Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, விசுகு said:

நீங்கள் குற்றம் கண்டு பிடிக்கும் அவசரத்தில் வாக்கு வங்கி என்பதை ஆட்சி என்று வாசிப்பது வழமையே. உங்களின் பார்வைக்கு எதுவும் எழுத முடியாது பிரயோசனமில்லை. யாரும் நித்திரையாக கிடப்பார்களை முயற்சிப்பது தான் நன்று.

"வங்கியை" குறி வைக்கிறார்கள் சில தமிழக அரசியல் வாதிகள் - இது உண்மை. இதை "பிரபாகரனுக்கு இருக்கும் ஒரு வாக்கு வங்கி" என்று அவசரப் பட்டு நீங்கள் புளகாங்கிதம் அடைவது வழமை தான். இப்படி பிரபாகரன் மேல் இருக்கும் அபிமானத்தை, வாக்காக மாற்ற ஒரு மூன்றாம் தர தமிழக அரசியல்வாதி எத்தனை ஆண்டுகளாக முயல்கிறார், எவ்வளவு முன்னேறியிருக்கிறார் என்று அவதானிப்போருக்கு உங்கள் கருத்து நகைச்சுவையாகத் தெரியும்😎!

  • Replies 68
  • Views 3.4k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • நிழலி
    நிழலி

    முதலில் கடல்வள கொள்ளையர்களை ஈழத்தமிழரின் கடல் எல்லைக்குள் வந்து வயிற்றில் அடிக்க வேண்டாம் எனச் சொல்லவும்.

  • பெருமாள்
    பெருமாள்

    அவர்களிடம் கேட்டு பலனில்லை ஏன்னென்றால் இந்த பாரிய மீன்வள கொள்ளை சுரண்டல் இரு நாட்டு அரசுகளின் ஆதரவுடன் தான் நடை பெறுகிறது மன்னார் வளைகுடா பகுதியில் ஐ நாவால் பாதுகாக்கப்பட்ட பவள பாறை தொகுதிகளை இந்த உலக

  • பெருமாள்
    பெருமாள்

    தடை செய்யப்பட்ட வலைகளில் மீன்பிடிப்பால் அழிந்து வரும் அரிய வகை பவளப்பாறைகள் https://www.maalaimalar.com/news/state/2020/10/23144019/1996584/Rare-type-Corals-Will-be-destroyed.vpf தடை செய்யப்பட்ட வலைக

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

"வங்கியை" குறி வைக்கிறார்கள் சில தமிழக அரசியல் வாதிகள் - இது உண்மை. இதை "பிரபாகரனுக்கு இருக்கும் ஒரு வாக்கு வங்கி" என்று அவசரப் பட்டு நீங்கள் புளகாங்கிதம் அடைவது வழமை தான். இப்படி பிரபாகரன் மேல் இருக்கும் அபிமானத்தை, வாக்காக மாற்ற ஒரு மூன்றாம் தர தமிழக அரசியல்வாதி எத்தனை ஆண்டுகளாக முயல்கிறார், எவ்வளவு முன்னேறியிருக்கிறார் என்று அவதானிப்போருக்கு உங்கள் கருத்து நகைச்சுவையாகத் தெரியும்😎!

36 லட்சம் வாக்குகள் மற்றும் அனைத்து கட்சிகளிலும் இருக்கும் பல லட்ச தாயக அபிமானிகளின் ( மதிமுக, விசிக, திமுக, அதிமுக உட்பட) வாக்குகளை நான் தலைவர் சார்ந்த வாக்குகளாகத்தான் பார்க்கிறேன். ஒரு பேச்சுக்கு ஈழத்தமிழர்களுக்கு ஒரு நாடு வேண்டுமா என்று ஒரு சர்வசன வாக்கெடுப்பு தமிழகத்தில் நடாத்தினால் இவர்கள் அனைவரும் ஆம் என்று தான் வாக்களிப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, விசுகு said:

இது உங்களுடைய tunnel vision பார்வை, இதில் அதிசயம் ஒன்றுமில்லை.

