Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி ‘ஏக்கிய ராஜ்ய’ முறைமையை ஏற்றுக்கொள்ளாது!

cvk.png

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி ‘ஏக்கிய ராஜ்ய’ முறைமையை ஏற்றுக்கொள்ள மாட்டாது அதுமட்டுமல்ல அவற்றை முழு வீச்சில் எதிர்க்கும் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

ஏக்கிய ராஜ்ய முறைமையை இலங்கை தமிழ் அரசு கட்சி ஏற்றுக் கொண்டுவிட்டதாக அண்மைய தேர்தல் பரப்புரை கூட்டங்களில் எதிர்தரப்பினரால் தெரிவிக்கப்படும் கருத்து தொடர்பில் ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்:-

இலங்கைத் தமிழரசுக் கட்சி ஒற்றையாட்சியை ஆதரிக்கிறது என்னும் கருத்தை நாம் தெளிவாக மறுத்துள்ள போதும் சிலர் பொது வெளியில் தொடர்ந்து பேசுகின்றனர்.

முதலில், ஒற்றையாட்சியை ஏனைய அரசியல் கட்சிகள் ஏற்றுநின்ற காலகட்டத்தில் அதனை மறுதலித்து சமஷ்டி முறையான அரசமைப்பை கோரி உருவாக்கப் பட்டதே , சஷ்டிக் கட்சி என்றும் அழைக்கப்பட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சி என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

மேலும் ஜனாதிபதி அனுர குமார திசநாயக்கவோ ,அவரது கட்சி சார்ந்த அமைச்சர்களோ அல்லது ஜே வீ பீ கட்சியின் முக்கியர்த்தர் எவருமோ ” ஏக்கிய ராஜ்ய ” என்ற சொற்கள் அடங்கிய அரசியல் அமைப்பு வரைவில் இருந்து புதிய வரைபை தொடரலாம் என்று எந்த இடத்திலும் கூறவில்லை.

அப்படிக் கூறி இருந்தால் நாம் அதனை ஏற்பதாகக் கூறியதாக சொல்பவர்கள் அவர்கள் எங்கே எப்பொழுது, கூறினார்கள் என்பதையும் நாம் எப்பொழுது எங்கே அவ்வாறு ஏற்பதாக கூறினோம் என்பதையும் ஆதாரத்துடன் தெரிவிக்க வேண்டும்.

அதை விடுத்து பொத்தம் பொதுவாக சகட்டு மேனிக்கு பேசுவது பொருத்தம் அற்றதும் அபத்தமானதும் ஆகும்.

ஏக்கிய ராஜ்ய என்ற சொற்பதம் பற்றி 2019 ஆம் ஆண்டுக்குப் பின்பு சிங்களவர் எவரும் பேசுவது இல்லை அது அரசாங்கத்தினாலும் எம்மாலும் எப்போதோ கைவிடப்பட்ட ஒன்று.

ஆனால் இங்கே மட்டும் இல்லாத ஒரு ஊருக்கு பெயர் வைப்பது போன்று இதனை காழ்ப்புணர்வு காரணமாக தமிழரசுக் கட்சியின் பெயரைக் கெடுக்கும் நோக்கில் மீண்டும் மீண்டும் பேசுகிறார்கள்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் என்ற ரீதியிலும் கட்சியின் மிக சிரேஸ்ர நிலையில் உள்ளவன் என்ற வகையிலும் கட்சியின் கொள்கை வகுத்தலில் முக்கியபங்கு வகிப்பவன் என்ற வகையிலும் எமது கட்சி ஒற்றையாட்சி முறைமையையோ ” ஏக்கிய ராஜ்ய ” என்ற முறைமையையோ ஏற்றுக்கொள்ள மாட்டாது மட்டுமல்ல அவற்றை முழு வீச்சில் எதிர்க்கும் என்பதையும் தெரிவித்துகொள்கின்றேன்.

