Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தங்கத்திற்காகவே சுமார் 1 இலட்சம் வடக்கு முஸ்லீம் மக்களை விடுதலைப்புலிகள் வெளியேற்றினர் ; கறுப்பு ஒக்டோபர் தின நிகழ்வில் சட்டமாணி பி.எம் முஜிபுர் ரஹ்மான்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ரஞ்சித் said:

இப்படிச் சென்று கொண்டிருந்த நாட்களில் நான் கொழும்பிலிருந்து வெளிவரும் சரிநிகரில் எழுதத் தொடங்கியிருந்தேன்

நிழலியும் இதில் எழுதியிருந்தார் என எண்ணுகிறேன்.

7 hours ago, ரஞ்சித் said:

எது எப்படியிருந்தபோதிலும், முஸ்லீம்களை வெளியேற்றியதில் எனக்கு உடன்பாடு இருக்கவில்லை. பேரினவாதத்தில் இருந்து விடுபட போராடும் ஒரு சிறுபான்மையினம், தன்னிலும் சிறுபான்மையான இன்னொரு இனத்தை பேரினவாதம் போன்று நடத்துவது சரியாகப் படவில்லை. அதனாலேயே அப்படி எழுத நேர்ந்தது. ஆனால் வெளியேற்றத்தின்பின்னர் அவர்களின் அரசியல்த் தலைமைகளும், ஊர்காவற்படையினரும், சாதாரண முஸ்லீம்களில் ஒருபகுதியினரும் நடந்துகொண்ட விதம் இதுபற்றித் தொடர்ந்து நான் பேசுவதை நிறுத்தி விட்டது.

விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து

இது ஒரு துன்பியல் நிகழ்வு என சொன்னதோடு அவர்களை கரம்பற்றி வரவேற்றனர்.

ஆனால் தமிழருக்கு முஸ்லீம்களால் இழைக்கப்பட்ட கொடூரங்களுக்காக முஸ்லீம் தரப்பிலிருந்து வருத்தம் தெரிவித்ததாக தெரியவில்லை.

  • Replies 67
  • Views 2.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • ஐயா ஒரு ஆய்வு ஒரு ஆய்வு எங்கிறாரேயொழிய இறுதிவரை அது என்ன ஆய்வு என்று எவரால் எங்கு மேற்கொள்ளப்பட்ட ஆய்வு என்பதை சொல்லாமலே போய்க்கொண்டிருக்கிறார். வடக்கிலிருந்து முஸ்லீம்கள் அவர்களால் எடுத்து செல்லக்கூட

  • ரஞ்சித்
    ரஞ்சித்

    1993 கார்த்திகை மாதம். உயர்தரம் எழுதிவிட்டு பெறுபேற்றிற்காகக் காத்திருந்த காலம். கொழும்பு தெகிவளையில் அமைந்திருந்த மயோன் கம்பியூட்டர் நிறுவனத்தில் புலமைப் பரிசிலூடாக ஒரு வருட காலம் கற்கை நெறி ஒன்றை மே

  • குமாரசாமி
    குமாரசாமி

    உங்கள் உதாரணங்களுக்கு வேறு தெரிவுகளே இல்லையா? பக்கிங்காம் அரண்மனையே நாறி நசிந்து சகதிக்குள் அழிந்து கொண்டிருக்கு. (அண்மைய சம்பவங்கள் கேவலத்திலும் கேவலம்) சகோ! இன்னும் றோயல் நினைப்பிலையே திரியிறியள் போ

9 hours ago, ரஞ்சித் said:

1993 கார்த்திகை மாதம். உயர்தரம் எழுதிவிட்டு பெறுபேற்றிற்காகக் காத்திருந்த காலம். கொழும்பு தெகிவளையில் அமைந்திருந்த மயோன் கம்பியூட்டர் நிறுவனத்தில் புலமைப் பரிசிலூடாக ஒரு வருட காலம் கற்கை நெறி ஒன்றை மேற்கொள்ளும் தகுதி பெற்றிருந்தேன். எனது வகுப்பில் ஆண்களும் பெண்களுமாக சுமார் 15 அல்லது 16 மாணவர்கள் இருந்தார்கள். தமிழர்கள், முஸ்லீம்கள் என்று ஆண்களும் பெண்களும். இவர்களுள் ஒரு சிலருடன் உடனடியாகவே நட்பாகிப் போய்விட்டேன். மலர்மன்னன் (என்னுடன் உயர்தரத்தில் சில டியூஷன் வகுப்புகளுக்கு வந்ததனால் முன்னரே பழக்கமானவன்), மதியக்கா(உடுப்பிட்டி), கலா அக்க (சிலாபம்), பைரூஸ் (புத்தளம்), சிவா (காரைநகர்) என்று விரல் விட்டு எண்ணக் கூடிய சில நண்பர்கள். இவர்களுள் மலர் மன்னனும், பைரூஸும் என்னூடன் மிகவும் நெருக்கமாகிவிட்டார்கள். வகுப்புக்கள் முடிந்த நேரங்களுள் இவர்களுடன் ஊர்சுற்றுவதே வழமையாகிவிட்டது. பைரூஸ் பாணதுறையில் இருந்தே கொழும்பிற்கு வந்து போவான். மலர்மன்னன் கொட்டாஞ்சேனையில் வசித்து வந்தான். 

மலரும், பைரூஸும் இயல்பாகவே கவிதை எழுதுவதில் வல்லவர்கள். வைரமுத்து, கவிக்கோ எழுதிய கவிதைகளை எனக்கு அடையாளம் காட்டி கவிதைகளில் ஈடுபாட்டினை உருவாக்கித் தந்தவன் பைரூஸ். அவன் தமிழ் எழுதுவது அச்சியந்திரத்தில் எழுதப்பட்ட‌துபோல அழகாயிருக்கும். விரயமாகும் வேளைகளில் ஏதோவொரு தலைப்பிற்குக் கவிதை எழுதுவோம். பைரூஸ் எழுதும் கவிதைகள் இரு வரிகளில் ஹைக்கூ வடிவத்தில் பளிச்சென்று பற்றிக்கொள்ளும். மலர் மன்னனும் அப்படித்தான். 

