Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வாரம் கிளைமேக்ஸ்.. சென்னைக்கு வரும் பாண்டா.. விஜய்க்கு டெல்லி முக்கிய மெசேஜ்.. கூட்டணி ரெடி!

Shyamsundar IUpdated: Sunday, October 5, 2025, 10:07 [IST]

TVK Vijay

சென்னை: கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு, நடிகர் விஜய்யின் கட்சிக்கு பாஜக ஆதரவுக்கரம் நீட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் ரசிகர்கள் பலத்தைப் பயன்படுத்தி வெற்றி வாய்ப்புகளை அதிகரிக்க பாஜக திட்டமிட்டு வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இப்படிப்பட்ட நேரத்தில்தான் விஜய்க்கு ஆதரவாக பாஜக களமிறங்க திட்டமிட்டு உள்ளதாம். விஜய் தனியாக இல்லை என்று தமிழக வெற்றிக் கழக (TVK) தலைமைக்கு ஒரு மூத்த பாஜக தலைவர் தகவல் தெரிவித்துள்ளார் என்று கூறப்படுகிறது. திமுகவுக்கு நெருக்கடி கொடுக்க பாஜகவும் விரும்புவதாகவும், அதற்கு தவெக துணை இருந்தால் சிறப்பாக இருக்கும். இதனால் பொறுமையாக இருக்குமாறு விஜய்க்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சட்ட ரீதியாக சிக்கல்

விஜய்க்கு இந்த வழக்கில் சட்ட ரீதியாக கடுமையாக சிக்கல் ஏற்பட்டு உள்ளது. ஏற்கனவே இந்த சம்பவம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் சிறப்பு புலனாய்வுக் குழுவை (SIT) அமைத்துள்ளது. இப்படிப்பட்ட நேரத்தில்தான் பாஜக தரப்பு எங்களுடன் கூட்டணி வைத்துக்கொள்ளுங்கள். நாங்கள் பிரச்சனையை பார்த்துக்கொள்கிறோம். நீங்கள் அதை பற்றி எல்லாம் கவலைப்பட வேண்டாம். எங்களுடன் கூட்டணி இல்லை என்றால் நாங்களும் உங்களுக்கு ஆதரவாக இருக்க மாட்டோம், என்று விஜய்க்கு டெல்லி பாஜக தெரிவித்து உள்ளதாம்.

விஜய் முடிவு என்ன?

2026 தேர்தலில் TVK தனித்துப் போட்டியிடும் என்று விஜய் முன்னதாக அறிவித்திருந்தார். ஆனால், இந்த புதிய நிகழ்வுகள் அவரது வியூகங்களை மாற்றியமைக்கக்கூடும். புதிதாக நியமிக்கப்பட்ட தமிழக பாஜக பொறுப்பாளர் ஜே பாண்டா அக்டோபர் 6 ஆம் தேதி மாநிலத்திற்கு வருகை தர உள்ளார். அப்போது அவர் மூத்த கட்சித் தலைவர்கள் மற்றும் அலுவலகப் பொறுப்பாளர்களை சந்திப்பார். அப்போது பாஜக கூட்டணி குறித்து முக்கிய முடிவுகளை எடுப்பார்.

முன்னாள் தமிழக பாஜக தலைவர் கே அண்ணாமலை நேற்று டெல்லியில் இருந்தார். அவர் கரூர் கூட்ட நெரிசல் மற்றும் அதன் சாத்தியமான விளைவுகள் குறித்து கட்சித் தலைவர்களுக்கு விளக்கமளித்தார். இதன்பின் வரும் வாரமே கூட்டணியில் முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

வரவிருக்கும் தேர்தலில் திமுகவுக்கு எதிரான ஆட்சி எதிர்ப்பு அலை உருவாகும் என்று பாஜக தலைமை நம்புகிறது. எனவே, எதிர்க்கட்சிகளின் வாக்குகளை ஒருங்கிணைக்க அது முயற்சிக்கிறது. இதில் TVK-க்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

திமுக இந்தச் சம்பவத்திற்கு தவெகவை முழுமையாகக் குறை கூறி வரும் நிலையில், மற்ற கட்சிகள் விஜய் மீது மென்மையாக அணுகியுள்ளன. விஜயை கடுமையாக விமர்சனம் செய்யாமல் அவரை சாந்தமாக அணுக டெல்லி பாஜக திட்டமிட்டு உள்ளது. இதன் மூலம் அவரை கூட்டணிக்குள் இழுக்க பாஜக முடிவு எடுத்துள்ளதாம்.

விஜய்யின் பேச்சாற்றல் மற்றும் செல்வாக்கு காரணமாக, தவெக வாக்காளர்களை ஈர்க்கும் என்றும், தேர்தலுக்கு முன்னதாக ஒரு முக்கிய சக்தியாக உருவெடுக்கும் என்றும் பாஜகவின் மதிப்பீடு கூறுகிறது. DMDK மற்றும் நாம் தமிழர் போன்ற சிறிய கட்சிகளில் இருந்து வாக்காளர்கள் TVK-வை நோக்கி நகரலாம் என்றும் பாஜக கருதுகிறது.

