்தில் இருந்தார். அவருக்கு அமித்ஷாவின் ஆதரவு இருக்கிறது. கடந்த 2017-ம் ஆண்டு பா.ஜ.க-வுக்கு வந்தபோதே நயினாருக்கு மாநில தலைவர் பதவியை எதிர்பார்த்தார். பிறகு அது தள்ளிப்போனது. இந்தசூழலில்தான் தற்போது புதிய தலைவராக அவர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இதற்கு அவர் ஏற்கெனவே அ.தி.மு.க-வில் இருந்திருக்கிறார். எனவே அவர்களுடன் கூட்டணியை எளிதாக அமைக்க முடியும். அதற்கான நெளிவு, சுளிவு அவருக்கு தெரியும். மேலும் இதுவரை தமிழக பா.ஜ.க-வில் மாநில தலைவராக நாடார், கவுண்டர் சமுதாயத்தினர் இருந்து விட்டார்கள்.

இதையடுத்து முக்குலத்தோர், வன்னியர் சமுதாயத்திலிருந்து ஒருவரை தலைவராக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் வன்னியர் சமுதாயத்தில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பெரிய தலைவர் இல்லை. எனவேதான் முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்த நயினாரை தலைவராக்க முடிவு செய்திருக்கிறார்கள். இதன் மூலம் முக்குலத்தோரின் வாக்குகள் பா.ஜ.க-வுக்கு கிடைக்கும். இதையெல்லாம் கணக்கு போட்டு பார்த்துதான் நாயினரை தலைவராக்கியிருக்கிறது டெல்லி. இதில், சீனியர் தலைவர்கள் பலருக்கு வருத்தமும் இருக்கிறது. அவர்கள் நயினாருக்கு எதிராக காய் நகர்த்துவார்கள். எப்படியோ 2026 தேர்தலுக்கான பரமபதம் விளையாட்டை ஆட தொடங்கியிருக்கிறது, டெல்லி" என்றனர்.

'தமிழக பாஜக தலைவர்' - நயினார் தேர்வானத்தின் பின்னணி! - Vikatan

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணாமலையின் அதிரடி அரசியல், நயினார் நாகேந்திரனிடம் இராது என நினைக்கின்றேன். அமித்ஷாவின் ஆசைக்கு, ஒப்புக்கு சப்பாணியாக இருக்க வேண்டியதுதான்.

அடுத்த ஒரு வருடத்தில் பா.ஜ.க. விற்கு புதிய தலைவர் தெரிவு செய்ய வேண்டி வரும்.

  • கருத்துக்கள உறவுகள்

நயினார் பழைய அதிமுக ஆள்.

சொந்த தொகுதியில் கணிசமான ஆதரவு உண்டு.

எடப்பாடி மிக பெரிய தப்பை செய்கிறார்.

2026 தேர்தலில் அதிமுக + பாஜக கூட்டணி வென்றால் - அதிமுக ஒட்டு மொத்தமாக பாஜகவால் விழுங்கப்படும். எடப்பாடி, செங்கோட்டையன் எல்லோரும் துரத்தி அடிக்கப்பட்டு, பாஜகவின் நேரடி அல்லது, மறைமுக ஆட்சி அரங்கேறும்.

அப்போ நயினார் முதல்வர் அல்லது துணை முதல்வராவார். முன்னாள் அதிமுக எம்பி என்பது, அதிமுக எம் எல் ஏக்களை எதோ ஒரு ரிசார்ட்டில் வைத்து மடக்க உதவும்.

2026 இல் திமுக தோற்றால், 2030 இல் பாஜக கூட்டில், அதிமுக பத்தோடு பதின்னொன்றாக இருக்கும்.

அதிமுகவின் எதிர்காலம் 2026 இல் அவர்கள் கூட்டணி தோற்பதில்தான் தங்கி உள்ளது. தோற்றால் கட்சி தப்பும். வென்றால் கேம் ஓவர்.

அதிமுகவின் எதிர்காலம் இப்போ திமுக, தவெக, நாதக கையில்.

திமுக வாக்குகளை எடுக்க, விஜையும், சீமானும் திமுக எதிர் வாக்குகளை பிரிக்க - தேர்தலில் அதிமுக கூட்டணி தோற்றால் மட்டுமே அதிமுக அழிவதை தடுக்க முடியும்.

மக்களும் பாஜக போட்டியிடும் தொகுதியில் திமுக கூட்டணிக்கு போட்டு அதிமுகவை காப்பாற்றலாம்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

நயினார் பழைய அதிமுக ஆள்.

