Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ரசோதரன் said:

அதிமுக பாஜகவுடன் மீண்டும் கூட்டணி சேர்ந்திருப்பதே அவர்களின் வீழ்ச்சியை துரிதப்படுத்தக்கூடும்.

இன்று அமித்ஷா, தேர்தலில் வென்றால் அதிமுக + பிஜேபி கூட்டணி ஆட்சிதான் என அறிவித்துள்ளார்.

  • Replies 58
  • Views 2.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • புலவர்
    புலவர்

    இதுதான் ஊடக விபச்சாரம் என்பது.அங்கே சொல்லப்பட் ட கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதுதான் ஊடக அறம். மக்கள் நல்லது கெட்துகளை அலசிப்பார்த்து முடிவெடு;பார்கள். ஆனால் இந்த ஊடகம் மக்களை சிந்திக்கத் தெரி

  • Justin
    Justin

    ஒரு மிருகவைத்தியராக, ஆடு மாடுகளை இந்த சித்திரவதைக்குள்ளாக்குவதை வன்மையாகக் கண்டிக்கிறேன்😂! PETA நடவடிக்கை எடுக்க வேண்டும்!

  • யாயினி
    யாயினி

    இப்ப தான் சரியான இடத்தை பிடித்திருக்கிறார் சீமான்..என்ன வாய் பேசாப் பிராணிகள் பாவங்கள்..,🤭

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக இறைச்சியில் ஒரு பிடி பிடித்து விட்டு வந்து மிருகங்கள் விடும் காஸ் உலகுக்கு நன்றன்று என்று ஏப்பம் விட்டு கொண்டு இருக்கிறோம்.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
21 hours ago, ரசோதரன் said:

நாதக இப்போது செய்ய வேண்டியது திமுக அரசு மற்றும் அதிமுக கட்சி மீது தமிழ்நாட்டு மக்களுக்கு இருக்கும் அதிருப்தியை அறிந்து, அதை மூலதனமாக்கி, 2026ம் ஆண்டில் தேர்தலை எதிர்கொள்வதே. தவெக அந்த வழியிலேயே பயணிக்கின்றது. இல்லாவிட்டால், கமல் ஒரு இடத்தில் தேங்கி நின்று இல்லாமல் போனது போலவே நாதகவின் நிலையும் ஆகும்.

ஒட்டு மொத்தமாக பண வாக்கு தேர்தலாக இருக்கும் நாட்டில் நீங்கள் சொல்வதெல்லாம் சாத்தியமா சார்? 🤣

இந்திய தேர்தல்கள் என்றாலே மோசடி தேர்தல் என்பது உலகத்தினது பார்வை.

சீமான் ஆடுமாடுகளுக்கு மாநாடு. கள் இறக்குதல் போன்ற சிறு செயற்பாடுகளைச் செய்து விட்டு படுத்துக்கிடக்கிறார் என்று நினைக்கிறார்கள். தமிழ்நாட்டில் இடம்பெறும் எந்த ஒரு பிரச்சினைக்கும் முதல் குரல் சீமானுடையதாகத் தான் இருக்கும். முன்பு இராமதாஸ் அந்த வேலைகளை செய்து கொண்டிருந்தார். அரசின் செயற்பாடுகளுக்கு புள்ளி போடுவது. நிழல் நிதி அறிக்கை விடுவது அனைத்துப் பிர்சினைகளுக்கும் குரல் கொடுப்பது என்று செயற்பாட்டில் இருந்தார். வயது மூப்பின் காரணமாகவும் மகனுடன் ஏற்பட்ட அரசியல் மோதலாலும் உட்கட்சிப் பிரச்சினையால் அவரால் முன்பு போல் குரல் கொடுக்க முடியவில்லை. அந்த வேலையை சீமான் செய்கிறார்.சீமானை எதிர்ப்பவர்கள் சீமான் கூட்டணி சேர வேண்டும். அந்தக் கூட்டணியின்பெரிய கட்சியை அரியணை எற்ற வேண்டும் அந்தப் பெரிய கட்சி நாதகவை விஜயகாந் கட்சி தேய்ந்ததுபோல தேய்ந்து அழிய வேண்டும் என்று விரும்புவர்கள். சீமான் ஒரு சிறிய கட்சி.அவரது கருத்துக்களை யாரும் கேட்பதில்லை. ஒரு சில தமிழ்நாட்டு இளைஞர்களும் ஒரு சில புலம் பெயர்ந்த மூளைச் சலவைசெய்யப்ட் டவாக்குரிமையற்றஅரை வேக்காடுகளும் மட்டுமே ஆதரிக்கிறார்கள் என்று கடந்து போக வேண்டியதுதானே.அதிபுத்திசாலிகள் ஏன் கவலைப்படுகிறார்கள் குத்தி முறிகிறார்கள் என்பதுதான் புரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, goshan_che said:

தமிழ் நாடு என்னும் நிலத்தை, கிண்டி, கிளறி, பீஜேபி எனும் பயிர் வளர தோதாக்குவதே அவர் ஒரே அஜெண்டா.

தமிநாட்டில் பீஜேபியுடன் கூட்டணி அமைத்து பீஜேபி என்று ஒரு கட்சி இருக்கிறது தமிழ்நாட்டுக்கு அறிமுகம் செய்து வைத்த கட்சிகளை விட்டு விட்டு எந்தக்கட்சியுடனும்கூட்டணிவைக்காத நாதகவை பிஜேபியின் பி ருPம் என்று எந்த ஆதாரத்தை வைத்து முத்திரை குத்துகிறீர்கள். திமுக வுடன் கூட்ணி அமைத்துத்தான் முதல் எம்எல்ஏ பாஜக பெற்றுக் கொண்ட வரலாற்றை மறைத்து விட்டு ஆதராமில்லாத குற்றச்சாடடை முன்வைக்கும் நோக்கம். என்ன?பிஜேபியுடன் கூட்ணி வைக்காத கட்சிகள் என்று முதல் வரிசையில் நாதக >கம்னியூஸ்ட்டுகள்>காங்கிரசைத் தவி வேறு எந்தக் கட்சியையும் குறிப்பிட முடியாது. பிஜேபியுடன் கூட்டணி அமைத்த கட்சிகளுடன் கூட்டணி வைத்த கம்னியூஸ்ட்டுகளும் காங்கிரசும் பிஜேபி எதிர்ப்பு என்ற தமது கோட்பாட்டில் உறுதியாக இருப்பதாகச் சொல்வதற்கான தகுதியை இழந்து விட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, goshan_che said:

நான் முன்பே சொன்னது போல் வெல்வது, அதிகாரத்தை பிடிப்பது எல்லாம் சீமானின் நோக்கமே அல்ல.

