Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Monkey-900.jpg?resize=750%2C375&ssl=1

குரங்குகள் தொடர்பாக மீண்டும் கணக்கெடுப்பு!

குரங்குகள் தொடர்பாக மீண்டும் கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாயத்துறை பிரதி அமைச்சர் நாமல் கருணாரட்ன இந்த விடயத்தை ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

நாட்டில் இரண்டாம் கட்டமாக மீண்டும், குரங்குகள் உள்ளிட்ட விவசாய நிலங்களுக்கு பாதிப்பினை ஏற்டுத்தக் கூடிய வனவிலங்குகள் தொடர்பில் கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதாக விவசாயத்துறை பிரதி அமைச்சர் நாமல் கருணாரட்ன தெரிவித்துள்ளார்.

விலங்குகள் கணக்கெடுப்பு தொடர்பாக அமைச்சின் குழுவொன்று நிறுவப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டாம் கட்ட கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை எனவும் எதிர்வரும் நாட்களில் இக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் முதல் கட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் ஊடாக தீர்மானங்களை எடுக்காது இரண்டாம் கட்ட கணக்கெடுப்பினையும் மேற்கொண்டு தீர்மானம் எடுக்கப்பட உள்ளதாக பிரதி அமைச்சர் நாமல் கருணாரட்ன மேலும்  தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1429115

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

நாட்டில் 5.17 மில்லியன் குரங்குகள் : விலங்குகளின் கணக்கெடுப்பு முடிவுகள் வெளியாகின!

12 JUN, 2025 | 01:51 PM

image

நாட்டில் உள்ள விலங்குகளின் கணக்கெடுப்பு முடிவுகளை விவசாயம், கால்நடை வளங்கல், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு தற்போது வெளியிட்டுள்ளது.

விலங்குகள் கணக்கெடுப்பு அறிக்கையின்படி நாட்டில்,

5.17 மில்லியன் குரங்குகள்

1.74 மில்லியன் மந்தி குரங்குகள்

2.66 மில்லியன் மரஅணில்கள்

4.24 மில்லியன் மயில்கள் உள்ளன.

விலங்குகள் கணக்கெடுப்புக்காக 2.7 மில்லியன் ரூபா செலவிடப்பட்டதாக விவசாயம், கால்நடை வளங்கல், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு தெரிவித்துள்ளது.

வனவிலங்குகளினால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் பயிர்ச்சேதங்கள் ஆகியவற்றை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கத்தினால் விலங்குகள் கணக்கெடுப்பு கடந்த மார்ச் மாதம் 15 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

இந்த கணக்கெடுப்பு அறிக்கையின் ஊடாக, வனவிலங்குகளினால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் பாதிப்புக்கள் மற்றும் பயிர்ச்சேதங்களை தடுப்பதற்கான உத்திகளை கண்டறிய முடியும்.

இதனால் எதிர்காலத்தில் பாதுகாப்பான விவசாயம் மற்றும் பயிர்ச்செய்கைகளை மேற்கொள்ள முடியும்.

https://www.virakesari.lk/article/217259

  • 3 months later...
  • கருத்துக்கள உறவுகள்

வனவிலங்கு கணக்கெடுப்பின் போது பொதுமக்களால் வழங்கப்பட்ட தரவுகளில் 50 சதவீதமானவை மாத்திரமே துல்லியமானவை : பிரதி அமைச்சர்

Published By: Digital Desk 1

25 Sep, 2025 | 01:32 PM

image

அண்மையில் வனவிலங்கு கணக்கெடுப்பின் போது பொதுமக்கள் வழங்கிய தகவல்களில் சுமார் 50 சதவீதமானவையே துல்லியமானது என கமத்தொழில் மற்றும் கால்நடை வளங்கள் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை (25) உரையாற்றும் போதே இந்தத் தகவலை அவர் வழங்கினார்.

