Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

6 hours ago, தமிழ் சிறி said:

நைசாக... நழுவிய, சாணக்கியன்!

3 hours ago, குமாரசாமி said:

புலம்பெயர்ந்து இருப்பவர்களை விட தாயகத்தில் இருப்பவர்களுக்குத்தான் உள் விடயங்கள் பல தெரியும். அடித்து கலைத்ததில் நியாயம் இருப்பதாகவே எனக்கு தெரிகின்றது. அவனவன் வலி அவனவனுக்கு மட்டுமே தெரியும்.

புலி போட்ட சூட்டில் முன்னாள் தலையாட்டி களுக்கு இப்பவும் வலிக்குது போல் உள்ளது .

  • கருத்துக்கள உறவுகள்

காணாமல் ஆக்கப்பட்ட தம் உறவுகளைத்தேடி, அவர்களுக்கு என்ன நடந்தது என அறிய பல வருடங்களாக அவரை இழந்தவர்கள் தெருக்களிலே போராடி வருகிறார்கள். அவர்களை ஏன் என்று கேட்க யாரும் முன்வரவில்லை, அவர்கள் தேடும் உறவுகளில் சிலரோ பலரோ இந்த புதைகுழியில் புதைக்கப்பட்டிருக்கலாம். இந்தப்புதைகுழி விவகாரம் பலவருடங்களாக நிலுவையில், கிடப்பில் போடப்பட்டிருந்தது. இன்று ஓடி வரும் எந்த அரசியல்வாதியும் இந்த விவகாரம் வெளியில் வரும்வரை அதைப்பற்றி சிந்திக்கவோ, அழுத்தம் கொடுக்கவோ முன்வரவில்லை. மாறாக இனவழிப்பு நடந்ததென நிரூபிப்பதற்கு ஆதாரம் இல்லையென விவாதித்தனர். இப்போ எதற்கு அடித்து பிடித்து வருகிறார்கள், எதை சாதிக்கப்போகிறார்கள்? அதாவது ஐ .நா. மனித உரிமை ஆணையாளர் வரவிருக்கும் சந்தர்ப்பத்தில், தாம் தான் மக்களின் தலைவர்கள் என்று தம்மை முன்நிலைப்படுத்த முண்டியடிக்கிறார்கள். மக்களின் போராட்டத்தை நீர்த்துப்போக செய்ய துடிக்கிறார்கள். சுமந்திரன் தன வாலை அனுப்பி நோட்டம் விட்டிருக்கிறார், சேனையோடு வந்திறங்க. மக்கள் நிதானமாகவே இருக்கிறார்கள். இவர்கள் யாரையும் நம்ப இனிதயாராக இல்லை. ஆயுதப்போராட்டத்தை நான் வரவேற்கவில்லை என்று சொன்னவர்கள், தமிழரை அழித்தவர்களோடு, பொது மக்களை வகைதொகையின்றி கொலை செய்தவர்களோடு கிறிக்கற் விளையாடலாம், பொப்பிப்பூ குத்தி இராணுவத்தினருக்கு மரியாதை செலுத்தலாம். இது முரண்பாடாக தெரியவில்லை சம்பந்தப்பட்டவர்களுக்கு. மக்களையும் அவர்களது இழப்புகளையும் துயரங்களையும் விற்று பிழைக்கும் பிழைப்புவாதிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

large.IMG_8534.jpeg.a6411440ecef9f954bcc

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, தமிழ் சிறி said:

சுமந்திரன்... நரியன். எங்கை தனக்கு அடி விழும் என்று முன்பே தெரியும். 😂

ஏற்கெனவே சுமந்திரனுக்கு... அவுஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து என்று சர்வதேச லெவலில் வாங்கிக் கட்டிய அனுபவம் உண்டு. 🤣

செம்மணிக்கு தான் போனால்... கோட்டு, சூட்டு எல்லாம் கழட்டி துவைத்து எடுத்து விடுவார்கள் என்று தெரியும். அதுதான்... தான், பதுங்கிக் கொண்டு, சிவஞானத்தை நோட்டம் பார்க்க அனுப்பியவர். அதுகும் வந்து, வளமாய் வாங்கிக் கட்டிக் கொண்டு போயிருக்குது. 😂

இருந்தாலும் சுமந்திரனின் கால், வாய் சும்மா இராது. இரவிரவாய் என்றாலும் சாணக்கியனையும் அழைத்துக்கொண்டு போய் மனித உரிமையாளர் நாயகத்தின் கதவைத் தட்டியென்றாலும் அவரை எழுப்பி அவரோடு நின்று புகைப்படம் எடுத்து போடாமல் விடமாட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, satan said:

இருந்தாலும் சுமந்திரனின் கால், வாய் சும்மா இராது. இரவிரவாய் என்றாலும் சாணக்கியனையும் அழைத்துக்கொண்டு போய் மனித உரிமையாளர் நாயகத்தின் கதவைத் தட்டியென்றாலும் அவரை எழுப்பி அவரோடு நின்று புகைப்படம் எடுத்து போடாமல் விடமாட்டார்.

