Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இறுதி யுத்தத்தில் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் இராணுவத்தினால் போலீசாரிடம் கையளிக்கப்பட்டுள்ளது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
On 3/5/2025 at 05:17, தமிழ் சிறி said:

பல நூறு கிலோ தங்கம் இருக்கும் என்று முன்பு சொன்னவர்கள்.

இப்போ காட்டியது... ஒரு பொட்டலத்தில் உள்ள கொஞ்ச நகைகள் தானாம்.

மிகுதியை, மகிந்த... உகண்டாவில் கொண்டு போய் பதுக்கி விட்டார் போலுள்ளது. 😂

விடுத‌லை புலிகள் அமைப்பினரிடமிருந்த ந‌கைக‌ள் அரசுக்கு கிடைத்துள்ள‌மை ஜ‌னாதிப‌தி அநுர‌ குமார‌ அர‌சுக்கு கிடைத்த‌ வெற்றியாகும் என்ப‌துட‌ன் இந்த‌ நகைகளில் அதிக‌மான‌வை வடக்கு முஸ்லிம்களிட‌மிருந்து புலிக‌ளால் ப‌றிக்க‌ப்ப‌ட்ட‌வை என்ப‌தால் அந்த‌ நகைகளை அர‌சு முஸ்லிம்க‌ளுக்கு வழங்க வேண்டும் என‌ ஸ்ரீல‌ங்கா ஐக்கிய‌ காங்கிர‌ஸ் அர‌சை கோரியுள்ள‌து.

இது ப‌ற்றி உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ரும் ஐக்கிய‌ காங்கிர‌ஸ் ஸ்தாப‌க‌ த‌லைவ‌ருமான‌ முபாற‌க் அப்துல் ம‌ஜீத் ஜ‌னாதிப‌திக்கு அனுப்பி வைத்துள்ள‌ க‌டித‌த்திலேயே மேற்ப‌டி கோரிக்கை விடுக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.

எப்புடி இந்தக் கதை

  • கருத்துக்கள உறவுகள்

பெரும்பாலான தங்க நகைகள் வடக்கு முஸ்லிம்களிட‌மிருந்து புலிக‌ளால் ப‌றிக்க‌ப்ப‌ட்ட‌வை யே – ஆகவே விடுத‌லை புலிகளிடமிருந்து இராணுவத்தினால் மீட்கப்பட்ட தங்கத்தை அர‌சு, முஸ்லிம்க‌ளுக்கே வழங்க வேண்டும்

பாறுக் ஷிஹான்

விடுத‌லை புலிகளிடமிருந்த ந‌கைக‌ள்  அரசுக்கு கிடைத்துள்ள‌மை ஜ‌னாதிப‌தி அநுர‌ குமார‌ அர‌சுக்கு கிடைத்த‌ வெற்றியாகும் என்ப‌துட‌ன் இந்த‌  நகைகளில் அதிக‌மான‌வை வடக்கு முஸ்லிம்களிட‌மிருந்து புலிக‌ளால் ப‌றிக்க‌ப்ப‌ட்ட‌வை என்ப‌தால் அந்த‌  நகைகளை அர‌சு முஸ்லிம்க‌ளுக்கு வழங்க வேண்டும் என‌ ஸ்ரீல‌ங்கா ஐக்கிய‌ காங்கிர‌ஸ் அர‌சை கோரியுள்ள‌து.

இது ப‌ற்றி உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ரும் ஐக்கிய‌ காங்கிர‌ஸ் ஸ்தாப‌க‌ த‌லைவ‌ருமான‌ முபாற‌க் அப்துல் ம‌ஜீத் ஜ‌னாதிப‌திக்கு அனுப்பி வைத்துள்ள‌ க‌டித‌த்திலேயே மேற்ப‌டி கோரிக்கை விடுக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.

அதில் மேலும் தெரிவிக்க‌ப்ப‌ட்டிருப்ப‌தாவ‌து,


1990 ம் ஆண்டு வ‌ட‌க்கில் த‌மிழ் ம‌க்க‌ளுட‌ன் இர‌ண்ட‌ற‌ க‌ல‌ந்து வாழ்ந்த‌ முஸ்லிம்க‌ளை இன‌ ரீதியாக‌ பிரித்து விடுத‌லைப்புலிக‌ள் அம்ம‌க்க‌ளின் அனைத்து சொத்துக்க‌ளையும் ஆயுத‌ முணையில் ப‌றிமுத‌ல் செய்து வெளியேற்றிய‌து யாவ‌ரும் அறிந்த‌தே.