இப்படிச் சென்று கொண்டிருந்த நாட்களில் நான் கொழும்பிலிருந்து வெளிவரும் சரிநிகரில் எழுதத் தொடங்கியிருந்தேன். ஒரு முறை இந்தியப்படை ஈழத்தமிழர்களுக்கு தியாகங்களைப் புரிந்தது என்று மாலன் எனும் பெயரில் வெளிவந்த கட்டுரைக்கு நான் எழுதிய எதிர்வினையினை சரிநிகர் அப்படியே பிரசுரித்திருந்தது. அதனை நான் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. ஆகவே அதுபற்றி நான் பைரூஸுடனும், மலருடனும் பேசும்போது வெகுவாகவே பாராட்டியிருந்தார்கள். ஒரு நாள் தனது கதைபற்றி பைரூஸ் பேசிக்கொண்டிருக்கும்போது, தனது தகப்பனார் ஒரு தமிழ் ஆசிரியர் என்றும், மன்னாரில் அவர்கள் வசித்து வந்தார்கள் என்றும், புலிகள் வெளியேறச் சொல்லி அறிவித்ததன் பின்னர் கையில் அகப்பட்ட ஒரு சில உடைகளோடு தாம் கிளம்பி புத்தளத்திற்கு வந்ததாகக் கூறினான். தமிழரின் விடுதலைப் போராட்டம் குறித்து ஆதரவான நிலைப்பாட்டினைக் கொண்டிருந்த அவன் புலிகளின் தாக்குதல்கள் குறித்து நானும் மலரும் கிலாகித்துப் பேசும்போது தவறாமல் அவனும் கருத்துப் பகிர்வான். ஆகவே, அவன் முன்னால் எமது விடுதலைப் போராட்டம் குறித்துப் பேசுவது எமக்குச் சிரமாமாக இருந்ததில்லை. ஒருமுறை அவனது வெளியேற்றம் குறித்துப் பேசிக்கொண்டிருந்தபோது முதன்முறையாக அவனது இடத்தில் இருந்து அவ்வெளியேற்றத்தினை என்னால் உணர முடிந்தது.

ஆகவே அன்றிரவு வட மாகாணத்திலிருந்து முஸ்லீம்களை புலிகள் வெளியேற்றியதுபற்றி சரிநிகரில் எழுதுவதென்று தீர்மானித்தேன். முதன்முறையாக புலிகளுக்கெதிராக என்னால் முன்வைக்கப்பட்ட விமர்சனம் அது. முஸ்லீம்களை எதற்காக அன்று வெளியேற்றினார்கள், வெளியேறும்போது எவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றன, எத்தனை முஸ்லீம்கள் பாதிக்கப்பட்டார்கள் என்கிற எதுவித தெளிவும் இன்றி என்னால் அந்த விமர்சனம் முன்வைக்கப்பட்டது. ஏனென்றால் முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்ட காலத்தில் நான் யாழ்ப்பாணத்தில் இருக்கவில்லை. 1988 இற்குப் பின்னர் அங்கு வாழ்ந்ததுகூடக் கிடையாது. ஆகவே வெளியேற்றம் குறித்த சரியான பார்வையின்றி என்னால் அந்த விமர்சனம் முன்வைக்கப்பட்டது. 

எதிர்பார்த்தது போலவே சரிநிகரும் எந்தத் தணிக்கையும் இன்றி அதனைப் பிரசுரித்தது. பைரூஸுடன் அக்கட்டுரை பற்றி பகிர்ந்துகொண்டேன். உணர்ச்சி மேலீட்டால் கண்கலங்கிய அவன், அக்கட்டுரையினை எழுதியதற்காக எனக்கு நன்றி கூறினான். பின்னர் ஒருநாள் என்னிடம் வந்து எனது கட்டுரையினை அகதி என்ற பெயரில் வெளிவந்த முஸ்லீம்களுக்கான பத்திரிக்கை ஒன்றில் மீள் பிரசுரிக்க அனுமதியளிக்கிறாயா என்று கேட்டான். நானும் ஆமென்று கூறவே, அக்கட்டுரை மீளவும் பிரசுரமானது. இதனை அறிந்தபோது மலர்மன்னன் கொதித்துப் போனான். வெளியேற்றியது பிழை என்று உன்னால் எப்படிக் கூறமுடியும்? கிழக்கில் அவர்கள் எம்மை நடத்தும் முறை பற்றி நீ அறிந்திருக்கிறாயா? கொழும்பில் இருந்துகொண்டு, நீ நினைத்தபடி இப்படி எழுதியிருக்கிறாய் என்று கடிந்துகொண்டான். கல்முனை பாண்டிருப்பைப் பிறப்பிடமாகக் கொண்ட அவனுக்கு 90 களின் ஆரம்ப காலப்பகுதியில் அங்கு இடம்பெற்ற தமிழ் மக்கள் படுகொலைகள், அவற்றில் முஸ்லீம் ஊர்காவற்படையினரின் பங்களிப்பு என்பன நன்கு தெரிந்தே இருந்தது. ஆகவே, நான் வெறுமனே புலிகளை விமர்சித்து எழுதியிருந்தது அவனுக்குக் கடுமையான கோபத்தை ஏற்படுத்தியிருந்தது. 

எது எப்படியிருந்தபோதிலும், முஸ்லீம்களை வெளியேற்றியதில் எனக்கு உடன்பாடு இருக்கவில்லை. பேரினவாதத்தில் இருந்து விடுபட போராடும் ஒரு சிறுபான்மையினம், தன்னிலும் சிறுபான்மையான இன்னொரு இனத்தை பேரினவாதம் போன்று நடத்துவது சரியாகப் படவில்லை. அதனாலேயே அப்படி எழுத நேர்ந்தது. ஆனால் வெளியேற்றத்தின்பின்னர் அவர்களின் அரசியல்த் தலைமைகளும், ஊர்காவற்படையினரும், சாதாரண முஸ்லீம்களில் ஒருபகுதியினரும் நடந்துகொண்ட விதம் இதுபற்றித் தொடர்ந்து நான் பேசுவதை நிறுத்தி விட்டது.

1 hour ago, ஈழப்பிரியன் said:

நிழலியும் இதில் எழுதியிருந்தார் என எண்ணுகிறேன்.

உலகம் மிகச் சின்னது என நினைக்க தோன்றுகின்ற தருணம் இது.

நான் குருணாகலில் அப்பா அம்மாவுடன் வாழ்ந்து கொண்டிருந்த காலகட்டத்தில் தான் வடக்கில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டனர். அப்படி வெளியேற்றப்பட்டவர்களில் ஒரு சிறு பகுதியினர் குருணாகலுக்கும் வந்து வாழத் தொடங்கினர்.

