Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

salt.jpg?resize=750%2C375&ssl=1

நாட்டில் உப்பு தட்டுப்பாடு!

நாட்டில் உப்பு இறக்குமதி தாமதமானதன் காரணமாக சந்தையில் உப்பு தட்டுப்பாடு நிலவுவதாக உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

30 மெட்ரிக் தொன் உப்பை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்திருந்த போதும் அது தாமதமாகியுள்ளதாகவும் இதனால் சந்தையில் உப்பு தட்டுப்பாட்டை காணக்கூடியதாக உள்ளதாகவும் அந்த சங்கத்தின் தலைவர் கனக அமரசிங்க தெரிவித்தார்.

இதேவேளை, எதிர்வரும் வாரத்தில் குறித்த உப்புத் தொகை கிடைத்த பின்னர் உப்பு தட்டுப்பாடு கட்டுப்படுத்தப்படும் என உப்பு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, 1 கிலோகிராம் உப்புப் பொதியை 450 முதல் 500 ரூபா வரையிலான விலையில் வர்த்தகர்கள் விற்பனை செய்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

உப்பு விலை தொடர்பாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் நுகர்வோர் விவகார அதிகார சபையும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தேவையான சோதனை நடவடிக்கைகளை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தகவல் பணிப்பாளர் அசேல பண்டார தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2025/1431716

  • கருத்துக்கள உறவுகள்

13 MAY, 2025 | 08:02 AM

image

நாட்டில் உள்ளூர் சந்தையில் உப்புக்கு தட்டுப்பாடு நிலவுவது தொடர்பில் உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் கவனம் செலுத்தியுள்ளது.   

இறக்குமதி செய்யப்பட்ட உப்பு நாட்டை வந்தடைவதில் ஏற்பட்டுள்ள தாமதமே இவ்வாறு உப்புக்கு தட்டுப்பாடு நிலவுவதாக உப்பு உற்பத்தியார்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

30 மெட்ரிக்தொன் உப்பை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் அனுமதி அளித்திருந்தாலும், அதனை இறக்குமதி செய்வதில் ஏற்பட்ட தாமதத்தால் சந்தையில் உப்புக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளாதாகவும் இதனால் உப்புக்கு தட்டுப்பாடும் விலை உயர்வும்  ஏற்பட்டுள்ளதாக உப்பு உற்பத்தியார்கள் சங்கத்தின் தலைவர் கனக அமரசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இறக்குமதி செய்யப்பட்ட உப்பு எதிர்வரும் வாரத்திற்குள் நாட்டை வந்தடையும் எனவும் அதன் பின்னர் உப்புக்கு தட்டுப்பாடு நிலவாதென்றும் அச் சங்கத்தின் தலைவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்நிலையில், சந்தையில் உப்புக்கான விலை கடுமையாக அதிகரித்துள்ளதாக நுகர்வோரும் வர்த்தகர்களும் தெரிவிக்கின்றனர்.

நாட்டின் சில பகுதிகளில் ஒரு கிலோகிராம் கட்டி உப்பு பையொன்றின் விலை 450 ரூபா முதல் 500 ரூபா வரையில் விற்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

உப்புக்கான விலை உயர்வு நுகர்வோர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பலர் இது தொடர்பில் சமூக ஊடகங்களில் தங்களின் அதிருப்தியை வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், உப்பு விலை அதிகரிப்பு தொடர்பாக பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/214570

  • கருத்துக்கள உறவுகள்

உப்பே இறக்குமதி செய்யும் அளவில் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, nunavilan said:

உப்பே இறக்குமதி செய்யும் அளவில் உள்ளது.

இனவாதம் இருக்கும் மட்டும் அந்த தீவுக்கு மீட்சி இல்லை .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

496499983_1027676209546001_7227441657947

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

66d7936d50a956c0f1b9f8db_66d792c0765ca7b

உப்பிற்குத் தட்டுப்பாடு: பேக்கரி உற்பத்திகள் பாதிப்பு.

நாட்டில் நிலவிவரும் உப்புத் தட்டுப்பாடு காரணமாக தமது தொழிலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன  கருத்துத் தெரிவிக்கையில் ” ‘தற்போது உப்பு தொடர்பாக பெரிய பிரச்சினை எழுந்துள்ளது  எனவும், இது தொடர்பாக உரிய  அமைச்சருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்  தேவையான அளவு உப்பு வழங்கப்படும் என்று உறுதியளித்துள்ளார் எனவும்,  அதற்காக தாம் காத்திருப்பதாகவும்” தெரிவித்துள்ளார்.

அத்துடன் பேக்கரிகளுக்கு உப்பு கட்டிகள் தேவையில்லை எனவும். பெரும்பாலும் உப்பு தூளே  பயன்படுத்தப்படுகிறது எனவும். உப்புத் தூளிற்கே தற்போது தட்டுப்பாடு காணப்படுவதாகவும்,தெரிவித்த  என்.கே. ஜயவர்தன, அடுத்த வாரத்திற்குள் இந்த பிரச்சினை தீர்க்கப்படும் என்று தாம்  நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2025/1432484

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

New-Project-195.jpg?resize=750%2C375&ssl

உப்பு இறக்குமதிக்கான வர்த்தமானி அறிவிப்பு!

