Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: Digital Desk 3

16 Oct, 2025 | 12:39 PM

image

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்திவிடும் என்று பிரதமர் நரேந்திர மோடி தன்னிடம் உறுதியளித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை (ஒக். 15,) தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவுக்கு எதிரான உலகளாவிய அழுத்தத்தை அதிகரிக்கும் முயற்சியில் இந்தியாவின் இந்த நடவடிக்கை ஒரு முக்கிய விடயமாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஓவல் அலுவலகத்தில் வன்முறைக் குற்றங்கள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்த அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் எஃப்.பி.ஐ. பணிப்பாளர் காஷ் படேல் ஆகியோர், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது இதனைத் தெரிவித்தார்.

இந்தியாவை நம்பகமான கூட்டாளியாகப் பார்க்கிறீர்களா? என்ற கேள்விக்குப் பதிலளித்த டிரம்ப் கூறியதாவது,

"ஆம். பிரதமர் மோடி எனது நண்பர். எங்களுக்குள் சிறந்த உறவு இருக்கிறது. இந்தியா ரஷ்யாவின் எண்ணெய் வாங்குவதில் எனக்கு மகிழ்ச்சியில்லை. மேலும், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்க மாட்டோம் என்று என்னிடம் இன்று உறுதியளித்தார். இது ஒரு பெரிய நிறுத்தமாகும். இப்போது சீனாவையும் இதைச் செய்ய வைக்க வேண்டும்.

ரஷ்யா அபத்தமான போரைத் தொடர்கிறது. இலட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ரஷ்யாவும் இராணுவ வீரர்கள் உட்பட இலட்சக்கணக்கானோரை இழந்துள்ளது. இந்தப் போர் தொடங்கியிருக்கவே கூடாது. முதல் வாரத்திலேயே ரஷ்யா வெற்றி பெற்றிருக்க வேண்டியது, ஆனால், நான்காவது ஆண்டை அடைந்துள்ளார்கள்.

போர் நிறுத்தத்தைக் காண நான் விரும்புகிறேன். எனவே, இந்தியா எண்ணெய் வாங்குவதில் நான் மகிழ்ச்சியடையவில்லை.

மத்திய கிழக்கில் கடந்த வாரம் நாங்கள் செய்ததை ஒப்பிடும்போது இது (ரஷ்யா-உக்ரைன் போர்) எளிதானது என்பது உங்களுக்குத் தெரியும். அது 3,000 ஆண்டுகள் பிரச்சினை. ஆனால், இது வெறும் 3 ஆண்டுப் போர் மட்டுமே. நாங்கள் ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்திக் காட்டுவோம். ரஷ்ய ஜனாதிபதி புட்டின் போரை நிறுத்துவார் என்று நினைக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு குறித்து இந்திய அரசு அதிகாரபூர்வமாக விளக்கம் அளித்துள்ளது. உக்ரைன் போர் தொடங்கியதிலிருந்து, இந்தியா தொடர்ந்து ரஷ்யாவிடம் இருந்து மலிவு விலையில் மசகு எண்ணெய் இறக்குமதி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/227872

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"ரஷ்ய எண்ணெய் தொடர்பாக பிரதமர் மோதி வாக்குறுதி" - டிரம்ப் கூறிய புதிய தகவல்

டிரம்ப், மோதி

பட மூலாதாரம், Getty Images

கட்டுரை தகவல்

  • டேனியல் கேய்

  • வணிக செய்தியாளர்

  • 16 அக்டோபர் 2025, 04:31 GMT

    புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்

யுக்ரேனில் நடைபெறும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக, அமெரிக்கா ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதார அழுத்தம் கொடுக்க முயற்சிக்கிறது.

இந்நிலையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்தியா, "குறுகிய காலத்துக்குள்" ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்திவிடும் என மோதி தனக்கு உறுதிமொழி அளித்ததாகக் கூறிய டிரம்ப், இதை "ஒரு முக்கியமான முடிவு" என்று குறிப்பிட்டார்.

வாஷிங்டன் டிசியில் உள்ள இந்திய தூதரகத்தின் வெளியுறவுச் செய்தியாளர் இதைப் பற்றி கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார்.

