Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

ஒரு குற்றத்தை குறைத்து மதிப்பிடுவதன் ஆபத்தை வெளிக்காட்டிய அண்மைய உதாரணம் கேள்விப் பட்டிருப்பீர்கள். பிரான்சில், தன் பாலியல் வக்கிரத்திற்காக தன் மனைவியை மயக்க நிலையில் வைத்து பல ஆண்கள் அவரை பாலியல் வல்லுறவு செய்ய அனுமதித்த சைக்கோ கணவன் கேசில், கணவனின் விருப்பப் படி வந்து வல்லுறவில் ஈடுபட்ட ஐம்பது ஆண்களுக்கும் தண்டனை விதித்தார்கள்.

அவர்களுள் பலர் மேன் முறையீடு செய்யத் தயாராகினர். இறுதியில் பெரும்பாலானோர் பின்வாங்கி விட ஒரேயொருவர் மட்டும் "நான் வழி தவறிய பலியாடு, இங்கே நான் தான் பாதிக்கப் பட்டவன்" என்று துணிந்து மேன் முறையீடு செய்தார். "நீ செய்த வேலைக்கு, உனக்குக் கிடைத்த 9 வருடம் காணாதே? என்று 10 வருடம் விதித்துத் தீர்ப்பளித்திருக்கிறார்கள்😂.

No image preview

Man who appealed Pelicot rape conviction handed longer ja...

A French court increases by a year the jail term of the only man who challenged his conviction for raping Gisèle Pelicot.

என் சந்தேகம், இந்த "வழி தவறிய ஆட்டுக்கு" நண்பர் கடஞ்சா போலவே ஒரு வக்கீல் அட்வைஸ் கொடுத்திருப்பார்!

அதுக்கெல்லாம் சட்டத்தோட கொஞ்சம் “உராய்வு” இருக்கோணும் கண்டியளே😂.

22 minutes ago, vasee said:

இது ஒரு நல்ல விவாதத்திற்குரிய திரி! ஆனால் இதனை புரிந்து கொள்ளமுடியாமல் இருக்கிறது, படித்த நீங்கள்தான் இதனை பாமரராகிய எம்மை போன்றவர்களுக்கு விளங்கும் விதமாக மொழிமாற்றம் செய்ய வேண்டும்.

😂 அது AirPod Pro 3 யால் கூட முடியாது.

பாவம் கொழும்பான் ஒரு பட்டய கணக்காளர் அவருக்கு அக்கவுண்டன்சி புரியும் என நீங்கள் நினைத்தால் அது உங்கள் பிழை.

யாராவது கணக்கியலோடு உராய்வில் இருப்பவர்களிடம் கேட்டு பார்க்கலாமே😂.

Edited by goshan_che

  • Replies 179
  • Views 8.3k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • Maruthankerny
    Maruthankerny

    உங்கள் உழைப்புக்கு மீறி ஊதியம் பெறுபவர்களும் மறைமுகமாக இன்னொருவர் உழைப்பை சுரண்டுபவர்கள்தான். ஐந்து நூறு டாலருக்கு ஒருவன் அடியாளாக சென்று ஒருவனை அடிப்பதும் ஒரு மருத்துவ கொம்பனி விற்பனைக்காக ஒரு மருத

  • இப்ப என்ன சொல்ல வாறீங்கள்😂? ஒரு உதாரணத்திற்கு, "அமெரிக்காவில் அடிமைகளை வைத்திருப்பது சட்டமாக இருந்தது" ஓம் இருந்தது. 1860 இல் அது சட்ட விரோதமாகி விட்டது, ஆனாலும் 1920 வரை ஏதோ ஒரு விதத்தில் நடைமுறையில

  • குமாரசாமி
    குமாரசாமி

    என் நெஞ்சில் குடியிருக்கும் நீங்கள் கேட்பதனால் சொல்கிறேன். இனியும் இருட்டடி வாங்கும் தென்பு உடலில் இல்லை.😂

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, goshan_che said:

அதுக்கெல்லாம் சட்டத்தோட கொஞ்சம் “உராய்வு” இருக்கோணும் கண்டியளே😂.

😂 அது AirPod Pro 3 யால் கூட முடியாது.

பாவம் கொழும்பான் ஒரு பட்டய கணக்காளர் அவருக்கு அக்கவுண்டன்சி புரியும் என நீங்கள் நினைத்தால் அது உங்கள் பிழை.

யாராவது கணக்கியலோடு உராய்வில் இருப்பவர்களிடம் கேட்டு பார்க்கலாமே😂.

கடஞ்சாவின் எழுத்துக்கள் புரிந்து கொள்வது கடினமாக இருக்கிறது, சிலரால் சாமானியர்களுக்கு புரிவது போல விடயங்களை கூற முடியாது, அதனாலேயே கொழும்பானிடம் கேட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்

தலைமறைவான தொழிலதிபரின் மனைவி இப்ப எங்க இருக்கிறாங்க! தொழிலதிபரோடயா இல்லை வேறெங்கமயா? 🙄

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாலி said:

தலைமறைவான தொழிலதிபரின் மனைவி இப்ப எங்க இருக்கிறாங்க! தொழிலதிபரோடயா இல்லை வேறெங்கமயா? 🙄

இந்த கருத்தினை நீக்கிவிடுங்கள், என உங்களிடம் தாழ்மையாக கேட்டுக்கொள்கிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

கடஞ்சாவின் எழுத்துக்கள் புரிந்து கொள்வது கடினமாக இருக்கிறது, சிலரால் சாமானியர்களுக்கு புரிவது போல விடயங்களை கூற முடியாது, அதனாலேயே கொழும்பானிடம் கேட்டேன்.

அது பட்டயக்கணக்காளரான தனக்கே புரியவில்லை. சில jargons ஐ ஆங்காங்கே தூவி விட்டு எதுவும் விளங்காத மாதிரி இருக்கு எழுத்து என்பதுதான் கொழும்பானின் கொம்பிளைண்டே (கீழே பார்க்கவும்).

நீங்க அவரை போய் விளங்கபடுத்த சொன்னா அவர் பாவம் இல்லையா😂?

கொழும்பான் மைண்ட் வாய்ஸ் -

கொடுமை கொடுமை எண்டு கோவில்ல வந்து முறையிட்டால் - ஐயர் என்னை மந்திரம் ஓத சொல்லுறார்😂.

