Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனது மரணம்.

Was-sagt-die-Bibel-ueber-den-Tod.webp

நாம் எமது வாழ்க்கையில் பிறந்தது முதல் இறக்கும் வரைக்கும் ஏதோ ஒரு இலக்கை நோக்கியே சென்று கொண்டிருப்போம்.

நாம் பிறந்தவுடன் எமது பிற்காலத்தை ஓரளவு எம்மை பெற்றெடுத்தவர்கள் தீர்மானிப்பர். அது சில/பல வேளைகளில் நூறு வீதம் சரியானதாக இருக்காது. பிறந்து வளர்ந்து புத்திகள் வர புதிய சிந்தனைகள் உதிக்க சிலரது வாழ்க்கை பெற்றோர்கள் கீறிய கோட்டில் செல்லும்.

பலரது வாழ்க்கை பலவகையில் மாறி மாறி செல்லும். உதாரணத்திற்கு எனது வாழ்க்கை ஜேர்மனியில் அமைந்து முடியும் என நானும் எதிர்பார்க்கவில்லை.என்னை பெற்றெடுத்து வளர்த்தவர்களும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஏனென்றால் என்னை பெற்றெடுத்தவர்கள் எனது எதிர்காலம் பற்றி ஆயிரம் திட்டங்கள் வைத்திருப்பார்கள்.இது இவனுக்கு அது அவளுக்கு என பல கனவுகளை வளர்த்திருப்பார்கள்.பெற்றெடுத்தவர்களுக்கு அது எட்டாக்கனியாக மாறியிருக்கும். இப்படியான சம்பவங்கள் பலருக்கு நடந்திருக்கலாம்.

பெற்றோரின் கட்டுப்பாடு எனும் கையை விட்டு விலகும் போது பல விடயங்களை நம்மை நாமே அரசர்களாக்கி தீர்மானிக்கின்றோம். அது பல இடங்களில் தனி பறவையாக்கும் போது தானாகவே வந்து சேர்ந்து விடும்.நல்லது கெட்டது தெரியாத பருவத்தில் நாம் செய்வதெல்லாம் வீரமாக தெரியும். புத்திசாலித்தனமாக தெரியும். சரியானதாகவும் தெரியும்.

அதன் பின் மனித வாழ்வில் திருமண நிகழ்வு என ஒன்று வரும். அது ஒரு கூட்டு வாழ்க்கை.சந்ததிகள் உருவாகும்.சந்தோசங்கள் பெருகும்.சொந்தங்கள் பாசங்கள் உறவுகள் பெருகும். அதில் ஆயிரம் பிரச்சனைகள் வரும் போகும்.நன்மை தீமை என பல சம்பவங்கள் நடந்தேறும்.அப்போது எமக்குள் இருந்த பாசங்கள் விரிவடையும். முன்னர் இருந்த அயல் உறவு பாசங்கள் இல்லாமல் போகும்.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒவ்வொருத்தர் வாழ்விலும் பிறப்பு தொடக்கம் இறப்பு வரைக்கும் வயது பருவங்களுக்கேற்ப விழாக்கள்,கொண்டாட்டங்கள் வந்து சென்று கொண்டே இருக்கும்.அது பிறந்தநாள் தொடக்கம் மரண நாள் வரையில் முடிவடையும்.எல்லா கொண்டாட்டங்களையும் அப்படியிருக்க வேண்டும் இப்படி இருக்க வேண்டும் என திட்டமிட்டு செய்வது வழக்கம். மரண நிகழ்வை மட்டும் யாரும் தீர்மானிக்க முடியாது.ஆனால் மரணச்சடங்கு இப்படித்தான் நடக்க வேண்டும் என பலர் திட்டமிட்டு வைத்திருப்பதில்லை.சிலர் அப்படி திட்டமிட்டு வைத்திருக்கிறார்கள்.அதில் ஒரு சில திட்டமிட்ட முறையிலும் நடைபெற வாய்ப்பில்லாமல் போகின்றது.

நான் ஒரு மரணச்சடங்கு உயில் எனக்காக எழுதி வைத்துள்ளேன்😂.என் பெறோர்கள் எனக்காக காணி பூமி உறுதிகளை எழுதி வைத்து விட்டு சென்றார்கள்.

