Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் கடினமான டெஸ்ட் தொடரை சந்திக்கவுள்ள உலக டெஸ்ட் சம்பியன் தென் ஆபிரிக்கா

Published By: Vishnu 13 Nov, 2025 | 07:51 PM

image

(நெவில் அன்தனி)

இந்தியாவுக்கும் தென் ஆபிரிக்காவுக்கும் இடையிலான 2 போட்டிகள் கொண்ட சுதந்திரக் கிண்ணத்துக்கான இருதரப்பு டெஸ்ட் தொடரும், உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரும் கொல்கத்தா ஈடன் கார்ட்ன்ஸ் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (14) ஆரம்பமாகவுள்ளது.

shubman_gil_and_temba_bavuma.jpg

இந்தியாவில் மிகவும் கடினமான தொடர் தென் ஆபிரிக்காவுக்கு காத்திருக்கிறது என்று கூறினால் அது தவறாகாது.

கடந்த 10 வருடங்களில் இந்தியாவுக்கு இரண்டு தடவை டெஸ்ட் கிரிக்கெட் விஜயம் செய்த தென் ஆபிரிக்கா, அந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் படுதோல்விகளை சந்தித்தது.

india.png

2015இல் நடைபெற்ற 4 போட்டிகள் கொண்ட தொடரில் 0 - 3 என இளம் வீரர்களைக் கொண்ட இந்தியாவிடம் தென் ஆபிரிக்கா தோல்வி அடைந்தது. அந்த தொடரில் 2ஆவது டெஸ்ட் போட்டி மழையினால் கழுவப்பட்டது.

அந்த சந்தர்ப்பத்தில் எதிர்கால டெஸ்ட் அணியைக் கட்டி எழுப்பும் குறிக்கோளுடன் இளம் வீரர்களை இந்தியா களம் இறக்கி அதில் வெற்றியும் கண்டது.

தொடர்ந்து 2019இல் உப கண்டத்துக்கு பயணித்த தென் ஆபிரிக்கா, அனுபவம் வாய்ந்த வீரர்களைக் கொண்ட இந்தியாவிடம்  0 - 3 என தோல்வி அடைந்தது.

எவ்வாறாயினும் நடப்பு உலக டெஸ்ட் சம்பியன் தென் ஆபிரிக்கா, இம்முறை அனுப வசாலிகளுடன இந்தியாவை எதிர்கொள்ளவுள்ளது.

இந்தியா இந்த வருடம் விளையாடிய 8 டெஸ்ட் போட்டிகளில் 4 வெற்றிகள், 3 தோல்விகள், ஒரு வெற்றி தோல்வியற்ற முடிவு என்ற பெறுபேறுகளைக் கொண்டுள்ளது.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக கடந்த மாதம் நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2 - 0 என்ற ஆட்டங்கள் கணக்கில் முழுமையாக வெற்றியீட்டிய இந்தியா, நாளை ஆரம்பமாகவுள்ள தென் ஆபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வெற்றி பெற முயற்சிக்கும்.

இந்தத் தொடர் இரண்டு அணிகளினதும் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு இடையிலான போட்டியாக அமையலாம் என எதிர்வுகூறப்படுகிறது. ஆனால், இந்தியா தனது சொந்த மண்ணில் சுழல்பந்துவீச்சாளர்களைக் கொண்டு பல சந்தர்ப்பங்களில் வெற்றியீட்டியதை மறந்துவிடலாகாது.

தென் ஆபிரிக்கா இந்த வருடம் விளையாடிய 6 போட்டிகளில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டி உட்பட 5இல் வெற்றிபெற்றிருந்தது.

பாகிஸ்தானுக்கு எதிராக கடந்த மாதம் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆபிரிக்கா தோல்வி அடைந்திருந்தது,

தென் ஆபிரிக்கா 1989ஆம் ஆண்டிலிருந்து டெஸ்ட் கிரிக்கெட் விளையாடி வருகின்றபோதிலும் இந்தியாவுக்கு எதிராக 1992இலிருந்தே டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.

அதற்கு முன்னர் இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து ஆகிய நாடுகளுடன் மாத்திரம் தென் ஆபிரிக்கா விளையாடி இருந்தது. இன ஒடுக்கல் காரணமாக 1970இலிருந்து 1991வரை தென் ஆபிரிக்காவுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

1991இல் தடை நீக்கப்பட்ட பின்னரே மற்றைய நாடுகளுடன் டெஸ்ட் விளையாட்டில் தென் ஆபிரிக்கா ஈடுபட ஆரம்பித்தது.

இந்தியாவுக்கும் தென் ஆபிரிக்காவுக்கும் இடையில் இதுவரை நடைபெற்றுள்ள 44 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தென் ஆபிரிக்கா 18 - 16 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறது. 10 போட்டிகள் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தன.

அணிகள்

இந்தியா: ஷுப்மான் கில் (தலைவர்), ரிஷாப் பான்ட் (உப தலைவர்), ஆகாஷ் தீப், ஜஸ்ப்ரிட் பும்ரா, ரவிந்த்ர ஜடேஜா, யஷஸ்வி ஜய்ஸ்வால், த்ருவ் ஜுரெல், குல்தீப் யாதவ், மொஹம்மத் சிராஜ், தேவ்டத் படிக்கல், அக்சார் படிக்கல், கே. எல். ராகுல், சாய் சுதர்ஷன், வொஷிங்டன் சுந்தர்.

தென் ஆபிரிக்கா: டெம்பா பவுமா (தலைவர்), கோபின் பொஷ், டிவோல்ட் ப்ரவிஸ், டோனி டி ஸோர்ஸி, சைமன் ஹாமர், மாக்கோ ஜென்சன், கேஷவ் மஹாராஜ், ஏய்டன் மார்க்ராம், வியான் முல்டர், சேனுரன் முத்துசாமி, கெகிசோ ரபடா, ரெயான் ரிக்ள்டன், ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ், கய்ல் வெரின், ஸுபய்ர் ஹம்ஸா.

https://www.virakesari.lk/article/230282

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பும்ராவின் 5 விக்கெட் குவியலின் பலனாக தென் ஆபிரிக்காவை 159 ஓட்டங்களுக்கு சுருட்டியது இந்தியா

Published By: Vishnu 14 Nov, 2025 | 06:36 PM

image

(நெவில் அன்தின)

கொல்கத்தா ஈடன் கார்ட்ன்ஸ் விளையாட்டரங்கில் இன்று வெள்ளிக்கிழமை (14) ஆரம்பமான முதலாவது டெஸ்ட் போட்டியில் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரிட் பும்ரா பதிவுசெய்த 5 விக்கெட் குவியலின் உதவியுடன் நடப்பு உலக டெஸ்ட் சம்பியன் தென் ஆபிரிக்காவை முதல் இன்னிங்ஸில் 159 ஓட்டங்களுக்கு இந்தியா சுருட்டியது.

இந்தியாவில் எட்டு முயற்சிகளில் முதல் தடவையாக நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென் ஆபிரிக்கா, துணிந்து துடுப்பாட்டத்தைத் தெரிவுசெய்தபோதிலும் அவ்வணி ஒருநாள் போட்டியை ஒத்தது போன்று துடுப்பெடுத்தாடி 55 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்தது.

ஏய்டன் மார்க்ராம், ரெயான் ரிக்ல்டன் ஆகிய இருவரும் 57 ஓட்டங்களைப் பகிர்ந்து நல்ல ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். 

ஆனால், அதன் பின்னர் தென் ஆபிரிக்காவின் 10 விக்கெட்களும் 102 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தப்பட்டன.

1411_jas_rit_bumra_5_wkt_haul_vs_sa.png

51ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஜஸ்ப்ரிட் பும்ரா ஓர் இன்னிங்ஸில் தனது 16ஆவது 5 விக்கெட் குவியலைப் பதிவு செய்ததுடன் மொஹமத் சிராஜ், குல்தீப் யாதவ், அக்சார் பட்டேல் ஆகியோர் மற்றைய 5 விக்கெட்களை வீழ்த்தி தென் ஆபிரிக்காவை திக்குமுக்காட வைத்தனர்.

சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த தென் ஆபிரிக்க ஆரம்ப வீரர்களான ரெயான் ரிக்ல்டன், ஏய்டன் மார்க்ராம் ஆகிய இருவரையும் 4 பந்துகள் இடைவெளியில் பும்ரா ஆட்டம் இழக்கச் செய்து போட்டியில் இந்தியாவுக்கு சாதகமான திருப்புமுனையை ஏற்படுத்தினார்.

1411_mhd_siraj_bowls_marco_jansen_ind_vs

அதன் பின்னர் பொறுமையுடன் துடுப்பெடுத்தாட முயற்சித்த அணித் தலைவர் டெம்பா பவுமா, வியான் மல்டர் ஆகிய இருவரை குல்தீப் யாதவ் ஆட்டம் இழக்கச் செய்ததும் தென் ஆபிரிக்கா ஆட்டம் காணத் தொடங்கியது.

தென் ஆபிரிக்க துடுப்பாட்டத்தில் ஏய்டன் மார்க்ராம் (31), வியான் மல்டர் (24), டோனி டி ஸோர்ஸி (24), ரெயால் ரிக்ல்டன் (23) ஆகிய நால்வரே 20 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.

1411_kuldeep_yadav_ind_vs_sa.png

பந்துவீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா 5 ஓட்டமற்ற ஓவர்கள் உட்பட 27 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் குல்தீப் யாதவ் 36 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மொஹம்மத் சிராஜ் 47 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அக்சார் பட்டேல் 21 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடும் இந்தியா முதலாம் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 37 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இதற்கு அமைய முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்கள் மீதமிருக்க தென் ஆபிரிக்காவைவிட 122 ஓட்டங்களால் இந்தியா பின்னிலையில் இருக்கிறது.

யஷஸ்வி ஜய்ஸ்வால் 12 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். கே.எல். ராகுல் 13 ஓட்டங்களுடனும் புதிய 3ஆம் இலக்க வீரர் வொஷிங்டன் சுந்தர் 6 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதுள்ளனர்.

https://www.virakesari.lk/article/230383

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

துடுப்பாட்டத்தில் இந்தியாவும் தடுமாறிய முதல் டெஸ்டில் பரிதாபகரமான நிலையில் தென் ஆபிரிக்கா

15 Nov, 2025 | 05:51 PM

image

(நெவில் அன்தனி)

இந்தியாவுக்கு எதிராக கொல்கத்தா ஈடன் கார்ட்ன்ஸ் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நடப்பு உலக டெஸ்ட் சம்பியன்  தென் ஆபிரிக்கா   பரிதாபகரமான நிலையில் இருக்கிறது.

துடுப்பாட்ட வீரர்களுக்கு சிம்மசொப்பனமாக அமைந்த ஈடன் கார்ட்ன்ஸ் ஆடுகளத்தில் போட்டியின் இரண்டாம் நாளான இன்றைய ஆட்ட நேர முடிவில் தென் ஆபிரிக்கா அதன் இரண்டாவது இன்னிங்ஸில் 7 விக்கெட்களை இழந்து 93 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இரண்டாவது இன்னிங்ஸில் மேலும் 3 விக்கெட்கள் மீதம் இருக்க இந்தியாவை விட 63 ஓட்டங்களால் மாத்திரம் தென் ஆபிரிக்கா முன்னிலையில் இருக்கிறது.

இந்தியாவும் அதன் முதல் இன்னிங்ஸில் தடுமாற்றத்தை எதிர்கொண்டிருந்தது.

பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்திய இந்தப் போட்டியின் முதல் இரண்டு நாட்களில் 26 விக்கெட்கள் வீழ்த்தப்பட்டன.

முதல் நாளான நேற்றைய தினம் 11 விக்கெட்களும் இன்றைய தினம் 15 விக்கெட்களும் வீழ்த்தப்பட்டன. இந்திய அணித் தலைவர் ஷுப்மான் கில் கழுத்தில் ஏற்பட்ட தசைப் பிடிப்பு காரணமாக 4 ஓட்டங்களுடன் ஓய்வு பெற்றார்.

இந்தப் போட்டியில் கே.எல். ராகுல் பெற்ற 39 ஓட்டங்களே இதுவரை துடுப்பாட்ட வீரர் ஒருவரால் பெறப்பட்ட அதிகபட்ச ஓட்டங்களாக பதிவாகியுள்ளது.

போட்டியின் இரண்டாம் நாளான இன்று சனிக்கிழமை (15) காலை தனது முதல் இன்னிங்ஸை ஒரு விக்கெட் இழப்புக்கு 37 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த இந்தியா சகல விக்கெட்களையும் இழந்து 189 ஓட்டங்களைப் பெற்றது.

இது தென் ஆபிரிக்கா முதலாவது இன்னிங்ஸில் பெற்ற 159 ஓட்டங்களைவிட 30 ஓட்டங்கள் அதிகமாகும்.

இந்தியாவின் முதலாவது இன்னிங்ஸில் ராகுலை விட வொஷிங்டன் சுந்தர் (29), ரிஷாப் பான்ட் (27), ரவிந்த்ர ஜடேஜா (27) ஆகியோரே 20 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.

பந்துவீச்சில் சைமன் ஹாமர் 30 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் மாக்கோ ஜென்சன் 35 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

30 ஓட்டங்கள் பின்னிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த தென் ஆபிரிக்கா பெரும் பரிதாபகரமான நிலையில் இருக்கிறது.

அணித் தலைவர் டெம்பா பவுமா மாத்திரமே மிகவும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 29 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதுள்ளார்.

அவரை விட மாக்கோ ஜென்சன் (13), ரெயான் ரிக்கில்டன் (11), வியான் மெல்டர் (11) ஆகிய இருவரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.

முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்களை வீழ்த்திய பும்ரா, இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றவில்லை. அவர் 6 ஓவர்களை மாத்திரமே வீசினார்.

உபாதைக்குள்ளான ஷுப்மான் கில் களத்தடுப்பில் ஈடுபடாததால் அணிக்கு தலைமை தாங்கிய ரிஷாப் பான்ட் தனது சுழல்பந்துவீச்சாளர்களில் நம்பிக்கை வைத்து அதில் வெற்றியும் கண்டார்.

ரவிந்த்ர ஜடேஜா 29 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் குல்தீப் யாதவ் 12 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அக்சார் பட்டேல் 30 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

மூன்றாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்.

1511_simon_harmer_sa_v_ind_4_wkts.png

1511_ravindra_jadeja_ind_vs_sa_4_wkts__1

https://www.virakesari.lk/article/230440

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆபிரிக்கா 30 ஓட்டங்களால் அபார வெற்றி; இந்தியாவுக்கு எதிராக கடந்த 15 வருடங்களில் தென் ஆபிரிக்கா ஈட்டிய முதல் வெற்றி

Published By: Digital Desk 3 16 Nov, 2025 | 04:03 PM

image

(நெவில் அன்தனி)

இந்தியாவுக்கும் தென் ஆபிரிக்காவுக்கும் இடையில் கொல்கத்தா ஈடன் கார்ட்ன்ஸ் விளையாட்டரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை மூன்று நாட்களுக்குள் முடிவடைந்த முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென் ஆபிரிக்கா 30 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியது.

இந்தியாவுக்கு எதிராக கடந்த 15 வருடங்களில் தென் ஆபிரிக்கா ஈட்டிய முதலாவது டெஸ்ட் வெற்றி இதுவாகும்.

பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்திய இந்த டெஸ்ட் போட்டியில் இந்தியாவால் முதல் இன்னிங்ஸில் பெற்ற 189 ஓட்டங்களே அதிகபட்ச மொத்த எண்ணிக்கையாக இருந்தது.

எவ்வாறாயினும், 124 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 93 ஓட்டங்களுக்கு சுருண்டு மிக மோசமான தோல்வியைத் தழுவியது.

கழுத்துப் பகுதியில் உபாதைக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள இந்திய அணித் தலைவர் ஷுப்மான் கில் இந்தப் போட்டியில் நேற்றிலிருந்து விளையாடவில்லை.

இந்த வெற்றியுடன் இரண்டு போட்டிகள் கொண்ட சுதந்திரக் கிண்ண இருதரப்பு தொடர் மற்றும் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடர் ஆகியவற்றில் தென் ஆபிரிக்கா 1 - 0 என்ற ஆட்ட வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறது.

முதல் இரண்டு நாட்களில் தடுமாற்றத்தை எதிர்கொண்டு பரிதாபகரமான நிலையில் தென் ஆபிரிக்கா இருந்ததால் இந்தியா அதன் சொந்த மண்ணில் சாதித்துவிடும் என எதிர்பார்க்கப்பட்டது.

மேலும் முதல் இன்னிங்ஸ் நிறைவில் 30 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா முன்னிலையில் இருந்ததால் அணி வீரர்களும் இரசிகர்களும் வெற்றிபெற்று விடலாம் என எண்ணினர்.

1611_temba_bavuma_in_acion_sa_vs_ind.png

ஆனால், அணித் தலைவர் டெம்பா பவுமா 3 மணித்தியாலங்களுக்கு மேல் துடுப்பெடுத்தாடி பெற்ற ஆட்டம் இழக்காத அரைச் சதமும் சுழல்பந்து வீச்சாளர் சைமன் ஹாமன் இரண்டாவது தடவையாக பதிவுசெய்த 4 விக்கெட் குவியலும் தென் ஆபிரிக்காவின் வெற்றிக்கு வழிவகுத்தன.

போட்டியின் மூன்றாம் நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை காலை தனது 2ஆவது இன்னிங்ஸை 7 விக்கெட் இழப்புக்கு 93 ஓட்டங்கள் என்ற இக்கட்டான நிலையிலிருந்து தொடர்ந்த தென் ஆபிரிக்கா சகல விக்கெட்களையும் இழந்து 153 ஓட்டங்களைப் பெற்றது.

கடைசி 3 விக்கெட்களில் தென் ஆபிரிக்கா பெற்ற 60 ஓட்டங்கள் அதன் வெற்றிக்கான திருப்புமுனையாக அமைந்தது.

29 ஓட்டங்களிலிருந்து தனது இன்னிங்ஸைத் தொடர்ந்த டெம்பா பவுமா மிகவும் நிதானத்துடனும் பொறுப்புணர்வுடனும் மொத்தமாக 183 நிமிடங்கள் துடுப்பெடுத்தாடி 136 பந்துகளை எதிர்கொண்டு 4 பவுண்டறிகளை மாத்திரம் அடித்து 55 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

அவர் கோபின் பொஷ்ஷுடன் 8ஆவது விக்கெட்டில் பெறமதிமிக்க 44 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

கோபின் பொஷ் 25 ஓட்டங்களைப் பெற்றார்.

அவர்கள் இருவரைவிட வேறு எவரும் 15 ஓட்டங்களைத் தொடவில்லை.

பந்துவீச்சில் ரவிந்த்ர ஜடேஜா 50 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் 2 ஓவர்கள் மாத்திரம் வீசிய மொஹம்மத் சிராஜ் 2 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் குல்தீப் யாதவ் 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

124 ஓட்டங்கள் என்ற மிக இலகுவான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடி இந்தியா 34.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 93 ஓட்டங்களைப் பெற்று தொல்வி அடைந்தது.

இந்திய துடுப்பாட்டத்தில் வொஷிங்டன் சுந்தர் 31 ஓட்டங்களையும் அக்சார் பட்டேல் 26 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றனர்.

1611_simon_harmar_sa_vs_ind.png

பந்துவீச்சில் சைமன் ஹாமர் 4 ஓட்டமற்ற ஓவர்கள் உட்பட 14 ஓவர்களில் 21  ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களைக் கைப்பற்றினார். மாக்கோ ஜென்சன் 15 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கேஷவ் மஹாராஜ் 37 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

தென் ஆபிரிக்கா முதல் இன்னிங்ஸில் 159 ஓட்டங்களையும் இந்தியா முதல் இன்னிங்ஸில் 189 ஓட்டங்களையும் பெற்றன.

இப் போட்டியில் 51 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்களை வீழ்த்திய சைமன் ஹாமர் ஆட்டநாயகனாகத் தெரிவானார்.

https://www.virakesari.lk/article/230500

RESULT

1st Test, Eden Gardens, November 14 - 16, 2025, South Africa tour of India

South Africa FlagSouth Africa

159 & 153

India FlagIndia

(T:124) 189 & 93

South Africa won by 30 runs

Player Of The Match

Simon Harmer, SA

4/30 & 4/21

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முதல் டெஸ்டில் இந்தியா தோல்வி: டெஸ்ட் சாம்பியன் புள்ளிப் பட்டியல் எவ்வாறு மாறியுள்ளது?

இந்தியா - தென் ஆப்ரிக்கா, டெஸ்ட் தொடர், இந்திய அணி தோல்வி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியல்

பட மூலாதாரம், Getty Images

16 நவம்பர் 2025, 11:06 GMT

தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. கொல்கத்தாவில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் 30 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்க அணி வென்றுள்ளது. இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 93 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

கொல்கத்தா டெஸ்ட் போட்டி பவுலர்களுக்கு சாதகமாகவும் பேட்டர்களுக்கு சவாலாகவும் அமைந்தது. போட்டி தொடங்கிய மூன்றாவது நாளிலேயே முடிவுற்றது.

இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணியின் வெற்றிக்கு தென் ஆப்ரிக்க அணி 124 ரன்கள் இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால் 35 ஓவர்களுக்குள்ளாகவே இந்திய அணி சுருண்டுவிட்டது.

இரண்டாவது இன்னிங்ஸில் அரைசதம் அடித்த தென் ஆப்ரிக்க அணியின் தெம்பா பவுமாவும், அந்த அணியின் பவுலர் சைமன் ஹார்மரும் தான் இந்த வெற்றிக்கு அடித்தளமிட்டனர். இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா சார்பாக வாஷிங்டன் சுந்தர் மட்டுமே அதிகபட்சமாக 29 ரன்கள் அடித்திருந்தார்.

முன்னதாக சிறப்பாக பந்துவீசிய இந்திய அணியின் பவுலர்கள் தென் ஆப்ரிக்க அணியை 153 ரன்களுக்குள் கட்டுப்படுத்தினர். ரவீந்திர ஜடேஜா அதிகபட்சமாக 4 விக்கெட்டுகள் எடுத்திருந்தார்.

ஆட்டத்தை மாற்றிய பவுமாவின் அரைசதம்

இரண்டாவது இன்னிங்ஸில் தென் ஆப்ரிக்க பேட்டர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறினர். 60 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து அந்த அணி தடுமாறியது.

ஒருபுறம் விக்கெட்டுகள் தொடர்ந்து சரிந்தாலும் மறுமுனையில் பவுமா நிலைத்து ஆடினார். நிதானமாக ஆடி அவர் அரைசதம் அடித்த நிலையில் தென் ஆப்ரிக்க அணியின் ஸ்கோர் 150-ஐ தாண்டியது.

