Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஏராளன் said:

அதே போல் நடிகை தரப்பிலும் மன்னிப்பு கோரப்பட்டது. சீமான் மற்றும் விஜயலட்சுமியின் பரஸ்பர மன்னிப்பை ஏற்று வழக்குகள் முடித்து

நடிகை தரப்பில் என்ன மாதிரியான மன்னிப்புக் கேட்கப்பட்டது?சுPமான் நடிகையை விபச்சாரி என்று பேசியத்காக மன்னிப்புக் கோரினார். ஆனால்பாதிக்கப்பட்டதாக வழக்கப்போட்டு வாபஸ்வாங்கி வழக்குப் போட்டு வாபஸ்வாங்கி விளையாடும் நடிகை எதற்காக மன்னிப்புக் கோரினார்.?தான் பொய்ப்புகார் அளித்ததாகவா?

  • Replies 78
  • Views 3.2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • ஈழப்பிரியன்
    ஈழப்பிரியன்

    ஒவ்வொரு தேர்தல்கள் வரும்போதும் எங்காவது இருக்கும் இந்த அம்மாவை இழுத்துவிட்ட திருத்த முடியாத கழுதைகளுக்கு மாபெரும் தோல்வி.

  • Kavi arunasalam
    Kavi arunasalam

  • Kadancha
    Kadancha

    இதில் நடிகையே பொய் சொல்லி உள்ளதாக வருகிறது. சீமானின் 'வார்த்தை' செயல்கள் - அதாவது அவதூறு. - அதுக்கு தானே மன்னிப்பு கேட்க்கும் படி சொன்னது நீதி மன்றம். நடிகை சீமானுடன் (உடல்) உறவு வைத்தது என்று புகார்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

என்ரை கவலை என்னெண்டால்......

இவ்வளவுகாலமும் சீமானை வறுத்தெடுக்க விஜயலட்சுமிக்கு நீதி கேக்கிறம் எண்டு போராடிச்சினம்.கதை முடிச்சாச்சு.சும்மா வெறும் வாயை வைச்சு மென்றவர்கள் இனி என்ன செய்யப்போயினம்? அதோட தங்கள் அரசியல் லாபத்திற்காக அப்பப்ப விஜயலச்சுமியை களம் இறக்கி கூத்து காட்டினவையள் இனி என்ன செய்யப்போயினம்.😂

அதைவிட இஞ்சையொரு தம்பி சீமான் கடை எண்ட திரியை திறந்து நல்ல சனத்தை கூட்டி சேக்கஸ் காட்டுவார். இனி என்ன செய்யப்போறார்.🤣

இனிமேல் சாகும் வரை “விஜய இலட்சுமியிடம் மண்டியிட்ட அண்ணன் சீமான்” என்பதை மேடைதோறும் அவர்கள் சொல்லுவார்கள்.

சர்க்கஸ் - யாழ்களத்தில் இருக்கும் சிங்கங்களை குட்டி ஜட்டியோடு டான்ஸ் ஆடவிடுவதில் மாற்றம் வராது. கவலை வேண்டாம்🤣.

7 hours ago, விசுகு said:

நான் காறித்துப்பியது அவருக்கு கேட்டிருக்கும்.....

அவருக்கு கொடுத்த பதில் உங்களுக்கும்தான்.

ஓங்காலமே எடுத்தாலும் - எனது மன்னிப்பு கேட்பதை பற்றிய ஒப்பீட்டுக்கு உங்கள் எவரிடமும் பதில் இல்லை என்பதே உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்

புதிய தலைமுறை..இல்லை+

புதிய தலைவலிக்கான பதிவு.

சீமானுக்கானதல்ல….

------------------------------

எங்களை மொடக்கி விட்டார்கள், முடக்கி விட்டார்கள் என்று புலம்பிக் கொண்டிருந்த புதிய தலைமுறைக்கு ஆதரவாக, திமுக அரசுக்கு எதிராக முதல் குரல் சீமானிடம் இருந்துதான் வந்தது. சமூக வலைதளங்களில் அதிகம் எழுதியது தமிழ்த் தேசியர்கள்தான்.

அந்த புதிய தலைமுறை, திமுக அரசிடம் நல்ல பெயர் வாங்கி, அரசு கேபிளில் நீக்கப்பட்ட சேனலை பழையபடி கொண்டுவந்து விட ஏதாவது சமரசம் செய்வது நியாயமே.

அதற்காக ஒரு உச்ச நீதிமன்ற தீர்ப்பையே திரித்து, அதை சீமானுக்கு எதிரான பொய் செய்தியாக்கி, அதன் மூலம் ஸ்டாலின் அவர்களை குஷி படுத்தி விடலாம் என்ற அரசியல் இருக்கே அதுதான் கேவலமான ஒன்று.

