Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
On 25/7/2025 at 22:17, satan said:

பொம்மை விளையாடும், புட்டியில் பாலருந்தும் குழந்தையும் பயங்கரவாதி, செஞ்சோலையில் கல்வி கற்ற குழந்தைகளும் பயங்கரவாதிகள் சிங்களத்திற்கு. தற்போது முப்பது வயதுள்ளவருக்கு, பதினாறு ஆண்டுகளுக்கு முன் எத்தனை வயது? அதற்கு முன் அவர் புலி இயக்கத்தில் சேர்ந்து பயிற்சி எடுத்து களத்திற்கு போக எத்தனை வருடம் எடுத்திருக்கும்? அப்போ எத்தனை வயதில் அவர் புலிகள் இயக்கத்தில் சேர்ந்திருப்பார்? முள்ளிவாய்க்கால் வீழ்ச்சியின் பின், வயதானோர், பெண்கள், குழந்தைகள், மத குருமார் எந்த பாகுபாடுமில்லாமல் கைது செய்து புலிகள் என்று முத்திரை குத்தியது, கொன்றது, காணாமலாக்கியது சிங்களம். அது எந்தக்கணக்கு?

ஏன் தமிழ்சிறி க்குப் பயத்தில் இப்படி நேரடிப் பதில் சொல்லாமல் சுத்தி வளைக்கிறீர்கள்😂?

தற்போது 30 வயதான ஒருவருக்கு 2009 இல் 14 வயது (6 வயது என்பது தமிழ்சிறியின் "கவுண்டமணிக் கணக்கு"😎)! இறுதி யுத்த காலத்தில் 14 வயது என்பது பயிற்சி எடுக்கும் வயதாகவும் வன்னியில் இருந்திருக்கிறது. 6 மாதம் பயிற்சி கொடுத்த பின்னர் முன்னரங்கில் புலிகள் தங்கள் போராளிகளை விட்டது நீங்கள் கடைசியாக இலங்கையில் இருந்து கிளம்பும் போது இருந்த நிலை. 2009 இல் ஒரு நாள் இரு நாள் பயிற்சியோடு வலுக்கட்டாயமாகப் பிடித்துச் செல்லப் பட்டு முன்னரங்கில் பீரங்கித் தீனி (canon fodder) யாக விடப் பட்டோர் பலரை உங்களுக்குத் தெரிந்திருக்கும், ஆனால் தெரியாத மாதிரி நடித்தால் தானே "தேசியப் பற்றாளர்" விருது கிடைக்கும்😂?

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Justin said:

"தேசியப் பற்றாளர்" விருது கிடைக்கும்

விருது கொடுப்பது யார், அது நீங்களா? அல்லது உங்கள் எஜமானாரா? அறிய ஆவல்! மற்றவர்களுக்கு விருது பற்றி கதைப்பவர்கள், தாமும் இதையே எதிர்பார்த்து கதைப்பதுபோல் தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

என்ன இணையவன் உங்களுக்கு தமிழ் புரிதலில் ஏதாவது பிரச்சனை இருக்கிறதா அல்லது ஒரு சிலர்தான் கருத்து எழுதவேண்டும் என்று நினைக்கிறீர்களா? மொரட்டுவ எந்திரிக்கும், கிளிநொச்சி கால்நடைக்கும் என்ன வித்தியாசம் கண்டீர்கள்?

On 26/7/2025 at 04:17, satan said:

முள்ளிவாய்க்கால் வீழ்ச்சியின் பின், வயதானோர், பெண்கள், குழந்தைகள், மத குருமார் எந்த பாகுபாடுமில்லாமல் கைது செய்து புலிகள் என்று முத்திரை குத்தியது, கொன்றது, காணாமலாக்கியது சிங்களம். அது எந்தக்கணக்கு?

அவர்கள் செய்ததெல்லாம் சரி என நிறுவத்தான் இங்கு சிலரை இறக்கியிருக்கிறார்களே!!