😂

ஓம் ஜெயலலிதாவுக்கு முன் முதுகு குனிந்து வணங்கி Exercise செய்யும் முக்கிய அமைச்சராக இருந்தவராம் அவா இறந்தபின்பு இவர் தேர்தலில் தோல்வி அடைந்த பின்பு கட்சி மாறினாராம்.

பாஜக மாநில தலைவர் போட்டியிடுபவர்கள் பத்து ஆண்டுகள் அடிப்படை உறுப்பினராகவும் மூன்று பருவங்கள் தீவிர உறுப்பினராக இருக்க வேண்டும் என்பதை தகுதியாக நிர்ணயிக்கப்பட்டிருந்ததாமே.

ஏராளன் பதிந்த செய்தில் உள்ளது 👇

10 ஆண்டுகள் விதி குறித்து பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகரிடம் பிபிசி தமிழ் கேட்டது. "கட்சியின் பொதுவான விதியாக இது உள்ளது. காலம்காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால், நேரத்துக்கேற்றார் போல விதிகள் தளர்த்தப்படும்" எனக் கூறுகிறார் அவர்.

புதிய தலைவர் சீமானுடன் என்ன மாதிரி 🥰

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விளங்க நினைப்பவன் said:

😂

ஓம் ஜெயலலிதாவுக்கு முன் முதுகு குனிந்து வணங்கி Exercise செய்யும் முக்கிய அமைச்சராக இருந்தவராம் அவா இறந்தபின்பு இவர் தேர்தலில் தோல்வி அடைந்த பின்பு கட்சி மாறினாராம்.

பாஜக மாநில தலைவர் போட்டியிடுபவர்கள் பத்து ஆண்டுகள் அடிப்படை உறுப்பினராகவும் மூன்று பருவங்கள் தீவிர உறுப்பினராக இருக்க வேண்டும் என்பதை தகுதியாக நிர்ணயிக்கப்பட்டிருந்ததாமே.

ஏராளன் பதிந்த செய்தில் உள்ளது 👇

10 ஆண்டுகள் விதி குறித்து பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகரிடம் பிபிசி தமிழ் கேட்டது. "கட்சியின் பொதுவான விதியாக இது உள்ளது. காலம்காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால், நேரத்துக்கேற்றார் போல விதிகள் தளர்த்தப்படும்" எனக் கூறுகிறார் அவர்.

புதிய தலைவர் சீமானுடன் என்ன மாதிரி 🥰

இந்த விதி அண்ணாமலை வந்த போதும் கடைபிடிக்க படவில்லை.

இப்போ வேறு எவரும் தேர்தலில் போட்டியிடாமல் அமித்ஷா பார்த்து கொண்டதால் நைனா வென்றுள்ளார்.

சீமான் எந்த பிஜேபி தலைவரோடும் வீட்ல எலி வெளிள புலிதான்.

  • கருத்துக்கள உறவுகள்

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் - பாஜகவின் 'திட்டம்' இதுவா? அரசியல் கணக்கு என்ன?

நயினார் நாகேந்திரன்

பட மூலாதாரம்,K ANNAMALAI

கட்டுரை தகவல்

  • எழுதியவர், சங்கரநாராயணன் சுடலை

  • பதவி, பிபிசி தமிழ்

  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

தமிழ்நாடு பாஜகவின் மாநிலத் தலைவராக பதவியேற்றுள்ளார் நயினார் நாகேந்திரன்.

கடந்த 2017-ஆம் ஆண்டு அதிமுகவில் இருந்து பாஜகவுக்கு வந்த நயினார் நாகேந்திரனை தலைவராக்கியதன் மூலம் பாஜகவின் அரசியல் திட்டம் என்ன? நயினார் நாகேந்திரனின் பின்னணி என்ன?

நெல்லை பணகுடி அருகே உள்ள தண்டையார்குளம்தான் நயினாருக்கு சொந்த ஊர் என்றாலும், அரசியலுக்கு வரும் முன்னரே நெல்லை டவுனில் தொழில் உள்ளிட்ட தேவைகளுக்காக குடியேறிவிட்டார்.

நேரடியான அரசியல் பிரவேசத்திற்கு முன்னதாகவே, கட்சிப்பணிகளில் அவர் ஈடுபட்டிருந்தார். நெல்லையின் பழம்பெரும் அதிமுக தலைவரான கருப்பசாமி பாண்டியனின் ஆதரவாளராக அறியப்பட்டார் நயினார் நாகேந்திரன்.

