Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யுக்ரைனுடனான கனிம வள ஒப்பந்தத்தில் அமெரிக்கா கைச்சாத்து!

%E0%AE%AF%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE+%E0%AE%B5%E0%AE%B3+%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE+%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%21+

யுக்ரைனுடனான கனிம வள ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. 

யுக்ரைனின் கனிம வளங்களை அமெரிக்கா அணுகுவதற்கான ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை கடந்த பல மாதங்களாக இடம்பெற்று வந்தது. 

குறித்த ஒப்பந்தம் இரு தரப்புக்கும் இடையில் கடந்த பெப்ரவரி மாதம் கைச்சாத்திடப்படத் திட்டமிடப்பட்டிருந்த போதிலும், யுக்ரைன் மற்றும் அமெரிக்க ஜனாதிபதிகளுக்கு இடையில் இடம்பெற்ற கருத்து மோதல் காரணமாக ஒப்பந்தம் ரத்துச் செய்யப்பட்டது. 

இந்தநிலையிலேயே, அமெரிக்காவுடனான கனிம வள ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்குத் தயாரென யுக்ரைன் நேற்று அறிவித்தது. 

இதனையடுத்து அமெரிக்காவும், யுக்ரைனும் கனிம வள ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. 

அத்துடன், இரு நாடுகளும் புனரமைப்பு முதலீட்டு நிதியை உருவாக்குவதற்கு ஒப்புக்கொண்டுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

https://www.hirunews.lk/tamil/404313/யுக்ரைனுடனான-கனிம-வள-ஒப்பந்தத்தில்-அமெரிக்கா-கைச்சாத்து

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-6.jpg?resize=750%2C375&ssl=1

உக்ரேனுடன் கனிம வள ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அமெரிக்கா!

பல மாதங்களாக நடைபெற்ற பதற்றமான பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் உக்ரேனும், அமெரிக்காவும் புதன்கிழமை (ஏப்ரல் 30) ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பால் பெரிதும் ஊக்குவிக்கப்பட்ட உக்ரேனிய கனிம வள ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

ரஷ்யாவுடனான போரிலிருந்து உக்ரேனின் பொருளாதார மீட்சியைத் தூண்டுவதற்காக ஒரு மறுகட்டமைப்பு முதலீட்டு நிதியை நிறுவ இரு நாடுகளும் இந்த ஒப்பந்தம் மூலமாக ஒப்புக் கொண்டுள்ளன.

உக்ரேனில் நீடித்த அமைதி மற்றும் வளர்ச்சிக்கு இரு தரப்பினரும் உறுதிபூண்டுள்ளனர் என்பதை இந்த ஒப்பந்தம் வெளிப்படுத்துவதாக அமெரிக்க திறைசேரியின் செயலாளர் ஸ்காட் பெசென்ட் கூறினார்.

அதேநேரம், அமெரிக்க இராணுவ உதவியைப் பெறுவதற்கு இந்த ஒப்பந்தம் அவசியமானதாகக் கருதப்படுகிறது என்று உக்ரேன் கூறியுள்ளது.

எனினும், இந்த ஒப்பந்தம் குறித்து ரஷ்யா இன்னும் பதிலளிக்கவில்லை.
உக்ரேனில் கிராஃபைட், டைட்டானியம் மற்றும் லித்தியம் போன்ற முக்கியமான கனிமங்கள் அதிக அளவில் இருப்பதாக நம்பப்படுகிறது.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, இராணுவ பயன்பாடுகள் மற்றும் தொழில்துறை உள்கட்டமைப்பு ஆகியவற்றில் அவற்றின் பயன்பாடு காரணமாக அவை மிகவும் பெறுமதி மிக்கதாக கருதப்படுகின்றன.