  • கருத்துக்கள உறவுகள்

எனது சகோதரர்கள், அவர்களின் நண்பர்கள் எல்லாம் யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்து போய் வன்னியிற்தான் படித்து கல்விப்பொதுத்தராதரம் சாதாரணத்தில் சித்தியெய்தி உயர்தரம் போனார்கள். அவ்வாறே அங்கு பாடசாலைகளும் நடந்தன. அவரவர் தாம் அறிந்ததை வைத்து சிங்களத்திற்கு வெள்ளை அடிக்கிறார்கள். தாய்மொழிப்பற்று அது. அதற்காக நாங்கள் வரிஞ்சு கட்டிக்கொண்டு நிற்கத் தேவையில்லை. தமிழ்ப்பிள்ளைகள் படிக்கக் கூடாது என்பதற்காகவும் எதிர்கால சந்ததியை அழிக்க வேண்டுமென்றும் பாடசாலைகள், கோவில்கள், வைத்தியசாலைகள் என்று திரும்பிய இடமெல்லாம் கொட்டினவர்கள் தான். இருந்தாலும் பிள்ளைகள் படித்து பல்கலைக்கழகமும் போயிருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Eppothum Thamizhan said:

சில அல்லக்கைகள் தேவை என்கிறீர்களா??

எவ்வளவோ காலமாக வண்டி சரியாகத்தானே போய்க்கொண்டிருந்தது! ஒருசிலர், வன்னி மதவின்மேல் இருந்து அரட்டையடிக்கும் கூட்டத்தின் கதைகளை கேட்டுவிட்டு இங்கு அடித்துவிடுவதால் வந்த வினைதான்! நிர்வாகமும் பப்பாவில் ஏத்திவிடுகிறது ஐயா நல்லவர் வல்லவர் நாலும் தெரிந்தவர் என்று!!!

துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா.

அளவுக்கு அதிகமானால் அமிர்தமும் நஞ்சாகும். யாழ்களமும் முன்பு அதிகமாக இன்பம் சேர்த்து விட்டதோ? அதனால்தான் வினை வந்ததோ??.🤔

4 hours ago, Eppothum Thamizhan said:

என்ன இணையவன் உங்களுக்கு தமிழ் புரிதலில் ஏதாவது பிரச்சனை இருக்கிறதா அல்லது ஒரு சிலர்தான் கருத்து எழுதவேண்டும் என்று நினைக்கிறீர்களா? மொரட்டுவ எந்திரிக்கும், கிளிநொச்சி கால்நடைக்கும் என்ன வித்தியாசம் கண்டீர்கள்?

அவர்கள் செய்ததெல்லாம் சரி என நிறுவத்தான் இங்கு சிலரை இறக்கியிருக்கிறார்களே!!

உங்களுக்கு என்ன பிரச்சனை ? 30-16=6 என்பதை எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று பிடிவாதமாக இருக்கிறீர்களே. சரி அப்படியே வைத்துக் கொள்ளுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, satan said:

விருது கொடுப்பது யார், அது நீங்களா? அல்லது உங்கள் எஜமானாரா? அறிய ஆவல்! மற்றவர்களுக்கு விருது பற்றி கதைப்பவர்கள், தாமும் இதையே எதிர்பார்த்து கதைப்பதுபோல் தெரிகிறது.

உங்களுக்கான "விருது" யாழ் களத்தில் தேசிய வீரர்களிடமிருந்து உங்களுக்குக் கிடைக்கும் "தட்டிக் கொடுத்தல்" தான்! இதைத் தான் குறிப்பிட்டேன், அதை விட அதிகம் எதிர்பார்க்காதீர்கள்😂!