  • கருத்துக்கள உறவுகள்

வியாபாரம் ஆரம்பிக்கும் போது அனைவரும் அது சிறக்க வேண்டும் எனும் எண்ணத்துடனேயே ஆரம்பிக்கின்றார்கள், பின்னர் அவர்கள் அகல கால் பதிக்க முற்படும் போதே, இவ்வாறான சரிவினை சந்திக்கிறார்கள் என கருதுகிறேன்.

தோற்றுப்போனவர்கள் இறுதியாக செய்யும் வேலை, வங்குரோத்தினை பதிவு செய்வதே!

பலர் தமது சொத்துக்களை சட்டத்தினால் அணுக முடியாமல் தமது குடும்ப உறுப்பினர்களுக்கு மாற்றி விட்டு இந்த வங்குரோத்தினை பதிவு செய்கிறார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 21/10/2025 at 16:53, colomban said:

சுவரசியமாக உள்ளது கடஞ்சா

நிறைய jargons கொண்டு வந்து கொட்டியுள்ளீர்கள். பலருக்கு இது விளங்க கஸ்டமாக இருக்கும் என நினைக்கின்றேன். உங்களுக்கும் இதன் அர்த்தம் புரியாமல் பாவித்துள்ளீர்கள்

Letter of credit

Credit rating

risk profile, risk apatite

Hedging / forwarding

risk analysis, modelling, technical and fundamental analysis

window dressing

balance sheet position

dividend payable

differed tax - time difference tax depreciation

பிரயோகிகக்கபடும் உள்ளது

மேலே உள்ள ஒவ்வொன்றுக்கும் ரிப்போர்டிங் ஸ்டன்டர்ட் உள்ளது

PLC என்கிறீர்கள் related party எவரும் உள்ளார்களா ? subsidiary, associate, ஏதும் உள்ளதா? intangible asset, factious assets ஏதும் உள்ளதா? அல்லது mere window dressing !

யூகே இல் வேலை ஒரு ஒடிடராகவும், அதேவேளை பெட்ரோல் செட்டில் ஒரு விற்பனையாளராகவும் வேலை செய்த அனுபவத்தில் சொல்கின்றேன். தமிழர்கள் பலர் சுத்து மாத்து செய்யக்குடியர்வகளே அதில் சந்தேகமில்ல்லை.

அமெரிக்கவிலும் என்ரோன் எனும் ஒரு எண்ணை கம்பனி இப்படி வீழ்ந்து போனது.

ஒரு case study க்காக‌ கள உறவு நாதமுனி வந்து விபரமாக எழுத நயமாக வேண்டிக் கொள்கின்றேன்.

இது கொழும்பான் சொன்னது👆.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

அது பட்டயக்கணக்காளரான தனக்கே புரியவில்லை. சில jargons ஐ ஆங்காங்கே தூவி விட்டு எதுவும் விளங்காத மாதிரி இருக்கு எழுத்து என்பதுதான் கொழும்பானின் கொம்பிளைண்டே (கீழே பார்க்கவும்).

நீங்க அவரை போய் விளங்கபடுத்த சொன்னா அவர் பாவம் இல்லையா😂?

கொழும்பான் மைண்ட் வாய்ஸ் -

கொடுமை கொடுமை எண்டு கோவில்ல வந்து முறையிட்டால் - ஐயர் என்னை மந்திரம் ஓத சொல்லுறார்😂.

கொழும்பான் வெறும் கணக்காளர் மட்டுமல்ல, வணிக நிர்வாகத்தில் முதுநிலை பட்டம் பெற்றவர், வர்த்தக துறை பற்றிய சரியான புரிதல் உள்ளவர், அவருக்கே விளங்கவில்லை என்றால் எங்களின் நிலை?

இந்த விவாத திரி எதிர்காலத்தில் வியாபாரத்தில் ஈடுபட விரும்புபவர்களுக்கு, ஒரு முன்மாதிரியான திரியாக அமைவதற்கான அனைத்து பண்புகளும் கொண்ட திரியாக உள்ளது, அதனால் சில விடயங்களில் உள்ள விளங்காத விடயங்களை அறிய முனைகிறேன்.

ஒருவரின் வியாபார தோல்வி எந்தளவிற்கு அவர்களுக்கு உளப்பாதிப்பினை உண்டாக்கும் என்பதினை ஓரளவு உணர்ந்த முறையில், தவறுகளை சுட்டிகாட்டி அதன் மூலம் எதிர்காலத்தில் மற்றவர்கள் இம்மாதிரியான இக்கட்டுக்குள் விழாமல் பேண இந்த திரி உதவும் என நம்புகிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, vasee said:

வியாபாரம் ஆரம்பிக்கும் போது அனைவரும் அது சிறக்க வேண்டும் எனும் எண்ணத்துடனேயே ஆரம்பிக்கின்றார்கள், பின்னர் அவர்கள் அகல கால் பதிக்க முற்படும் போதே, இவ்வாறான சரிவினை சந்திக்கிறார்கள் என கருதுகிறேன்.

தோற்றுப்போனவர்கள் இறுதியாக செய்யும் வேலை, வங்குரோத்தினை பதிவு செய்வதே!

பலர் தமது சொத்துக்களை சட்டத்தினால் அணுக முடியாமல் தமது குடும்ப உறுப்பினர்களுக்கு மாற்றி விட்டு இந்த வங்குரோத்தினை பதிவு செய்கிறார்கள்.

இல்லை பலர் வியாபாரம் ஆரம்பிப்பதே வங்குரோத்து அடித்து அதில் (உறவுகளுக்கு மாற்றிய, வெளியால் எடுத்த காசை) ஆட்டையை போடத்தான்.

நடிகை ஷில்பா செட்டியின் கணவர் குடும்பம் இலண்டன் ஈலிங் ரோட்டில் ஒரே நகை கடையை வைத்து, பல குடும்ப உறுப்பினர் மாறி, மாறி இப்படி செய்துள்ளனர். கடையின் பெயர் ஐந்து வருடம் ஒரு தரம் மாறும்.

இதில் இழப்பை சந்திப்பது திறைசேரி. அதாவது ஒவ்வொரு குடிமகனதும் வரிப்பணம்.