அவரது ஒவ்வொரு நடவடிக்கைகளை அவதானிக்கும் போது இதை தெளிவாக விளங்கி கொள்ள முடியும் வெளிநாட்டு ஈழதமிழர்கள் தான் இவர் தான் தமிழ்நாட்டின் முதல்வராகி தமிழ் ஈழம் பெற்று கொடுக்க போகின்றார் இலங்கை தமிழர்களின் கடைசி நம்பிக்கை தான் என்று ஏமாறுகின்றார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
On 11/7/2025 at 14:12, Justin said:

ஆடு மாடுகள் வெளியிடும் மீதேன் வாயுவினால் சூழல் மாசடையும். சூரியப் படலங்களை அமைத்தால் அந்த மாசடைதலால் வரும் விளைவை பசுமைத் தொழில் நுட்பம் மூலம் கொஞ்சம் நிவர்த்திக்கலாம்.

பூமியைத் தோண்டி மீதேன் எடுக்கிறார்கள் . இந்த இலட்சணத்தில் ஆடுமாடுகளின் கழிவிலிருந்து வரும் மீதேன் சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பாம்.ஆடுமாடுகளின் கழிவுகள் எந்தப் பின் விளைவுகளையும் தராத இயற்கை உரம். இந்தக்கம்பி கட்டும் கதைகளை உங்களுடன் வைத்துக் கொள்ளுங்கள்.மனிதக் கழிவுகளையே கையால் அள்ளும் அவலநிலையில் ஆடுமாடுகளின் கழிவுகள்தான் சுற்றுச்சூழலுக்கு பாதகம் என்று சொல்வது சீமானை எதிர்ப்பதற்காகவே இவர்கள் செய்யும் பொய்ப் பித்தலாட்டம்.

  • கருத்துக்கள உறவுகள்

3. "ஆவின்" (AAVIN) பால் பற்றித் தெரிந்த யாரும் தமிழ்நாடு பாலுற்பத்தியில் பின் தங்கி பால் பொருட்களை பெருவாரியாக இறக்குமதி செய்கிறது என்ற தரவை நம்ப மாட்டார்கள். பாலுற்பத்தியில் தமிழ் நாடு இந்தியாவின் முதல் 10 இடங்களுக்குள் வருகிறது. கடந்த 20 ஆண்டுகளில் தமிழ் நாட்டின் வருடாந்த பாலுற்பத்தி இரட்டிப்பாக அதிகரித்திருக்கிறதேயொழிய வீழ்ச்சியடையவில்லை.

தமிழகத்திற்கு ஆந்திராவில் இருந்து பால் இறக்குமதி செய்யப்படுகிறது. ஆடுமாடுகளின் வளர்ச்சி வந்தால் ஓங்கோல்பங்காளிகள் பெருமுதலாளிகளின் வியாபாரம் படுத்து விடும். தமிழ்நாட்டில் கால்நடைகளின் பெருக்கத்கை; கட்டுப்படுத்த வேண்டும். அதற்கு எதிரான போராட்டங்களை அரை வேக்காட்டுத்தனமான போராட்டங்களாக அறிவிக்க வேண்டும் இதுதான் திருட்டுத்திராவிடத்தின் செயற்திட்டம். அடமுட்டாள்களே பத்திரிகைகளையும் தொலைக்காட்சிகளையும் கையில் வைத்துக் கொண்டு பொயப்பிரச்சாரம் செய்யும் காலம் கடந்து விட்டது. இது சமூக ஊடகங்களின் காலம். ஒவ்வொரு மனிதனினும் தனது சொந்தக் கருத்தை தெரிவிப்பதற்கும் பலருக்கும் அது போய்ச் சேர்வதற்குமானகாலம் இது.பொய்கள் இனி நீண்ட காலம் நிலைக்காது. அடுத்த நொடியே உண்மைகளை உலகறியும் தொழல் டே;ப உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தொலைக்காட்சிகள் ஊழியர்களின் சம்பளம் கொடுக்க முடியாமல் இழுத்து மூடவேண்டிய கட்டத்துக்கு வந்து விட்டது. அதனால்தான் அவர்கள் இங்கள் பெயர்களில் சமூக ஊடக கணக்கையும் வைத்திருக்கிறார்கள்.பொய்கள் நீண்ட காலத்துக்கு நிலைக்காது.

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, புலவர் said:

சீமான் ஒரு சிறிய கட்சி.அவரது கருத்துக்களை யாரும் கேட்பதில்லை. ஒரு சில தமிழ்நாட்டு இளைஞர்களும் ஒரு சில புலம் பெயர்ந்த மூளைச் சலவைசெய்யப்ட் டவாக்குரிமையற்றஅரை வேக்காடுகளும் மட்டுமே ஆதரிக்கிறார்கள் என்று கடந்து போக வேண்டியதுதானே.அதிபுத்திசாலிகள் ஏன் கவலைப்படுகிறார்கள் குத்தி முறிகிறார்கள் என்பதுதான் புரியவில்லை.

ட்ரம்பிலிருக்கும், புட்டினிலிருக்கும், மோடியிலிருக்கும், ஸ்டாலினிலிருக்கும், சுமந்திரனிலிருக்கும், சிறிதரனிலிருக்கும் அதே கரிசனை தான் சீமான் மீதும் எங்களுக்கு இருக்கின்றது. இவர்களைச் சார்ந்த மக்களுக்கும், பொதுவாக மற்றவர்களுக்கும் இவர்களால் பயன் உண்டா அல்லது ஏமாற்றப்படுகின்றார்களா என்ற அதே பார்வையைத் தான் நாங்கள் இங்கே முன்வைக்கின்றோம்.

