Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சில கேள்விகள் - சில புரிதல்கள்

----- -------- ------

*13 ஐ நடைமுறைப்படுத்திக் காண்பிக்குமாறு சிங்கள தலைவர்களை வல்லரசுகள் வற்புறுத்துமா?

* 2009 இற்குப் பின்னர் 13 ஐ கோருமாறு தமிழர்களை மாத்திரம் வற்புறுத்துவது ஏன்?

*ஜெனிவாவின் மடைமாற்றல்!

-------- --- ------

இலங்கை ஒற்றையாட்சி நாடாளுமன்றத்தில் 1988 இல் அறுதிப் பெரும்பான்மையோடு நிறைவேற்றப்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டிய பொறுப்பு இலங்கை அரசாங்கத்துக்கு உரியது.

13 ஐ தமிழர்கள் நிராகரிக்கின்றனர் என்பது வேறு.

நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி, தனது மனட்சாட்சியுடன் நேர்மையாக இயங்கினால், இனப் பிரச்சினை விவகாரத்தை 24 மணி நேரத்துக்குள் தீர்க்க முடியும் என்ற ஒரு பொதுக் கருத்து உண்டு.

ஆனால் ---

ஜேஆர் முதல் மகிந்த ரணில் வரையும் அதனை செய்யவில்லை.

சமாதான தேவதை என்று மார்தட்டிக் கொண்டு வந்த சந்திரிகாவும் போரை நாடினார்.

இடதுசாரி - சோசலிசம் என்றெல்லாம் புனை கதை சொல்லி வந்த அநுர, இலங்கை அரசாங்கத்துக்குச் சாதகமான 60/1 ஜெனிவா தீர்மானத்தைக் கூட நிராகரித்துவிட்டார்...

ஆகவே ------

A) 13 ஐ நடைமுறைப்படுத்துவதற்கு தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒற்றுமைப்பட வேண்டும். அல்லது அவர்கள் ஒத்துழைக்கிறார்கள் இல்லை என்று ஏன் இலங்கை அரசாங்கம் உலகம் எங்கும் சொல்லித்திரிய வேண்டும்?

B) அதனை இந்திய ஏன் நியாயப்படுத்த வேண்டும்?

அப்படியானால் ----

13 இல் இருந்து மிக முக்கியமான அதிகாரங்கள் மீளப் பெறப்பட்டபோது, தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஒத்துழைப்பு அல்லது அவர்களுடன் பேசப்பட்டதா?

இல்லையே?

1) ஒரு இரவில் ஜனாதிபதியின் கையொப்பத்துடன் வர்த்தமானி அறிவித்தல் மூலம், 15 இற்கும் மேற்பட்ட அதிகாரங்கள் தன்னிச்சையாக (Arbitrarily) மீளப் பெறப்பட்டிருக்கிறதே?

2) அதைவிடவும் இருக்கின்ற அதிகாரங்களை இயங்க விடாமல் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரம் தடுக்கிறதே?

இப் பின்னணியில் யதார்த்த அரசியல் பற்றிப் பேசும் சில போலியான முற்போக்குத் தமிழர்கள், 13 பற்றி தரும் விளக்கம் வேடிக்கையானது.

நூறு வருடங்களுக்கும் மேற்பட்ட இன முரண்பாட்டை முப்பது வருட ஆயுதப் போராட்டத்துடன் சமப்படுத்தி போர்க் குற்றங்கள் - மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் என்று மாத்திரம் ஜெனீவா வரையறை செய்திருக்கிறது...

அது மாத்திரமல்ல ---

ஒரு நாளில் அதுவும் ஒரு மணி நேர இடைவெளியில் நடைபெற்று முடிந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலையும், முப்பது வருட ஆயுதப் போராட்டத்தையும் ஒரே தராசில் போட்டு, ஒட்டுமொத்தமாக தனி நபர் பொறுப்புக் கூறல் என்றும் ஜெனீவா வரையறை செய்வது தான் மாபெரும் அரசியல் வேடிக்கை...

