Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முத்தம் எனும் மாமருந்து!

உடலுறவின் மையமே இனம்புரியாத மகிழ்ச்சியை உண்டாக்குவதுதான். அந்த மகிழ்ச்சிக்கு வித்தாக அமைபவை முத்தங்களே. கடுமையான சோர்வுடன் இருக்கும் உடலை அடுத்த சில நொடிகளில் உற்சாகமாக மாற்ற முத்தப் பதியங்கள் போதுமானவை. முத்தங்கள் மருத்துவ குணங்கள் கொண்டவை என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆக்ஸிடோசின் ஹார்மோனின் சுரப்பைத் தூண்டி மன மகிழ்ச்சியை அதிகரிக்க முத்தங்கள் தூண்டுகோலாக அமையும்.

உடலுறவின்போது மட்டுமல்லாமல், வாய்ப்பிருக்கும் நேரங்களில் எல்லாம் கணவனும் மனைவியும் முத்தங்களைப் பரிமாறிக்கொண்டே இருந்தால் எதிர் காலத்தில் இதய நோய்கள், உயர் ரத்த அழுத்தம் போன்ற தொற்றாநோய்கள் வருவதற்கான சாத்தியங்கள் குறைகிறதாம். மிக முக்கியமாக மன அழுத்தத்தைக் குறைத்து, ஸ்ட்ரெஸ் ஹார்மோன்களின் தாக்கத்தைக் குறைக்க முத்தங்கள் பெருமளவில் உதவு கின்றன.


உடலுறவுக்குத் தயாராகும்போது, `ஃபோர்பிளே' எனப்படும் முன்விளையாட்டு நேரம் மிக மிக முக்கியமானது. அப்போது காம இல்லத்தின் வாசல் கதவுகளைத் திறக்க உதவும் கொத்துச் சாவிதான் முத்தங்கள். ‘இப்போது உடலுறவுக்குத் தயாராக இருக்கிறேன்’ என்று சமிக்ஞை கொடுப்பது உதடுகள் நடத்தும் முத்த நாட்டியம்தான். தன் இணையின் ஈரம் மிகுந்த உதடுகள் தீண்டியதும், மூளைக்கு சிக்னல் கிடைக்க, வறண்டிருக்கும் உணர்வுகள்கூட ஹார்மோன்களின் உதவியால் நீரூற்றாகப் பிறப்பெடுத்து தாம் பத்யத்தை இனிமையாக்கும்.

முத்தம் வழியாக ஆனந்தம் பெற, இந்தந்தப் பகுதியில்தான் முத்தமிட வேண்டும் என்றில்லை. அது ஒருவருக்கு ஒருவர் மாறுபட்டது. உடலுறவின்போது எந்தெந்தப் பகுதியில் முத்தம் கொடுத்தால் தன் இணைக்குப் பிடிக்கும் என்பதைத் தொடக்கத்திலேயே கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் அல்லது அனுபவத்தின் வழி கற்றுணர வேண்டும். முத்தமிட ஏற்ற உடல் பாகத்தை இணையைக் கேட்காமலே கண்டறிந்து அவரை ஆச்சர்யப்படுத்துவது கூடுதல் இணக்கத்தை உண்டாக்க உதவும்.


பெரும்பாலானோருக்குக் கழுத்துப் பகுதியில் ஏற்படும் முத்தத் தீண்டல்கள் பாலியல் உணர்வுகளை அதிகப்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கூச்சம் மிகுந்த பகுதிகளில் வழங்கப்படும் கூச்சம் மிகுந்த முத்தங்கள், புதுமையான அனுபவங்களைப் பரிசளித்து, உடலுறவில் உயரத்தை அடைய உதவியாக இருக்கின்றன. உடலுறவின் உச்சத்தில் இருக்கும்போது இன உறுப்புப் பகுதியில் வழங்கப்படும் முத்தங்கள் பெருமகிழ்ச்சியை உண்டாக்கும்.

பல நேரங்களில் மென்மையான முத்தங்கள் பல மாயங்களைச் செய்யும். சில நேரங்களில் ஆக்ரோஷமான முத்தங்கள் வித்தைகளை நிகழ்த்தும். எவ்வகையான முத்தங்களாயினும் இணைக்குப் பிடித்தமான வகையில் முத்தங்களின் அழுத்தத்தையும் இடத்தையும் தேர்ந்தெடுப்பது சிறப்பு.