பல வருடங்களின் முன், முல்லைப் பெரியாறு அணைக்கான போராட்டத்தில் சீமான் பங்குபற்றவில்லை.அப்பொழுது தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு நண்பன் கேட்டான், 'நாங்கள் ஏன் சீமானுக்கு வாக்களிக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்................'. சீமான் பேசும் விடயங்களும், விடுதலைப் புலிகளின் தலைவர் கூட தங்களுக்கு எந்தளவு முக்கியம் என்றும் அவன் கேட்டான். தமிழ்நாட்டு பொதுசனங்களுடன் சீமானுக்கு இருக்கும் பெரிய இடைவெளிகளில் இதுவும் ஒன்று.

முதன் முதலில் நீட் பரீட்சையால் தற்கொலை செய்து இறந்து போன அனித்தாவிற்கான போராட்டத்தில் சீமான் பங்குபற்றவில்லை. இதை இயக்குனர் ரஞ்சித் நேரடியாகவே மேடையில் கேட்டார். இன்றும் கூட பங்குபற்றமாட்டார். அதற்கான காரணமும் எங்களுக்கு தெரியும். சீமான் தொல் திருமாவுடன் ஒரு மேடையில் ஏறப் போவதும் இல்லை. பின்னர் இவர் எப்படி ஒரு சமூகப் போராளி ஆகின்றார்................. இவர்கள் பேசும் தமிழ்த்தேசியத்தை தொல் திருமாவோ அல்லது ரஞ்சித்தோ அல்லது அவர்களில் எவரோ ஏற்காததன் பின்னணியும் இதுவே. இங்கு ஒன்றுபட்ட ஒரு தேசியமே இல்லை. ஒரு சிறு வட்டம் மட்டுமே உள்ளது.

ராமதாஸும் இவரைப் போன்ற ஒரு சமூகப் போராளியே. ஆணவக் கொலைகளையும், நாடகக் காதல் என்ற சொற்பதத்தையும் தமிழர்கள் மத்தியில் விதைத்து வளர்த்து வைத்திருப்பவர்கள் பாமகவினரே. வாழும் காலத்தில் காடுவெட்டி குரு ஒரு தாதாவாகவே வாழ்ந்து முடித்தார். இவர்கள் சமூகப் போராளிகளா........... இவர்களால் ஒரு பட்டியலின மக்களின் குடிசைக்குள் இன்றும் போக முடியுமா...........

'ஜெய்பீம்' என்ற ஒரு படத்தில் நடித்ததற்காக, அதில் வரும் ஒரு குறியீட்டுக்காக, நடிகர் சூர்யா படும் பாட்டைப் பாருங்கள். இது தான் பாமகவும், ராமதாஸும் சொல்லும் சமூக நீதியா.......... ஒரு சாதி பற்றி மட்டுமே இவர்கள் பேசுகின்றனர். சமூகம் பற்றி அல்ல. பிற சாதியினரை அடக்கி ஒடுக்குகின்றனர். பின்னர் இருவரும் சமூக நீதி, சமூகப் போராளிகள் என்கின்றனர்.

11 hours ago, goshan_che said:

இன்று அமித்ஷா, தேர்தலில் வென்றால் அதிமுக + பிஜேபி கூட்டணி ஆட்சிதான் என அறிவித்துள்ளார்.

எம்ஜிஆரின் கட்சி எடப்பாடியாரின் கையால் முடிய வேண்டும் என்று இருக்கின்றது போல....................🫣.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, புலவர் said:

தமிநாட்டில் பீஜேபியுடன் கூட்டணி அமைத்து பீஜேபி என்று ஒரு கட்சி இருக்கிறது தமிழ்நாட்டுக்கு அறிமுகம் செய்து வைத்த கட்சிகளை விட்டு விட்டு எந்தக்கட்சியுடனும்கூட்டணிவைக்காத நாதகவை பிஜேபியின் பி ருPம் என்று எந்த ஆதாரத்தை வைத்து முத்திரை குத்துகிறீர்கள். திமுக வுடன் கூட்ணி அமைத்துத்தான் முதல் எம்எல்ஏ பாஜக பெற்றுக் கொண்ட வரலாற்றை மறைத்து விட்டு ஆதராமில்லாத குற்றச்சாடடை முன்வைக்கும் நோக்கம். என்ன?பிஜேபியுடன் கூட்ணி வைக்காத கட்சிகள் என்று முதல் வரிசையில் நாதக >கம்னியூஸ்ட்டுகள்>காங்கிரசைத் தவி வேறு எந்தக் கட்சியையும் குறிப்பிட முடியாது. பிஜேபியுடன் கூட்டணி அமைத்த கட்சிகளுடன் கூட்டணி வைத்த கம்னியூஸ்ட்டுகளும் காங்கிரசும் பிஜேபி எதிர்ப்பு என்ற தமது கோட்பாட்டில் உறுதியாக இருப்பதாகச் சொல்வதற்கான தகுதியை இழந்து விட்டார்கள்.

ஏனைய கட்சிகள் பிஜேபியுடன் வைத்தத்து, வைப்பது அருவருக்கத்தக்க சந்தர்பவாத, கூட்டு.

சீமான் ஆடுவது கூலிக்கு மாரடிப்பு.

இரெண்டும் கண்டிக்கப்படவேண்டியன ஆனால் ஒன்றல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

தவறான தகவல், பாஜக தனித்து போட்டியிட்டே தன் முதன் சட்டமன்ற தொகுதியை வென்றது, அதிமுக கூட்டணியில் முதன் பாராளுமன்ற தொகுதியை வென்றது. பின்னர் தான் திமுகவுடன் கூட்டணி. அதற்கு பிறகு கூட, திமுக, அதிமுக அல்லாது பிற கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து பாராளுமன்ற தொகுதியை வென்றுயிருக்கிறது

9 hours ago, புலவர் said:

திமுக வுடன் கூட்ணி அமைத்துத்தான் முதல் எம்எல்ஏ பாஜக பெற்றுக் கொண்ட வரலாற்றை மறைத்து விட்டு ஆதராமில்லாத குற்றச்சாடடை முன்வைக்கும் நோக்கம். என்ன?பிஜேபியுடன் கூட்ணி வைக்காத கட்சிகள் என்று முதல் வரிசையில் நாதக >கம்னியூஸ்ட்டுகள்>காங்கிரசைத் தவி வேறு எந்தக் கட்சியையும் குறிப்பிட முடியாது. பிஜேபியுடன் கூட்டணி அமைத்த கட்சிகளுடன் கூட்டணி வைத்த கம்னியூஸ்ட்டுகளும் காங்கிரசும் பிஜேபி எதிர்ப்பு என்ற தமது கோட்பாட்டில் உறுதியாக இருப்பதாகச் சொல்வதற்கான தகுதியை இழந்து விட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

10 hours ago, goshan_che said:

சீமான் ஆடுவது கூலிக்கு மாரடிப்பு.