சிங்களத்தில் ஒரு சொல் தானும் தெரியாத, மன்னாரில் இருந்து வெளியேற்றப்பட்ட இரண்டு குடும்பங்களுடன் பழகும் வாய்ப்பு அங்கிருக்கும் போது கிடைத்தது. மன்னாரில் ஒரு பெரிய புடவைக் கடையின் உரிமையாளராக இருந்த ஒருவரின் குடும்பமும் அதில் ஒன்று (மூன்று பெண் பிள்ளைகளும் ஒரு ஆண் பிள்ளையும் கொண்ட குடும்பம்). குடும்பத்தை காப்பாற்ற குருணாகலில் வீதியில் பெட் சீட் விரித்து சிறு சிறு பொருட்களை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டு, அவர்கள் பட்ட பாடுகளையும், அவமானங்களையும் நேரில் பார்த்தவன் நான்.

அந்த நேரத்தில் தான் சரிநிகர் பத்திரிகை என் கண்ணில் பட்டது. பேராசிரியர் சிவத்தம்பி போன்றோரோ முஸ்லிம்களின் வெளியேற்றம் தொடர்பாக கள்ள மெளனம் சாதித்துக் கொண்டு இருந்த நேரத்தில் சரிநிகர் முஸ்லிம்களின் வெளியேற்றம் தொடர்பாக கடும் விமர்சனங்களை முன் வைத்துக் கொண்டு இருந்தது. முஸ்லிம்களின் கட்டாய வெளியேற்றம் தொடர்பாக எதிர் கருத்துகளை கொண்ட என்னைப் போன்ற எண்ணிக்கையில் குறைவான தமிழ் மக்களின் பகுதியினரின் ஆன்மாவாக அது ஒலித்துக் கொண்டு இருந்தது.

இதே காரணத்திற்காகத்தான் ரஞ்சித்தும் சரிநிகரில் பங்களிக்க தொடங்கியிருக்கின்றார் என அறிய ஆச்சரியமாக இருக்கின்றது.

......அன்றில் இருந்து சரிநிகரில் நானும் பல சிறு கட்டுரைகளையும், நையாண்டி பத்திகளையும் எழுத ஆரம்பித்து, சரிநிகர் நிறுத்தப்படும் வரை அது தொடந்தது. சரிநிகர் மூலம் தான் எனக்கு சேரன், வ,ஐ.ச ஜெயபாலன், விக்கினேஸ்வரன், கவிஞன் றஷ்மி, அவ்வை, கொல்லப்பட்ட டி.சிவராம் போன்றோரின் தொடர்பும் நட்பும் கிடைத்து இன்று வரைக்கும் தொடர்கின்றது..

1 hour ago, ஈழப்பிரியன் said:

விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து

இது ஒரு துன்பியல் நிகழ்வு என சொன்னதோடு அவர்களை கரம்பற்றி வரவேற்றனர்.

ரணில் உடனான சமாதான முயற்சி காலகட்டத்தில் 2002 இல் முதன் முதலில் ஏ9 வீதி திறக்கப்பட்டு யாழுக்கு வீதி வழி தெற்கில் இருந்து சென்றவர்களின் நானும் என் சிறு நண்பர்கள் குழுவும் இருந்தது. நான் வெளிக்கிட்ட அன்று தான் தலைவரின் பிரசித்தி பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பும் வன்னியில் இடம்பெற்றுக் கொண்டு இருந்தது.

அன்று தெற்கில் இருந்து சென்றவர்களில் ஏழு எட்டு முஸ்லிம்களும் இருந்தனர். அவர்களைப் பார்க்கும் போது முஸ்லிம் 'பெரியவர்கள்' போன்று, தாடி வளர்த்து, வெள்ளை உடை அணிந்து வந்திருந்தனர். புலிகளின் முதலாவது காவலரணில் இருந்த புலிகள் இந்த முஸ்லிம்களை இனிப்பும் கொடுத்து வரவேற்று தம் பயணத்தை தொடர அனுமதித்தனர்.

புலிகள் முஸ்லிம்களை வெளியேற்றத்தை துன்பியல் நடவடிக்கை என குறிப்பிடவில்லை. ஆனால் அரசியல் பிரிவில் இருந்தவர்கள் அது ஒரு பெரும் பிழை என்று வெவ்வேறு வடிவங்களில் வெளிப்படுத்தி இருந்தனர். முஸ்லிம்களை கட்டாயப்படுத்தி வெளியேற்றியது தொடர்பாக தலைவரிடம் கேள்வி கேட்டனர் என ஞாபகம் உள்ளது. ஆனால் அவர் என்ன பதில் சொன்னார் என நினைவில் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
On 23/10/2025 at 14:43, alvayan said:

அருமையான .சாட்சி

இது நற்சான்றிதழ் சாட்சி

இப்படியே சாட்ட்சியும் சான்றிதழ்களும் பெறவே ...அக்குரணை நியூஸ் இதில் இணைக்கப்பட்டது ...எதிர் பார்த்ததைவிட அதிகம் கிடைத்திருக்கிறது ...இன்னமும் கிடைக்கும்

இனி இந்த முசுலிம் சட்டத்தரணி ஒருலட்டசமல்ல இரண்டுலட்சம் முசுலிம் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தோம் ...பறித்த தங்கத்தின் பெறுமதி ஒரு டன் என்பார்...இப்ப விளங்குதோ தலைவர் ஏன் நேரத்துக்குப் போனவர் என்பது

அல்வாயர் @alvayan எனது அனுபவங்களை, நான் கேட்டதை, பார்த்ததை கூறினேன் அவ்வளவுதான். 1995 யாழை விட்டு வெளியேறும் வரை பல்வேறு நேரடி அனுபவங்கள், அப்போது நடந்த சம்பவங்கள், நாம் பார்த்தது, அறிந்தது, கேட்டது நினைவில் உள்ளன. காரணங்கள் வேறுபாடு உள்ளவை, ஆனால் எல்லாருமே வெவ்வேறு மட்டங்களில், வெவ்வேறு நிலைகளில், வெவ்வேறு தருணங்களில் பொதுமக்களிற்கு சிரமங்களை ஏற்படுத்தினார்கள். இவை மிரட்டல்கள் தொடக்கம் படுகொலை வரை சென்றன. ஒவ்வொருவருக்கும் தமது கோணத்தில் பார்க்கும்போது தாம் செய்தவை சரியாகவே தென்படும்.