அவ்வாறு ஏதாவது முன்மொழிவு அரசினால் முன்வைக்கப்பட்டால் அதனை எமது எட்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் பாராளுமன்றத்தில் எதிர்வாதம் செய்து எதிர்த்து வாக்களிப்பார்கள் என்றும் ஏற்கெனவே நான் கூறி இருக்கிறேன் இதனை மீண்டும் வலியுறுத்துகிறேன்.

இந்தக் கருத்தை தெரிவிக்கும் பொறுப்பும் உரிமையும் எனக்கு உண்டு என்பதையும் திடமாக வலியுறுத்துகிறேன்.

ஒருவேளை நான் ஒரு மேட்டுக்குடி சாராதவன் என்பதால் யாரவது மேட்டுக்குடி சார்ந்தவர்தான் சொல்ல வேண்டும் என நினைக்கிறார்களோ தெரியவில்லை.

அவர்களுக்கு எல்லாம் நான் கூறிக்கொள்வது இலங்கைத் தமிழரசுக் கட்சி சாமானிய மக்களுக்கானது. அவர்களில் ஒருவன் நான் ஆயினும் எந்த மேட்டுக்குடியினர்க்கும் குறைந்தவனும் அல்ல,நீங்கள் எதிர்பார்ப்பது போல இனிமேல் எந்த மேட்டுக்குடி மேலாதிக்ககாரரும் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் இறக்குமதி செய்யப்பட மாட்டார்கள் என்பதையும் ஆணித்தரமாக பதிவு செய்கிறேன் என்றார்.

https://akkinikkunchu.com/?p=322181

  • கருத்துக்கள உறவுகள்

சொற்களிலும் சுலோகங்களிலும் மட்டும் தொங்கி கொண்டிராது ஜதார்த்தத்தை (Reality) ஏற்றுக் கொண்டு வட கிழக்கில் தமிழர் வாழ்வு சிறக்கு நீங்கள் அனைவரும் சேர்ந்து வேலை செய்ய வேண்டுமே தவிர இப்படி ஆளுக்காள் அடிபட்டு சுய நல அரசியல் நடத்தக்கூடாது. Reality கசக்க தான் செய்யும். அதற்காக அடுத்த தலைமுறையுயும் பலி கொடுத்து தமிழ் மக்கள் தொகையை மேலும் குறைவதற்கு உங்கள் அரசியல் காரணமாகி விடக்கூடாது. மரமண்டை தமிழ் தேசிய முன்னணி கூட சிந்தித்து செயற்பட வேண்டிய காலமிது.

  • கருத்துக்கள உறவுகள்

ஏக்கிய ராஜ்ய தொடர்பாக சட்டத்தரணி சுமந்திரன் தொடர்ந்தும் பொய் கூறுகிறார்

என் பி.பி ஒரு பாரிய அடியை உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வாங்க போகின்றது.

சமஸ்டி தீர்வு பற்றி 9 ஆவது நிமிடத்தில்.

12 ஆவது நிமிடத்தில் இருந்து ஏக்கிய ராட்சிய பற்றிய விளக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி ‘ஏக்கிய ராஜ்ய’ முறைமையை ஏற்றுக்கொள்ள மாட்டாது அதுமட்டுமல்ல அவற்றை முழு வீச்சில் எதிர்க்கும் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

இது சுமந்திரனின் கூற்றுக்கு முரணாக உள்ளதே?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

இது சுமந்திரனின் கூற்றுக்கு முரணாக உள்ளதே?