இங்கே உங்களுக்கு தடவிக் கொடுக்கும் அதே ஆட்களிடம் இருந்து எனக்கு நிறைய விருதுகள் கிடைத்திருக்கின்றன: நாய், நரி, உசாக்காட்டி என்று பட்டியல் நீளம். காரணம் நான் எதையும் தமிழ் தேசியத்திற்கு எதிராகச் செய்ததால் அல்ல! கணக்கு, பௌதீகம், உயிரியல் போன்ற விஞ்ஞானத்தின் வெளிப்படையுண்மைகளை அரசியல் பார்வைக்கேற்ப வளைக்காமல் அப்படியே ஒப்புவிப்பதால் தான் எனக்கு பெரும்பாலான பட்டங்கள் தேசிய ஆர்வலர்களிடமிருந்து கிடைத்தன. வயதைப் பிழையாகக் கணக்கிட்டு ஒரு போலித்தகவலைப் பரப்பியவரை, உங்களைப் போல நானும் தடவிக் கொடுத்து விட்டு, சரியான தகவலைச் சொல்வோரை திட்டிக் கொண்டிருந்தால் நானும் இங்கே "தமிழ் தேசிய பிஸ்தா" வாக வலம் வரலாம்!

இப்படியாக நடந்து கொள்வதால் ஏதோ சிங்களவரை நாம் தோற்கடிக்கிறோம் என்ற எண்ணத்தில் நீங்களும் உங்களுக்கு தடவிக் கொடுப்போரும் இருக்கிறீர்கள். உண்மையில் தமிழர்களை வெளியுலகுக்கு முட்டாள்களாகக் காட்டிக் கொண்டிருக்கும் வேரறுக்கும் வேலையைத் தான் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதைக் கூடப் புரிந்து கொள்ள முடியாமல் மழுங்கிப் போய் இருக்கிறீர்கள்😎!

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, இணையவன் said:

உங்களுக்கு என்ன பிரச்சனை ? 30-16=6 என்பதை எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று பிடிவாதமாக இருக்கிறீர்களே. சரி அப்படியே வைத்துக் கொள்ளுங்கள்.

நான் 30 - 16 = என்ன என்பதைப்பற்றி கதைக்கவே இல்லையே! நான் எதற்காக சிரிப்புக்குறி போட்டேன் என்பதை தெளிவாக சொல்லிவிட்டேனே! வெட்டும் அவசரத்தில் பார்க்கவில்லையா!!

  • கருத்துக்கள உறவுகள்

என்னய்யா இலங்கை முன்னாள் கடற்படை தளபதி கைது என ஒரு செய்தி உள்ளது. இதுபற்றி ஒரு ஆராய்ச்சியும் இல்லையா?

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, நியாயம் said:

என்னய்யா இலங்கை முன்னாள் கடற்படை தளபதி கைது என ஒரு செய்தி உள்ளது. இதுபற்றி ஒரு ஆராய்ச்சியும் இல்லையா?

நீங்கள் வேற..

இப்பொழுதெல்லாம் யாழில் ஆராய்ச்சி மட்டுமே நடக்கிறது. அவை

கருத்தாளரின் (மங்கிய) மூளை வளர்ச்சி

கணக்கில் அவரது தராதரம்

அவர் பார்க்கும் படிக்கும் பத்திரிகை மற்றும் பார்க்கும் தொலைக்காட்சி சார்ந்த மட்டமான அறிவுரை

அதையும் தாண்டி விட்டால் தேசியப்பற்றாளர் என்று நளினம். 😡

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, விசுகு said:

நீங்கள் வேற..

இப்பொழுதெல்லாம் யாழில் ஆராய்ச்சி மட்டுமே நடக்கிறது. அவை

கருத்தாளரின் (மங்கிய) மூளை வளர்ச்சி

கணக்கில் அவரது தராதரம்

அவர் பார்க்கும் படிக்கும் பத்திரிகை மற்றும் பார்க்கும் தொலைக்காட்சி சார்ந்த மட்டமான அறிவுரை

அதையும் தாண்டி விட்டால் தேசியப்பற்றாளர் என்று நளினம். 😡

விசுகர்,

"30 வயது முன்னாள் போராளி எனப்படும் ஒருவரை துப்பாக்கியோடு கைது செய்திருக்கிறார்கள்" இது தான் செய்தி.