உணவுப் பயிர்களுக்கு தீங்கு விளைவிக்கும் விலங்குகளை அடையாளம் காணவும், அவற்றை முறையாக ஆய்வு செய்யவும், தகுந்த நடவடிக்கை எடுக்கவும் நோக்கமாகக் கொண்டு, 2025 மார்ச் மாதம் 15 ஆம் திகதியன்று நாடு முழுவதும் வனவிலங்கு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

நாடு முழுவதும் ஒரே நேரத்தில் மக்களினால் குரங்குகள், மக்கா குரங்குகள், மயில்கள் மற்றும் இராட்சத அணில் போன்ற விலங்குகளை அடிப்படையாகக் கொண்டு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

குரங்குகள் மற்றும் மக்கா குரங்குகள் பற்றி பொதுமக்கள் வழங்கிய தரவுகளில் 50 சதவீதமானவையே துல்லியமானது என்பது உறுதிப்படுத்தப்பட்டதாக பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கருத்து வெளியிடுகையில்,

தரவுகள் சரிபார்ப்பின் போது, குரங்குகள் மற்றும் மக்கா குரங்குகள் பற்றி பொதுமக்கள் அளித்த தகவல்களில் 50சதவீதமானவை துல்லியமானது என்பது உறுதிப்படுத்தப்பட்டது.

அதன்படி, உணவுப் பயிர்களுக்கு வனவிலங்கு சேதத்தைக் குறைப்பதற்கான பரிந்துரைகளை வழங்குவதற்குப் பொறுப்பான குழு, கணக்கெடுப்புத் தரவுகளின் அடிப்படையில் அவை உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

அதிகாரப்பூர்வ அறிக்கையின் அடிப்படையில் மதிப்பிடப்பட்ட விலங்கு எண்ணிக்கையையும் அவர் இதன்போது வெளிப்படுத்தியுள்ளார்.

அதன்படி,

மக்கா குரங்குகள்– 5,197,517

குரங்குகள்– 1,747,623

முள்ளம்பன்றிகள் – 2,666,630

ராட்சத அணில்கள் – 4,285,745

யாழ்ப்பாணத்தில் உள்ள டெல்ஃப்ட் தீவின் ஆறு கிராம அலுவலகர் பிரிவுகளில், தொடர்புடைய விலங்குகள் இல்லாததால், கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை எனவும் கமத்தொழில் மற்றும் கால்நடை வளங்கள் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/226045

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, ஏராளன் said:

யாழ்ப்பாணத்தில் உள்ள டெல்ஃப்ட் தீவின் ஆறு கிராம அலுவலகர் பிரிவுகளில், தொடர்புடைய விலங்குகள் இல்லாததால், கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை எனவும் கமத்தொழில் மற்றும் கால்நடை வளங்கள் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/226045

100 வருடங்களை தாண்டிய வீரகேசரி…. டெல்ஃப்ட் தீவு என்று நெடுந்தீவை எழுதும் கொடுமையை என்னவென்று சொல்வது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விவசாயம் செய்தவர்களுக்கு தெரியும் குரங்குகளின் அழிப்புகளும் ஆக்கினைகளும்.....இதுகளை வெருட்டுறதுக்கெண்டே அனுமான் வெடி கொழுத்திய அனுபவங்கள் எக்கச்சக்கம். நாள் செல்ல செல்ல மூலைவெடிக்கும் குரங்குகள் அசையவில்லை. எல்லாம் அதுகளுக்கு பழகி விட்டது.😂

கடைசியாக எடுத்த ஆயுதம் வெற்றியளித்தது.😎

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

கடசியாக எடுத்த ஆயுதம் வெற்றியளித்தது.😎

குமாரசாமி அண்ணே… கடைசியாக எடுத்த ஆயுதம் என்ன என்பதையும் சொல்லுங்கண்ணே. 🙂

எனது தோட்டத்திலும் சில குரங்குகள், 🐒🐒🐒 குரங்கு சேட்டை விட்டு கொண்டு திரிகுதுகள்… அதுகளின் வாலை ஒட்ட நறுக்க வேண்டி இருக்குது. 🐒🐒 🐵 😂

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

யாழிலும் எண்ணுகிறார்களாமா?

