Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அன்பின் கொழும்பு வாழ் தமிழ் மக்களுக்கு,

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

*கெழும்பில் வாாழும் ஒரு இனஉணர்வுள்ள ஒரு தமிழன் இணையதளங்களில் இணைக்கச்சொல்லி எனக்கு மின்னஞ்சலில் அனுப்பியிருந்த கடிதத்தை இங்கு இணைக்கிறேன்

அன்பின் கொழும்பு வாழ் தமிழ் மக்களுக்கு,

எமது முப்பது வருடகால போராட்ட வரலாற்றிலே இது ஓர் முக்கியமான மாதம். நாம் போராட்டம் என்று குறிப்பிடுவது வெறும் ஆயுதப் போராட்டத்தை மட்டுமல்லாது இத்தனை காலமும் எமது தமிழ் பேசும் உறவு நெஞ்சங்கள் சந்தித்து வந்த இன்னல்களையும், இழப்புகளையும், கட்டவிழ்த்து விடப்பட்ட கொடுமைகளையும் கட்டுப்பாடுகளையும் தடைகளையும் குறிக்குமாகும். செம்மொழியாம் தமிழ் ஆனால் அதிலும் இல்லை வார்த்தைகள் எமது மக்களின் துயரங்களை விவரிப்பதற்கு.

இன்று நாம் ஓரு உற்ற தளபதியை இழந்து இன்னொரு மாபெரும் இழப்பை சந்தித்து நிற்கின்றோம். யாரும் எண்ணிக்கூட பார்த்திருக்கமாட்டார்கள் அந்தப்பொன் சிரிப்பு முகத்தின் வாழ்வு நாற்பது அகவையிலே முடிவடையுமென்று. எங்கள் தமிழ்செல்வனும் தோழர்களும் எதிரியின் ஓர் கோழைத்தனமான செயலிலே அநியாயமாய் மாண்டுவிட்டார்கள். சிங்களம் இன்று வெட்கித் தலைகுனிய வேண்டும். ஆனாலும் பாருங்கள் அவனது வீராப்பை. அவைகளுக்கு வரலாறு கற்றுத்தந்த பாடங்கள் போதவில்லைபோலும்.

உலகெங்கும் இவ்வேளையில் எமது மாவீரர்களுக்கு அஞ்சலிக் கூட்டங்களளும்; பிரார்த்தனைகளும் நடைபெற்று வருகின்றன. அனைத்து நாடுகளினதும் அரச, மத மற்றும் சமூகத் தலைவர்கள் தமது அதிர்ச்சியையும் கவலையையும் வெளியிட்டுவரும் இந்த வேளையிலே ஒவ்வொரு தமிழ் மகனும் மகளும் இந்த விடுதலைப் போராட்டத்தில் தமக்குரிய பங்கை ஆற்றவேண்டிய காலம் நெருங்கிவிட்டது. விடுதலை வெற்றி என்பது வெறும் ஆயுதப்போராட்டத்தால் மட்டும் பெற்றுக்கொள்ளக்கூடியதல்ல. பிறநாட்டு அரசாங்கங்களுக்கும் மக்களுக்கும் எமது விடுதலைப் போராட்டத்திற்கான காரணத்தையும் எம்மண் மீது எமக்குள்ள உரிமையையும் அது சிங்கள ஆட்சியாளர்களால் எப்படியெல்லாம் மறுக்கப்படடது என்பதனையும் எடுத்துக் கூறவேண்டும். நாளாந்தம் எமது மக்கள் சந்திக்கும் கொடுமைகளையும் இழப்புகளையும் அவர்கள் மீது சிங்களத்தால் திணிக்கப்படும் ழூர்க்கத்தனமான வன்முறைகளையும் பற்றிய பரப்புரைகளில் ஈடுபடவேண்டும்.

தங்கத் தலைவனின் தலைமையில் இறுதிப்போருக்கான ஆயத்தங்கள் வடிவுபெறும் இவ்வேளையில் நாம் அனைவரும் அதற்குப் பக்கபலமான முயற்சிகளில் ஈடுபடவேண்டும் அல்லவா! நாம் அனைவரும் ஒன்றுபட்டு அனைத்து தமிழ் பேசும் மக்களும் இப்போராட்டத்திற்கு ஆதரவளிக்கின்றார்கள் என்பதனை சர்வதேசத்திற்கு உணரச் செய்ய வேண்டும். நாம் எவ்வளவுக்கெவ்வளவு எமது ஒற்றுமையை வெளிக்காட்டுகின்றோமோ அவ்வளவுக்கவ்வளவு விடுதலைக்கான வாசல் விரிவடையும். ஏமது ஒற்றுமையையும் ஆதரவையும் வெறும் வார்த்தைகளில் மட்டுமல்லாமல் செயல்களிலும் காட்டவேண்டும். நாம் எவ்வளவுக்கெவ்வளவு எமது ஒற்றுமையை வெளிக்காட்டுகின்றோமோ அவ்வளவிற்கு தேசத் துரோகிகளிகள் மற்றும் தமிழீழ தேசியத்திற்கு எதிரானவர்கள் சர்வதேச அரங்கில் எழுப்பும் சிங்களத்திற்கு ஆதரவான போலிப் பரப்புரைகள் மண்ணோடு மண்ணாய் மங்கிவிடும்