"ஈழத்தமிழர்களுக்கு தனிநாடு வேண்டும்" என்று இலங்கையிலோ தமிழகத்திலோ வாக்களிக்கக் கூடிய எல்லோரும் பிரபாகரனுக்கே அந்த வாக்கை வழங்குகின்றனர் என்பது உங்களது தவறான பார்வை. ஈழத்தமிழர்களின் சுதந்திரத்திற்கான போரை பிரபாகரன் தலைமை தாங்கி நடத்தினார் என்பது உண்மை, ஆனால் ஈழத்தமிழர்களின் சுதந்திரம் என்ற நோக்கத்தை அவருக்கு முன்னரும் பின்னரும் பலர் ஆதரித்திருக்கின்றனர், இனியும் ஆதரிப்பர்!

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, goshan_che said:

திமுக, அதிமுக, காங்கிரஸ் ஓடு விஜை கூட்டு வைக்கலாம். அது அரசியல் ….இவர்கள் அரசியல் எதிரிகள்.

ஆனால் கொள்கை எதிரி என அறிவித்த பாஜகவோடு சேர்ந்தால், அல்லது ஆர் எச் எஸ் சுக்கு வழி ஏற்படுத்தி கொடுக்க பெரியாரை விமர்சனம் செய்வது என இறங்கினால்…வெளுவை நிச்சயம்

விஜையின் கொள்கை என்ன?அரசியல் எதிரிகள் எதற்காக திமுகவைக் குறிப்பிடுகிறார்.(காங்கிரசைக்குறிப்பிடவில்லை).அரசியல் எதிரிக்கும் கொள்கை எதிரிக்கும் உரிய வரை விலக்கணம் என்ன?.திமுகவுடன் கூட்டு வைக்கலாம் என்றால் திமுக அலருடைய கொள்கை எதிரியான பாஜகவுடன் கூட்டு வைத்த தீட்டு அழிந்து விட்டதா? இனியும் கூட்டு வைக்க மாட்டார்கள் என்பதற்கு ஏதாவது உத்தரவாதம் இருக்கிறதா?பெரியாரைக் கொள்கைத் தலைவராக ஏற்றுக் கொண்டு வேலைத்தூக்குவதெல்லாம் என்ன மாதிரியான கொள்கை.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Justin said:

இது உங்களுடைய tunnel vision பார்வை, இதில் அதிசயம் ஒன்றுமில்லை.

"ஈழத்தமிழர்களுக்கு தனிநாடு வேண்டும்" என்று இலங்கையிலோ தமிழகத்திலோ வாக்களிக்கக் கூடிய எல்லோரும் பிரபாகரனுக்கே அந்த வாக்கை வழங்குகின்றனர் என்பது உங்களது தவறான பார்வை. ஈழத்தமிழர்களின் சுதந்திரத்திற்கான போரை பிரபாகரன் தலைமை தாங்கி நடத்தினார் என்பது உண்மை, ஆனால் ஈழத்தமிழர்களின் சுதந்திரம் என்ற நோக்கத்தை அவருக்கு முன்னரும் பின்னரும் பலர் ஆதரித்திருக்கின்றனர், இனியும் ஆதரிப்பர்!

அப்படியானால் இன்று தமிழகத்தில் ஈழத் தமிழர்களின் எந்த தலைவர் நினைவு கூரப்படுகிறார் அல்லது ஞாபகத்தில் வைத்துக் கொள்ளப்படுகிறார் என்றும் சொல்லலாமே.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புலவர் said:

விஜையின் கொள்கை என்ன?

இதை விஜை தனது வி சாலை மாநாட்டிலுல் அதற்கு முன்பும், தெளிவாக சொல்லி விட்டாரே.

விஜையின் கொள்கை,

  1. ஒன்றிய இந்தியாவுள், தேசிய இனங்கள் குறிப்பாக, திராவிட தேசிய இனங்கள் அதிலும் குறிப்பாக தமிழ் தேசிய இனம் - உச்ச பட்ச மாநில சுயாட்சியுடன் வாழ்வதை தொடர்ந்தும் உறுதி செய்தல். இதனால்தான் அவரின் கொள்கை தலைவராக வேலுநாச்சியாரும், அஞ்சலை அம்மாளும் அமைகிறனர்.

  2. பிறப்பால் ஏற்றத்தாழ்வை ஏற்க மறுத்தல் இன்னொரு கொள்கை (வர்ணாசிரமம்) - இதனால்தான் அம்பேத்கரும், பெரியாரும் கொள்கை தலைவர்கள்.