முத்தங்களைப் பரிமாற வயது தடையல்ல…

முதிய வயதில் வறண்டிருக்கும் ஹார்மோன்களைகூட லேசாகச் சிலுப்பி விடச் செய்யும் சக்தி முத்தங்களுக்கு உண்டு. முதிர்ந்த வயதுடைய கணவன், முதிர்ந்த வயதுடைய தன் மனைவியின் சுருக்கமான தேகத்தில் கொடுக்கும் முத்தம், காமப் பரவசத்தை உண்டாக்காது எனினும், இளம் வயது இல்லற நினைவுகளைத் தூசிதட்டி மனதுக்குள் மகிழ்ச்சியைப் பரப்பச் செய்யும். அவ்வயதில் தேவைப்படுவது அளவுகடந்த மகிழ்ச்சிதானே!

முத்தமிட ஏற்ற இடம் எது? - கலவி மொழி கற்போம் - 4

முத்தம் இடும் முன்பு கவனிக்க வேண்டியவை…

முத்தங்கள் காம உலகத்தில் அத்தியாவசியமானவை என்பதெல்லாம் சரி... அம்முத்தங்களை உணர்வுபூர்வமாகப் பரிசளிக்கும் வாய்ப்பகுதி சுகாதாரமாக இருக்க வேண்டியது முக்கியம் அல்லவா!

பல்வேறு காரணங்களால் உண்டாகும் வாய்நாற்ற குறிகுணத்தோடு ஆசையாக முத்தமிட மனைவியின் அருகில் நெருங்கினால், முகச் சுளிப்போடு அவர் விலகிச் செல்லவே வாய்ப்புகள் அதிகம்.

முத்தத்தின் தனித்துவமே அது கொடுக்கும் சுகந்தம்தான். அந்த வாசனையே காம இச்சையைத் தூண்டக்கூடும். அவ்வகையில் துர்நாற்றம் மிகுந்த முத்த வாசனை எவ்வளவு தான் பரவச நிலையில் இருந்தாலும் அடுத்த நொடியே காம மலை மேலிருந்து தவறி வீழச் செய்யும். முத்தமிடும் தருவாயில்தான் பலருக்கு வாய் நாற்றப் பிரச்னை இருப்பதே தெரிய வருகிறது.

உடலுறவுக்கு முன்பு குளித்து உடலைத் தூய்மையாகவும் உற்சாகமாகவும் வைத்துக் கொள்வது எவ்வளவு முக்கியமோ, அதைப் போல இரவு நேரங்களில் பல் துலக்குவதும் அத்தியாவசியம். சொத்தைப் பல் பிரச்னை காரணமாக வாய் நாற்றம் ஏற்படுகிறதா அல்லது வாய்ப் பகுதியில் வேறு ஏதாவது பிரச்னையா என்பதை பல் மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறலாம்.

வாய் சுகாதாரம் தவிர்த்து, வயிற்றுப் புண் காரணமாகவும் வாய் நாற்றம் ஏற்படலாம். வேறு சில மருத்துவக் காரணங்களும் இருக்கின்றன. அடிப்படையைக் கண்டறிந்தால் வாய் நாற்றத்தை நிரந்தரமாகத் தவிர்க்கலாம். புகை பிடிக்கும் பழக்கம் மற்றும் மதுப் பழக்கம் உள்ள ஆண்களுக்கு வாய் நாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக மிக அதிகம்.

விக்ரம் குமார்

இப்படியும் சில ஆண்கள்…

உடலுறவுக்கு முன்பு புகை பிடித்துவிட்டு, சுகந்தம் தரும் ஸ்பிரேக்களை வாய்ப் பகுதியில் அடித்துகொண்டு உடலுறவு மேற்கொள்ளத் துடிக்கும் ஆண்களுக்கு அது தற்காலிக நிவாரணம் அளிக்கலாமே தவிர, பிரச்னையைச் சரி செய்யாது.

மேலும், புகை பிடித்துவிட்டு மனைவிக்கு முத்தமிடும் போது, சிகரெட்டில் இருக்கும் தீமை பயக்கும் வேதிப்பொருள்கள் வாய்வழியே இணைக்குப் பரிசாகக் கிடைக்கும். செகண்டரி ஸ்மோக்கிங்கால் உண்டாகும் பாதிப்புகள் மனைவிக்கு ஏற்படலாம்.