யாரிடம் கூலிவாங்கிக் கொண்டு மாரடிக்கிறார்? ஆதாரம் கொடுக்க முடியுமா?சீமானை மட்டம் தட்ட வேண்டும் என்ற காழ்ப்புணர்சியின் காரணமாக ஊகத்தின் அடிப்படையிலோ அல்லது 200 ரூபா உபிக்களின் வாந்திகளையோ இங்கே கொண்டு வநது கொட்டக் கூடாது.ஓ தளத்தில் அரசியல் செய்பவர்களை விமர்சிக்காதவர்கள் எல்லாம் களத்தில் நின்றுபத்திரிகையாளர்களின் எந்தக் கேள்களுக்கும் முகம் கொடுக்கும் சீமானை விமர்சிக்கிறார்கள். சீமான் ஏதாவது ஒரு கட்சியுடன் கூட்டணி அமைத்தால் யாரும் விமர்சிக்க மாட்டார்கள்வெற்றியோ தோல்வியோ சீமான் 2026 தேர்தலைதனித்தே எதிர்கொள்ள வேண்டும்.இந்தத் தேர்தலை சீமான் தாக்குப் பிடித்தால் அதன் பிறகு சீமான்தான் கிங்மேக்கர்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புலவர் said:

புலவரே! நீங்கள் என்னதான் உலகம் போற்றும் சிறந்த பாடல் எழுதினாலும், அதில் குற்றம் கண்டுபிடிக்க பல நக்கீரர்கள் யாழ்கழத்திலும் இருக்கிறார்கள்.🧐

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, புலவர் said:

பூமியைத் தோண்டி மீதேன் எடுக்கிறார்கள் . இந்த இலட்சணத்தில் ஆடுமாடுகளின் கழிவிலிருந்து வரும் மீதேன் சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பாம்.ஆடுமாடுகளின் கழிவுகள் எந்தப் பின் விளைவுகளையும் தராத இயற்கை உரம். இந்தக்கம்பி கட்டும் கதைகளை உங்களுடன் வைத்துக் கொள்ளுங்கள்.மனிதக் கழிவுகளையே கையால் அள்ளும் அவலநிலையில் ஆடுமாடுகளின் கழிவுகள்தான் சுற்றுச்சூழலுக்கு பாதகம் என்று சொல்வது சீமானை எதிர்ப்பதற்காகவே இவர்கள் செய்யும் பொய்ப் பித்தலாட்டம்.

புலவர் என்பது முற்காலத்தில் "அறிவுடையோர்" 😎என்ற அர்த்தத்தில் பயன்பட்ட ஒரு பெயர். அதை அவதாரப் பெயராக வைத்துக் கொண்டு முட்டாள் போலப் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்.

ஆடு, மாடுகளின் "கழிவில்" இருந்து வரும் மீதேன் அல்ல, அவற்றின் வாயுவில் (eructation) இருந்து வரும் மீதேன் தான் பச்சை வீட்டு விளைவை உருவாக்கும் எனக் குறிப்பிட்டிருக்கிறேன். ஆறுதலாக வாசித்தீர்களானால், சூரியப் படலங்களை அமைப்பதற்கு மேய்ச்சல் நிலம் எடுக்கப் பட்டால், அது சூழல் மாசடைதலை, பூமி வெப்பமாதலைச் சமாளிக்கும் ஒரு சமன் படுத்தும் செயலாக இருக்கும் என எழுதியிருக்கிறேன். இதன் அர்த்தம், நிலத்தில் இருந்து எடுக்கும் இயற்கை வாயுவையும் குறைக்கலாம் என்பது தான்.

உலகின் சில பகுதிகளில், போக்குவரத்தினால் உருவாகும் புவி வெப்பமாக்கும் விளைவை விட , ஆடு, மாடு, செம்மறி ஆடுகளால் வெளியிடப் படும் மீதேன் வாயுவினால் ஏற்படும் விளைவு அதிகம் - இது சூழலியல் ஆய்வுகளின் முடிவு, நாதக பாணி அரசியல் பிரச்சாரம் அல்ல! ஏன் அப்படி அதிகமாக இருக்கிறது? உயிர்சுவட்டு எரிபொருளை எரித்து உருவாகும் காபனீரொட்சைட்டை விட, மீதேனின் வெப்பமாக்கும் இயலுமை 6 மடங்கு அதிகம் என்பதே காரணம். வீகன் உணவுப் பழக்கத்தின் ஒரு விஞ்ஞான அடிப்படையும் இந்த தரவு தான்!

22 hours ago, புலவர் said:

தமிழகத்திற்கு ஆந்திராவில் இருந்து பால் இறக்குமதி செய்யப்படுகிறது. ஆடுமாடுகளின் வளர்ச்சி வந்தால் ஓங்கோல்பங்காளிகள் பெருமுதலாளிகளின் வியாபாரம் படுத்து விடும். தமிழ்நாட்டில் கால்நடைகளின் பெருக்கத்கை; கட்டுப்படுத்த வேண்டும். அதற்கு எதிரான போராட்டங்களை அரை வேக்காட்டுத்தனமான போராட்டங்களாக அறிவிக்க வேண்டும் இதுதான் திருட்டுத்திராவிடத்தின் செயற்திட்டம். அடமுட்டாள்களே பத்திரிகைகளையும் தொலைக்காட்சிகளையும் கையில் வைத்துக் கொண்டு பொயப்பிரச்சாரம் செய்யும் காலம் கடந்து விட்டது. இது சமூக ஊடகங்களின் காலம். ஒவ்வொரு மனிதனினும் தனது சொந்தக் கருத்தை தெரிவிப்பதற்கும் பலருக்கும் அது போய்ச் சேர்வதற்குமானகாலம் இது.பொய்கள் இனி நீண்ட காலம் நிலைக்காது. அடுத்த நொடியே உண்மைகளை உலகறியும் தொழல் டே;ப உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தொலைக்காட்சிகள் ஊழியர்களின் சம்பளம் கொடுக்க முடியாமல் இழுத்து மூடவேண்டிய கட்டத்துக்கு வந்து விட்டது. அதனால்தான் அவர்கள் இங்கள் பெயர்களில் சமூக ஊடக கணக்கையும் வைத்திருக்கிறார்கள்.பொய்கள் நீண்ட காலத்துக்கு நிலைக்காது.

