Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம்கள் மீது இனச்சுத்திகரிப்பு இடம்பெறவில்லை; போராட்டத்தை கொச்சைப்படுத்த வேண்டாம்! - சி.சிவமோகன்

%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AE%E0%

முஸ்லீம்கள் மீது இடம்பெற்ற சம்பவம் ஒரு இனச்சுத்திகரிப்பு அல்ல. அதற்கு பின்னால் ஒரு வரலாறு உள்ளது. சட்டத்தரணி சுவஸ்திகா போன்றோர் புதுப்புது அர்த்தங்களை கூறி போராட்டத்தை கொச்சைப்படுத்தக்கூடாது என முன்னாள் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,

தமிழர்களின் ஒரு நீண்டகால அரசியல் ஆயுதபோராட்டம் முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டத்தை அடைந்தது. தமிழ் இளைஞர்களிடம் வலிந்து ஆயுதங்களை திணித்தது அரசுகளே. மக்கள் மீதான பாரிய இனப்படுகொலைகள் மற்றும் அடக்குமுறைகளுக்கு பின்னாலே ஈழ விடுதலை போராட்டம் முளைகொண்டு எழுந்தது.

தற்போது பலரும் புதுப்புது கதைகளை சொல்லி புலிகளின் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் அறிக்கைகளை விடுகின்றனர். சட்டத்தரணி சுவஸ்திகா என்பவர் முஸ்லீம்கள் மீது இனச்சுத்திகரிப்பு நடத்தப்பட்டதாக ஒரு அறிக்கை விட்டிருந்தார்.

அந்த காலகட்டத்தில் நான் வன்னியில் இருந்தேன். முஸ்லீம்களை வெளியேற்றிய அந்த நிகழ்வு ஏன் நடைபெற்றது என்பதற்கு பாரிய வரலாறு உள்ளது.

ஒரு இனத்தில் இருப்பவனை அதே இனத்தை சேர்ந்த ஒருவன் காட்டிக்கொடுத்தால் அவன் துரோகி என்ற அடையாளங்களை சொல்லி இன்றையகாலத்திலும் மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது.

ஈரானில் அந்த நாட்டு இராணுவத்தை காட்டிக்கொடுத்தவர்கள் ஈரானை பொறுத்தவரை துரோகிகளே. எமது மண்ணிலும் தமிழர்கள் ஈழவிடுதலை போராட்டத்தை காட்டிக்கொடுத்தால் துரோகி என்ற ரீதியில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட சம்பவங்களும் நடைபெற்றது.

ஆனால் அந்த நேரத்தில் இன்னுமொரு இனம் எமது போராட்டத்தை காட்டிக்கொடுக்கிறார்கள் என்று சொல்லி அவர்கள் மீது மரண தண்டனைகளைவிதிக்க கூடிய நிலமை தவறு என்ற கோணத்தில் அன்று முஸ்லீம்கள் வெளியே அனுப்பிவைக்கப்பட்டார்கள். அது இனச்சுத்திகரிப்பு அல்ல எமது ஈழவிடுதலை போராட்டத்தில் ஒரு அங்கமாக நடைபெற்றது.

முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலை உருவாக்கப்பட்டபோது அதற்கு எதிர்ப்புறமாக இருந்த நிலங்கள் அனைத்தும் முஸ்லீம் மக்களுடையது. அந்த நிலத்தை சுவீகரித்து வைத்தியசாலையை கட்டியிருக்கலாம் ஆனால் அப்படி செய்யவில்லை. தமிழர்களின் காணிகளை எடுத்தே அந்த வைத்தியசாலை அமைக்கப்பட்டது.

தற்போது அங்கு முஸ்லீம்கள் வாழ்க்கின்றார்கள் எனில் விடுதலைப்புலிகளால் அவர்களது மண்ணோ சொத்துக்களோ சுவீகரிக்கப்படவில்லை என்றே அர்த்தம். இதனை ஒரு பிழையான கோணத்தில் வெளிப்படுத்த சிலர் முயற்சிக்கின்றனர் அது தவறனாது.

