Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: VISHNU

07 JUL, 2025 | 08:54 PM

image

3 வருடத்திற்கு மேலாக ரஷியா- உக்ரைன் இடையே போர் நடைபெற்று வருகிறது. தற்போது இரு நாடுகளும் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால் விமான போக்குவரத்தை மிகவும் நேர்த்தியாக கையாள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தக்கூடும் என ரஷியாவின் ஏராளமான விமானங்கள் தரையிறக்கப்பட்டுள்ளன. இதனால் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் திங்கட்கிழமை (07) போக்குவரத்து அமைச்சர் பதவியில் இருந்து ரோமன் ஸ்டாரோவாய்ட்டை நீக்கினார்.

அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சில மணி நேரத்தில், ரோமன் ஸ்டாரோவாய்ட் காருக்குள் பிணமாக கிடந்துள்ளார். தற்போது தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துள்ளார்.

இருப்பினும், புடின் எந்த காரணத்திற்காக அவரை போக்குவரத்து அமைச்சர் பதவியில் இருந்து நீக்கினார் என்பது இன்னும் தெரியவில்லை என்று வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் தெரிவித்துள்ளன.

கடந்த வருடம் மே மாதம்தான் போக்குவரத்துத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தார். அதற்கு முன்னதாக சுமார் ஐந்து வருடம் குர்ஸ்க் பிரந்தியத்தின் ஆளுநராகச் செயல்பட்டு வந்தார். தற்போது அன்ட்ரெய் நிகிடின் பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நவ்கோரோட் பிராந்தியத்தின் முன்னாள் ஆளுநர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/219434

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்யாவில் புதின் பதவி நீக்கிய அமைச்சர் மர்ம மரணம் - என்ன நடந்தது? முழு பின்னணி

ரஷ்ய முன்னாள் போக்குவரத்து அமைச்சர் ஸ்டோரோவோய்ட்

பட மூலாதாரம்,VLADIMIR SMIRNOV/TASS

படக்குறிப்பு, ரோமன் ஸ்டாரோவோய்டிற்கு 53 வயதாகியிருந்தது

25 நிமிடங்களுக்கு முன்னர்

ரஷ்யாவின் முன்னாள் போக்குவரத்து அமைச்சர் ரோமன் ஸ்டாரோவோய்ட் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக அந்நாட்டின் விசாரணைக் குழு தெரிவித்துள்ளது. ஸ்டாரோவோய்ட்டை அதிபர் விளாடிமிர் புதின் திங்கள்கிழமை பதவி நீக்கம் செய்திருந்தார்.

அவர் பதவிநீக்கம் செய்யப்பட்டதற்கு எந்த காரணமும் தெரிவிக்கப்படவில்லை. அதன் பின் சற்று நேரத்தில் போக்குவரத்து துணை அமைச்சர் ஆண்ட்ரேய் நிக்கிடின் புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

தற்போது இந்த சம்பவத்திற்கான காரணங்களை கண்டறிய முயற்சிப்பதாக விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.

ஸ்டாரோவோய்ட் இறப்பு பற்றிய அறிவிப்புக்கு முன், ரஷ்ய செய்தித்தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவிடம் செய்தியாளர்கள் ஸ்டாரோவோய்ட் பற்றி கேள்வி எழுப்பினர்.

குர்ஸ்கில் நடைபெற்ற சம்பவங்களால் ஸ்டாரோவோய்ட் மீது அதிபர் புதின் நம்பிக்கை இழந்துவிட்டாரா? என்பதுதான் கேள்வி.

இதற்கு பதிலளித்த பெஸ்காவ், "நம்பிக்கை இழந்திருந்தால், அது அதிபரின் உத்தரவில் குறிப்பிடப்பட்டிருக்கும். அதைப் போன்ற வார்த்தைகள் ஏதும் பயன்படுத்தப்படவில்லை."

ஸ்டாரோவோய்ட் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைக்கு இடைப்பட்ட இரவில் உயிரிழந்திருக்கலாம் என விசாரணை முகமையுடன் தொடர்புடைய வட்டாரங்களை மேற்கோள் காட்டி ஃபோர்ப்ஸ் பதிப்பகம் எழுதியுள்ளது.

ஸ்டாரோவோய்ட் "நீண்ட காலத்திற்கு முன்னரே" உயிரிழந்துவிட்டதாக ஸ்டேட் டூமாவின் (ரஷ்ய நாடாளுமன்றத்தின் கீழவை) பாதுகாப்பு குழுவின் தலைவர் ஆண்ட்ரேய் கார்டபோலோவ் ரஷ்ய ஊடகமான ஆர்.டி.வி.ஐ. யிடம் தெரிவித்தார்.