அந்த அணியில் பவுமா அதிகபட்சமாக 55 ரன்கள் எடுத்திருந்தார். அவருக்கு உறுதுணையாக ஆடிய கோர்பின் போஷ் 25 ரன்கள் எடுத்திருந்தார். இரண்டாவது இன்னிங்ஸில் தென் ஆப்ரிக்க அணி 153 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில் இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 124 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இந்தியா - தென் ஆப்ரிக்கா, டெஸ்ட் தொடர், இந்திய அணி தோல்வி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 93 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

மூன்று நாட்களில் 28 விக்கெட்டுகள்

கொல்கத்தா டெஸ்ட் போட்டி பேட்டர்களுக்கான சோதனைக் களமாக இருந்தது என்றே சொல்லலாம். ஏனென்றால் இரண்டரை நாட்களில் இந்தப் போட்டி முடிவுக்கு வந்துள்ளது. 38 விக்கெட்டுகள் வீழ்ந்துள்ளன. (முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கின் போது காயமடைந்து வெளியேறிய இந்திய கேப்டன் கில் இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் ஆட வரவில்லை)

இந்தப் போட்டி முழுவதிலும் 220 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டுள்ளன. இரண்டு அணிகளுமே ஒரு நாள் முழுக்க பேட்டிங்கில் நிலைத்து ஆடவில்லை. முதல் இன்னிங்ஸில் தென் ஆப்ரிக்க அணி முதல் நாளிலேயே 159 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி முதல் நாளில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்திருந்தது.

இந்தியா - தென் ஆப்ரிக்கா, டெஸ்ட் தொடர், இந்திய அணி தோல்வி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கொல்கத்தா டெஸ்ட் போட்டி பேட்டர்களுக்கான சோதனைக் களமாக இருந்தது என்றே சொல்லலாம்.

இந்திய அணியாலும் ஒரு நாள் முழுக்க களத்தில் நிலைக்க முடியவில்லை. இரண்டாவது நாளில் இந்திய அணி 189 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அன்றே இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய தென் ஆப்ரிக்க அணி 7 விக்கெட்டுகள இழந்தது. மூன்றாவது நாளில் தென் ஆப்ரிக்க அணி மீதமுள்ள 3 விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்தியா - தென் ஆப்ரிக்கா, டெஸ்ட் தொடர், இந்திய அணி தோல்வி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி அடுத்தடுத்து 9 விக்கெட்டுகளை இழந்தது.

இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி அடுத்தடுத்து 9 விக்கெட்டுகளை இழந்தது. முதல் இன்னிங்ஸில் 4 ரன் எடுத்திருந்த போது காயத்தால் வெளியேறிய அணியின் கேப்டன் சுப்மன் கில் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடவில்லை. அவர் பேட்டிங் ஆட முடியாத நிலை ஏற்பட்டது இந்திய அணிக்கு பெரிய இழப்பாக அமைந்தது.

இந்திய சுற்றுப்பயணத்தில் தென் ஆப்ரிக்க 2 டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டி நவம்பர் 22-ஆம் தேதி கௌகாத்தியில் நடைபெறுகிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியல்

இந்த தோல்வியால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இந்தியா நான்காவது இடத்திற்கு பின்தங்கியுள்ளது. இந்திய அணி 8 போட்டிகளில் விளையாடி 4 வெற்றி, 3 தோல்விகளைப் பெற்றுள்ளது, ஒரு போட்டியை டிரா செய்துள்ளது.

ஆஸ்திரேலிய அணி முதலிடத்தில் நீடிக்கிறது. நடப்புச் சாம்பியனான தென் ஆப்ரிக்கா இரண்டாவது இடத்திலும் இலங்கை அணி மூன்றாவது இடத்திலும் உள்ளன.

இந்த டெஸ்ட் தொடரில் இந்தியா 2-0 என்கிற கணக்கில் தென் ஆப்ரிக்க அணியை தோற்கடித்திருந்தால் புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களுக்குள் முன்னேறும் வாய்ப்பு இருந்தது. அதற்கு இனிமேல் வாய்ப்பில்லாமல் போய்விட்டது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c5ypn7yvl5do

  • நியானி changed the title to இந்தியா - தென் ஆபிரிக்கா கிரிக்கெட் தொடர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியணியின் வேகப்பந்துவீச்சாளரான பும்ரா தென்னாபிரிக்க அணியின் தலைவரான பவுமாவினை உருவக கேலி செய்ததாக கூறப்படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

இந்தியணியின் வேகப்பந்துவீச்சாளரான பும்ரா தென்னாபிரிக்க அணியின் தலைவரான பவுமாவினை உருவக கேலி செய்ததாக கூறப்படுகிறது.

மன்னிப்பு கேட்டதாகவும் செய்தி வருகுது....மைதானத்தில் நல்ல பிள்ளையாக இருந்த பும்ரா ...ஆசியகப் ..பாகிஸ்தான் மச்சிலிருந்து ...குளப்படி காரனாக மாறியிருக்கிறார்

இந்தியாவின் பிச் விளையாட்டு இந்தியாவையே பிச்சு விட்டுது...இந்தியாவின் இறுதி இன்னிச் துடுப்பாட்டத்தை..பார்க்கையில்...பனங்காணிக்குள் ரப்பர் பந்தில் விளையாடிய கிரிக்கட்டுப் போல இருக்குது..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பவுமா கேலி செய்யப்பட்ட தன் உயரத்தையே பலமாக மாற்றி இந்தியாவை வீழ்த்தியது எப்படி?

டெம்பா பவுமா

பட மூலாதாரம், Getty Images

கட்டுரை தகவல்

  • பிரதீப் கிருஷ்ணா

  • பிபிசி தமிழ்

  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

சில தினங்களுக்கு முன் இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் மோதிய முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளில், ஒருகட்டத்தில் டெம்பா பவுமாவும், மார்கோ யான்சனும் இணைந்து பேட்டிங் செய்துகொண்டிருந்தனர்.

ஓவர்களுக்கு இடையே அவர்கள் அருகருகே நின்று விவாதித்துக் கொண்டிருந்தபோது, வர்ணனையாளர்கள் இப்படிப் பேசினார்கள்: "சர்வதேச கிரிக்கெட்டில் உயர வித்தியாசம் அதிகமாக இருக்கும் ஜோடி இதுவாகத்தான் இருக்கும்."

அந்த இருவரும் அருகருகே இருக்கும் காட்சியைப் பார்த்த பலரும் அதைப் பற்றித்தான் பேசுகிறார்கள்.

அவர்களுக்கு இடையே சுமார் 40 சென்டிமீட்டர் அளவுக்கும் மேல் உயர வித்தியாசம் இருப்பதால் அது பேசுபொருளாகிவிடுகிறது.

குறிப்பாக இன்று சர்வதேச கிரிக்கெட்டில் உயரம் குறைவான வீரர்களில் பவுமாவும் ஒருவர் என்பதால், அதை பற்றிக் குறிப்பிடாமல் பெரும்பாலான உரையாடல்கள் முடிவதில்லை.

இதே போட்டியின் முதல் நாளில் பவுமாவுக்கு எதிராக ரிவ்யூ எடுப்பது பற்றி ரிஷப் பந்த் மற்றும் ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோர் பேசிய உரையாடலில் 'பௌனா' என்ற இந்தி வார்த்தை (உயரம் குறைவானர்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் பேச்சு வழக்கு வார்த்தை) பயன்படுத்தப்பட்டது சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

அது பவுமாவை நேரடியாகக் குறிக்கும் வார்த்தை இல்லை என்று சிலர் கூறினாலும், அதைத் தவிர்த்திருக்கலாம் என்று சிலர் வாதிட்டனர்.

பவுமா பற்றிப் பேசினாலே அவரது உயரம் பற்றி பேச்சு வந்துடுவிடுகிறதே என்று கிரிக்கெட் ஆர்வலர்கள் பலரும் வருத்தம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், தமிழ் வர்ணனையாளர்கள் இந்தப் போட்டியின்போது பவுமாவின் உயரம் பற்றி வேறொரு பரிமாணத்தில் பேசினார்கள்.

ஒவ்வொரு பேட்டரும் இந்தப் போட்டியில் பேட்டிங் செய்யத் தடுமாறும்போது, பவுமா மட்டும் எப்படி சிறப்பாக ஆடிக்கொண்டிருக்கிறார் என்று பேசியவர்கள், "பவுமாவின் உயரம் அவருக்கு சாதகமான அம்சமாக இருக்கிறது." என்று குறிப்பிட்டார்கள்.

அவரது குறைவான உயரம்தான் அவரை நீண்ட நேரம் விளையாட வைத்தது என்றார்கள். அதுதான் இரண்டாவது இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க எதிர்பார்த்ததை விட பெரிய ஸ்கோரை எட்டக் காரணம் என்றும் கூறினார்கள்.

தென்னாப்பிரிக்கா பெரிய ஸ்கோர் எடுக்கவும், இந்தியாவை அவர்கள் வீழ்த்தவும், பவுமாவின் உயரம் உதவியதா?

கடினமான களத்தில் பவுமாவின் போராட்டம்

இந்த முதல் டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸில் 100 பந்துகளுக்கும் மேலாக சந்தித்த, அரைசதம் அடித்த ஒரே வீரர் பவுமா மட்டும்தான்.

தென்னாப்பிரிக்க அணியின் இரண்டாவது இன்னிங்ஸில் நீண்ட நேரம் போராடிய அவர், கடைசி வரை ஆட்டமிழக்காமல் 136 பந்துகளில் 55 ரன்கள் எடுத்தார்.

இந்தப் போட்டி நடந்த ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் பேட்டர்கள் அனைவரும் பெரும் சவாலை எதிர்கொண்டிருந்தனர். மொத்தம் இரண்டே முக்கால் நாள்களிலேயே முடிந்திருந்த இந்த ஆட்டத்தில் 4 இன்னிங்ஸ்களிலும் சேர்த்தே 594 ரன்கள் தான் எடுக்கப்பட்டிருந்தது.

அதிலும் குறிப்பாக ஸ்பின்னர்களை எதிர்கொள்வது அனைவருக்குமே மிகவும் சிரமமாக இருந்தது. பெரும் விமர்சனங்களுக்குள்ளான இந்த ஆடுகளத்தில் பந்துகளைக் கணிப்பது கடினமாக இருந்தது.

பந்தின் 'டர்ன்', 'பவுன்ஸ்', 'டிப்' போன்ற விஷயங்களை சரியாக யூகிக்க பேட்டர்கள் தடுமாறினார்கள். .

டெம்பா பவுமா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தியா vs தென்னாப்பிரிக்கா முதல் டெஸ்ட் போட்டியில் அரைசதம் கடந்த ஒரே பேட்டர் டெம்பா பவுமா தான்

இரண்டாவது நாளின் இறுதியில் வர்ணனை செய்துகொண்டிருந்தபோது, இந்த ஆடுகளத்தில் நான்காவது இன்னிங்ஸுக்கு 120 ரன்கள் என்ற இலக்கே கடினமாக இருக்கும் என்று கூறியிருந்தார் இந்திய முன்னாள் வீரர் ஶ்ரீதரன் ஶ்ரீராம்.