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் பற்றிய விவகாரத்தை மற்றொரு நிகழ்ச்சி நிரலில் உட்புகுத்தி ஆராய முடியும். பொருத்தமான நிகழ்ச்சி நிரல் ஜெனிவாவில் உண்டு. ஆனால் அவ்வாறு செய்யாதது ஏன்?

அத்துடன் ----

ஒட்டுமொத்த இலங்கைத்தீவு மக்களின் மனித உரிமை மீறல் விவகாரம் எனவும், 2022 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பொருளாதார குற்றங்கள் எனவும், அதிகாரத் துஷ்பிரயோகம் - ஊழல் மோசடி எனவும், இனப் பிரச்சினை விவகாரம் சுருக்கப்பட்டுள்ளது.

இந்த மடைமாற்றங்கள் ---

ஈழத்தமிழர்களின் ”சுயநிர்ணய உரிமை” ”இன அழிப்புக்கான சர்வதேச நீதி” ஆகியவற்றுக்கு எதிரான சதி அரசியல் என்று தானே பொருள் கொள்ள முடியும்?

புவிசார் அரசியல், குறிப்பாக இந்தோ - பசுபிக் பிராந்திய நலன் நோக்கில், அமெரிக்க - இந்திய அரசுகளை மையப்படுத்தியதாக ஐக்கிய நாடுகள் சபையின், இலங்கை குறித்த அணுகுமுறை உள்ளது.

ஆகவே -----

ஜெனிவாவுக்கும் அமெரிக்க - இந்திய அரசுகளுக்கும் இலங்கையில் நல்லிணக்கம் ஏற்பட வேண்டும் என விருப்பினால்-----

-------குறைந்த பட்சம் 13 ஐ நடைமுறைப்படுத்திக் காண்பிக்குமாறு சிங்கள தலைவர்களுக்கு கட்டளையிட முடியுமா?------

அரசியல் தீர்வுக்கான ஆரம்ப புள்ளியாக 13 ஐ கோருமாறு, 2009 இற்குப் பின்னரான சூழலில் பலவீனமாகவுள்ள தமிழர்களை மாத்திரம் ஏன் வலிந்து இழுக்கிறார்கள்?

அ.நிக்ஸன்-

பத்திரிகையாளர்-

https://www.facebook.com/1457391262/posts/pfbid02zEDUjWq26S1UhUSbMU4QE1kQoQ8MFHDVaZo9eVZ5zciM76pRk1dK8mK8FJQZ5M8wl/?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, ஈழப்பிரியன் said:

*13 ஐ நடைமுறைப்படுத்திக் காண்பிக்குமாறு சிங்கள தலைவர்களை வல்லரசுகள் வற்புறுத்துமா?

* 2009 இற்குப் பின்னர் 13 ஐ கோருமாறு தமிழர்களை மாத்திரம் வற்புறுத்துவது ஏன்?

வல்லரசு என எந்த நாடுகளை குறிப்பிடுகின்றீர்கள்?

ஸ்ரீலங்காவிற்கு வல்லரசு என்றால் சீனாவும் இந்தியாவும் தான்.

சும்மா ஒரு கதைக்கு.... ஸ்ரீலங்கா எண்ட குழந்தைக்கு இந்தியா அடிச்சால் சீனா ஓடிவந்து பால் குடுக்கும். சீனா அடிச்சால் இந்தியா ஓடிவந்து பால் குடுக்கும். கதை இப்பிடித்தான் மாறிமாறி ஓடிக்கொண்டிருக்கு...

நீங்கள் நினைக்கிற வல்லரசுகள் இந்தியாவை மீறி எந்தவொரு தும்பையும் அசைக்கப்போவதில்லை.புடுங்கப்போவதுமில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, குமாரசாமி said:

வல்லரசு என எந்த நாடுகளை குறிப்பிடுகின்றீர்கள்?