ஆனால் ஸ்டாரோவோய்ட் திங்கள்கிழமை தனது காருக்கு அருகே சில மீட்டர் தொலைவில் இருந்த புதருக்கு பின்னால் உயிரிழந்து கிடந்ததாக ஆர்.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது.

அவரது உடல் கண்டெடுக்கப்பட்ட ஒடிண்ட்சோவோ வாகன நிறுத்துமிடத்தில் விசாரணை குழுவினர் வேலை செய்துகொண்டிருக்கும் புகைப்படங்களும், காணொளியும் வெளியாகியுள்ளன.

கடந்த வருடம் போக்குவரத்து அமைச்சராக நியமனம்

ரஷ்ய முன்னாள் போக்குவரத்து அமைச்சர் ரோமன் ஸ்டாரோவோய்ட் காரின் கதவை பிடித்துக்கொண்டு

பட மூலாதாரம்,EPA

படக்குறிப்பு, ரோமன் ஸ்டாரோவோய்ட் குர்ஸ்க் பகுதிக்கு ஐந்து ஆண்டுகளாக ஆளுநராக இருந்தார்

ஸ்டாரோவோய்ட் 2024 மே மாதத்தில் போக்குவரத்து அமைச்சராக நியமிக்கப்பட்டார். அவர் அந்த பொறுப்பில் சுமார் ஒரு வருடம் நீடித்தார்.

முன்னதாக அவர் யுக்ரேன் எல்லையில் உள்ள குர்ஸ்க் பகுதி ஆளுநராக சுமார் ஐந்து ஆண்டுகள் இருந்தார். அவருக்கு பின்னர் அலெக்ஸி ஸ்மிர்னாவ் அங்கு ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

முன்னதாக ஸ்மிர்னாவ் குர்ஸ்க் அரசின் தலைமைப் பொறுப்பை வகித்து வந்தார்.

ஊடகம் மற்றும் டெலிகிராம் சேனல்களின் கூற்றுப்படி, ஸ்டாரோவோய்டுக்கு எதிராக குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்படக்கூடும். முன்னாள் அமைச்சர் ஸ்டாரோவோய்ட்டுக்கு எதிராக ஸ்மிர்னாவ் வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுவதாக 'காமர்சண்ட்' எழுதியுள்ளது.

ஆர்.பி.சி வெளியீட்டின் கூற்றின்படி குர்ஸ்க் பகுதியை பலப்படுத்தும் கட்டுமானப் பணிகளில் ஸ்டாரோவோய்ட் ஊழல் செய்தாரா என ஒரு விசாரணை நடைபெற்று வருகிறது.

2019-ல் குர்ஸ்க் ஆளுநரானார்

ஸ்டாரோவோய்ட் குர்ஸ்க்கில் 1972ஆம் ஆண்டு பிறந்தார். சிறிது காலத்திற்கு பிறகு அவரது குடும்பம் செயின்ட் பீட்டர்ஸ்பர்கிற்கு குடிபெயர்ந்தது.

அவர் தனது அரசியல் பயணத்தை செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கிலிருந்து தொடங்கினார். வாலண்டினா மாட்வியென்கோ அங்கு ஆளுநராக இருந்தபோது, ஸ்டாரோவோய்ட் அவரது குழுவில் ஒரு அங்கமானார்.

ஸ்டாரோவோய்டிற்கு முதலில் செயிண்ட் பீட்டர்ஸ்பர்கில் உள்ள வாகன தொழிற்சாலைகளின் பொறுப்பு வழங்கப்பட்டது. அதன் பின்னர் நகரில் நடைபெற்ற முக்கிய கட்டுமானப் பணிகளுக்கு மேற்பார்வையாளராக இருந்தார்.

பின்னர் விளாடிமிர் புதின் தலைமையில் இயங்கி வந்த ரஷ்ய அரசின் தொழில் மற்றும் கட்டமைப்புதுறையில் ஸ்டாரோவோய்ட் இணைந்தார். அந்த காலகட்டத்தில், ரஷ்யாவின் சோச்சி நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளுக்கான தயாரிப்பு பணிகளிலும் அவருக்கு தொடர்பு இருந்தது.

2012ஆம் ஆண்டில் (ரஷ்யாவில் சாலை அமைக்கும் முகமையான) ரோஸவ்டோடரின் தலைவராக ஸ்டாரோவோய்ட் நியமிக்கப்பட்டார், 2018-ல் அவர் போக்குவரத்து துறையின் துணை தலைவரானார்.

2018 அக்டோபரில் அவர் குர்ஸ்க் பகுதியில் தற்காலிக ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

பிபிசி ரஷ்ய சேவை செய்தியாளர் கூறியது என்ன?