தமிழ் நாடு என்ன, சிறந்த விவசாய மாநிலமான பஞ்சாப் கூட சீசனலாக பால் பொருட்களை இறக்குமதி செய்கிறது. இது காலனிலை மாறுதல்களால் சந்தைகளில் கேள்வி கூடிக் குறையும் போது நிகழ்வது. பால் உற்பத்தி தொடர்ந்து வீழச்சியடைவதால் ஏற்படும் நிலை அல்ல!

இப்படி பால் உற்பத்தி தமிழ் நாட்டில் குறைகிறது என்பதற்கான புள்ளி விவர ஆதாரம் இருந்தால் இங்கே பகிருங்கள், தொடர்ந்து பேசலாம். யூ ரியூபில் குப்பனும் சுப்பனும் அலட்டுவதை ஆதாரமாக இணைத்து மெனக்கெடாதீர்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
On 12/7/2025 at 15:03, விசுகு said:

நன்றாக இறைச்சியில் ஒரு பிடி பிடித்து விட்டு வந்து மிருகங்கள் விடும் காஸ் உலகுக்கு நன்றன்று என்று ஏப்பம் விட்டு கொண்டு இருக்கிறோம்.....

உங்களைப் பற்றிப் பேசுகிறீர்களா🤣?

அப்படியெல்லாம் ஆட்டு, மாட்டிறைச்சியை "பிடி பிடி"ப்பதைக் குறையுங்கள். கோழி இறைச்சி ஆரோக்கியமானது. பூமி வெப்பாகும் என்ற அக்கறையினால் அல்லாமல் உடல் ஆரோக்கியத்தை நாடி இதைச் செய்ய வேண்டும்!

  • கருத்துக்கள உறவுகள்

ஆடுமாடுகளின் வாய்வு என்பது கழிவுதானே. அவற்றின் வெளிச்சுவாசத்தினால் வருவதும் கழிவுதானே.உங்கள் கருத்துப்படி உலகில் உள்ள ஆடுமாடுகளை எல்லாம் அழித்தால் இந்தப் பிரச்சினைக்கு முடிவுகட்டலாம் அப்படித்தானே!

நான் முட்டாள்தனமாக எழுதிதுகிறேன் அதிபுத்திசாலிகள் அதற்கு எதிர்வினையாற்றாமல் விடுவதே நல்ல அறிவாளிக்கு அழகு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, Paanch said:

புலவரே! நீங்கள் என்னதான் உலகம் போற்றும் சிறந்த பாடல் எழுதினாலும், அதில் குற்றம் கண்டுபிடிக்க பல நக்கீரர்கள் யாழ்கழத்திலும் இருக்கிறார்கள்.🧐

சீமானை ஆதரிக்கின்றார்கள் எதிர்க்கின்றார்கள் என்பது ஒரு பக்கம் இருக்க.....

சீமானை எதிர்ப்பவர்கள் ஈழத்தமிழர் அழிவுக்கும் ஆதரவற்ற நிலைமைக்கும் உள்ளாக்கியவர்களை ஆதரிப்பது போல் தெரிகின்றது???????

கருணாநிதி அரசியலுக்கு வாய் மூடிய மௌனத்துடன் பாஜக தமிழ்நாட்டிற்குள் புகுந்து விடும் என்ற அச்சம் அவர்களுக்கு....

இவர்கள் சீமானை எதிர்ப்பதன் மூலம் யாரை ஆதரிக்கின்றார்கள் என்ற குழப்பம் உலகளாவிய குழப்பம் கண்டியளோ..😁

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

பூமி வெப்பாகும் என்ற அக்கறையினால் அல்லாமல் உடல் ஆரோக்கியத்தை நாடி இதைச் செய்ய வேண்டும்!

👍

நான் இரண்டிற்காகவும் பூமி வெப்பமடைவதை குறைப்பதற்கான பங்களிப்பிற்கும் ஆரோக்கியத்திற்கும் செய்கிறேன் இறைச்சியை முடிந்தளவு தவிர்த்தல் கோழி இறைச்சியை குறைப்பது வீகன் உணவை அதிகரிப்பது

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புலவர் said:

ஆடுமாடுகளின் வாய்வு என்பது கழிவுதானே. அவற்றின் வெளிச்சுவாசத்தினால் வருவதும் கழிவுதானே.உங்கள் கருத்துப்படி உலகில் உள்ள ஆடுமாடுகளை எல்லாம் அழித்தால் இந்தப் பிரச்சினைக்கு முடிவுகட்டலாம் அப்படித்தானே!

நான் முட்டாள்தனமாக எழுதிதுகிறேன் அதிபுத்திசாலிகள் அதற்கு எதிர்வினையாற்றாமல் விடுவதே நல்ல அறிவாளிக்கு அழகு.

ஆடு, மாடுகளின் வாய்வை அப்படியே சிறைப்பிடித்துத் தான் நீங்கள் முன்னர் எழுதியது போல "பின்விளைவுகள் இல்லாத இயற்கை உரம்" செய்கிறீர்களா😂? சீமான் தம்பிகள் என்றாலே யோசிக்காமல் ஒன்றை எழுதி விட்டு பின்னர் அதைத் தூக்கி நிறுத்த வேறொன்றை எழுதுவது வழமை.

வெட்டினால் மொட்டை, வளர்த்தால் கூந்தல் என்ற ரீதியிலான தீர்வை இதற்கு இங்கே யாரும் முன்மொழியவில்லை. அப்படிப் புரிந்து கொள்வது "நிலம் எல்லாம் விவசாய நிலமாகத் தான் இருக்க வேண்டுமென்ற" சீமான் தம்பிகளின் மூளையின் பிரச்சினை!