  • கருத்துக்கள உறவுகள்
On 24/10/2025 at 16:44, நிழலி said:

தலைவரிடம் கேள்வி கேட்டனர் என ஞாபகம் உள்ளது. ஆனால் அவர் என்ன பதில் சொன்னார் என நினைவில் இல்லை.

In a 1994 interview with the BBC, the LTTE leader Velupillai Prabhakaranexpressed his regret over the expulsion and stated that the Muslims belonged to Jaffna and would permit their resettlement once normalcy was restored.[20] Later on, in a press conference in Kilinochchi in 2002, the LTTE political strategist Anton Balasingham appeared alongside the LTTE leader and explained that they had already apologized to the Muslims and that the Tamil homeland also belonged to the Muslim people.[21][22]Balasingham also expressed that the expulsion of the Muslims from Jaffna was a political blunder which could not be justified and said that the LTTE leadership would be willing to resettle them in the northern district.[23]

1994 ஆம் ஆண்டு பிபிசிக்கு அளித்த பேட்டியில், எல்.ரீ.ரீ.ஈ தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வெளியேற்றத்திற்கு வருத்தம் தெரிவித்து, முஸ்லிம்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், இயல்புநிலை திரும்பியவுடன் அவர்களின் மீள்குடியேற்றத்தை அனுமதிப்பதாகவும் கூறினார். [20] பின்னர், 2002 ஆம் ஆண்டு கிளிநொச்சியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், எல்.ரீ.ரீ.ஈ அரசியல் மூலோபாயவாதி அன்டன் பாலசிங்கம் எல்.ரீ.ரீ.ஈ தலைவருடன் தோன்றி, அவர்கள் ஏற்கனவே முஸ்லிம்களிடம் மன்னிப்பு கேட்டுவிட்டதாகவும், தமிழ் தாயகமும் முஸ்லிம் மக்களுக்கு சொந்தமானது என்றும் விளக்கினார். [21][22] பாலசிங்கம் யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது ஒரு அரசியல் தவறு என்றும், அதை நியாயப்படுத்த முடியாது என்றும், எல்.ரீ.ரீ.ஈ தலைமை அவர்களை வடக்கு மாவட்டத்தில் மீள்குடியேற்றத் தயாராக இருக்கும் என்றும் கூறினார். [23]

பிகு

ஆதார கட்டுரைகளை விக்கியின் கால்குறிப்பில் காணலாம்.

On 24/10/2025 at 16:33, நிழலி said:

சரிநிகர் மூலம் தான் எனக்கு சேரன், வ,ஐ.ச ஜெயபாலன், விக்கினேஸ்வரன், கவிஞன் றஷ்மி, அவ்வை, கொல்லப்பட்ட டி.சிவராம் போன்றோரின் தொடர்பும் நட்பும் கிடைத்து இன்று வரைக்கும் தொடர்கின்றது..

போன வருடம் காலமான தியாகுவை மறந்துவிட்டீர்களே?

21 hours ago, goshan_che said:

I

போன வருடம் காலமான தியாகுவை மறந்துவிட்டீர்களே?

சரிநிகரின் மூலம் அறிமுகமானோரின் list பெரியது. அதில் சிலரைத் தான் குறிப்பிட்டு இருந்தேன்.

யாழின் மூலமும் அறிமுகமானோரும் பலர்.

  • கருத்துக்கள உறவுகள்
On 24/10/2025 at 20:27, goshan_che said:

பைரூஸ் இடம் பெயர்ந்து வாழ்ந்த இடம் நுரைச்சோலை என நினைக்கிறேன்.

வீரகேசரியில் கவிதைகள் எழுதுவார்.

பண்பாண மனிதர்.

இப்போ எப்படி இருக்கிறார் என் அறிய ஆவல்.

ஆம், அவரேதான்.

கொழும்பு பல்கலையில் மருத்துவம் கற்று இன்று அவுஸ்த்திரேலியா மெல்பேர்னில் தனியார் மருத்துவ நிலையமொன்றினை நடத்தி வருகிறார். எப்போதாவது தொலைபேசியில் பேசுவோம். ஆனால் அதே நட்பு இன்னமும் தொடர்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

https://www.facebook.com/share/17Ssyf9XgK/?mibextid=wwXIfrபோலித் தங்க மோசடி: இலங்கை எம்.பி.யை ஏமாற்றியதாக 11 பேருக்கு ஜாமீன்

கானா வின் அக்ராவில் உள்ள நீதிமன்றம் ஒன்று, போலித் தங்க ஒப்பந்தம் மூலம் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் முஹம்மது ஹிஸ்புல்லாவிடம் இருந்து 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை மோசடி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட 11 பேருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது. இது குறித்து கானா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குற்றம் சாட்டப்பட்ட பதினொருவருக்கும் தலா 500,000 கானா செடிகள் - Ghanaian Cedi (GHS) (சுமார் $33,000) ஜாமீன் தொகை விதிக்கப்பட்டது.

சந்தேக நபர்கள் 2023-ஆம் ஆண்டில் சதி செய்து, அதிக அளவிலான தங்கத்தை வழங்க முடியும் என்று கூறி, இலங்கையின் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான டாக்டர் ஹிஸ்புல்லாவை மோசடி செய்ததாக வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். பணத்தைப் பெற்ற பிறகு, அந்த குழுவினர் தங்கத்தை வழங்கத் தவறியதாகவும் குறிப்பிடப்படுகிறது.

தேசிய பாதுகாப்பு நடவடிக்கையின் போது, சந்தேக நபர்கள் அக்ராவின் வெய்ஜா எஸ்.சி.சி பகுதியில் கடந்த அக்டோபர் 16-ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். அதிகாரிகள் தங்கமாக இருக்கலாம் என்று நம்பப்படும் இரண்டு மஞ்சள் உலோகப் பொருட்களை இவர்களிடமிருந்து கைப்பற்றினர். அவற்றின் உண்மைத்தன்மையைச் சரிபார்க்க ஆய்வகச் சோதனைகள் நடைபெற்று வருகின்றன.