ஆனால், அதிமுகவுடனான தனது கூட்டணியைக் குலைக்க விரும்பாததால், பாஜக கவனமாக செயல்பட விரும்புகிறது. அதிமுகவின் வலுவான அமைப்புடன் விஜய் இணைந்தால், NDA-வின் தமிழ்நாடு டார்கெட் வெற்றிபெறும் என்று டெல்லி பாஜக கருதுகிறதாம்.

https://tamil.oneindia.com/news/chennai/tvk-vijay-alliance-with-bjp-and-aiadmk-is-almost-confirmed-nda-twist-in-tamil-nadu-740691.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards

விஜையின் கொள்கை விளக்கத்தை பார்த்து, அதனால் ஈர்க்கபட்டு, திமுக, அதிமுக, சாதிகட்சிகள், பாஜக ஏ டீம், பாஜக பி டீம் தவிர்ந்த ஒரு அரசியல் சக்தி தமிழகத்தில் உருவாக வாய்புள்ளது என கருதிய கோஷான் போன்றோரின் தற்போதைய பரிதாப நிலை 👇🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, goshan_che said:

விஜையின் கொள்கை விளக்கத்தை பார்த்து, அதனால் ஈர்க்கபட்டு, திமுக, அதிமுக, சாதிகட்சிகள், பாஜக ஏ டீம், பாஜக பி டீம் தவிர்ந்த ஒரு அரசியல் சக்தி தமிழகத்தில் உருவாக வாய்புள்ளது என கருதிய கோஷான் போன்றோரின் தற்போதைய பரிதாப நிலை 👇🤣

படிச்சு படிச்சு சொன்னன் கேட்டியளே? 😂

கொஞ்ச நாளைக்கு எதுக்கெடுத்தாலும் பெயின்ற் வாளியை தூக்கி வெள்ளையடிக்கிற வேலை பாக்காமல் கள நிலவரத்தை பார்த்து வெளுத்து வாங்குங்கோ...🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, குமாரசாமி said:

படிச்சு படிச்சு சொன்னன் கேட்டியளே? 😂

கொஞ்ச நாளைக்கு எதுக்கெடுத்தாலும் பெயின்ற் வாளியை தூக்கி வெள்ளையடிக்கிற வேலை பாக்காமல் கள நிலவரத்தை பார்த்து வெளுத்து வாங்குங்கோ...🤣

விஜை இப்போதான் முதல் தடவை, ஒரு சூழ்நிலை கைதியாகி கொள்கை தவறை விடுகிறார். அல்லது விட ஆயத்தம் ஆகிறார்.

அதற்கு முன்பே மூக்கு சாத்திரம் பார்த்து அவரின் வரவை எதிர்த்து சரி என நான் இப்போதும் எண்ணவில்லை.

விஜை, சீமான், சுமன் இன்னும் அரசியலுக்கு வரும் எவரையும் முந்தங்கிய-பக்க சார்பாக எதிர்க்க கூடாது.

அதே சமயம் அவர்கள் வழுவும் போது முரட்டு முட்டு கொடுக்கவும் கூடாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
21 minutes ago, goshan_che said:

விஜை இப்போதான் முதல் தடவை, ஒரு சூழ்நிலை கைதியாகி கொள்கை தவறை விடுகிறார். அல்லது விட ஆயத்தம் ஆகிறார்.

அதற்காக மனித பலிகளை கண்டும் காணாமலும் செல்லும் அரசியல்வாதிகளை வெள்ளோட்டம் என நினைத்து பேசாமல் இருக்க முடியாது.இன்று வரை நடிகர் யோசப்பு விஜய் நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டாரா?பாதிக்கப்பட்ட மக்களை போய் சந்தித்தாரா? ஆறுதல் சொன்னாரா?

என்னவொரு ஜென்மம்?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

விஜை இப்போதான் முதல் தடவை, ஒரு சூழ்நிலை கைதியாகி கொள்கை தவறை விடுகிறார். அல்லது விட ஆயத்தம் ஆகிறார்.

அதற்கு முன்பே மூக்கு சாத்திரம் பார்த்து அவரின் வரவை எதிர்த்து சரி என நான் இப்போதும் எண்ணவில்லை.

விஜை, சீமான், சுமன் இன்னும் அரசியலுக்கு வரும் எவரையும் முந்தங்கிய-பக்க சார்பாக எதிர்க்க கூடாது.

அதே சமயம் அவர்கள் வழுவும் போது முரட்டு முட்டு கொடுக்கவும் கூடாது.

