Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

image

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உத்தியோகபூர்வ கோரிக்கை கட்சி மட்டத்தில் மக்கள் நலன் சார்ந்து  பரிசீலிக்கப்படும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானத்துடனான சந்திப்பினை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே டக்ளஸ் இதனைத் குறிப்பிட்டார்.

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ். அலுவலகத்துக்கு வருகை தந்த சிவஞானம்,  வடக்கு, கிழக்கு பகுதியில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் கோரிக்கை மக்கள் நலன்சார்ந்து பரிசீலிக்கப்படும் - டக்ளஸ்  | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பு : டக்ளஸை சந்தித்து தமிழரசுக் கட்சியின் தலைவர் பேச்சு 

Published By: DIGITAL DESK 3

05 JUN, 2025 | 05:24 PM

image

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவை தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.

குறித்த சந்திப்பு இன்று வியாழக்கிழமை (5) யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் அமைந்துள்ள ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்றுள்ளது.

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பிலேயே ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவனந்தாவுடனான சந்திப்பு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

494826480_1207857770979154_9084956465290

494830846_1775095823086251_1914299795527

https://www.virakesari.lk/article/216705

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவை தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.

மேலே முதல் உள்ள வீரகேசரி செய்தியில் இப்படி வருகின்றது " அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானத்துடனான சந்திப்பினை தொடர்ந்து..

நான் ஏற்கெனவே தமிழ் அரசியல் தலைவர்கள் பெயர்களில் வீக் 🙄

  • கருத்துக்கள உறவுகள்

கலைமகள் கைப்பொருளே உனைக் கவனிக்க ஆளிருக்கு!!!!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புலவர் said:

கலைமகள் கைப்பொருளே உனைக் கவனிக்க ஆளிருக்கு!!!!

விலை இல்லா மாளிகையில் – உன்னை
மீட்டவும் விரல் இல்லையோ??

archuna.jpg

நான் யார் உன்னை மீட்ட – வரும்
நன்மைக்கும் தீமைக்கும் வழி காட்ட

Dharmalingam_Siddarthan_TNA_1200px_23_05

சொர்க்கமும் நரகமும் நம் வசமே – நான்
சொல்வதை உன் மனம் கேட்கட்டுமே

S._Kajendran.jpg

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டுமே மூழ்கப்போகிற படகுகள்.  அதில் இரு பகுதியினரும் ஏறி சவாரி செய்யத்துடிக்கின்றனர். அடுத்த தேர்தலோடு அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தவர் கூட்டுச்சேர தூது, நாமே மக்களின் ஏகபிரதிநிதிகள் என்று வீர வசனம் பேசியவர்கள், அடுத்த கட்சிகளின் ஆதரவில் ஆட்சியைப்பிடிக்க  எந்தப்பேயோடும் கூட்டுச்சேர அழைப்பு. எங்கே இருந்த கட்சியை எங்கு கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார்கள். இந்த இரண்டு கட்சியும் சேர்ந்து ஆட்சியமைத்தால் மக்கள் பிழைத்த மாதிரித்தான். சுமந்திரன் அனுரவில் கடுப்பான கடுப்பில் இருக்கிறார். வாழ்த்து சொன்னார், நேரில் போய்ப்பார்த்தார், படம் பிடித்தார், அச்சுறுத்தல் விடுத்தார் ஒன்றுக்கும் அனுராவிடமிருந்து அழைப்பு வரவில்லை. அவரோ விடுகிற மாதிரியில்லை. தமிழ் மக்கள்யாருக்கு ஆதரவு தெரிவிக்கிறார்களோ அவர்களுடனேயே அனுரா சேர்ந்து கொள்வார். மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களை அவருக்கு தேவையில்லை, இவர்களோடு சேர்த்து இவர்களது எஜமானர்களையும் மக்கள் நிராகரித்து வீட்டுக்கு அனுப்பியுள்ளார்கள்.    

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.