நானோ என் இறுதி பயணத்திற்காக உயில் எழுதுகின்றேன்.😜

  • கருத்துக்கள உறவுகள்

உணர்வுபூர்வமான அருமையான பதிவு என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. 'எனது மரணச் சடங்கு' என்று தலைப்பிட்டதால் நான் எழுதியதைப் போல அல்லது என் மகள் எழுதியதைப் போல அமைந்திருக்குமோ என்று நினைத்தேன் - மற்றவர்கள் உலகை நமது கண்ணாடி அணிந்து பார்ப்பது வேடிக்கையானது என்று தெரிந்தும் கூட. இருப்பினும் எங்கள் எழுத்துகளையும் கீழே இணைத்துள்ளேன் :

https://www.facebook.com/share/p/16mRbucbQJ/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, சுப.சோமசுந்தரம் said:

உணர்வுபூர்வமான அருமையான பதிவு என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. 'எனது மரணச் சடங்கு' என்று தலைப்பிட்டதால் நான் எழுதியதைப் போல அல்லது என் மகள் எழுதியதைப் போல அமைந்திருக்குமோ என்று நினைத்தேன் - மற்றவர்கள் உலகை நமது கண்ணாடி அணிந்து பார்ப்பது வேடிக்கையானது என்று தெரிந்தும் கூட. இருப்பினும் எங்கள் எழுத்துகளையும் கீழே இணைத்துள்ளேன் :

தங்கள் வரவிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி. அதே போல் விருப்பு வாக்கு அளித்தமைக்கும்,விருப்பு வாக்கு அளித்தவர்களுக்கும் நன்றி.

மனிதனுக்கு மட்டுமல்ல உயிரினங்கள் அனைத்திற்கும் மரணம் என்பது தவிர்க்க முடியாத ஒன்று.இது யாவரும் அறிந்ததுதான்.ஆனால் மனித இனத்திற்கு மட்டும் நாட்டுக்கு நாடு இனத்திற்கு இனம் இறுதிச்சடங்குகள் வேறுபடும்.பல இடங்களில் அது ஒரு நாடக மேடை போல் தோன்றும்.இல்லை இல்லை அது நாடக மேடையேதான்.பல சிவாஜிகணேசன்கள், பல வாழ்வே மாயம் ஸ்ரீபிரியாக்கள் ஸ்ரீதேவிகள்,கௌரவம் பண்டரிபாய் கூட்டம் என இறுதிச்சடங்கு நிகழ்வுகள் களைகட்டும்.கஸ்ரத்திற்கு உதவாதவர்கள் கண்ணீர் மல்க நிற்பர்.மரண ஆராய்ச்சியாளர்கள் ஆங்காங்கே கூடி நின்று மரணத்திற்கான ஆய்வுகளை நடத்திக்கொண்டிருப்பர்.இன்னொரு பகுதியினர் யார் யார் வரவில்லை என ஆந்தைக்கண்ணால் கணக்கெடுத்துக்கொண்டிருப்பர்.நீண்ட காலத்திற்கு பின் சந்தித்தவர்கள் விருந்து வைக்காத குறையாக சிரித்து சிரித்து மகிழ்ந்து கொண்டிருப்பர்.இதெல்லாம் என் மரணச்சடங்கில் நடக்கக்கூடாது என்பதில் கவனம் செலுத்துகின்றேன்.🙂

  • கருத்துக்கள உறவுகள்

பிறக்கும் போதும் அழுகின்றாய்.

