Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காலை அல்லது இரவு இரண்டில் எப்போது குளிப்பது உடல் நலனுக்கு சிறந்தது?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, குளிப்பது நம் தோலில் உள்ள அழுக்கு, வியர்வை, எண்ணெயை நீக்குகிறது

கட்டுரை தகவல்

  • ஜாஸ்மின் ஃபாக்ஸ்-ஸ்கெல்லி

  • 23 செப்டெம்பர் 2025, 05:01 GMT

    புதுப்பிக்கப்பட்டது 51 நிமிடங்களுக்கு முன்னர்

சிலர் காலையில் குளிக்க விரும்புகிறார்கள், சிலர் மாலையில் அல்லது இரவில் குளிக்க விரும்புகிறார்கள். யார் சரியாக செய்கிறார்கள்?

இந்த உலகில், ஒரு சிறிய கேள்வி கூட பெரிய விவாதத்தை உருவாக்குகிறது, நீங்கள் காலையில் எழுந்தவுடன் குளிப்பவரா? அல்லது இரவில் படுக்க செல்வதற்கு முன் குளிப்பவரா? அல்லது தினமும் குளிக்காத 34% அமெரிக்கர்களில் ஒருவரா?

நீங்கள் எந்தப் பக்கம் இருந்தாலும், உங்கள் தேர்வு உங்கள் உடல்நலத்தில் என்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று நீங்கள் யோசிக்கலாம்.

காலையில் தூக்கத்திலிருந்து எழுந்ததும், முதலில் பலரும் செய்யும் வேலை குளிப்பது தான். காலை வேளையில் குளிப்பவர்கள், சூடான நீரில் சில நிமிடம் நிற்பதால் புத்துணர்ச்சி கிடைத்து, நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க முடியும் என்று சொல்கிறார்கள்.

மாறாக, இரவில் குளிப்பவர்கள், நாள் முழுவதும் சேர்ந்த தூசி, வியர்வை எல்லாவற்றையும் கழுவி விட்டு தூங்குவதால் சுத்தமாகவும், அமைதியாகவும் தூங்க முடியும் என்று நம்புகிறார்கள்.

அறிவியல் என்ன சொல்கிறது?

எது நமக்கு உண்மையில் அதிக நன்மை தருகிறது? என்பது குறித்துத் தெரிந்து கொள்வோம்.

குளிப்பது நம் தோலில் உள்ள அழுக்கு, வியர்வை, எண்ணெயை நீக்குகிறது. நாள் முழுவதும் தூசி, மாசு, மகரந்தம் போன்றவை உடலில் தேங்குகின்றன. இரவில் குளிக்காமல் படுக்கச் சென்றால், இந்த அழுக்குகள் உங்கள் படுக்கை விரிப்பிலும் தலையணை உறையிலும் படிந்துவிடும்.

காலை அல்லது இரவு இரண்டில் எப்போது குளிப்பது உடல் நலனுக்கு சிறந்தது?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இரவில் சூடான நீரில் குளித்த பிறகு உடல் வெப்பநிலை உயர்ந்து பின்னர் குறைவது சிலருக்கு எளிதாக தூங்க உதவும்

இது மட்டும் இல்லை.

நம் தோலில் ஏராளமான நுண்ணுயிர்கள் வாழ்கின்றன. தோலின் ஒரு சதுர சென்டிமீட்டரை நெருக்கமாகப் பார்த்தால், அங்கே 10,000 முதல் ஒரு மில்லியன் வரை பாக்டீரியாக்கள் இருப்பதை காணலாம். அவை நம் வியர்வைச் சுரப்பிகளில் இருந்து வரும் எண்ணெயை உணவாக எடுத்துக்கொள்கின்றன.

வியர்வைக்கு தனிப்பட்ட மணம் இல்லையென்றாலும், பாக்டீரியாக்கள் உற்பத்தி செய்யும் கந்தக சேர்மங்கள்தான் துர்நாற்றத்தை ஏற்படுத்துகின்றன.

அதனால், படுக்கைக்கு முன் குளிப்பது தான் ஆரோக்கியமான தேர்வாகத் தோன்றலாம். ஆனால் எப்போதும் போல, உண்மை கொஞ்சம் சிக்கலானது.

"இரவில் குளித்தால் நீங்கள் சுத்தமாக படுக்கைக்குச் செல்வீர்கள், ஆனால் இரவில் உங்களுக்கு வியர்க்காமல் இருக்காது" என்கிறார் லீசெஸ்டர் பல்கலைக்கழக நுண்ணுயிரியலாளர் பிரிம்ரோஸ் ஃப்ரீஸ்டோன்.