ஏன் ஐரோப்பா அமெரிக்கா எல்லாம் எந்த இடத்தில் வரும்?

இந்தியா சீனா எல்லாம் பின்னால தான் வரும்.

நாட்டுக்கு நாடு செய்து கொண்ட ஒப்பந்தப்படி இந்தியா தான்

முன்னணியில் நிற்க வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
29 minutes ago, குமாரசாமி said:

நீங்கள் நினைக்கிற வல்லரசுகள் இந்தியாவை மீறி எந்தவொரு தும்பையும் அசைக்கப்போவதில்லை.புடுங்கப்போவதுமில்லை.

6 minutes ago, ஈழப்பிரியன் said:

ஏன் ஐரோப்பா அமெரிக்கா எல்லாம் எந்த இடத்தில் வரும்?

29 minutes ago, குமாரசாமி said:

நீங்கள் நினைக்கிற வல்லரசுகள் இந்தியாவை மீறி எந்தவொரு தும்பையும் அசைக்கப்போவதில்லை.புடுங்கப்போவதுமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஈழப்பிரியன் said:

நூறு வருடங்களுக்கும் மேற்பட்ட இன முரண்பாட்டை முப்பது வருட ஆயுதப் போராட்டத்துடன் சமப்படுத்தி போர்க் குற்றங்கள் - மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் என்று மாத்திரம் ஜெனீவா வரையறை செய்திருக்கிறது...

ஜெனீவாவின் இயலாமை.

10 hours ago, ஈழப்பிரியன் said:

ஈழத்தமிழர்களின் ”சுயநிர்ணய உரிமை” ”இன அழிப்புக்கான சர்வதேச நீதி” ஆகியவற்றுக்கு எதிரான சதி அரசியல் என்று தானே பொருள் கொள்ள முடியும்?

ஒரு இனவழிப்பை செய்துபோட்டு, இலங்கையில் இனவழிப்பே நடைபெறவில்லை, நடந்ததெல்லாம் பயங்கரவாதம், மோதல் என்று காட்ட சிங்களம் தலையாலை ஓடி காலால நடக்குது. ஆனால் அழிக்கப்பட்ட நம்மினத்தின் பிரதிநிதிகள், ஜெனிவாவில் போய் அதை நிரூபிக்க முயற்சித்ததுமில்லை, மாறாக வீட்டிலிருந்து கொண்டு நடந்தது ஆயுதப்போராட்டம், அதை நாம் ஆதரிக்கவில்லை, இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என நிரூபிக்க ஆதாரமில்லை என வாதாடுகிறார்கள். அரசாங்கத்திற்கு கால அவகாசம் வேண்டிக்கொடுப்பதும் இரகசிய சந்திப்புகளை நடத்துவதும் செய்து கொண்டு எப்படி நமக்கு நிஞாயம் கிடைக்குமென எதிர்பார்க்க முடியும்? எய்தவன் இருக்க அம்பை நொந்து பயனென்ன?

  • கருத்துக்கள உறவுகள்

1987 ல் கையில் கிடைத்ததை தூக்கி குப்பையில் போட்டு திமிர் எடுத்துவிட்டு இப்போது வல்லரசுகள் 13 ஜ அமுல்படுத்த வற்புறுத்த வேண்டுமாம். கேடகவே சிரிப்பாய் உள்ளது. 😂

காற்றுள்ள போதே தூற்றிக்கொள். இப்போது காற்று போன பின்னர் புலம்புவதில் அர்ததம் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, satan said:

ஜெனீவாவின் இயலாமை.