பின்நாட்களில் கருப்பசாமி பாண்டியன் ஜெயலலிதாவால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு திமுகவுக்கு செல்ல, நயினார் நாகேந்திரன் அதிமுகவில் பெயர் சொல்லும் தலைவராக வளர்ந்திருந்தார். அப்போதும் கருப்பசாமி பாண்டியனுடன் பரஸ்பரம் நட்பு பாராட்டியதாகக் கூறுகின்றனர் நெல்லை மாவட்ட அதிமுகவினர்.

நயினார் நாகேந்திரன்.

பட மூலாதாரம்,K ANNAMALAI

அரசியல் களம்

2001-ம் ஆண்டு கருப்பசாமி பாண்டியன் திமுகவுக்கு கட்சி மாறியது , இவருக்கு சாதகமாக திரும்பியது. 2001 முதல் 2006 வரையிலான ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் அமைச்சராகும் வாய்ப்பு இவருக்கு கிட்டியது.

அதிரடியான அமைச்சர் பதவி பறிப்புகள் சாதாரணமாக நடைபெறும் ஜெயலலிதா நிர்வாகத்திலும், முழுமையாக 5 ஆண்டுகள் அமைச்சராகவே தொடர்ந்தார் நயினார் நாகேந்திரன். பலமுறை துறைகள் மாற்றப்பட்டப் போதும் அமைச்சர் பதவியை இவர் இழக்கவில்லை.

2006-ம் ஆண்டு தேர்தலில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் (606 வாக்குகள்) நெல்லை தொகுதியில் தோல்வியடைந்தாலும், 2011-ம் ஆண்டு தேர்தலில் அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால், அமைச்சரவையில் இவருக்கு இடம் கிடைக்கவில்லை.

2016 சட்டமன்றத் தேர்தலிலும் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னால் சிறிது காலம் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருந்த நயினார் நாகேந்திரன், 2017-ம் ஆண்டு பாஜகவில் இணைந்து கொண்டார்.

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் - பாஜகவின் 'திட்டம்' இதுவா? அரசியல் கணக்கு என்ன?

பட மூலாதாரம்,X

'முன்பு போல அதிமுக இல்லை'

"ஜெயலலிதாவின் தலைமையிலிருந்தது போல அதிமுக இப்போது இல்லை" என்று காரணம் கூறி 2017-ம் ஆண்டு பா.ஜ.க. வில் இணைந்த நயினார், இன்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் பொறுப்புக்கு வந்திருக்கிறார்.

பாஜக மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலை உடனான கருத்து வேறுபாடுகள் மற்றும் விமர்சனங்களே அதிமுக - பாஜக கூட்டணி முறிவுக்கு காரணமாக கூறப்பட்டது. அண்ணாமலை அதிமுகவினரையும், அதிமுகவினர் அண்ணாமலையையும் பொதுத்தளத்தில் விமர்சித்ததையும் காண முடிந்தது.

இந்நிலையில் ஏற்கெனவே அதிமுகவில் இருந்தவரான நயினார் நாகேந்திரன் இந்த பொறுப்புக்கு கொண்டு வரப்பட்டிருப்பது, இரு கட்சிகளிடையே இணக்கமான சூழலை ஏற்படுத்தும் முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.

பாஜகவிற்கு கட்சி மாறிய பின்னர் மூன்று தேர்தல்களை எதிர்கொண்டிருக்கிறார் நயினார் நாகேந்திரன். 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் நெல்லை மக்களவைத் தொகுதியில் கூட்டணி கட்சியான அதிமுகவின் பி.எச்.மனோஜ் பாண்டியன் போட்டியிட, ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார் நயினார் நாகேந்திரன்.

சொந்த மாவட்டத்தை விட்டு வேறு மாவட்டம் வந்து போட்டியிட்டு தோல்வியடைந்தாலும், கணிசமான வாக்குகளைப் பெற்றார் நயினார்.

அனைத்து கட்சிகளுடன் இணக்கம்

நயினார் நாகேந்திரன், பாஜக , அதிமுக, நெல்லை, கருப்பசாமி பாண்டியன், பாஜக , சட்டமன்றத் தேர்தல், அதிமுக கூட்டணி , திமுக , தமிழ்நாடு சட்டமன்றம்

பட மூலாதாரம்,NAINAR NAGENDRA/X

இதன் பின்னர் 2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் நெல்லை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் நயினார் நாகேந்திரன்.

இந்த தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையுடன் திமுக வெற்றி பெற்ற போதும், அதிமுக கூட்டணியில் தேர்வான 4 பா.ஜ.க. எம்எல்ஏக்களில் ஒருவராக இருந்தார் நயினார் நாகேந்திரன்.