குற்றம் சாட்டப்பட்ட 11 பேர் மீதும் குற்றம் செய்யச் சதி செய்தல், பொய்ப் பிரதிநிதித்துவத்தின் மூலம் மோசடி செய்தல் மற்றும் மோசடி செய்ய முயற்சித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் நவம்பர் 20-ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, புலவர் said:

சந்தேக நபர்கள் 2023-ஆம் ஆண்டில் சதி செய்து, அதிக அளவிலான தங்கத்தை வழங்க முடியும் என்று கூறி, இலங்கையின் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான டாக்டர் ஹிஸ்புல்லாவை மோசடி செய்ததாக

கானாவில் தங்கம்

ஹிஸ்புல்லா மோசடி

மஞ்சள் நிறத்திலான உலோகப்பொருட்கள் கண்டு பிடிப்பு

அத்தனையும்

முக நூல் பாதி ..... மிகுதி பாதி

எங்கேயெல்லாம் சென்று தேடுவார்களோ🙂

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே கருத்தாடல் செய்யப்படும் விடயம் விடுதலைப்புலிகள் யாழ் மற்றும் மன்னார் பகுதிகளில் இருந்து முஸ்லீம்களை விரட்டிய காலத்தில் விரட்டப்பட்ட முஸ்லீம்களிடம் இருந்த தங்க நகைகளை அபகரித்தார்களா? இல்லையா? என்பது மட்டுமே

  • கருத்துக்கள உறவுகள்+

இதனோடு தொடர்புடையதால்... ஒரு தகவலை இணைத்துச் செல்கிறேன்.

இந்த "முஸ்லிம் வெளியேற்றம்" நடப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர் தலைநகரின் கிண்ணியா பரப்பில் வாழ்ந்த தமிழருக்கு முஸ்லிம்கள் செய்தவை:

"தமிழரின் பொருட்களை முஸ்லிம்கள் எவ்வாறு நயவஞ்சகமாக பிடுங்கினர் என்று உள்ளது"

முஸ்லிம்கள் செய்த நாச வேலையாக புலிகளே வெளியிட்டவை இந்தத் தகவல்கள்

உதிக்கும் திசை நோக்கி உன்னத பயணம்... | நெடுந்தொடர்

On 2/9/2025 at 09:28, நன்னிச் சோழன் said:

பாகம் - 10

“தம்பலகாமம் கோவிலடி முகாம் தான் மிகப் பயங்கரமானது” என்ற முன்னுரையுடன் கூறத்தொடங்கினார். தம்பலகாமம் இராணுவ முகாம் பொறுப்பதிகாரி ஒரு நாள் பொதுமக்களைக் கூப்பிட்டுக் கூறினான்: “இங்கு 18 குடும்பங்கள் புலிகளின் நெருங்கிய ஆதரவாளர்கள் என்ற தகவல் எனக்குக்கிடைத்துள்ளது. இவர்களை அழிப்பது. எனக்குப் பெரிய விடயமல்ல, ஜே. வி. பி. பிரச்சினையில் ஐம்பது சிங்கள இளைஞர்களை எனது கையால் கொன்றுள்ளேன். எனது சொந்த இனத்திலேயே  ஐம்பதுபேரைக் கொன்ற எனக்கு இது ஒரு சின்ன விடயம்” என்று கூறினான் என்றார்.

முஸ்லிம் மக்களால் ஏற்பட்ட பிரச்சினைகளைச் சொல்லுங்கள் என்றேன். முன்னரெல்லாம் கலவரம் வரும்போது முஸ்லிம் மக்கள் தான் உதவுவார்கள். இந்த முறை எல்லாம் தலைகீழாக நடக்கிறது என்று சொன்னார். ஏன் என்று கேட்டேன். பள்ளிவாசல் மட்டத்தில் தமிழருக்கு எதிரான முடிவுகள் மேற்கொள்ளப்படுவதுதான் காரணம் என்றார்.

தொடர்ந்து இந்தமுறையும் கலவரம் வந்தவுடன் கிண்ணியாவையும் அதனைச் சுற்றியுள்ள முஸ்லிம் கிராமங்களையும் நோக்கித்தான் தமிழர்கள் ஓடினார்கள். ஆனால் அங்கே நடந்த விடயங்களைப் பார்த்தால்... என்று சொல்லி சற்று நிறுத்திவிட்டுத் தம்பலகாமம் கூட்டாம்புளியைச் சேர்ந்த நடராசாவும் அவரது மனைவி பங்கயலட்சுமியும் காக்கா முனை என்ன இடத்தில் ஒரு முஸ்லிம் வீட்டில் குடியிருந்தனர். அங்கே பங்கய லட்சுமிக்கு ஒரு குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த மூன்றாம் நாள் பங்கயலட்சுமி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது. ஒரு முஸ்லிம் இளைஞன் வந்து சாப்பாட்டுக் கோப்பைக்கு காலால் அடித்தான். கோப்பை பறந்தது. தொடர்ந்து தமிழர்களை எவரும் வீட்டில் வைத்திருக்கக் கூடாது என்ற பள்ளிவாசலின் முடிவு அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமது வீடுகளில் இருந்த தமிழர்கள் அனைவரையும் முஸ்லிம்கள் வெளியேற்றினார்கள். அத்துடன் ஒரு பகல் கொள்ளையும் நடந்தது என்றார். என்ன நடந்தது, என்று கேட் டேன்.

தமிழர்களின் ரீ.வி., டெக், றேடியோ போன்ற விலையுயர்ந்த சாமான்களை வைத்திருந்த முஸ்லிம் வீட்டுக்காரர்கள் அனைவரும் தங்களது சாமான்களை நாம் வைத்திருந்தால் எமக்கு ஊர்காவல் படையாலோ, இராணுவத்தாலோ பிரச்சினை வரும். ஆனபடியால் இவற்றை எமக்கு விற்றுவிட்டதாக எழுதிக் கொடுங்கள் என்று கேட்டிருந்தார்கள். அப்படியே அனைவரும் எழுதிக்கொடுத்தனர். நடராசாகூட அப்படி எழுதிக் கொடுத்து வீட்டுத்தான் வெளியேறினார். ஆனால் எவருக்கும் ஒரு சதமும் கிடைக்கவில்லை என்றார். ஏன் இவர்களுக்கு நன்மை செய்வதற்காக இப்படி எழுதி வாங்கியிருக்கக் கூடாது? இவர்கள் திரும்பியதும் திருப்பிக் கொடுப்பதற்காக எழுதி வாங்கியிருக்க மாட்டார்களா? என்று கேட்டேன். நிச்சயமாக அப்படி இல்லை. பள்ளிவாசல் அறிவிப்பின் பின்னரே ஒரே நேரத்தில் இந்த விடயம் நிகழ்ந்துள்ளது. அத்துடன் வாங்கிய சாமானுக்காக இல்லாவிட்டாலும் வழிச்செலவுக்கு ஒரு பத்து ரூபா வைத்திருங்கள் என்று கொடுத்திருக்க மாட்டார்களா என்று வினவினார்.