இதன் பின்னாலிருக்கும் சாத்தியங்கள் என்ன?

அவர் புனர்வாழ்வு முகாமில் போராளியாக இல்லாமலே தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒரு சிவிலியனாக இருக்கலாம்.

அவர் இறுதி நேரத்தில் விரும்பி இயக்கத்தில் இணைந்து, பின்னர் சரணடைந்து புனர்வாழ்வு முகாமில் இருந்த ஒருவராக இருக்கலாம்.

அவர் இறுதிப்போரின் போது கட்டாயமாக இணைக்கப் பட்டு, பின்னர் சரணடைந்து புனர்வாழ்வு முகாமில் இருந்திருக்கலாம்.

இவையெதுவும் இல்லாமல் அரசினால் பொய்க்குற்றம் சாட்டப் பட்டு இப்போது கைதாகியிருக்கலாம்.

இவையெல்லாம் சாத்தியமான விளக்கங்களாக இருக்க, 30 வயது ஆளுக்கு 2009 இல் 6 வயது என்ற "கவுண்டமணி செந்தில்" விளக்கம் ஏன் அவசியம்😂? அந்த முட்டாள் தனமான விளக்கத்தை நிராகரிக்கும் ஒருவரை நோக்கி மன நோயாளி, குரைக்கும் ஜந்து எனும் வசவுகள் ஏன் அவசியம்?

இந்த அவசியமில்லாத லூஸ் வேலைகளைக் கண்டிக்க உங்களுக்கு விருப்பமும் இல்லை, தற் துணிவும் இல்லை. ஆனால், "தேசியப் பற்றாளர்" என்று நக்கலுக்குரியவர்களை நான் நக்கல் செய்தால் கோபம் வந்து விடுகிறது உடனே!

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Justin said:

என்னுடைய கோபம் அதுவல்ல. இந்த சிறிய கணக்கு சிறிக்கு தெரியாது அல்லது வேண்டும் என்றே செய்யக்கூடியவர் சிறி என்கிற உங்கள் கலாய்ப்பு தான். இது இரண்டுமே தவறு.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, விசுகு said:

என்னுடைய கோபம் அதுவல்ல. இந்த சிறிய கணக்கு சிறிக்கு தெரியாது அல்லது வேண்டும் என்றே செய்யக்கூடியவர் சிறி என்கிற உங்கள் கலாய்ப்பு தான். இது இரண்டுமே தவறு.

அப்படியானால், தமிழ்சிறியே "வயதைக் கவனிக்கவில்லை" என்றல்லவா பதில் போட்டிருப்பார்? போடவில்லையே அப்படி? மட்டு வந்து தணிக்கை செய்ய வேண்டிய பதிலை தமிழ்சிறி எழுதுகிறார், அவருக்கு ஒத்து ஊத பெருமாள் வந்து இன்னும் பல எழுதியிருக்கிறார். அதற்கு பக்க வாத்தியம் சிலர் ஒரிஜினல் கருத்தை வாசிக்காமல் போட்டிருக்கிறார்கள். இதெல்லாம் கண்டு உங்களுக்கு "கோபம்" வராது😂! செலக்ரிவ் மெமறி போல செலக்ரிவ் கண் பார்வை!

ஒருவர் தவறு விடலாம், OK. அதைச் சுட்டிக் காட்டினால் அந்த தவறை சமாளிக்க கோபம் கொப்பளிப்பது "அவர் தெரியாமல் தவறு விட்டிருக்கிறார்" என்று நிறுவுகிறதா அல்லது முட்டாள் தனத்தை இங்கே பரப்ப முனைகிறார் என்று காட்டுகிறதா?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

நீங்கள் வேற..