இதன் போது வடமாகாண முஸ்லிம்களின் ஒட்டுமொத்த உடமைகளையும் பறித்து எடுத்து விட்டு உடுத்திய உடுப்புடன்  வெளியேற்றப்பட்ட போது பெண்கள் அணிந்திருந்த தங்க ஆபரணங்களையும் கைகளில் மறைத்து கொண்டு வருவதற்கு இருந்த நகைகளையும் குறிப்பாக சிறுமிகளின் காதுகளிலும் கழுத்துகளில் இருந்த நகைகளைக் கூட கழற்றி எடுத்து விட்டே துரத்தினர்.

அத‌ன் பின் ம‌ஹிந்த‌ ராஜ‌ப‌க்ஷ‌ ஆட்சியில் புலிகள்  பதுக்கி வைத்திருந்த‌   பெருந் தொகையான நகைகளை அரச படையினர் கைப்பற்றி அத‌னை தாம் கொள்ளைய‌டிக்காது  அரசாங்கத்திடம் ஒப்படைத்தது பாராட்ட‌த்த‌க்க‌ செய‌லாகும்.

அந்த‌ ந‌கைக‌ள்  நீதி மன்ற உத்தரவில் பாது காத்து வைக்கப்பட்டிருந்து  தற்போதைய அரசு பொலிஸாரின் பாதுகாப்பில் பரிசீலனைக்காக கொடுக்கப்பட்டுள்ளதுட‌ன் நீதிமன்ற உத்தரவுடன்  அவற்றை இழந்த மக்கள் உரிய ஆதாரங்களை காட்டினால் வழங்கப்படலாம் என்ற அறிவிப்பும் விடுக்கப்பட்டுள்ளது. 

என்றாலும் அதிகமான முஸ்லிம்களிடம் எந்த வித ஆதாரமும் இல்லை என்ப‌துட‌ன் ந‌கைக‌ளை ப‌றி கொடுத்த‌  பலர் மரணமடைந்து விட்டனர்.

இவ்வாறான நிலையில் பெருமளவில் இழந்த முஸ்லிம்களின் நகைகளை அரசு நியாய‌மான‌ முறையில் ஆய்வு செய்து முஸ்லிம்களுக்குரிய‌  ந‌கைக‌ளை  ம‌திப்பீடு செய்து அவ‌ர்க‌ளிட‌ம் இத‌ற்கான‌ ச‌த்திய‌ பிர‌மாண‌ க‌டித‌ம் பெற‌ப்ப‌ட்டு வ‌ழ‌ங்க‌ வேண்டும் என‌ கௌர‌வ‌ ஜ‌னாதிப‌தியை கேட்டுக்கொள்கிறோம் என்றார்.



Thanks & Best Regards,

பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)
Journalist-මාධ්‍යවේදී

https://madawalaenews.com/20098.html

  • கருத்துக்கள உறவுகள்
On 2/5/2025 at 23:03, வாத்தியார் said:

விடுதலைப் புலிகள் மிரட்டி கொள்ளையடித்தார்கள்

என்று கூறினால் அவர்களுக்குப் பிரச்சனை வராது

என்று நினைக்கின்றேன்

இல்லை கண்டிப்பாக வரும் இந்த அரசாங்கம் அல்லது அடுத்த அரசாங்கம் .ஏதோவொரு அரசாங்கத்தால். பிரச்சனைகள் வரும் பிடித்து காலவரம்பின்றி சிறையில் அடைப்பார்கள்.

இவர்களை நகையை தருமாறு மக்கள் கேட்கவில்லை மக்கள் கேட்டது

எங்கள் காணிகளிருந்து வெளியேற்றம் காணமால். அக்கப்படடவர்களின். பூரண விபரங்களை ஏன் இன்னும் கொடுக்கவில்லை இந்த விடயத்தில் இது பழைய அரசாங்கம் தான் இந்த நகைகள் மிகக்குறைந்தது பெரும்பாலும் அரசியல்வாதிகள் காவல்துறையினர். திருடி விட்டார்கள் இருப்பது 10 %. நகைகள் வரலாம் அல்லது கூடி குறையும் இந்த பத்து வீதத்தை வைத்து நகைகள் கொடுத்த 100%. பேரையும் அவர்களின் தகவல்கள் அனைத்தையும் சேகரிக்கப்படும் புலிகள் அடித்து பறித்தவர்கள் என்று சொன்னாலும் கூட. இவர்களுக்கு ஆபத்து உண்டு”

