Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-275.jpg?resize=750%2C375&ssl

துப்பாக்கி பிரயோகத்தில் டான் பிரியசாத் மரணம்!

வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் சமூக ஆர்வலரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினருமான டான் பிரியசாத் (Dan Priyasad) உயிரிழந்துள்ளார்.

வெல்லம்பிட்டி, சாலமுல்ல பகுதியில் அமைந்துள்ள லக்சந்த செவன அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தின் மேல் தளத்தில் நேற்று (22) இரவு 9:10 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

துப்பாக்கிச் சூடு பிஸ்டல் ரக துப்பாக்கியைப் பயன்படுத்தி நடத்தப்பட்டதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 39 வயதான டான் பிரியசாத், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிந்துள்ளார்.

அவரது தோள்பட்டையில் இரண்டு துப்பாக்கிச் சூட்டுகளும், மார்பில் இரண்டு துப்பாக்கிச் சூட்டுகளும் பாய்ந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவத்தில் மற்றொருவர் லேசான காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் கொழும்பு, தேசிய வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லம்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

https://athavannews.com/2025/1429188

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

New-Project-291.jpg?resize=750%2C375&ssl

டான் பிரியசாத் மீதான துப்பாக்கி சூடு: மூவர் கைது!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர் டான் பிரியசாத்தின் கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட சந்தேக நபர்களுக்கு தகவல் வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்களை மேற்கோள் காட்டி தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெல்லம்பிட்டியில் உள்ள லக்சந்த செவன அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள தனது உறவினரின் வீட்டில் இருந்தபோது டான் பிரியசாத் நேற்று (22) இரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார்.

சம்பவத்தில் பலத்த காயமடைந்த டான் பிரியசாத், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு துப்பாக்கிதாரிகள் வீட்டிற்குள் புகுந்து டான் பிரியசாத்தை சுட்டுக் கொன்றுவிட்டு அப்பகுதியை விட்டு தப்பிச் சென்றதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

துப்பாக்கிச் சூடு நடத்த துப்பாக்கி பிஸ்டல் ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய நபர்களைக் கைது செய்ய வெல்லம்பிட்டிய பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

https://athavannews.com/2025/1429270

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

492345124_1114208850719166_3529212187241

491996079_1114107870729264_3667208359717

492001573_1012273910856707_2535212014290

491970043_1113809130759138_6292219847167

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் கொலை போலுள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

493135743_1085810060250502_2675699796271

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

492007493_1299728228178106_3866613313852

492004634_1121797606629763_7498863415609

டான் பிரசாத் இறந்துவிட்டாராம். - 3 வது அறிக்கையில் பொலிஸ் உறுதிப்படுத்தியது!

Vaanam.lk

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

492105891_633066383066272_84159669620356

அத்திம்பேர் தூங்கலை... செத்துப் போயிட்டாரு.

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளை வானுக்கு பதிலா மோட்டார் சைக்கிள் ஓடுது போல.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டான் பிரியசாத் கொலை சம்பவம் | பின்னணி - சாட்சிய அழிப்பு ?

  • கருத்துக்கள உறவுகள்

மேலே சென்றவர் அங்கும் இனவாதத்தை பரப்புவாரா? 😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, island said:

மேலே சென்றவர் அங்கும் இனவாதத்தை பரப்புவாரா? 😂

அங்கு ஒரே மொழி தான் பல மொழிகள் இல்லை

உலகம் முழுவதும் தமிழ் மொழி பேசினால் உலகில் ஒரு பிரச்சினையும் ஏற்பாடது 😀

  • கருத்துக்கள உறவுகள்
 

Rajkumar Rajeevkanth 

யாரின் இறப்பையும் சிரித்துக் கொண்டாட எனக்கு மனது வராது. ஆனால் பலர் டான் ப்ரியசாத்தின் மரணத்தில் சிரிக்கின்றார்கள்.

2019இல் இதே காலத்தில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற பாரிய வன்முறைகளுக்கு காரணகர்த்தாவாக இருந்தவர் இவர்.

சிங்களத் தேசிவாத மற்றும் பெளத்த பேரினவாத அமைப்பு ஒன்றின் ஏற்பாட்டாளாரக இவர் இருந்தார்.

காலிமுகத்திடல் போராட்டதின் மீது மே 9 மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் சூத்திரதாரி.