அமெரிக்கா, இந்தியாவின் எண்ணெய் கொள்முதல் விவகாரத்தை வர்த்தகப் போரில் ஓர் ஆதாயமாக பயன்படுத்த முயன்றது. ஆனால் இந்தியா அதை எதிர்த்தது, இதனால் இரு நாடுகளுக்கிடையே ஒரு ராஜீயப் பிளவு ஏற்பட்டது.

எண்ணெயும், எரிவாயுவும் ரஷ்யா அதிகளவு ஏற்றுமதி செய்யும் பொருட்கள்.

ரஷ்யாவின் முக்கிய வாடிக்கையாளர்களாக, சீனா, இந்தியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் உள்ளன.

"இப்போது சீனாவையும் அதே மாதிரி செய்ய வைக்க வேண்டும்," என்று டிரம்ப் புதன்கிழமையன்று அதிபர் அலுவலகத்தில் கூறியுள்ளார்.

ரஷ்யாவுடனும் இந்தியா நல்ல உறவு நிலையைக் கொண்டுள்ளது

பட மூலாதாரம், Press Information Bureau (PIB)/Anadolu via Getty Images

படக்குறிப்பு, ரஷ்யாவுடனும் இந்தியா நல்ல உறவு நிலையைக் கொண்டுள்ளது

அமெரிக்கா, ரஷ்யாவின் எரிசக்தி வருமானத்தை குறைக்க முயல்கிறது.

அதற்காக, ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் சீனாவிடமும் மற்ற பிற நாடுகளிடமும், ரஷ்ய எண்ணெய் வாங்குவதை நிறுத்துமாறு வலியுறுத்துகிறது.

இந்தியா "உடனடியாக" எண்ணெய் வாங்குவதை நிறுத்த முடியாது என்று கூறிய டிரம்ப், இந்த மாற்றம், "மெதுவாக நடைபெறும் செயல்முறையாக இருக்கும், ஆனால் விரைவில் முடிவடையும்" என்று தெரிவித்தார்.

டிரம்ப் நிர்வாகம், இந்தியப் பொருட்களுக்கு 50% வரி விதித்துள்ளது. இது, ரஷ்யாவிலிருந்து எண்ணெய் மற்றும் ஆயுதங்கள் வாங்கியதற்காக இந்தியாவுக்கு விதிக்கப்பட்ட தண்டனை எனக் கூறினார் டிரம்ப் .

இந்த வரிகள் ஆகஸ்ட் மாதம் அமலுக்கு வந்தன. உலகிலேயே மிக அதிக வரிகளில் இதுவும் ஒன்று. ரஷ்யாவுடனான பரிவர்த்தனைகளுக்கு 25% அபராதம் விதிக்கப்படுகிறது, ஏனெனில் அவை யுக்ரேன் போருக்கான பொருளாதார ஆதாரமாக இருக்கின்றன.

இந்திய பிரதமர் நரேந்திர மோதி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் நல்லுறவைக் கொண்டிருந்தாலும், இந்தியா ரஷ்யா-யுக்ரேன் போரில் நடுநிலை வகிக்கிறது என்று கூறி, பல மாதங்களாக தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து வருகிறார்.

பிப்ரவரியில் எடுக்கப்பட்ட புகைப்படம்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, பிப்ரவரியில் எடுக்கப்பட்ட புகைப்படம் - டிரம்புக்கும் மோதிக்கும் இடையே அந்நேரத்தில் வர்த்தக விவகாரத்தில் முரண்பாடு எழுந்தது.

யுக்ரேன் போரில் ரஷ்யா ஈடுபட்டதால் இந்தியா லாபம் அடைகிறது என்ற டிரம்ப் நிர்வாகத்தின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த இந்திய அதிகாரிகள், அமெரிக்காவும் ஐரோப்பாவும் ரஷ்யாவுடன் இன்னும் வர்த்தகத்தில் ஈடுபடுகின்றன என்பதை குறிப்பிட்டு , இது 'இரட்டை வேடம்' எனக் கூறியுள்ளனர்.

உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமான இந்தியா, தனது பொருளாதாரத்தை ஆதரிக்க, தொடர்ந்து தள்ளுபடி விலையில் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது.