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, alvayan said:

விடுத‌லை புலிகள் அமைப்பினரிடமிருந்த ந‌கைக‌ள் அரசுக்கு கிடைத்துள்ள‌மை ஜ‌னாதிப‌தி அநுர‌ குமார‌ அர‌சுக்கு கிடைத்த‌ வெற்றியாகும் என்ப‌துட‌ன் இந்த‌ நகைகளில் அதிக‌மான‌வை வடக்கு முஸ்லிம்களிட‌மிருந்து புலிக‌ளால் ப‌றிக்க‌ப்ப‌ட்ட‌வை என்ப‌தால் அந்த‌ நகைகளை அர‌சு முஸ்லிம்க‌ளுக்கு வழங்க வேண்டும் என‌ ஸ்ரீல‌ங்கா ஐக்கிய‌ காங்கிர‌ஸ் அர‌சை கோரியுள்ள‌து.

இது ப‌ற்றி உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ரும் ஐக்கிய‌ காங்கிர‌ஸ் ஸ்தாப‌க‌ த‌லைவ‌ருமான‌ முபாற‌க் அப்துல் ம‌ஜீத் ஜ‌னாதிப‌திக்கு அனுப்பி வைத்துள்ள‌ க‌டித‌த்திலேயே மேற்ப‌டி கோரிக்கை விடுக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.

எப்புடி இந்தக் கதை

இனக்கலவரம் வந்தால்.. தமிழனின் சொத்துக்களை கொள்ளையடிப்பதிலாகட்டும்,

கள்ளக்காணி பிடிப்பதிலாகட்டும், போரில் தமிழன் சேமித்த நகைகளை திருடுவதிலாகட்டும், தமிழன் விட்டுச் சென்ற வீடுகளில் உள்ள விலை உயர்ந்த பொருட்களை திருடுவதிலாகட்டும் எங்கும்....

மற்றவனின் சொத்துக்களை திருடுவது தான்... இந்த இனத்தின் குணம்.

திருடித் தின்னப் பிறந்தவர்கள். வெட்கம் கெட்டதுகள்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
On 3/5/2025 at 12:00, வாத்தியார் said:

கந்தையா அண்ணை உங்களின் இந்த வசனத்தின்படி புலிகள் பயங்கரவாதிகள் என நீங்கள் ஏற்றுக் கொள்ளுகிறீர்கள் எனவும் நான் வாதாடலாம்

அதை சிறி அண்ணை சரியான கருத்து எனக் கூறினார் எனவும் வாதாடலாம்

எழுதியதை சரியாக விளங்கிக் கொண்டால் சரி

பிழையாக விளங்கிக் கொண்டால் பிழை 🙏

இது எனது கருத்துக்கான பதிலா??? புரியவில்லை ?? பிடித்து சிறைப்படுத்தும். சாத்தியமில்லை என்பதை நிறுவுங்கள்.

On 3/5/2025 at 12:13, வாத்தியார் said:

புலிகள் புலிகள் என் சிங்கள தேசியவாதிகள் சிங்கள மக்களை ஏமாற்றியது போல......

தமிழ்த் தேசியவாதிகளும்...... எல்லோரும் அல்ல ஒரு சில தேசியம் பேசும் அரசியல்வாதிகள்......

விடுதலைப் புலிகளை முன் வைத்து..... பயங்கரவாதத் தடைச்ச சட்டத்தை முன்வைத்து மக்களை ஏமாற்றுகின்றார்கள்.

அப்படியான கருத்தாகவே கந்தையா அண்ணையின் கருத்தும் இருக்கின்றது .

இன்றைய நிலையில் ......

இல்லை எப்படி ?? பிரபாகரன் படம் வைத்திருந்தார் என்று பத்து ஆண்டுகளுக்கு மேலும் சிறையிலிருக்கிறார்கள். ....அப்புறம் பணம் நகை. கொடுத்தவன். எங்கே இருப்பான் ??

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, வாத்தியார் said:

இன்னொருவர் திரும்பக் கேட்பவர்கள் சிறைக்குப் போக வேண்டும் என்கிறார்

நிச்சயமாக உண்மை இதை மறுத்து உறுதி படுத்தவும்.

8 hours ago, வாத்தியார் said:

பின்னர் எங்களிடம் நிதி சேகரிக்க வந்த அந்த நல்ல மனிதர்

2009 க்குப் பின்னர் கேரளாவில் பல கோடி வியாபாரம் செய்து வருகின்றார்.