நடிகை விஜயலட்சுமி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் இறுதியாக, ’சீமான் மன்னிப்பு கேட்டார். வழக்கு முடித்து வைக்கப்பட்டது’ என்றே செய்தி வெளியிட்டது புதிய தலைவலி. தவிர நடிகை நிவராரணத் தொகை கேட்பதாகவும் கூறியது. பார்ப்பவர்களுக்கு என்ன தோன்றும்.

சீமான் பக்கம்தான் தவறு. இதோ மன்னிப்பு கேட்டுவிட்டு சரணடைந்து விட்டார். அதனால் அந்த நடிகை, வழக்கை திரும்பப் பெறுவதாக சொன்னார். அதனால் உச்ச நீதிமன்றம் இப்படியாக முடித்து வைத்து விட்டது என்றுதானே தோன்றும்?.

ஆனால் உண்மை என்ன?

நடிகை விஜயலட்சுமி வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் மீது, நம்பிக்கை மோசடி செய்தார் என புகார் அளித்தார். ஆதாரமற்ற குற்றச்சாட்டு-தள்ளுபடி செய்ய வேண்டும் என சீமான்தான் உயர் நீதிமன்றத்தை நாடினார்.

உயர்நீதிமன்றம் எட்டு வார காலத்தில் விசாரித்து அறிக்கை கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டார் சீமான்.

வழக்கு விசாரணையில் போது,

‘சீமானிடம் முன்னாள் நடிகை தான் நடந்து கொண்ட விதத்திற்காக மன்னிப்பு கேட்டால் ..சீமானும் அவர் பொதுவெளியில் பேசிய வார்த்தைக்காக மன்னிப்பு கேட்க சொல்கிறோம் என்று பதிவு செய்திருந்தார்கள். அதை அடுத்துதான்,

இரண்டு தரப்பையுமே ஒருவருக்கொருவர் மன்னிப்பு கேட்டால் முடித்து வைப்பதாக கூறியது உச்ச நீதிமன்றம்.(இந்த மன்னிப்பும் கூட ஒருவருக்கொருவர் அநாகரீகமாக பேசி-பேட்டி கொடுத்தற்காகதான்) தொடர்ந்து தன்னால் இந்த வழக்கை நடத்த முடியாது என நடிகை தரப்பிலும் கூறப்பட்டிருந்தது.

அதையொட்டி இரண்டு தரப்பு ஒருவருக்கொருவர் மன்னிப்பு அபிடவிட்டில் கொடுத்திருந்தார்கள். அதை ஒட்டியே இந்த பிரதான குற்றச்சாட்டு வழக்கில் ’ போதிய முகாந்திரம் இல்லை’ என தள்ளுபடி செய்து முடித்து வைத்ததுள்ளது உச்ச நீதிமன்றம்.

இதில் கூடுதலாக எனக்கு பெற்றோர் இல்லை. உடல் நலிவுற்றிருக்கும் சகோதிரியை கவனித்து வருகிறேன். அதனால் நிவாரணத் தொகையை (கருணை அடிப்படையில்) பெற்றுத் தர வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளார் நடிகை. அவ்வளவுதான். அதையும் நீதிமன்றம் ஏற்கவில்லை.

ஆனால் இந்த திமுக ஆதரவு பெற வேண்டிய ஊடகங்கள், சீமானை மட்டுமே மன்னிப்பு கேட்கச் சொன்னதாக தொடர் செய்தியை போட்டு வருவது-எந்த வகையில் ஊடக தர்மம் ஆகும்?

அதன் ஆசிரியர்கள் என்ன நீதிமன்ற உத்தரவுகளை படிக்கத் தொரியாதவர்களா என்ன? பிறகு ஏன் இப்படி செய்கிறார்கள்….என்றால்…

அப்படித்தான்.

அவர்கள் அப்படித்தான்.

புதிய தலைமுறை-புதிய தலைவலியாகி மாறிக் கொண்டிருக்கின்றது…பாவம்.

பா.ஏகலைவன்.

08.10.2025

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Paanch said:

இருந்தால் சாட்சி ஏதாவது வந்திருக்கும்

ஐயா யாரும் பாலியல் விசயம் செய்யும் போது சாட்சி ஏதும் வைத்து கொள்வதில்லை. ஆனால் இந்த வழக்கில் சில பல சாட்டிசிகள் காலத்துக்கு காலம் வந்துள்ளன, வந்துள்ளனர்.

ஆனால் சீமான் சாட்டிசியே இல்லாதா வெறும் புகாருக்கா டெல்லி வரை போய் மன்னிப்பு கேட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்

திராவிடியா ஊடகங்களின் யாழ்கள நிருபர்கள் அந்த ஊடகங்களின் செய்தியை அப்படியே காவித்திரிவது வியப்புக்குரியது அல்ல.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Paanch said:

சீமான் என்றாலே ஒருவருக்கு வாந்தி வருகிறது,

சாக்கடை என்றாலே எனக்கு அப்படித்தான் ஐயா 🤣

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, goshan_che said:

ஆனால் மன்னிப்பு என்ற concept ஒன்றுதான்.

