Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அம்புலன்ஸ் ..( அவசர நோயாளர் காவு வண்டி )

அண்மையில் ஒரு சம்பவம் என்னை சிந்திக்க வைத்தது . மனித நேயம் எங்கே என்று ....ஒரு முதியோர் ஒன்றுகூடும் நிகழ்வில், அந்த நிகழ்வு நிறைவுறும் தருவாயில் ஒரு மூதாட்டிக்கு மூக்கினால் ரத்தம் சிந்த ஆரம்பித்தது. நன்றாக இறுக்கி பிடித்தவாறு இருக்கிறார் ...துடைக்கும் பேப்பர்கள் தோய்ந்துபோகின்றன அயலில் நின்றவர்கள் எத்தனையோ பேப்பர்களை கொடுத்தாகிவிட்ட்து (அத்தனையும் ரத்தத்தால் தோய்ந்தபடி ) அம்புலன்சுக்கு அழைத்தாகி விட்ட்து.ஐந்து நிமிடத்தில் வந்துவிடுவதாக சொல்கிறார்கள்.

ஒருவாறு பத்துநிமிடத்தில் அம்புலன்ஸ் வருகிறது . அவர்கள் அந்த நிலையத்தை தாண்டி செல்கிறார்கள் ..பின் மேலும் ஐந்து நிமிடம் கழித்து திருப்பி கொண்டு வருகிறார்கள். நோயாளி நடக்க சிரமம் உள்ளவர் .படியைக் காட்டி ஏறி உள்நுழையும்படி சொல்கிறார்கள் .மூதாட்டி முடியாமல் படியில் உட்க்கார்ந்து விட்டார் . அதுவும் இரண்டு வெள்ளையின பெண் ஒட்டியும் உதவியாளரும்.(இரக்கமென்பதே இல்லாமல் ) .ஒருவாறு ஒருவர் ஸ்ட்ரெச்சர் ஐ வெளியே எடுத்து அதில் படுக்க வைத்து ஏற்றிச் சென்றார்கள்...

..(.மீதி அவர் சொல்லக்கேள்விப்பட்ட்து ).

அங்கு கொண்டுசென்றதும் ஒரு காத்திருப்பு இடத்தில நிறுத்திவிட்டார்கள்

ஒருவர் நேர்ஸ் வருவார் என ...சொல்லிவிட்டு .( மதிய நேரம்,.... பதடடம் ) ரத்தம் கசிந்துகொண்டேயிருக்கிறது. மேலும் ...மேலும்.... துடைக்கும் காகிதம் கேட்க்கிறார் அவர்களும் தேடுகிறார்கள் ஒரு துடிப்பு.....ஒரு உதவும் மனம் ...(பொசிந்து ஓடுவது ரத்தம அதை உடலில் பெற எவ்வளவு ஊட்ட்ச்சத்துக்கள தேவை இடையே கட்டிபடட ரத்தம் வாயாலும் வடிகிறது ) ஒரு இரக்கம் அனுதாபம் ....மேலும் ரெண்டு மணி நேர தாமதத்துக்கு பின் ( படுக்கை இல்லையாம் . கிளீண் பண்ணுகிறார்களாம்)

டாகடர் பார்க்க வருகிறார்..... உதவி டாகடர் பார்த்து ..மருந்து தோய்ந்த பஞ்சு ஒன்றை மூக்கினுள் செலுத்தினார்களாம் அதுவும் நிற்கவில்லை பின் பெரிய டாகடர் வந்து ஒருவித வயர் பூடட படட (சற்று அசெளகரியம் தரும்) மூக்கினுள் நுளைத்து சற்று கவனித்து மேலும் அரைமணி தாமதித்து வீட்டிற்கு அனுப்பினர்களாம். மூன்றாம் நாளதை நீக்க வரும்படி .

நாம வாழும் நாடு (கனடா )மருத்துவ துறையில் மிகவும்

சிறப்பாக இருந்தது. ஒரு காலத்தில ....தற்போது ...தாமதங்கள் ...கால நீடிப்புகள் .வைத்தியர் பற்றாக குறை .....உதவியாளரின்( பணியாளரின் ) அசமந்த போக்கு ....எங்கே செல்கிறது மனித நேயம்.

சிறப்பு வைத்தியரின் முன்பதிவு எடுக்க மாதங்களாகும் ( மாசி மாதம் நோயால் வருந்தியவனுக்கு ஆடிமாதம் சிறப்பு வைத்தியர் முன்பதிவு கிடைத்தது )

மனித உயிர் அவ்வளவு மலி னமா ?

தாமதிக்கும் ஒவ்வொருகணமும் ...

தவணை முறையில் மரணம் நிகழும்

....