சஞ்சீவும் மனைவியிம் இப்படி நோக்கோடு ஆரம்பித்தனர் என நான் சொல்லவில்லை.

ஆனால் கடந்த 3 வருடத்திலாவது இவர்கள் dishonesty யாக நடக்க ஆரம்பித்துள்ளனர்.

எண்ணை வழங்கியவர்கள் மீதி எண்ணையை எடுத்து கொண்டார்கள்.

கணவனும், மனைவியிம் கடைசி வருடத்தில் 3.5 மில்லியனை டிவிடெண்ட் எடுத்துள்ளனர்.

தத்தளிக்கும் ஒரு வியாபரத்தை நீங்க முயல்பவர் இப்படியா செய்வார்?

பிள்ளைகள் இருவர் பேரில் டிரஸ்டில் எல்லாத்தையும் போட்டு விட்டு. மாடமாளிகையை மார்கெட்டில் போட்டு விட்டு ஓடி விட்டார்கள்.

ஏமாந்த சோணகிரிகள்?

சம்பளம் இல்லாத தொழிலாளர்கள்.

திறைசேரி - அதாவது என்போன்றோரின் வரிப்பணம்.

உண்மையான தொழில்முனைவோர் எண்டால் இதை நாட்டில் நிண்டு டீல் பண்ணி இருப்பார்கள்.

முதலில் தமக்கு இலாபம் ஈட்டி கொடுத்த வேலியாட்களின் கடைசி மாத சம்பளத்தையாவது கொடுத்திருப்பர்.

இதை களவு எண்டு சொன்னால் ஒயில் கானோடு ஒருவர் வருகிறார், ஐநா சபையை இன்னொருவர் கூட்டி வருகிறார்😂

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

இந்த திரியினை ஆரம்பித்து ஒரு நல்ல உரையாடலை உருவாக்கும் சந்தர்ப்பத்தினை உருவாக்கிய உங்களுக்கு நன்றி!

நீங்கள் கூறும் நேர்மையற்ற நிலைதான் பெரும் வீழ்ச்சிக்கு காரணமாக அமைகிறது, இந்த தனி மனித ஒழுக்க பிறழ்வை ஒருவரும் பெரிதாக எடுத்து கொள்வதில்லை, ஆனால் அடிப்படை தவறு அங்குதான் ஆரம்பிக்கின்றது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, vasee said:

கொழும்பான் வெறும் கணக்காளர் மட்டுமல்ல, வணிக நிர்வாகத்தில் முதுநிலை பட்டம் பெற்றவர், வர்த்தக துறை பற்றிய சரியான புரிதல் உள்ளவர், அவருக்கே விளங்கவில்லை என்றால் எங்களின் நிலை?

இந்த விவாத திரி எதிர்காலத்தில் வியாபாரத்தில் ஈடுபட விரும்புபவர்களுக்கு, ஒரு முன்மாதிரியான திரியாக அமைவதற்கான அனைத்து பண்புகளும் கொண்ட திரியாக உள்ளது, அதனால் சில விடயங்களில் உள்ள விளங்காத விடயங்களை அறிய முனைகிறேன்.

ஒருவரின் வியாபார தோல்வி எந்தளவிற்கு அவர்களுக்கு உளப்பாதிப்பினை உண்டாக்கும் என்பதினை ஓரளவு உணர்ந்த முறையில், தவறுகளை சுட்டிகாட்டி அதன் மூலம் எதிர்காலத்தில் மற்றவர்கள் இம்மாதிரியான இக்கட்டுக்குள் விழாமல் பேண இந்த திரி உதவும் என நம்புகிறேன்.

இது கொழும்பான் அல்ல, அமர்தியா சென்னால் கூட விளங்க முடியாத விடயம்😂.

சிதம்பர ரகசியம் போல - அனுபவிக்கணும், நக்கல் அடிக்கலாம், ஆராயப்படாது. மூளை கரைந்து விடும்😂.

உங்கள் எண்ணம் உன்னதமானது👍.

வியாபாரத்தில் முதன்மையானது நீங்கள் உங்கள் வேலையாட்களுக்கு காட்டும் பொறுப்பு என்பது இந்த திரியில் தெளிவாக ஒலிக்கிறது என நம்புகிறேன்.

அடுத்த பாடம் - விடயம் பிசகும் போது, அதை போத்து மறைகாமல் (KPMG ஐ அனுப்பி விட்டு ஒரு சின்ன அமைப்பவை அமர்த்தியுள்ளனர் ) நேர்மையாக அணுகுங்கள்.

மூன்றாம் பாடம் ஆங்கிலத்தில் captains of industry என்பார்கள் பெரும் தொழிலதிபர்களை. டைட்டானிக் கேப்டன் போல் உங்கள் தவறோ, இல்லையோ கப்பல் மூழ்கினால் கடைசி ஆளாக வெளி ஏறுங்கள்.

இயலாதோரை தாள விட்டு விட்டு, கள்ளர் போல் கம்பி நீட்டாமல்.

  • கருத்துக்கள உறவுகள்

சட்டம் கூட அனைவருக்கும் சமமாக இருப்பதில்லை, ஒரே குடும்பத்தில் கனவன் மனைவி இருவரும் வேலை செய்தால் வரும் வருமான வரியினை விட குடும்பத்தில் ஒருவர் வேலை செய்யும் போது அதிக வருமான வரி கட்ட வேண்டிய நிலை உள்ளது.

1 minute ago, goshan_che said:

மூன்றாம் பாடம் ஆங்கிலத்தில் captains of industry என்பார்கள் பெரும் தொழிலதிபர்களை. டைட்டானிக் கேப்டன் போல் உங்கள் தவறோ, இல்லையோ கப்பல் மூழ்கினால் கடைசி ஆளாக வெளி ஏறுங்கள்.

இதுதான் முதன்மையானது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, vasee said:

நீங்கள் கூறும் நேர்மையற்ற நிலைதான் பெரும் வீழ்ச்சிக்கு காரணமாக அமைகிறது, இந்த தனி மனித ஒழுக்க பிறழ்வை ஒருவரும் பெரிதாக எடுத்து கொள்வதில்லை, ஆனால் அடிப்படை தவறு அங்குதான் ஆரம்பிக்கின்றது

அருமை. ஆனால் யாழ் போன்ற பொதுவெளியில் கூட இது வழமையானதுதான், இதுதான் பிழைக்கும் முறை, நேர்மை என்று எழுதுபவர்கள் கையாலாகதோர் என்பதாக அல்லவா எழுதுகிறார்கள். இப்படி ஒருவர் அல்ல, பலரை வெளியிலும் காண முடிகிறது.