இப்பொழுதெல்லாம் யாழில் ஆராய்ச்சி மட்டுமே நடக்கிறது. அவை

கருத்தாளரின் (மங்கிய) மூளை வளர்ச்சி

கணக்கில் அவரது தராதரம்

அவர் பார்க்கும் படிக்கும் பத்திரிகை மற்றும் பார்க்கும் தொலைக்காட்சி சார்ந்த மட்டமான அறிவுரை

அதையும் தாண்டி விட்டால் தேசியப்பற்றாளர் என்று நளினம். 😡

ஒரு கதைக்கு கைது செய்யப்பட்ட பெடியன் பதின்நான்கு வயதில் இயக்கத்தில் இருந்தான் என வைத்தாலும், பதின் நான்கு வயதில் கைது செய்யப்பட்டு புனர்வாழ்வு கொடுக்கப்பட்டான் என எடுத்து கொண்டாலும், 2025ம் ஆண்டு, 16 வருடங்களின் பின், இயக்கமே இல்லாத நிலையில், ஆயுதங்கள் மெளனிக்கப்பட்டு 16 ஆண்டுகளின் பின் கைது செய்யப்பட்ட உந்த பெடியன் முன்னாள் விடுதலை புலி உறுப்பினர் என இனம் காணப்படுவது மூலம் இங்கே நிறுவப்படுவது என்ன? உந்த பெடியன் நாசமாய் போனதற்கு புனர் வாழ்வு கொடுத்தவர்களின் பங்கு இல்லையா? 16 வருடங்களின் உந்த பெடியன் யார் யாருடன் கூட்டு வைத்தான், இவனை தவறாக வழி நடாத்தியவர்கள் யார் என ஒரு தகவலும் இல்லையே. இந்த செய்தியை வழங்கிய அரச அதிகாரியிடம் தான் விளக்கம் கேட்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

ஒருவர் தவறு விடலாம், OK. அதைச் சுட்டிக் காட்டினால் அந்த தவறை சமாளிக்க

ஒரு தவறை சுட்டிக்காட்ட ஒரு பண்பு இருக்கிறது. அது உங்கள் சுட்டிக்காட்டலில் அறவே இல்லை. தவறை சுட்டிக்காட்டுவதை விட அதை வைத்து ஒருவரை கோபப்படுத்துவது அல்லது குத்திக் குத்திக் காட்டுவது அல்லது சறுக்கி விட்டார் என்பதை வைத்து அவரது தேசியம் சார்ந்த பக்கத்தை பந்தாடுவது மட்டுமே இங்கே நான் காண்பது. யாழ் களத்தை அறிவூட்டுகிறோம் அல்லது தவறை சுட்டிக்காட்டி நேர்வழிப்படுத்துகிறோம் என்றபடி யாழில் தற்போது படித்தவர்கள் என்ற ஒரு சிலரது கம்பு சுத்துதல் மட்டுமே என்னால் காணக்கிடைக்கிறது. அதனால் தான் நானே யாழை விட்டு தள்ளிச்சென்று கொண்டிருக்கிறேன். இது தொடர்வதை காண்கிறேன். என் கண்முன்னே இது நடப்பதால் ஒரு அளவுக்கு மேல் கடந்து செல்ல முடியவில்லை

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, நியாயம் said:

ஒரு கதைக்கு கைது செய்யப்பட்ட பெடியன் பதின்நான்கு வயதில் இயக்கத்தில் இருந்தான் என வைத்தாலும், பதின் நான்கு வயதில் கைது செய்யப்பட்டு புனர்வாழ்வு கொடுக்கப்பட்டான் என எடுத்து கொண்டாலும், 2025ம் ஆண்டு, 16 வருடங்களின் பின், இயக்கமே இல்லாத நிலையில், ஆயுதங்கள் மெளனிக்கப்பட்டு 16 ஆண்டுகளின் பின் கைது செய்யப்பட்ட உந்த பெடியன் முன்னாள் விடுதலை புலி உறுப்பினர் என இனம் காணப்படுவது மூலம் இங்கே நிறுவப்படுவது என்ன? உந்த பெடியன் நாசமாய் போனதற்கு புனர் வாழ்வு கொடுத்தவர்களின் பங்கு இல்லையா? 16 வருடங்களின் உந்த பெடியன் யார் யாருடன் கூட்டு வைத்தான், இவனை தவறாக வழி நடாத்தியவர்கள் யார் என ஒரு தகவலும் இல்லையே. இந்த செய்தியை வழங்கிய அரச அதிகாரியிடம் தான் விளக்கம் கேட்க வேண்டும்.