வாழைப்பழத்தை களவெடுத்துவிட்டு மன்னிப்பு கோரியவன் மஹாத்மா…

வைரநகையை களவெடுத்துவிட்டு மன்னிப்பு கோரியவன் துஸ்டாத்மா என்பதில்லையே?

மகிந்த மற்றும் சோனியாவின் பங்களிப்புடன் இனவழிப்பு நடந்த முள்ளிவாய்க்காலையும் சீமானின் பாலியல் ரீதியிலான தாக்குதலையும்

ஒன்றாக பார்க்க முடியாது என்பதே எனது கருத்து

அதற்கான பதிலே

இரண்டு குற்றங்களையம் ஒரே தண்டனைக்கு உட்படுத்த நினைப்பது தவறு என்பது

மற்றும்படி மன்னிப்பு என்பது மனித பண்பு தான்

அநீதி இழைக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு இழப்பதற்கு ஒன்றுமே இல்லை என்ற நிலைக்கு ஒருவனைத் தள்ளி விட்டு அவனிடம் மன்னிப்புக் கேட்பவன் உலகில் இருந்தாலும் அந்த மன்னிப்பை யாருமே ஏற்றுக் கொள்ளப்போவதில்லை

  • கருத்துக்கள உறவுகள்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, வாத்தியார் said:

என்னப்பா இது காம்ப்ஸ் செய்த குற்றமும் பின்னணியும் எப்படியானது என்பதும் சீமான் எந்த அளவில் குற்றவாளி என்பதும் குழந்தைப் பிள்ளைக்கும் தெரியும்

சிறைத் தண்டனை கிடைக்கும் வழக்குகளுக்கும்

குடும்ப நல வழக்குகளுக்கும் வித்தியாசம் தெரியாமல் தம்பி ஜஸ்டின்

அமெரிக்கா வழக்கை உதாரணம் காட்டுகின்றார் .

இங்கே உள்ள தம்பிகளை பற்றி எனக்கு அதிகம் கவலை இல்லை.

முன்பே சொன்னது போல் எல்லாருக்கும் தலையால் சிந்திப்பது எப்போதும் இயலுவதில்லை.

ஆனால் நீங்கள்? சீமானபிமானம் உங்கள் கண்ணை கூடவா மறைக்கிறது.

மன்னிப்பு என்றால் அது சகல குற்றங்களுக்கும் ஒன்றேதான்.

உண்மையில் மனம் திருந்தினால், மகிந்தவும், சீமானும் மன்னிப்புக்கு தகுந்தோரே.

ஆனால் தண்டனையில் இருந்து தப்ப கேட்கும் மன்னிப்பு அது எந்த குற்றத்துக்கு கேட்டாலும் - போக்கிரித்தனமே.

5 hours ago, விசுகு said:

இப்ப இங்கே சிலர் தரையில் கிடந்து தலையில் அடித்து அழுவது சீமான் என்ற நபர் மீது இனி புழுதி வார வழியில்லை என்று தானே.

அண்ணன் ஒரு அட்சயபாத்திரம்.

அந்த கவலை எவருக்கும் வேண்டாம்.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

ஆனால் நீங்கள்? சீமானபிமானம் உங்கள் கண்ணை கூடவா மறைக்கிறது.

மன்னிப்பு என்றால் அது சகல குற்றங்களுக்கும் ஒன்றேதான்.

உண்மையில் மனம் திருந்தினால், மகிந்தவும், சீமானும் மன்னிப்புக்கு தகுந்தோரே.

நீ களவெடுத்தியா?

ஆமா சார் .....

மன்னிச்சு விடுங்கள் சார்..... என்றபோதும்

ஓகே இவருக்கு கசையடி பத்து

என்ற ரீதியில்

விசாரணையும் தீர்ப்பும் இருந்தால் எப்படி ?

ஏன் களவெடுத்தாய் ?

அதை வைத்து என்ன செய்தாய் ?

அந்தக் களவுக்கு அந்த இடத்தை எப்படித் தேர்ந்தாய் ?

உனக்கு அங்கெ களவெடுக்கலாம் என்று எப்படித் தெரியும்?

எத்தனை நாள் காத்திருந்தாய்?

என்று இத்யாதிக் கேள்வி கேட்டால்......

அதற்கான விடைகளுடன்மன்னிப்பும் கோரினால்.....