அதே போல் இங்கு நாம் நடத்தும் முள்ளிவாய்க்கால் நினைவு தினம், 83ம் ஆண்டு இனவழிப்பின் நினைவு நாள் மற்றும் அனைத்து தமிழ் சார் நிகழ்வுகளையும் அடியாட்களுடன் வந்து தொடர்ச்சியாக குழப்பும் ஒருவர்.

நேரடியாக என்னை புxலி என்றும் பயங்கரவாதி என்றும் தொடர்ச்சியாக இவரின் அமைப்பினூடாக அச்சுறுத்திக்கொண்டே இருந்தார்கள்.

போதைப்பொருள் கடத்தல் மற்றும் பொலீசை அச்சுறுத்தியமை தொடர்பில் பல குற்றச்சாட்டுகளைக் கொண்ட ஒருவர்.

மொட்டுக் கட்சியுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்ட ஒருவர். இவருடன் சம்மந்தப்பட்ட வழக்குகளில் முக்கிய சூத்திரதாரிகள் யார் என்று தெரியப்படுத்தாமலே இறந்துவிட்டார்

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, தமிழ் சிறி said:

சமூக ஆர்வலரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினருமான டான் பிரியசாத் (Dan Priyasad) உயிரிழந்துள்ளார்.

என்னப்பா இவர் சமுக சேவகரா

3 hours ago, nunavilan said:

சிங்களத் தேசிவாத மற்றும் பெளத்த பேரினவாத அமைப்பு ஒன்றின் ஏற்பாட்டாளாரக இவர் இருந்தார்.

சிங்கள தேசியத்தை இனி தமிழ்மொழி பேசும் ஜெ.வி.பி யினர் காப்பாற்றுவார்கள் ...நீ நிம்மதியாக சென்றுவா தோழனே

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kandiah57 said:

உலகம் முழுவதும் தமிழ் மொழி பேசினால் உலகில் ஒரு பிரச்சினையும் ஏற்பாடது 😀

உலகம் முழுவதும் தமிழ் மொழி பேசினால் ஆங்கிலத்திலேயே பாடம் நடத்தப்படும் பள்ளிகள் உலகம் முழுவதும் உருவாகி ஆங்கிலம் சிறப்புடன் உலகை ஆளும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

New-Project-304.jpg?resize=750%2C375&ssl

டான் பிரியசாத் மரணம்; பிரதான சந்தேக நபர் கைது!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வேட்பாளர் டான் பிரியசாத் கொலையுடன் தொடர்புடைய முக்கிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டதை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அவர் ஏப்ரல் 22 அன்று வெல்லம்பிட்டியில் உள்ள ‘லக்சந்த சேவன’ அடுக்குமாடி குடியிருப்பில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

https://athavannews.com/2025/1429376

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

492535267_1094704399361198_3302176046509

492658324_1095156379316000_7877275470224

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

492305169_1095511725947132_4256898876739

492611292_1095204779311160_3473584043327

493526962_1096076249224013_5403476920881

492487883_1096064552558516_2490781205130

  • கருத்துக்கள உறவுகள்
On 24/4/2025 at 09:28, putthan said:

என்னப்பா இவர் சமுக சேவகரா

சிவநேசதுரை சந்திரகாந்தன் நாட்டின் தேசிய வீரன், டான் பிரியஸாத் சமூக சேவகர், கஜ்ஜா குறிப்பிடப்படவில்லை. இந்த சந்திர காந்தன் பிணையில் வந்தால், அவரும் மேலே அனுப்பிவைக்கப்படுவார். இன்னும் ஒரு சிங்களப்பாடகரையும் குறிப்பிடுகிறார்கள். ஒரு வேலையாளை ஒழித்துக்கட்ட இன்னொரு வேலையாள் அமர்த்தப்படுகிறார். அமர்த்துபவர்கள் ஒழியுமட்டும் இது தொடர்ந்து கொண்டே இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, satan said:

சிவநேசதுரை சந்திரகாந்தன் நாட்டின் தேசிய வீரன், டான் பிரியஸாத் சமூக சேவகர், கஜ்ஜா குறிப்பிடப்படவில்லை. இந்த சந்திர காந்தன் பிணையில் வந்தால், அவரும் மேலே அனுப்பிவைக்கப்படுவார். இன்னும் ஒரு சிங்களப்பாடகரையும் குறிப்பிடுகிறார்கள். ஒரு வேலையாளை ஒழித்துக்கட்ட இன்னொரு வேலையாள் அமர்த்தப்படுகிறார். அமர்த்துபவர்கள் ஒழியுமட்டும் இது தொடர்ந்து கொண்டே இருக்கும்.