தேர்தல் வந்தால், இப்படி தலைகீழாக பேசி மக்களை ஏமாற்றுவார்கள், பின் தாம் என்ன சொன்னோம் என்பதையே மறந்து, ஏக்கய அரசியல்  வரைபை வரைந்ததே நாம், ஏக்கய என்பதற்கு சரியான விளக்கம் இல்லை என்று விளக்கம் வேறு சொல்வார்கள். பாராளுமன்ற தேர்தல் முடிந்தவுடனேயே அந்த  ஏக்கய வரவின்படி பிரச்சனையை தீர்க்கப்படும் என்று வேறு சட்டாம்பி தெரிவித்திருந்தாரே, அப்போ இந்த சிவஞானம் எங்கே போயிருந்தார்? எதிர்த்து குரல் எழுப்பவில்லையே? தேர்தலில் வெல்வதற்காக சிவஞானம் எதை வேண்டுமானாலும் பிரட்டி சொல்வார். சுமந்திரனை தாக்கி அறிக்கை விட்ட சிவஞானம், மறுநாள் அதற்கு மாறாக அறிக்கை விட்டவர். அவரிடம் எந்த அதிகாரமுமில்லை, அவரை யாரும் நம்பிக்கைக்குரியவராக ஏற்றுக்கொள்வதுமில்லை சுமந்திரன் உட்பட. ஆனால் முடிந்தவரை அவரை தன் காரியங்களுக்காக பயன்படுத்திக்கொள்வார் அவ்வளவுதான். 

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலும் தமிழ்த் தேசிய அரசியல் பரப்பும்

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, கிருபன் said:

வீச்சில் எதிர்க்கும் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

ஐயா ஏன் இந்த வீராப்பு...உங்களை விட 20 வயசு குறைந்த எங்களுக்கே அரசியலிருந்து ஒதுங்க வேணும் போல இருக்கு ...நாங்கள் நடந்தாலே மூச்சு வாங்குது ...இதில நீங்கள் முழுமூச்சுடன் எதிர்க்க போறீங்களோ?கஸ்டமான விடயம்..

எது எப்படியோ இந்த வயசிலயும் தமிழ் தேசியம் பேசுவதற்கு நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, கிருபன் said:

அவர்களுக்கு எல்லாம் நான் கூறிக்கொள்வது இலங்கைத் தமிழரசுக் கட்சி சாமானிய மக்களுக்கானது. அவர்களில் ஒருவன் நான் ஆயினும் எந்த மேட்டுக்குடியினர்க்கும் குறைந்தவனும் அல்ல,நீங்கள் எதிர்பார்ப்பது போல இனிமேல் எந்த மேட்டுக்குடி மேலாதிக்ககாரரும் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் இறக்குமதி செய்யப்பட மாட்டார்கள் என்பதையும் ஆணித்தரமாக பதிவு செய்கிறேன் என்றார்.

சுமந்திரன் இப்போது செல்லாக் காசு அதனால் இந்த ஐயா பேசுகின்றார்

அதுவும் சுமந்தரனுக்கு எதிராகப் பேசுவதுபோல ......

பாராளுமன்ற தேர்தலில் வாங்கிய அடியைவிட இந்த உள்ளுராட்சி

தேர்தலில் தமிழரசு கட்சி பலமாக அடி வாங்கும் என்ற பயத்தில் ஐயா

கனக்க உளர வெளிக்கிட்டுவிட்டார்

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, கிருபன் said:

முறைமையையோ ” ஏக்கிய ராஜ்ய ” என்ற முறைமையையோ ஏற்றுக்கொள்ள மாட்டாது மட்டுமல்ல அவற்றை முழு வீச்சில் எதிர்க்கும் என்பதையும் தெரிவித்துகொள்கின்றேன்

இதனால் என்ன பயன் உண்டு” தமிழ் மக்களுக்கு ?? எதுவுமில்லை எனவே நீங்கள் ஆதரிக்கலாம் அதனாலும் எந்தவொரு பயனுமில்லை ஆகவே ஆதரிப்பது

