Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராகத் தான் களமிறங்கவுள்ளதாக அக்கட்சியின் பதில் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் அறிவித்துள்ளார்.

வட மாகாண முதலமைச்சர் வேட்பாளர்  

தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் சிவஞானம் சிறீதரன், தான் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடமாட்டார் என ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

வடக்கு முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்குகின்றார் சுமந்திரன்! சங்கு கூட்டணியிடம் அவரே தெரிவிப்பு | Sumanthran Northern Chief Ministerial Candidate

இந்நிலையில், வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராகத் தான் போட்டியிடவுள்ளதாக சுமந்திரன் கூறியுள்ளார்.

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பது தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர்களை ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைவர்கள் நேற்று, யாழ். நல்லூரில் உள்ள சுமந்திரனின் இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தனர்.

நிலைப்பாடு

இந்தச் சந்திப்பின் போது, ''அடுத்து வரும் மாகாண சபைத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராகத் தானே களமிறங்கப் போவதாக சுமந்திரன் எங்களிடம் கூறினார்."என்று ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் இணைத்தலைவர்களில் ஒருவரான த.சித்தார்த்தன் தெரிவித்தார்.

வடக்கு முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்குகின்றார் சுமந்திரன்! சங்கு கூட்டணியிடம் அவரே தெரிவிப்பு | Sumanthran Northern Chief Ministerial Candidate

இது குறித்து த.சித்தார்த்தன் மேலும் கூறுகையில், "ஆனால், சுமந்திரனின் இந்த நிலைப்பாட்டுக்கு ஆதரவு அல்லது எதிர்ப்பு என்ற விடயங்கள் குறித்து எதுவும் நாங்கள் பேசவில்லை.

மேலும் உள்ளூராட்சி சபைகளில் ஒன்றிணைந்து ஆடசியமைப்பது குறித்து இந்தச் சந்திப்பில் பேசப்பட்டாலும் மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இயங்குவது தொடர்பில் எதுவும் பேசவில்லை.'' என்று கூறியுள்ளார்.

Tamilwin
No image preview

வடக்கு முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்குகின்றார் சுமந்தி...

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராகத் தான் களமிறங்கவுள்ளதாக அக்கட்சியின் பதில் பொதுச்செயலாள...
  • கருத்துக்கள உறவுகள்

இதிலும் தோல்விதான்!

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன்... பாராளுமன்றத்துக்குள் பின்கதவால் நுழைய, முயற்சி பண்ணி சத்தியமூர்த்திக்கும், சிறிதரனுக்கும் ஆசை காட்டிப் பார்த்தும், எவரும் இவரின் சுத்துமாத்து நடவடிக்கைகளுக்கு இடம் கொடுக்காமல் நழுவிய பின்... இனி அடுத்த தேர்தல் மட்டும் பொறுத்து இருக்க ஏலாது என்று இவரே மாகாணசபை முதலைமைச்சர் வேட்பாளர் என்று தனக்குத்தானே மகுடம் சூடிக் கொண்டு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடப் போகின்றாராம்.

ஆபிரஹாம் சுமந்திரனின் இந்த மூஞ்சைக்கு எவனும் வாக்குப் போடுவானா?

தமிழரசு கட்சி இதோடு... வடக்கில் துடைத்து எறியப் படுவது நிச்சயம்.

  • கருத்துக்கள உறவுகள்

ariyam-tamil.jpg

சங்குடன் கூட்டணி வைத்ததற்கு... எதிர்ப்பு தெரிவித்த யாழ்.கள அரைகுறை அரசியல் ஆய்வாளர்களை வரிசையாக வரும்படி அழைக்கின்றோம். 🤪

சுமந்திரனுக்கு...சங்கு ஊதப் படுவது நிச்சயம். ஊ.... ஊ..... ஊ............ 😂 🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

சுமந்திரன்... பாராளுமன்றத்துக்குள் பின்கதவால் நுழைய, முயற்சி பண்ணி சத்தியமூர்த்திக்கும், சிறிதரனுக்கும் ஆசை காட்டிப் பார்த்தும், எவரும் இவரின் சுத்துமாத்து நடவடிக்கைகளுக்கு இடம் கொடுக்காமல் நழுவிய பின்... இனி அடுத்த தேர்தல் மட்டும் பொறுத்து இருக்க ஏலாது என்று இவரே மாகாணசபை முதலைமைச்சர் வேட்பாளர் என்று தனக்குத்தானே மகுடம் சூடிக் கொண்டு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடப் போகின்றாராம்.

ஆபிரஹாம் சுமந்திரனின் இந்த மூஞ்சைக்கு எவனும் வாக்குப் போடுவானா?

தமிழரசு கட்சி இதோடு... வடக்கில் துடைத்து எறியப் படுவது நிச்சயம்.

சத்தியலிங்கத்தின் இடத்துக்கு பாராளுமன்றம் போகலாம் என்றே பலராலும் எதிர்வு கூறப்பட்டது.

உள்ளூராட்சிசபையில் சிறிது முன்னேற்றம் கண்டவுடன் மாகாணசபையிலும் இதேமாதிரி ஒரு வெற்றி கிடைக்கலாம் என்ற நம்பிக்கையில் களமிறங்குகிறார் என எண்ணுகிறேன்.