பிள்ளைகள் படிப்பும் இல்லை, தொழிலும் ஏதும் இல்லை, ஆனால் G Wagon வாங்கி தந்தால் சந்தோசமாக, எப்படி வந்தது என கேட்காமல் வாங்கும் நிலையில் பல பெற்றார்கள் உள்ளார்கள்.

வியாபாரம் = களவு என்பது போல் ஆக்கி வைத்துள்ளார்கள் எமது சமூகத்தில்.

6 minutes ago, vasee said:

சட்டம் கூட அனைவருக்கும் சமமாக இருப்பதில்லை, ஒரே குடும்பத்தில் கனவன் மனைவி இருவரும் வேலை செய்தால் வரும் வருமான வரியினை விட குடும்பத்தில் ஒருவர் வேலை செய்யும் போது அதிக வருமான வரி கட்ட வேண்டிய நிலை உள்ளது.

இது வெளி பார்வைக்கு அநியாயமாக தெரிந்தாலும், இதில் ஆழமான தத்துவம் உள்ளது. ஒவ்வொரு தனி மனிதனுக்கும் individuality உள்ளது. Income tax ஒரு personal tax என்பதால் அதை அப்படி அறவிடுவதே, சரியானது.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, vasee said:

சட்டம் கூட அனைவருக்கும் சமமாக இருப்பதில்லை, ஒரே குடும்பத்தில் கனவன் மனைவி இருவரும் வேலை செய்தால் வரும் வருமான வரியினை விட குடும்பத்தில் ஒருவர் வேலை செய்யும் போது அதிக வருமான வரி கட்ட வேண்டிய நிலை உள்ளது.

இது எங்கே, வசீ........... ஆஸ்திரேலியாவிலா? இது மிகவும் நியாயம் அற்றது. இங்கே அமெரிக்காவில் இப்படி இல்லை. நாங்கள் ஒரு குடும்பமாகவே வரியினை செலுத்துகின்றோம். Married Filing Jointly என்ற வகையில் இது வருகின்றது. இதில் குடும்பத்தின் மொத்த வருமானத்திற்கே வரி விதிக்கப்படுகின்றது. ஒருவர் உழைக்கின்றாரா அல்லது இருவருமே உழைக்கின்றார்களா என்பது இங்கு கணக்கில் எடுக்கப்படுவதில்லை.

5 minutes ago, vasee said:

இந்த தனி மனித ஒழுக்க பிறழ்வை ஒருவரும் பெரிதாக எடுத்து கொள்வதில்லை, ஆனால் அடிப்படை தவறு அங்குதான் ஆரம்பிக்கின்றது.

இங்கு என் வீடு இருக்கும் தெருவிற்கு அடுத்த தெருவிலேயே 'லிட்டில் இந்தியா' என்று சொல்லப்படும் இடமும், வியாபாரங்களும் இருக்கின்றன. கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக பல கடைகளின் பெயர்கள் மட்டுமே அடிக்கடி மாறிக் கொண்டிருக்கின்றன. வேறு எந்த மாற்றமும் கிடையாது. ஆரம்பத்தில் இது என்னவென்று புரியவில்லை, பின்னர் இவர்களில் சிலர் பழக்கமானார்கள், அதன் பின்னர் இது என்னவென்று புரிந்தது. ஆனால் எந்தக் குற்ற உணர்வும் இல்லாமல் தொடர்ந்து செய்து கொண்டேயிருக்கின்றார்கள். அவர்களின் சமூகத்தில், குடும்பத்தில் மரியாதையுடனும் பார்க்கப்படுகின்றார்கள்.

ஒரு தடவை என்னுடைய வீட்டில் சில மாற்றங்களை செய்ய நினைத்து, ஒரு கட்டிட நிறுவனத்திடம் முற்பணம் கட்டியிருந்தேன். அவர்கள் வங்குரோத்து அடித்தார்கள். BBB (Better Business Bureau) என்னும் அமைப்பிடம் போகலாம் என்று சொன்னார்கள். அங்கு போனால், அந்த கட்டிட நிறுவனம் ஒரு 80 வயதுள்ள ஒருவரின் பெயரிலேயே இருந்தது. மற்றவர்களை எதுவும் செய்ய முடியவில்லை.

ஆபிரகாம் என்ற பெயர் மட்டும் மனதில் பதிந்தது. முதலாளி போன்று நடந்து கொண்டிருந்தவரின் பெயர் அதுதான். ஆபிரகாம் என்னும் கடவுளுக்கு கோபம் கொஞ்சம் அதிகம் என்று சொல்கின்றார்கள். அந்தக் கடவுளாகப் பார்த்து இவர்களை ஏதும் செய்தால் தான் உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ரசோதரன் said:

இது எங்கே, வசீ........... ஆஸ்திரேலியாவிலா? இது மிகவும் நியாயம் அற்றது. இங்கே அமெரிக்காவில் இப்படி இல்லை. நாங்கள் ஒரு குடும்பமாகவே வரியினை செலுத்துகின்றோம். Married Filing Jointly என்ற வகையில் இது வருகின்றது. இதில் குடும்பத்தின் மொத்த வருமானத்திற்கே வரி விதிக்கப்படுகின்றது. ஒருவர் உழைக்கின்றாரா அல்லது இருவருமே உழைக்கின்றார்களா என்பது இங்கு கணக்கில் எடுக்கப்படுவதில்லை.

இங்கு என் வீடு இருக்கும் தெருவிற்கு அடுத்த தெருவிலேயே 'லிட்டில் இந்தியா' என்று சொல்லப்படும் இடமும், வியாபாரங்களும் இருக்கின்றன. கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக பல கடைகளின் பெயர்கள் மட்டுமே அடிக்கடி மாறிக் கொண்டிருக்கின்றன. வேறு எந்த மாற்றமும் கிடையாது. ஆரம்பத்தில் இது என்னவென்று புரியவில்லை, பின்னர் இவர்களில் சிலர் பழக்கமானார்கள், அதன் பின்னர் இது என்னவென்று புரிந்தது. ஆனால் எந்தக் குற்ற உணர்வும் இல்லாமல் தொடர்ந்து செய்து கொண்டேயிருக்கின்றார்கள். அவர்களின் சமூகத்தில், குடும்பத்தில் மரியாதையுடனும் பார்க்கப்படுகின்றார்கள்.