  3. பொதுவாழ்வில் ஊழல் இன்மை. இதனால் காமராஜர் கொள்கை தலைவர்.

  4. இந்த மூன்றுந்தான் தவெகவின் அடிப்படை கொள்கைகள். இவை பாஜகவுக்கு அதன் கொள்கைக்கு நேரெதினாவை. எனவே பாஜக கொள்கை எதிரி.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் அண்ணா, இவ்ளோ ஏமாளியா இருக்கியே அண்ணா.

கால் % கூட இல்லாத communist கட்சிகள் கூட்டணிக்கு 25 கோடி single payment வாங்குறான்.

1% இல்லாத தேமுதிக 100 கோடி வசூல் போடுறான்.

2% இல்லாத விசிக சொளையா 400 கோடி ஒவ்வொரு தேர்தலுக்கு வாங்குறான்.

பெட்டி மணி சொல்லவே வேணாம்.

எடப்பாடியார் 2000 கோடி துணை முதல்வர் பதவி கொடுக்க ரெடி ஆ இருந்தும் solid ஆ 8.22% வாக்கு இருந்தும்,

பாஜக முதல்வர் வேட்பாளர் அளவுக்கு lobby செய்தும்,

இது எதுவுமே வேணாம்னு தனியாக நிக்குற.

தொகுதிக்கு தொகுதி சில்லற வியாபாரம் பாக்குறார்னு வாடகை வாயனுங்க அளந்து விடுறானுக.

டேய் கொஞ்சம் rate ஏத்தி சொல்லுங்க டா திராவிட எச்சைகளா!

இது எக்ஸ் தளத்தில் வந்த ஒரு பதிவு

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ அரசியல் எதிரிகள் யார்?

இந்த கொள்கைகளை ஏற்று கொண்ட, ஆனால் இப்போ அந்த கட்சிகளின் தற்போதைய தலைமைகள் இந்த கொள்ககளில் இருந்து விலகி போய்விட்ட கட்சிகள்.

குறிப்பாக திமுக - தமிழ் நாட்டில் அன்றாட ஆட்சியை நாசம் செய்யும் கட்சி.

ஆகவே அது அரசியல் எதிரி.

திமுக, அதிமுக  தோற்றுனர் அண்ணாவின், எம்ஜிஆரின் படத்தையிம் விஜை போடுகிறார். ஆகவே இந்த கட்சிகளோடு அவருக்கு கொள்கை முரண் ஏதும் இல்லை.

அவற்றின் தற்போதைய ஊழல் தலைமைகளோடு அரசியல் முரண்.

பாஜக philosophical enemy.

திமுக political enemy. 

முன்னையது strategical enemy (மூலோபாய எதிரி) பின்னையது tactical enemy (தந்திரோபாய எதிரி)

1 hour ago, புலவர் said:

அரசியல் எதிரிக்கும் கொள்கை எதிரிக்கும் உரிய வரை விலக்கணம் என்ன?.

இப்போ விளங்கி இருக்கும்.

உங்களுக்கு புரியும் படி சொல்வதானால்…

புலிகளும், டெலோவும் அரசியல் எதிரிகள் (அப்படித்தான் இருந்திருக்க வேண்டும்), ஆனால் புலிகளும், பொதுபல சேனாவும் கொள்கை எதிரிகள்.

டெலோவின் தலைமை பிழைத்தது என்பாதால், புலிகளும், 1986 க்கு முந்திய டெலோவும் வேறு வேறு கொள்கை நிலைப்பாடு என்றில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புலவர் said:

திமுகவுடன் கூட்டு வைக்கலாம் என்றால் திமுக அலருடைய கொள்கை எதிரியான பாஜகவுடன் கூட்டு வைத்த தீட்டு அழிந்து விட்டதா?

இல்லை. ஆனால் கூட்டணி என்பது கட்சிகளை ஒன்றுடன் ஒன்று சேர்ப்பதல்ல. 2026 இல் அதிமுக வென்று, 91-96 போல் ஒரு ஆட்சியை தருமாயின் - அப்போ திமுகவிடன் சேர்ந்தாவது த வெ க அந்த ஆட்சியை அகற்றத்தான் வேண்டும்.

த வெ கவுக்கு ஒரே ஒரு தீண்ட தகாத கட்சி என்றால் அது பாஜக மட்டுமே. அதனுடன் நேரடி மறைமுக கூட்டணி இல்லை என அறிவித்து விட்டார்.