அதில் எனது பங்கும் இருக்கும் ஆனால் கேட்டாலும் திரும்பாத தரமாட்டார்

ஆனால் அவர் புலிகள் இல்லை புலிகள் உரிமைக்காக உயிரைக்கொடுத்தவர்கள்.

புலிகள் என்றால் என்ன??? இப்படி கொள்ளையடிப்பவன். உண்மையில் புலிகள் இல்லை மாறாக பஞ்சோத்திகள். இவர்களுக்கு உயிர் வாழ எதுவும் செய்வார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, தமிழ் சிறி said:

இனக்கலவரம் வந்தால்.. தமிழனின் சொத்துக்களை கொள்ளையடிப்பதிலாகட்டும்,

கள்ளக்காணி பிடிப்பதிலாகட்டும், போரில் தமிழன் சேமித்த நகைகளை திருடுவதிலாகட்டும், தமிழன் விட்டுச் சென்ற வீடுகளில் உள்ள விலை உயர்ந்த பொருட்களை திருடுவதிலாகட்டும் எங்கும்....

மற்றவனின் சொத்துக்களை திருடுவது தான்... இந்த இனத்தின் குணம்.

திருடித் தின்னப் பிறந்தவர்கள். வெட்கம் கெட்டதுகள்.

அவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் ...எனவே அவர்களை குற்றம் சொல்ல கூடாது

புலிகள் உயிருடன் இல்லை எனவே புலிகள் கள்ளர்கள். கொள்ளையார்கள். ....இப்படி எது வேண்டுமாயின் சொல்லலாம் யார் கேட்க முடியும் ????

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-25-1.jpg?resize=600%2C300&ss

பொலிஸ்மா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்ட ஆபரணங்கள் குறித்து நீதிமன்றம் உத்தரவு!

2009ஆம் ஆண்டு இறுதிகட்ட போர் நிறைவிற்கு வந்த காலப்பகுதியில் இலங்கை இராணுவத்தால் விடுதலைப்புலிகளிடமிருந்து மீட்கப்பட்டு பொலிஸ் மா அதிபரிடம் உத்தியோகப்பூர்வமாக கையளிக்கப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்களை உடனடியாக மதிப்பீட்டிற்கு அனுப்புமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

குறித்த நகைகளை தேசிய இரத்தினக்கல் ஆபரண அதிகார சபைக்கு அனுப்பிச் சோதித்து அறிக்கைப்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுத் துறை சார்பாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத் விடுத்த கோரிக்கையை பரிசீலித்த பின்னர், கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி இந்த உத்தரவுகளை பிறப்பித்தார்.

குறித்த ஆபரணங்கள் கடந்த 02ஆம் திகதி கொழும்பு பத்தரமுல்லையில் அமைந்துள்ள இலங்கை இராணுவத்தின் தலைமையகத்தில் வைத்து பொலிஸ் மா அதிபரிடம் உத்தியோகப்பூர்வமாக கையளிக்கப்பட்டன.

இதன்போது பதில் பொலிஸ் மா அதிபரினால் பொறுப்பேற்கப்பட்ட குறித்த ஆபரணங்கள் நீதிமன்ற உத்தரவுக்கமைய தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபையினால் அதன் பெறுமதி மதிப்பீடு செய்யப்பட்டதன் பின்னரே இலங்கை மத்திய வங்கியிடம் ஒப்படைக்கப்படுமென தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1430666

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தபய களவெடுத்த நகைகள் பற்றி எந்த பேச்சையும் காணவில்லை?

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, nunavilan said:

கோத்தபய களவெடுத்த நகைகள் பற்றி எந்த பேச்சையும் காணவில்லை?

அரகலய போராட்டத்தின் போது... கோத்தபாய வசித்த ஜனாதிபதி மாளிகையை கைப்பற்றிய தருணம்... அங்கிருந்து ஒரு கோடி ரூபாயை போராட்டக்காரர்கள் கண்டு பிடித்து, அதனை நீதிமன்றில் ஒப்படைத்தார்கள். கணக்கில் வராத அந்த ஒரு கோடி ரூபாய் கோத்தாவுக்கு எப்படி கிடைத்தது என்று இதுவரை எவரும் விசாரணை நடத்தவில்லை. சட்டம் எல்லாம்... அப்பாவி மனிதர்களுக்குத்தான். திமிங்கிலங்கள் வழமை போல தப்பிக் கொண்டே இருக்கும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.