படம்: கவலை இல்லாத மனிதன்

பாடியவர்: ஜே.பி. சந்திரபாபு

இயற்றியவர்: கண்ணதாசன்

இசை: எம்.எஸ். விஸ்வநாதன்

பிறக்கும் போதும் அழுகின்றாய் இறக்கும் போதும் அழுகின்றாய்

பிறக்கும் போதும் அழுகின்றாய் இறக்கும் போதும் அழுகின்றாய்

ஒரு நாளேனும் கவலையில்லாமல் சிரிக்க மறந்தாய் மானிடனே

ஒரு நாளேனும் கவலையில்லாமல் சிரிக்க மறந்தாய் மானிடனே

பிறக்கும் போதும் அழுகின்றாய் இறக்கும் போதும் அழுகின்றாய்

இரவின் கண்ணீர் பனித்துளி என்பார்

முகிலின் கண்ணீர் மழையெனச் சொல்வார்

இரவின் கண்ணீர் பனித்துளி என்பார்

முகிலின் கண்ணீர் மழையெனச் சொல்வார்

இயற்கை அழுதால் உலகம் செழிக்கும்

மனிதன் அழுதால் இயற்கை சிரிக்கும்

இயற்கை சிரிக்கும்

பிறக்கும் போதும் அழுகின்றாய் இறக்கும் போதும் அழுகின்றாய்

அன்னையின் கையில் ஆடுவதின்பம்

கன்னியின் கையில் சாய்வதும் இன்பம்

அன்னையின் கையில் ஆடுவதின்பம்

கன்னியின் கையில் சாய்வதும் இன்பம்

தன்னை அறிந்தால் உண்மையில் இன்பம்

தன்னலம் மறந்தால் பெரும்பேரின்பம்

பெரும்பேரின்பம்

பிறக்கும் போதும் அழுகின்றாய் இறக்கும் போதும் அழுகின்றாய்

ஒரு நாளேனும் கவலையில்லாமல் சிரிக்க மறந்தாய் மானிடனே

  • கருத்துக்கள உறவுகள்

நான் யாழ்ப்பாணத்தில், நிற்கும் போது இறந்தால்....

காணொளியில் உள்ள மாதிரி.... பறை மேளம் அடித்து,

பிரேத ஊர்வலம் வைக்க வேண்டும் என்று உயில் எழுதி வைத்துளேன். 🙂 😜

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்மறையான தலைப்பும் செய்தியுமாய் இருப்பதால் கருத்தெழுத சங்கடமாய் உணர்கின்றேன் . ........ எதுவாயினும் நடக்கும்போது நடக்கட்டும் .......நீங்கள் நலமுடன் வாழவேண்டும் . ....... !

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் செத்த பிறகு பறைமேளத்தை அடித்தால் என்ன, தவில் நாதசுவரம் வாசித்தால் என்ன எங்களுக்கு கேட்கவா போகின்றது.

உயில் என எழுதினால் செத்தவீட்டுக்கு வருபவர்கள் வயிறு நிறைய சாப்பாடு கொடுக்க வேண்டும் என எழுதி வைத்தால், அத்துடன் எமது நினைவு நாட்களில் அன்னதானம் கொடுக்க வேண்டும் என கூறிச்சென்றால் கடைசி நேரத்திலும், செத்த பிறகும் ஒரு திருப்தியை ஏற்படுத்தலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

On 28/7/2025 at 19:13, தமிழ் சிறி said:

பிறக்கும் போதும் அழுகின்றாய் இறக்கும் போதும் அழுகின்றாய்

பிறக்கும் போதும் அழுகின்றாய் இறக்கும் போதும் அழுகின்றாய்

இதுவொரு அருமையான வாழ்க்கை தத்துவ பாடல்.வாழ்க்கை எனும் தத்துவத்தை மனிதம் மறந்ததினால் தான் உலகில் இன்றைய கலவரங்கள் என நான் சில வேளைகளில் சிந்திப்பதுண்டு.

நான் பல காணொளிகளை இணைத்தும் நேரடியாக வேலை செய்யவில்லை.நான் இணைத்த அதே இணைய காணொளி முகவரியை நீங்கள் இணைத்ததும் நேரடியாக வேலை செய்கின்றது. என்ன மாயமோ மந்திரமோ தெரியவில்லை.🤣

உங்கள் காணொளி இணைப்பிற்கு மிக்க நன்றி சிறித்தம்பி...🙏

4 hours ago, suvy said:

எதிர்மறையான தலைப்பும் செய்தியுமாய் இருப்பதால் கருத்தெழுத சங்கடமாய் உணர்கின்றேன் . ........ எதுவாயினும் நடக்கும்போது நடக்கட்டும் .......நீங்கள் நலமுடன் வாழவேண்டும் . ....... !