கடுமையான காலகட்டங்கள்தான் மனிதனை புடம் போடும், சட்டத்தின் முன் அனைவரும் சமன் என முன்மாதிரியாக நடந்து, அதனால் ஏற்படுகின்ற அனைத்து பாதிப்புக்களையும் உளப்பூர்வமாக ஏற்று தனது தவறை திருத்திக்கொள்ள வரலாறு அவருக்கு ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது.

தவறுக்கான பொறுப்பை ஏற்றல், கடினமான காலகட்டத்தில் உறுதியாக நிற்றல் எனும் அடிப்படை தலைமைத்துவ பண்பில் ஏற்கனவே விஜய் தோற்றுப்போய்விட்டார் எனும் நிலையில் தற்போது அதிகாரத்தினை பயன்படுத்தி தவறிலிருந்து தப்புவதற்காக கொள்கையினையும் கைவிடும் ஒரு கேவலமான அரசியல்வாதியாக மாறினால் விஜயின் அரசியல் வாழ்க்கை பத்தோடு பதினொன்றாகிவிடும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

அதற்காக மனித பலிகளை கண்டும் காணாமலும் செல்லும் அரசியல்வாதிகளை வெள்ளோட்டம் என நினைத்து பேசாமல் இருக்க முடியாது.இன்று வரை நடிகர் யோசப்பு விஜய் நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டாரா?பாதிக்கப்பட்ட மக்களை போய் சந்தித்தாரா? ஆறுதல் சொன்னாரா?

என்னவொரு ஜென்மம்?

இதை நான் எங்கும் வெள்ளை அடிக்கவில்லை. உங்களை போலவே விமர்சித்துள்ளேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
47 minutes ago, goshan_che said:

இதை நான் எங்கும் வெள்ளை அடிக்கவில்லை. உங்களை போலவே விமர்சித்துள்ளேன்.

எல்லாம் ஓகேதான். ஆனால் கதையோட கதையாய் ஒண்டு சொல்லுறன். சீமானால் இப்ப நிம்மதியாய் இருக்கிற மனிசன் ஆர் எண்டால் இவர்தான்.....😂

இல்லாட்டி ஜோசப்பு விஜய் படுற அவஸ்தையை இவரும் பட்டிருப்பார். தலையில இருக்கிற மிச்ச சொச்சமும் போயிருக்கும்.🤣

இல்லையோ ஓமோ? 😎

G2f-C6npbo-AAEp7t.jpg

  • கருத்துக்கள உறவுகள்
On 5/10/2025 at 16:16, goshan_che said:

விஜையின் கொள்கை விளக்கத்தை பார்த்து, அதனால் ஈர்க்கபட்டு, திமுக, அதிமுக, சாதிகட்சிகள், பாஜக ஏ டீம், பாஜக பி டீம் தவிர்ந்த ஒரு அரசியல் சக்தி தமிழகத்தில் உருவாக வாய்புள்ளது என கருதிய கோஷான் போன்றோரின் தற்போதைய பரிதாப நிலை 👇

கவலைப்படாதே சகோதரா.

புலி ஒன்று பதுங்கியிருக்கிறது. அதனால் எப்போதும் பதுங்கியிருக்க முடியாது. வெளியே வரும்.

உங்களுக்குத் தெரியாததல்ல. ஆனாலும் சொல்கிறேன். மீஸா சட்டத்தில் பல திமுக ஆட்களை இந்திரா உள்ளே அள்ளிப் போட்டார். சுடலையையும் அவர் விட்டு வைக்கவில்லை.சிறையில் நல்ல சாப்பாடு போட்டு, சுடலையை உண்டு இல்லை என்று ஆக்கிவிட்டு அனுப்பியிருந்தார்கள். ஆனால் அதன் பிறகு எம்ஜிஆரை வீழ்த்த இந்திராவோடு கருணாநிதி கூட்டுச் சேரவில்லையா? கை கோக்கவில்லையா? அதுதானே அரசியல். தேர்தல் கூட்டு களநிலவரத்தை வைத்து மாறும். அதிமுக வும் அடுத்த கரையில் தூண்டில் போட்டு காத்து நிற்கிறது. தனித்தா? கூட்டா? எதுவானாலும் பாதிப்பு திமுகவுக்கே.

இந்த இடைவெளியில் அண்ணன் கடலில் படகில் போய் ஏதோ செய்யப் போகிறாராமே. அதைப் பாருங்கள். கருர் சோகத்தில் இருந்து மீள அண்ணனின் நகைச்சுவையும் தேவைதானே?