கட்சி பாகுபாடுகளுக்கு அப்பாற்பட்ட உறவுகளில் அனைத்துக் கட்சியினருடனும் இணக்கமான உறவு பாராட்டக்கூடியவராக நயினார் நாகேந்திரன் அறியப்படுகிறார். சட்டமன்றத்தில் சொந்த மாவட்டக்காரரான அப்பாவு சபாநாயகராக இருக்கும் சூழலில் பல சுவையான விவாதங்களிலும் நயினார் நாகேந்திரனின் பெயர் இடம்பெறத் தவறுவதில்லை.

நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் தலைநகரை திருச்சிக்கு மாற்றுங்கள் என நயினார் நாகேந்திரன் கோரிக்கை வைக்க, இதனை அன்போடு பரிசீலிப்போம் என்று பதிலளித்திருந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

இதே போன்று தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் பதவிக்கு நயினார் நாகேந்திரன் பெயர் அடிபட்ட போதே கடந்த பிப்ரவரி மாதம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஒரே மேடையில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது மத்திய அரசை விமர்சித்த முதலமைச்சர், நயினார் நாகேந்திரன் கோபித்துக் கொள்ளக் கூடாது என கேட்டுக் கொண்டதும் நடந்தது.

சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் போதே, 2024ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் பா.ஜ.க. சார்பில் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டார். இத்தேர்தலில் அதிமுகவை பின்னுக்குத் தள்ளி இரண்டாம் இடத்தில் முடித்தார்.

நயினார் நாகேந்திரன், பாஜக , அதிமுக, நெல்லை, கருப்பசாமி பாண்டியன், பாஜக , சட்டமன்றத் தேர்தல், அதிமுக கூட்டணி , திமுக , தமிழ்நாடு சட்டமன்றம்

பட மூலாதாரம்,NAINAR NAGENDRA/X

படக்குறிப்பு,2024 மக்களவைத் தேர்தல் பிரசாரத்தில் நயினார் நாகேந்திரன்

அரசியல் கணக்கு என்ன?

தற்போது பாஜகவின் மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் பதவியேற்றிருப்பது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அரசியல் திறனாய்வாளர் ரவீந்திரன் துரைசாமி," பிற முக்குலத்தோர் சமுதாய தலைவர்களான டிடிவி தினகரன், சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் போன்றோரை மறைக்கும் அளவுக்கு நயினாரின் செல்வாக்கு உயருமா என்று கேட்டால், தேர்தல் அரசியலில் தங்களை நிரூபித்த தினகரன் மற்றும் , பன்னீர்செல்வத்துடன் ஒப்பிடுகையில் நயினார் நாகேந்திரன் சபார்டினேட் (துணை நிலைத் தலைவர்) தான். எனவே அவரை இவர்களுக்கு மாற்றாகக் கருத முடியாது. பாஜகவில் இருக்கும் இதே சமுதாயத்தைச் சார்ந்த மற்றவர்களோடு ஒப்பிடுகையில் , முக்குலத்தோர் மத்தியில் கட்சியை வளர்க்க நயினார் நாகேந்திரன் பயன்படலாம்.'' என்கிறார் அவர்

மேலும், ''தேர்தல் அரசியலைப் பொருத்தவரையிலும் சசிகலா தனது பலத்தை நிரூபிக்காதவர், ஆனால் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் தேர்தலை சந்தித்தவர்கள். குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு ஆர்.கே.நகர் தேர்தலை வென்றவர் டிடிவி தினகரன், கடைசியாக சந்தித்த தேனி மக்களவைத் தேர்தலில் 2வது இடமும் பெற்றிருக்கிறார். இதே போன்று ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சராக இருந்தவர். மற்றவகையில் தேசிய கட்சியின் மாநிலப் பொறுப்பில் இருப்பவரை, தேர்தலில் நிரூபித்த தலைவர்களுடன் ஒப்பிட தேவையில்லை" என்றார்.

"தேசிய கட்சியின் நிழல்"

நயினார் நாகேந்திரன், பாஜக , அதிமுக, நெல்லை, கருப்பசாமி பாண்டியன், பாஜக , சட்டமன்றத் தேர்தல், அதிமுக கூட்டணி , திமுக , தமிழ்நாடு சட்டமன்றம்

பட மூலாதாரம்,NAINAR NAGENDRA/X

மேலும் தேசிய கட்சியான காங்கிரசில் மாநிலத் தலைவராக இருக்கும் செல்வப் பெருந்தகையின் வளர்ச்சிக்கென ஒரு எல்லை இருப்பதைப் போலத்தான், நயினார் நாகேந்திரனும் தேசிய கட்சியின் அடையாளத்தால் அறியப்படுவார் என்று ரவீந்திரன் துரைசாமி கூறுகிறார்.