ஆனால், முதல் இன்னிங்ஸில் 30 ரன்கள் பின்தங்கியிருந்த தென்னாப்பிரிக்க அணி, இரண்டாம் இன்னிங்ஸில் ஒருகட்டத்தில் 75/6 என்ற நிலையில் இருக்க, 150 ரன்களெல்லாம் வாய்ப்பே இல்லை என்று கருதப்பட்டது. ஆனால், அவர்களை 153 என்ற ஸ்கோருக்கு எடுத்துச் சென்றார் பவுமா.

தென்னாப்பிரிக்க அணியின் இரண்டாவது இன்னிங்ஸில் ஒருகட்டத்தில் இந்திய ஸ்பின்னர்கள் பெரும் ஆதிக்கம் செலுத்தினார்கள். குறிப்பாக ஜடேஜா விக்கெட்டுகள் மேல் விக்கெட்டுகளாக வீழ்த்தினார். அதிலும் இரண்டாவது நாளின் மூன்றாவது செஷனில் ஆடுகளம் பேட்டிங் செய்யக் கடினமாக இருந்தது. அப்போது தன்னுடைய போராட்டத்தைத் தொடங்கினார் பவுமா.

ஒருபக்கம் விக்கெட்டுகள் வீழ்ந்துகொண்டே இருந்தாலும், அவர் நிலைத்து நின்று விளையாடினார். யான்சன் மற்றும் கார்பின் பாஷ் உடன் சிறு பார்ட்னர்ஷிப்களும் அமைத்தார். அனைவரையும் அச்சுறுத்திய ஜடேஜாவுக்கு எதிராக 46 பந்துகள் சந்தித்திருந்தாலும், அதை அற்புதமாகக் கையாண்டார் அவர்.

அப்போதுதான் தமிழ் வர்ணனையாளளர்கள் அவரது உயரம் அவருக்கு எப்படி சாதகமாக இருக்கிறது என்று பேசினார்கள்.

பவுமாவின் ஈர்ப்பு மையம் (சென்ட்டர் ஆஃப் கிராவிட்டி - Centre of Gravity) நன்கு தாழ்ந்து இருப்பதாலும், அவரது அடித்தளம் நன்கு திடமாக இருப்பதாலும், அது அவருக்கு இந்தப் போட்டியில் உதவியதாக பிபிசி தமிழிடம் கூறினார் ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே அணிகளின் முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான கே.பி.அருண் கார்த்திக்.

அவரது தாழ்ந்த ஈர்ப்பு மையத்தின் காரணமாக மற்ற வீரர்களைவிட எளிதாக அவரால் இந்த ஆடுகளத்தையும் இந்திய சுழற்பந்து வீச்சாளர்களையும் எதிர்கொள்ள முடிந்தது என்றார் அவர்.

தாழ்ந்த ஈர்ப்பு மையம் என்றால் என்ன? அதன் சாதகம் என்ன?

ஒரு பொருளின் மொத்த எடை, ஒரே புள்ளியில் செயல்படுவதாகக் கொள்ளப்படுவதே ஈர்ப்பு மையம் (Centre of Gravity) எனப்படும்.

உதாரணமாக ஒரு பேனாவின் மையப் பகுதியை நம் விரலில் வைத்து நம்மால் சமநிலைப்படுத்த (balance) முடிகிறது அல்லவா, அதற்குக் காரணம் அந்தப் பேணாவின் ஈர்ப்பு மையம் அந்த நடுப்பகுதியில் இருக்கிறது. இப்படி ஒவ்வொரு பொருளுக்கும் அதன் ஈர்ப்பு மையம் ஒவ்வொரு இடத்தில் இருக்கும்.

''மனிதர்களைப் பொறுத்தவரை ஈர்ப்பு மையம் நம் நிலையைப் பொறுத்து மாறும். நாம் கால்களை அகன்று வைத்திருக்கும்போது ஈர்ப்பு மையம் கீழே இருக்கும். அப்போது நல்ல நிலைத்தன்மை இருக்கும். அதுவே கால்களை ஒட்டி வைத்திருக்கும்போது ஈர்ப்பு மையம் மேலே இருக்கும். அப்படியான சூழ்நிலைகளில் நாம் எளியில் விழுந்துவிடுவோம். சுமோ வீரர்களோ, மல்யுத்த வீரர்களோ சண்டையிடும்போது கால்களை அகற்றி வைப்பதற்கான காரனம் இதுதான்" என்று பிபிசி தமிழிடம் கூறினார் விளையாட்டு மருத்துவரான ஹரிணி முரளிதரன்.

சுறுக்கமாகச் சொன்னால், ஈர்ப்பு மையம் தாழ்வாக இருந்தால் நிலைத்தன்மை அதிகமாக இருக்கும்.

சுமோ வீரர்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தங்கள் நிலைத்தன்மையை அதிகப்படுத்தும் நோக்கில், கால்களை அகலமாக வைத்து தங்கள் ஈர்ப்பு மையத்தை சுமோ வீரர்கள் தாழ்வாக்குகிறார்கள் (கோப்பு படம்)

பவுமாவின் உயரம் சாதகமாக அமைந்தது எப்படி?

பவுமாவின் உயரம் மற்றும் தாழ்ந்த ஈர்ப்பு மையம் பற்றிப் பேசிய கே.பி.அருண் கார்த்திக், "பொதுவாக 'லோ சென்ட்டர் ஆஃப் கிராவிட்டி' இருக்கும் வீரர்களிடம் நல்ல சமநிலை இருக்கும். பவுமா உயரம் குறைவாக இருப்பதால் அவரது சென்ட்டர் ஆஃப் கிராவிட்டி தாழ்ந்து இருக்கிறது. மேலும், அவரது பேட்டிங் ஸ்டான்ஸ் (பேட்டர்கள் பந்தை சந்திப்பதற்குத் தயாராகும்போது நிற்கும் முறை) சற்று அகலமாக இருக்கிறது. இதனால் அவரால் திடமாக நகர முடிகிறது" என்று கூறினார்.

"பந்து நன்கு திரும்பும் விக்கெட்டுகளில் இது சாதகமான ஒரு அம்சம். பந்தைப் பற்றி அவரால் நன்கு கணிக்க முடியும். அது எப்படியான பந்து என்பதையும் சீக்கிரம் அறிந்துகொள்ள முடியும். பொதுவாக 'லென்த்தில்' வீசப்படும் பந்துகளுக்கு பெரும்பாலான வீரர்கள் 'ஃப்ரன்ட் ஃபூட்' (கால்களை முன் நகர்த்தி) வைத்து ஆடுவார்கள். ஆனால் அவர் அந்தப் பந்துகளை பேக் ஃபூட்டில் (கால்களைப் பின் நகர்த்தி) ஆடினார். அதனால் பந்தின் தன்மையை இன்னும் சரியாகக் கணிக்க முடிகிறது, அதை எதிர்கொள்வதற்கான கூடுதல் அவகாசமும் அவருக்குக் கிடைக்கிறது" என்றும் அருண் கார்த்திக் கூறினார்.

ஒருவேளை பந்துகள் திரும்பினாலும் கூட அவர் பேட்டுக்கு வெளியே செல்கிறதே தவிர, உள்ளே வரவில்லை என்றும் அவர் கூறினார்.

அதேசமயம் பவுமாவின் உயரம், ஒரு கட்டத்தில் யான்சன், பாஷ் போன்ற வீரருக்கும் உதவியது என்று கூறினார் அருண் கார்த்திக்.

"மிகவும் உயர வித்தியாசம் கொண்ட வீரர்கள் ஆடும்போது பௌலர்கள் தங்களின் 'லென்த்தை' மாற்றவேண்டிய நிலை ஏற்படும். அது அவர்களுக்கு சற்று பாதகமான அம்சம். சீராக ஒரே போல் வீசிக்கொண்டிருந்தவர்களுக்கு இந்த மாற்றம் பின்னடைவைக் கொடுக்கும். அது பேட்டர்களுக்கு சாதகமாக அமையும்" என்றார் அவர்.

வர்ணனையின்போது இந்த விவாதத்தைத் தொடங்கிவைத்த இந்திய முன்னாள் வீரர் அபினவ் முகுந்த் இந்த தாழ்வான ஈர்ப்பு மையமும், பவுமான டிஃபன்ஸிவ் மனநிலையும் இணைந்து ஒரு மிகச் சிறந்த இன்னிங்ஸைக் கட்டமைத்தது என்றார்.

டெம்பா பவுமா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பவுமாவின் ஈர்ப்பு மையம் தாழ்வாக இருந்தது ஈடன் கார்டன் போட்டியில் அவருக்கு சாதகமாக அமைந்தது

பிபிசி தமிழிடம் இதுபற்றிப் பேசிய அபினவ் முகுந்த், "தன்னுடைய உயரத்தை நன்கு சாதகமாக்கிக்கொண்ட பவுமா, பந்துகளுக்கு அதிகமாக 'கமிட்' (commit) ஆகவில்லை'' என்றார்.

''அவர் அதிகமாக 'இனிஷியல் மூவ்மென்ட்' எதுவும் கொடுக்கவில்லை. அதிகம் முன்னே நகராமல் ரொம்பவும் கொஞ்சமாகதான் கால்களை முன்பு நகர்த்தினார் (a small front press). அதனால் எந்தப் பந்துக்கும் அவர் முன்கூட்டியே சென்றுவிடவில்லை. இது டிஃபன்ஸிவ் கிரிக்கெட் விளையாடுவதற்கான ஒரு நல்ல வழிமுறை." என்று கூறினார்.

தற்போது டி20 போட்டிகளில் அதிகம் விளையாடாத பவுமாவால் தடுப்பு ஆட்டத்தின் முக்கியத்துவத்தை நன்கு புரிந்துகொள்ள முடிந்திருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

தென்னாப்பிரிக்கா 75/6 என்ற தடுமாறிக்கொண்டிருந்தபோது யான்சன் மற்றும் பாஷ் உடன் கூட்டணி அமைத்துத்தான் தென்னாப்பிரிக்காவின் ஸ்கோரை உயர்த்தினார் பவுமா.

பவுமாவுக்கு அடுத்து அந்த இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்காவுக்காக அதிக ரன்கள் அடித்தது பாஷ் (25 ரன்கள்) மற்றும் யான்சன் (13 ரன்கள்) இருவரும்தான். இந்த எதிர்பாராத இன்னிங்ஸ்கள்தான் தென்னாப்பிரிக்கா 123 என்ற பெரிய முன்னிலை (அந்த ஆடுகளத்துக்கு அது பெரிய இலக்காகவே கருதப்பட்டது) பெறக் காரணமாக அமைந்தது.

கவாஸ்கர், சச்சின் போன்றவர்களுக்கும் உதவியது

பவுமா மட்டுமல்ல, சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர் முதல் மெஸ்ஸி வரை உயரம் குறைவான வீரர்கள் அதீத நிலைத்தன்மையோடு காணப்பட்டதற்கு அந்த ஈர்ப்பு மையம் தாழ்வாக இருந்ததுதான் காரணம் என்று வல்லுநர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

சமீபத்தில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் கூட பாட்காஸ்ட்டில் சில மாதங்கள் முன்பு இதுபற்றிப் பேசியிருந்தார்.

தனக்கு முந்தைய தலைமுறை வீரர்களிடம் பேட்டிங் பற்றி டிராவிட் ஏதும் பின்பற்றியிருக்கிறாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

அதுபற்றிப் பேசிய டிராவிட், "கவாஸ்கர் அற்புதமான நிலைத்தன்மை கொண்டவர். அதை நான் எப்போதும் வியந்திருக்கிறேன். நான் சற்று உயரம் அதிகம் என்பதால், என்னால் எதையும் பின்பற்ற முடியவில்லை. அதனால் எனக்கு ஏற்ற வகையில் நான் நின்றேன். அதேசமயம் டெண்டுல்கரும் நன்கு நிலைத்தன்மை கொண்டிருந்தார். உயரம் குறைவான வீரர்களுக்கு 'லோ சென்ட்டர் ஆஃப் கிராவிட்டி' இருப்பதால் அவர்களுக்கு எப்போதுமே அதிக நிலைத்தன்மை கொண்ட பார்வை ஏற்படும் என்று சொல்வார்களே" என்றார்.