போராட்டத்தின் பின்னணியினை பார்க்காமல் குறித்த விடயத்தில் கருத்துச்சொல்ல சுவஸ்திகாவிற்கு எந்த அருகதையும் இல்லை. அப்படியானவர்கள் தங்களது கதைகளை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

முஸ்லீம் யூத் போரம் என்ற பெயரில் கறுப்பு ஒக்ரோபர் என்ற விடயத்தை முன்வைத்திருந்தார்கள். அவர்கள் ஒரு கருத்தை கூறியிருந்தார்கள்.

நாட்டில் இனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டுபவர்களை புறக்கணிப்போம் என்று நல்ல விடயம் அதையே தான் நாங்களும் கூறுகிறோம்.

தமிழ்மொழி பேசும் முஸ்லீம்கள், தமிழர்கள், மலையகத்தமிழர்கள் ஆகிய நாங்கள் அனைவரும் தமிழ் பேசுகின்றோம். அந்த ரீதியில் ஒற்றுமையாக செயற்ப்பட்டு எமது உரித்துக்களை பெற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும்.

இன,மதவாதத்தை தூண்டி தமிழ் பேசுவர்களை மூன்றாக கூறுபோட்டு வைத்துள்ளனர். தற்போது இதனை சொல்பவர்கள் மத வாதத்தை தூண்டி அதிலிருந்து தமது அரசியலை வளர்க்க முயற்சிக்கின்றார்கள் என்றே பார்க்கலாம்.

மூன்றாக நாம் பிரிந்து நிற்கும் போது காலத்திற்கு காலம் சிங்கள தேசம் ஒவ்வொரு இனத்தையும் பிரித்து அடிக்கின்றது. உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பின் பின்னர் முஸ்லீம்கள் எப்படி தாக்கப்பட்டார்கள் என்று உங்களுக்கு தெரியும். மலையக தமிழர்கள் குடியுரிமை பறித்து கலைக்கப்பட்டார்கள் இறுதிப்போரில் என்ன நடந்தது என்று அனைவருக்கும் தெரியும்.

இவை எல்லாம் ஏன் நடக்கிறது என்று சிந்தித்தால் நாங்கள் அனைவரும் தமிழர்களாக ஒன்றுபடவேண்டிய தேவையை காட்டுகின்றது. எனவே இந்த இடத்தில் ஈழ விடுதலை போராட்டத்தை நடாத்தி 30 ஆயிரம் போராளிகளை பலிகொடுத்து இலட்சக்கணக்கான தமிழ்மக்களை பலிகொடுத்து நிற்கும் எமது இனத்தின் மீது இனச்சுத்திகரிப்பு என்ற வசனத்தை பாவிக்க யாரும் முற்படக்கூடாது அது மிகவும் தவறு என்பதை கூறிக்கொள்கிறேன் என்றார்.

https://akkinikkunchu.com/?p=347698

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காவில் இனசுத்திகரிப்பு இரண்டு தான் உண்டு...

ஒன்று தமிழன் சிங்களவர்களை இனசுத்திகரிப்பு செய்தது,மற்றது தமிழன் முஸ்லீம்களை இனசுத்திகரிப்பு செய்தது....

தமிழன் தான் அசுரன் ,,,,அப்படி தமிழ் சிவப்பு சிந்தனையாளர்கள் சொல்லுவினம்...😂

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, putthan said:

சிறிலங்காவில் இனசுத்திகரிப்பு இரண்டு தான் உண்டு...

ஒன்று தமிழன் சிங்களவர்களை இனசுத்திகரிப்பு செய்தது,மற்றது தமிழன் முஸ்லீம்களை இனசுத்திகரிப்பு செய்தது....

தமிழன் தான் அசுரன் ,,,,அப்படி தமிழ் சிவப்பு சிந்தனையாளர்கள் சொல்லுவினம்...😂

நீங்கள் என்னதான் இவ்வாறான கேலிகள் மூலம் உண்மைகளை மறைக்க முயன்றாலும் உண்மை என்னவென்றால் ஶ்ரீலங்காவில் சிங்களவரின் இனபாகுபாடு என்பது அரசியல் ரீதியானது. அரசியல்வாதிகளால் உருவாக்கப்படுவது. தனிப்பட அவர்கள் தமிழர்களிடம் நட்புடன் பழகுவார்கள். ஆனால் தமிழரிடம் அதுவும் யாழ்பாண தமிழரிடம் உள்ள இன பாகுபாடு என்பது சமூகரீதியானது. யாழ்பாண பேச்சுநடை தவிர்ந்த வேறு மொழிநடையில் ஒருவர் உரையாடினாலே அவரை வேற்றினமாக பார்ககும் அளவுக்கு இன ஒதுக்கல் சமூகத்தில் வேரூன்றி காணப்படுகிறது.