ஜெயலலிதாவை விமர்சித்த அண்ணாமலையை மேடையில் வைத்துக் கொண்டே, அதிமுகவுடனான கூட்டணியை அறிவித்திருக்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.

''கட்சியின் தேசிய கட்டமைப்பில் அண்ணாமலையின் திறன்களை பாஜக பயன்படுத்தும்" என அமித் ஷா கூறியிருக்கிறார்

தமிழ்நாட்டில் கட்சியை வளர்க்கும் நோக்கம் கொண்டிருக்கும் பா.ஜ.க. தற்போதைய அரசியல் சூழலில் நயினார் நாகேந்திரனை தேர்வு செய்திருப்பதும் கட்சியை வளர்ப்பதற்கான வியூகமே என்கின்றனர் அரசியல் திறனாய்வாளர்கள்.

-இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/ckg13298y57o

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

அதிரடியான அமைச்சர் பதவி பறிப்புகள் சாதாரணமாக நடைபெறும் ஜெயலலிதா நிர்வாகத்திலும், முழுமையாக 5 ஆண்டுகள் அமைச்சராகவே தொடர்ந்தார் நயினார் நாகேந்திரன். பலமுறை துறைகள் மாற்றப்பட்டப் போதும் அமைச்சர் பதவியை இவர் இழக்கவில்லை.

வாரத்தில் 5 நாட்களாவது ஜெயலலிதாவுக்கு முன் முதுகு குனிந்து வணங்கி உடற்பயிற்சிகள் செய்துவந்தால் இவர் அடைந்த பயன்கள் இவை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 11/4/2025 at 19:48, தமிழ் சிறி said:

அண்ணாமலையின் அதிரடி அரசியல், நயினார் நாகேந்திரனிடம் இராது என நினைக்கின்றேன். அமித்ஷாவின் ஆசைக்கு, ஒப்புக்கு சப்பாணியாக இருக்க வேண்டியதுதான்.

அடுத்த ஒரு வருடத்தில் பா.ஜ.க. விற்கு புதிய தலைவர் தெரிவு செய்ய வேண்டி வரும்.

நயினாவுக்கு வாழ்த்துக்கள் சொல்வோமாக.... 🤣

வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கானா முதல் கமலாலயம் வரை! யார் இந்த நயினார் நாகேந்திரன்?

13 Apr 2025, 11:21 AM

the background of tn bjp president nainar nagendran

பாஜகவின் புதிய மாநில தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் நயினார் நாகேந்திரன். ஏப்ரல் 12 ம் தேதி சென்னை வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்வில், பாஜகவின் புதிய மாநில தலைவராக ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் பொறுப்பேற்றிருக்கிறார் நயினார் நாகேந்திரன்.

தற்போதைய தமிழ்நாடு பாஜகவின் சட்டமன்றக் கட்சித் தலைவராக இருக்கும் நயினார் நாகேந்திரன் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவோடு பாஜக கூட்டணி வைத்திருக்கும், இந்த முக்கியமான கால கட்டத்தில் மாநிலத் தலைவராகியிருக்கிறார். ஏற்கனவே மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலை அதிரடியாக செயல்பட்டு வந்த நிலையில் நயினார் இயல்பாகவே சாந்தமான பேச்சுக்கு சொந்தக்காரர்.

சட்டமன்றத்திலும் சரி, வெளியேயும் சரி அனைத்துக் கட்சித் தலைவர்களுடனும் நல்ல உறவை பேணி வருபவர். குறிப்பாக திருநெல்வேலி மாவட்டத்துக்கே உரிய பண்புகள் இவரிடம் சற்று அதிகமாகவே உண்டு. பதவியேற்ற பிறகு பேசிய நயினார் நாகேந்திரன், “இனி தமிழ்நாடு எங்கும் தாமரைக் கொடி பறக்க வேண்டும்” என்று பேசியிருக்கிறார். அண்ணாமலை ஒரு புயல், நான் ஒரு தென்றல் என்றும் பேசியிருக்கிறார்.

திருநெல்வேலியின் தண்டையார் குளம் என்ற கிராமத்தில் இருந்து இப்போது கமலாலயம் வரை வந்திருக்கும் இந்த தென்றலின் பின்னணி என்ன?

image-1371-1024x576.png

யார் இந்த நயினார் நாகேந்திரன்?

திருநெல்வேலி மாவட்டம் பனங்குடி அருகே உள்ள தண்டையார் குளம் கிராமத்தில் 1960 இல் பிறந்தவர் நாகேந்திரன். இவரது தந்தையார் பெயர் நயினார். பார், பார்க்கிங் குத்தகை என பல பிசினஸ் செய்தவர் நயினார். அதனால் வசதியான குடும்பம்தான். நாகேந்திரன் பள்ளிப்படிப்பு முடித்து ஆரல்வாய்மொழி கல்லூரியில் பிஏ பட்டப்படிப்பு படித்தார்.