ரஷ்ய எண்ணெய் தொடர்பான சர்ச்சை, டிரம்புக்கும் மோதிக்கும் இடையிலான உறவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், புதன்கிழமையன்று டிரம்ப், மோதியை "சிறந்த மனிதர்" என பாராட்டினார்.

மோதி, கடந்த வாரம் டிரம்புடன் பேசியதாகவும், "வர்த்தக பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதை அவர்கள் பரிசீலித்ததாகவும்" கூறியிருந்தார்.

இந்திய வெளியுறவு அமைச்சகம் விளக்கம்

இது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்,"மாறும் தன்மை கொண்ட எரிபொருள் சூழலில், இந்தியாவின் நுகர்வோர் நலனை பாதுகாப்பதே எங்களின் நிலையான முன்னுரிமை" என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை நிறைவு செய்யும் நோக்கிலேயே இந்தியாவின் இறக்குமதி கொள்கைகளும் வகுக்கப்பட்டுள்ளன எனவும் அந்த அறிக்கை கூறுகிறது.

மேலும், நிலையான எரிபொருள் விலை மற்றும் பாதுகாப்பான விநியோகம் ஆகியவை இந்தியாவின் எரிபொருள் கொள்கையின் இரட்டை இலக்குகள் எனவும், சந்தை நிலவரத்தை எதிர்கொள்ளும் வகையில் எரிபொருள் மூலங்களை விரிவு படுத்துவது தங்களின் நோக்கம் எனவும் அந்த அறிக்கை கூறுகிறது.

"அமெரிக்காவைப் பொறுத்தவரையிலும் நாங்கள் நீண்டகாலமாக எங்களின் எரிபொருள் கொள்முதலை விரிவுபடுத்த முயன்று வருகிறோம். கடந்த 10 ஆண்டுகளில் இது நிலையாக முன்னேறியுள்ளது. தற்போதைய அமெரிக்க நிர்வாகம் இந்தியாவுடன் எரிபொருள் ஒத்துழைப்பை அதிகப்படுத்த முயன்று வருகிறது, இதற்கான விவாதங்களும் நடந்து வருகின்றன" எனவும் அந்த அறிக்கை கூறுகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cg7n8l75e4yo

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, ஏராளன் said:

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்திவிடும் என்று பிரதமர் நரேந்திர மோடி தன்னிடம் உறுதியளித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை (ஒக். 15,) தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவுக்கு எதிரான உலகளாவிய அழுத்தத்தை அதிகரிக்கும் முயற்சியில் இந்தியாவின் இந்த நடவடிக்கை ஒரு முக்கிய விடயமாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உக்ரேன் போர் நிறுத்தப்படுவதற்கு சாத்தியமில்லை.உக்ரேன் போர் நிறுத்தப்பட்டால் ரஷ்ய எரிசக்திகள் மீண்டும் ஐரோப்பிய நாடுகளுக்குள் பாய்ந்து வர சந்தர்ப்பங்கள் உண்டு.

ஏனென்றால் எரிசக்தி பொருளாதாரம் மட்டுமே தொழிற்சாலை நாடுகளை வாட்டி எடுக்கின்றது.இணக்க அரசியல் என்றுமே சிறந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

இதை அமெரிக்கா / மேற்கு பின்கதவால் செய்தன, ண்மையில் அது ராஜதந்திரத்தின் ஒரு பகுதி.

இஹை போல நடந்தது (அல்லது செய்ததுக்கு) மிக நல்ல உதாரணம் சுயஸ் கால்வாய் யுத்தத்தில், பிரித்தானியாத்வம். பிரான்சும் படைபலத்தை பாவிப்பதை பற்றி முடிவ கூட்டாக எடுத்தாலும்,

பிரித்தானியா, பிரான்ஸை நம்பாமல் இஸ்ரேலை இழுத்து, இஸ்ரயேலிடம் பிரான்சும் தாக்கும் என்று சொல்லி, பிரான்ஸ் பின்னாக்க டிதோங்கி, பின் இஸ்ரேல் பிரான்சிடம் கேட்டே பிரான்ஸ்ம் சேர்நத் எகிப்தை தாக்கியது.

இதுவும் பின்கதவாலேயே நடந்தது - அனால் டிரம்ப் இப்பொது வெளிப்படையாக பொய்யாக சொல்வது.