அற்ப விளம்பரங்களுக்கு சுமந்திரன் ஆசைப் பட்டு செய்த செயல்கள் எல்லாம் அவருக்கு எதிராகவே திரும்பியது கடந்த கால வரலாறு.

ஆனாலும் திருந்திய மாதிரி தெரியவில்லை.

நாய் வாலை நிமிர்த்த முடியாது என்று முன்னோர்கள் சொன்னது அவ்வளவும் உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்

512029099_24215510074711342_780958874825

ஏன், மக்கள் செம்மணிக்கு வந்த ஜேவிபி ( திசைகாட்டி ) இனவாத கும்பலின் எடுபிடிகளை துரத்தி கலைச்சவை என்பதற்கும், அந்த சப்பாத்துகள் அநாதையாக்கப்பட்டதற்கும்... இந்த அமைச்சரின் கருத்துக்கும் தொடர்புண்டு என விளங்கினால்... நீயும், தமிழன்

Kunalan Karunagaran

  • கருத்துக்கள உறவுகள்

512816859_1139192571577449_2823199706430

அமைச்சரே...

போர்க்குற்றம் தொடர்பான சர்வதேச விசாரணையையோ, அதற்கான ஆதாரங்கள் திரட்டுவதையோ அனுமதிக்க மாட்டோம்.

இனப் படுகொலை என்ற என்ற பதம் பிரயோகிக்கப்பட்டால் சட்ட நடவடிக்கை,

இதையெல்லாம் சொன்ன அதே அரசாங்கத்தில் இருந்துகொண்டு...

அமைச்சர் செம்மணிப் போராட்டத்திற்கு பூரண ஆதரவு, நான் சென்றால் அது சிறப்பு என்றும் சொல்கிறார்.

யாழ்ப்பாணம்.com

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களின் விசுவாசத்தால் சிங்களம் இதுவரை பிழைத்துக்கொண்டது, ஆனாலும் இவர்களை தமக்காக பாவிக்குமே ஒழிய வேறேதுமில்லை. கிழக்கின் விடிவெள்ளிகளின் இன்றைய நிலையை பி பார்த்தால் புரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

“அணையா விளக்கில்” அமைச்சரை தடுத்தது தவறு - வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத் தலைவி தெரிவிப்பு!

செம்மணி மனிதப் புதைகுழிக்கான போராட்டத்தில் கலந்துகொள்ள வருகை தந்த அமைச்சர் சந்திரசேகரனை சிலர் தடுத்தமை கண்டிக்கத்தக்க விடயம் என வடக்கு-கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி கனகரஞ்சினி தெரிவித்துள்ளார்.

நேற்று யாழ்ப்பாணம் வருகை தந்த ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்டர் ரட்க்கை சந்தித்தபின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே  அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்:- செம்மணி  மனிதப்  புதைகுழி விவகாரம் உரிய முறையில் விசாரணை செய்யப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். அதனை வலியுறுத்தி இடம்பெற்ற போராட்டத்தில் அமைச்சர் சந்திரசேகரன் கலந்து கொண்டிருந்த வேளையில் சிலர் அவரை தடுத்தனர் அது தவறு அதற்கு நாம் மனம் வருந்துகிறோம். செம்மணி மனிதப்புதைகுழிக்கு நீதி வேண்டி போராடும் தாய்மார்கள் என்ற வகையில் எமது நீதிக்கான பயணத்தில் ஒன்றிணைவபவர்களை  புறக்கணிப்பது எமது நோக்கம் அல்ல. அமைச்சர் எமது  போராட்டத்திற்கு வருகை தந்தது  நீதியை எதிர்பார்த்து காத்திருக்கின்ற எமக்கு சாதகமான விடயம் அவரும்  இந்த போராட்டத்திற்கு கலந்து கொண்டவராய் பொறுப்பு கூறுவதாக இருக்க வேண்டும் என அவர் மேலும்  தெரிவித்தார்.

“அணையா விளக்கில்” அமைச்சரை தடுத்தது தவறு - வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத் தலைவி தெரிவிப்பு!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 hours ago, தமிழ் சிறி said:

அமைச்சரே...

போர்க்குற்றம் தொடர்பான சர்வதேச விசாரணையையோ, அதற்கான ஆதாரங்கள் திரட்டுவதையோ அனுமதிக்க மாட்டோம்.

இனப் படுகொலை என்ற என்ற பதம் பிரயோகிக்கப்பட்டால் சட்ட நடவடிக்கை,

இதையெல்லாம் சொன்ன அதே அரசாங்கத்தில் இருந்துகொண்டு...

அமைச்சர் செம்மணிப் போராட்டத்திற்கு பூரண ஆதரவு, நான் சென்றால் அது சிறப்பு என்றும் சொல்கிறார்

இன்றைய அரசு செம்மணி புதைகுழிகளையாவது தோண்டுவதற்கு அனுமதியளித்திருக்கிறது என பலர் பேசிக்கொள்கின்றார்கள்.

கோத்தபாய,மகிந்த ஆட்சியில் இருந்தால் இதெல்லாம் நடக்கக்கூடிய சம்பவங்களா என கேள்விமேல் கேள்வி கேட்கின்றார்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.