கானாவிடம் கற்ற அரசியல்!

அப்போது அவருடைய தந்தை நாகேந்திரனை அதிமுகவின் முக்கிய புள்ளியாக அந்த காலத்தில் திகழ்ந்த கருப்பசாமி பாண்டியனிடம் அழைத்துச் சென்றார். கருப்பசாமி பாண்டியன் எம்,.ஜி.,ஆர், ஜெயலலிதா ஆகியோரிடம் மிகுந்த செல்வாக்கு பெற்றவர்,

‘பையனுக்கு ஜாதகம் பார்த்தேன். அரசியல் தான் நல்லா வரும்னு சொல்றாங்க. அதனால உங்கள நம்பி ஒப்படைக்கிறேன்’ என்று சொல்லி கருப்பசாமி பாண்டியனிடம் தனது மகன் நாகேந்திரனை ஒப்படைத்தார் அவருடைய தந்தை.

image-1369-1024x568.png

கருப்பசாமி பாண்டியனுக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் சால்வைகள் அணிவிப்பார்கள். இந்த சால்வைகளை எடுத்து மடித்து வைக்கும் வேலைதான் நாகேந்திரனுக்கு. அரசியலுக்காக தன் தந்தை பெயரையும் சேர்த்து நயினார் நாகேந்திரன் ஆனார்.

கொஞ்சம் கொஞ்சமாக கருப்பசாமி பாண்டியன் அருகே இருந்து திருநெல்வேலியின் அரசியல் களங்களை அறியத் தொடங்கினார். கானா எங்கே சென்றாலும் அங்கே நயினாரும் இருப்பார். கானாவை பார்க்க வருகிறவர்களிடத்திலெல்லாம் தன் அன்பாலும், தன்மையான பேச்சாலும் தனி இடம் பிடித்தார் நயினார் நாகேந்திரன்.

வளர்ச்சியில் துணை நின்ற சமுதாய பலம்!

அரசியலுக்கு எப்போதுமே சமுதாய பலம் மிக முக்கியம். இந்த வகையில் கள்ளர், மறவர், அகமுடையோர் என்ற மூன்று பெரும் பிரிவுகளை உள்ளடக்கிய முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் அவருடைய சமுதாயம் நயினார் நாகேந்திரன் அரசியலுக்கு பெரும் பலமாக இருந்தது.

மறவர் சமுதாயத்தை சேர்ந்த நயினார் நாகேந்திரன், ஆப்பநாட்டு கொண்டையன் கோட்டை மறவர் என்ற மெஜாரிட்டி பிரிவை சேர்ந்தவர். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரும் இதே பிரிவைத்தான் சேர்ந்தவர்.

கருப்பசாமி பாண்டியனுடைய அன்பும் ஆதரவும் பெற்று வளர்ந்து கொண்டிருந்தார் நாகேந்திரன். அப்போது திருநெல்வேலி மாவட்ட அதிமுகவின் இலக்கிய அணியில் நிர்வாகியாக நியமிக்கப்பட்டார். அதன்பிறகு பணகுடி நகர செயலாளர் பதவியை பெற்றார். தனது சமுதாயத்தின் பலத்தோடு சசிகலா டிடிவி தினகரன் ஆகியோர் வரை நெருங்கினார் நயினார் நாகேந்திரன்.

அவர் ஒரு கட்டத்தில் தினகரனின் பரிபூரண ஆதரவோடு மாநில ஜெயலலிதா பேரவைச் செயலாளராக உயர்ந்தார்.

அதிமுகவில் முக்கியமான சக்தியாக இருந்த கருப்பசாமி பாண்டியன் 2000 ஆண்டு வாக்கில் திமுகவுக்கு சென்று விட்ட நிலையில்… அந்த இடத்தை தனது சமுதாய பலம் காரணமாக கச்சிதமாக பயன்படுத்திக் கொண்டார் நயினார் நாகேந்திரன்.

இதன் காரணமாக 2001 சட்டமன்றத் தேர்தலில் திருநெல்வேலி அதிமுக வேட்பாளராக களம் இறங்கினார். முதல்முறையாக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நயினார் நாகேந்திரனுக்கு ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சர் பதவி கிடைத்தது.

அதுவும் தொழில்துறை , மின்சாரம் போக்குவரத்து துறை உள்ளிட்ட முக்கிய துறைகளை அந்த காலகட்டத்தில் அவர் வகித்தார்.