சச்சின் டெண்டுல்கர் - ராகுல் டிராவிட்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தன்னை விட உயரம் குறைவான சச்சின், சிறந்த நிலைத்தன்மை கொண்டிருந்ததாகக் கூறுகிறார் டிராவிட் (கோப்புப் படம்)

மேலும், "கடந்த காலத்தில் விளையாடிய வீரர்களில் பல சிறந்த பேட்டர்கள் உயரம் குறைவானவர்களாக இருந்திருக்கிறார்கள். கவாஸ்கர், டெண்டுல்கர், லாரா, பான்டிங்... அந்தக் காலத்தில் பிராட்மேன் வரை பாருங்கள். கோலி கூட கொஞ்சம் உயரம் குறைவானவர்தான். அவருக்கு நான் அப்படி சொல்வது பிடிக்காமல் போகலாம்" என்றும் டிராவிட் கூறியிருந்தார்.

தற்போது கிரிக்கெட் மாறிவரும் சூழலில், டி20 கிரிக்கெட் எழுச்சி பெற்றிருக்கும் நிலையில், அது உயரமான வீரர்களுக்கு சாதகமாக இருப்பதாகக் கூறினார் டிராவிட்.

உயரமான வீரர்கள் பந்தை எட்டுவதற்கும் நன்கு பலம் கொடுத்து அடிப்பதற்கும் அவர்கள் உயரம் உதவுவதாகக் கூறிய டிராவிட், கெவின் பீட்டர்சன், கரன் பொல்லார்ட் போன்றவர்களை உதாரணமாகக் கூறினார்.

அதேசமயம், டெஸ்ட் போட்டிகளில் உயரம் குறைவான வீரர்களால் மற்றவர்களைவிட அதிகம் சோபிக்க முடியும் என்கிறார் கே.பி.அருண் கார்த்திக்.

ஆலன் டொனால்டுக்கு எதிராக ஈர்ப்பு மையத்தை மேலும் தாழ்வாக்கிய சச்சின்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியொன்றில் ஆலன் டொனால்டுக்கு எதிராக தான் ஈர்ப்பு மையத்தை மிகவும் தாழ்த்தி விளையாடியதைப் பற்றி பத்திரிகையாளர் போரியா மஜும்தாரிடம் ஒருமுறை சொல்லியிருக்கிறார் சச்சின் டெண்டுல்கர்.

"அரௌண்ட் தி ஸ்டம்ப் (around the stump line) வந்து எனது விலாவைக் குறிவைத்து பந்துவீசிக்கொண்டிருந்தார் ஆலன் டொனால்ட். 'உயரமான வீரர்கள் பந்துக்கு மேலே சென்று ஆடுவதுபோல், நாம் ஏன் பந்துக்கு கீழே சென்று ஆடக்கூடாது' என்று யோசித்தேன். உடனே என்னுடைய ஈர்ப்பு மையத்தைத் தாழ்த்தி, பந்துக்குக் கீழே செல்லத் தொடங்கினேன். அதன்பிறகு அவரை எதிர்கொள்வது சற்று எளிதானது," என்று கூறியிருக்கிறார்.

சச்சின் டெண்டுல்கர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஈர்ப்பு மையத்தை நன்கு தாழ்வாக்கியதன் மூலம் வீசப்படும் பந்து பற்றி நன்கு புரிந்துகொள்ள முடிந்தது என்று குறிப்பிட்டிருக்கிறார் சச்சின் டெண்டுல்கர் (கோப்புப் படம்)

மேலும், "ஒருவேளை பந்து 'ஷார்ட் ஆஃப் குட் லென்த்தில்' (short of good length) பிட்ச் ஆனாலும், என்னால் அதற்குக் கீழே செல்ல முடிந்தது. அதைத் தொடர்ச்சியாக செய்ய நான் என் ஸ்டான்ஸை அகலப்படுத்தி, இன்னும் கீழே செல்லத் தொடங்கினேன். அதன்பிறகு பந்தின் லென்த்தைக் கணிப்பதுதான் விஷயம். அதை நான் சரியாகக் கணித்தபின், பந்தைப் பற்றி நன்கு அறிந்துகொள்ளும் நிலையில் இருந்தேன்." என்றும் சச்சின் கூறினார்.

ஈடன் கார்டனில் பவுமா இந்திய ஸ்பின்னர்களை எதிர்கொண்டது கிட்டத்தட்ட இப்படித்தான்.

உயர்ந்து நின்ற பவுமா

ஈர்ப்பு மையம் தாழ்வாக இருப்பதோடு, நன்கு அகலமான ஸ்டான்ஸ் கொண்டிருந்ததால், வீசப்படும் பந்துகளைப் பவுமாவால் நன்கு அறிந்திருக்க முடிந்தது என்றார் அருண் கார்த்திக். அதனால் தான் ஜடேஜாவுக்கு எதிராக அனைவரும் விக்கெட்டுகள் இழந்தபோது பவுமா உறுதியாக நின்றார் என்கிறார் அவர்.

ஜடேஜா அன்று வீசியது மிகச் சிறந்த ஸ்பெல்களில் ஒன்றாகக் கருதப்பட்டது. அவர் வீசிய 20 ஓவர்களில், 17 ஓவர்களில் குறைந்தது ஒரு பந்தையாவது சந்தித்திருந்தார் பவுமா.

டெம்பா பவுமா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 75/6 என்ற நிலையில் இருந்த தென்னாப்பிரிக்கா, பவுமாவின் இன்னிங்ஸாலும், அவர் அமைத்த இரு பார்ட்னர்ஷிப்களாலும் 153 என்ற ஸ்கோருக்கு எடுத்துச் சென்றன

மற்ற பேட்டர்கள் ஜடேஜாவின் பந்தைக் கணிக்கத் தவறியபோது, பவுமா அதில் எந்தத் தவறும் செய்யவில்லை. காரணம், தமிழ் வர்ணனையாளர்கள் சொன்னதுபோல், பவுமாவின் உயரமும், அவரது ஸ்டான்ஸும்.

அந்த இன்னிங்ஸ் இல்லாமல் இருந்திருந்தால் தென்னாப்பிரிக்கா விரைவில் ஆல் அவுட் ஆகியிருக்கும். இலக்கு குறைவாக இருந்திருந்தால் இந்தியா அந்தப் போட்டியை வென்றிருக்கும். ஆனால், பவுமாவின் அந்த இன்னிங்ஸ் அதைத் தடுத்துவிட்டது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cvgk2vpyjewo

  • கருத்துக்கள உறவுகள்
On 18/11/2025 at 08:29, alvayan said:

மன்னிப்பு கேட்டதாகவும் செய்தி வருகுது....மைதானத்தில் நல்ல பிள்ளையாக இருந்த பும்ரா ...ஆசியகப் ..பாகிஸ்தான் மச்சிலிருந்து ...குளப்படி காரனாக மாறியிருக்கிறார்

இந்தியாவின் பிச் விளையாட்டு இந்தியாவையே பிச்சு விட்டுது...இந்தியாவின் இறுதி இன்னிச் துடுப்பாட்டத்தை..பார்க்கையில்...பனங்காணிக்குள் ரப்பர் பந்தில் விளையாடிய கிரிக்கட்டுப் போல இருக்குது..

எதிரணியினரை வார்த்தைகளால் தாக்குவதில் அவுஸ்ரேலியர்கள் மோசமானவர்கள், அவர்களின் நோக்கம் ஆட்டக்காரரின் கவனத்தினை சிதறடிப்பதே ஆகும், இந்தியணியினரின் இந்த உருவக கேலி நடவடிக்கை ஆட்டக்காரரின் கவனத்தினை சிதறடிப்பதற்காக செய்யப்படவில்லை, ரிவியு செய்யாப்படும் போது தமக்குள் பேசுவதாக உள்ளது, பொதுவாக வார்த்தை தாக்குதலே ஒரு மோசமான விடயமாக இருக்கும் போது இந்தியணியினர் செய்த இந்த செயல் மற்றும் அண்மையில் பாகிஸ்தான் அணியினருக்கு கைகுலுக்காமல் சென்றது (பிறகு எதற்காக அந்த அணியினருடன் விளையாடுகிறார்கள்) பாகிஸ்தான் பிரதிநிதியிடமிருந்து கோப்பையினை வாங்க மறுத்ததென இந்தியணியின் செயற்பாடுகள் கவலைக்குரியதாக மாறுகிறது, இத்தனைக்கும் சொந்த நாட்டிலேயே உதைவாங்குகிறார்கள்.

14 hours ago, ஏராளன் said:

இந்த கட்டுரையின் ஆரம்ப்பத்திலிருந்து மீண்டும் மீண்டும் உருவக கேலியினை எதோ ஒரு வகையில் நியாயப்படுத்துவது போல காணப்படுகிறது, பாகிஸ்தான் வீரர் ஒருவர் சென்னையில் சிறப்பாக விளையாடியமைக்காக சென்னை இரசிகர்கள் எழுந்து நின்று கரகோசம் செய்தார்கள் என கூறுகிறார்கள், நியுசிலாந்து இரசிகர்கள் எதிரணி வீரர் 100 எட்டும் நிலையில் ஒட்டு மொத்த மைதானமும் தமது அணியினை கைவிட்டு எதிரணி வீரருக்கு பின்னால் அணி திரளும் போது பார்ப்பதற்கு சந்தோசமாக இருக்கும், அந்த மனிதர்களின் பண்பு முன்மாதிரியாக அனைவரும் பின்பற்றினால் நன்றாக இருக்கும், விளையாட்டுகளில் தேசப்பற்று இருப்பதில் தப்பில்லை ஆனால் வெறுப்பை கடத்துவது அந்த விளையாட்டினை அவமதிப்பதாகும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முத்துசாமி சதம், யான்சன் அரைசதம்; வலுவான நிலையில் தென்னாப்பிரிக்கா

செனுரன் முத்துசாமி

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இரண்டாம் நாள் உணவு இடைவேளையின்போது 428/7 என்ற வலுவான நிலையில் இருக்கிறது தென்னாப்பிரிக்க அணி. அந்த அணியின் செனுரன் முத்துசாமி சதமடித்து விளையாடிக்கொண்டிருக்கிறார்.

247/6 என்ற ஸ்கோரில் இருந்து இரண்டாவது நாள் ஆட்டத்தைத் தொடங்கிய தென்னாப்பிரிக்காவின் முத்துசாமி, வெரெய்னே இருவரும் நிதானமாக ஆடி விக்கெட்டே இழக்காமல் முதல் செஷனைக் கடந்தனர். இரண்டாவது செஷனில் ஜடேஜா பந்துவீச்சில் வெரெய்ன் ஸ்டம்பிங் செய்யப்பட்டு 45 ரன்களோடு வெளியேறினார்.

ஆனால், அதன்பிறகு களமிறங்கிய ஆல்ரவுண்டர் மார்கோ யான்சன் அதிரடியாக விளையாடி வேகமாக ரன் சேர்த்தார். அவர் 53 பந்துகளில் அரைசதம் கடந்தார். இவர் அதிரடி ஒருபக்கம் இருக்க, நிதானமாகவும் உறுதியாகவும் விளையாடிய செனுரன் முத்துசாமி, தன் முதல் டெஸ்ட் சதத்தைப் பூர்த்தி செய்தார். இவர் தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவர்.