கிடைக்கும் தண்டனை வித்தியாசமாக தானே இருக்கும்

ஆனால் கேட்கும் மன்னிப்பு என்பது ஒன்றுதான்

இதில் உணர்ந்து கேட்பது என்பது நடிப்பாக இருக்கும் பட்சத்தில்

நாம் ஒன்றுமே செய்ய முடியாது 😂

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, வாத்தியார் said:

இதில் உணர்ந்து கேட்பது என்பது நடிப்பாக இருக்கும் பட்சத்தில்

நாம் ஒன்றுமே செய்ய முடியாது 😂

ஒருவரால் கேட்கப்படும் மன்னிப்பு என்பது எழுத்து மூலம் கேட்கப்படும் பொது

அந்த எழுத்தில் பிரயோகிக்கப்படும் வார்த்தைகள் அந்த மனிதனுடைய மன்னிப்பின் தன்மையை வெளிக் கொண்டு வரும் இது எனது நிலைப்பாடு

ஆனால் வாய் மொழியால் கேட்கும் மன்னிப்பு என்பதன் ஆழம் அவர் முகத்தில் தெரியும் அப்போது அவரால் நடிக்க முடிந்தால் நாம் ஒன்றுமே செய்ய முடியாது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

ஒவ்வொரு தேர்தல்கள் வரும்போதும் எங்காவது இருக்கும் இந்த அம்மாவை இழுத்துவிட்ட திருத்த முடியாத கழுதைகளுக்கு மாபெரும் தோல்வி.

1 minute ago, வாத்தியார் said:

ஏன் களவெடுத்தாய் ?

அதை வைத்து என்ன செய்தாய் ?

அந்தக் களவுக்கு அந்த இடத்தை எப்படித் தேர்ந்தாய் ?

உனக்கு அங்கெ களவெடுக்கலாம் என்று எப்படித் தெரியும்?

எத்தனை நாள் காத்திருந்தாய்?

என்று இத்யாதிக் கேள்வி கேட்டால்......

இப்படி ஒரு நீதி விசாரணை என்றாவது விஜி அண்ணி வழக்கில் நடந்ததா?

கடைசியாக சென்னை உயர் நீதிமன்றம் இப்படியான விசாரணை ஒன்றை நடத்தும்படி பொலிசுக்கு அறுதியாக சொல்ல…

அண்ணன் டெல்லிக்கு போய், சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு தடை வாங்கினார்.

ஆகவே நடந்தது என்ன என்ற நீதி விசாரணை இல்லாமலே அடித்து நூத்த வழக்கு இது.

இன்னுமொரு விசயம்….

தண்டனைக்குத்தான்…நீங்கள் சொன்ன mitigating circumstances எல்லாம்…

நீங்கள் தண்டனையையும், மன்னிப்பையும் போட்டு குழப்பிகொள்கிறீர்கள்.

மன்னிப்புக்கு மூன்றே தகுதிகள் தான்…

செய்த குற்றத்தை ஏற்பதும்…அதற்கு மனம் வரும்துவதும்…

இனி செய்யேன் என உளமார உறுதி மொழிவதும்.

இவை மூன்றும் சீமானிடம்மில்லை.

அவரின் வக்கீல் மன்னிப்பு கேட்ட ஆவணத்தை கோர்டில் தாக்கல் செய்கிறார்….

அவரின் கொ.ப.செ தூஷண துரை அண்ணன் மன்னிப்பே கேட்கவில்லை என உருட்டுகிறார்🤣.

இதே போல் நாளைக்கு போர்குற்ற விசாரணையில் மகிந்தவும் மன்னிப்பு கேட்டாலும் - ஒரே வாதம்தான்.

இது மாண்பல்ல…கச போக்கிலித்தனம்.

Just now, வாத்தியார் said:

ஒருவரால் கேட்கப்படும் மன்னிப்பு என்பது எழுத்து மூலம் கேட்கப்படும் பொது

அந்த எழுத்தில் பிரயோகிக்கப்படும் வார்த்தைகள் அந்த மனிதனுடைய மன்னிப்பின் தன்மையை வெளிக் கொண்டு வரும் இது எனது நிலைப்பாடு

ஆனால் வாய் மொழியால் கேட்கும் மன்னிப்பு என்பதன் ஆழம் அவர் முகத்தில் தெரியும் அப்போது அவரால் நடிக்க முடிந்தால் நாம் ஒன்றுமே செய்ய முடியாது

அண்ணன் போன வாய்தாவின் பின் தான் மன்னிப்பு கேட்க மாட்டேன் என பேட்டியே கொடுத்தார்.

பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்த, பொய்யர் திருமகன் சீமான்.

தலைவரை chef ரேஞ்சுக்கு இறக்கி கதைகட்டிய பொய்யன்…

அவர் பேசினாலும், எழுதினாலும் அதில் குண்டு மணியளவு உண்மை இருந்தால் ஆச்சரியம்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kadancha said:

இதில் நடிகையே பொய் சொல்லி உள்ளதாக வருகிறது.

சீமானின் 'வார்த்தை' செயல்கள் - அதாவது அவதூறு. - அதுக்கு தானே மன்னிப்பு கேட்க்கும் படி சொன்னது நீதி மன்றம்.