நயினார் நாகேந்திரன் அண்ணன் வீர பெருமாள் திமுக இளைஞரணியில் மாவட்ட அமைப்பாளராக இருந்தவர். அதிமுகவில் நயினார் நாகேந்திரன், திமுகவில் அவரது அண்ணன் என இருவரும் நெல்லை மாவட்ட அரசியலில் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தனர். அதன் பின் வீரபெருமாளும் அதிமுகவுக்கு வந்துவிட்டார். இப்போது நயினார் நாகேந்திரனின் அண்ணன் வீரபெருமாள் அதிமுகவில் மாநில பொறுப்பில் இருக்கிறார்.

image-1370-1024x566.png

முதல்வர் ரேஸில் இடம்பெற்ற நயினார்

2001- 2006 காலகட்டத்தில் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சட்டரீதியான நெருக்கடி ஏற்பட்டு அவர் பதவி விலகியபோது… யாரை இடைக்கால முதலமைச்சராக நியமிக்கலாம் என்று பரிசளிக்கப்பட்ட பெயர்களில் ஓபிஎஸ் இன் பெயரோடு நயினார் நாகேந்திரன் பெயரும் இடம் பெற்றிருந்தது.

இது பற்றி விவரம் அறிந்த அதிமுகவினர் நம்மிடம் பேசும்போது, “அம்மாவுக்கு பதில் யாரை முதலமைச்சராக போடலாம் என்ற ஆலோசனையில் அப்போது ஜாதகம் முக்கியமான பங்கு வகித்தது. அந்த வகையில் நயினார் நாகேந்திரனின் ஜாதகமும் போயஸ் கார்டனில் ஆராயப்பட்டது. நயினார் நாகேந்திரன் ஜாதகப்படி அப்போது அந்த பொறுப்பை அவரிடம் கொடுத்தால் திரும்ப பெற முடியாது என்று ஜோதிடர்கள் சொல்லியிருக்கிறார்கள்

அப்போதே சசிகலாவின் கடைக் கண் கடுமைப் பார்வைக்கு இலக்காக ஆரம்பித்தார் நயினார் நாகேந்திரன். இதையடுத்து அதிமுகவில் அவரது செல்வாக்கு மெல்ல மெல்ல குறைய ஆரம்பித்தது.

2006 சட்டமன்ற தேர்தலில் நெல்லை தொகுதி மாலைராஜாவிடம் வெறும் 600 ஓட்டுகளில் வெற்றி வாய்ப்பை இழந்தார் நயினார் நாகேந்திரன்.

அதன் பிறகு 2011 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகும் அவர் ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சர் ஆக்கப்படவில்லை.

image-1368-1024x480.png

பாஜகவில் ஐக்கியம்!

தொடர்ந்து அதிமுகவில் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற கோபத்தில் இருந்தவர் 2016 ஜெயலலிதா மறைவுக்கு பிறகு… 2017 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார்.

அதன் பிறகு பாரதிய ஜனதா கட்சியில் மாநில தலைவர் பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு அப்பதவி அளிக்கப்படவில்லை. 2021 சட்டமன்ற த் தேர்தலில் நெல்லை சட்டமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாஜக வேட்பாளராக நின்று வெற்றி பெற்றார்.

பாஜக மாநில தலைவர் பதவியை எதிர்பார்த்தவருக்கு பாஜக சட்டமன்ற கட்சித் தலைவர் பதவியே கிடைத்தது. தனது கட்சி தலைவர்கள் உடனும் மற்ற கட்சி தலைவர்களுடனும் தனக்கே உரிய சுமுகமான அமைதியான பணிவான அணுகு முறையில் தொடர்ந்து நல்லுறவோடு இருந்தார் நயினார் நாகேந்திரன். காரணம் கருப்பசாமி பாண்டியனிடம் அவர் கற்ற அரசியல்.
இவருடைய பழகும் தன்மைக்கு ஓர் உதாரணம் அரசியல் வட்டாரத்தில் சொல்வார்கள்.