புளோட் மோகன் என்பவரும் இந்த தேசிய வீரர் பட்டியலில் உள்ளார் ...இவருக்காக நீதியரசர் ஒருவர் புத்தகமும் வெளியிட்டுள்ளார்...

ஒழித்து கட்டுவதால் பிரச்சனைகள் தொடரும் ....

71 /87 ஆம் ஆண்டுகளில் இடதுசாரிகளின் கிளர்ச்சி என்ற போர்வையில் பிராந்திய வல்லரசுகளுடன் சேர்ந்து அரசு ஒழித்துகட்டியது ஜெ.வி.பியினரை

1977/2009 வரை பயங்கரவாதிகள் என ஒர் இனத்தை ஒழித்துகட்டினார்கள் பிராந்திய வல்லர்சுகளுடன் சேர்ந்து..

கோத்தா ஆட்சிக்கு வந்த சிறுது காலத்தில் சிறை உடைப்பை ஏற்படுத்தி போதைப்பொருள் மன்னர்களை ஒழித்து கட்டினார்கள் ...

அனுரா அரசின் ஒழித்து கட்டலாக இருந்தால் இதுவும் மீண்டும் துளிர்விடும் ...

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு காலத்தில், இனக்கலவரங்களாலும் தமிழ் மக்களின் குருதியிலும் நிறைந்த, நனைந்த  நாடு, இப்போ துப்பாக்கி மரணங்களால் அலறப்போகிறது. தங்கள் விசுவாசிகளை தாங்களே கொன்றுவிட்டு, சிறப்பு பெயர்களை அளிப்பார்கள். ஆரம்பத்தில் எல்லாம் களிப்பு, இறுதியில் கலக்கம். இது யாம் ஏற்கெனவே எதிர்பார்த்ததுதான். இது இறுதி சந்தர்ப்பம் ஆட்சியாளருக்கு. இல்லையேல் இவர்களும் இதே நிலையை எதிர்கொள்வர். கொலைகள், குற்றச்சாட்டுக்கள் இந்த நாட்டுக்கு ஒன்றும் புதியதல்ல. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

courts1-768x427-1-768x427-1.jpg?resize=7

டேன் பிரியசாத் கொலை சம்பவத்தின் பிரதான சந்தேக நபரை தடுப்புக்காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி!

டேன்  பிரியசாத் சுட்டுக் கொலைசெய்யப்பட்ட  சம்பவத்தில்  கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பிரதான  சந்தேக நபரை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை தடுப்புக்காவலில் விசாரணை செய்வதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியுள்ளது

டேன் பிரியசாத் கொலை சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் மிரிஹானை விசேட விசாரணை பிரிவினரால்  கொழும்பு மேலதிக நீதவான்  ஹர்ஷன கெக்குனுவெலவிடம் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்

இதன்போது சந்தேக நபரை தடுப்புக்காவலில் விசாரணைக்கு உட்படுத்துவதற்கு பொலிஸார் நீதவானிடம் அனுமதி கோரியிருந்தனர்.

இந்த நிலையில் டேன்  பிரியசாத் சுட்டுக் கொலைசெய்யப்பட்ட  சம்பவத்தில்  கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பிரதான  சந்தேக நபரை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை தடுப்புக்காவலில் விசாரணை செய்வதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் மிரிஹானை விசேட புலனாய்வு பிரிவுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த 22 ஆம் திகதி இரவு வெல்லம்பிட்டியவில் உள்ள ‘லக்சந்த செவன’ தொடர்மாடி  குடியிருப்பில் வைத்து; டேன் பிரியசாத் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருந்து. மோட்டார் சைக்கிளில் வருகைதந்த  இரண்டு துப்பாக்கிதாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளமை தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக இதுவரைசுமார் 10 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

டேன் பிரியசாத் கொலை சம்பவம் தொடர்பாக வெல்லம்பிட்டி பொலிஸார்   மற்றும் மேல்மாகாண குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

எவ்வாறாயின் இந்த கொலைசம்பவம் தனிப்பட்ட காரணங்கள் நிமித்தம் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

https://athavannews.com/2025/1429556

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

492501725_1096344589197179_6764106859341

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

👉 https://www.facebook.com/watch?v=1377835846823602 👈

👆 பாடமாய் அமையும் காணொளி💔 டான் பிரசாத்தின்... துடிக்கும் குழந்தைகள், தவிக்கும் மனைவி😕

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.