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

எல்லாம் ஓகேதான். ஆனால் கதையோட கதையாய் ஒண்டு சொல்லுறன். சீமானால் இப்ப நிம்மதியாய் இருக்கிற மனிசன் ஆர் எண்டால் இவர்தான்.....😂

இவர் எப்பொழுதும் நழுவுகிற மீன். இவருடைய ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக் காசு தமிழர் கொடுக்க அவர்களுக்கு “இதோ வருகிறேன் அதோ வருகிறேன் “என்று சொல்லி கடைசியில் தமிழருக்கு ஏதும் செய்யாமல் போனவர். ஆனாலும் சீமான் சமீபத்தில் இவரிடமும் போய் வந்து வாயாறப் புகழ்ந்து தள்ளியிருந்தார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

எல்லாம் ஓகேதான். ஆனால் கதையோட கதையாய் ஒண்டு சொல்லுறன். சீமானால் இப்ப நிம்மதியாய் இருக்கிற மனிசன் ஆர் எண்டால் இவர்தான்.....😂

இல்லாட்டி ஜோசப்பு விஜய் படுற அவஸ்தையை இவரும் பட்டிருப்பார். தலையில இருக்கிற மிச்ச சொச்சமும் போயிருக்கும்.🤣

இல்லையோ ஓமோ? 😎

G2f-C6npbo-AAEp7t.jpg

உங்களுக்கு விசயம் தெரியாதே…

அஜித் அரசியலுக்கு வராமைக்கும், அப்பத்துக்கு வச்ச மா புளித்தமைக்கும்…

ஆறு மணிக்கு முன் வானம் வெளிக்கவும் கூட….

சீமான் தான் காரணமாக🤣.

பிகு

ஏனையோரை போல ரஜனியிம் சீமானின் காட்டு கத்தலை லெட்ப்ட் ஹாண்டில்தான் டீல் பண்ணினா.

ரஜனி அரசியலுக்கு வராது போக முக்கிய காரணம்கள்

  1. தன் மீதே நம்பிக்கை இன்மை / அல்லது சரியான சுய மதிப்பீடு

  2. தொடை நடுங்கிதனம்

  3. சினிமா பணம், புகழை ரிஸ்க் எடுக்க விரும்பாமை

  4. மகள்கள் அட்வைஸ்

  5. கொவிட்

கொவிட் வந்து மக்களை சந்திப்பது உயிராபத்தாக முடியலாம் என்ற அச்சம் ஏற்பட்டிராவிடின் வந்தே இருப்பார். வந்து விட்டேன் என்று அறிவிப்பே விட்டார்.

இந்த பனம் பழம் வீழ்ந்ததில் இந்த அண்டங்காக்காவுக்கு ஒரு சம்பந்தமுமில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kavi arunasalam said:

கவலைப்படாதே சகோதரா.

புலி ஒன்று பதுங்கியிருக்கிறது. அதனால் எப்போதும் பதுங்கியிருக்க முடியாது. வெளியே வரும்.

உங்களுக்குத் தெரியாததல்ல. ஆனாலும் சொல்கிறேன். மீஸா சட்டத்தில் பல திமுக ஆட்களை இந்திரா உள்ளே அள்ளிப் போட்டார். சுடலையையும் அவர் விட்டு வைக்கவில்லை.சிறையில் நல்ல சாப்பாடு போட்டு, சுடலையை உண்டு இல்லை என்று ஆக்கிவிட்டு அனுப்பியிருந்தார்கள். ஆனால் அதன் பிறகு எம்ஜிஆரை வீழ்த்த இந்திராவோடு கருணாநிதி கூட்டுச் சேரவில்லையா? கை கோக்கவில்லையா? அதுதானே அரசியல். தேர்தல் கூட்டு களநிலவரத்தை வைத்து மாறும். அதிமுக வும் அடுத்த கரையில் தூண்டில் போட்டு காத்து நிற்கிறது. தனித்தா? கூட்டா? எதுவானாலும் பாதிப்பு திமுகவுக்கே.

இந்த இடைவெளியில் அண்ணன் கடலில் படகில் போய் ஏதோ செய்யப் போகிறாராமே. அதைப் பாருங்கள். கருர் சோகத்தில் இருந்து மீள அண்ணனின் நகைச்சுவையும் தேவைதானே?

விஜையால் எப்படி பார்த்தாலும் பாதிப்பு திமுகவுக்கே என்பதில் உடன்பாடுதான் ஐயா.

ஆனால் எடப்பாடி, விஜை எம் ஜி ஆர் போல அல்ல. அதே போல் அன்றைய காங்கிரஸ் போல் லோக்சபா தேர்தலில் 50:50 விட்டு தந்தால் சட்டசபையை முழுவதுமாக மாநில கட்சிக்கு தாரைவார்க்கும் கட்சி அல்ல இன்றைய பிஜேபி.

இப்போ இருக்கும் நிலையில் அதிமுக+விஜை+பிஜேபி ஒரே அணியில் வரின் 2026 இல் தமிழ் நாட்டில் பிஜேபி அமைச்சர்கள் இருப்பார்கள். அப்போ அரசின் கொள்கை முதல் செயல்திட்டம் வரை கொஞ்சம், கொஞ்சமாக காவி மயமாகும்.

இது வரலாற்றில் முதன் முறை நிகழும் நிகழ்வாக இருக்கும்.