தமிழர் அழிப்பில் தீவிரமாக ஈடுபடுபவர்களின் பெயர் தெரியுமா என்று கேட்டேன். பாரூக் என்பவன் தலைமையில் ஜிகாத் இயக்கத்தைச் சேர்ந்த ஐம்பது பேர் ஈரோஸ் இயக்கத்தின் பெயரால் இந்திய இராணுவத்திடம் பயிற்சி எடுத்தனர். இன்று இவர்கள் தான் ஊர்காவல் படையில் சேர்ந்து தமிழரை அழிப்பதில் தீவிரமாக இருக்கின்றனர் என்றார். மழை விட்டும் தூவானம் போகவில்லை என்பதா? அல்லது இந்திய இராணுவம் விதைத்த நச்சு விதைகள். இன்று விருட்சமாகின்றதா? பதில் தெரியாது விழித்தேன்.

அப்போது பதுமன் ஈ. பி. ஆர். எல். எவ். இல் இருந்த கச்சி முகம்மது ஷேக் அப்துல்லா என்ற முஸ்லிம் இளைஞனை தேசிய இராணுவத்தின் மீதான நடவடிக்கையின் போது கைது செய்தோம். முஸ்லிம் இளைஞன் என்பதால் மன்னித்தோம். சில காலம் எமது இயக்கத்தில் இருக்க அனுமதித்தோம். இவனுக்கு இந்தப் பகுதிப் பாதைகள் நாம் எங்கெங்கு இராணுவத்தினரை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம் என்பதெல்லாம் தெரியும். இவன் தான் நாம் எதிர்பார்க்காத பாதையினுள்ளால் இராணுவத்தைக் கூட்டிவந்தவன் என்றார். தொடர்ந்து இன்னுமொரு முஸ்லிம் இளைஞன் ஒருநாள் இரவு மூன்று றைபிளையும் ஒரு வாக்கிடோக்கியையும் தூக்கிக் கொண்டு ஓடியிருக்கிறான். எமது முகாமிலிருந்து இராணுவமுகாமுக்கு செல்லும் வழியில் ஆறு ஒன்று உண்டு. இருட்டில் இடம் தெரியாமல் ஆழமான பகுதியில் இறங்கிவிட்டான். ஆற்று நீரோட்டத்தில் ஆள் இழுத்துச் செல்லப்பட்டான். அத்துடன் அவனது சாரம் றைபிளுக்குள் சிக்கியதால் அவனால் நீந்தமுடியாமல் போய் விட்டது. மூன்று நாள் செல்ல ஒரு றைபிளுடன் இவனது சடலம் ஒதுங்கியது. மற்ற இரண்டும் ஆற்றில் எங்கேயோ கிடக்கிறது. ஊம்... சிலரை நம்பிக் கெட்டோம்! என்றார் பதுமன்.                                         

(தொடரும்)

இது நடப்பதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்னர், 1986 மே மாதம் 4 திகதி கிண்ணியில் நடந்த மற்றொரு வெளியேற்றம்.

சரிநிகரில் "விவேகி " என்பவர் எழுதியது:

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறவுகள்+

தங்களுக்கு சரிநிகரில் எழுதிய விவேகி என்பவரை தெரியுமா?

On 26/10/2025 at 15:28, நிழலி said:

சரிநிகரின் மூலம் அறிமுகமானோரின் list பெரியது. அதில் சிலரைத் தான் குறிப்பிட்டு இருந்தேன்.

யாழின் மூலமும் அறிமுகமானோரும் பலர்.

  • கருத்துக்கள உறவுகள்+
On 24/10/2025 at 02:25, ரஞ்சித் said:

1993 கார்த்திகை மாதம். உயர்தரம் எழுதிவிட்டு பெறுபேற்றிற்காகக் காத்திருந்த காலம். கொழும்பு தெகிவளையில் அமைந்திருந்த மயோன் கம்பியூட்டர் நிறுவனத்தில் புலமைப் பரிசிலூடாக ஒரு வருட காலம் கற்கை நெறி ஒன்றை மேற்கொள்ளும் தகுதி பெற்றிருந்தேன். எனது வகுப்பில் ஆண்களும் பெண்களுமாக சுமார் 15 அல்லது 16 மாணவர்கள் இருந்தார்கள். தமிழர்கள், முஸ்லீம்கள் என்று ஆண்களும் பெண்களும். இவர்களுள் ஒரு சிலருடன் உடனடியாகவே நட்பாகிப் போய்விட்டேன். மலர்மன்னன் (என்னுடன் உயர்தரத்தில் சில டியூஷன் வகுப்புகளுக்கு வந்ததனால் முன்னரே பழக்கமானவன்), மதியக்கா(உடுப்பிட்டி), கலா அக்க (சிலாபம்), பைரூஸ் (புத்தளம்), சிவா (காரைநகர்) என்று விரல் விட்டு எண்ணக் கூடிய சில நண்பர்கள். இவர்களுள் மலர் மன்னனும், பைரூஸும் என்னூடன் மிகவும் நெருக்கமாகிவிட்டார்கள். வகுப்புக்கள் முடிந்த நேரங்களுள் இவர்களுடன் ஊர்சுற்றுவதே வழமையாகிவிட்டது. பைரூஸ் பாணதுறையில் இருந்தே கொழும்பிற்கு வந்து போவான். மலர்மன்னன் கொட்டாஞ்சேனையில் வசித்து வந்தான். 