அமெரிக்காவுடனான சீனாவின் வர்த்தகப் போருக்கு மத்தியில் இந்த ஒப்பந்தம் வந்துள்ளது.

https://athavannews.com/2025/1430182

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா - யுக்ரேன் ஒப்பந்தம்: டிரம்ப், ஸெலென்ஸ்கி மோதலுக்கு பின் புதிய திருப்பம்

கனிமவள ஒப்பந்தத்தில் அமெரிக்காவும் யுக்ரேனும் கையெழுத்திட்டன

பட மூலாதாரம்,US DEPARTMENT OF THE TREASURY

படக்குறிப்பு,யுக்ரேனில், நீடித்த அமைதி மற்றும் செழிப்புக்கு இரு தரப்பினரும் உறுதிபூண்டுள்ளதாக அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட் (இடது)தெரிவித்துள்ளார்.

கட்டுரை தகவல்

  • எழுதியவர், பெர்ன்ட் டெபஸ்மேன் ஜூனியர், டாம் பேட்மேன்

  • பதவி, பிபிசி செய்திகள்

  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

பல மாதங்கள் நீடித்த பதற்றமான பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, யுக்ரேனின் கனிம மற்றும் எரிசக்தி இருப்புக்களை விற்பனை செய்வதன் மூலம் எதிர்காலத்தில் கிடைக்கும் லாபத்தைப் பகிர்ந்து கொள்வது தொடர்பான ஒப்பந்தத்தில் யுக்ரேனும் அமெரிக்காவும் கையொப்பமிட்டன.

யுக்ரேனின் பாதுகாப்பு மற்றும் மறுகட்டமைப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலீடு செய்வதற்கான பொருளாதார ஊக்கத்தை வழங்கும் நோக்கத்தில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், யுக்ரேனுக்கு ஏற்கனவே தங்கள் நாடு செய்துள்ள உதவியின் அளவு தொடர்பான அமெரிக்காவின் கவலைகளை நிவர்த்தி செய்வதையும் நோக்கமாகக் கொண்டு இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

யுக்ரேனில் கிராஃபைட், டைட்டானியம், லித்தியம் என பல்வேறு முக்கியமான கனிமங்கள் பெருமளவில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்தக் கனிமங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, ராணுவ தொழில்நுட்பம், உட்கட்டமைப்பு உள்பட பல முக்கியமான துறைகளுக்கு பயன்படும் என்பதால் இந்த கனிமங்களுக்கு சர்வதேச அளவில் தேவை அதிக அளவில் உள்ளது.

கனிமவள ஒப்பந்தத்தில் அமெரிக்காவும் யுக்ரேனும் கையெழுத்திட்டன

பட மூலாதாரம்,EPA

யுக்ரேனில், நீடித்த அமைதி மற்றும் செழிப்புக்கு இரு தரப்பினரும் உறுதிபூண்டுள்ளதாக அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட் தெரிவித்துள்ளார்.

போரினால் சிதிலமடைந்திருக்கும் யுக்ரேனின் பொருளாதாரத்தை உத்வேகத்துடன் மேம்படுத்துவதற்காக முதலீட்டு நிதியை உருவாக்குவது தொடர்பாகவும் இந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிதாக உருவாக்கப்பட்ட அமெரிக்க-யுக்ரேன் மறுசீரமைப்பு முதலீட்டு நிதியம், 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ரஷ்யா யுக்ரேன் மீது போர் தொடுத்ததிலிருந்து அமெரிக்கா வழங்கிய "குறிப்பிடத்தக்க நிதி மற்றும் பொருள் ஆதரவை" அங்கீகரிக்கிறது என புதன்கிழமை பிற்பகல் அமெரிக்க கருவூலம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்த ஒப்பந்தம், ''யுக்ரேன் பொருளாதாரத்தை வளர்ச்சியடைய வைக்க, அதன் வளங்களை சிறப்பாக பயன்படுத்த உதவும்'' என்று அமெரிக்க கருவூலச் செயலாளர் வெளியிட்ட வீடியோ அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

டிரம்ப் நிர்வாகம், முன்னெப்போதையும் விட யுக்ரேனுடன் நெருக்கமாகவும் ஒற்றுமையுடன் செயல்படுவதை இந்த அறிக்கை உணர்த்துகிறது.