இரண்டாவது செஷன் முடிவில் தென்னாப்பிரிக்க அணி 428/7 என்ற நிலையில் இருக்கிறது. முத்துசாமி 107 ரன்களுடனும், யான்சன் 51 ரன்களுடனும் களத்தில் இருக்கிறார்கள். இன்று இதுவரை வீசப்பட்ட 55.1 ஓவர்களில் இந்தியா 1 விக்கெட்டை மட்டுமே வீழ்த்தியிருக்கிறது.

https://www.bbc.com/tamil/live/c7v8pjqg0n7t?post=asset%3A94f7d311-6cfd-4f66-bcd1-3c4b4d6a63f7#asset:94f7d311-6cfd-4f66-bcd1-3c4b4d6a63f7

2nd Test, Guwahati, November 22 - 26, 2025, South Africa tour of India

Toss:- South Africa, elected to bat first

South Africa FlagSouth Africa

489

India FlagIndia

(6.1 ov) 9/0

Day 2 - India trail by 480 runs.

Current RR: 1.45

  • கருத்துக்கள உறவுகள்

செனுரன் முத்துசாமி தமிழகத்தில் நாகப்பட்டினத்தை பூர்விகமான தமிழர்.

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டாவது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைய அதிக வாய்ப்புள்ளதாக கருதுகிறேன், அதனால் தென்னாபிரிக்கா இரண்டு போட்டிகள் கொண்ட தொடரினை வெல்ல அதிக வாய்ப்புள்ளது, இந்திய முன்னால் வீரர் ஒருவர் சிறந்த ஆடுகளம் என வர்ணித்த ( புற்களை எல்லாம் நீக்கிவிட்டு முழங்காலுக்கு மேல் எழாத அதிகமாக சுழாத) ஒரு செத்த ஆடுகளத்தினை இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு கொடுக்க வேண்டும் என கூறியதாக எங்கோ பார்த்த நினைவுள்ளது, இந்தியா இப்படியான ஒரு ஆடுகளத்தினை கொடுத்தால் போட்டியில் வெல்லலாம் என கூறினார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Tea

2nd Test, Guwahati, November 22 - 26, 2025, South Africa tour of India

South Africa FlagSouth Africa

489

India FlagIndia

(36 ov) 102/4

Day 3 - Session 1: India trail by 387 runs.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, vasee said:

இரண்டாவது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைய அதிக வாய்ப்புள்ளதாக கருதுகிறேன், அதனால் தென்னாபிரிக்கா இரண்டு போட்டிகள் கொண்ட தொடரினை வெல்ல அதிக வாய்ப்புள்ளது.

Stumps

2nd Test, Guwahati, November 22 - 26, 2025,

South Africa tour of India

South Africa (8 ov) 489 & 26/0

India 201

Day 3 - South Africa lead by 314 runs.

Current RR: 3.25

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, ஏராளன் said:

Stumps

2nd Test, Guwahati, November 22 - 26, 2025,

South Africa tour of India

South Africa (8 ov) 489 & 26/0

India 201

Day 3 - South Africa lead by 314 runs.

Current RR: 3.25

போட்டியினை பார்க்காமல் தென்னாபிரிக்கா மற்றும் இந்தியணியின் ஆரம்பத்தினை பார்த்து இந்தியா ஒரு செத்த ஆடுகளத்தினை வழங்கியிருக்கும் என நினைத்தேன், சிகப்பு மண் கொண்ட ஆடுகளத்தினை கொடுத்துள்ளது, வேகபந்து வீச்சாளர்களுக்கும் சுழல் பந்து வீச்சிற்கும் சாதகமான ஆடுகளம், 4 மற்றும் 5 ஆவது நாளில் ஆடுகளம் விரைவாக காய்ந்து சுழல் பந்து வீச்சிற்கு மிக சாதகமாகிவிடும், இந்தியா தோல்வியினை தவிர்க்க முடியாது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தென் ஆபிரிக்காவிடம் சொந்த மண்ணில் பரிதவிக்கிறது இந்தியா

Published By: Vishnu 24 Nov, 2025 | 06:56 PM

image

(நெவில் அன்தனி)

தென் ஆபிரிக்காவினால் முதலாவது டெஸ்ட் போட்டியில் துவம்சம் செய்யப்பட்ட இந்தியா இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் பரிதாப நிலையில் இருக்கிறது.

கடந்த சனிக்கிழமை ஆரம்பமான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாளான இன்றைய ஆட்ட நேர முடிவில் தென் ஆபிரிக்கா அதன் இரண்டாவது இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 26 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இதற்கு அமைய போட்டியில் மேலும் இரண்டு நாட்கள் மீதம் இருக்க தென் ஆபிரிக்கா 10 விக்கெட்களையும் வைத்துக்கொண்டு 314 ஓட்டங்களால் முன்னிலையில் இருக்கிறது.

2411_marco_jansen.png

குவாஹாட்டி பரஸ்பரா கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் இப் போட்டியில் மார்க்கோ ஜென்சன் சகலதுறைகளிலும் பிரகாசித்து தென் ஆபிரிக்காவை பலமான நிலையில் இட்டுள்ளார்.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த தென் ஆபிரிக்கா முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 489 ஓட்டங்களைக் குவித்தது.

தென் ஆபிரிக்க அணியில் ஒருவரைத் தவிர ஏனைய 10 வீரர்களும் 10 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.

அவர்களில் இந்திய வம்சாவழியான சேனுரன் முத்துசாமி 109 ஓட்டங்களையும் 9ஆம் இலக்க வீரர் மார்க்கோ ஜென்சென் 93 ஓட்டங்களையும் பெற்றனர்.

2411_senuran_muthusamy.png

அவர்கள் இருவரும் 8ஆவது விக்கெட்டில் 97 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

பந்துவீச்சில் குல்தீப் யாதவ் 115 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களைக் கைப்பற்றினர்.

பதிலுக்கு முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 201 ஓட்டங்களுக்கு சுருண்டது.

2411_marco_jansen_bowling.png

இந்திய துடுப்பாட்டத்தில் மூவர் மாத்திரமே 20 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.

மார்ககோ ஜென்சன் 5 ஓட்டமற்ற ஓவர்கள் உட்பட 19.5 ஓவர்களில் 48 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களைக் கைப்பற்றினார். 

எண்ணிக்கை சுருக்கம்

தென் ஆபிரிக்கா 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 489 (செனுரன் முத்துசாமி 109, மார்க்கோ ஜென்சன் 6 பவுண்டறிகள், 7 சிக்ஸ்கள் உட்பட 93, ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ் 49, கய்ல் வெரின் 45, டெம்பா பவுமா 41, ஏய்டன் மார்க்ராம் 38, ரெயால் ரிக்ல்டன் 35, குல்தீப் 115 - 4 விக்., ஜஸ்ப்ரிட் பும்ரா 75 - 2 விக்., ரவிந்த்ர ஜடேஜா 94 - 2 விக்., மொஹம்மத் சிராஜ் 106 - 2 விக்.)

இந்தியா 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 201 (யஷஸ்வி ஜய்ஸ்வால் 58, வொஷிங்டன் சுந்தர் 48, கே. எல். ராகுல் 22, மார்க்கோ ஜென்சன் 48 - 6 விக், சைமன் ஹாமர் 64 - 3 விக்.)

தென் ஆபிரிக்கா 3ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 2ஆவது இன்: 26 - 0

https://www.virakesari.lk/article/231327

  • கருத்துக்கள உறவுகள்

தமிழன் ஆப்பு வச்சுட்டானப்பா கிந்தியாவுக்கு

idea1-15-1479205076.jpg

  • கருத்துக்கள உறவுகள்

நான்காம் நாள் மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு ஒரு 45 நிமிடம் வரை தென்னாபிரிக்கா ஆடினால் 440 ஓட்டங்கள் முன்னிலை பெற்று ஆட்டத்தை நிறுத்தினால், இந்திய அணியை இரண்டாவது இன்னிங்ஸுக்காக 130 ஓவர்கள் ஆடவைக்கலாம். ஆனால் எனது கணிப்பின்படி 350 ஓட்டங்கள் போதுமானது, இன்று நான்காம் நாள் முடிவதற்குள்ளாகவே இந்திய விக்கட்டுக்களை வீழ்த்தி விடலாம்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Stumps

2nd Test, Guwahati, November 22 - 26, 2025,

South Africa tour of India

South Africa 489 & 260/5d

India (15.5 ov, T:549) 201 & 27/2

Day 4 - India need 522 runs.

Current RR: 1.70

• Last 10 ov (RR): 10/2 (1.00)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தென் ஆபிரிக்காவுடனான இரண்டாவது டெஸ்டில் இந்தியா தள்ளாடுகிறது

Published By: Vishnu

25 Nov, 2025 | 08:11 PM

image

(நெவில் அன்தனி)

குவாஹாட்டி, பர்சபரா கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் தென் ஆபிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 549 ஓட்டங்கள் என்ற மிகவும் கடினமான வெற்றி இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடும் இந்தியா 2 விக்கெட்களை இழந்து 27 ஓட்டங்களைப் பெற்று தள்ளாடிக் கொண்டிருக்கிறது.

போட்டி ஆரம்பமான சனிக்கிழமை முதல் இன்று நான்காம் நாள்வரை முழுமையான ஆதிக்கம் செலுத்தி வரும் தென் ஆபிரிக்காவுக்கு இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் முழுமையான வெற்றியை ஈட்ட இன்னும் 8 விக்கெட்களே தேவைப்படுகிறது.

கொல்கத்தா ஈடன் கார்ட்ன்ஸ் விளையாட்டரங்கில் மூன்று நாட்களுக்குள் நிறைவடைந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்தியாவை 30 ஓட்டங்களால் தென் ஆபிரிக்கா மிகவும் பரபரப்பான முறையில் வெற்றிகொண்டிருந்தது.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலாவது இன்னிங்ஸ் நிறைவில் 288 ஓட்டங்களால் முன்னிலையில் இருந்த தென் ஆபிரிக்கா, போட்டியின் நான்காம் நாளான இன்று காலை தனது இரண்டாவது இன்னிங்ஸை விக்கெட் இழப்பின்றி 26 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்தது.

மிகவும் திறமையாகத் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த ட்ரைஸ்டன் ஸ்டப்ஸுக்கு சதம் அடிப்பதற்கு வாய்ப்பு கொடுக்க டெம்பா பவுமா தீர்மானித்தார். ஆனால், மொத்த எண்ணிக்கை 260 ஓட்டங்களாக இருந்தபோது ட்ரைஸ்டன் ஸ்டபஸ் 94 ஓட்டங்களுடன் 5ஆவதாக ஆட்டம் இழந்ததும் டெம்பா பவுமா இரண்டாவது இன்னிங்ஸை நிறுத்திக்கொண்டு இந்தியாவுக்கு 543 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தார்.

தென் ஆபிரிக்காவின் 2ஆவது இன்னிங்ஸில் ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ், 4ஆவது விக்கெட்டில் டோனி டி ஸோர்ஸியுடன் 101 ஓட்டங்களையும் 5ஆவது விக்கெட்டில் வியான் முல்டருடன் 82 ஓட்டங்களையும் பகிர்ந்து அணியை மிகவும் பலமான நிலையில் இட்டார்.