அடுத்தடுத்த தேர்தல்களில் அதிமுக, விஜையை முடக்கி தமிழ் நாட்டில் பிஜேபி vs திமுக என்பதே அரசியல் என்ற நிலை உருவாகி விடும்.

இதைதான் மஹாரஸ்டிராவில் சிவசேனா, பீஹாரில் நிதீஸ், பீஜேபி கூட்டில் அனுபவித்தனர்.

மேற்கு வங்கத்தில் கயூனிஸ்டை, ஒரிசாவில் பட்நாயக்கை தள்ளி விட்டு (கூட்டு வைக்காமல்) இரெண்டாம் பெரிய கட்சியாக இப்படித்தான் பாஜக வளர்ந்தது.

இப்படி ஒரு நிலை வருவதை விரைவு படுத்துவதுதான் விஜையின் வேலை என்றால் - அவர் வராமலே இருந்திருக்கலாம் என்பதே என் நிலைப்பாடு.

பிஜேபி புகுந்து விடும் என்பது சீமான் பொய்யாக சொல்வது போல் வெறும் வெத்து மிரட்டல் அல்ல.

அது ஒரு நியாயமான பயம்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

கடலுக்கு ஆய்வு செய்ய சென்ற போது சீமான் றிலக்ஸ்சாக மீன் பிடிக்கின்றார். அவரது இந்திய கடற் பரப்பில் தான் மீன் பிடிக்கின்றார். இதனால் இலங்கை தமிழ் மீனவர்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை. இதையே தமிழ்நாட்டு மீனவர்களும் பின்பற்ற வேண்டும் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, Kavi arunasalam said:

இவர் எப்பொழுதும் நழுவுகிற மீன். இவருடைய ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக் காசு தமிழர் கொடுக்க அவர்களுக்கு “இதோ வருகிறேன் அதோ வருகிறேன் “என்று சொல்லி கடைசியில் தமிழருக்கு ஏதும் செய்யாமல் போனவர். ஆனாலும் சீமான் சமீபத்தில் இவரிடமும் போய் வந்து வாயாறப் புகழ்ந்து தள்ளியிருந்தார்.

36 minutes ago, goshan_che said:

உங்களுக்கு விசயம் தெரியாதே…

அஜித் அரசியலுக்கு வராமைக்கும், அப்பத்துக்கு வச்ச மா புளித்தமைக்கும்…

ஆறு மணிக்கு முன் வானம் வெளிக்கவும் கூட….

சீமான் தான் காரணமாக🤣.

பிகு

ஏனையோரை போல ரஜனியிம் சீமானின் காட்டு கத்தலை லெட்ப்ட் ஹாண்டில்தான் டீல் பண்ணினா.

ரஜனி அரசியலுக்கு வராது போக முக்கிய காரணம்கள்

  1. தன் மீதே நம்பிக்கை இன்மை / அல்லது சரியான சுய மதிப்பீடு

  2. தொடை நடுங்கிதனம்

  3. சினிமா பணம், புகழை ரிஸ்க் எடுக்க விரும்பாமை

  4. மகள்கள் அட்வைஸ்

  5. கொவிட்

கொவிட் வந்து மக்களை சந்திப்பது உயிராபத்தாக முடியலாம் என்ற அச்சம் ஏற்பட்டிராவிடின் வந்தே இருப்பார். வந்து விட்டேன் என்று அறிவிப்பே விட்டார்.

இந்த பனம் பழம் வீழ்ந்ததில் இந்த அண்டங்காக்காவுக்கு ஒரு சம்பந்தமுமில்லை.

ஏதோ உங்கட சந்தோசத்துக்கு எதை வேண்டுமானாலும் சொல்லீட்டு போங்க...நானேன் குறுக்க நிக்கப்போறன்...😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, Kavi arunasalam said:

இவர் எப்பொழுதும் நழுவுகிற மீன். இவருடைய ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக் காசு தமிழர் கொடுக்க அவர்களுக்கு “இதோ வருகிறேன் அதோ வருகிறேன் “என்று சொல்லி கடைசியில் தமிழருக்கு ஏதும் செய்யாமல் போனவர். ஆனாலும் சீமான் சமீபத்தில் இவரிடமும் போய் வந்து வாயாறப் புகழ்ந்து தள்ளியிருந்தார்.