குளிர்காலத்தில் ஒரு நபர் படுக்கையில் கால் லிட்டர் அளவு வியர்வை வெளியிடுவார் மற்றும் 50,000 அல்லது அதற்கு மேற்பட்ட தோல் செல்களை வெளியேற்றுவார். இது தூசிப் பூச்சிகளுக்கு (dust mites) ஒரு முழு விருந்து போன்றது என்கிறார் ஃப்ரீஸ்டோன்.

தொடர்ந்து பேசிய அவர், "நீங்கள் படுக்கையில் வியர்வையால் ஒரு சிறிய சூழலை உருவாக்குவீர்கள். அதில் தோலில் உள்ள பாக்டீரியாக்கள் உணவை பெற்றுக்கொண்டு, சிறிது உடல் நாற்றத்தை (BO) உருவாக்கும். எனவே, இரவில் குளித்தாலும், காலையில் எழும்போது சற்று நாற்றம் இருக்கும்," என்கிறார்.

இரவில் குளிப்பதின் நன்மைகள் கிடைக்க, உங்கள் படுக்கை விரிப்பு, போர்வை, தலையணை ஆகியவற்றை முறையாக சுத்தம் செய்ய வேண்டும். பாக்டீரியாக்கள் இவற்றில் வாரக்கணக்கில் உயிர் வாழக்கூடும். ஈரமான பகுதிகளில், குறிப்பாக தலையணைகளில், தூசிப் பூச்சிகளும் பூஞ்சைகளும் அதிகமாக சேரக்கூடும்.

முழுமையாகச் செயல்படும் நோயெதிர்ப்பு அமைப்பு உள்ளவர்கள் இதை சமாளித்துவிடுவார்கள். ஆனால் கடுமையான ஆஸ்துமா கொண்டவர்களில் 76% பேருக்கு குறைந்தது ஒரு வகை பூஞ்சைக்கு ஒவ்வாமை இருக்கும். A. fumigatus என்ற பூஞ்சைக்கு உட்பட்டால், காசநோய் அல்லது புகைபிடிப்பால் பாதிக்கப்பட்ட நுரையீரல் நோயாளிகளுக்கு நுரையீரல் நோய் உருவாகும் அபாயம் உள்ளது.

காலை அல்லது இரவு இரண்டில் எப்போது குளிப்பது உடல் நலனுக்கு சிறந்தது?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, காலையில் குளிப்பது இரவில் சேகரிக்கப்படும் வியர்வை மற்றும் நுண்ணுயிரிகளை பெரும்பாலானவற்றை நீக்கும்

"மாலையில் குளிப்பதை விட, படுக்கை விரிப்புகளை சுத்தமாக வைத்துக்கொள்வதே முக்கியம்," என்கிறார் பிரிட்டனின் ஹல் பல்கலைக் கழகத்தில் காயம் குணப்படுத்துதல் மற்றும் நுண்ணுயிரியல் துறையின் மூத்த விரிவுரையாளர் ஹாலி வில்கின்சன்.

"ஏனென்றால், நீங்கள் குளித்து சுத்தமாக படுக்கைக்கு சென்றாலும், அந்த விரிப்புகளை ஒரு மாதம் துவைக்காமல் விட்டால், அதில் பாக்டீரியா, அழுக்கு, தூசிப் பூச்சிகள் எல்லாம் குவிந்து விடும்."

இது ஒரு சிக்கல், ஏனெனில் தூசிப் பூச்சி கழிவுகளுக்கு நீண்ட காலம் உட்பட்டால், ஒவ்வாமை ஏற்படுவதற்கான அபாயம் அதிகரிக்கும்.

நீங்கள் ஏற்கனவே மகரந்தம் போன்றவற்றுக்கு ஒவ்வாமை கொண்டவராக இருந்தால், படுக்கை விரிப்பை துவைக்காமல் இருப்பது உங்கள் அறிகுறிகளை இன்னும் மோசமாக்கும். அழுக்கான விரிப்புகளில் தொடர்ந்து படுத்தால், தோல் தொற்றுகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. ஆனால் இதற்கான விஞ்ஞான ஆதாரங்கள் இன்னும் தெளிவாக இல்லை.

தூக்கத்தின் நன்மைகள்

இரவு நேரத்தில் குளிப்பது தூக்கத்திற்கு உதவுகிறது என்று சிலர் வலியுறுத்துகிறார்கள், இதற்கு விஞ்ஞான ஆதாரங்களும் உள்ளன.

உதாரணமாக, 13 ஆய்வுகளின் முடிவுகளை ஒப்பிட்டுப் பார்த்த ஒரு மெட்டா-ஆய்வு, படுக்கைக்கு ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்திற்கு முன்பு 10 நிமிடங்கள் சூடான நீரில் குளிப்பது, தூங்குவதற்கு எடுக்கும் நேரத்தை கணிசமாகக் குறைக்கிறது என்று கண்டறிந்தது.