முழுக்க முழுக்க சிங்கள பார்வையாளர்களைக் கொண்ட சிங்கள தொலைக்காட்சிகளில் தமிழ் கலைஞர்கள் தொன்றி பார்வையாளர்களின் பாரட்டுக்களை இலகுவில் பெற்றுவிட முடியும். ஆனால் தமிழ் தொலைக்காட்சிகளில் அது நடை பெறாது.

  • கருத்துக்கள உறவுகள்+
14 minutes ago, island said:

தனிப்பட அவர்கள் தமிழர்களிடம் நட்புடன் பழகுவார்கள்.

ஓமோம், தமிழரை தூற்றி தமிழர் சிங்களவருக்கு கீழ் தான் வாழ வேண்டும் என்ற அடிமை மனநிலையுடன் பழகினால் நன்றாகவே சிரித்துப் பழகுவார்கள். இது மேலாதிக்க குணமுடைய எல்லோருக்கும் பொருந்தும்.

எமது உரிமையைக் கேட்டு அதனோடு பேசினால் நன்றாக முரணோடு பேசுவார்கள்.
-----------------------------------------------------

  • 83இற்கு முந்தை தமிழரின் அறவழிப் போராட்டங்களின் போது தமிழர்களை தாக்கியவர்கள் யார்?

  • தமிழர் எதிர்ப்பு இனவன்முறைகளில் பங்கெடுத்தவர்கள் யாவரும் யார் .... (சூலை கலவரத்தில் என்ர வீட்டுப் பாத்திரத்தை மறைத்து வைத்தவர் குஞ்சுபண்டா என்று வர வேண்டாம். களவெடுத்த கற்பழித்த பண்டாக்கள் நிறையவே உண்டு😜)

    வெளிநாடுகளில் தமிழர் எதிர்ப்பு போராட்டங்களில் பங்கெடுப்பவர்கள் யார்... ஒஸ்ரேலியாவில் சிறுபிள்ளையைக் கூட உதைத்தவர்கள் சிங்களவர், தமிழர் என்ற காரணத்திற்காக

    மே 18களில் வெற்றிக்கொண்டாட்டங்களில் ஈடுபடுபவர்கள் யார், குறிப்பாக மே 18 2009 அன்று பாற்சோறு குடுத்து மகிழ்ந்தவர்கள்...

    தமிழீழ-ஸிறிலங்கா எல்லையோர ஊர்களில் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தி அழித்தெறிந்தவர்கள் யார், குறிப்பாக ஊர்காவல்படை (சாதாரண சிங்கள பொதுமக்களைக் கொண்டு கட்டியெழுப்பப்பட்டது) என்னும் பேரில்?

    2009 இற்கு பின்னர்...............

    தியாகதீபங்களில் நினைவூர்திகள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் யார்...

    திருமலையில் தமிழர்களுடன் மோதியவர்கள் யார்?

    மட்டுவில் தமிழர்களின் மாடுகளில் வாயில் வெடிவைத்து விளையாடுபவர்கள் யார்?

இவ்வாறு அடுக்கிக்கொண்டே போகலாம், அதற்காக பூனை கண்ணை மூடினால் இருண்டுவிட்டதாக பொருளில்லை. நீங்கள் தமிழர் விரோத-புலி எதிர்ப்பு மனநிலையில் இருப்பதால் எல்லாவற்றை அந்தக் கண்ணாடி கொண்டே பார்த்துப் பழகினதாலும் மெய்யுண்மைகள் வேறாகவே உள்ளன. உங்களோடும் நீங்களும் பழகிய சிங்களவர்கள உங்களைப் போன்றே இருப்பதால் உங்களுக்கு இனிக்கிறது, அவ்வளவே. சிங்களவரால் பாதிக்கப்பட்டவர்களினது மனநிலை வேறாக இருக்கும்.