நீங்களும் சினிமாகாரர்களை நம்புகின்றீர்களா?☹️

விஜய் ரசிகர்களைப்போல் நீங்களும் சளைத்தவர் இல்லை என நான் நினைக்கிறேன்.🤣

சீமான் உண்மையை பேசுகின்றவர்.எதிரியாக இருந்தாலும் திறமையை பாராட்டுகின்றவர்.அந்த வகையில் சீமான் ரஜனியை புகழ்ந்து தள்ளியதில் ஆச்சரியம் ஏதுமில்லை. சினிமா என்ற முறையில் ரஜனி பாராட்டப்பட வேண்டியவரே.தன் சுயநல அரசியலுக்காக தன்னை தேடி வந்த மக்களையோ, நம்பியிருந்த இனத்தையோ பலிக்கடாவாக்கியவர் இல்லை இந்த சீமான்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த. பாண்டா. என்பவர். நாலு ஐந்து. மாநிலங்களில். பொறுப்பளாராக இருந்து. ஆட்சி மாற்றத்தை. எற்படுத்தியுள்ளார். அதாவது. பாரதிய. ஐனத. கட்சியை. ஆட்சியில். அமர்த்தினார். எனவே. கூட்டணி எப்படியுமிருக்கலாம். பாரதிய. ஐனத. கட்சி. தமிழ்நாட்டில். 2026. இல் ஆட்சி அமைக்கும். இனி ஓருபோதும். திமுக. தமிழ்நாட்டை ஆளாது. நாம்தமிழர். சீமான். 3%. எடுப்பார். அவர் ஒருபோதும்். தமிழ்நாட்டை. ஆளப்போவதில்லை. மோடி. இந்தியாவுக்கு. சிறந்த. பிரதமர். இதுவரை. இப்படியான. பிதமர். இந்தியாவில்்ஆட்சி செய்யவில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, விளங்க நினைப்பவன் said:

கடலுக்கு ஆய்வு செய்ய சென்ற போது சீமான் றிலக்ஸ்சாக மீன் பிடிக்கின்றார். அவரது இந்திய கடற் பரப்பில் தான் மீன் பிடிக்கின்றார். இதனால் இலங்கை தமிழ் மீனவர்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை. இதையே தமிழ்நாட்டு மீனவர்களும் பின்பற்ற வேண்டும் .

அப்படி இல்லை, அண்ணன் நெய்தல் படை சூழ கடலில் இறங்கியதும் ஒட்டு மொத்த இலங்கை நேவியும் முகாமுக்குள் சுருண்டு கொண்டன.

நீங்கள் உங்கள் சந்தோசத்துக்கு எதை வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால் உண்மை இதுதான்🤣

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

நீங்களும் சினிமாகாரர்களை நம்புகின்றீர்களா?☹️

என்ன சொல்லவருகிறீர்கள் குமாரசாமி? சீமான் சினிமாக்காரர் இல்லை என்கிறீர்களா?

அரசியலுக்கு எவரும் வரலாம். நான் யாருடைய ரசிகனும் இல்லை. விபத்து நடந்திருக்கிறது. கவலைதான். இங்கே யாரை நோவது என்பதே கேள்வியாக இருக்கிறது. முடிவு வரட்டும். நானும் நாங்களும் முட்டி மோதுவதால் என்ன பயன்? எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் எம்ஜிஆர் போல வேடம் போட்டு “சாப்பிட்டீங்களா?” என்று கேட்டுக் கொண்டு வந்த சீமானின் நடிப்பு அபாரம். நீங்கள் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

Edited by Kavi arunasalam
எழுத்துப் பிழை திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, goshan_che said:

அப்படி இல்லை, அண்ணன் நெய்தல் படை சூழ கடலில் இறங்கியதும் ஒட்டு மொத்த இலங்கை நேவியும் முகாமுக்குள் சுருண்டு கொண்டன.

நீங்கள் உங்கள் சந்தோசத்துக்கு எதை வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால் உண்மை இதுதான்🤣

அவர் பனை மரம் ஏறி கள்ளு கொண்டுவந்து குடிப்பதை ஊக்குவிப்பதை பார்த்து சந்தோசபட தான் முடியுமா ☹️உணவாக மீனை தனது நாட்டு கடற்பரப்பில் பிடிப்பதை பார்த்து சந்தோசபட்டேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, Kavi arunasalam said:

என்ன சொல்லவருகிறீர்கள் குமாரசாமி? சீமான் சினிமாக்காரர் இல்லை என்கிறீர்களா?

சீமான் அரசியல் மேடைகளில் சினிமா புகழை பயன்படுத்துவதில்லை.😎

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Kavi arunasalam said:

விபத்து நடந்திருக்கிறது. கவலைதான். இங்கே யாரை நோவது என்பதே கேள்வியாக இருக்கிறது.

12 மணிக்கு வருவதாக அறிவித்து கூட்டத்தை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக வேண்டுமென்றே திட்டமிட்டு தாமதபடுத்தி வெய்யில் வெப்பம் தாகம் பசியில் மக்களை காக்க வைத்து வந்த விஜய் நோகபட வேண்டியவர் இல்லையா

சீமான் கேட்கின்றார்

இப்போ நான் ஒரு நிகழ்ச்சிக்கு வந்து இருக்கிறேன். நான் வரவில்லை என்றால் இந்த நிகழ்ச்சி நடக்குமா? நான் வரவில்லை என்றால் அந்த நெரிசல் ஏற்படுமா? நான் வரவில்லை என்றால் அந்த மரணங்கள் நிகழுமா ? என்னுடைய வருகையால் நிகழ்ந்த மரணம் தான் அது .அப்படியானால் மரணங்களுக்கு முதல் காரணம் யார்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 6/10/2025 at 20:21, Kavi arunasalam said:

கவலைப்படாதே சகோதரா.