ஈரான், அணுத்துறையை கைவிட்டு, இறங்கிவந்து இரத்து கேட்பது, ஏறி சண்டைக்கு முன்னும், இப்போதும் சொல்லி இருப்பது , வேறுஓர் ஓர் உதாரணம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்ய எண்ணெய் கொள்முதலை நிறுத்துவதாக மோடி கூறினாரா? ; ட்ரம்ப் கருத்துக்கு இந்திய வெளிவிவகார அமைச்சு விளக்கம்!

Published By: Digital Desk 3

16 Oct, 2025 | 02:02 PM

image

ரஷ்யாவிடம் இருந்து மசகு எண்ணெய் வாங்குவதை நிறுத்திவிடுவதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தன்னிடம் உறுதி அளித்ததாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்த கருத்துக்கு, இந்திய வெளிவிவகார அமைச்சு விளக்கம் அளித்துள்ளது. எனினும், டிரம்பின் கருத்தை உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ இல்லை.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்ட கருத்துகள் குறித்து, இந்திய வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ரஷ்ய எண்ணெய் கொள்முதலை நிறுத்துவதாக மோடி உறுதியளித்தாரா என்பது குறித்து அவர் நேரடியாகப் பதிலளிக்கவில்லை.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது:

"மசகு எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதியில் இந்தியா ஒரு குறிப்பிடத்தக்க இடத்தில் உள்ளது. நிலையற்ற எரிசக்தி சூழலில் இந்திய நுகர்வோரின் நலன்களைப் பாதுகாப்பதே எங்கள் நிலையான முன்னுரிமையாக இருந்து வருகிறது. நிலையான எரிசக்தி விலை மற்றும் பாதுகாப்பான விநியோகங்களை உறுதி செய்தல் ஆகியவை நமது கொள்கையின் இரட்டை இலக்காக இருக்கின்றன. இதில், சந்தை நிபந்தனைகளைப் பொறுத்து நமது ஆற்றல் ஆதாரங்களை விரிவுபடுத்துதல் மற்றும் பொருத்தமான முறையில் பன்முகப்படுத்துதல் ஆகியவை அடங்கும். அமெரிக்காவைப் பொறுத்தவரை, பல ஆண்டுகளாக எங்கள் எரிசக்தி கொள்முதலை விரிவுபடுத்த நாங்கள் முயற்சித்து வருகிறோம். தற்போதைய அமெரிக்க நிர்வாகம் இந்தியாவுடனான எரிசக்தி ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதில் ஆர்வம் காட்டியுள்ளது. இதுதொடர்பான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகின்றன."

வெளிவிவகார அமைச்சகத்தின் இந்த அறிக்கையில், ரஷ்ய எண்ணெய் கொள்முதலை நிறுத்துவதாக டிரம்பிடம் பிரதமர் மோடி உறுதி அளித்தாரா? இல்லையா? என்பது குறித்து நேரடியாகத் தெரிவிக்கப்படவில்லை. மாறாக, இந்தியாவின் எரிசக்தி கொள்முதல் முடிவுகள் அதன் தேசிய நலன்களை அடிப்படையாகக் கொண்டவை என்பதே வலியுறுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக, அமெரிக்காவின் ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், "ரஷ்ய மசகு எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக பிரதமர் மோடி தன்னிடம் இன்று (புதன்கிழமை) உறுதியளித்தார். இது ரஷ்யாவுக்கு எதிரான உலகளாவிய அழுத்தத்தில் மிகப்பெரிய முன்னேற்றம்" எனத் தெரிவித்திருந்தார்.

டொனால்ட் ட்ரம்பின் இந்த அறிவிப்புக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். தனது சமூக ஊடகப் பதிவில், "டிரம்பைக் கண்டு மோடி பயப்படுகிறார்.ரஷ்யாவின் எண்ணெய்யை இந்தியா வாங்காது என்று முடிவு செய்து, அதை டிரம்பை அறிவிக்க அனுமதிக்கிறார்" என்று ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/227876

  • கருத்துக்கள உறவுகள்

முன்னால் அவுஸ்ரேலிய பிரதமர் ஊடக பிரச்சாரங்களையும், உலக அரச தலைவர்களின் முட்டாள்தனத்தினையும் கோடிட்டு காட்டுகிறார்.