ஒரு தடவை என்னுடைய வீட்டில் சில மாற்றங்களை செய்ய நினைத்து, ஒரு கட்டிட நிறுவனத்திடம் முற்பணம் கட்டியிருந்தேன். அவர்கள் வங்குரோத்து அடித்தார்கள். BBB (Better Business Bureau) என்னும் அமைப்பிடம் போகலாம் என்று சொன்னார்கள். அங்கு போனால், அந்த கட்டிட நிறுவனம் ஒரு 80 வயதுள்ள ஒருவரின் பெயரிலேயே இருந்தது. மற்றவர்களை எதுவும் செய்ய முடியவில்லை.

ஆபிரகாம் என்ற பெயர் மட்டும் மனதில் பதிந்தது. முதலாளி போன்று நடந்து கொண்டிருந்தவரின் பெயர் அதுதான். ஆபிரகாம் என்னும் கடவுளுக்கு கோபம் கொஞ்சம் அதிகம் என்று சொல்கின்றார்கள். அந்தக் கடவுளாகப் பார்த்து இவர்களை ஏதும் செய்தால் தான் உண்டு.

அவுஸ்ரேலியாவில் Tax bracket எனும் முறைமையின் படி, இதன் பிரகாரம் குடும்ப உறுப்பினர் ஒருவர் உதாரணத்திற்காக $90000 ஆண்டு வருமானம் பெற்றால், அவர் அண்ணளவாக $13,500 வரை வரி கட்ட வேண்டும் அதனையே கணவனும் மனைவியும் $45000 (45000+ 450000 = 90000ஆண்டு வருமானம் ஈட்டினால் கிட்டத்தட்ட $8580 வரை வருமான வரியாக கட்ட வேண்டும்.

https://www.ato.gov.au/tax-rates-and-codes/tax-rates-australian-residents

மேலதிகமாக $4900 வரியினை தனிநபர் வேலை செய்யும் குடும்பம் வழங்க வேண்டும்.

18 minutes ago, ரசோதரன் said:

இங்கு என் வீடு இருக்கும் தெருவிற்கு அடுத்த தெருவிலேயே 'லிட்டில் இந்தியா' என்று சொல்லப்படும் இடமும், வியாபாரங்களும் இருக்கின்றன. கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக பல கடைகளின் பெயர்கள் மட்டுமே அடிக்கடி மாறிக் கொண்டிருக்கின்றன. வேறு எந்த மாற்றமும் கிடையாது. ஆரம்பத்தில் இது என்னவென்று புரியவில்லை, பின்னர் இவர்களில் சிலர் பழக்கமானார்கள், அதன் பின்னர் இது என்னவென்று புரிந்தது. ஆனால் எந்தக் குற்ற உணர்வும் இல்லாமல் தொடர்ந்து செய்து கொண்டேயிருக்கின்றார்கள். அவர்களின் சமூகத்தில், குடும்பத்தில் மரியாதையுடனும் பார்க்கப்படுகின்றார்கள்.

ஒரு தடவை என்னுடைய வீட்டில் சில மாற்றங்களை செய்ய நினைத்து, ஒரு கட்டிட நிறுவனத்திடம் முற்பணம் கட்டியிருந்தேன். அவர்கள் வங்குரோத்து அடித்தார்கள். BBB (Better Business Bureau) என்னும் அமைப்பிடம் போகலாம் என்று சொன்னார்கள். அங்கு போனால், அந்த கட்டிட நிறுவனம் ஒரு 80 வயதுள்ள ஒருவரின் பெயரிலேயே இருந்தது. மற்றவர்களை எதுவும் செய்ய முடியவில்லை.

ஆபிரகாம் என்ற பெயர் மட்டும் மனதில் பதிந்தது. முதலாளி போன்று நடந்து கொண்டிருந்தவரின் பெயர் அதுதான். ஆபிரகாம் என்னும் கடவுளுக்கு கோபம் கொஞ்சம் அதிகம் என்று சொல்கின்றார்கள். அந்தக் கடவுளாகப் பார்த்து இவர்களை ஏதும் செய்தால் தான் உண்டு.

வியாபாரத்தில் வெளிப்படைத்தன்மை முக்கியமானது, ஆரம்பத்தில் அதனால சில இடையுறுகள் இருக்கலாம் அனால் ஒரு பெரிய தவறுக்கு அது இட்டு செல்லாமல் சிறிய அடியுடன் உங்களை சுதாரித்து கொள்ள உதவும்.

  • கருத்துக்கள உறவுகள்

நடைமுறையில் அனைத்து வியாபாரத்திலும் இந்த வெளிப்படை தன்மை இல்லை என கூறலாம், ஆனால் அவர்கள் புத்திசாலித்தனமாக சட்டத்தினை பாவித்து தப்பிக்கொள்கிறார்கள்.

உதாரணமாக ஒரு காப்புறுதி நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தம் செய்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம், ஆரம்பத்தில் ஒப்பந்தத்தில் உள்ள சரத்துக்களை பின்னாளில் மாற்றி விட்டு உங்களுக்கு ஒரு கடிதம் அனுப்புவார்கள், வழமை போல வரும் குப்பைகள் என நீங்கள் கவனிக்காமல் விட்டு விட்டால் பிரச்சினை வரும் போது அவர்களை அழைத்தால் அவர்கள் கூறுவார்கள் இந்த மாதத்தில் உங்களுக்கு அறிவுறுத்தல் கடிதம் அனுப்பினோமே என கைவிரித்து விடுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவும் கணக்கினை தவறாக கணித்துவிட்டேன் தனி நபர் உழைக்கும் குடும்பம் 4900 அல்ல 9200 கட்ட வேண்டும், எதற்கும் கணக்கினை நிங்களாகவே சரி பார்க்கவும்.

45000 உழைக்கும் குடும்ப உறுப்பினர் ஒருவர் $4287 வரி கட்டுகிறார் இருவரது வருமான வரி $8574.