இதைத் தான் ஆரம்பத்திலேயே நான் குறிப்பிட்டேன்

On 22/7/2025 at 21:34, விசுகு said:

புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர் என்பதால் அவரை அவர்களே இயக்கி இருக்கமுடியும். அதற்கான பயிற்சி மற்றும் செயற்பாடுகள் அங்கிருந்தே தொடங்கி இருக்கவேண்டும்.

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

ஒரு தவறை சுட்டிக்காட்ட ஒரு பண்பு இருக்கிறது. அது உங்கள் சுட்டிக்காட்டலில் அறவே இல்லை. தவறை சுட்டிக்காட்டுவதை விட அதை வைத்து ஒருவரை கோபப்படுத்துவது அல்லது குத்திக் குத்திக் காட்டுவது அல்லது சறுக்கி விட்டார் என்பதை வைத்து அவரது தேசியம் சார்ந்த பக்கத்தை பந்தாடுவது மட்டுமே இங்கே நான் காண்பது. யாழ் களத்தை அறிவூட்டுகிறோம் அல்லது தவறை சுட்டிக்காட்டி நேர்வழிப்படுத்துகிறோம் என்றபடி யாழில் தற்போது படித்தவர்கள் என்ற ஒரு சிலரது கம்பு சுத்துதல் மட்டுமே என்னால் காணக்கிடைக்கிறது. அதனால் தான் நானே யாழை விட்டு தள்ளிச்சென்று கொண்டிருக்கிறேன். இது தொடர்வதை காண்கிறேன். என் கண்முன்னே இது நடப்பதால் ஒரு அளவுக்கு மேல் கடந்து செல்ல முடியவில்லை

இந்தப் "பண்பு" பற்றிய உங்கள் அக்கறை மிகவும் வரவேற்கத் தக்கது! ஆனால், அதை எல்லோரது கருத்திலும் காட்டுங்கள், பாராட்டுகிறோம். இப்படி உங்கள் நண்பர்களை, சக தேசியப் பற்றாளர்களை நோக்கிப் பேசும் கருத்தாளர்களிடம் மட்டும் "பண்புப் பொலிஸ் வேலை" நாம் எல்லோரும் உங்களிடம் கண்டு அலுத்துப் போன ஒரு இயல்பு😎. இந்த செலக்ரிவ் பண்பு நாடலினால் ஒரு பயனுமில்லை!

பல தடவைகள் சொல்லியிருப்பது போல, படிப்பு உங்களுக்கு கண்ணுக்குள் குத்தினால் நான் எதுவும் செய்ய இயலாது. அது உங்கள் பிரச்சினை, நீங்களே தீர்வு தேடுங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Justin said:

உங்களுக்கான "விருது" யாழ் களத்தில் தேசிய வீரர்களிடமிருந்து உங்களுக்குக் கிடைக்கும் "தட்டிக் கொடுத்தல்" தான்!

ஹா ஹா..... இப்படித்தான் சிலர் எதையோ எதிர்பார்த்து எழுதுவதும், மற்றவர்களை எடை போடுவதும் நடைபெறுகிறது. நாம் நமக்கு தெரிந்ததை பகிர்ந்து கொள்கிறோம். சிறியர் ஒன்றும் கணக்கு தெரியாத, படிப்பறிவு இல்லாதவரல்லர். சிங்களம் போடும், காட்டும் கணக்குகளை வைத்தே எழுதியிருக்கிறார் என்று நான் நினைக்கிறன். அவரது முன்னைய பதிவுகள் கூட சிங்களத்தின் கணக்கு பிழைகளை, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை ஏளனமாக குத்திக்காட்டியிருக்கிறார். இதற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் என எனக்கு விளங்கவில்லை? உள்ளே உள்ள வக்கிரம் வெளிப்பட சமயம் பார்த்து காத்திருக்கிறது போலுள்ளது!