தனிப்பட்ட பழக்க வழக்கங்கள் ஒவ்வொருவரின் குணநலன்களுக்கு ஏற்ப வேறுபடும். கூட்டிக் கொடுத்தவனுக்கு இனிக்கும், அடிவேண்டி தன்மானத்தோடு எதிர்த்தவனுக்கு ....

  • கருத்துக்கள உறவுகள்+

எனது கோரிக்கை என்ன்வென்றால் தமிழர் நாமும் முஸ்லீம்களால் செய்யப்பட்ட படுகொலைகள், இனச்சுத்திகரிப்புகள் (கிண்ணியா (86,90), கல்முனைக்குடி(68)) நினைவுகூற வேண்டும். அது தகுந்த எதிர்ப்பாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, island said:

நீங்கள் என்னதான் இவ்வாறான கேலிகள் மூலம் உண்மைகளை மறைக்க முயன்றாலும் உண்மை என்னவென்றால் ஶ்ரீலங்காவில் சிங்களவரின் இனபாகுபாடு என்பது அரசியல் ரீதியானது. அரசியல்வாதிகளால் உருவாக்கப்படுவது. தனிப்பட அவர்கள் தமிழர்களிடம் நட்புடன் பழகுவார்கள். ஆனால் தமிழரிடம் அதுவும் யாழ்பாண தமிழரிடம் உள்ள இன பாகுபாடு என்பது சமூகரீதியானது. யாழ்பாண பேச்சுநடை தவிர்ந்த வேறு மொழிநடையில் ஒருவர் உரையாடினாலே அவரை வேற்றினமாக பார்ககும் அளவுக்கு இன ஒதுக்கல் சமூகத்தில் வேரூன்றி காணப்படுகிறது.

முழுக்க முழுக்க சிங்கள பார்வையாளர்களைக் கொண்ட சிங்கள தொலைக்காட்சிகளில் தமிழ் கலைஞர்கள் தொன்றி பார்வையாளர்களின் பாரட்டுக்களை இலகுவில் பெற்றுவிட முடியும். ஆனால் தமிழ் தொலைக்காட்சிகளில் அது நடை பெறாது.

இனவாத அரசியல்வாதிகளை வாக்கு போட்டு உருவாக்குவதே சிங்கள மக்கள் தான் ...சிங்கள் மக்களில் இருந்து தான் அரசியல்வாதிகளும்,முப்படையினரும் உருவாகின்றனர் ...

அதில் தப்பு இல்லை என்பது எனது கருத்து...தனது இடத்தையும் கலாச்சாரத்தையும் கட்டி காப்பதில் தப்பில்லை....எந்த இனமும் இதை செய்யும் நானும் சவுதியில் பணி புரிந்தவன் எனக்கும் தெரியும் எப்படி தங்கள் இனத்தை பாதுகாக்க அவர்கள் செயல் படுகிறார்கள் என்று...

தமிழன் மட்டும் இனவாதம் ,மொழிவாதம்,மதவாதம் பேசாமல் சுத்த சன்மாரக்கமானவனாக வாழ வேணும் என எதிர்பார்க்க முடியாது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, island said:

நீங்கள் குறுகிய வட்டத்திற்குள் நிற்கின்றீகள் என நினைக்கின்றேன்.

நீங்கள் கூறும் கருத்தின் படி பார்த்தால் வட கிழக்கு பகுதிகளில் எந்தவொரு சிங்கள கட்சிகளும் இருக்க வாய்ப்பில்லை அல்லவா?

இலங்கையின் இன்றைய அரசியல் நிலமையை பார்த்துமா இன்னும் உங்களுக்கு விளங்கவில்லை?

அன்று தொடக்கம் இன்று வரைக்கும் நாம் இனவாத கட்சிகள் என சொல்லிக்கொண்டிருக்கும் கட்சிகளில் இருந்து தமிழர்கள் வெற்றி பெறவில்லையா? இனவாத கட்சிகள் சார்பாக தமிழ் எம்பிக்கள் பாராளுமன்றம் செல்லவில்லையா?

இதே போல் சிங்கள பிரதேசங்களிலிருந்து சிங்களவர்கள் ஒரு தமிழ் எம்பியை பாராளுமன்றம் அனுப்பியிருக்கின்றார்களா?