தென் ஆபிரிக்காவின் இரண்டாவது இன்னிங்ஸில் வீழ்ந்த 5 விக்கெட்களில் நான்கை ரவிந்த்ர ஜடேஜா கைப்பற்றினார்.

இந்தப் போட்டியில் அதிசயம் நிகழ்ந்தாலன்றி இந்தியா தோல்வி அடைவதை தவிர்க்க முடியாததாகிவிடும்.

எண்ணிக்கை சுருக்கம்

தென் ஆபிரிக்கா 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 489 (சேனுரன் முத்துசாமி 109, மார்க்கோ ஜென்சன் 93, ட்ரைஸ்டன் 49, கய்ல் வெரின் 45, டெம்பா பவுமா 41, ஏய்டன் மார்க்ராம் 38, ரெயான் ரிக்கல்டன் 35, குல்தீப் யாதவ் 115 - 4 விக்., ஜஸ்ப்ரிட் பும்ரா 75 - 2 விக்., ரவிந்த்ர ஜடேஜா 94 - 2 விக்., மொஹம்மத் ஷமி 106 - 2 விக்.),

இந்தியா 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 201 (யஷஸ்வி ஜய்ஸ்வால் 58, வொஷிங்டன் சுந்தர் 48, கே. எல். ராகுல் 22, மார்க்கோ ஜென்சன் 48 - 6 விக்., சைமன் ஹாமர் 64 - 3 விக்.)

தென் ஆபிரிக்கா 2ஆவது இன்: 260 - 5 விக். டிக்ளயார்ட் (ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ் 94, டோனி டி ஸோர்ஸி 49, வியான் முல்டர் 35 ஆ.இ., ரெயால் ரிக்கல்டன் 35, ரவிந்த்ர ஜடேஜா 62 - 4 விக்.)

இந்தியா - வெற்றி இலக்கு 549 ஓட்டங்கள் - 2ஆவது இன்: 27 - 2 விக். (யஷஸ்வி ஜய்ஸ்வால் 13, சைமன் ஹாமர் 1 - 1 விக்., மார்க்கோ ஜென்சன் 14 - 1 விக்.)

https://www.virakesari.lk/article/231440

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஆடுகளம் சிகப்பு மண் கொண்ட ஆடுகளம், ஆடுகளத்தில் வெடிப்பு ஏற்படவில்லை, இது ஒரு தூசித்தன்மை கொண்ட ஆடுகளமாக இருப்பதால் வளமையான 4, 5 ஆம் நாளில் ஏற்படுமெதிர்பாரா திருபங்கள், எதிர்பாரா ஏற்ற இறக்கங்கள் இந்த ஆடுகளத்தில் இருக்காது என கருதுகிறேன், ஆனாலும் சுழல் பந்து வீச்சிற்கு சாதகமாக இருக்கும், பந்து தரையிலிருந்து மெதுவாகி மெலெழும், அதிகமாக திரும்பும் நேர கணிப்பினை உணர்ந்து கொண்ட்டால் ஆடுவது கடினமாக இருக்காது என கருதுகிறேன்.

அது என்ன மாயமோ தெரியவில்லை தென்னாபிரிக்க சுழல்பந்துவீச்சாளர்கள் பந்து வீசும் போது பந்து உயர்ந்து மேலெழுவதும், திரும்புவதுமாக இருக்கின்றது🤣.

இந்த ஆடுகளத்தில் இந்தியணி தோல்வியினை தவிர்ப்பது ஒன்றும் கடினமான இலக்காக இருக்காது என கருதுகிறேன், பொறுமையாக இந்தியா விளையாட வேண்டும், வோசிங்க்டன் சுந்தரை 5 ஆவது விக்கட்டுக்கு முன்னகர்த்துவார்கள் என எதிர்பார்க்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் முதலாவது இனிங்ஸில் ஜேன்ஸன் அளவு குறைந்த உயரமான பந்துகள் இறுதி நாளான 5 ஆம் நாளில் பெரிதான தாக்கத்தினை செலுத்தாது என கருதுகிறேன், மட்டையாளர்கள் வேக பந்து வீச்சிற்கு பின் காலில் சென்று விளையாடுவது ஒரு தெரிவாக இருக்கலாம், சுழல் பந்துவீச்சாளர்களின் பிளைட் பந்துகளை இந்தியணி வீரர்கள் இறங்கி வந்து விளையாடுகிறார்கள் அது அதிக ஆபத்தான ஆக்குரோசமான நகர்வு, இந்த ஆடுகளத்தில் சுவீப் பாதுகாப்பான தெரிவு பந்து வீச்சாளர்களின் லைன் லெந்தினை மாற்றுவதற்கு, ஏனெனில் பந்து அதிகமாக மேலெழாது.

தென்னாபிரிக்கா 2:0 எனும் வகையில் இந்தியாவிற்கு வெள்ளை அடிக்க வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

பாரத் அணி இரண்டாவது இன்னிங்ஸில் 58 ஓட்டங்களுக்கு 5 விக்கட்டுக்களை இழந்துள்ளது!🤣

  • கருத்துக்கள உறவுகள்

சொந்த மண்ணில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது இந்தியா – தென்னாப்பிரிக்கா வரலாற்று சாதனை

Mano ShangarNovember 26, 2025 1:11 pm 0

சொந்த மண்ணில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது இந்தியா – தென்னாப்பிரிக்கா வரலாற்று சாதனை

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 408 ஓட்டங்களால் வெற்றிபெற்று வரலாற்று சாதனையை படைத்துள்ளது.

இந்த வெற்றியுடன் இரண்டு போட்டிகளை கொண்ட தொடரை முழுமையாக கைப்பற்றியுள்ள தென்னாப்பிரிக்கா அணி இந்தியாவை வெள்ளையடிப்பு செய்துள்ளது.

25 ஆண்டுகளுக்கு பின் தென்னாப்பிரிக்கா அணி இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்று, இந்திய அணியை அதன் சொந்த மண்ணில், தோல்வியடையச் செய்துள்ளனர்.

இதன்மூலம், தென்னாப்பிரிக்கா இந்தியாவை இரண்டு முறை சொந்த மண்ணில் முழுமையாக வென்ற முதல் அணியாக மாறியது. முன்னதாக, 1999-2000 ஆம் ஆண்டில், தென்னாப்பிரிக்கா இந்தியாவை டெஸ்ட் தொடரில் 2-0 என்ற கணக்கில் தோற்கடித்தது.

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது டெஸ்ட் குவஹாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிக்கா அணி, முதல் இன்னிங்ஸில், 489 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.

தென்னாப்பிரிக்கா அணிக்காக செனுரான் முத்துசாமி 206 பந்துகளில் 10 நான்கு ஓட்டங்கள, மற்றும் இரண்டு ஆறு ஓட்டங்கள் அடங்களாக 109 ஓட்டங்களை குவித்தார்.

இந்தியா அணிக்காக, குல்தீப் யாதவ் நான்கு விக்கெட்டுகளையும், ஜடேஜா, பும்ரா மற்றும் சிராஜ் தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பதிலுக்கு, துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 201 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் மட்டுமே 50 ஓட்டங்களுக்கு மேல் குவித்திருந்தார்.

தென்னாப்பிரிக்கா சார்பில் மார்கோ ஜான்சன் ஆறு விக்கெட்டுகளையும், சைமன் ஹார்மர் மூன்று வெற்றிகளையும் கைப்பற்றினர். முதல் இன்னிங்ஸின்படி, தென்னாப்பிரிக்கா 288 ஓட்டங்கள் முன்னிலை பெற்றனர்.

இதனையடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிக்கா 260 ஓட்டங்களை பெற்ற நிலையில், ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.

இதனால் இந்திய அணிக்கு 549 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. எவ்வாறாயினும், இந்திய அணி 140 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து 408 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது.

இது ஒட்டுமொத்தமாக, சொந்த மண்ணிலும் இந்தியாவின் மிகப்பெரிய டெஸ்ட் தோல்வியாகும். இதற்கு முன்பு 2004 ஆம் ஆண்டு நாக்பூரில் அவுஸ்திரேலியா அணி 342 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்தது.

மேலும், 13 மாதங்களில் ஒரு அணி சொந்த மண்ணில் இந்தியாவை டெஸ்ட் தொடரில் முழுமையாக வென்றது இது இரண்டாவது முறையாகும்.
முன்னதாக, 2024 ஒக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடந்த மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து இந்தியாவை 3-0 என்ற கணக்கில் தோற்கடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://oruvan.com/india-suffered-its-biggest-defeat-on-home-soil-south-africa-makes-history/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 408 ரன்களில் இந்தியா தோல்வி - 5 காரணங்கள் என்ன?

இந்தியா தென்னாப்பிரிக்கா கிரிக்கெட்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, முதல் இன்னிங்ஸில் 109 ரன்கள் எடுத்தார் செனுரன் முத்துசாமி

கட்டுரை தகவல்

  • பிரதீப் கிருஷ்ணா

  • பிபிசி தமிழ்

  • 26 நவம்பர் 2025, 08:03 GMT

    புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் தோல்வியை சந்தித்திருக்கிறது இந்திய அணி. இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2 - 0 என கைப்பற்றியிருக்கிறது தென்னாப்பிரிக்கா.

இதன் மூலம் 2000 ஆண்டுக்குப் பிறகு இந்திய மண்ணில் முதல் முறையாக ஒரு டெஸ்ட் தொடரை வென்றிருக்கிறது தென்னாப்பிரிக்க அணி.

முதல் போட்டியில் தோற்றிருந்த இந்திய அணி, இரண்டாவது போட்டியிலும் 408 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

இந்தப் போட்டியில் இந்தியா தோல்வியடைந்ததற்கான 5 காரணங்கள் என்ன?

1. சவால் கொடுத்த லோயர் மிடில் ஆர்டர்

இந்தப் போட்டியின் முதல் நாள் இந்தியா ஓரளவு நல்ல நிலைக்கு வந்தது. தென்னாப்பிரிக்க அணி 201/5 என்ற நிலையில் இருந்தது. அங்கிருந்த அந்த அணியை 300 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆக்குவதற்கான வாய்ப்பு இருப்பதாகக் கருதப்பட்டது.

ஆனால், வழக்கம் போல் லோயர் மிடில் ஆர்டர் மற்றும் லோயர் ஆர்டர் இந்திய அணி பௌலர்களுக்கு சவால் கொடுத்தது.

வழக்கமாகவே பல போட்டிகளில் டாப் ஆர்டரை விரைந்து ஆட்டமிழக்கச் செய்தபின் அதன் பிறகு வரும் வீரர்களை அவுட் ஆக்க முடியாமல் இந்தியா தடுமாறும். சமீபத்திய போட்டிகளிலேயே அதற்குப் பல உதாரணங்கள் இருக்கின்றன.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 2வது போட்டியிலும் இந்தியா தோல்வி - 5 காரணங்கள் என்ன?

பட மூலாதாரம், Getty Images

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் (பெங்களூரு, 2024) வேகப்பந்துவீச்சாளர் டிம் சௌத்தி 65 ரன்கள் எடுத்து இந்தியாவை சோதித்தார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மெல்போர்ன் டெஸ்ட் போட்டியின் (2025) இரண்டாவது இன்னிங்ஸில் 91/6 என்றிருந்த ஆஸ்திரேலிய அணி, அதன்பிறகு மட்டும் 47.4 ஓவர்கள் ஆடியது. கடைசி விக்கெட்டுக்கு நாதன் லயான், ஸ்காட் போலாண்ட் இருவரும் மட்டும் 19.3 ஓவர்கள் ஆடினார்கள்.