இதற்கான காரணம், முதலில் உடல் வெப்பநிலையை உயர்த்தி பின்னர் அதை மீண்டும் குறைப்பது, நம் உடலுக்குத் "இப்போது தூக்கத்திற்கு தயாராகுங்கள்" என்ற சர்க்கேடியன் (உடலின் உயிரியல் கடிகாரம்) சிக்னல் அனுப்புகிறது என்பதாக இருக்கலாம்.

ஆனால் இதை முழுமையாக உறுதிப்படுத்த இன்னும் கூடுதல் ஆராய்ச்சி தேவை.

அப்படியென்றால், காலை குளிப்பது நல்லதா? மாலை குளிப்பது நல்லதா? எது சிறந்தது என்ற கேள்விக்கு விடை என்ன?

ஃப்ரீஸ்டோன், காலையில் குளிப்பதையே விரும்புகிறார். இரவில் படுக்கையில் இருந்த போது தேங்கிய வியர்வையும் நுண்ணுயிரிகளையும் துடைத்துவிட்டு, புத்துணர்ச்சியுடனும் சுத்தமாகவும் நாளைத் தொடங்க முடியும் என்பது தான் அதற்கான காரணம்.

ஆனால் உண்மையில், நீங்கள் காலையில் குளித்தாலும், மாலையில் குளித்தாலும், உங்கள் ஆரோக்கியத்தில் பெரிய வித்தியாசம் ஒன்றும் இருக்காது. இது முழுக்க முழுக்க, நீங்கள் பகலில் சுத்தமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்க விரும்புகிறீர்களா அல்லது இரவில் தூங்கச் செல்லும் முன் சுத்தமாக இருக்க விரும்புகிறீர்களா என்பதில்தான் இருக்கிறது.

"நீங்கள் ஒரு நாளைக்கு ஒரு முறை தான் குளிக்கிறீர்கள் என்றால், அதை எந்த நேரத்தில் செய்கிறீர்கள் என்பது முக்கியமல்ல," என்கிறார் வில்கின்சன்.

உண்மையில், முக்கியப் பகுதிகளை தினமும் கழுவினால், வாரத்திற்கு இரண்டு முறை குளிப்பதே ஆரோக்கியத்துக்கும் சுகாதாரத்துக்கும் போதுமானது.

"நீங்கள் செய்யும் வேலையையும் பொறுத்தே இது இருக்கும். உதாரணமாக, நீங்கள் விவசாயி என்றால், நாள் முழுவதும் வேலை முடித்து வீடு திரும்பியபோது குளிக்க விரும்புவீர்கள். ஆனால், மொத்தமாகப் பார்த்தால், சுத்தமான படுக்கையை பராமரிப்பதுதான் மிக முக்கியமானது," என்கிறார் வில்கின்சன்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c05918r470do

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் ஒரு நாளைக்கு மூன்று தடவைகள் குளிப்பேன்.சொன்னால் நம்பவா போகின்றீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

6 hours ago, ஏராளன் said:

காலை அல்லது இரவு இரண்டில் எப்போது குளிப்பது உடல் நலனுக்கு சிறந்தது?

படத்தில்… குளிப்பவரின் கமக்கட்டு முழுக்க ஒரே காடாக பார்க்க அசிங்கமாக இருக்கின்றது. 🤮

அவரை முதலில்… அதுகளை சவரம் செய்து விட்டு, குளிக்கச் சொல்லுங்க, ப்ளீஸ்….. 😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தமிழ் சிறி said:

படத்தில்… குளிப்பவரின் கமக்கட்டு முழுக்க ஒரே காடாக பார்க்க அசிங்கமாக இருக்கின்றது. 🤮

அவரை முதலில்… அதுகளை சவரம் செய்து விட்டு, குளிக்கச் சொல்லுங்க, ப்ளீஸ்….. 😂

அநாவசியமாக காடுகளை அழிக்கக்கூடாதாம் அண்ணை!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

நான் ஒரு நாளைக்கு மூன்று தடவைகள் குளிப்பேன்.சொன்னால் நம்பவா போகின்றீர்கள்.