நடிகை சீமானுடன் (உடல்) உறவு வைத்தது என்று புகார் சொல்லி, பின் விலத்தியது

(எப்படி நடந்த உடல் உறவு இல்லாமல் போகும்)

மற்றது கோயிலில் திருமணம் (இதுவே எல்லாரையும் ஏய்க்காட்டும் கதை).

(நடிகை புகாரை விலத்துவது என்பது, புகார் பகிடிக்கு சொன்னது என்று வரும், வருகிறது)

நடிகை தங்கி இருந்தது 'பெண்' என்ற போர்வைக்குள்ளும் (மேற்கிலும் இது பொதுவாக பாவிக்கப்படுவது) - அதை நீதி மன்றம் கிழித்து விட்டது.

சீமானின் நிலை ஏறி இருக்கிறது - எந்த விதமாக பார்த்தாலும்,

சீமான் செய்தது நடிகையின் குற்றச்சாட்டுக்கு செய்த மறுதாக்கம் - அதுக்கு தானே நீதி மன்ற உத்தரவு சீமான் மன்னிப்பு கேட்கும்படி

அப்போது என் சீமான் முதலில் மன்னிப்பு கேட்க வேண்டும், நடிகை சொல்வதை மறுக்கும் போது.

நடிகை சொல்வதை சீமான் மறுத்தது, சட்டத்துக்கு உண்மை என்று நடிகையே நிரூபித்துவிட்டார் .

சீமான் அவதூறு பேசியது கூட, அது இயற்கையா (மனித சுபாவம்) என்றல்லவா வருகிறது.

செய்யாத ஒரு விடயத்தை செய்தது என்று குற்றம் சுமத்தும் போது, எவருக்கும் ஆத்திரம் தலைக்கேறும் என்பது.

திராவிடியா ஊடகங்களுக்கு ஊடக அறம் கிடையாது. அவர்கள் விரும்பும் செய்தி கிடைக்காவிடில் அவர்கள் விரும்பியவாறு செய்திக்கு தலைப்பிடுவார்கள். தற்போதைய ஊடகங்களின் தலைப்பை வைத்து செய்தியைக்கணிப்பிட முடியாது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிகு

விஜி விடயம் ஓவர் என குசி படும் அண்ணன் மாருக்கு.

  1. இப்போ சீமான் English Premier League வீரர்கள் செய்வது போல DMK க்கு loan இல் விளையாடுகிறார். ஆகவே திமுக இதை கையில் எடுக்காது. ஆனால் தேவைப்படும் போது நிச்சயம் - “விஜியிடம் மண்டியிட்ட வீரன்” என்ற ரேஞ்சில் இதை பாவிப்பார்கள்.

  2. அண்ணன் வாயில் சனி 1000 வருட குத்தகையில் உள்ளது. இவர் விஜி அண்ணியை பற்றி ஒரு வார்த்தை விட்டால் போதும் - கோர்ட் உத்தரவை மீறினார், நீதிமன்ற அவமதிப்பு எண்டு கூட ஆகும்.

    கண்ணுங்களாthe circus is not over, it just moved to the next act 🤣.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, goshan_che said:

அவரின் கொ.ப.செ தூஷண துரை அண்ணன் மன்னிப்பே கேட்கவில்லை என உருட்டுகிறார்🤣.

இந்த வழக்கில் யாருமே தண்டனை பெரிதா சிறிதா என்ற நோக்கில் வாதாடவில்லை. எப்படியும் இது தண்டனைக்குரிய வழக்கு இல்லை என்று எல்லோருக்கும் ஏற்கனவே தெரிந்து தான் இருந்தது

அவதூறான வார்த்தைகளை பயன்படுத்தியதை யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை அதற்காக சிறை என்பதெல்லாம் ஒரு பரப்புரை

இங்கே சீமானபிமானம் எங்குமே இல்லை

நீதி நியாயம் வழக்கு என்று வந்து விட்டால் அண்ணன் தம்பி மாமன் மச்சான் சித்தப்பா பெரியப்பா ..........அவரா கொ.ப.செ துரை ? 😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, வாத்தியார் said:

இந்த வழக்கில் யாருமே தண்டனை பெரிதா சிறிதா என்ற நோக்கில் வாதாடவில்லை. எப்படியும் இது தண்டனைக்குரிய வழக்கு இல்லை என்று எல்லோருக்கும் ஏற்கனவே தெரிந்து தான் இருந்தது

அவதூறான வார்த்தைகளை பயன்படுத்தியதை யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை அதற்காக சிறை என்பதெல்லாம் ஒரு பரப்புரை

இங்கே சீமானபிமானம் எங்குமே இல்லை

நீதி நியாயம் வழக்கு என்று வந்து விட்டால் அண்ணன் தம்பி மாமன் மச்சான் சித்தப்பா பெரியப்பா ..........அவரா கொ.ப.செ துரை ? 😂

எது தண்டனைகுரிய வழக்கு இல்லை?