இது "ரஷ்யாவின் முழு அளவிலான ஆக்கிரமிப்பை" குறிக்கிறது மற்றும் "ரஷ்யாவின் இந்த போர் முயற்சிக்கு நிதியளித்த அல்லது ஆதரவளித்த நாடுகளும், நபர்களும் மறுகட்டமைப்பட்ட யுக்ரேனால் பயனடைய முடியாது" என்று அமெரிக்காவின் அறிக்கை கூறுகிறது.

அமெரிக்கா மற்றும் யுக்ரேன் இடையிலான இந்த ஒப்பந்தம் தொடர்பாக ரஷ்யா இதுவரை பதிலளிக்கவில்லை.

கனிமவள ஒப்பந்தத்தில் அமெரிக்காவும் யுக்ரேனும் கையெழுத்திட்டன

பட மூலாதாரம்,DANIEL WITTENBERG/BBC

அமெரிக்காவிடம் இருந்து ராணுவ உதவியை பெறுவதற்காக யுக்ரேனுக்கு இந்த ஒப்பந்தம் மிகவும் அவசியமானது என கருதப்படுகிறது.

இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக புதன்கிழமையன்று வாஷிங்டனுக்கு சென்ற யுக்ரேனின் துணைப் பிரதமர் யூலியா ஸ்வைரிடென்கோ, "புதிய நிதியம், நமது நாட்டிற்குள் உலகளாவிய முதலீட்டை ஈர்க்கும்" என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த ஒப்பந்தத்தின் விதிகளை பட்டியலிட்ட யுக்ரேனின் துணைப் பிரதமர், கனிமங்கள், எண்ணெய் மற்றும் எரிவாயு தொடர்பான திட்டங்களையும் இது உள்ளடக்கும் என்றும், ஆனால் வளங்கள் யுக்ரேனின் சொத்தாகவே இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

இந்த கூட்டாண்மை, 50:50 அடிப்படையில் சமமாக இருக்கும் என்றார் அவர்.

இருப்பினும் யுக்ரேன் நாடாளுமன்றத்தால் இந்த ஒப்பந்தம் அங்கீகரிக்கப்பட வேண்டும்.

இந்த ஒப்பந்தத்தின் கீழ், யுக்ரேனுக்கு அமெரிக்கா புதிய உதவிகளை வழங்கும் என்று கூறிய யுக்ரேனின் துணைப் பிரதமர், உதாரணமாக வான் பாதுகாப்பு அமைப்புகளுக்கு உதவிகள் கிடைக்கும் கூறினார்.

எதிர்காலத்தில் யுக்ரேனுக்கு எந்தவொரு பாதுகாப்பு உத்தரவாதங்களையும் வழங்குவதற்கு முன்நிபந்தனையாக இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பலமுறை வலியுறுத்தியிருந்தார்.

முக்கியமாக, அமெரிக்கா எதிர்காலத்தில் வழங்கும் பாதுகாப்பு உதவிக்கு ஈடாக, யுக்ரேன் தன் நாட்டின் சில இயற்கை வளங்களை அணுக அமெரிக்காவை அனுமதிக்கும் என ஒப்பந்தத்தின் வரைவு குறிப்பிடுகிறது.

கனிமவள ஒப்பந்தத்தில் அமெரிக்காவும் யுக்ரேனும் கையெழுத்திட்டன

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆனால், இது டிரம்ப் விரும்பியதை விட குறைவாகவே இருக்கும். போர் தொடங்கியதிலிருந்து வழங்கப்பட்ட அனைத்து அமெரிக்க ராணுவ உதவிகளுக்கும் யுக்ரேனிடம் இருந்து பணத்தை திரும்பப் பெற வேண்டும் என்பதே அமெரிக்காவின் இன்றைய அதிபரின் எண்ணமாக இருந்தது.

யுக்ரேன் அதிபர் ஸெலென்ஸ்கியால் அமெரிக்காவிடம் இருந்து, சில சலுகைகளைப் பெற முடிந்தது. கடைசி நிமிட மாற்றங்களைச் செய்ய எதிர் தரப்பு முயற்சிப்பதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியதை அடுத்து ஒப்பந்தம் கையொப்பமாவதில் தாமதமானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் குறித்த தகவல்களை நன்கு அறிந்த ஒரு அமெரிக்க வட்டாரம், வார இறுதியில் செய்யப்பட்ட சில விதிமுறைகளை மீண்டும் மாற்ற யுக்ரேன் முயற்சித்ததாக விமர்சித்தது.