உப்பு இறக்குமதிக்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் 10 ஆம் திகதி வரை உப்பு இறக்குமதி செய்ய அனுமதி அளித்து வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக இறக்குமதி கட்டுப்பாட்டாளர் நாயகம் உப்புல்மாலி பிரேமதிலக்க தெரிவித்தார்.

வர்த்தமானியின்படி உப்பு இறக்குமதி செய்ய உரிமம் தேவையில்லை.

சுகாதார அமைச்சின் பரிந்துரைகளைக் கொண்ட எந்தவொரு இறக்குமதியாளரும் உப்பை இறக்குமதி செய்யலாம் என்றும் வர்த்தமானி சுட்டிக்காட்டுகிறது.

இதன் கீழ் அயோடின் கலக்கப்படாத உப்பை இறக்குமதி செய்ய முடியும் என்று இறக்குமதி கட்டுப்பாட்டு நாயகம் திருமதி உப்புமாலி பிரேமதிலகா தெரிவித்தார்.

இதற்கிடையில், நுகர்வுக்காக 250 மெட்ரிக் தொன் உப்பு நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் என்று வர்த்தக, வணிக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.

இறக்குமதி செய்யப்பட்ட உப்பு புதன், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நாட்டிற்கு வந்து சேரும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இவை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட உள்ளன.
கடந்த 15 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் உப்பு இறக்குமதிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது.

https://athavannews.com/2025/1432481

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

499796634_1116243630540608_7821043601201

  • கருத்துக்கள உறவுகள்

நாடடைச்சுற்றி கடலை வைத்திருக்கும் ஒரு தீவு தானாக இயற்கையாக உருவாகும் உப்புக்கே வழிஇல்லாமல் திண்டாடுகிறது.வெட்கம். இதை மறைக்க அவர்கள் கையில் எடுப்பது இனவாதம்.

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, புலவர் said:

நாடடைச்சுற்றி கடலை வைத்திருக்கும் ஒரு தீவு தானாக இயற்கையாக உருவாகும் உப்புக்கே வழிஇல்லாமல் திண்டாடுகிறது.வெட்கம். இதை மறைக்க அவர்கள் கையில் எடுப்பது இனவாதம்.

ஆனையிறவைக் கடந்துசெல்லும்போது உப்புக் குவியல் குவியலாகக் காட்சிதரும். உப்புவயல்களில் உப்புக்குமேலால் ஓலைகாளால் வேயப்பட்டுப் பாதுகாக்கப்பட மற்றொரு பகுதி வயல்களுக்கு உப்புற்பத்திக்கு நீர் மாற்றப்படும் செயற்பாடு நடக்கும். இப்படி ஒரு தொடர் உற்பத்தியும் அதனோடிணைந்த பொருண்மிய வாழ்வுமாக இருந்த பகுதிகளை இனவாத வன்மத்தோடு அழத்தொழித்து இன்று உப்புக்குக் கையேந்தும் நிலை.சிங்களத்துக்கு ஏது வெட்கம். அது தமிழரை அழிக்கு எங்கும் எதற்காகவும் கையேந்தும்.

நட்பார்ந்த நன்றியுடன்

நொச்சி

  • கருத்துக்கள உறவுகள்

அகலமான தட்டை பாத்திரத்தில் கடல் தண்ணீரை நிரப்பி ஒரு வாரம் வெயிலின் வைத்தால் உப்பு ரெடி. யாழ் குடாநாட்டில் குடியிருப்புக்கும் கடலுக்கும் இடையிலான தூரம் எங்கிருந்து பார்த்தாலும் ஏழு கிலோ மீட்டர்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

salt.jpg?resize=750%2C375&ssl=1

உப்பு இறக்குமதியில் மேலும் தாமதம்!

இறக்குமதி செய்யப்பட்ட உப்பு நாட்டை வந்தடைவதற்கு இன்னும் சில நாட்கள் தாமதம் ஏற்படக்கூடும் என தேசிய உப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

நிலவும் பாதகமான வானிலை காரணமாக இத் தாமதம் ஏற்பட்டுள்ளதாக உப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்போதைய உப்பு பற்றாக்குறைக்கு தீர்வாக, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உப்பு கப்பல் நேற்று இரவு(22) நாட்டிற்கு வரவிருந்தது.

இந்தநிலையில் தனியார் துறையிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 250 மெற்றிக் தொன் உப்பு மற்றும் தேசிய உப்பு நிறுவனத்தால் இறக்குமதி செய்யப்பட்ட 2,800 மெற்றிக் தொன் உப்பு என மொத்தம் 3,050 மெற்றிக் தொன் உப்பு நாட்டிற்கு கொண்டுவர திட்டமிடப்பட்டது.

இருப்பினும், சீரற்ற வானிலை காரணமாக சில நாட்களுக்கு தாமதமாகலாம் எனவும் , அதன் பின்னர் நாட்டிற்கு உப்பு தொடர்ந்து கொண்டுவரப்படும் எனவும் தேசிய உப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

https://athavannews.com/2025/1432861

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

499900809_3983018138606818_3987772800448

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

499683352_1117024003795904_3884846554769

உப்பு கொண்டு வரும் கப்பலை... இன்னும் காணவில்லை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.