தமிழ்செல்வனும் மாவீரர்களும் எதற்காக உயிர் துறந்தார்கள்? யாருக்காக தமது வாழ்க்கையை தியாகம் செய்தார்கள்? ஏன் இந்த அர்ப்பணிப்பு? சொந்த பாசங்களை விடுத்து தமது ஆசை நிராசைகளை தவிர்த்து யாருக்காக இந்த அர்ப்பணிப்பு? அவர்களுக்கும் மட்டும் பெற்றோர் மனைவி பிள்ளைகள் சகோதரர்கள் சொந்தங்கள் இல்லையா என்ன? வெயில் மழை பசி உறக்கம் பாராமல் எதற்காக ஒவ்வொரு நாளும் களத்தில் நின்று போராடி இரத்தம் சிந்துகின்றார்கள். போராளிகளும் மாவீரர்களும் எப்போத ுதான் அறிந்தார்கள் இணையத்தை, திரைப்பட அரங்குகளை, தொலைக்காட்சி நாடகங்களை, கணினி விளையாட்டுக்களை. எப்போதுதான் மோகங்கொண்டார்கள் சுப்பர் மார்க்கெட், கேபிள் தொலைக்காட்சி மீது. அவர்கள் கொண்டதெல்லாம் தாய் மண் விடுதலை பெறவேண்டுமென்ற வெறி.

இனிமேல் எமது செயல் அனைத்தும் எமது மாவீரர்களுக்கும் சிங்களவன் குறி பார்க்காமல் வீசி அதுவும் குறிதவறி வீழ்ந்ததில் காவியமான எங்கள் தமிழ்ச்செல்வனுக்கும் கைமாறாக இருக்கவேண்டும். பிற நாடுகளில் தற்போது நடைபெறுவதுபோன்ற அஞ்சலிக் கூட்டங்களையோ பேரணிகளையோ கொழும்பில் நடத்துவது இயலாதவொரு வெளிப்படை உண்மை. ஆனால் நாம் அநாவசியமான கொண்டாட்டங்களையும் களியாட்டங்களையும் புறந்தள்ளுவதன் மூலம் சர்வதேசத்தின் பார்வையை எம்மீது திருப்பலாம். நாம் ஓர் பேரிழப்பை சந்தித்துநிற்கும் இவ்வேளையில் தீபாவளியை முன்னிட்டு சினிமா அரங்குகளையும் புடைவை கடைகளையும் நிரப்பி சிங்களத்தினதும் சர்வதேசத்தினதும் பார்வையில் எம்மை நாமே ஓர் கேவலத்திற்கு உரியவர்களாக்காமல் இருப்போம். இந்தத் தீபாவளியன்று புத்தாடைகளையும் கொண்டாட்டங்களையும் தவிர்த்து மத வழிபாட்டில் மட்டும் ஈடுபட்டு எமது மாவீரர்களுக்கு மரியாதை செலுத்துவோம். களத்தில் நிற்கும் போராளிச் சகோதரர்களின் மனவலிமையை அதிகரிப்போம். அல்லல்படும் சொந்தங்களுக்கு நாங்கள் அவர்களுக்கு துணையிருப்பதை வெளிக்காட்டுவோம்.

நாங்கள் இந்திய உற்பத்திப் பொருட்களையும் சேவைகளையும் கொள்வனவு செய்வதனால் ஏற்படும் பின் விளைவை சற்று அகலக் கண் வைத்து பார்க்க வேண்டும். எமது பணமும் பொருளும் இறுதியில் எம்மீதே குண்டுகளை வீசப் பயன்படுகின்றது. அத்தியாவசியத் தேவைகளன்றின் இப்பாதகரின் வியாபார நிலையங்களை புறக்கணிப்போம். அருகில் எம்மவரின் கடையிருக்க பாதகரின் கடை வாசலை ஏன் மிதிக்கவேண்டும்.

எமது தேசியத்தின் மீது எமக்குள்ள பற்றையும் எமது தேசியத் தலைவர் மீதுள்ள நம்பிக்கைiயும் எமது போராளி சகோதரர்களுக்கான ஆதரவையும் உரத்துக் கூறுவோம். செயலிலே.

வாழ்க தமிழ். மலர்க தமிழீழம்.