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, satan said:

ஹா..ஹா! அவர் ஏளனமாக குத்திக் காட்டிய கணக்கு, அவரே இணைத்த செய்தியின் படி பிழைத்திருக்கிறது என்பதை நான் பகிடியாகச் சுட்டிக் காட்டியிருக்கிறேன். அவ்வளவு தான் விடயமென்றால் அதை நேரடியாக சொல்லி விட்டுப் போயிருக்கலாம் அல்லவா? இவ்வளவு நேரம் சுட்டிக்காட்டிய என்னை குழுவாகச் சேர்ந்து திட்டி, திட்டியவரை தட்டிக் கொடுத்து (வக்கிரம்?😎) திரியை நீட்டிய பிறகு தான் கல்குலேட்டரை எடுத்துக் கணக்குப் பார்த்திருக்கிறீங்கள் போல😂! இனியாவது ஒருவன் எழுதுவதை வாசித்து விட்டு கருத்தெழுத ஆரம்பியுங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, நியாயம் said:

ஒரு கதைக்கு கைது செய்யப்பட்ட பெடியன் பதின்நான்கு வயதில் இயக்கத்தில் இருந்தான் என வைத்தாலும், பதின் நான்கு வயதில் கைது செய்யப்பட்டு புனர்வாழ்வு கொடுக்கப்பட்டான் என எடுத்து கொண்டாலும், 2025ம் ஆண்டு, 16 வருடங்களின் பின், இயக்கமே இல்லாத நிலையில், ஆயுதங்கள் மெளனிக்கப்பட்டு 16 ஆண்டுகளின் பின் கைது செய்யப்பட்ட உந்த பெடியன் முன்னாள் விடுதலை புலி உறுப்பினர் என இனம் காணப்படுவது மூலம் இங்கே நிறுவப்படுவது என்ன? உந்த பெடியன் நாசமாய் போனதற்கு புனர் வாழ்வு கொடுத்தவர்களின் பங்கு இல்லையா? 16 வருடங்களின் உந்த பெடியன் யார் யாருடன் கூட்டு வைத்தான், இவனை தவறாக வழி நடாத்தியவர்கள் யார் என ஒரு தகவலும் இல்லையே. இந்த செய்தியை வழங்கிய அரச அதிகாரியிடம் தான் விளக்கம் கேட்க வேண்டும்.

அதெல்லாம் நீங்கள் கேட்கக்கூடாது! எங்களுக்கு 30 - 16 = 14 எண்டுமட்டும்தான் நிறுவத்தெரியும். அதோட அவன் புலிகளால்தான் நாசமாய்ப்போனவன். ஆமிக்காரன் நல்லவிதமா புனர்வாழ்வு கொடுத்தபின்னும் புலிதான் வந்து இப்படி மாத்திப்போட்டாங்கள் என்று வன்னியில் மதக்கடியில இருந்து கதைச்சப்பொடியன்கள் சொன்னவங்கள் என்றும் கணித பௌதீக விஞ்ஞான முறையில் பகுத்தறிஞ்சு சொல்லத்தான் தெரியும். இதுகள் படிக்காத ஆட்களுக்கெல்லாம் விளங்காது கண்டியளோ!!

  • கருத்துக்கள உறவுகள்
On 29/7/2025 at 17:46, Eppothum Thamizhan said:

அதோட அவன் புலிகளால்தான் நாசமாய்ப்போனவன். ஆமிக்காரன் நல்லவிதமா புனர்வாழ்வு கொடுத்தபின்னும் புலிதான் வந்து இப்படி மாத்திப்போட்டாங்கள்

புலிகள் இருந்த காலத்தில் போதைப்பொருள் நமது பிரதேசத்தில் கேள்விப்பட்டதே இல்லை, வாள் வெட்டு? இதெல்லாம் எங்கிருந்து யாரால் கொண்டுவரப்பட்டது?