பேச்சு வாக்கில் உங்கள் "நலியும் தமிழக பாலுற்பத்தி" பற்றிய ஆதாரத்தைத் தர மறந்து விடாதீர்கள்! காத்திருக்கிறேன்😎.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, புலவர் said:

யாரிடம் கூலிவாங்கிக் கொண்டு மாரடிக்கிறார்? ஆதாரம் கொடுக்க முடியுமா?சீமானை மட்டம் தட்ட வேண்டும் என்ற காழ்ப்புணர்சியின் காரணமாக ஊகத்தின் அடிப்படையிலோ அல்லது 200 ரூபா உபிக்களின் வாந்திகளையோ இங்கே கொண்டு வநது கொட்டக் கூடாது.ஓ தளத்தில் அரசியல் செய்பவர்களை விமர்சிக்காதவர்கள் எல்லாம் களத்தில் நின்றுபத்திரிகையாளர்களின் எந்தக் கேள்களுக்கும் முகம் கொடுக்கும் சீமானை விமர்சிக்கிறார்கள். சீமான் ஏதாவது ஒரு கட்சியுடன் கூட்டணி அமைத்தால் யாரும் விமர்சிக்க மாட்டார்கள்வெற்றியோ தோல்வியோ சீமான் 2026 தேர்தலைதனித்தே எதிர்கொள்ள வேண்டும்.இந்தத் தேர்தலை சீமான் தாக்குப் பிடித்தால் அதன் பிறகு சீமான்தான் கிங்மேக்கர்.

ஆதாரம்… என்ன ஆதாரம் வேண்டும்…

தமிழ் தேசிய முகமூடியை போட்டு கொண்டு அப்படியே ஆர் எஸ் எஸ் கொள்கைகளை முன் தள்ளியமைக்கான எத்தனையோ ஆதாரங்கள் யாழில் கொட்டி கிடக்கிறன.

நான் சீமானை பற்றி இதுவரை எழுதியதை எல்லாம் மீள படித்துபார்க்கவும். ஆதாரம் போதியளவு கிடைக்கும் 🤣.

  • கருத்துக்கள உறவுகள்
On 12/7/2025 at 14:12, குமாரசாமி said:

ஒட்டு மொத்தமாக பண வாக்கு தேர்தலாக இருக்கும் நாட்டில் நீங்கள் சொல்வதெல்லாம் சாத்தியமா சார்? 🤣

இந்திய தேர்தல்கள் என்றாலே மோசடி தேர்தல் என்பது உலகத்தினது பார்வை.

அண்ணா,

இந்திய தேர்தல்களின் மீது மொத்தமாகவே எங்களுக்கிருப்பது ஒரு அவநம்பிக்கையையே என்றால், இங்கு பலதும் அர்த்தங்களை இழந்து போய்விடுகின்றன. இந்த அவநம்பிக்கை இருக்குமானால், சீமான் போன்று பணபலமும், கூட்டணிப் பலமும் இல்லாமல் அரசியல் களத்தில் நிற்பவர்கள் எதையுமே எக்காலத்திலும் சாதிக்க முடியாது, அடைய முடியாது என்ற முடிவை இன்றே எடுத்து விட்டு அரசியலில் இருந்து ஒதுங்கிவிடலாம்.

சீமான் போன்றோர் மிகத் தீவிர இடதுசாரிகள் (நக்சலைட்டுகள்) போன்ற ஒரு அமைப்பை அல்லது ஒரு இயக்கத்தை நடத்தாமால், மாறாக ஜனநாயக வழியிலான தேர்தல்களில் நம்பிக்கை உள்ள ஒரு அரசியல் கட்சியை நடத்துவதன் பின்னணியே அவர்களுக்கும், இங்கு பெரும்பாலானோருக்கும் இந்திய தேர்தல்களில் உள்ள நம்பிக்கையே காரணம்.

பணபலத்தின் மூலம் வென்றிடலாம் என்றால், சமீபத்திய நாடாளுமன்ற தேர்தலில் அயோத்தியில் பாஜக தோற்றிருக்கவே முடியாது. ராமர் கோவிலைக் கட்டி, அதைத் தொடர்ந்து அந்த தொகுதியையே வைகுண்டம் போன்று ஆக்கினார்கள் ஆளும் பாஜகவினர். ஆனாலும் அங்கு தோற்றார்களே...................

எந்த பணபலமும் இல்லாத ஆம் ஆத்மி டெல்லியிலும், பஞ்சாப்பிலும் வென்று ஆட்சியமைத்தார்கள். ஆம் ஆத்மி ஒரு சேர பாஜகவையும், காங்கிரஸையும் எதிர்த்து நின்று வென்று காட்டினார்கள். மக்கள் ஆம் ஆத்மியை, அதன் கொள்கைகளை, அங்கிருந்த தலைவர்களை நம்பினார்கள்.

எம்ஜிஆர் என்ற அசைக்க முடியாத ஆளுமையின் மறைவின் பின்னர், தமிழ்நாட்டில் அதிமுகவும், திமுகவும் மாறி மாறியே ஆட்சி அமைத்தன. ஆளும் கட்சிகளின் பணபலத்தாலோ அல்லது மோசடிகளாலோ தங்களது ஆட்சியை தொடர்ந்து தக்கவைக்க முடியவில்லை. ஆட்சியில் இருந்த அரசுக்கள் அடுத்த தேர்தல்களில் மிகக் கடுமையான தோல்விகளைக் கூட தமிழ்நாட்டில் சந்தித்திருக்கின்றன.

பணபலத்தையும், ஆளும் நிர்வாகத்தின் மோசடிகளையும் மீறி, இந்தியாவில் மக்களின் தீர்ப்புக்கு இன்னமும் இடமிருக்கின்றது. பல ஆசிய நாடுகளுடன் ஒப்பிடும் போது, இந்தியாவில் ஒரு சார்வாதிகார அல்லது இராணுவ நிர்வாகம் காலூன்ற முடியாமல் இருப்பதற்கு அதன் மக்களும், தேர்தல்களும் ஒரு பிரதான காரணம்.