2023 இல் நிகழ்ந்த இந்த நிகழ்ச்சியிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார், இப்படி பல தலைவர்கள் இருந்தால் தேவையற்ற பிரச்சினைகளில் மக்கள் தமது வாழ்க்கையினை தொலைக்காமல் இருப்பார்கள், உலகம் நிம்மதியாக இருக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

'ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்காது' - டிரம்ப் மீண்டும் அறிவிப்பு

18 Oct, 2025 | 11:30 AM

image

ரஷ்யாவிடம் இருந்து இந்தியா மசகு எண்ணெய் இறக்குமதி செய்வதைக் கிட்டத்தட்ட நிறுத்திவிட்டது என அமெரிக்க ஜனதிபதி டொனால்ட் டிரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார். இருப்பினும், இது குறித்த அதிகாரபூர்வமான தகவல் எதுவும் இந்திய அரசிடமிருந்து வரவில்லை.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், உக்ரைன் ஜனாதிபதி *ஜெலன்ஸ்கியுடன் வொஷிங்டன் வெள்ளை மாளிகையில் சந்திப்பு நடத்திய பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்காது. அவர்கள் (இந்தியா) ஏற்கனவே பின்வாங்கத் தொடங்கிவிட்டனர். கிட்டத்தட்ட ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்திவிட்டது" என்று தெரிவித்தார்.

உக்ரைனின் பாதுகாப்பு, எரிசக்தி தேவைகள் மற்றும் ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளை அதிகரிப்பது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இந்தச் சந்திப்பில் விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்குப் பிறகு, ஐரோப்பிய நாடுகள் ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை ரத்து செய்தன. இதனையடுத்து, ரஷ்யா இந்தியாவுக்கு மலிவு விலையில் மசகு  எண்ணெய் வழங்கத் தொடங்கியது.

இதன் விளைவாக, 2018 முதல் 2020 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த எண்ணெய் இறக்குமதியில் வெறும் 1.7% ஆக இருந்த ரஷ்யாவின் பங்கு, 2023-24 நிதியாண்டில் 40% ஆக உயர்ந்தது. இதன் மூலம் ரஷ்யா, இந்தியாவுக்கு மசகு எண்ணெய் வழங்கும் நாடுகளில் முதலிடம் பிடித்தது.

ரஷ்யாவிடம் இருந்து இந்தியா அதிக அளவில் எண்ணெய் இறக்குமதி செய்யத் தொடங்கியதிலிருந்து, அமெரிக்கா இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தது. மேலும், டிரம்ப் நிர்வாகம் ரஷ்ய எண்ணெய் இறக்குமதிக்கு இந்தியா மீது 25% கூடுதல் வரியும் விதித்திருந்தது.

கடந்த 15 ஆம் திகதி டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பில், ரஷ்யாவிடம் இருந்து மசகு எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்துவதாகப் பிரதமர் மோடி உறுதியளித்துள்ளதாகக் கூறியிருந்தார்.

ஆனால், இந்தத் தகவல் குறித்து இந்திய மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், "பிரதமர் மோடியுடன் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அப்படி ஒரு தொலைபேசி உரையாடல் நடத்தியது எனக்குத் தெரியாது" என்று திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார்.

புதிய தகவல்களின்படி, ஒக்டோபர் மாதத்தின் முதல் பாதியில் இந்தியா ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை மீண்டும் அதிகரித்து உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது, இது டிரம்ப்பின் சமீபத்திய கூற்றுக்கு முரணாக உள்ளது.

https://www.virakesari.lk/article/228052

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

அப்போது அவர், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்காது. அவர்கள் (இந்தியா) ஏற்கனவே பின்வாங்கத் தொடங்கிவிட்டனர். கிட்டத்தட்ட ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்திவிட்டது" என்று தெரிவித்தார்.

இந்தியாவை ரசியாவிடமிருந்து வாங்காதே என்று சொல்ல முதல்

ரசியாவிடமிருந்து அமெரிக்காவும் ஐரோப்பாவும் நிற்பாட்டி

முன்மாதிரியாக நடக்க வேண்டும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.