நாங்க நம்பீட்டம். 😂

ஏப்பிரல் பூல். 🤣

  • கருத்துக்கள உறவுகள்

நான் வேலை ஓய்வுக்கு வரும் முன் தினமும் இருதடவை குளிப்பது .......பின்பு காலைக்குளியல் , இரவில் கை கால் முகம் கழுவி ஈரத்துவாயால் துடைத்து விட்டு படத்துக்கு விளக்கு ஏற்றிவிட்டு போவது வழக்கம் . ......(எதிர் பாராத கார் வேலைகள் செய்தால் இரவிலும் குளியல்தான் ).....! 😀

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு… 🚰 தண்ணியிலை கண்டம் இருக்கு என்று சிவன் கோயில் சாத்திரியார் சொன்ன படியால், மூன்று மாதத்துக்கு ஒருமுறைதான் 🛀🏾 🪣ஒரு வாளி தண்ணீரில் குளிப்பேன். 😂

  • கருத்துக்கள உறவுகள்
On 24/9/2025 at 01:51, தமிழ் சிறி said:

எனக்கு… 🚰 தண்ணியிலை கண்டம் இருக்கு என்று சிவன் கோயில் சாத்திரியார் சொன்ன படியால், மூன்று மாதத்துக்கு ஒருமுறைதான் 🛀🏾 🪣ஒரு வாளி தண்ணீரில் குளிப்பேன். 😂

தண்ணியில கண்டம் போல தெரியவில்லை, தண்ணிப்பஞ்சம், சோம்பேறித்தனம் போலல்லவா தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
On 23/9/2025 at 17:51, தமிழ் சிறி said:

எனக்கு… 🚰 தண்ணியிலை கண்டம் இருக்கு என்று சிவன் கோயில் சாத்திரியார் சொன்ன படியால், மூன்று மாதத்துக்கு ஒருமுறைதான் 🛀🏾 🪣ஒரு வாளி தண்ணீரில் குளிப்பேன். 😂

எங்கள் வீட்டிற்கு இனிமேல் சிறீத்தம்பி வந்தால் நாங்கள் அனைவரும் மாஸ்க் போட்டுக்கொண்டுதான் அவருடன் பேசுவோம் என்று இன்றுமுதல் உறுதி எடுத்துக்கொண்டுள்ளோம்.😷

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, satan said:

தண்ணியில கண்டம் போல தெரியவில்லை, தண்ணிப்பஞ்சம், சோம்பேறித்தனம் போலல்லவா தெரிகிறது.

சாத்தான்... ஜேர்மனியில் தண்ணிப் பஞ்சம் வர சந்தர்ப்பமே இல்லை.

பெரும்பாலான ஊரை சுற்றி, நதிகள் ஓடிக் கொண்டே இருக்கும்.

எனக்கு சோம்பேறித்தனம் என்றும் சொல்ல முடியாது.

எப்பவும், ஏதாவது செய்து கொண்டே இருப்பேன்.

முக்கிய காரணம்.... அந்த சிவன் கோயில் சாத்திரியார்தான்.

அவர்தான்... என்னை பயப்பிடுத்தி வைத்திருக்கிறார். 😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Paanch said:

எங்கள் வீட்டிற்கு இனிமேல் சிறீத்தம்பி வந்தால் நாங்கள் அனைவரும் மாஸ்க் போட்டுக்கொண்டுதான் அவருடன் பேசுவோம் என்று இன்றுமுதல் உறுதி எடுத்துக்கொண்டுள்ளோம்.😷

s-l1200.jpg

பாஞ்ச் அண்ணே..... உடலில் எவ்வளவு துர்நாற்றம் வீசினாலும்,

எல்லாவற்ரையும் ஒரே அமுக்காக அமுக்கி, நறுமணம் வீச செய்வது, Statement parfum. 😂

இந்தப் போத்தலை நீங்களும் வாங்கிப் பாவித்தால்... குளிக்கவே மனம் வராது. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

அவர்தான்... என்னை பயப்பிடுத்தி வைத்திருக்கிறார்

நீங்கள் அப்பாவி, அப்படியே நம்பிவிட்டீர்கள் அவரை.

4 hours ago, Paanch said:

எங்கள் வீட்டிற்கு இனிமேல் சிறீத்தம்பி வந்தால் நாங்கள் அனைவரும் மாஸ்க் போட்டுக்கொண்டுதான் அவருடன் பேசுவோம்

எதுக்கு? உடனேயே குளியலறைக்கு கூட்டிகொண்டுபோய் ஒரு முக்கு முக்கி எடுத்து விடுங்கள் ஆளை, வேண்டுமென்றால் கொஞ்சம் நெருப்புத்தண்ணியையும் கலந்து விடுங்கள் . ஆள் கொஞ்சம் திமிறுவார் விடாதைங்கோ.

1 hour ago, தமிழ் சிறி said:

இந்தப் போத்தலை நீங்களும் வாங்கிப் பாவித்தால்... குளிக்கவே மனம் வராது.

அதைச்சொல்லுங்கோ! எதுக்கு பாவம் சிவன் கோவில் சாத்திரியாரை அழைக்கிறீர்கள்? அவரோடு என்ன கொடுக்கல் வாங்கல் பிரச்சனை உங்களுக்கு?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.