தமிழ்நாட்டில் மாநிலக் கட்சிகளில் தமிழ்நாட்டு மக்கள் எல்லோருக்குமான கட்சிகள் என்று எடுத்தால், திமுக, அதிமுக, தவெக என்று மூன்றே இன்று பிரதானமாக இருக்கின்றது. மற்றைய கட்சிகள் ஏதோ சில வகைகளில் ஒரு சாதியக் கட்சி போன்று செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவை மூன்றுக்குமே ஆட்சியமைக்கும் தகமையும், சாத்தியங்களும் இருக்கின்றன. இன்றிருக்கும் பாமக, நாதக, விசிக போன்ற கட்சிகளுக்கு அந்த தகமை கிடையாது, சாத்தியங்களும் இல்லை.

இன்று உலகின் சில நாடுகளில் அந்த நாடுகளில் பெரும்பான்மையாக இருக்கும் மக்கள் தங்களையே பாதிக்கப்பட்டவர்களாக எண்ணிக் கொள்ளும் ஒரு போக்கு உருவாக்கப்பட்டிருக்கின்றது, உதாரணம்: அமெரிக்காவில் வெள்ளையின மக்கள், இந்தியாவில் இந்துக்கள், இலங்கையில் சிங்கள மக்கள். இது அங்கங்கே இருக்கும் சில அரசியல் தலைவர்களாலும், அவர்கள் சார்ந்த அரசியல் கட்சிகளாலும் பிரச்சாரங்கள் ஆக்கப்படுகின்றன. இந்தியாவில் பாஜக, அமெரிக்காவில் மஹா குழுமம், இலங்கையில் மஹிந்தவின் பொதுஜன பெரமுன என்பன இதற்கு சிறந்த உதாரணங்கள். இவை கூட மக்களின் வாக்குப் பலத்தால், ஜனநாயக தேர்தல்களின் ஊடாக இல்லாமல் ஆக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

அவநம்பிக்கையுடன் எதையும் ஆரம்பிக்க முடியாது. நம்பிக்கையுடன் ஆரம்பித்து தோற்றுப் போகலாம்.

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

தமிழ்நாட்டில் மாநிஇந்த 3 கட்சிகளும் தனியாக நின்று ஏன் தேர்தலைச்சந்திக்கதயங்குகிறார்கள்.அந்தக்கட்சிகளின் உண்iயான வாக்கு வங்கியை யாராலும் உறுதியாகக் 4று முடியாது. தவெக இன்னும் தேர்தலையே சந்திக்காத கட்சிக்கு கொடுக்கும் முக்கியத்துவததை தமிழ்நாட்டின் 3 வது பெரிய கட்சிக்கு கொடுக்க முடியாமல் உங்களைத்தடுப்பது எது.லக் கட்சிகளில் தமிழ்நாட்டு மக்கள் எல்லோருக்குமான கட்சிகள் என்று எடுத்தால், திமுக, அதிமுக, தவெக

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புலவர் said:
  2 hours ago, ரசோதரன் said:

தமிழ்நாட்டில் மாநிஇந்த 3 கட்சிகளும் தனியாக நின்று ஏன் தேர்தலைச்சந்திக்கதயங்குகிறார்கள்.அந்தக்கட்சிகளின் உண்iயான வாக்கு வங்கியை யாராலும் உறுதியாகக் 4று முடியாது. தவெக இன்னும் தேர்தலையே சந்திக்காத கட்சிக்கு கொடுக்கும் முக்கியத்துவததை தமிழ்நாட்டின் 3 வது பெரிய கட்சிக்கு கொடுக்க முடியாமல் உங்களைத்தடுப்பது எது.லக் கட்சிகளில் தமிழ்நாட்டு மக்கள் எல்லோருக்குமான கட்சிகள் என்று எடுத்தால், திமுக, அதிமுக, தவெக

ஆனால், மூன்றாவது பெரிய கட்சிக்கு வைப்புத் தொகையே கிடைக்காத ஒற்றையெண் வீதம் அல்லவா வாக்கு வீதம்? அதனால் கருத்துக் கணிப்பில் கூட பெரும்பாலும் உள்ளடக்குவதில்லை என நினைக்கிறேன்.

அதிருக்கட்டும். அந்த புள்ளி விபரம், பால் உற்பத்தி பற்றி என்ன நிலைவரம்? எஸ்கேப் தானா?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புலவர் said:
  3 hours ago, ரசோதரன் said:

தமிழ்நாட்டில் மாநிஇந்த 3 கட்சிகளும் தனியாக நின்று ஏன் தேர்தலைச்சந்திக்கதயங்குகிறார்கள்.அந்தக்கட்சிகளின் உண்iயான வாக்கு வங்கியை யாராலும் உறுதியாகக் 4று முடியாது. தவெக இன்னும் தேர்தலையே சந்திக்காத கட்சிக்கு கொடுக்கும் முக்கியத்துவததை தமிழ்நாட்டின் 3 வது பெரிய கட்சிக்கு கொடுக்க முடியாமல் உங்களைத்தடுப்பது எது.லக் கட்சிகளில் தமிழ்நாட்டு மக்கள் எல்லோருக்குமான கட்சிகள் என்று எடுத்தால், திமுக, அதிமுக, தவெக

தவெக மூன்றாவது பெரிய கட்சி என்று நான் சொல்லவில்லை. இன்று தமிழ்நாட்டில் இருக்கும் மாநிலக் கட்சிகளில் தமிழ்நாட்டில் இருக்கும் எல்லா மக்களுக்குமான ஒரு கட்சி தவெக என்றே சொல்லுகின்றேன். திமுக, அதிமுக, தவெக தவிர்ந்த ஏனைய கட்சிகள் தமிழ்நாட்டில் வாழும் மக்கள் எல்லோரையும் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்று சொல்லுகின்றேன்.

இந்த தேர்தலில் தவெகவும் விஜய்யும் தனியே நின்று பத்து வீத வாக்குகளை பெற்றால், அவர்கள் ஒரு சக்தியே. அப்படி பெறாவிட்டால், விஜய் கட்சியைக் கலைத்து விட்டு சினிமாவிற்கே மீண்டும் போய்விடலாம்.

தமிழ்நாட்டில் திமுக, அதிமுகவின் வாங்கு வங்கி ஏறக்குறைய 35 வீதங்கள் அளவில் இருக்கும். எம்ஜிஆர், ஜெயலலிதாவின் மறைவின் பின் அதிமுகவின் வாக்கு வங்கியில் பெரிய மாற்றம் ஏறபட்டுக் கொண்டிருக்கின்றது. விகிதாசாரப் பிரதிநிதிதுவமோ அல்லது 50 வீத பெரும்பான்மையோ தேவையில்லாத, சாதாரண பெரும்பான்மையிலேயே இந்தியாவில் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றார்கள். ஆகவே ஒவ்வொரு வாக்கும் எல்லா கட்சிகளினதும் நோக்காக இருக்கின்றது. ஆதலாலேயே கூட்டணியை அமைக்கின்றார்கள்.