புலி ஒன்று பதுங்கியிருக்கிறது. அதனால் எப்போதும் பதுங்கியிருக்க முடியாது. வெளியே வரும்.

உங்களுக்குத் தெரியாததல்ல. ஆனாலும் சொல்கிறேன். மீஸா சட்டத்தில் பல திமுக ஆட்களை இந்திரா உள்ளே அள்ளிப் போட்டார். சுடலையையும் அவர் விட்டு வைக்கவில்லை.சிறையில் நல்ல சாப்பாடு போட்டு, சுடலையை உண்டு இல்லை என்று ஆக்கிவிட்டு அனுப்பியிருந்தார்கள். ஆனால் அதன் பிறகு எம்ஜிஆரை வீழ்த்த இந்திராவோடு கருணாநிதி கூட்டுச் சேரவில்லையா? கை கோக்கவில்லையா? அதுதானே அரசியல். தேர்தல் கூட்டு களநிலவரத்தை வைத்து மாறும். அதிமுக வும் அடுத்த கரையில் தூண்டில் போட்டு காத்து நிற்கிறது. தனித்தா? கூட்டா? எதுவானாலும் பாதிப்பு திமுகவுக்கே.

இந்த இடைவெளியில் அண்ணன் கடலில் படகில் போய் ஏதோ செய்யப் போகிறாராமே. அதைப் பாருங்கள். கருர் சோகத்தில் இருந்து மீள அண்ணனின் நகைச்சுவையும் தேவைதானே?

ஐயா,

கடந்த இரு நாட்களாக நீங்கள் சொன்னதை மனதில் அசை போட்டேன்.

வரும் செய்திகள், அதிமுக+பாஜக+தவெக+பாமக+தேமுதிக+கொசுறுகள் கூட்டணி அமையும் என்றே சொல்வதாகபடுகிறது.

இப்படி அமையின் திமுக ஒரே முதல்வரை அடுத்தடுத்து கதிரையில் அமர்த்தியது இல்லை என்ற வாக்கு பலிக்கும்.

திமுகவை அகற்றல் எனும் நன்மையோடு பார்க்கும் போது…பாஜகவுக்கு 20 சீட்டு என மட்டுப்படுத்த முடிந்தால் - இந்த கூட்டணி வெல்வதும் ஆபத்தில்லையோ என எண்ண தோன்றுகிறது.

ஆனால் தேர்தலின் பின் ஆட்சியில் பங்கு என்பதுதான் உதைக்கிறது.

தேர்தலுக்கு பின் பாஜக ஆட்சியை, கட்சியை கபளீகரம் செய்வதை தடுக்கும் இயலுமை எடப்பாடிக்கு இல்லை என்பதே என் கணிப்பு.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இதனால். உங்களுக்கு. ஏதாவது. நஸ்டம். உண்டா. ? தமிழ்நாட்டிலும். மோடி ஆட்சி. வரட்டும். நான். எவருக்கும். ஆதரவு. இல்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

ஐயா,

கடந்த இரு நாட்களாக நீங்கள் சொன்னதை மனதில் அசை போட்டேன்.

வரும் செய்திகள், அதிமுக+பாஜக+தவெக+பாமக+தேமுதிக+கொசுறுகள் கூட்டணி அமையும் என்றே சொல்வதாகபடுகிறது.

இப்படி அமையின் திமுக ஒரே முதல்வரை அடுத்தடுத்து கதிரையில் அமர்த்தியது இல்லை என்ற வாக்கு பலிக்கும்.

திமுகவை அகற்றல் எனும் நன்மையோடு பார்க்கும் போது…பாஜகவுக்கு 20 சீட்டு என மட்டுப்படுத்த முடிந்தால் - இந்த கூட்டணி வெல்வதும் ஆபத்தில்லையோ என எண்ண தோன்றுகிறது.

ஆனால் தேர்தலின் பின் ஆட்சியில் பங்கு என்பதுதான் உதைக்கிறது.

தேர்தலுக்கு பின் பாஜக ஆட்சியை, கட்சியை கபளீகரம் செய்வதை தடுக்கும் இயலுமை எடப்பாடிக்கு இல்லை என்பதே என் கணிப்பு.

24 minutes ago, Kandiah57 said:
  1 hour ago, goshan_che said:

ஐயா,

எனக்கு போஸ்டுக்கு 200 ரூபாய் நட்டம்.

இப்போ சீமான்+திமுக ராசி ஆகிவிட்டதால் சீமானை திட்டி போடும் பதிவுகளுக்கு வெறும் 20 ரூபாய்தான் தருகிறார்கள்.