தனிநபர் உழைக்கும் குடும்ப உறுபினர் $17786 வருமான வரி கட்டுகிறார்.

மேலதிகமாக $9212 வரி கட்டுகிறார்.

Edited by vasee

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, vasee said:

மன்னிக்கவும் கணக்கினை தவறாக கணித்துவிட்டேன் தனி நபர் உழைக்கும் குடும்பம் 4900 அல்ல 9200 கட்ட வேண்டும், எதற்கும் கணக்கினை நிங்களாகவே சரி பார்க்கவும்.

🤣...................

சாட் ஜிபிடி இருக்கும் போது நமக்கென்ன வேலை.............😜

அமெரிக்காவில் இரண்டு வகையிலும் ஒரே வரியே: 6,543

ஆஸ்திரேலியாவில்........... அநியாயம்........ வீட்டில் சும்மா இருந்தால் தண்டப்பணம் அறவிடுகின்றார்கள் போல:

ஒருவர் வேலை செய்தால்: 19,588

இருவரும் வேலை செய்தால்: 10, 376

🫣

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ரசோதரன் said:

நன்றி!

  • கருத்துக்கள உறவுகள்

3 hours ago, goshan_che said:

இல்லை பலர் வியாபாரம் ஆரம்பிப்பதே வங்குரோத்து அடித்து அதில் (உறவுகளுக்கு மாற்றிய, வெளியால் எடுத்த காசை) ஆட்டையை போடத்தான்.

நடிகை ஷில்பா செட்டியின் கணவர் குடும்பம் இலண்டன் ஈலிங் ரோட்டில் ஒரே நகை கடையை வைத்து, பல குடும்ப உறுப்பினர் மாறி, மாறி இப்படி செய்துள்ளனர். கடையின் பெயர் ஐந்து வருடம் ஒரு தரம் மாறும்.

இதில் இழப்பை சந்திப்பது திறைசேரி. அதாவது ஒவ்வொரு குடிமகனதும் வரிப்பணம்.

சஞ்சீவும் மனைவியிம் இப்படி நோக்கோடு ஆரம்பித்தனர் என நான் சொல்லவில்லை.

ஆனால் கடந்த 3 வருடத்திலாவது இவர்கள் dishonesty யாக நடக்க ஆரம்பித்துள்ளனர்.

எண்ணை வழங்கியவர்கள் மீதி எண்ணையை எடுத்து கொண்டார்கள்.

கணவனும், மனைவியிம் கடைசி வருடத்தில் 3.5 மில்லியனை டிவிடெண்ட் எடுத்துள்ளனர்.

தத்தளிக்கும் ஒரு வியாபரத்தை நீங்க முயல்பவர் இப்படியா செய்வார்?

பிள்ளைகள் இருவர் பேரில் டிரஸ்டில் எல்லாத்தையும் போட்டு விட்டு. மாடமாளிகையை மார்கெட்டில் போட்டு விட்டு ஓடி விட்டார்கள்.

ஏமாந்த சோணகிரிகள்?

சம்பளம் இல்லாத தொழிலாளர்கள்.

திறைசேரி - அதாவது என்போன்றோரின் வரிப்பணம்.

உண்மையான தொழில்முனைவோர் எண்டால் இதை நாட்டில் நிண்டு டீல் பண்ணி இருப்பார்கள்.

முதலில் தமக்கு இலாபம் ஈட்டி கொடுத்த வேலியாட்களின் கடைசி மாத சம்பளத்தையாவது கொடுத்திருப்பர்.

இதை களவு எண்டு சொன்னால் ஒயில் கானோடு ஒருவர் வருகிறார், ஐநா சபையை இன்னொருவர் கூட்டி வருகிறார்😂

கணவனும், மனைவியிம் கடைசி வருடத்தில் 3.5 மில்லியனை டிவிடெண்ட் எடுத்துள்ளனர்

டிவிடண்ட் என்பது கடன் உள்ள நிறுவனமாக இருந்தாலும் இயக்குனர் சபையால்/(share holders )வாக்கு செலுத்தப்பட்டு அங்கீகரிக்கப்பட்டு அதன் பின்னர் வருவதே அதில் தப்பு சொல்ல முடியாது , அப்பிடியாயின் அந்த கம்பெனியின் பங்குகளை வைத்திருந்தோர் ஆடிட்டர் எல்லோருமே இதற்கு பொறுப்பு தொடர்ச்சியாக கம்பெனியின் ஆண்டு வருமானம் அல்லது காலாண்டு வருமானம் குறைந்து கடன் அதிகரிப்பு ஏற்படும் போது காணங்களை ஆராய்ந்து பங்குகளை விற்று வெளியேறி இருக்கணும்... இவர்களில் பிழை என்பது நிர்வாகத்தை சரியாக நடத்தாமை

இந்தியாவின் டாடா STEELS நிறுவனம் என்று நினைக்கிறேன் 40 ,000 கோடி அளவில் கடன் இருந்தும் நல்ல டிவிடெண்ட் கொடுக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

இதை இப்போதுதான் பொறுமையாக வாசிச்சு விளங்கப் பார்க்கிறேன். சுருங்கச் சொன்னால், பணம் பாதாளம் வரையும் பாயும் என்று சொல்வார்கள். இந்த நிறுவனம் 20 பில்லியன் பவுண்ட்ஸ் கணக்கில வியாபாரம் செய்திருக்கிறது. இது மிக மிகப் பெரும் தொகை. எனது/எமது சிற்றறிவுக்கு மிக மிக வெளியே உள்ள விடயம் இது. இலகுவாக, அவர்கள் இருவரும் தப்பி ஓடிவிட்டார்கள் என்று சொல்ல முடியாது என்று நினைக்கிறேன். இந்தத் திரியில், ஏதோ பெட்டிக்கடை கணக்கில் கதைத்துக் கொண்டு இருப்பதுபோலப் படுகிறது.

இந்த வங்குரோத்தில், மிகப் பெரிய தலைகள் எல்லாம் ஈடுபட்டிருக்கக் கூடிய சந்தர்ப்பம் கூட. ஓரிருவர் மாட்டுப்பட மிகுதி எல்லோரும் தப்பிப்பதே இவ்வாறான இடங்களில் பொதுவான அம்சம். அதுக்காக, அந்த தம்பதியினர் இருவரும் பாவம் என்று சொல்லவரவில்லை. என்ன சொல்ல வருகிறேன் என்று புரியும் என்று நினைக்கிறேன். (அவர்களுக்கு எவ்விதத்திலும் ஆதரவு குடுக்கவில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். இந்த செய்தியின் மூலம்தான் அவர்களைப் பற்றி அறிகிறேன்).