ஒரு இனவழிப்பை செய்துபோட்டு, இலங்கையில் இனவழிப்பே நடைபெறவில்லை, நடந்ததெல்லாம் பயங்கரவாதம், மோதல் என்று காட்ட சிங்களம் தலையாலை ஓடி காலால நடக்குது. ஆனால் அழிக்கப்பட்ட நம்மினத்தின் பிரதிநிதிகள், ஜெனிவாவில் போய் அதை நிரூபிக்க முயற்சித்ததுமில்லை, மாறாக வீட்டிலிருந்து கொண்டு நடந்தது ஆயுதப்போராட்டம், அதை நாம் ஆதரிக்கவில்லை, இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என நிரூபிக்க ஆதாரமில்லை என வாதாடுகிறார்கள். அரசாங்கத்திற்கு கால அவகாசம் வேண்டிக்கொடுப்பதும் இரகசிய சந்திப்புகளை நடத்துவதும் செய்து கொண்டு எப்படி நமக்கு நிஞாயம் கிடைக்குமென எதிர்பார்க்க முடியும்? எய்தவன் இருக்க அம்பை நொந்து பயனென்ன?

அப்ப தமிழ் பிரதிநிதிகள் தான் "எய்தவன்" இனப்படுகொலையாளர்களான அரசு "அம்பு" என்கிறீர்களா😂?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, island said:

1987 ல் கையில் கிடைத்ததை தூக்கி குப்பையில் போட்டு திமிர் எடுத்துவிட்டு

அதற்கு நூறு வீதம் உத்தரவாதம் இருந்ததா?

அல்லது எனக்கு எதுவுமே தெரியவில்லையா?

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்ப காலங்களில் தமிழ் பிரதிநிதிகள் தான் இரத்தை எடுத்து இளைஞர்களுக்கு நெற்றியில் பொட்டாக வைத்து ஊசுப்பேற்றினார்களாம் அதனால் அவர்கள் எய்தவன் 🏹 என்பதில் வருவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
On 17/10/2025 at 01:38, ஈழப்பிரியன் said:

நூறு வருடங்களுக்கும் மேற்பட்ட இன முரண்பாட்டை முப்பது வருட ஆயுதப் போராட்டத்துடன் சமப்படுத்தி போர்க் குற்றங்கள் - மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் என்று மாத்திரம் ஜெனீவா வரையறை செய்திருக்கிறது...

7 hours ago, Justin said:

அப்ப தமிழ் பிரதிநிதிகள் தான் "எய்தவன்" இனப்படுகொலையாளர்களான அரசு "அம்பு" என்கிறீர்களா😂?

ஒரு இனப்படுகொலை இன்று சாதாரண பேசுபொருளாகியுள்ளது. அதற்காக இலங்கை, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அயராது உழைத்து, பல ராஜதந்திர வேலைகளை செய்துள்ளது. ஒரு பாதிக்கப்பட்ட இனத்தின் பிரதிநிதிகள் எதை சாதித்தார்கள்? அவர்கள் கூற்றை ஆமோதித்துக்கொண்டிருந்துள்ளார்கள். இதற்காகவா மக்கள் இவர்களுக்கு வாக்களித்தார்கள்? இவர்கள் மக்களின் ஏகோபித்த பிரதிநிதிகளாம், தாங்களே சொல்லிக்கொள்கிறார்கள், அதைத்தான் சொன்னேன்.

1 hour ago, விளங்க நினைப்பவன் said:

ஆரம்ப காலங்களில் தமிழ் பிரதிநிதிகள் தான் இரத்தை எடுத்து இளைஞர்களுக்கு நெற்றியில் பொட்டாக வைத்து ஊசுப்பேற்றினார்களாம் அதனால் அவர்கள் எய்தவன் 🏹 என்பதில் வருவார்கள்.

உண்மை என்றும் மறைந்து போகாது. என்னை கிண்டலடிப்பதுபோல் உண்மையை ஏற்று, ஞாபகப்படுத்தியதற்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

அதற்கு நூறு வீதம் உத்தரவாதம் இருந்ததா?

அல்லது எனக்கு எதுவுமே தெரியவில்லையா?

