Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவின் அவலம்

அமெரிக்காவில் உள்ள மத்திய, கீழ்மத்திய வர்க்கத்தினரில் ஒரு பகுதியினர் சம்பளத்துக்கென்று வேலையிருந்தும் வருமானத்தைக் கொண்டு வாழ்க்கையை ஓட்ட முடியாத நிலையில் இருக்கிறார்கள். பணவீக்கம் அந்தளவுக்கு அதிகரித்துள்ளது. இவர்களைக் காப்பாற்றுவதற்காக உணவுச் சலுகைச் சீட்டை அரசு அறிமுகப்படுத்தியது. வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு இ.பி.டி எனப்படும் மின்னணு பயன் பரிமாற்ற அட்டையைக் கொடுக்கிறார்கள். 40 மில்லியனுக்கு மேல் மக்கள் இதைப் பயன்படுத்துகிறார்கள். மளிகைக் கடை, சூப்பர் மார்க்கெட்டுகளில் இதைக் கொண்டு பொருள் வாங்கலாம். இதில் ஒரு பெரிய சிக்கல் அரசு முடிந்தளவுக்கு மக்களை இந்த திட்டத்தில் இருந்து வெளியேற்றவே முயல்கிறது என்பது. ரெண்டாயிரத்து சொச்சம் டாலர்களே ஒரு குடும்பத்தின் மாத வருமானமாக இருக்க வேண்டும் என வரையறை உண்டென்றாலும் (இதில் பல நுணுக்கமான விதிமுறைகள் இருக்கலாம்) சம்பளத்தில் சிறிதே தொகை ஏறினால் கூட அட்டையில் உள்ள பணத்தைக் குறைத்துவிடுவார்கள். உதாரணத்திற்கு (இந்திய ரூபாய் கணக்குப்படி)உங்கள் சம்பளம் மாதத்திற்கு 15,000. ஒருநாள் உங்கள் கணக்கில் ஆயிரம் கூடுதலாக வந்தால் அரசு உங்களுக்கான மானியத்தை ரத்து பண்ணிவிடும் என வையுங்கள். நீங்கள் எங்கே போவீர்கள்? ஆயிரம் ரூபாயைக் கொண்டு ஒரு மாதத்துக்கான செலவையெல்லாம் நடத்திவிட முடியுமா? முடியாது. இப்போது மக்கள் மிக மலிவான பொருட்களை மட்டும் வாங்கி அதையே மூன்றுவேளைகளும் உண்கிறார்கள். அதுவும் கிடைக்காதபோது வீட்டுக்குள் பசியுடன் காத்திருக்கிறார்கள்.


இதைக் குறித்து கார்டியன் இதழில் ஒரு கட்டுரை படித்தேன். நாட்கணக்காக பாக்கெட்டில் கிடைக்கும் ஒரே துரித உணவைச் சாப்பிடுகிறார்கள். காய்கறிகள், சத்தான உணவுகளை கண்ணிலே பார்க்க இயலாது என ஒருவர் அதில் பேட்டியளித்திருக்கிறார். "ஆரம்பத்தில் ஸ்னேப் அட்டையைப் பயன்படுத்தவே கூச்சமாக இருந்தது, யாராவது பார்த்தால் கௌரவம் போய்விடுமே என ஒதுங்கி நடப்பேன், ஆனால் ஊரில் பலரும் அதைப் பயன்படுத்துகிறார்கள் எனத் தெரிந்த பின்னரே நான் இயல்பானேன். நாங்கள் இப்போதெல்லாம் பரஸ்பரம் பார்த்து புன்னகைத்துக் கொள்கிறோம்." என்கிறார் அவர். யோசித்துப் பார்த்தால் நியாய விலைக் கடைகளில் பொருள் வாங்குவதற்கோ அரசு தரும் உரிமைத் தொகையைப் பெறுவதற்கோ நாம் கூச்சப்படுவதில்லை. அது 'நியாயமானது' எனும் உணர்வு நமக்கு உள்ளதைப் போல வலதுசாரி முதலீட்டிய நாடான அமெரிக்காவில் இல்லை. அங்கு 'ஏழ்மையை' ஒரு சமூக அநீதியாகக் காணும் புரிதல் குறைவு. தோல்வியுற்றவர்களே ஏழைகள் என்பதே அவர்களின் விழுமியம்.