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, putthan said:

தமிழன் மட்டும் இனவாதம் ,மொழிவாதம்,மதவாதம் பேசாமல் சுத்த சன்மாரக்கமானவனாக வாழ வேணும் என எதிர்பார்க்க முடியாது

எப்ப ஊருக்கு கிளம்புறியள்?

மானஸ்தனனுக்கு இன்னொரு இனத்தின் ஊரில் என்ன மினக்கெடு?😂

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, putthan said:

இனவாத அரசியல்வாதிகளை வாக்கு போட்டு உருவாக்குவதே சிங்கள மக்கள் தான் ...சிங்கள் மக்களில் இருந்து தான் அரசியல்வாதிகளும்,முப்படையினரும் உருவாகின்றனர் ...

அதில் தப்பு இல்லை என்பது எனது கருத்து...தனது இடத்தையும் கலாச்சாரத்தையும் கட்டி காப்பதில் தப்பில்லை....எந்த இனமும் இதை செய்யும் நானும் சவுதியில் பணி புரிந்தவன் எனக்கும் தெரியும் எப்படி தங்கள் இனத்தை பாதுகாக்க அவர்கள் செயல் படுகிறார்கள் என்று...

தமிழன் மட்டும் இனவாதம் ,மொழிவாதம்,மதவாதம் பேசாமல் சுத்த சன்மாரக்கமானவனாக வாழ வேணும் என எதிர்பார்க்க முடியாது

புத்தரே ....போர்க்கால சூழலில் 2,40,000 தமிழர்கள் கொல்லப்பட்டது ...இனவழிப்பல்ல....அதுவும் இறுதிக்கட்டத்தில் குஞ்சு குருமன் உட்பட...200 000 பேர் ....இதனை எங்கட தமிழ் அரசியல் வாதிகள் ... சிங்களவர் , முசுலிம் யாருமே...எம்மினம் துடிக்கப் பதைக்க கொன்றதை இனவழிப்பு என்று இன்றுவரை சொன்னதும் கிடையாது...ஏற்றுக் கொண்டதும் கிடையாது ....ஆனால் 76,000 முசுலிம் பாதுகாப்பு காரணம்காட்டி இடப்பெயர வைத்து ,பின்னர் மீண்டும் கூப்பிட்டு வாழவைத்தது அவர்களுக்கு எந்தவித உயிரிழப்பும் ஏற்படவில்லை ..... இதுஇனவழிப்பாம் ...இதை தமிழர் , சிங்களவர் ,முசுலிம் இன்றுவரை தூக்கிப் பிடித்து ...கொடியசைக்கினம் ...அதுவும் ...முசுலிம் தரப்பில் ... தூண்டிக்கொண்டே இருக்கினம் ...அதுவும் புதுப்புது கரடிவிட்டபடி ...இதனை யாழிலும் ஆதரித்து கொடிபிடிப்பதில் சந்தோசம் ... அவர்களிடம் ஒரு தயவான வேண்டுகோள்... சரி ..பிழை என்பதற்கப்பால் ...முசுலிம்களை நியாயப் படுத்துவதை செய்யும் நீங்கள் ... அவர்கள் பகுதியில் இருந்து ஒரு நியாயவாதி ஒருவரின் கருத்தை இங்கு பதிவிடமுடியுமா ...முடியாது ஏனெனில்...அவர்களிடமிருந்து ...அந்த வரிகள் கிடைக்காது ...ஆனால் நம்பக்கம் இருந்து புதிது புதிதாக சாட்ட்சியங்ககள் ..இணைக்கப்படும் ...இது நம் இனத்தின் சாபக்கேடு

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

நீங்கள் குறுகிய வட்டத்திற்குள் நிற்கின்றீகள் என நினைக்கின்றேன்.

நீங்கள் கூறும் கருத்தின் படி பார்த்தால் வட கிழக்கு பகுதிகளில் எந்தவொரு சிங்கள கட்சிகளும் இருக்க வாய்ப்பில்லை அல்லவா?

இலங்கையின் இன்றைய அரசியல் நிலமையை பார்த்துமா இன்னும் உங்களுக்கு விளங்கவில்லை?