வரலாற்றில் வெற்றிகரமான பெரும்பாலான அரசியல் தீர்வுகள் தொடர்சசியான பரஸ்பர நம்பிக்கைகளை கட்டியெழுப்புவதன் மூலமே நடந்துள்ளன. ஆரம்பத்திலே 100 உத்தரவாதம் என்று கூறுவதே குழப்பும் தோக்கத்தை கொண்டது. துரதிஷரவசமாக அந்த நோக்கம் வெற்றியளித்தது. ஆனால் தமிழர்கள் தான் தோல்வியடைந்தனர்.

வாழ்கையில் சமூகம் சார்ந்த விடயங்கள் அனைத்தும் நம்பிக்கையின் அடிபடையிலேயே கட்டியெழுப்பப்படுகின்றன. எதையுமே நம்பாமல் அவநம்பிக்கையுடன் எதையும் பார்பபவன் இறுதியில் அதன் விளைவாக வாழ்கையை இழந்து புலம்புவான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 18/10/2025 at 10:46, island said:

வரலாற்றில் வெற்றிகரமான பெரும்பாலான அரசியல் தீர்வுகள் தொடர்சசியான பரஸ்பர நம்பிக்கைகளை கட்டியெழுப்புவதன் மூலமே நடந்துள்ளன. ஆரம்பத்திலே 100 உத்தரவாதம் என்று கூறுவதே குழப்பும் தோக்கத்தை கொண்டது. துரதிஷரவசமாக அந்த நோக்கம் வெற்றியளித்தது. ஆனால் தமிழர்கள் தான் தோல்வியடைந்தனர்.

வாழ்கையில் சமூகம் சார்ந்த விடயங்கள் அனைத்தும் நம்பிக்கையின் அடிபடையிலேயே கட்டியெழுப்பப்படுகின்றன. எதையுமே நம்பாமல் அவநம்பிக்கையுடன் எதையும் பார்பபவன் இறுதியில் அதன் விளைவாக வாழ்கையை இழந்து புலம்புவான்.

சரி... இன்று என்ன நடக்கின்றது? சிங்களம் தான் தமிழர் பிரச்சனையில் முரண்டு பிடிக்கின்றது என்றால் சர்வதேசமும் சிங்களம் சார்பாகத்தானே நிற்கின்றது.

ஒரு காலத்தில் சமாதானம் பேச வந்த நாடுகள் கூட தமிழர்கள் ஆரம்பகாலங்களில் கேட்ட உரிமைகளையே வாங்கிக்குடுக்க வக்கில்லாமல் நிற்கின்றார்கள்.

ஆனால் நீங்களோ அரைத்த மாவையே அரைப்பது போல் தமிழருக்குள்ளேயே குற்றங்களை தேடிக்கொண்டிருக்கின்றீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

சரி... இன்று என்ன நடக்கின்றது? சிங்களம் தான் தமிழர் பிரச்சனையில் முரண்டு பிடிக்கின்றது என்றால் சர்வதேசமும் சிங்களம் சார்பாகத்தானே நிற்கின்றது.

ஒரு காலத்தில் சமாதானம் பேச வந்த நாடுகள் கூட தமிழர்கள் ஆரம்பகாலங்களில் கேட்ட உரிமைகளையே வாங்கிக்குடுக்க வக்கில்லாமல் நிற்கின்றார்கள்.

ஆனால் நீங்களோ அரைத்த மாவையே அரைப்பது போல் தமிழருக்குள்ளேயே குற்றங்களை தேடிக்கொண்டிருக்கின்றீர்கள்.

நான் ஏற்கனவே கூறியபடி இவ்வாறான அரசியல் பிரச்சனைகளுக்கான தீர்வு என்பது யாராலும் தமது அலுமாரியில் இருந்து எடுத்து தர முடியாது. பிரச்சனையில் சம்பந்தப்பட்டோர் பேசி தீர்கக வேண்டிய விடயம்.

பிரியாணி தான் வேண்டும் என்று அடம் பிடித்து தாம் சமைத்த சாப்பாட்டை தாமே கொட்டியவர்கள் சிறிது காலம் பசியிருக்கத்தான் வேண்டும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.