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நிலாமதி said:

இங்கே இங்கிலாந்திலும் இப்பிடித்தான். மருத்துவத்துக்கானநிதி ஒதுக்கீடு காணாது. அதைவிட மனிதாபிமானம் குறைந்த உலகில் வாழ்கிறோம்

  • கருத்துக்கள உறவுகள்

பணம் சார்ந்த உலகமாகிவிட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

கனடா, பிரிட்டன் ஆகிய நாடுகளில் இருக்கும் மக்கள் வரி மூலம் வழங்கப்படும் மருத்துவ சேவையில் இது ஒரு இயல்பாக இருக்கிறது. கனடாவில், மாகாணங்களுக்கு மருத்துவ சேவை வழங்கும் அதிகாரங்களை மாற்றிக் கொடுத்திருக்கிறார்கள் என நினைக்கிறேன் (இப்படிச் செய்திருக்கா விட்டால் நிலை இன்னும் மோசமாக இருந்திருக்கும்). கனடாவின் வயதானோரின் தொகை (ஏனைய மேற்கு நாடுகளில் நடப்பது போலவே) அதிகரித்து வருவதாலும், மருத்துவ சேவைகளின் செலவு அதிகரித்து வருவதாலும் இப்படியான நிலைமைகள் உருவாகியிருக்கின்றன. உண்மையில், எந்த நாடும் இலவசமான மருத்துவ சேவையை வழங்க முடியாது, யாரோ ஒருவரின் செலவில் தான் அது நடக்க வேண்டும் (இலங்கையில் அரசு வெளிநாடுகளில் இருந்து நன்கொடை/கடன் பெற்று இலவச சேவையை வழங்குகிறது).

ஆனால், எந்த மருத்துவ சேவையிலும் சில விடயங்களைத் தவிர்க்க முடியாது. உதாரணமாக, அவசர சிகிச்சைப் பிரிவிற்கு ஒருவர் சென்றால் அவரது நோய்த்தீவிரத்தைப் பொறுத்துத் தான் முன்னுரிமை கிடைக்கும். எனவே, மூக்கில் இருந்து இரத்தம் வரும் ஒருவரை, நெஞ்சு வலியில் வரும் ஒருவரை விட காக்க வைத்துத் தான் உள்ளே எடுப்பர். இதை Triage என்பார்கள். இப்படி அலைக்கழியாமல் இருக்க ஒரு வழி, உயிர் ஆபத்தான நிலைகள் தவிர்ந்த சந்தர்ப்பங்களில் அம்புலன்சை அழைக்காமல், உடனடி முதலுதவி கிடைக்கக் கூடிய Urgent care சிகிச்சை நிலையங்களை நாட வேண்டும். எது உயிர் ஆபத்தான நிலை, எது சாதாரண உபாதை என்று புரிந்து கொள்ள, எங்கள் உடல் பற்றிய கொஞ்சம் புரிதல் எங்களுக்கு இருக்க வேண்டும்.

https://pmc.ncbi.nlm.nih.gov/articles/PMC7138369/

👆2018 இல் வெளிவந்த ஒரு கட்டுரையின் படி, அமெரிக்காவை விட கனடா ஒரு பிரஜைக்கு மருத்துவத்திற்காக செலவிடும் தொகை பாதியாக இருக்கிறது. ஆனால், 1000 பேருக்கு இருக்கும் மருத்துவர்களின் எண்ணிக்கை, தாதியரின் எண்ணிக்கை, 10,000 பேருக்கு இருக்கும் மருத்துவமனைக் கட்டில்களின் எண்ணிக்கை என பல அளவீடுகள் - health service metrics கனடாவிலும் அமெரிக்காவிலும் ஒரே எண்ணிக்கையாகத் தான் இருக்கின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனியில்…. நோயாளர் காவு வண்டியின் சேவையும், பணி புரிபவர்களின் வேகமும் மிகுந்த திருப்தியாக உள்ளது. வீதியில்… அவசர ஒலி எழுப்பி செல்லும் போது, மற்றைய வாகன ஒட்டிகள் அதன் முக்கியத்துவம் கருதி உடனேயே இடமும் வலமும் ஒதுங்கி நடு வீதியை அம்புலன்ஸ்சிற்காக ஒதுக்கி விடும் அழகே தனி.

வாகன அனுமதிப் பத்திரம் எடுக்கும் போது… அவசர நோயாளர் வண்டி, தீயணைப்பு வண்டியின் முக்கியத்துவத்தை சொல்லிக் கொடுப்பதால்… அனைத்து வாகன ஓட்டிகளும் இதனை நன்கே புரிந்து வைத்துள்ளார்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.