இந்த ஒப்பந்தம் தொடர்பான குறிப்பிட்ட விதிமுறைகள் மற்றும் செயல்முறைகளை விளக்கும் ஆவணங்களில் இரு நாடுகளின் பிரதிநிதிகளும் கடந்த வாரம் கையெழுத்திட்டனர்

உண்மையில் ஆரம்ப ஒப்பந்தம் இந்த ஆண்டு பிப்ரவரியில் கையெழுத்திடப்படவிருந்தது. டிரம்ப், ஸெலென்ஸ்கி இடையே வெள்ளை மாளிகையில் ஏற்பட்ட சூடான விவாதத்தைத் தொடர்ந்து, ஒப்பந்தம் கையெழுத்தாவதில் தாமதம் ஏற்பட்டது.

போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கில் கலந்துக் கொள்ள சென்ற சந்தர்ப்பத்தில், டிரம்பும் ஸெலென்ஸ்கியும் நேரில் சந்தித்துப் பேசிய சில நாட்களுக்குப் பிறகு இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

மேலும், யுக்ரேனில் போர் நிறுத்தத்திற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அமெரிக்காவும் ரஷ்யாவும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ள நிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது.

கனிமவள ஒப்பந்தத்தில் அமெரிக்காவும் யுக்ரேனும் கையெழுத்திட்டன

பட மூலாதாரம்,GETTY IMAGES

புதன்கிழமை மாலை நியூஸ் நேஷன் நெட்வொர்க்கிடம் தொலைபேசியில் பேசிய டிரம்ப், ஒப்பந்தத்தை இறுதி செய்யவேண்டும் என வாடிகனில் தான் ஸெலென்ஸ்கியை சந்தித்தபோது அழுத்தம் கொடுத்ததாகக் கூறினார்.

"இரு நாடுகளும் கையெழுத்திடுவதற்கு தேவையான ஒப்பந்தத்தை உருவாக்குவது ஆக்கப்பூர்வமானதாக இருக்கும் என ஸெலன்ஸ்கியிடம் நான் தெரிவித்தேன்," என்றும், "ஏனென்றால் மிகப் பெரிய நாடான ரஷ்யா மிகவும் வலிமையானது, முன்னேறிச் செல்கிறது" என்றும் டிரம்ப் கூறினார்,

ரஷ்ய-யுக்ரேன் போர் தொடங்கியதிலிருந்து யுக்ரேனுக்கு வழங்கிய பல பில்லியன் டாலர் மதிப்பிலான உதவிகளுக்கான பலனை அமெரிக்கா இந்த ஒப்பந்தத்தின் மூலம் பெறும் என்றும் "உண்மையில் செய்த உதவிகள் இன்னும் அதிகமாக" இருக்கும் என்றும் அமெரிக்க அதிபர் கூறினார்.

"உலகின் பல இடங்களில் இல்லாத பல அரிய பொருட்கள் அவர்களிடம் உள்ளன, அது அவர்களிடம் உள்ள ஒரு பெரிய சொத்து."

பூமியில் அரிதாக இருக்கும் வளங்களில் 90 சதவிகிதத்தை வைத்திருக்கும் சீனாவுடன், வர்த்தகப் போரில் அமெரிக்கா ஈடுபட்டிருக்கும் இந்த சமயத்தில் யுக்ரேனுடனான அமெரிக்காவின் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c8ep3kj5e0ko

  • கருத்துக்கள உறவுகள்

டிரம்ப் - புட்டின் தனிஉறவை (அப்படி இருந்தால்), அரச / அரசாங்க நலன்கள் விஞ்சி விட்டது?

40 minutes ago, ஏராளன் said:

பூமியில் அரிதாக இருக்கும் வளங்களில் 90 சதவிகிதத்தை வைத்திருக்கும் சீனாவுடன்

உண்மையில் அவை அரிது அல்ல.