ஐயனே! நீங்கள் நினைப்பது உண்மைதான். தலைப்பிற்கும் அதன் கீழ் ஊர்ந்து செல்லும் கருத்துக்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லைத்தான். இருந்தாலும் மனித வாழ்க்கை எப்படிப்பட்டது அதில் உள்ள ஆசா பாசங்கள், திட்டமிட்டு நடத்தப்படும் கொண்டாட்டங்கள் அதன் முன்னேற்பாடுகள் என்பனவற்றை அலசி ஆராய்ந்து விட்டு எனது மரணச்சடங்கு எப்படியிருக்க வேண்டும் என சொல்ல நினைக்கின்றேன்.

1 hour ago, நியாயம் said:

நாங்கள் செத்த பிறகு பறைமேளத்தை அடித்தால் என்ன, தவில் நாதசுவரம் வாசித்தால் என்ன எங்களுக்கு கேட்கவா போகின்றது.

நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறுவீதம் சரியானது.இருப்பினும் நாம் இறந்த பின் எமது மரணச்சடங்கு எப்படி இருக்க வேண்டும் என்பதை உயிர் உள்ளவர்கள் தான் தீர்மானிக்கின்றார்கள்.எனவே அந்த தீர்மானத்தை எம் உயிர் உள்ள போதே நாம் நிர்வகித்து உயில் எழுதி விடவேண்டும்.

நான் இறந்த பின்/எனது மரணச்சடங்கிற்கு கண்ட கண்ட குத்தியன்கள் வந்து நினைவஞ்சலி பூமாலை அணிவதும்,நினைவஞ்சலி எழுதுவதும்,துக்கமாக ஊளையிடுவதும்,கண்ணீர் பா வடிப்பதையும் தடை செய்வேன்.

1 hour ago, நியாயம் said:

உயில் என எழுதினால் செத்தவீட்டுக்கு வருபவர்கள் வயிறு நிறைய சாப்பாடு கொடுக்க வேண்டும் என எழுதி வைத்தால், அத்துடன் எமது நினைவு நாட்களில் அன்னதானம் கொடுக்க வேண்டும் என கூறிச்சென்றால் கடைசி நேரத்திலும், செத்த பிறகும் ஒரு திருப்தியை ஏற்படுத்தலாம்.

எனது உயில் பாகங்களில் இதுவும் ஒன்று.இதை நான் ஏற்கனவே செய்து விட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, குமாரசாமி said:

நான் இறந்த பின்/எனது மரணச்சடங்கிற்கு கண்ட கண்ட குத்தியன்கள் வந்து நினைவஞ்சலி பூமாலை அணிவதும்,நினைவஞ்சலி எழுதுவதும்,துக்கமாக ஊளையிடுவதும்,கண்ணீர் பா வடிப்பதையும் தடை செய்வேன்.

சில குறிப்பிட்ட உறவினர்கள்/சொந்தக்காரர்கள் வருவது தடை செய்யப்பட வேண்டும் என குறிப்பிடப்படுவது பற்றி நான் கேள்விப்பட்டுள்ளேன். வைத்தியசாலைக்கும் வந்து பார்க்க முடியாதபடி கூறிவைக்க முடியும் என நினைக்கின்றேன். நான் இப்படியான கோணத்தில் சிந்திக்கவும் இல்லை தேவையும் இல்லை. ஆனால், ஒரு வினா என்ன என்றாலும் போய்ச்சேரும் இடத்தில் எப்படியான சோலிகள், இறப்புக்கு பிறகும் வாழ்வு வேறு ஒரு பரிமாணத்தில் தொடரும் என்றால், வரும், யார் யாருடன் எல்லாம் டீல் பண்ண வேண்டும் என தெரியாதே.