நீ…பத்து, முப்பது வருடம் முன் பாஜகவுடன் கூட்டு வைத்தாய் எனவே உன்னுடன் சேரமாட்டேன் “தீட்டு” என்பதெல்லாம் பரிகாசிக்கதக்க சிறுபிள்ளைத்தனம். 

1 hour ago, புலவர் said:

பெரியாரைக் கொள்கைத் தலைவராக ஏற்றுக் கொண்டு வேலைத்தூக்குவதெல்லாம் என்ன மாதிரியான கொள்கை.

மிக தெளிவாக பெரியாரின் இறை மறுப்பில் தனக்கு உடன்பாடில்லை என சொல்லி உள்ளார்.

பெரியார் என்ன ஹார்லிக்சா “அப்படியே சாப்பிட”.

நான் கூட கோவில் போவேன், சர்ச் போவேன், பள்ளிவாசல், விகாரை எங்கும் போவேன், கைகூப்புவேன்.

பிதிர்காரியம் செய்வேன்.

ஆனால் பெரியாரை அவரின் தாக்கத்ததை மதிக்கிறேன், அவரின் கொள்கைகள் பலதில் உடன்படுகிறேன்.

இதில் ஒரு தடுமாற்றமும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, புலவர் said:

சீமான் அண்ணா, இவ்ளோ ஏமாளியா இருக்கியே அண்ணா.

கால் % கூட இல்லாத communist கட்சிகள் கூட்டணிக்கு 25 கோடி single payment வாங்குறான்.

1% இல்லாத தேமுதிக 100 கோடி வசூல் போடுறான்.

2% இல்லாத விசிக சொளையா 400 கோடி ஒவ்வொரு தேர்தலுக்கு வாங்குறான்.

பெட்டி மணி சொல்லவே வேணாம்.

எடப்பாடியார் 2000 கோடி துணை முதல்வர் பதவி கொடுக்க ரெடி ஆ இருந்தும் solid ஆ 8.22% வாக்கு இருந்தும்,

பாஜக முதல்வர் வேட்பாளர் அளவுக்கு lobby செய்தும்,

இது எதுவுமே வேணாம்னு தனியாக நிக்குற.

தொகுதிக்கு தொகுதி சில்லற வியாபாரம் பாக்குறார்னு வாடகை வாயனுங்க அளந்து விடுறானுக.

டேய் கொஞ்சம் rate ஏத்தி சொல்லுங்க டா திராவிட எச்சைகளா!

இது எக்ஸ் தளத்தில் வந்த ஒரு பதிவு

நல்லவேளை இந்த தம்பி 2008 இல் ஓபாமா அமெரிக்க அதிபாராக வர கேட்டார் என எழுதவில்லை.

விஜை வருகையின் பின் சீமான் பித்து பிடித்தது (ஹிஸ்டீரியா) போல் கத்துகிறார்.

அவரின் தம்பிகளோ - ஹலூசினேசனில் அவதிபடுகிறார்கள்.

ஒரே ஆறுதலான விடயம் நாதக தம்பிகளுக்கே உரிய தூசண தொனி அப்படியே உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, goshan_che said:

திமுக, அதிமுக  தோற்றுனர் அண்ணாவின், எம்ஜிஆரின் படத்தையிம் விஜை போடுகிறார். ஆகவே இந்த கட்சிகளோடு அவருக்கு கொள்கை முரண் ஏதும் இல்லை.

அண்ணா எம்ஜியார் படத்தைப் போஐவது இரட்டை இலை வாக்குகளைம் உதயசூரியன் வாக்குகளையும் குறிவைத்துத்தான். விஜயகாந்தைப்பற்றிப் பேசியது தேதிமுக வாக்குகளை குறிவைத்துத்தான்.:ழத்தமிழர்கள் தொடர்பாக பட்டும்படாமலும் தொட்டுத்தொடாமலும் பேசியது நாதகவின் வாக்குகளைக் குறிவைத்துத்தான்.திமுகவை கடுமையாக எதிர்த்துக்கொண்டு காங்கிரசை விமர்சிக்காமல் இருப்பது.காங்கிரசுக்கான கூட்டணிக்கதவைத்திறந்து வைப்பதற்குத்தான்.பாஜகவை விமர்சித்து விட்டு அதன்கூட்டணிக்கட்சியான அதிமுகவை விமர்சிக்காமல் இருப்பதும் அதே கூட்டணிக்கதவை திறந்துவைப்பதற்குத்தான்.விஜை கூட்டணி அமைத்தால் அவருக்கு எதிர்காலம் இருக்கிறது. தனித்து நின்றால் இந்தத் தேர்தலோடு படம் நடிக்கப் போய் விடுவார்.சீமான் இந்தத் தேர்தலில் தனித்து நின்று இப்போதிருக்கும் 8 வீதம் வாக்குகளை எடுத்தால் அவருக்கு அரசியலில் சிறப்பான எதிர்காலம் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, goshan_che said:

புலிகளும், டெலோவும் அரசியல் எதிரிகள் (அப்படித்தான் இருந்திருக்க வேண்டும்), ஆனால் புலிகளும், பொதுபல சேனாவும் கொள்கை எதிரிகள்.

டெலோவின் தலைமை பிழைத்தது என்பாதால், புலிகளும், 1986 க்கு முந்திய டெலோவும் வேறு வேறு கொள்கை நிலைப்பாடு என்றில்லை.

எந்த நெருக்கடி வந்த பொழுதும் கொண்ட கொள்கையில் தடுமாறாமல் உறுதியுடன் நின்ற புலிகளுடன் விஜையை ஒப்பிடுவதை என்வென்பது? Time to lead tittle போட்டு ஜெயலலிதா படத்துக்கு நெருக்கடி கொடுத்தவுடன் அப்பனும் மகனும் போய் ஜெயலலிதா காலில் விழுந்த விஜையை இந்திய அரசோடு மோத முடிவெடுத்த புலிகளுடன் ஒப்பிடுவதை என்னவென்பது?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புலவர் said:

அண்ணா எம்ஜியார் படத்தைப் போஐவது இரட்டை இலை வாக்குகளைம் உதயசூரியன் வாக்குகளையும் குறிவைத்துத்தான். விஜயகாந்தைப்பற்றிப் பேசியது தேதிமுக வாக்குகளை குறிவைத்துத்தான்.:ழத்தமிழர்கள் தொடர்பாக பட்டும்படாமலும் தொட்டுத்தொடாமலும் பேசியது நாதகவின் வாக்குகளைக் குறிவைத்துத்தான்.திமுகவை கடுமையாக எதிர்த்துக்கொண்டு காங்கிரசை விமர்சிக்காமல் இருப்பது.காங்கிரசுக்கான கூட்டணிக்கதவைத்திறந்து வைப்பதற்குத்தான்.பாஜகவை விமர்சித்து விட்டு அதன்கூட்டணிக்கட்சியான அதிமுகவை விமர்சிக்காமல் இருப்பதும் அதே கூட்டணிக்கதவை திறந்துவைப்பதற்குத்தான்.விஜை கூட்டணி அமைத்தால் அவருக்கு எதிர்காலம் இருக்கிறது. தனித்து நின்றால் இந்தத் தேர்தலோடு படம் நடிக்கப் போய் விடுவார்.சீமான் இந்தத் தேர்தலில் தனித்து நின்று இப்போதிருக்கும் 8 வீதம் வாக்குகளை எடுத்தால் அவருக்கு அரசியலில் சிறப்பான எதிர்காலம் இருக்கும்.

விஜை எல்லார் வாக்குகளையும் குறி வைக்கிறார்.

சீமான் ? போற போக்கில் நாம் தமிழரை, நாடார் மஹாசபை ஆக்கிவிடுவார் போலுள்ளது.

விஜை வெல்லலாம், தோற்கலாம்.

ஆனால் - வெறுப்பரசியல் செய்யும், பிளவுவாத சீமான் தமிழ் நாட்டில் வெல்ல முடியாது.

ஈழத்தமிழர் போல் குறுகிய சிந்தனை தமிழகத்தில் இல்லை.

1 hour ago, புலவர் said:

எந்த நெருக்கடி வந்த பொழுதும் கொண்ட கொள்கையில் தடுமாறாமல் உறுதியுடன் நின்ற புலிகளுடன் விஜையை ஒப்பிடுவதை என்வென்பது?

உங்களுக்கு உதாரணம் என்பதன் அர்த்தம் விளங்கவில்லை என நினைக்கிறேன்.