மலரும், பைரூஸும் இயல்பாகவே கவிதை எழுதுவதில் வல்லவர்கள். வைரமுத்து, கவிக்கோ எழுதிய கவிதைகளை எனக்கு அடையாளம் காட்டி கவிதைகளில் ஈடுபாட்டினை உருவாக்கித் தந்தவன் பைரூஸ். அவன் தமிழ் எழுதுவது அச்சியந்திரத்தில் எழுதப்பட்ட‌துபோல அழகாயிருக்கும். விரயமாகும் வேளைகளில் ஏதோவொரு தலைப்பிற்குக் கவிதை எழுதுவோம். பைரூஸ் எழுதும் கவிதைகள் இரு வரிகளில் ஹைக்கூ வடிவத்தில் பளிச்சென்று பற்றிக்கொள்ளும். மலர் மன்னனும் அப்படித்தான். 

இப்படிச் சென்று கொண்டிருந்த நாட்களில் நான் கொழும்பிலிருந்து வெளிவரும் சரிநிகரில் எழுதத் தொடங்கியிருந்தேன். ஒரு முறை இந்தியப்படை ஈழத்தமிழர்களுக்கு தியாகங்களைப் புரிந்தது என்று மாலன் எனும் பெயரில் வெளிவந்த கட்டுரைக்கு நான் எழுதிய எதிர்வினையினை சரிநிகர் அப்படியே பிரசுரித்திருந்தது. அதனை நான் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. ஆகவே அதுபற்றி நான் பைரூஸுடனும், மலருடனும் பேசும்போது வெகுவாகவே பாராட்டியிருந்தார்கள். ஒரு நாள் தனது கதைபற்றி பைரூஸ் பேசிக்கொண்டிருக்கும்போது, தனது தகப்பனார் ஒரு தமிழ் ஆசிரியர் என்றும், மன்னாரில் அவர்கள் வசித்து வந்தார்கள் என்றும், புலிகள் வெளியேறச் சொல்லி அறிவித்ததன் பின்னர் கையில் அகப்பட்ட ஒரு சில உடைகளோடு தாம் கிளம்பி புத்தளத்திற்கு வந்ததாகக் கூறினான். தமிழரின் விடுதலைப் போராட்டம் குறித்து ஆதரவான நிலைப்பாட்டினைக் கொண்டிருந்த அவன் புலிகளின் தாக்குதல்கள் குறித்து நானும் மலரும் கிலாகித்துப் பேசும்போது தவறாமல் அவனும் கருத்துப் பகிர்வான். ஆகவே, அவன் முன்னால் எமது விடுதலைப் போராட்டம் குறித்துப் பேசுவது எமக்குச் சிரமாமாக இருந்ததில்லை. ஒருமுறை அவனது வெளியேற்றம் குறித்துப் பேசிக்கொண்டிருந்தபோது முதன்முறையாக அவனது இடத்தில் இருந்து அவ்வெளியேற்றத்தினை என்னால் உணர முடிந்தது.

ஆகவே அன்றிரவு வட மாகாணத்திலிருந்து முஸ்லீம்களை புலிகள் வெளியேற்றியதுபற்றி சரிநிகரில் எழுதுவதென்று தீர்மானித்தேன். முதன்முறையாக புலிகளுக்கெதிராக என்னால் முன்வைக்கப்பட்ட விமர்சனம் அது. முஸ்லீம்களை எதற்காக அன்று வெளியேற்றினார்கள், வெளியேறும்போது எவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றன, எத்தனை முஸ்லீம்கள் பாதிக்கப்பட்டார்கள் என்கிற எதுவித தெளிவும் இன்றி என்னால் அந்த விமர்சனம் முன்வைக்கப்பட்டது. ஏனென்றால் முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்ட காலத்தில் நான் யாழ்ப்பாணத்தில் இருக்கவில்லை. 1988 இற்குப் பின்னர் அங்கு வாழ்ந்ததுகூடக் கிடையாது. ஆகவே வெளியேற்றம் குறித்த சரியான பார்வையின்றி என்னால் அந்த விமர்சனம் முன்வைக்கப்பட்டது. 

எதிர்பார்த்தது போலவே சரிநிகரும் எந்தத் தணிக்கையும் இன்றி அதனைப் பிரசுரித்தது. பைரூஸுடன் அக்கட்டுரை பற்றி பகிர்ந்துகொண்டேன். உணர்ச்சி மேலீட்டால் கண்கலங்கிய அவன், அக்கட்டுரையினை எழுதியதற்காக எனக்கு நன்றி கூறினான். பின்னர் ஒருநாள் என்னிடம் வந்து எனது கட்டுரையினை அகதி என்ற பெயரில் வெளிவந்த முஸ்லீம்களுக்கான பத்திரிக்கை ஒன்றில் மீள் பிரசுரிக்க அனுமதியளிக்கிறாயா என்று கேட்டான். நானும் ஆமென்று கூறவே, அக்கட்டுரை மீளவும் பிரசுரமானது. இதனை அறிந்தபோது மலர்மன்னன் கொதித்துப் போனான். வெளியேற்றியது பிழை என்று உன்னால் எப்படிக் கூறமுடியும்? கிழக்கில் அவர்கள் எம்மை நடத்தும் முறை பற்றி நீ அறிந்திருக்கிறாயா? கொழும்பில் இருந்துகொண்டு, நீ நினைத்தபடி இப்படி எழுதியிருக்கிறாய் என்று கடிந்துகொண்டான். கல்முனை பாண்டிருப்பைப் பிறப்பிடமாகக் கொண்ட அவனுக்கு 90 களின் ஆரம்ப காலப்பகுதியில் அங்கு இடம்பெற்ற தமிழ் மக்கள் படுகொலைகள், அவற்றில் முஸ்லீம் ஊர்காவற்படையினரின் பங்களிப்பு என்பன நன்கு தெரிந்தே இருந்தது. ஆகவே, நான் வெறுமனே புலிகளை விமர்சித்து எழுதியிருந்தது அவனுக்குக் கடுமையான கோபத்தை ஏற்படுத்தியிருந்தது. 

எது எப்படியிருந்தபோதிலும், முஸ்லீம்களை வெளியேற்றியதில் எனக்கு உடன்பாடு இருக்கவில்லை. பேரினவாதத்தில் இருந்து விடுபட போராடும் ஒரு சிறுபான்மையினம், தன்னிலும் சிறுபான்மையான இன்னொரு இனத்தை பேரினவாதம் போன்று நடத்துவது சரியாகப் படவில்லை. அதனாலேயே அப்படி எழுத நேர்ந்தது. ஆனால் வெளியேற்றத்தின்பின்னர் அவர்களின் அரசியல்த் தலைமைகளும், ஊர்காவற்படையினரும், சாதாரண முஸ்லீம்களில் ஒருபகுதியினரும் நடந்துகொண்ட விதம் இதுபற்றித் தொடர்ந்து நான் பேசுவதை நிறுத்தி விட்டது.