இந்தக்களத்தில், முதலாளிகள் இருவரும் தமிழர்கள் என்றபடியால, கொஞ்சம் ஆர்வமாக இருக்கிறோம் என்று நினைக்கிறேன். சிலருக்கு, அவர்களைத் தனிப்பட்ட முறையில் தெரிந்தும் இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, goshan_che said:

அது பட்டயக்கணக்காளரான தனக்கே புரியவில்லை. சில jargons ஐ ஆங்காங்கே தூவி விட்டு எதுவும் விளங்காத மாதிரி இருக்கு எழுத்து என்பதுதான் கொழும்பானின் கொம்பிளைண்டே (கீழே பார்க்கவும்).

நீங்க அவரை போய் விளங்கபடுத்த சொன்னா அவர் பாவம் இல்லையா😂?

கொழும்பான் மைண்ட் வாய்ஸ் -

கொடுமை கொடுமை எண்டு கோவில்ல வந்து முறையிட்டால் - ஐயர் என்னை மந்திரம் ஓத சொல்லுறார்😂.

ஐசே நான் டொஹா கட்டர விட்டுபோய் இரண்டு வருடம் வா. நிம்ம‌தியா இலங்கைல மாஸ் ஹொல்டிங், ஹெல க்லோதிங் என பெரிய கம்பனில வெல செஞ்ச என்னை புடிச்சி ஓனர் தன்ற நோர்த் ஆப்ப்ரிகா, எகிப்து கைரோ வில உள்ள் பெக்டரில‌ போய் கொஞ்ச நாள் வெல செய் என்ரு என்னை அனிப்பினாருவா.

ஐசே பசுந்தான ஈஜிப்சியன் கிளியோபட்ராக்கள் குட்டிகளோடவா இருகேன். மார சூன் வா. இன்னைக்கு எகிப்திய நைல் நதி கிட்ட ஒக்காந்து கோப்பிய உறிஞிசிட்டு ஒங்கட, ஜஸ்டின்ட கருத்த பர்ர்த்டேன் வா ஐசே சிரிப்பு தாங்க ஏலலவா. அப்ப்புடி சிரிப்பு வா தாங்க முடியலவா.

ஈஜிப்சியன் குட்டிகள் என்னையா பயிதியம் என நினக்குறாங்கவா?

பாவம் என்று ஒயில் தொடைக்க போனேவா. நீங்கள் வேணா வேணா சொல்ல சொல்ல போய் தொடச்சேன் வா. ஐயோ என்ட மேல் என்லாம் ஒயில் வா. ஐசே பிசின் மாதிரி ஒட்டதுவா ஒயில். சோப் போட்டும் போவுதில்லவா. லாம்பெண்ணை ஏதாவது போட ஏலுமாவா? காப்பாத்துங்க வா...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, victhanan said:

கணவனும், மனைவியிம் கடைசி வருடத்தில் 3.5 மில்லியனை டிவிடெண்ட் எடுத்துள்ளனர்

டிவிடண்ட் என்பது கடன் உள்ள நிறுவனமாக இருந்தாலும் இயக்குனர் சபையால்/(share holders )வாக்கு செலுத்தப்பட்டு அங்கீகரிக்கப்பட்டு அதன் பின்னர் வருவதே அதில் தப்பு சொல்ல முடியாது , அப்பிடியாயின் அந்த கம்பெனியின் பங்குகளை வைத்திருந்தோர் ஆடிட்டர் எல்லோருமே இதற்கு பொறுப்பு தொடர்ச்சியாக கம்பெனியின் ஆண்டு வருமானம் அல்லது காலாண்டு வருமானம் குறைந்து கடன் அதிகரிப்பு ஏற்படும் போது காணங்களை ஆராய்ந்து பங்குகளை விற்று வெளியேறி இருக்கணும்... இவர்களில் பிழை என்பது நிர்வாகத்தை சரியாக நடத்தாமை

இந்தியாவின் டாடா STEELS நிறுவனம் என்று நினைக்கிறேன் 40 ,000 கோடி அளவில் கடன் இருந்தும் நல்ல டிவிடெண்ட் கொடுக்கிறது.

நீங்கள் சொல்வது சரிதான்.

இது இவர்கள் மட்டும் செய்த பிழை அல்ல. கம்பெனியில் அதிகாரத்தில் இருந்த அனைவரும் சேர்ந்தே, கிடைத்தவரை இலாபம் என்ற அடிப்படையில் உருவ கூடியதை உருவி உள்ளார்கள் என்றே நான் நினைக்கிறேன்.

இங்கேதான் KPMG யை அனுப்பி விட்டு - இன்னொரு பிரபலமாகாத கணக்காளரை உள்ளே எடுக்கும் போதே இப்படித்தான் இதை முடிப்பது என திட்டமிட்டே இதை செய்துள்ளார்கள் என நினைக்கிறேன்.

நட்டத்தில் ஓடும் கம்பெனிகள் டிவிடென் கொடுப்பது வழமை என்பதையும் ஏற்கிறேன்.

ஆனால் கம்பனியின் இருப்பே கேள்விகுறியாகலாம் என்ற போது இப்படி எடுப்பது - சட்டப்படி சரியாகினும், இவர்கள் நோக்கம் என்ன என்பதை அப்பட்டமாக காட்டுகிறது.

மீண்டும் சொல்கிறேன்…ஆரம்பத்திலேயே களவு எண்ணத்தில் தொடங்கியதாக நான் நினைக்கவில்லை. ஆனால் கடைசியில் அப்படித்தான் முடித்துள்ளார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, செம்பாட்டான் said:

இதை இப்போதுதான் பொறுமையாக வாசிச்சு விளங்கப் பார்க்கிறேன். சுருங்கச் சொன்னால், பணம் பாதாளம் வரையும் பாயும் என்று சொல்வார்கள். இந்த நிறுவனம் 20 பில்லியன் பவுண்ட்ஸ் கணக்கில வியாபாரம் செய்திருக்கிறது. இது மிக மிகப் பெரும் தொகை. எனது/எமது சிற்றறிவுக்கு மிக மிக வெளியே உள்ள விடயம் இது. இலகுவாக, அவர்கள் இருவரும் தப்பி ஓடிவிட்டார்கள் என்று சொல்ல முடியாது என்று நினைக்கிறேன். இந்தத் திரியில், ஏதோ பெட்டிக்கடை கணக்கில் கதைத்துக் கொண்டு இருப்பதுபோலப் படுகிறது.