  • கருத்துக்கள உறவுகள்

250px-Dancing_Pallbearers.jpg

f0648b7d476b4a008342cebe5809fd85.gif

f5194d26cfe5775628adeae8a3fd24e8.gif

f4b986f394dc4d638404e4bed9a37890.gif

be56393be2e24e619520434609b197f8.gif

0h8nJyNAjDZ0F3AE-yIjYYFk5WazBEZHJHGXh8Jl

2020 களில்... தெற்கு கானாவின் கிரேட்டர் அக்ரா பிராந்தியத்தில் உள்ள இசைக்குழு... "அப்பா இறந்துவிட்டார்" என்ற பொருள்பட இசை நிகழ்ச்சிகளை நாடு முழுவதும் மற்றும் கானாவிற்கு வெளியேயும் நிகழ்ச்சிகளை நடத்தி உலக மக்களின் பெரும் அபிமானத்தை பெற்றார்கள்.

இன்று கூட அவர்களின் மீம்ஸ்கள்... முடிவே இல்லாமல், இணையத்தில் பிரபலமாக போய்க் கொண்டு உள்ளது.

ஆக... மரணத்தைக் கூட, ஏதோ ஒரு வகையில் மக்கள் ரசிக்கின்றார்கள் என்றே எண்ணத் தோன்றுகின்றது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 minutes ago, தமிழ் சிறி said:

ஆக... மரணத்தைக் கூட, ஏதோ ஒரு வகையில் மக்கள் ரசிக்கின்றார்கள் என்றே எண்ணத் தோன்றுகின்றது.

ஏன் கனதூரம் போவான்? தமிழ் நாட்டில் கூடுதலான இடங்களில் மரணச்சடங்கு ஆட்டம் பாட்டம் தண்ணி என பெரிய அமர்களமாக நடக்குமாம். இலங்கையில் நடக்கும் செத்தவீடுகளில் சாராயம் தங்கு தடையின்றி பாயும்.

கவலைக்குடி😂

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, குமாரசாமி said:

ஏன் கனதூரம் போவான்? தமிழ் நாட்டில் கூடுதலான இடங்களில் மரணச்சடங்கு ஆட்டம் பாட்டம் தண்ணி என பெரிய அமர்களமாக நடக்குமாம். இலங்கையில் நடக்கும் செத்தவீடுகளில் சாராயம் தங்கு தடையின்றி பாயும்.

கவலைக்குடி😂

https://youtu.be/rgnJ5YWVRVY?si=ExDR24O841ak3KWH

சில செத்த வீடுகளில்... குறிப்பிட்ட சிலர், பழைய பிரச்சினைகளை கிளறி ரணகளம் ஆக்க என்றே வருவார்கள். அவர்களில் தொழிலே இதுதான். அதில் ஆண்கள், பெண்கள் என்று இருபாலரும் இருப்பார்கள். அந்த வாய் சண்டையை பார்க்க சுவராசியமாக இருக்கும். 😂

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
On 28/7/2025 at 15:47, குமாரசாமி said:

இறுதிச்சடங்கு நிகழ்வுகள் களைகட்டும்.கஸ்ரத்திற்கு உதவாதவர்கள் கண்ணீர் மல்க நிற்பர்.மரண ஆராய்ச்சியாளர்கள் ஆங்காங்கே கூடி நின்று மரணத்திற்கான ஆய்வுகளை நடத்திக்கொண்டிருப்பர்.இன்னொரு பகுதியினர் யார் யார் வரவில்லை என ஆந்தைக்கண்ணால் கணக்கெடுத்துக்கொண்டிருப்பர்.நீண்ட காலத்திற்கு பின் சந்தித்தவர்கள் விருந்து வைக்காத குறையாக சிரித்து சிரித்து மகிழ்ந்து கொண்டிருப்பர்.இதெல்லாம் என் மரணச்சடங்கில் நடக்கக்கூடாது

உண்மை தோழர் .. இல்லாத உறவு முறை கதைத்து கொண்டு இழவு வீட்டிலும் ஆட்டைய போட கடன்/பத்திரம் ஒரு குரூப் இருக்கு ..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
17 hours ago, தமிழ் சிறி said:

சில செத்த வீடுகளில்... குறிப்பிட்ட சிலர், பழைய பிரச்சினைகளை கிளறி ரணகளம் ஆக்க என்றே வருவார்கள். அவர்களில் தொழிலே இதுதான். அதில் ஆண்கள், பெண்கள் என்று இருபாலரும் இருப்பார்கள். அந்த வாய் சண்டையை பார்க்க சுவராசியமாக இருக்கும்.