எதிர்ப்பது இரண்டுமே ஒன்று தான் அதாவது எந்த பலனுமில்லை நீங்கள் கிழவன்கள் வீட்டுகுள்இருங்கள் இளைஞர்களை வீட்டுக்கு வெளியில் விடுங்கள் அவர்கள் அரசியல் செய்யட்டும். அரசியலை படிக்கட்டும் அவர்கள் பிழை விட்டாலும் கவலையில்லை உங்கள் போன்ற வயோதிபரகள் பிழை விடுவதும் நொண்டி சாட்டுக்கள் சொல்வதும் ஏற்க முடியாது

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nunavilan said:

உள்ளூராட்சி மன்றத் தேர்தலும் தமிழ்த் தேசிய அரசியல் பரப்பும்

ஹிஹி..... சிவஞானத்திற்கு அறளை பேந்து போச்சுதா அல்லது அரசியல்வாதியின் ஏமாற்று குணமா? நேரத்திற்கு நேரம் ஒரு பேச்சு பேசுறார். இவர் எல்லாம் ஒரு பழுத்த அரசியல்வியாதி.

3 hours ago, வாத்தியார் said:

சுமந்திரன் இப்போது செல்லாக் காசு அதனால் இந்த ஐயா பேசுகின்றார்

சாச்சா ... அப்பிடியொன்றுமில்லை. சுமந்திரனாவது அரசியலில், அதுவும் தமிழ் அரசியலில் இருந்து ஒதுங்குவதாவது. மக்கள் அவரை ஒதுக்கியபோதும் ஒதுங்காதவர், அவர் தமிழ் இனம் ஒழிக்கப்படும்வரை அரசியலில் இருந்து ஒதுங்கமாட்டார். அதன் பின் அரசியல் செய்யும் காரணமும் இருக்காது அவருக்கு. அவர் கட்சியை வெல்லவைப்பதற்காக என்ன வேண்டுமானாலும் பேசி மக்களை ஏமாற்றுங்கள் என்று இவருக்கு பச்சை கொடி காட்டியிருக்கிறார். வென்றபின் நான் அப்பிடி சொல்லேலை, அது பச்சைப்பொய் என்று காலை ஆட்டியவாறு பத்திரிகையாளருக்கு சொல்லி, நான் சொன்னதென்னவென்றால், ...... என்று உருட்டி பத்திரிகையாளரை முட்டாளாக்குவார்.

3 hours ago, வாத்தியார் said:

அதுவும் சுமந்தரனுக்கு எதிராகப் பேசுவதுபோல ......

அதெல்லாம், மக்களை ஏமாற்றி வாக்கு பெட்டியை நிரப்புவதற்காக போடும் நாடகம். இவர் கதையெல்லாம் ஒரு கதையா?

3 hours ago, putthan said:

எது எப்படியோ இந்த வயசிலயும் தமிழ் தேசியம் பேசுவதற்கு நன்றிகள்

அவர் என்ன விரும்பியா பேசுகிறார்? பேசவேண்டிய கட்டாயத்தில் பேசுகிறார். இப்போதுதானே பதில் தலைவர் பதவியை ஏற்றிருக்கிறார். சம்பந்தர் இறக்கும்வரை, அந்தபதவியை விட்டிறங்க விரும்பவில்லை. மாவையர் தானாகவே விட்டுக்கொடுத்தும் அந்தபதவி வில்லங்கமே அவரது உயிரை காவுகொண்டது. இவரும் அவ்வாறே இருக்க பல தகிடுதத்தம் ஆடியவர். தலைவர் என்றால்; பதவி என்பதுதான் இப்போது பொருளாகும். ஆனால் பொறுப்பு எந்தவிதத்திலும் இல்லை. பதவிக்காக தெருவிலே சண்டையிடுமளவிற்கு கேவலமாகிவிட்டது. மக்கள் தொடர்ந்து தமக்கு வாக்களிக்க வேண்டுமென எதிர்பார்க்கும் இவர்கள், மக்கள் எதிர்பார்ப்பதுபோல் அவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கிறார்களா? 

 

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.