சீமான் மீது பதியபட்ட வழக்கு இந்திய கிரிமினல் கோவையின் சரத்துகளின் அடிப்படையிலானது.

பாலியல் வன்கொடுமை.

திருமணம் செய்வதான வாக்குறுதியில் உடலுறவு என்பன கடும் தண்டனைகுரிய கிரிமினல் குற்றங்கள்.

அதை ஒழுங்காக நீதி விசாரணை செய்யவிடாமல் ஊதி நூத்தது இந்திய மாமா சுப்ரீம் கோர்ட் (சீமானின் உள்ளடி வேலையால்).

வழக்கின் அடிப்படையே அப்படியே அமுக்கி விட்டு, அதன் பக்க விழைவான அவதூறுகள் பற்றி எழுதுகிறீர்கள் நீங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, goshan_che said:

ஆகவே நடந்தது என்ன என்ற நீதி விசாரணை இல்லாமலே அடித்து நூத்த வழக்கு இது.

தமிழ்த்தேசியத்தை வளரவே விடக்கூடாது என்று நினைப்பவர்களுக்கு அதுவும் தேர்தல் நேரத்தில் இந்தத் தீர்ப்பு பெரிய சம்மட்டி அடி . விஜையை வைத்து சீமானை முடக்கலாம் என்று நினைப்பவர்களுக்கும் இது சம்மட்டி அடி.சீமான் சரியான நேரத்தில் இந்த்த்தீர்ப்பை வாங்கியிருக்கிறார். சீமான் எதிரிகளுக்கு இது பெரிய அடி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அப்படியே ஆகினும்…

சீமான் இதுவரை விஜி பற்றி சொன்னது எல்லாம் வெறும் அவதூறுதான் இல்லையா?

அப்போ அவர் பேச்சை நம்பி விஜயலச்சுமியை யாழில் கீழ்தரமாக எழுதியோர் எப்போ மன்னிப்பு கேட்பார்கள்?

1 minute ago, புலவர் said:
  29 minutes ago, goshan_che said:

ஆகவே நடந்தது என்ன என்ற நீதி விசாரணை இல்லாமலே அடித்து நூத்த வழக்கு இது.

1 minute ago, புலவர் said:
  30 minutes ago, goshan_che said:

ஆகவே நடந்தது என்ன என்ற நீதி விசாரணை இல்லாமலே அடித்து நூத்த வழக்கு இது.

ஐயோ ஆமா….

தேர்தல் நேரம்…..

இந்த சம்மட்டி அடிய வச்சு…

அண்ணன் அப்படியே…

ஆட்சிய பிடிச்சுடுவாரு🤣

ஆனானப்பட்ட விஜையையே காத்த புடுங்கி கூப்பில உக்கார வச்சிடானுவோ…

இந்த பெட்டி வாங்கி பெரியசாமி எல்லாம் ஒரு ஆளே இல்லை திமுகவுக்கு.

முடிந்தால் இந்த முறையாவது டெபாசிட் தேறுமா எண்டு பார்க்கலாம்🤣.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, goshan_che said:

இனிமேல் சாகும் வரை “விஜய இலட்சுமியிடம் மண்டியிட்ட அண்ணன் சீமான்” என்பதை மேடைதோறும் அவர்கள் சொல்லுவார்க

அதைப்பற்றி உங்களுக்கு ஏன் தேவையில்லாத கவலை?

1 hour ago, goshan_che said:

சர்க்கஸ் - யாழ்களத்தில் இருக்கும் சிங்கங்களை குட்டி ஜட்டியோடு டான்ஸ் ஆடவிடுவதில் மாற்றம் வராது. கவலை வேண்டாம்🤣.

யாழ்களத்தில் இருக்கும் சிங்கங்கள் உண்மைகளை ஏற்பவர்கள்.ஜால்ரா போடுபவர்கள் அல்லர். தூசண விஜயலட்சுமிக்கு ஜால்ரா போடுபவர்கள் இல்லை.அவரது பொது வெளி காணொளி பேச்சுக்களை கேட்டு பார்த்த பின்னரும் அவருக்காக வக்காளத்து வாங்குபவர்கள் இங்கேயும் இருக்கின்றார்கள் என்பதை எண்ணி வெட்கி தலை குனிகின்றேன்.

1 hour ago, goshan_che said:

சாக்கடை என்றாலே எனக்கு அப்படித்தான் ஐயா 🤣

ஏன் உங்களுக்கு தமிழ்நாட்டு அரசியல்? இந்தியா சம்பந்தப்பட்டதெல்லாம் பிடிக்காதெல்லோ!