சங்குக்கு விழுந்த பலத்த அடி அம்மணவாகவேனும் வீட்டுக்குள் ஒழிக்க வேண்டிய நிலை.

கில்லாடி சுமந்திரன் சந்தர்ப்பத்தை சரியாக பாவிக்கிறார்.

உள்ளூராட்சி சபையில் பொத்திக் கொண்டு ஆதரவு கொடுத்தால்

மாகாணசபையில் சங்கு வீட்டுக்குள் போகும்.

சங்குக்கும் வேறு வழியில்லை.

ஆண்ட பரம்பரை மீண்டும் ஆழ நினைப்பதில் தவறில்லையே.

  • கருத்துக்கள உறவுகள்

498314978_2436414216734689_3592765200001

நான் ஒரு சட்டத்தரணியாக இருப்பதால் இலங்கையில் நடந்தது இனப்படுகொலையாகத் தெரியவில்லை - 2015 செப்டெம்பர் ஜெனிவாவில் சுமந்திரன்...

சுவிஸ் அமைதி அமைப்பினால் நடத்தப்பட்ட கலந்துரையாடலில் திரு.சுமந்திரன், திரு.சுரேன், சிங்கள வழக்கறிஞர் திரு.நிரன் மற்றும் தமிழ் அமைப்பினர், சுவிஸ் அரசாங்கத்தினர், மனித உரிமை அமைப்பினர் சிங்கள சிவில் சமூகம் எனப்பலர் கலந்து கொண்ட உள்ளரங்க விவாதத்தில் கேள்விகளுக்கு சுமந்திரன், சுரேன், நிரன் ஆகியோர் பதிலளித்தனர்.

இதில் கேட்கப்பட்ட கேள்விகளில் ஒன்றான, வடக்குமாகாண சபையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானமான “இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணை ‘ குறித்தும் அது பற்றி இலங்கை பாராளுமன்றத்தில் விவாதிப்பார்களா என்பது பற்றிய கேள்வி திரு.லதன் என்பவரால் கேட்கப்பட்டது.

திரு.சுமந்திரன் இதற்கு பதிலளிக்கும் பொழுது, ”

…‘இனப்படுகொலை’ என்று பேசியதால் பல்வேறு விடயங்களை பின்னுக்கு தள்ளி இருக்கிறோம். இங்கு நடந்தது இனப்படுகொலை என்று முடிவு செய்வது அரசியல் அரங்கு அல்ல, மாறாக அது நீதிவிசாரணையிலேயே முடிவு செய்யப்படவேண்டும். மனித உரிமை ஆணையாளர் கூட அதை இனப்படுகொலை என்று ஏற்றுக்கொள்ளவில்லை. நான் ஒரு வழக்கறிஞர் என்பதால் எனக்கும் இதை இனப்படுகொலை என்று நிரூபிப்பதற்குரிய ஆதாரங்கள் இருப்பதாக தோன்றவில்லை. இதை நாம் இனப்படுகொலை என்று சொல்லமுடியாது. இதை கவனத்தில் எடுக்காமல் இனப்படுகொலை என்று பேசுவதால் நாம் இன்று பின்னுக்கு தள்ளப்பட்டிருக்கிறோம்… ”

இவ்வாறு சொன்ன சுமந்திரன் இன்று இனப்படுகொலை பற்றி பேசி கஞ்சியும் குடிக்கிறார். சுமந்திரன் தலைமையிலான தமிழரசுக்கட்சிக்கே மக்கள் இன்றும் அதிகமாக வாக்களித்துள்ளனர்.

விடுதலைப்போரையே ஏற்றுக்கொள்ளாத சுமந்திரனை வைத்துக்கொண்டு தமிழ் மக்கள் ஒருபோதும் இனப்படுகொலைக்கான நீதியை பெற்றுக்கொள்ள முடியாது.

யாழ் அன்ரனி

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

சங்குடன் சேர்ந்து சங்குதான்.!அதைவிட உடல்நிலை காரணமாக தமிழரசுக் கட்சியின் பதில் செயலாளர் பதவியிருந்து விலகிய சத்தியமூர்த்தி பாரளுமன்றப் பதவியை வகிக்க எப்படி உடல்நிலை இடம் கொடுக்கும். கொஞ்சம் தள்ளியிரும் பிள்ளாய். என்று சத்தியலிங்கத்துக்கு சங்கூதுவிட்டு பாராளுமன்றம் போவதுதான் உள்ளதில் சிறந்தது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
18 hours ago, ஈழப்பிரியன் said:

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராகத் தான் களமிறங்கவுள்ளதாக அக்கட்சியின் பதில் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் அறிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் என்னென்ன அவலங்களை சந்திக்கப்போகின்றார்களோ?????

எல்லாம் கடவுளுக்குத்தான் வெளிச்சம்.

  • கருத்துக்கள உறவுகள்

499028758_703379298855209_52717501204890

499524520_1115783510586620_3118723855940

  • கருத்துக்கள உறவுகள்

PpYSgL.gif

அண்ணை .. தேவையில்லாத ஆணிய எப்படி கண்டெடுப்பது..?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.