உதாரணமும், ஒப்பீடும் ஒன்றல்ல.

மேலே சொன்னது ஒப்பீடு.

அல்ல. உதாரணம்.

1 hour ago, புலவர் said:

Time to lead tittle போட்டு ஜெயலலிதா படத்துக்கு நெருக்கடி கொடுத்தவுடன் அப்பனும் மகனும் போய் ஜெயலலிதா காலில் விழுந்த விஜையை இந்திய அரசோடு மோத முடிவெடுத்த புலிகளுடன் ஒப்பிடுவதை என்னவென்பது?

😂 இவ்வளவுதானா புலவர் 😂.

மீண்டும் ஒப்பீட்டுக்கும், உதாரணத்துக்குமான வேறுபாட்டை கருத்தில் எடுக்கவும்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

ஒப்பீட்டுக்கும் உதராணத்திற்கும் வரைவிலக்கணம் தருக?உங்களால் முடியும் திராவிடக் கோமாளிகள் எதற்கும் ஒரு விளக்கம்தருவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, புலவர் said:

ஒப்பீட்டுக்கும் உதராணத்திற்கும் வரைவிலக்கணம் தருக?உங்களால் முடியும் திராவிடக் கோமாளிகள்.

An example serves as a specific instance to illustrate a general concept or principle, while a comparison involves examining two or more things to identify their similarities and differences.

ஒரு பொதுவான கருத்து அல்லது கொள்கையை விளக்குவதற்கு ஒரு எடுத்துக்காட்டு ஒரு குறிப்பிட்ட நிகழ்வாக செயல்படுகிறது, அதே நேரத்தில் ஒரு ஒப்பீடு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட விஷயங்களை அவற்றின் ஒற்றுமைகள் மற்றும் வேறுபாடுகளை அடையாளம் காண ஆராய்வதை உள்ளடக்கியது.

5 hours ago, புலவர் said:

திராவிடக் கோமாளிகள்

ஜேர்மனி, யூகே என இரந்து வாழ்வதில் மட்டும் காலத்தை கழிக்காமல், விடயங்களை அறிவதிலும் கொஞ்ச காலத்தை செலவழித்கிருப்பின், திராவிட கோமாளிகளிடம் விளக்கம் கேட்டு பெறும் நிலை வந்திராது.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள்-டெலோ போல…

தவெக-திமுக.

புலிகள்-பொதுபலசேனா

போல…

தவெக-பாஜக

ஆண்டு 10 தமிழ் இலக்கணத்தில் போல, அன்ன, வின் அர்த்தம் பற்றி படிக்கவில்லையா?

  • கருத்துக்கள உறவுகள்

ஆக விஜய்ண்ணா சொன்னதைப்போல இரண்டு முனைப் போட்டிதான் போல!

த வெ க எதிர் திமுக!

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, புலவர் said:

ஆக விஜய்ண்ணா சொன்னதைப்போல இரண்டு முனைப் போட்டிதான் போல!

த வெ க எதிர் திமுக!

அதை மக்கள் முடிவு செய்வார்கள்.

நான் அப்படி நம்பவில்லை.

விஜை தனித்து நின்றால் ஒரு சீட் 10-15% வாக்கு என்பதே என் தற்போதைய கணிப்பு.

A week is a long time in politics என்பார்கள். 7 மாதத்தில் என்னவும் நடக்கலாம்.

கரூர் மரணங்களை விஜை எப்படி எதிர் கொள்கிறார் என்பது அவரின் அரசியலுக்கு வாழ்வா, சாவா கேள்வி.

ஆனால் 2026 இல் அதிபர் ஆட்சி அமைப்பது உறுதி😂.

  • கருத்துக்கள உறவுகள்

கரூர்: விஜய் பரப்புரை கூட்ட நெரிசல்; 6 குழந்தைகள், 16 பெண்கள் உட்பட 31 பேர் உயிரிழப்பு!

மிகவும் கவலையான செய்தி!கர்ப்பிணிப் பெண்கள் குழந்தைகளை வரவேண்டாம்அழைத்து வர வேண்டாம். என்று தவெக அறிவித்திருந்தும் அவர்கள் போனது விஜையின்தவறல்ல.திமுக இதை சாதகமாகப் பயன்படுத்தும்.இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.