தங்களுக்கு சரிநிகரில் எழுதிய விவேகி என்பவரை தெரியுமா?

  • கருத்துக்கள உறவுகள்
On 31/10/2025 at 03:28, நன்னிச் சோழன் said:

தங்களுக்கு சரிநிகரில் எழுதிய விவேகி என்பவரை தெரியுமா?

பார்த்திருக்கலாம், ஆனால் தற்போது நினைவில் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
On 25/10/2025 at 16:17, நியாயம் said:

அல்வாயர் @alvayan எனது அனுபவங்களை, நான் கேட்டதை, பார்த்ததை கூறினேன் அவ்வளவுதான். 1995 யாழை விட்டு வெளியேறும் வரை பல்வேறு நேரடி அனுபவங்கள், அப்போது நடந்த சம்பவங்கள், நாம் பார்த்தது, அறிந்தது, கேட்டது நினைவில் உள்ளன. காரணங்கள் வேறுபாடு உள்ளவை, ஆனால் எல்லாருமே வெவ்வேறு மட்டங்களில், வெவ்வேறு நிலைகளில், வெவ்வேறு தருணங்களில் பொதுமக்களிற்கு சிரமங்களை ஏற்படுத்தினார்கள். இவை மிரட்டல்கள் தொடக்கம் படுகொலை வரை சென்றன. ஒவ்வொருவருக்கும் தமது கோணத்தில் பார்க்கும்போது தாம் செய்தவை சரியாகவே தென்படும்.

பழைய நினைவுகளை மீண்டும் கிரகித்து பார்க்கின்றேன்.

இராணுவத்திற்கு விடுதலை புலிகள் அமைப்பு, நடமாட்டங்கள் பற்றிய உள்ளூர் தகவல்களை வழங்குகின்றார்கள், காட்டி கொடுக்கின்றார்கள் எனும் காரணத்தாலேயே முஸ்லீம் மக்கள் அப்போது வெளியேற்றப்பட்டார்கள் என ஊருக்குள் கதைத்தார்கள்.

முஸ்லீம் மக்களை யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேற்றியது விடுதலை புலிகளுக்கு பல்வேறு அனுகூலங்களை ஏற்படுத்தின. நிர்வாக ஒழுங்குகளுடன் அடுத்த கட்டத்திற்கு வளர்ச்சி அடைவதை இந்த வெளியேற்றம் இலகுவாக்கியது என்றே கூறவேண்டும்.

ஒருவேளை முஸ்லீம் மக்கள் யாழ்ப்பாணத்திலேயே தொடர்ந்து நிலைகொண்ட நிலை காணப்பட்டால் போராட்டம் எந்த பாதையில், எப்படி பயணித்து இருக்கும் எனவும் சிந்தித்து பார்க்கலாம்.

1990 இல் வெளியேற்றம் ஏற்பட்டது. 1995 இல் யாழ்ப்பாணம் யாழ்ப்பாணம் இலங்கை இராணுவம் வசமாகியது. கிட்டத்தட்ட இந்த ஐந்து வருட கால இடைவெளியில் முஸ்லீம் மக்களை வெளியேற்றதன் மூலம் விடுதலை புலிகளுக்கு கிடைத்த பலன்கள் எவை, பாதகங்கள் எவை எனவும் நோக்கப்படலாம்.

  • கருத்துக்கள உறவுகள்+

90ஆம் ஆண்டு புலிகள் 24மணி நேரம் கொடுத்து யாழ் முஸ்லிங்களை வெளி ஏற்றினார்கள் என்பது பிழை என்றால் (உண்மையில் பிழை)1968/04/12அன்று எந்தவித பிழையும் செய்யாத போதும் எந்த வித தமிழ் ஆயுத குழுக்களும் இல்லாத காலத்தில் 1நிமிடம் கூட கொடுக்காமல் கல்முனை கரவாகு தமிழர்களை அகமது எம்பிக் வழி காட்டலில் வம்முறு சயிது போண்ற காடையர் குழுவை வைத்து அப்பாவி தமிழர்களை சித்திரை புது வருடத்தை கொண்டாட விடாமல் இரவோடு இரவாக அடித்து விரட்டியது புனித ஜிகாத் யுத்தமா அமைதி மார்க்கத்தை பின்பற்றும் காத்தான் குடி இஸ்லாமிய சகோதரர்களே

--> சிவதாசன் சந்திரமோகன்

இது தொடர்பில் மேலும் தகவல்கள் திரட்ட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்+

கல்முனை இனவன்முறை:

https://noolaham.net/project/840/83902/83902.pdf

large.kalmunaibatticaloapogrombymuslims.

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறவுகள்+

எனது பூட்டன் சம்புநாதர், சம்பர் என்று அழைப்பார்கள். இவர் காலத்தில்தான் காடாக கிடந்த கரவாகு வட்டை காணியும், தற்போது கல்முனை என்று அழைக்கப்படும் இடமும் வோச்சி துரை என்று அழைக்கப்படும் வெள்ளைக்கார அதிகாரியால் காடு வெட்டி வயல் வெளி உருவாக்கப்பட்டது. அந்த காலப்பகுதியில் கரவாகு என்னும் பெரிய தமிழ் கிராமம் இருந்தது. கரவாகு கிராமத்தில் எனது தாயின் பாட்டனார் முத்துக்குட்டி ஆச்சாரி அவர்கள் ஓரளவு ஆங்கிலம் கதைக்க தெரிந்தவர் வெள்ளைக்கார துரை கூறுவதை தமிழில் மக்களுக்கு எடுத்துரைப்பவர். காடுகள் வெட்டி கூலிக்கு வேலை செய்ய வந்த முஸ்லிம்கள் குடியேறிய இடம்தான் கல்முனைக்குடி. போக்குவரத்து மார்க்கம் தாளவட்டுவான் சந்தியில் இருந்து கிட்டங்கி துறைக்குச் சென்று, அங்கிருந்து வள்ளம் மூலமாக மட்டக்களப்புக்கு செல்வார்கள்.

--> குணசேகரன் வீரக்கொடி, மட்டக்களப்பு

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.