அந்த கூத்துக்கள் சொல்லி வேலையில்லை. வாய் கடியில தொடங்கி வெட்டுக்குத்தில போய் முடியும்.அதாகப்பட்டது. செத்தவீட்டுக்கு வந்து இன்னொரு செத்தவீட்டுக்கு அடிக்கல் வைச்சுட்டுத்தான் போவினம்.😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 30/7/2025 at 16:51, நியாயம் said:

சில குறிப்பிட்ட உறவினர்கள்/சொந்தக்காரர்கள் வருவது தடை செய்யப்பட வேண்டும் என குறிப்பிடப்படுவது பற்றி நான் கேள்விப்பட்டுள்ளேன். வைத்தியசாலைக்கும் வந்து பார்க்க முடியாதபடி கூறிவைக்க முடியும் என நினைக்கின்றேன். நான் இப்படியான கோணத்தில் சிந்திக்கவும் இல்லை தேவையும் இல்லை. ஆனால், ஒரு வினா என்ன என்றாலும் போய்ச்சேரும் இடத்தில் எப்படியான சோலிகள், இறப்புக்கு பிறகும் வாழ்வு வேறு ஒரு பரிமாணத்தில் தொடரும் என்றால், வரும், யார் யாருடன் எல்லாம் டீல் பண்ண வேண்டும் என தெரியாதே.

மரணச்சடங்கு சரியான நேரத்தில் சரியானவர்களால் நடத்தப்படும். அதை இரு கண்களால் பார்த்துக்கொண்டிருக்கின்றோம் அல்லவா?

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

On 31/7/2025 at 08:20, புரட்சிகர தமிழ்தேசியன் said:

உண்மை தோழர் .. இல்லாத உறவு முறை கதைத்து கொண்டு இழவு வீட்டிலும் ஆட்டைய போட கடன்/பத்திரம் ஒரு குரூப் இருக்கு ..

ஒரே நாளில் இறந்து விடுவோம் என தெரிந்தும்

உயர உயர பறக்கும் ஈசலை போல் நாமும் வாழ்க்கையை ரசித்து வாழ்வோம்.😂

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 29/7/2025 at 23:24, குமாரசாமி said:

நான் இறந்த பின்/எனது மரணச்சடங்கிற்கு கண்ட கண்ட குத்தியன்கள் வந்து நினைவஞ்சலி பூமாலை அணிவதும்,நினைவஞ்சலி எழுதுவதும்,துக்கமாக ஊளையிடுவதும்,கண்ணீர் பா வடிப்பதையும் தடை செய்வேன்.

இவைகள் தான் என் குடும்பத்தினர்க்கு சொல்லி வைத்திருப்பது.அதாவது எனது இறுதி சடங்கு நிகழ்வில்.....

யாருமே கறுப்பு உடை அணிந்து வரக்கூடாது.உடைகள் பஞ்சவர்ண கலர்களாக இருக்க வேண்டும்.யாரும் கறுப்பு கண்ணாடி அணியக்கூடாது.

குறிப்பிட்ட நேரத்திற்கு சடங்கு ஆரம்பமாகியதும் இந்த பாடல் ஒலிக்க வேண்டும்.

https://youtu.be/ggNq4bbYb_Y?si=W79txuZdk2fwPudF

நிர்வாகத்தினரிடம் ஒரு வேண்டுதல். அண்மைக் காலங்களில் நான் இணைக்கும் காணொளிகள் நேரடியாக வேலை செய்வதில்லை. அப்படி இந்த திரியிலும் நான் இணைக்கும் காணொளிகள் நேரடியாக இயங்கவில்லை என்றால்.... இந்த திரியில் மட்டும் நேரடியாக இயங்குமாறு ஆவன செய்ய வேண்டுகின்றேன்.
நன்றி 🙏

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என் இறுதி சடங்கிற்கு வருபவர்களுக்கு இனிப்பு கலந்த நீராகங்கள் வழங்க வேண்டும்.

அந்த நேரத்தில் இந்த பாடல்கள் ஒலிக்க வேண்டும்.❤️

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.