அது அவர்கள் அரசியல். வாருங்கள் ஈழ அரசியல் பேசி மகிழ்வோம்

19 minutes ago, goshan_che said:

அப்போ அவர் பேச்சை நம்பி விஜயலச்சுமியை யாழில் கீழ்தரமாக எழுதியோர் எப்போ மன்னிப்பு கேட்பார்கள்?

உங்கள் அன்பிற்குரிய விஜயலட்சுமி சீமானை கீழ்தரமாகவும்,தூசண வார்த்தைகளாலும் பேசியதை குறித்து உங்கள் கருத்து என்ன? அது பற்றி உங்கள் செல்லம் விஜயலச்சுமி மன்னிப்பு கேட்டாரா?

25 minutes ago, goshan_che said:

ஆனானப்பட்ட விஜையையே

என்ன சார்! உங்க மதிப்பீட்டிற்கு அளவே இல்லையா? அதென்ன ஆனானப்பட்ட? ரொம்ப ரொம்ப கொடுமைக்காரன் சார் நீங்க..😂

Edited by குமாரசாமி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விகடனில் இருந்து

சீமான் கொடுத்த மன்னிப்பு கடித வாசகம்…..

"எனது சொல், செயல்களால் நடிகைக்கு வலி, காயம் ஏற்பட்டிருந்தால் மன்னிப்பு கோருகிறேன்.

இனி நடிகை குறித்து அவதூறாகப் பேசமாட்டேன்" என்றும் சீமான் தெரிவித்திருக்கிறார்.

பிகு

இங்கே எங்கள் அண்ணன் அவதூறு பேச்சுக்கு மட்டுமே மன்னிப்பு கேட்டார் என உருட்டியவர்களுக்கு…..

மாண்பு மிகு சீமான் விஜயலட்சுமி மீதான தன்….

செயல்களுக்கும்….

மன்னிப்பு கேட்டுள்ளார்…..

செயல்களில் பாலியல் வன்கொடுமை, திருமணம் செய்வதாக சொல்லி ஏமாற்றி உடலுறவு வைத்ததும் அடங்கும் என்பது என் வாதம்.

Seeman: "இனி அவதூறாகப் பேச மாட்டேன்" - நடிகை வழக்கில் மன்னிப்பு கேட்ட சீமான்

https://www.vikatan.com/
No image preview

Seeman: "இனி அவதூறாகப் பேச மாட்டேன்" - நடிகை வழக்கில் மன்...

Edited by goshan_che

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

அதைப்பற்றி உங்களுக்கு ஏன் தேவையில்லாத கவலை?

எனக்கென்ன கவலை - ஒரே ஜாலிதான்🤣.

என்ன இனி சீமான் மேடையேறி மானம் பற்றி பேசினால் - யாரும் வாயால் சிரிக்க மாட்டார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

யாழ்களத்தில் இருக்கும் சிங்கங்கள் உண்மைகளை ஏற்பவர்கள்.ஜால்ரா போடுபவர்கள் அல்லர். தூசண விஜயலட்சுமிக்கு ஜால்ரா போடுபவர்கள் இல்லை.அவரது பொது வெளி காணொளி பேச்சுக்களை கேட்டு பார்த்த பின்னரும் அவருக்காக வக்காளத்து வாங்குபவர்கள் இங்கேயும் இருக்கின்றார்கள் என்பதை எண்ணி வெட்கி தலை குனிகின்றேன்.

போக்கிரி பட வடிவேலு மாரி கண்மூடித்தனமாக தலையையே அண்ட குடுக்கும் முரட்டு முட்டு சிங்கங்கள் எப்படி கூட்டமாக சேர்ந்து சாயி பஜன் செய்வார்கள் என்பதை களமறியும்🤣.

ஆனால் நான் இங்கே விஜி அண்ணிக்கு என்றும் வக்காளத்து வாங்கவில்லை.

மாறாக பலவருடமாக நான் முன்வைத்த ஒரே கோரிக்கை, அறுதியும் இறுதியுமாக சீமான் மீதான பாலியல் வல்லுறவு குற்றசாட்டு நியாயமான நீதி விசாரணைக்கு உட்படுத்த பட வேண்டும் என்பது மட்டுமே.

அதில் சீமான் விடுவிக்கபட்டிருந்தால் அவர் குற்றமற்றவர். ஆனால் இப்போ மொள்ளமாரித்தனம் பண்ணி, விசாரணையை அடித்து நூத்து உள்ளார்.

ஒரு மகனாக, ஒரு சகோதரனாக, ஒரு தந்தையாக ஒரு பாலியல்தொழிலாளியான பெண் வந்து நான் வல்லுறவுக்கு ஆளானேன் என சொன்னாலும் அதை தீரவிசாரிக்க வேண்டும் என்ற நிலை எடுப்பதே சரியாக இருக்கும்.

எங்கள் பக்கம் இதை மாண்பு என்பார்கள்.