அன்று தொடக்கம் இன்று வரைக்கும் நாம் இனவாத கட்சிகள் என சொல்லிக்கொண்டிருக்கும் கட்சிகளில் இருந்து தமிழர்கள் வெற்றி பெறவில்லையா? இனவாத கட்சிகள் சார்பாக தமிழ் எம்பிக்கள் பாராளுமன்றம் செல்லவில்லையா?

இதே போல் சிங்கள பிரதேசங்களிலிருந்து சிங்களவர்கள் ஒரு தமிழ் எம்பியை பாராளுமன்றம் அனுப்பியிருக்கின்றார்களா?

குமாரசாமி, அது தான் தெளிவாக கூறினேன் அரசியல் ரீதியான இனவாதம் என்பதை. இவ்வாறான இனவாதம் உருவாவதற்கு மற்றய இனம் தொடர்பான அச்ச நிலையை அரசியல்வாதிகள் அல்லது ஊடகங்கள் மேற்கொள்ளவது முக்கிய காரணம். ஶ்ரீலங்காவில் சிங்கள மக்கள் மத்தியில் தமிழர் தொடர்பான அச்சநிலை என்பது அப்படி ஊட்டப்பட்டது.

ஆனால், சமூக ரீதியான இனபேதம் என்பது நாம் மேலானவர்கள் என்ற நினைப்பில் மற்றய இனங்களை கீழானவர்கள் என்ற கற்பிதத்தில் ஏற்படும் இனபேதம். அப்படியான இனவாதம் சிங்கள மக்களிடம் இல்லை என்பதை அவர்களுடன் தனிப்பட பழகும் போது உணர்ந்து கொள்ளலாம்.

தமிழர்கள் சிங்களக் கட்சிகளுக்கு வாக்களிப்பது அரசியல் அனுகூலங்களை நோக்கியதே என்பது வெளிப்படையானது. சிங்கள கட்சி என்பதை விட ஆளும் கட்சி என்பதே உண்மை. தமிழரின் சுயநிர்ணய கோரிக்கையை அல்லது சுயாட்சியை வெளிப்படையாக ஆதரித்த எந்த சிங்களக் கட்சிக்கும் தமிழர்கள் அடையாளத்திற்காக கூட வாக்களித்தில்லை. உதாரணமாக 1982 ஜனாதிபதி தேர்தலில்ல நவ சமாஜக்கட்சி தமிழரின் சுயநிர்ணய கோரிக்கையை வெளிபடையாக ஆதரித்தது. ஆனால் ஜேஆர் அதை விட பல மடங்கு அதிக வாக்குகளை யாழ்பாணத்தில் பெற்றார். 1999 ல் பலமாக தமிழர் தரப்பால் விமர்சிக்கபட்டசந்திரிகா கணிசமான வாக்குகளைப் பெற்றார். கடந்த தேர்தலில் கூட தமிழ் மக்களின் சுயாட்சி அலகுகளை ஆதரித்த மக்கள் போராட்ட முண்ணணிக்கு வாக்களிக்காமல் என் பி பி கே மக்கள் வாக்களித்தனர். இந்த நிலையில் நீங்கள் தமிழர் பிரதேச தேர்தல் வாக்களிப்பை இங்கு உதாரணத்திற்கு எடுத்தது தவறானது.

  • கருத்துக்கள உறவுகள்
On 7/11/2025 at 02:35, கிருபன் said:

ஆனால் அந்த நேரத்தில் இன்னுமொரு இனம் எமது போராட்டத்தை காட்டிக்கொடுக்கிறார்கள் என்று சொல்லி அவர்கள் மீது மரண தண்டனைகளைவிதிக்க கூடிய நிலமை தவறு என்ற கோணத்தில் அன்று முஸ்லீம்கள் வெளியே அனுப்பிவைக்கப்பட்டார்கள். அது இனச்சுத்திகரிப்பு அல்ல எமது ஈழவிடுதலை போராட்டத்தில் ஒரு அங்கமாக நடைபெற்றது.