மாவீரர் வாழ்க

சாத்திரி அண்ணை,

கொழும்பில் தானே வெளியிலையே வெளிக்கிட ஏலாதாமே? விலைவாசி எல்லாம் வானத்தை பிச்சுக்கொண்டு போகிது. உழைக்கிறகாசு 10 நாளைக்கு தான் சமாளிக்க காணுமாம். ஒரு பால் தேத்தண்ணியும், ஒரு வடையும் சாப்பிட 40 ரூவா காசு வேணுமாம். ஆமிக்காரன் வாகனங்களையும், ஆக்களையும் ஒவ்வொருத்தரா செக் பண்ணுறாங்களாம். வழமையாக கண்டியில் இருந்து கொழும்பு போய்வரும் ஒருவர் இப்போது பஸ்ஸில் கொழும்பு போவதற்கு ஐந்து மணித்தியாலங்கள் மேலதிகமாக எடுப்பதாக போனில் கூறி இருந்தார். சனங்கள் பயத்தில வெளியில வெளிக்கிடாமல் வீட்டுக்க இருக்கிதுகளாம். இந்தக் கேவலத்தில யாராவது கொழும்பில தீபாவளி கொண்டாடுவாங்களா?

ஆக, சங்கரி மாமா, டக்லஸ் மாமா, இன்னும் மிச்சம் கொழும்பில் உள்ள தமிழ் கோடீஸ்வரர் குடும்பங்கள்.. இவேள் மட்டும் தான் கொழும்பில தீபாவளி கொண்டாடுவீனம். ஆனா, நீங்கள் கொடுத்த இந்த தகவலை கேட்டு இவர்கள் கொண்டாட்டத்தை நிறுத்தப்போவதில்லை.

நடுத்தர வர்க்கத்தினர் ஏற்கனவே தீபாவளியை கொண்டாடாட முடியாத நிலையில் உள்ளார்கள். ஸோ.. நான் என்ன சொல்ல வருகின்றேன் என்றால்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொழும்பில் இருக்கும் தமிழர்கள் கோண்டாட்டங்களை கொண்டாடாமல் விட்டாலே பக்கத்து வீட்டானுக்கு சந்தேகம் வந்துவிடும்.தேவையில்லாமல் கொட்டியா என கதையும் கட்டி விடுவார்கள் :wub:

Edited by குமாரசாமி

நாங்கள் இந்திய உற்பத்திப் பொருட்களையும் சேவைகளையும் கொள்வனவு செய்வதனால் ஏற்படும் பின் விளைவை சற்று அகலக் கண் வைத்து பார்க்க வேண்டும். எமது பணமும் பொருளும் இறுதியில் எம்மீதே குண்டுகளை வீசப்; பயன்படுகின்றது. அ;த்திpயாவசியத் தேவைகளன்றின் இப்பாதகரின் வியாபார நிலையங்களை புறக்கணிப்போம். அருகில் எம்மவரி;ன் கடையிருக்க பாதகரின் கடை வாசலை ஏன் மிதிக்கவேண்டும்.

இதில் "அருகில் எம்மவர் கடை இருக்க இந்த பாதகரின் கடை வாசலை ஏன் மிதிக்க வேண்டும்" என்று நீங்கள் குறிப்பிடுவது இந்திய வம்சாவளி தமிழரையா?

சிங்களவன் அடிக்கும் போது இந்திய தமிழன் இலங்கைத் தமிழன் என்று பார்த்தா அடிக்கிறான்? 83 கலவரங்களின் போது எம்மவரை விட கொழும்பில் பல்வேறு வியாபாரங்களில் முன்னணியில் இருக்கும் இந்திய வம்சாவளி தமிழர்களின் சொத்து இழப்பு தான் அதிகம் என்று அறிவீர்களா? சிங்களவர் மத்தியில் வாழுவதை தவிர வேறு வழியில்லாத அந்த மக்கள், ஈழப்போராட்டத்தின் காரணமாக அனுபவித்து வரும் சொல்லொணா இனப்பாகுபாடுகளையும், சிக்கல்களையும் நாமும் நாமும் கொஞ்சம் எண்ணிப்பார்க்க வேண்டும். ஈழ சுதந்திரத்தின் பின்னரும் அம்மக்கள் தொடர்ந்தும் சிங்களவருடனே வாழ வேண்டிய பொருளாதார, சமூக காரணங்கள் இருப்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்

இன்றைய அவசிய தேவை தமிழர்கள் அனவரும் தமிழர் என்ற ஒரு அடையாளத்தின் கீழ் ஒன்றுபடுவது தான். தமிழர்களை இந்தியத் தமிழன், இலங்கை தமிழன், வடக்குத் தமிழன், கிழக்கு தமிழன், யாழ்ப்பாணத்தான், மட்டக்களப்பான், தீவான், வெள்ளாளன், ஐயன், நாவிதன், என்று கூறு போடுவதை நிறுத்திக் கொள்வோம்.