சமீபத்தில் கூட இங்கிலாந்துக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்ட்டின் (2025) முதல் இன்னிங்ஸில் பிரைடன் கார்ஸ் 55 ரன்கள் எடுத்து இங்கிலாந்தின் ஸ்கோரை அதிகப்படுத்தினார்.

இது இந்த கவுஹாத்தி போட்டியிலும் தொடர்ந்தது. செனுரன் முத்துசாமி, மார்கோ யான்சன் மற்றும் கைல் வெரெய்னே ஆகியோர் இந்திய பௌலர்களுக்கு சவால் கொடுத்தனர்.

ஏழாவது விக்கெட்டுக்கு 88 ரன்கள் எடுத்திருந்த அந்த அணி, எட்டாவது விக்கெட்டுக்கு 97 ரன்கள் சேர்த்தனர். அதன் விளைவாக அந்த அணி 489 ரன்கள் குவித்தது. முத்துசாமி 109 ரன்கள் அடிக்க, யான்சன் 93 ரன்கள் எடுத்தார். இது இந்திய அணிக்கு மிகப் பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியது.

இந்தியா தென்னாப்பிரிக்கா கிரிக்கெட்

பட மூலாதாரம், Getty Images

2. பதம் பார்த்த 12 ஓவர்கள்

இந்தப் போட்டியில் பேட்டிங் செய்வது அவ்வளவு கடினமாக இருந்திருக்கவில்லை. தென்னாப்பிரிக்காவின் பெரிய இன்னிங்ஸுக்குப் பிறகு, இந்தியாவும் நல்ல தொடக்கத்தையே கண்டிருந்தது. 32.1 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 95 ரன்கள் எடுத்திருந்தது இந்தியா. தென்னாப்பிரிக்காவின் தொடக்கத்தை விட இது ஓரளவு சிறப்பானதாகவே இருந்தது. ஆனால், அங்கிருந்து பெரும் சரிவைச் சந்தித்தது இந்தியா.

32.1 ஓவர்களில் 95/1 என்ற இந்தியா 43.3 ஓவர்கள் முடிவில் 122/7 என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது. அந்த இடைப்பட்ட 11.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்தார்கள். அதில் பெரும்பாலானவை மோசமான ஷாட்களினால் வீழ்ந்த விக்கெட்டுகள்.

இந்தியா தென்னாப்பிரிக்கா கிரிக்கெட்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மோசமான ஷாட் தேர்வால் முதல் இன்னிங்ஸில் இந்திய பேட்டர்கள் விரைந்து ஆட்டமிழந்தனர்

தென்னாப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர்கள் தொடர்ந்து 'ஷார்ட் லென்த் பால்'களாக வீச, இந்திய பேட்ஸ்மேன்கள் அதை அடித்து ஆட முற்பட்டு விக்கெட்டுகளை இழந்தார்கள். துருவ் ஜுரெல், ரிஷப் பண்ட், ஜடேஜா, நித்திஷ் குமார் ரெட்டி என அடுத்தடுத்து விக்கெட்டுகள் அப்படியே வீழ்ந்தன. ஹார்மர் பந்துவீச்சில் அவுட்டான சாய் சுதர்ஷன் கூட தவறான ஷாட் ஆடித்தான் ஆட்டமிழந்தார்.

அது இந்திய அணி ஃபாலோ ஆனைத் தவிர்க்க முடியாத ஒரு நிலைக்குத் தள்ளப்படக் காரணமாக அமைந்தது. அதிலிருந்து கடைசி வரை இந்திய அணி மீண்டு வரவேயில்லை.

3. அனைத்து திசையிலும் அணைபோட்ட யான்சன்

இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் பேட்டிங், பௌலிங் இரண்டு ஏரியாவிலுமே இந்தியாவுக்கு மிகப் பெரிய சவாலாக விளங்கினார் யான்சன்.

முன்னர் தன்னுடைய அதிரடி இன்னிங்ஸால் தென்னாப்பிரிக்காவின் ஸ்கோரை உயரச் செய்தார். 91 பந்துகளில் 93 ரன்கள் விளாசினார் அவர். இது இந்திய பௌலர்களுக்கு ஒருபக்கம் நெருக்கடி ஏற்படுத்தியதோடு, மறுபக்கம் பேட்டிங் செய்துகொண்டிருந்த முத்துசாமி மீதான நெருக்கடியையும் குறைத்தது.

பேட்டிங்கில் சோபித்ததோடு மட்டுமல்லாமல், அடுத்ததாக பந்துவீச்சிலும் பெரும் தாக்கம் ஏற்படுத்தினார் யான்சன். இந்திய அணி தங்கள் முதல் இன்னிங்ஸில் அந்த பெரும் சரிவை சந்திக்க அவர்தான் முக்கியக் காரணமாக இருந்தார்.

'ஷார்ட் லென்த்' பந்துகளாக தொடர்ந்து வீசிய அவர், இந்திய பேட்டர்களை பெருமளவு சோதித்தார். அதில் வேகமும் இருந்ததால், இந்திய பேட்டர்களால் அதிரடியும் காட்ட முடியவில்லை. அதன் விளைவாக பண்ட், ஜுரெல், ஜடேஜா, நித்திஷ் ஆனைவரும் அவரது ஷார்ட் லென்த் பந்துகளில் பெவலியின் திரும்பினார்கள். கடைசி கட்டத்தில் வந்து குல்தீப் மற்றும் பும்ரா ஆகியோரின் விக்கெட்டையும் வீழ்த்தினார் அவர். 19.5 ஓவர்களில் 48 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார் அவர்.

முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க அணி 288 என்ற மிகப் பெரிய முன்னிலை பெறுவதற்கு அவர் மிக முக்கியக் காரணமாக விளங்கினார்.

இந்தியா தென்னாப்பிரிக்கா கிரிக்கெட்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, முதல் இன்னிங்ஸில் பேட்டிங், பந்துவீச்சு இரண்டு பிரிவிலும் சோபித்தார் மார்கோ யான்சன்

4. சவாலான தருணத்தில் தரப்பட்ட டிக்ளரேஷன்

இரண்டாவது இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க அணியின் திட்டம் பலருக்கும் புதிராக இருந்தது. விரைந்து ரன்கள் சேர்த்து, நல்ல முன்னிலை பெற்றதும் டிக்ளேர் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர்களோ வேறொரு திட்டம் வைத்திருந்தார்கள்.

83.5 ஓவர்கள் பேட்டிங் செய்த அந்த அணி 260 ரன்கள் எடுத்து, 548 ரன்கள் முன்னிலை பெற்றதும் டிக்ளேர் செய்தது.

தென்னாப்பிரிக்கா இரண்டாவது இன்னிங்ஸை ஆடத் தொடங்கியபோது 450 - 480 என்ற இலக்கை நிர்ணயித்து விட்டு டிக்ளேர் செய்வார்கள் என்று வல்லுநர்கள் எதிர்பார்த்தார்கள்.

அதற்கு அவர்கள் இரண்டாவது இன்னிங்ஸில் 170 - 200 ரன்கள் அடித்திருந்தாலே போதும், அதை அவர்கள் அதிரடியாக அடிப்பார்கள் என்றுதான் வர்ணனையாளர்கள் விவாதித்தார்கள். ஆனால், தென்னாப்பிரிக்க பேட்டர்கள் மிகவும் நிதானமாக விளையாடியது தங்களுக்கு ஆச்சர்யமளிப்பதாகக் கூறியவர்கள், அதற்கான காரணத்தை பெருமளவு விவாதித்தார்கள்.

பேட்டிங் செய்வதற்கு ஆடுகளம் நன்றாக இருக்கிறது என்பதால் அவர்கள் இந்தியாவுக்கு அதிக ஓவர்கள் கொடுக்கவேண்டாம் என்று திட்டமிட்டிருக்கலாம் என்று தமிழ் வர்ணனையாளர்கள் விவாதித்துக்கொண்டிருந்தார்கள்.

இந்தியாவை ஆல் அவுட் செய்ய 100 -110 ஓவர்கள் கொடுப்பது முக்கியம் என்றும் விவாதிக்கப்பட்டிருந்தது. இரண்டாவது செஷன் முடிந்ததும் கூட டிக்ளேர் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஆனால், தென்னாப்பிரிக்கா அதைச் செய்யவில்லை.

மூன்றாவது செஷனிலும் 8 ஓவர்கள் ஆடிவிட்டு அந்த அணி டிக்ளே செய்ய, வெளிச்சம் சற்று குறைவான, மிகவும் சவாலாக கடைசி கட்டத்தில் புதிய பந்தை எதிர்கொள்ளவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது இந்தியா. இறுதியில் நான்காம் நாளின் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்தது. இது கடைசி நாள் சரிவுக்கு அடித்தளம் போட்டதாக அமைந்துவிட்டது.

ஒருவேளை முன்னதாகவே இந்திய அணியின் இன்னிங்ஸ் தொடங்கியிருந்தால் அவர்கள் நல்ல தொடக்கம் கண்டிருக்கலாம். அது போட்டியை டிரா நோக்கி நகர்த்தியிருக்கலாம். ஒருவேளை அந்த இரு விக்கெட்டுகள் கிடைக்காவிட்டாலும் கூட இந்தப் போட்டி டிரா ஆகியிருக்கலாம். ஆனால் தென்னாப்பிரிக்க அணி அந்த ரிஸ்க் எடுக்கத் தயாராக இருந்தது. அவர்கள் அதிக ஓவர்கள் பிடித்து இந்தியாவை கடைசி கட்டத்தில் ஆடவைக்கவேண்டும் என்பதில் தீர்க்கமாக இருந்திருக்கிறார்கள். அதை சிறப்பாகவும் நடைமுறைப்படுத்தினார்கள்.

இந்தியா தென்னாப்பிரிக்கா கிரிக்கெட்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 25 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரை வென்றிருக்கிறது தென்னாப்பிரிக்க அணி

5. 'உத்வேகம் இல்லையா?'

இந்தப் போட்டியின்போது வல்லுநர்கள் பலரும் விவாதித்த இன்னொரு விஷயம், இந்திய வீரர்களிடம் உத்வேகம் இல்லை என்பது. தென்னாப்பிரிக்க அணி இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்தபோது இந்திய வீரர்கள் யாரும் பெரிதாக உரையாடல்கள் எதுவும் மேற்கொள்ளவில்லை. வழக்கம்போல் ரிஷப் பண்ட் மட்டுமே பேசிக்கொண்டிருந்தார். இதை அப்போது வர்ணனையில் இருந்த இந்திய அணியின் முன்னாள் ஃபீல்டிங் பயிற்சியாளர் ஆர்.ஶ்ரீதர் கூடக் குறிப்பிட்டுப் பேசியிருந்தார்.

இந்திய அணியின் முன்னாள் வீரர் அபினவ் முகுந்த் கூட இதைப் பற்றி வர்ணனையில் விவாதித்தார். "இந்தப் போட்டியில் இந்திய வீரர்களிடம் பெரிதாக உத்வேகம் காணப்படவில்லை" என்று அவர் கூறினார்.

கொல்கத்தாவில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்திருந்தது. 2000ம் ஆண்டுக்குப் பிறகு இந்திய அணி சொந்த மண்ணில் ஒரு தொடரை இழப்பது இதுவே ஐந்தாவது முறை. அதில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இரண்டு முறை தோற்றிருக்கிறது இந்தியா.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/czdg5d76r5po

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.