எப்படி சிலருக்குக் காலையில் புகை பிடித்தால்தான் மலம் வருமோ, அதைப் போல ஒரு சிகரெட்டை பற்ற வைத்தால் தான் காம இச்சை பிறக்கும் என்ற அளவில் பல ஆண்களின் மனநிலை இருக்கிறது.

பழைய திரைப்படங்களில் இந்தக் காட்சியை நாம் அடிக்கடி பார்த்திருப்போம். தவறான இந்த போதைப் பழக்கத்திலிருந்து வெளிவருவது இனிமையான இல்லறத்துக்கு உதவும்.

முத்த இசையை அடிக்கடி ஒலிக்க விட்டுக்கொண்டே இருங்கள்... ‘முத்தமிழே முத்தமிழே முத்தச் சந்தம் ஒன்று கேட்பதென்ன…’ என்று முத்தங்கள் பரிமாறும்போது உண்டாகும் லயத்தை ஒவ்வொரு முறையும் அனுபவியுங்கள்.

‘முத்தம் சிந்தச் சிந்த ஆனந்தம் தான்…’ எனும் அதே பாடலுடைய சரணத்தின் ஆழத்தைப் புரிந்துகொள்வீர்கள்.

முத்தங்கள்… பெரும் வரம்!

Vikatan Plus - 28 September 2025 - முத்தமிட ஏற்ற இடம் எது? - கலவி மொழி கற்போம் 4 | sexual guidance series 4 - Vikatan

  • கருத்துக்கள உறவுகள்

வயது வந்தவர்களுக்கு மட்டும்

என்று தலைப்பிலேயே போட வேண்டாமோ?

  • கருத்துக்கள உறவுகள்

முட்டி செத்துப்போன காலத்தில் இதெல்லாம் தேவையா பிழம்பு சார்

  • கருத்துக்கள உறவுகள்

முத்தமிட ஏற்ற இடம் எது?

பெண்ணின் பின் கழுத்து தோள்களுடன் இணையும் பகுதியில் ஈர உதடுகளால் மென்மையாக வருடி ஈரமாக்கி அந்த ஈரமான பகுதியில் சுவாசக் காற்றை ஊதினால் பெண்மை சொக்கிநிற்கும்! காமன்கோயில் கதவுகள் தாழ்ப்பாள்கள் எல்லாம் தெறித்துவிழும்! 👀

  • கருத்துக்கள உறவுகள்
On 27/9/2025 at 10:21, வாலி said:

பெண்ணின் பின் கழுத்து தோள்களுடன் இணையும் பகுதியில் ஈர உதடுகளால் மென்மையாக வருடி ஈரமாக்கி அந்த ஈரமான பகுதியில் சுவாசக் காற்றை ஊதினால் பெண்மை சொக்கிநிற்கும்! காமன்கோயில் கதவுகள் தாழ்ப்பாள்கள் எல்லாம் தெறித்துவிழும்! 👀

On 27/9/2025 at 05:14, பிழம்பு said:

இரவு நேரங்களில் பல் துலக்குவதும் அத்தியாவசியம். சொத்தைப் பல் பிரச்னை காரணமாக வாய் நாற்றம் ஏற்படுகிறதா அல்லது வாய்ப் பகுதியில் வேறு ஏதாவது பிரச்னையா

தாழ்பாள்கள் தெறித்து விழுவதற்கு உத்தரவாதம் இல்லை, ஆனால் பற்கள் தெறித்து விழும் வாய்ப்புகளே அதிகம்.🤣

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஆக நாலஞ்சு பேர்தான் இடம் தேடி இருக்காங்கள் முத்தம் கொடுக்கிறதிலே @vasee @நந்தன் @வாலி @ஈழப்பிரியன் 😂😎😊😆

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

ஆக நாலஞ்சு பேர்தான் இடம் தேடி இருக்காங்கள் முத்தம் கொடுக்கிறதிலே @vasee @நந்தன் @வாலி @ஈழப்பிரியன் 😂😎😊😆

நீங்கள் இன்னும் ரொம்ப தூரம் போகவேண்டி இருக்கு தனி .........! 😀

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.