புதியதோர் உலகு செய்வோம். அங்கே தமிழர் யாவரும் சமம் என்போம். வேறு மொழி பேசுவோருக்கும் சமவுரிமை தருவோம்

Edited by vettri-vel

கொழும்பில் நேற்று இரவு இந்த பிரசுரம் பலரின் கைகலில் காணப்பட்டது. இந்த பிரசுரம் தெகிவல, வெள்ளவத்த, பம்பலபிட்டி, பாமன்கட, கொல்லுப்பிட்டி போன்ற பகுதிகளில் வினையோகிக்கப்பட்டது.

பாரிய இன்னல்களின் மத்தியில் இதனை தாம் செய்ததாகவும் இதே போல் தாம் தமிழ் செல்வன் அண்ணாவின் அஞ்சலி பிரசுரம் ஒட்டப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

Edited by சோழநேயன்

இந்தியப் பொருட்களையும் சேவைகளையும் புறக்கணியுங்கள் என்பது அர்த்தமற்ற வேண்டுகோள்.

முன்பின் யோசிக்காது உணர்ச்சி பொங்கிவரும் நேரம் இப்படி எழுதுவது ஆரோக்கியமானது அல்ல.

சோழநேயன் பிரித்தானியா இளையோர் அமைப்பிற்கு சேறு பூசினமாதி புதுக்கதையோடு வந்திருக்கிறார்.

பிரித்தானியா இளையோர் அமைப்பு விவகாரம் இப்போ எந்த அளவில் உள்ளதென்பது உங்களுக்கு தெரியாது போல. அந்த நிகழ்வின் ஒளிப்பதிவு முதல் பல.................. ஒரு விடயத்தை தெரியாமல் கதைக்கக்கூடாது.

இந்திய பொருட்களை புறக்கனிப்பதென்பது தேவையற்ற விடயம். இதனை நான் சம்பந்தப்பட்டவர்களிடம் கதைத்த போது கூறினேன். எனக்கு அவர்களை நேற்று இரவு தான் அடையாலம் கானக்கூடியதாக இருந்தது. நான் இங்கு கூறிப்பிட விரும்புவது என்னவென்றால் உங்களுக்கே தெரியும் கொழும்பின் தற்போதைய நிலமை. நான் கடடாவில் இருந்தாலும் தினமும் பலதரப் பட்டவர்களுடனும் நேரடித் தொடர்பில் இருப்பதால் யதார்த்த நிலமை தெரியும். அதில் சிலரின் இப்படியான செயற்பாடுகள் பாராட்டத்தக்கனவே. அவர்களின் தெடர்ச்சியான செயற்பட்டிற்கு சிரியான முறையில் நெறிப்படுத்துவதே இப்போதைய தேவை.

நன்பரே. இலங்கை சிங்கள உற்பத்திகளை புறக்கனியுங்கள். உங்களுக்கு தெரியுமா இன்று 90% மான மத்திய கிழக்கு நாட்டு மக்கள் coke குடிப்பததில்லை ஏனெனில் அது அமெரிக்க நிறுவனம் என்பதால். அதேபோல் இன்று ஐரோப்பாவில் பல இலங்கை பொருட்கள் தமிழர்களினால் தடை செய்யப்பட்டுள்ளன. யுதனை எடுத்துப் பாருங்கள். எதுவும் சாத்தியம் என்பது நன்பருக்கு தெரியாது போல.

நன்பரே தீபாவளியை கொண்டாடுங்கள். ஆனால் தமிழ் செல்வன் அண்ணாவை இழந்த துயரத்தில் இருக்கும் எமக்கு இந்த வருடம் கொண்டட்டம் தேவையா? புது உடுப்பு தேவையா? யோசியுக்கள்.....(மூலை இருந்தால்)

சில விடயங்களின் எதிரோலி உடனே தெரியாது. போக போக தன் தெரியும்.

Edited by சோழநேயன்

எது எப்படியோ கொழும்பு வாழ் தமிழ் செல்வன்களும் செல்விகளும் தீபாவளி வெளியீடுகளை காண அனுமதி சீட்டுகள் கிடைக்காமல் வீதிகளில் தவம் கிடப்பதை காணக்கிடைத்தது.

அவர்களின் உலகத்திற்கு இந்த வேண்டுகோள்கள் சிந்தனைகள் எட்டுவது அரிதாக காணப்படுகின்றது.

இதற்கு நாம் சிங்களவனின் விகாரை பொறிமுறையை தான் பயன்படுத்த வேண்டும். அதுதான் கோவில் அமைப்புகள், இந்து இளைஞர் மன்றங்கள் என்பவற்றினூடாக அவர்களை அணுக வேண்டும்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.