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, satan said:

புலிகள் இருந்த காலத்தில் போதைப்பொருள் நமது பிரதேசத்தில் கேள்விப்பட்டதே இல்லை, வாள் வெட்டு? இதெல்லாம் எங்கிருந்து யாரால் கொண்டுவரப்பட்டது?

இவை எல்லாம் திட்டமிட்டே செயல்படுத்தப்படுகிறது என்று சொன்னால் அதற்கும் நக்கல்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

இந்த இளைஞனுக்கு இப்போது வயது 30 மட்டுமே ஆகிறதென்றால், இவர் 2009 ஆம் ஆண்டு 13 அல்லது 14 வயதுடன் இருந்திருக்க வேண்டும். இறுதிக் காலங்களில் கட்டாயமாகச் சேர்க்கப்பட்டவர்களில் இவரும் அடங்கலாம்.

இவரையொத்த வயதுடைய பல இளம் வயதினர் இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டபின்னர் பாரிய கிடங்குகளின் அருகில் சடலங்களாக இருப்பதைப் பார்த்திருக்கிறோம். கொல்லப்பட்டவர்கள் போக இன்னும் சிலரை புணர்வாழ்வு என்கிற பெயரில் அரச இராணுவமோ அல்லது புலநாய்வுத்துறையோ தமது நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தியிருக்கலாம். அல்லது இவராகவே பணத்திற்காக சட்டவிரோதக் குழுக்களுடன் இணைந்திருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரஞ்சித் said:

அல்லது இவராகவே பணத்திற்காக சட்டவிரோதக் குழுக்களுடன் இணைந்திருக்கலாம்.

எனது ஊரில் உள்ள சில சமூக அக்கறை இல்லாத சில பொடியளை அங்குள்ள இராணுவம் போலீஸ் தமது வலைக்குள் இழுக்கும், இராணுவத்தின் நட்பு கிடைத்ததும் இவர்கள் அந்த ஊரில் பெரிய மனிதர்களாகிவிடுவார்கள். சண்டித்தனம், அடாவடி. அவர்களுக்கு வக்காலத்து வாங்க போலீஸ் வேற துணைக்கு. போலீசாரிடம் முறைப்பாடு அளித்தாலும் இந்த போக்கிலியள் சார்பாகவே போலீஸ் கதைத்து முறைபாடளித்தவர்களை அச்சுறுத்தும். இதனால் யாரும் அவர்களுக்கெதிராக முறைபாடளிக்க முன்வருவதில்லை. அவர்களை வைத்து, ஊரில் யாரெல்லாம் புலிகள் சார்பானவர்கள் ,யார் இராணுவத்துக்கு எதிரானவர்கள், போராளிகுடும்பங்கள், மாவீரர் குடும்பங்கள், அவர்களின் குடும்ப விபரங்களை திரட்டுவது. இதனால் இப்படிப்பட்டவர்களை ஊரவர் ஒதுக்கி விடுவர். அதன் பின் அவர்களை வைத்து இப்படியான கதைகளை புனைவது, போதைப்பொருள் தரகராக்குவது, பின் இள வயதிலேயே மரணம். ஒரு வேளை நிலைமை புரிந்து விலக நினைத்தாலும் முடியாது. நீர்ச்சுழியில் சிக்கியதுபோல அவர்கள் எதிர்காலம். இது புரியாமல் ஆமிக்காரன் சிரிக்கிறான், உதவுகிறான் என்று உறவு வைத்தால் அவ்வளவுதான். அது ஒரு விஷ ஜந்து என விலகி ஓடிவிட வேண்டும் இராணுவத்தை கண்டால்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.