ஸ்னேப் நிர்வாகி ஒருவர் சொல்வதாக மற்றொரு கார்டியன் கட்டுரையில் சொல்கிறார்கள்: "ஸ்னேப் தொகையை அரசு நிறுத்திவிட்டது. கடைசி சில்லறைக் காசையும் பயன்படுத்திவிட்டோம். இப்படியே போனால் எங்களுக்கு சாப்பிட பூனை உணவு மட்டும்தான் மீதமிருக்கும்."

டிரம்ப் அடிப்படையில் ஏழைகளுக்கு உரிமைத்தொகை வழங்குவதற்கு எதிரானவர். ஆனால் இந்த ஏழைகளே இவர்களுக்கு அதிகமாக வாக்களிக்கிறார்கள் என ஒரு புள்ளிவிபரம் சொல்கிறது (உங்கள் பணத்தையெல்லாம் வந்தேறிகளான இஸ்லாமியர், ஆசியர்கள், லத்தீன் அமெரிக்கர்கள் எடுத்துக்கொள்கிறார்கள், கம்யூனிஸ ஆதரவாளர்களான முற்போக்காளர்கள் இதை ஆதரிக்கிறார்கள் எனச் சொல்லி ஏமாற்றி வாக்குகளை அவர் அள்ளிவிடுகிறார்.) அவர் ஏற்கனவே பேசியபடி ஸ்னேப்புக்கான நிதியை நிறுத்திவிட்டார். நீதிமன்றம் தலையிட்டு வலியுறுத்தியபடி அவர் சிறிது தொகையை மட்டும் கொடுப்பதாகச் சொல்கிறார். இதனிடையே அங்கே பட்டினி கிடக்கும் மாத வருமானத்தினரின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. நம்மூரில் விடுமுறை நாட்களிலும் குழந்தைகளுக்கு சத்துணவு கொடுக்கிறார்கள். அங்கு அதுவும் இல்லை. பட்டினிதான். இப்போதும்கூட இதனால் மக்களுக்கு டிரம்ப் மீது கோபம் வந்து கலகம் செய்ய மாட்டார்கள். எல்லாவற்றுக்கும் காரணம் வந்தேறிகள்தாம் என்று சொல்லி அவர்கள் வாக்குகளை அறுவடை செய்துவிடுவார்.

இந்தியா அமெரிக்காவை விட பல மடங்கு மேலானது எனும் உணர்வு எனக்கு ஒருநாள் வரும் என நான் கற்பனையே பண்ணியிருக்கவில்லை. இங்கு உங்களுக்கு மாத வருமான வேலை இருந்தாலே போதும், மூன்று வேளையும் உணவுக்குப் பஞ்சமில்லை. வேலையும் இருக்க வீடும் இல்லாத தெருவில் வாழும் பெண்களுக்கு கூட கர்நாடகாவில் அரசு விடுதியை நடத்துகிறது. மாநில அரசுகள் பெண்களுக்கு மாதமாதம் உரிமைத்தொகை கொடுப்பது தேர்தல் யுக்தியாகிவிட்டது. சலுகையையோ மானியத்தொகையையோ உரிமைத்தொகைகளையோ அரசோ கட்சிகளோ அவமதிப்பதில்லை. ஏழ்மை குறித்த குற்றவுணர்வு மேல்மத்திய, மேல்வர்க்கத்திடம் தாராளமாக உள்ளது. என்னதான் குப்பைக்கூளமாக, மதவெறியர்களாக, ஏற்றத்தாழ்வுகள் மிகுந்த நாம் இருந்தாலும் அடிப்படையான பாதுகாப்பு வலையொன்றை வைத்திருக்கிறோம்.