மற்றும் குறிப்பாக தமிழ்நாட்டில் கட்சிகள் திராவிடம் பேசினால் என்ன, தமிழ்த்தேசியம் பேசினால் என்ன, கட்சி சார்பாக நிற்கப் போகும் வேட்பாளர்களை தெரிவு செய்யும் போது, இந்தக் கொள்கைகள் எல்லாமே காற்றில் போய்விடும். சாதியம் மட்டுமே முன்னிற்கும். ஒவ்வொரு தொகுதியிலும் எந்த சாதியினர் பெரும்பான்மையோ அந்த சாதியில் இருந்தே வேட்பாளர்கள் கட்சிகளால் தெரிந்தெடுக்கப்படுகின்றனர். நாதக கூட இதற்கு விதிவிலக்கல்ல. சென்னை போன்ற பெருநகரமும், சில பிரபலங்களும் மட்டுமே இதற்கு விதிவிலக்கு. இதன் காரணமாகவே சாதியக் கட்சிகள் மற்றும் சிறு கட்சிகளின் கூட்டணியை பெரும் கட்சிகள் விரும்புகின்றன.

இப்படியான ஒரு தேர்தல் களத்தில் கூட, ஜெயலலிதா அம்மையார் ஒரு தடவை கூட்டணிக் கட்சிகள் இல்லாமல் தனியே நின்று பெரும் வெற்றியும் பெற்றிருக்கின்றார்.

  • கருத்துக்கள உறவுகள்
On 14/7/2025 at 00:01, Justin said:

ஆடு, மாடுகளின் வாய்வை அப்படியே சிறைப்பிடித்துத் தான் நீங்கள் முன்னர் எழுதியது போல "பின்விளைவுகள் இல்லாத இயற்கை உரம்" செய்கிறீர்களா😂? சீமான் தம்பிகள் என்றாலே யோசிக்காமல் ஒன்றை எழுதி விட்டு பின்னர் அதைத் தூக்கி நிறுத்த வேறொன்றை எழுதுவது வழமை.

வெட்டினால் மொட்டை, வளர்த்தால் கூந்தல் என்ற ரீதியிலான தீர்வை இதற்கு இங்கே யாரும் முன்மொழியவில்லை. அப்படிப் புரிந்து கொள்வது "நிலம் எல்லாம் விவசாய நிலமாகத் தான் இருக்க வேண்டுமென்ற" சீமான் தம்பிகளின் மூளையின் பிரச்சினை!

பேச்சு வாக்கில் உங்கள் "நலியும் தமிழக பாலுற்பத்தி" பற்றிய ஆதாரத்தைத் தர மறந்து விடாதீர்கள்! காத்திருக்கிறேன்😎.

`பால் உற்பத்தியில் முதலிடம்...ஆனால்?' - அதிர்ச்சியளித்த ஆய்வு முடிவு

சுகன்யா பழனிச்சாமி

1 Min Read

`பால் உற்பத்தியில் முதலிடம்...ஆனால்?' - அதிர்ச்சியளித்த ஆய்வு முடிவு

Published:28 Mar 2018 4 PMUpdated:28 Mar 2018 4 PM

`பால் உற்பத்தியில் முதலிடம்...ஆனால்?' - அதிர்ச்சியளித்த ஆய்வு முடிவு

`பால் உற்பத்தியில் முதலிடம்...ஆனால்?' - அதிர்ச்சியளித்த ஆய்வு முடிவு

Join Our Channel

1Comments

Share

உலகிலேயே அதிக அளவில் பால் உற்பத்தி செய்து வரும் இந்தியாவில், சராசரி மனிதனுக்கு நாள் ஒன்றுக்கு இரண்டு டம்ளர் பால்கூடக் கிடைக்கப் பெறாத நிலைதான் உள்ளது. 

`பால் உற்பத்தியில் முதலிடம்...ஆனால்?' - அதிர்ச்சியளித்த ஆய்வு முடிவு

இந்தியாவின் பால் உற்பத்தியானது, கடந்த 1991-1992ம் ஆண்டில் 55.6 மில்லியன் டன்னாக இருந்தது. இந்நிலையில், சமீபத்தில் இந்தியாவின் பால் உற்பத்தி குறித்து, தேசிய பால் மேம்பாட்டு வாரியம் ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில், 1992ம் ஆண்டில் 55.6 மில்லியன் டன்னாக இருந்த பால் உற்பத்தியானது 2016-2017ம் ஆண்டில் 165 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளது. 

மேலும், 2015ம் ஆண்டில் மட்டும் அமெரிக்கா- 95 மில்லியன் டன், சீனா - 43 டன், பாகிஸ்தான் - 42 டன் மற்றும் பிரேசில் - 32 டன் பால் உற்பத்தி செய்துள்ளன. இந்த நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில்தான் அதிக அளவில் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. அதிலும், இந்தியாவில் பால் உற்பத்தி செய்யும் மாநிலங்கள் பட்டியலில் முதல் இடத்தில் பஞ்சாப், அடுத்தடுத்த இடங்களில் ஹரியானா, ராஜஸ்தான், குஜராத் மற்றும் ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் இடம்பிடித்துள்ளன. 

இந்த நிலையில், பால் உற்பத்தியில் இந்தியா குறிப்பிடத்தக்க வளர்ச்சியடைந்தபோதும், சராசரி மனிதனுக்கு நாள் ஒன்றுக்கு இரண்டு டம்ளர் பால்கூடக் கிடைக்கப் பெறாத நிலைதான் உள்ளது. இதிலும், குறிப்பிட்ட சில மாநிலங்களில் மட்டும்தான், ஒரு நபருக்கு தினசரி 500 கிராம் அளவிலான பால் கிடைக்கப்பெறுகிறது. 
 நாட்டின் பால் உற்பத்தியில் தமிழகத்தின் பங்களிப்பு 4.57 சதவீதம்:

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.