மாவட்டத்தை சொன்னேன்😂

பிகு

நான் கடைசியாக எடுத்த ஆயுதம் - வெளிநாட்டுக்கு தப்பி ஓடியது😂.

  • கருத்துக்கள உறவுகள்
On 22/4/2025 at 11:46, தமிழ் சிறி said:

குரங்குகள் தொடர்பாக மீண்டும் கணக்கெடுப்பு

2025 ஆம் ஆண்டிற்கான இலங்கை மக்கள் தொகை சுமார் 23.23 மில்லியன்ஆகும் என்று Worldometer போன்ற ஆதாரங்கள் மதிப்பிடுகின்றன, மேலும் இது 2024-ல் இருந்ததை விட சற்றே அதிகரித்துள்ளது. ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியம் இதை 23.2 மில்லியனாக குறிப்பிடுகிறது. 

குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன். 🐒

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
18 hours ago, தமிழ் சிறி said:

குமாரசாமி அண்ணே… கடைசியாக எடுத்த ஆயுதம் என்ன என்பதையும் சொல்லுங்கண்ணே. 🙂

மிளகாய்த்தூள். சொல்வழி கேக்காத எந்த தாட்டான் குரங்குக்கும் மாங்காயோடை மிளகாய் தூளை கலந்து வைச்சு பாருங்கோ ...பின்னங்கால் பிடரியிலை பட தலை தெறிக்க ஓடித்துலையும். 😂

18 hours ago, தமிழ் சிறி said:

எனது தோட்டத்திலும் சில குரங்குகள், 🐒🐒🐒 குரங்கு சேட்டை விட்டு கொண்டு திரிகுதுகள்… அதுகளின் வாலை ஒட்ட நறுக்க வேண்டி இருக்குது. 🐒🐒 🐵 😂

வாற கிழமை சந்திப்பம்தானே. அப்ப இன்னொரு ஐடியா சொல்லுறன்.😄

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

மிளகாய்த்தூள். சொல்வழி கேக்காத எந்த தாட்டான் குரங்குக்கும் மாங்காயோடை மிளகாய் தூளை கலந்து வைச்சு பாருங்கோ ...பின்னங்கால் பிடரியிலை பட தலை தெறிக்க ஓடித்துலையும். 😂

அதையும் ஒருக்கா முயற்ச்சித்து; பார்ப்போம்.சரி வந்தால் உங்களுக்கு ஒரு முடை மாம்பழம் தருவேன்.கடந்த இரன்டு வருடங்களாக ஒரு மாங்காய் கூட பிடுங்கியது இல்லை.யம்பு மரமே காலி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

@குமாரசாமி //மிளகாய்த்தூள். சொல்வழி கேக்காத எந்த தாட்டான் குரங்குக்கும் மாங்காயோடை மிளகாய் தூளை கலந்து வைச்சு பாருங்கோ ...பின்னங்கால் பிடரியிலை பட தலை தெறிக்க ஓடித்துலையும். 😂

வாற கிழமை சந்திப்பம்தானே. அப்ப இன்னொரு ஐடியா சொல்லுறன்.😄//

a13802f1afe98af756fabf2492b7106f.gif giphy.gif

d06318e74312f56cf9a957624b8613a7.gif

வாற கிழமை... உங்களுடைய அந்த பொன்னான ஐடியாவை கேட்க ஆவலாக உள்ளேன். 🙂

ஏனென்றால்.... குரங்குகளின் தொல்லை பெருந் தொல்லையாக கிடக்கு. 🤥

ஒரு குரூப் வந்தால் காரியமில்லை. கருங்குரங்கு, செங்குரங்கு, மந்தி, ஒரங்குட்டான், கொரில்லா என்று... பன்றி போலை கூட்டமாக வருகுதுகள். அதுகளை பிடித்து.... யாழ்ப்பாண முறையில் நலம் எடுத்து அனுப்ப வேண்டும் என்று திட்டமும் இருக்கு. 😂