நான் கேள்விப்பட்ட வரையில் யாழ்ப்பாணத்து முஸ்லிம்கள் காட்டிக்கொடுத்தார்கள் என்று அறியவில்லை, ஆனால் உங்களில் யாராவது கேள்விப்பட்டிருக்கலாம். யாழ்ப்பாணத்தின் முஸ்லிமகள் வேறு பிரதேச முஸ்லிம்களை விட யாழ்ப்பாணத்து மக்களுடன் தான் அதிக பிணைப்புடன் இருந்தார்கள் என பெரியவர்கள் கூறக்கேள்விப்பட்டிருக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
On 7/11/2025 at 08:35, கிருபன் said:

முஸ்லீம்கள் மீது இனச்சுத்திகரிப்பு இடம்பெறவில்லை; போராட்டத்தை கொச்சைப்படுத்த வேண்டாம்! - சி.சிவமோகன்

போராட்டத்தில் இழைக்கப்பட்ட ஒரு சிறிய தவறை சுட்டிக்காட்டினலே போதும் உடனே, போராட்டத்தை கொச்சைப்படுத்தி விட்டார்கள் மாவீரர்களை கொச்சைப்படுத்தி விட்டார்கள் என்று மூக்கால் அழுவதே வேலையாகிவிட்டது. 15 வருடத்திற்கு மேலாகிற்று ஆனால் இவர்கள் திருந்தவில்லை மனம் வருந்தவில்லை. தொடர்ந்து தோல்வி பாதையில் வெற்றி நடை போடுவதும் ஒரு சுகம் தான். என்ன சுகம்! இந்த சுகம்!

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, island said:

நீங்கள் என்னதான் இவ்வாறான கேலிகள் மூலம் உண்மைகளை மறைக்க முயன்றாலும் உண்மை என்னவென்றால் ஶ்ரீலங்காவில் சிங்களவரின் இனபாகுபாடு என்பது அரசியல் ரீதியானது. அரசியல்வாதிகளால் உருவாக்கப்படுவது. தனிப்பட அவர்கள் தமிழர்களிடம் நட்புடன் பழகுவார்கள். ஆனால் தமிழரிடம் அதுவும் யாழ்பாண தமிழரிடம் உள்ள இன பாகுபாடு என்பது சமூகரீதியானது. யாழ்பாண பேச்சுநடை தவிர்ந்த வேறு மொழிநடையில் ஒருவர் உரையாடினாலே அவரை வேற்றினமாக பார்ககும் அளவுக்கு இன ஒதுக்கல் சமூகத்தில் வேரூன்றி காணப்படுகிறது.

முழுக்க முழுக்க சிங்கள பார்வையாளர்களைக் கொண்ட சிங்கள தொலைக்காட்சிகளில் தமிழ் கலைஞர்கள் தொன்றி பார்வையாளர்களின் பாரட்டுக்களை இலகுவில் பெற்றுவிட முடியும். ஆனால் தமிழ் தொலைக்காட்சிகளில் அது நடை பெறாது.

மிகச் சரியாக உங்களை சுயவிமர்சனம் செய்துள்ளீர்கள். தொடருங்கள்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, island said:

தமிழர்கள் சிங்களக் கட்சிகளுக்கு வாக்களிப்பது அரசியல் அனுகூலங்களை நோக்கியதே என்பது வெளிப்படையானது

என்ன மாதிரியான அரசியல் அனுகூலங்களுக்காக என்பதை தெளிவாக சொல்ல முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

என்ன மாதிரியான அரசியல் அனுகூலங்களுக்காக என்பதை தெளிவாக சொல்ல முடியுமா?

பொதுவாக ஆளும்கட்சியிடம் இருந்து மக்கள் எதிர்பார்ககும் அனுகூலங்களையே கூறினேன். அது பொதுவான அனுகூலங்களாகவும் இருக்கலாம் தனிப்பட்ட அனுகூலங்களாகவும் இருக்கலாம்.

தீவிர தமிழ் தேசியம் பேசி வயிறு வளர்ககும் பல அரசியல்வாதிகள் புலம் பெயர் தமிழ் தேசியர்கள் கூட கூட தமது சொந்த நலன்கள் என்று வரும் போது ஆளும்கட்சியுடன் நல்லுறவை பேணி தமது நலன்களை காப்பாற்றிக் கொள்ளும் போது சாமான்ய மக்கள் அப்படி செய்வதில் தவறில்லை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.