இப்படியே போனால் நானும் திரள்நிதியில் குடும்பம் நடத்தும் அவல நிலைக்கு தள்ளப்படலாம்.

பிகு

தமிழ் நாட்டில் எது நடப்பினும் என் தனிவாழ்வில் ஒரு உரோமம் வீழ்ந்த பாதிப்பும் கூட இல்லை.

இலங்கை அரசியல் கூட, வெளிநாட்டில் வாழுவோரின் நில உரிமையில் கைவைக்காதவர்ரை பாதிப்பு குச் நஹி.

ஆனால்…தமிழ் நாட்டில் சாதி அடிப்படையிலான சங்கிகள் வளர விடக்கூடாது என்பது, தமிழ் நாட்டின் நண்பனாக எனது நிலைப்பாடு.

பெரியார் அல்ல…அதற்கு முன் வள்ளார்….அதற்கும் முன் 9ம் நூற்றாண்டில் சிவவாக்கியர், இராமானுஜர் காலம் தொட்டு - சங்கிதுவத்தை எதிர்த்த, எதிர்கின்ற மண் தமிழ் நாடு. அதன் மீதும் காவி கறை வீழ்வது அதன் சகஜ வாழ்வுக்கு நல்லதல்ல.

தமிழ் நாடு தவிர் இதர இந்தியா சங்கி மயமாகி, இந்து-முஸ்லீம் என வெட்டுப்பட்டால் எனக்கு அது பற்றி எந்த அக்கறையும் இல்லை.

சொல்லப்போனால் வட இந்தியாவில் இப்படி ஒரு இரெண்டாம் பாகிஸ்தான் உருவாகி இந்தியா சிதறி - அதன் மூலம் தென்னிந்தியா, அதிலும் தமிழ்நாடு தனியாக வந்து விடாதா என்ற ஒரு நப்பாசையும் எனக்கு உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, goshan_che said:

வரும் செய்திகள், அதிமுக+பாஜக+தவெக+பாமக+தேமுதிக+கொசுறுகள் கூட்டணி அமையும் என்றே சொல்வதாகபடுகிறது.

கோசான் ,

1967க்குப் பிறகு தேசியக் கட்சிகள் தமிழ்நாட்டின் ஆட்சியை பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. தற்போது 'தமிழ்நாடு வெற்றிக் கழகம்' (தவெக) ‘ஆட்சியில் பங்குஎன்று  முன்வத்திருப்பது கண்டிப்பாக தேசியக் கட்சிகளை நிச்சயம் கவர்ந்திருக்கும்ஆட்சியில் பங்கு என்றாலும் கடிவாளம் தவெக விடம்தான் இருக்கும்.

எல்லோருமே பாஜக, அதிமுக ஆகிய இரு கட்சிகளையே கவனிக்கின்ற நேரத்தில், காங்கிரஸ் சத்தமின்றி தவெகவுடன் கூட்டணி அமைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. விஜய்க்குச் சேரும் கூட்டத்தைப் பார்த்து திமுக திகைத்திருக்கிறது. அதேநேரம் அவருக்குச் சேரும் கூட்டம் மற்றக் கட்சிகளை அவர்பால் இழுத்துச் செல்லலாம்.

தை பிறக்கட்டும். காட்சிகள் தெரியும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kavi arunasalam said:

கோசான் ,

1967க்குப் பிறகு தேசியக் கட்சிகள் தமிழ்நாட்டின் ஆட்சியை பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. தற்போது 'தமிழ்நாடு வெற்றிக் கழகம்' (தவெக) ‘ஆட்சியில் பங்குஎன்று  முன்வத்திருப்பது கண்டிப்பாக தேசியக் கட்சிகளை நிச்சயம் கவர்ந்திருக்கும்ஆட்சியில் பங்கு என்றாலும் கடிவாளம் தவெக விடம்தான் இருக்கும்.

எல்லோருமே பாஜக, அதிமுக ஆகிய இரு கட்சிகளையே கவனிக்கின்ற நேரத்தில், காங்கிரஸ் சத்தமின்றி தவெகவுடன் கூட்டணி அமைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. விஜய்க்குச் சேரும் கூட்டத்தைப் பார்த்து திமுக திகைத்திருக்கிறது. அதேநேரம் அவருக்குச் சேரும் கூட்டம் மற்றக் கட்சிகளை அவர்பால் இழுத்துச் செல்லலாம்.

தை பிறக்கட்டும். காட்சிகள் தெரியும்

தை பிறந்தால் வழி பிறக்கும் என்கிறீர்கள்.

காத்திருப்போம்.

  1. பாஜக தமிழ் நாட்டில் ஆட்சி அதிகாரத்தில் இல்லை.

  2. பாஜகவுக்கு 20 சீட்டுக்கு கீழே ஒதுக்கல்.

  3. திமுக ஆட்சியை இழத்தல்

இவைதான் எனது முன்னுரிமைகள் (priorities). இதே வரிசையில்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.