9 hours ago, குமாரசாமி said:

ஏன் உங்களுக்கு தமிழ்நாட்டு அரசியல்? இந்தியா சம்பந்தப்பட்டதெல்லாம் பிடிக்காதெல்லோ!

சுண்ணாம்பைதான் பிடிக்காது, வெண்ணையை அல்ல.

9 hours ago, குமாரசாமி said:

உங்கள் அன்பிற்குரிய விஜயலட்சுமி சீமானை கீழ்தரமாகவும்,தூசண வார்த்தைகளாலும் பேசியதை குறித்து உங்கள் கருத்து என்ன? அது பற்றி உங்கள் செல்லம் விஜயலச்சுமி மன்னிப்பு கேட்டாரா?

வன்மையாக கண்டிக்கிறேன்.

விஜயலட்சுமி மட்டும் அல்ல யாழ் போன்ற பொதுவெளியில் கூட கீழ்தரமான வார்த்தை பிரயோகம் செய்பவர்களை அவர்கள் முகத்துக்கு நேராக கண்டித்துள்ளேன் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

9 hours ago, குமாரசாமி said:

அது அவர்கள் அரசியல். வாருங்கள் ஈழ அரசியல் பேசி மகிழ்வோம்

அதைத்தான் கெட்டித்தனமா கவிட்டு கொட்டி போட்டமே.

அங்கே மகிழ என்ன இருக்கிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

என்ன சார்! உங்க மதிப்பீட்டிற்கு அளவே இல்லையா? அதென்ன ஆனானப்பட்ட? ரொம்ப ரொம்ப கொடுமைக்காரன் சார் நீங்க..

இன்றும் தமிழகத்தின் எதிர்கட்சி தலைவர் மேடையில் ஒப்பனாக விஜைக்கு தூதுவிடுவதை காணலாம்.

விஜை மீது விமர்சனம் எனக்கும் உண்டு ஆனால் அவரின் அரசியல் செல்வாக்கு ஆனானப்பட்டதுதான்.

குறிப்பாக செல்லாகாசு சீமானுடன் ஒப்பிடும் போது.

  • கருத்துக்கள உறவுகள்

வழக்கை விசாரித்து முடித்து வையுங்கள் என்று வழக்கிட்டவரே சீமான் தான். எனவே தன்னிடம் எதை கேட்டாலும் செய்ய தயாராகவே வழக்கை தொடர்ந்து இருப்பார். போன தடவை விஜயலட்சுமி முரண்டு பிடித்து தொடர விரும்பினார். ஆனால் நீதிபதி அவருக்கு குட்டு வைத்து வழக்கை சமமாக்கினார். அடுத்த தடவை விஜயலட்சுமி இறங்கி வந்து நீதிபதியின் கோரிக்கையை ஏற்று சீமான் விரும்பியபடி கேட்டபடி இனி என்னை தொந்தரவு செய்ய கூடாது என்று வழக்கை முடித்து மூடிவிட்டார். இதை வைத்து கூத்தாட்டம் போட்ட அனைவருக்கும் வாயில் பூட்டு. இனி வெறும் வாயில் கூட சீமான் என்று வரக்கூடாது என்பது கொஞ்சம் கடினமாக தான் இருக்கும். ஆனால் கம்பி எண்ண முடியாது அல்லவா.

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, விசுகு said:

வழக்கை விசாரித்து முடித்து வையுங்கள் என்று வழக்கிட்டவரே சீமான் தான். எனவே தன்னிடம் எதை கேட்டாலும் செய்ய தயாராகவே வழக்கை தொடர்ந்து இருப்பார். போன தடவை விஜயலட்சுமி முரண்டு பிடித்து தொடர விரும்பினார். ஆனால் நீதிபதி அவருக்கு குட்டு வைத்து வழக்கை சமமாக்கினார். அடுத்த தடவை விஜயலட்சுமி இறங்கி வந்து நீதிபதியின் கோரிக்கையை ஏற்று சீமான் விரும்பியபடி கேட்டபடி இனி என்னை தொந்தரவு செய்ய கூடாது என்று வழக்கை முடித்து மூடிவிட்டார். இதை வைத்து கூத்தாட்டம் போட்ட அனைவருக்கும் வாயில் பூட்டு. இனி வெறும் வாயில் கூட சீமான் என்று வரக்கூடாது என்பது கொஞ்சம் கடினமாக தான் இருக்கும். ஆனால் கம்பி எண்ண முடியாது அல்லவா.

“சங்கு சுட்டாலும் வெண்மைதரும்”

சுடச் சுட சீமானும் வெண்மையாவதுபோல் தெரிகிறது.🤩

நன்றாகப் பெரும் போறனையில் போட்டு சுடுங்கள்.

நற்றுணையாவது நமச்சிவாயவே.🙏

Edited by Paanch

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.