இந்த வங்குரோத்தில், மிகப் பெரிய தலைகள் எல்லாம் ஈடுபட்டிருக்கக் கூடிய சந்தர்ப்பம் கூட. ஓரிருவர் மாட்டுப்பட மிகுதி எல்லோரும் தப்பிப்பதே இவ்வாறான இடங்களில் பொதுவான அம்சம். அதுக்காக, அந்த தம்பதியினர் இருவரும் பாவம் என்று சொல்லவரவில்லை. என்ன சொல்ல வருகிறேன் என்று புரியும் என்று நினைக்கிறேன். (அவர்களுக்கு எவ்விதத்திலும் ஆதரவு குடுக்கவில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். இந்த செய்தியின் மூலம்தான் அவர்களைப் பற்றி அறிகிறேன்).

இந்தக்களத்தில், முதலாளிகள் இருவரும் தமிழர்கள் என்றபடியால, கொஞ்சம் ஆர்வமாக இருக்கிறோம் என்று நினைக்கிறேன். சிலருக்கு, அவர்களைத் தனிப்பட்ட முறையில் தெரிந்தும் இருக்கலாம்.

சொல்ல முடியாது.

இவர்கள் பின்னால் இன்னும் பலர் இருக்கலாம்.

அண்மையில் ஒரு கம்பெனி கொவிட் நேரம் பிரித்தானிய அரசுக்கு கிளினிக்கல் சாமான் தரமற்று விற்ற வழக்கில் 120 மில்லியன் அளவு அரசுக்கு திருப்பி கொடுக்க வேண்டும் என கோர்ட் ஆடர் இட்டது.

ஆடர் வர முதல் நாள் நிறுவனம் வெறும் 600,000 சொத்துடன் திவால்.

கொவிட் அவரசகால விதிகளின் படி எந்த விதியையும் பின்பற்றாமல் - சில நாட்களுக்கு முன் பதியபட்ட கம்பெனியிடம் பிரித்தானிய அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது.

கம்பெனியின் டிரெக்டரின் மனைவி அப்போதைய ஆளும் அரசில் மேல்சபை சீமாட்டி. அவர் சுகாதார அமைச்சின் அதிகாரிகளுக்கு கம்பெனியை அறிமுகம் செய்துள்ளார்.

விடயம் வெடித்தவுடனே கம்பெனியில் இருந்த பணத்தை பிள்ளைகள் இதர ஆட்களுக்கு மாற்றி விட்டார்கள்.

சீமாட்டி பல மில்லியன் பெறுமதியான கப்பல் மாளிகை ஒன்றையும் வாங்கினார்.

இது வெறும் 120 மில்லியன்.

20 பில்லியனினில் (20x1000 மில்லியன்) பல மறை கரங்களும் இருக்கலாம்.

இன்னும் எந்த வழக்கும் போட பிந்துவது சந்தேகதை வலுக்க வைக்கிறது.

பிகு

பெட்டிக்கடை கணக்கு

இருநூறாயிரமோ, இருபது பில்லியனொக் - வங்குரோத்து மூலம் சுத்துமாத்து பண்ணும் டகால்டி வேலையின் அடிப்படை ஒன்றேதான்.

இந்த பிணக்கின் பரிமாணம் எமக்கு வாழ்நாளில் பரிச்சயமில்லா தொகைதான்.

ஆனால் நம்மிடம் பணம்தான் இல்லை, புத்தி இருக்கிறது. என்ன நடக்கிறது என்பதை விளங்க அது போதும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, colomban said:

ஐசே நான் டொஹா கட்டர விட்டுபோய் இரண்டு வருடம் வா. நிம்ம‌தியா இலங்கைல மாஸ் ஹொல்டிங், ஹெல க்லோதிங் என பெரிய கம்பனில வெல செஞ்ச என்னை புடிச்சி ஓனர் தன்ற நோர்த் ஆப்ப்ரிகா, எகிப்து கைரோ வில உள்ள் பெக்டரில‌ போய் கொஞ்ச நாள் வெல செய் என்ரு என்னை அனிப்பினாருவா.

ஐசே பசுந்தான ஈஜிப்சியன் கிளியோபட்ராக்கள் குட்டிகளோடவா இருகேன். மார சூன் வா. இன்னைக்கு எகிப்திய நைல் நதி கிட்ட ஒக்காந்து கோப்பிய உறிஞிசிட்டு ஒங்கட, ஜஸ்டின்ட கருத்த பர்ர்த்டேன் வா ஐசே சிரிப்பு தாங்க ஏலலவா. அப்ப்புடி சிரிப்பு வா தாங்க முடியலவா.

ஈஜிப்சியன் குட்டிகள் என்னையா பயிதியம் என நினக்குறாங்கவா?

பாவம் என்று ஒயில் தொடைக்க போனேவா. நீங்கள் வேணா வேணா சொல்ல சொல்ல போய் தொடச்சேன் வா. ஐயோ என்ட மேல் என்லாம் ஒயில் வா. ஐசே பிசின் மாதிரி ஒட்டதுவா ஒயில். சோப் போட்டும் போவுதில்லவா. லாம்பெண்ணை ஏதாவது போட ஏலுமாவா? காப்பாத்துங்க வா...

😂 வாப்பண்டே…. ஈஜிப்ட்ல குட்டியும், குட்டித்தனமா சட்டப்படி ஈக்கீங்க வா…

ஜாலிய ஒங்களுக்கு ராஜா போல ஈக்க ஏலாம, ஒயில எடுத்து தல ல கொட்டினா, நாங்க என்ன வாப்ப செய்ய😂.

சரி சரி இனி சரி ஓயில் கிட்ட போவாம அல்லாஹட காவல்ல சேப்டியா இரிங்க.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.