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

மிளகாய்த்தூள். சொல்வழி கேக்காத எந்த தாட்டான் குரங்குக்கும் மாங்காயோடை மிளகாய் தூளை கலந்து வைச்சு பாருங்கோ ...பின்னங்கால் பிடரியிலை பட தலை தெறிக்க ஓடித்துலையும். 😂

வாற கிழமை சந்திப்பம்தானே. அப்ப இன்னொரு ஐடியா சொல்லுறன்.😄

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சுவைப்பிரியன் said:

அதையும் ஒருக்கா முயற்ச்சித்து; பார்ப்போம்.சரி வந்தால் உங்களுக்கு ஒரு முடை மாம்பழம் தருவேன்.கடந்த இரன்டு வருடங்களாக ஒரு மாங்காய் கூட பிடுங்கியது இல்லை.யம்பு மரமே காலி.

சுவைப்பிரியன்... மாங்காய் - மிளகாய்த்தூள் மிக்சிங் மருந்தை குரங்குகளுக்கு வைத்து.... எவ்வளவு வெற்றியளிக்குது என்று எமக்கும் அறியத் தாருங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 27/9/2025 at 08:36, சுவைப்பிரியன் said:

அதையும் ஒருக்கா முயற்ச்சித்து; பார்ப்போம்.சரி வந்தால் உங்களுக்கு ஒரு முடை மாம்பழம் தருவேன்.கடந்த இரன்டு வருடங்களாக ஒரு மாங்காய் கூட பிடுங்கியது இல்லை.யம்பு மரமே காலி.

பகிடி அல்ல. குரங்குகளுக்கு ஈவு இரக்கம் பார்க்க கூடாது.--------- மீதி கூட்டங்கள் அந்த பக்கம் அண்டாது.

On 27/9/2025 at 09:42, தமிழ் சிறி said:

சுவைப்பிரியன்... மாங்காய் - மிளகாய்த்தூள் மிக்சிங் மருந்தை குரங்குகளுக்கு வைத்து.... எவ்வளவு வெற்றியளிக்குது என்று எமக்கும் அறியத் தாருங்கள்.

எதுவுமே பழக்கத்திற்கு வந்து விட்டால் குரங்கிற்கு பழைய புத்தி வந்துவிடும்.😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, குமாரசாமி said:

பகிடி அல்ல. குரங்குகளுக்கு ஈவு இரக்கம் பார்க்க கூடாது.--------- மீதி கூட்டங்கள் அந்த பக்கம் அண்டாது.

எதுவுமே பழக்கத்திற்கு வந்து விட்டால் குரங்கிற்கு பழைய புத்தி வந்துவிடும்.😂

குமாரசாமி அண்ணை, கூட்டமாக… காட்டுப் பன்றிகள் போல் வரும் குரங்குகளுக்கு,

மாங்காய் + மிளகாய்த் தூளை கலந்து வைத்தால்…. அதனை சாப்பிட்ட குரங்குகள் மட்டும் மீண்டும் அந்தத் தோட்டத்திற்கு வர மாட்டுதா அல்லது அதனை சாப்பிடாத குரங்குகளும் அந்தப் பக்கமே எட்டிப் பார்க்காதா. ஏனென்றால்…. அது உறைக்கும் என்று, தன்னுடைய கூட்டத்திற்கு தனது மொழியில் சொல்லியிருக்கக் கூடிய உணர்வு இருக்கலாமோ என நினைக்கின்றேன். 🙂

Edited by தமிழ் சிறி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.