நயினார் நாகேந்திரன் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த கால கட்டம்… கலைஞர் அப்போது எதிர்க்கட்சி. தேர்தல் பிரச்சாரத்துக்காக கலைஞரின் வாகனம் தயாரானது. எல்லா ஏற்பாடுகளையும் செய்தவர்கள், அந்த பிரசார வாகனத்தின் பதிவு விவகாரத்தில் சற்று மறந்துவிட்டார்கள். பதிவு செய்ய தாமதம் ஏற்பட்டுவிட்டது. உடனடியாக வாகனத்தை பயன்படுத்த வேண்டிய சூழல். அப்போது திமுகவில் இருந்து போக்குவரதுத்துத் துறை அமைச்சர் நயினார் நாகேந்திரனை அணுகியுள்ளனர். சில மணி நேரங்களில் அப்பிரச்சினையை முடித்துக் கொடுத்திருக்கிறார் நயினார். இதுபோல் மாற்றுக் கட்சியினருக்கும் தனது கட்சியினருக்கும் பல உதவிகளை சத்தமில்லாமல் செய்திருக்கிறார் நயினார்.

image-1367-1024x576.png

சர்ச்சையில் நயினார்

அரசியல் வாழ்விலேயே அவர் அதிரடியாக பேசியது என்றால், 2018 காலகட்டத்தில் வைரமுத்து ஆண்டாளை இழிவுபடுத்தி பேசியதாக சர்ச்சை எழுந்ததல்லவா? அப்போது வைரமுத்துவை கண்டித்து பாஜக பல ஆர்பாட்டங்களை நடத்தியது. நெல்லையில் நடந்த கூட்டத்தில் மாநில துணைத் தலைவராக இருந்த நயினார் நாகேந்திரன் பேசும்போது, வைரமுத்துவின் நாக்கை அறுத்தால் ரூ.10 கோடி தர ரெடியாக இருப்பதாகவும் கூறினார். நயினார் நாகேந்திரனா இப்படி பேசுவது என்று பலரும் ஆச்சரியப்பட்டனர்.

நயினார் நாகேந்திரன் சந்தித்த லேட்டஸ்ட் சர்ச்சை…கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அவர் சந்தித்த நான்கு கோடி ரூபாய் சர்ச்சைதான்.

நயினார் நாகேந்திரன் நெல்லை நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டார். 2024 ஏப்ரல் 6 ஆம் தேதி சென்னையில் இருந்து புறப்பட்ட நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து 4 கோடி ரூபாய் பணத்தை தாம்பரம் ரயில் நிலையத்தில் தேர்தல் பறக்கும் படையினர் பிடித்தனர்.
இது தொடர்பாக வழக்கு சிபிசிஐடி விசாரணையில் இப்போதும் இருக்கிறது. அந்த பணம் நயினார் நாகேந்திரனுடைய பணம்தான் என்று அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு எழுந்தது. இந்த வழக்கு இன்னும் சிபிசிஐடி விசாரணையில் இருக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது.

இன்னமும் நெல்லை வட்டாரத்தில் நயினார் நாகேந்திரனை பண்ணையார் என்று அழைக்கும் பழக்கம் அரசியல் வட்டாரத்தில் உள்ளது.

அதென்ன பண்ணையார்?

நெல்லை கிராமங்களில் ரெட்டியார் சமுதாயத்தைச் சேர்ந்த நிலக்கிழார்களை பண்ணையார் என்று அழைத்து வருகின்றனர். நயினார் நாகேந்திரன் ரெட்டியார் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுடன் சேர்ந்து ஹோட்டல் பிசினசில் ஈடுபட்டார். அப்போது நயினாரையும் பண்ணையார் என்று அழைக்கத் தொடங்கி, அதுவே அவரது நெல்லை அரசியலில் அடையாளப் பெயராகவும் மாறிவிட்டது.

இப்படிப்பட்ட நிலையில் தான் வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி தேவை என முடிவெடுத்த அமித்ஷா அதற்கு ஏற்ற மாநில தலைவர் வேண்டும் என்ற அடிப்படையில் நயினார் நாகேந்திரன் இப்போது பாஜகவின் புதிய மாநில தலைவராக பதவி ஏற்றிருக்கிறார்.

விசாகப்பட்டினம் பெல்லாரி வரைக்கும் இவருக்கு கிரானைட் குவாரி பிசினஸ் பெருமளவில் இருக்கிறது. இதனால் பணத்துக்கு பஞ்சம் இல்லாதவர்.

மறவர் என்ற சமுதாய பலம் நயினாருக்கு பெரும் சாதகமாக இருக்கிறது. இவர்தான் அடுத்த பாஜக தலைவர் என்ற தகவல் உறுதியான உடனேயே திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து முக்குலத்து அரசியல் புள்ளிகள் நயினாருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

நயினார் இதுவரை தலைவர்களுக்கு கீழே செயல்பட்டவராகத்தான் இருந்துள்ளார். இப்போதுதான் தேசிய கட்சியில் மாநில தலைவராக பொறுப்பேற்றிருக்கிறார். நயினார் நாகேந்திரன் தலைமையில் பாஜக எப்படி நகர்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்!

https://minnambalam.com/the-background-of-tn-bjp-president-nainar-nagendran/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.