ரஷ்ய முன்னாள் அமைச்சர் ரோமன் ஸ்டாரோவோய்ட்டின் உடல் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் விசாரணை

பட மூலாதாரம்,TASS

படக்குறிப்பு, ரோமன் ஸ்டாரோவோய்டின் உடல் கண்டுபிடிக்கப்பட்ட பகுதியின் புகைப்படங்களை பல முகமையில் வெளியிட்டுள்ளவெளியிட்டுள்ளன

ரோமன் ஸ்டாரோவோய்ட்டின் மரணம் புதினின் ரஷ்யாவுக்கு ஒரு அசாதாரண நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

ஸ்டாரோவோய்ட்டின் கதை, சோவியத் காலத்தில் உள்துறை அமைச்சராக இருந்த நிகொலாய் ஷ்செலோகோவின் கதையை நினைவுப்படுத்துகிறது.

ஷ்செலோகோவ் பதவி விலகிய பின்னர் அவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என மிரட்டப்பட்டார். 1984 டிசம்பரில் அனைத்து பதவிகளும் பறிக்கப்பட்ட பின்னர் அவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துக்கொண்டார்.

ரஷ்ய முன்னாள் அமைச்சர் ரோமன் ஸ்டாரோவோய்ட்டின் கார் அருகே புலனாய்வு

பட மூலாதாரம்,TASS

படக்குறிப்பு, ரோமன் ஸ்டாரோவோய்டின் கார் அருகே புலனாய்வு குழு

ரஷ்ய அரசு முகமைகளின் கூற்றுப்படி, 2022-2023ஆம் ஆண்டு குர்ஸ்க் அரசுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் ஊழல் நடைபெற்றது. ஸ்டாரோவோய்ட் அப்போது அந்தப் பகுதியின் ஆளுநராக இருந்தார்.

அவரது முன்னாள் துணை அமைச்சர் அலெக்ஸி ஸ்மிர்னாவின் கைதுக்கு பின்னர், ரோமன் ஸ்டாரோவோய்ட் கடந்த மூன்று மாதங்களை அச்சத்திலும் எதிர்காலம் குறித்த கவலையிலும் செலவிட்டதாக நம்பப்படுகிறது.

ரஷ்யாவில் கைது செய்யப்படுபவர்கள் தங்களுக்கு மேலான பதவியில் இருப்பவர்களுக்கு எதிராக வாக்குமூலம் அளிப்பது வழக்கமான ஒன்று. ஸ்டாரோவோய்ட் இதைக் குறித்தும் கவலை கொண்டிருக்கலாம்.

இதுவரை, தங்களுக்கு மேல் உள்ள அதிகாரிகளுக்கு இருக்கும் செல்வாக்கு தங்களை காப்பாற்றும் என பெரும்பாலான அதிகாரிகள் நம்பி வந்திருக்கின்றனர். சிலர் தாங்கள் கைது செய்யப்படுவதற்கு முன்பு நாட்டைவிட்டு வெளியேறுகின்றனர். ரஷ்யாவின் செல்யபின்ஸ்க் பகுதியை சேர்ந்த இரண்டு அதிகாரிகள் (மிகெயில் யுர்யெவிக், மற்றும் அவருக்கு பின்னர் பதவியேற்ற போரிஸ் டப்ரோவ்ஸ்கி) ஏற்கனவே இதை செய்துள்ளனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cx2vp4rqye7o

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் செய்தி இன்னும் @goshan_che கண்ணில் படவில்லை என்பது பெரிய நிம்மதி. 😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, தமிழ் சிறி said:

இந்தச் செய்தி இன்னும் @goshan_che கண்ணில் படவில்லை என்பது பெரிய நிம்மதி. 😂

வழமை போல புட்டினார் ரோமன் அவர்களை போட்டுத்தள்ளி விட்டார்.🤣

கோசானின் கருத்து முன்னோட்டம். 😎

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

வழமை போல புட்டினார் ரோமன் அவர்களை போட்டுத்தள்ளி விட்டார்.🤣

கோசானின் கருத்து முன்னோட்டம். 😎

சீச்சீ…அவர் காதல் தோல்வியால்தான் செத்தவர் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

இந்தச் செய்தி இன்னும் @goshan_che கண்ணில் படவில்லை என்பது பெரிய நிம்மதி. 😂

தம்பி இப்போ சர்வதேச விசாரணைக் குழுவில் உள்ளார்.

ஆனபடியால் கருத்துக்களை தெரிவிக்க மாட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்

உதென்ன செத்தகிளிக்குப் புதுசே!

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க அதிகாரிகள், அரசியல்வாதிகள் தான் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொள்வார்கள். ரஷ்யாவில் பொதுவாக மாடியிலிருந்து தவறுதலாக யன்னலூடாக விழுந்து செத்துப் போவார்கள். இப்போது ரஷ்யர்களும் முன்னேறிக் கொண்டு வருகின்றார்கள்..................

  • கருத்துக்கள உறவுகள்

இதிலென்ன மர்மம் இருக்கிறது???

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.