அவற்ட்ரை இயற்கை வளத்தில் இருந்து நேரடியாக பிரித்து எடுக்கப்பட கூடிய செறிவு குறைவு,

அதனால், அவை பிரித்து எடுக்கப்பட கூடிய நிலையில் இருப்பது, மற்ற பொதுவான உலோகங்கள் கனிம வலமாக இருப்பதை, அந்த குறிப்பிட்ட உலோக core ஆக மாற்றம் செய்யப்படும் படிமுறையில் உருவாகும் பக்க விளைவு பொருட்களில்.

ஆகவே, இந்த அரிதான உலோகங்களை உற்பத்தி செய்யம் முறை எங்கு செய்தாலும் ஒரே முறை தான்.

அநேகமான உலோகங்களை சீன உடற்பதி செய்வதால், பக்கவிளைவு பொருட்களும் சீனாவுக்கு கிடைக்கிறது, அதனால் அவற்றை பகுத்து 'அரிதான உலோகத்தை' எடுக்கும் முறையை சீன வளர்த்து வைத்து இருக்கிறது.

மறுவளமாக, இந்த அரிதான உலோகங்களை பிரித்து எடுப்பது மிகவும் சூழலை மாசுபடுத்த கூடியது. அத விலையாக சீனா விலையை செலுத்துகிறது.

அனால், இதில் அடிப்படை பிரச்சனை சீன அல்ல, மேற்கு, அதாவது சீன தன சொல்லுக்கு ஆட கூடிய நிலையில் வைத்து இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு.

சீன எந்த தொழில் நுட்பத்தை ஐய்வு செய்தலும், வளர்த்தாலும் மேட்ற்கு சொல்வது அச்சுறுத்தல்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 hours ago, தமிழ் சிறி said:

உக்ரேனுடன் கனிம வள ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அமெரிக்கா!

பல மாதங்களாக நடைபெற்ற பதற்றமான பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் உக்ரேனும், அமெரிக்காவும் புதன்கிழமை (ஏப்ரல் 30) ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பால் பெரிதும் ஊக்குவிக்கப்பட்ட உக்ரேனிய கனிம வள ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

பாவம் ஐரோப்பிய யூனியன் (ஜேர்மனி) 🤣

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, குமாரசாமி said:

பாவம் ஐரோப்பிய யூனியன் (ஜேர்மனி) 🤣

பாவம் ஜேர்மனி. உக்ரேனுக்கு... ஆயுதம், பணம், லட்சக் கணக்கான அகதிகள் என்று எடுத்து.. உக்ரேனின் கனிம வளத்தை ஆட்டையை போடுவோம் என்று காத்திருக்க, டிரம்பு... செலென்ஸ்கியை வெருட்டி கையெழுத்து வாங்கிப் போட்டார்.

அணில் ஏற விட்ட, 🐕‍🦺 யின் நிலைமை. 🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, தமிழ் சிறி said:

பாவம் ஜேர்மனி. உக்ரேனுக்கு... ஆயுதம், பணம், லட்சக் கணக்கான அகதிகள் என்று எடுத்து.. உக்ரேனின் கனிம வளத்தை ஆட்டையை போடுவோம் என்று காத்திருக்க, டிரம்பு... செலென்ஸ்கியை வெருட்டி கையெழுத்து வாங்கிப் போட்டார்.

அணில் ஏற விட்ட, 🐕‍🦺 யின் நிலைமை. 🤣

கனிம வளத்தை மட்டுமல்ல.....

ஜேர்மனி மில்லியன் செலவில் உக்ரேன் விவசாய நிலங்களை ஒப்பந்த அடிப்படையில் கைவசப்படுத்தியிருந்தது. கனரக வாகனங்கள் விவசாய தொழில்நுட்பங்களையெல்லாம் உக்ரேன் மண்ணில் வாரி இறைத்து முதலீடு செய்திருந்தது.

பாழாய்ப்போன புட்டினால் எல்லா திட்டங்களும் நாசமாகி விட்டது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.