நான் கடந்த மாதம் வயநாடு சென்றிருந்தபோது அங்கு ஒரு வீட்டின் முன்பு பத்து பெண்கள் சீருடை அணிந்து சீரமைப்புப் பணியைச் செய்து கொண்டிருப்பதைப் பார்த்தேன். விசாரித்தபோது அவர்கள் நூறு நாள் வேலைத்திட்டம் போன்ற ஒன்றைச் சேர்ந்தவர்கள் என்றும், பொதுமக்களுக்கு வேலை செய்ய ஆள் தேவைப்பட்டால் அரசிடம் விண்ணப்பித்து இவர்களின் சேவையைப் பெற்றுக்கொள்ளலாம் என்றார்கள். அரசின் முகமையில் இவர்கள் வருவதால் அடிப்படைப் பாதுகாப்பு உண்டு. உடலுழைப்பு வேலைகளுக்கு அங்கு ஆள் கிடைக்காத நிலையில் இதனால் பொதுமக்களும் பயன்பெறுகிறார்கள். தனியாரிடம் உழைப்பாளிகளைப் பணயம் வைக்காமல் அரசு தொழில் நிர்வாகத்தில் நேரடிப் பங்கு வகிப்பது எவ்வளவு முக்கியம் என்பதற்கு நல்ல உதாரணம் இது.

வாக்குகளைத் திருடித்திருடி பாஜக இன்னும் பத்திருபது ஆண்டுகள் ஆண்டாலும் வேலை செய்து சம்பாதித்துக்கொண்டே ஏழையாகவும் பரதேசியாகவும் இருக்கும் நிலை இந்தியர்களுக்கு வரப்போவதில்லை. இந்த பாதுகாப்பு நடைமுறைகளும் கட்டமைப்பும் இல்லாததாலே அமெரிக்காவில் பணவீக்கமும் அதிகரித்ததும் எளிய மக்களும் மத்திய் வர்க்கமும் தெருவுக்கு வருகிறார்கள்.

முதலீட்டிய-சார்பு சமூகங்கள் பெங்களூர் நகராட்சி போடும் சாலையைப் போன்றவை. எப்போது அது உடைந்து வாகனம் உள்ளே போகும் எனத் தெரியாது.

Posted Yesterday by ஆர். அபிலாஷ்

https://thiruttusavi.blogspot.com/2025/11/blog-post_18.html

@Justin , @ஈழப்பிரியன் அண்ணாக்கள் மேலுள்ள தகவல்கள் உண்மையா?!

  • கருத்துக்கள உறவுகள்

In the U.S., about 41.7 million people received benefits from the Supplemental Nutrition Assistance Program (SNAP) on average per month during fiscal year 2024 — about 12.3% of the population.

47 minutes ago, ஏராளன் said:

அண்ணாக்கள் மேலுள்ள தகவல்கள் உண்மையா?!

இலங்கையிலும் ஏதோ ஒரு பெயரில் 10 ஆயிரம் கொடுக்கிறார்கள் என எண்ணுகிறேன்.

மத்திலுள்ள மாநிலங்களில் உள்ள ஏழைகள் சிகப்பு கட்சிக்கு வாக்கைப் போடுகிறார்கள்.

இந்த தடவை கொஞ்சம் மாட்டிக் கொண்டார்கள்.

இவர்களுக்கான மருத்துவ காப்புறுதியையும் மாற்றுகிறார்.

இதன் தாக்கம் இன்னும் கொஞ்ச காலத்தில் தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

@Justin , @ஈழப்பிரியன் அண்ணாக்கள் மேலுள்ள தகவல்கள் உண்மையா?!

எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டிய உண்மை, அமெரிக்காவில் (அல்லது எந்த மேற்கு நாட்டிலும்) வருமானம் இல்லா விட்டால் வாழ முடியாது. வருமானம் வேலையின் மூலம் பெற்றுக் கொள்ள முடியாதோர், அல்லது வரும் வருமானம் போதாமல் இருப்போர் ஆகிய தரப்பினருக்காக 60 களில் உருவாக்கப் பட்ட SNAP உணவுத் திட்டத்தைப் பற்றி அபிலாஷ் நுனிப்புல் மேய்ந்திருக்கிறார். இது பணவீக்கம் அதிகரித்தமையால் மக்கள் பட்டினி கிடக்க ஆரம்பித்த பின்னர் உருவான திட்டமல்ல. வறுமைக் கோட்டுக்கு கீழே இருப்போருக்கான உதவித் திட்டம் அவ்வளவு தான். வறுமை இல்லையானால் பெற்றுக் கொள்ள முடியாது.

மற்றபடி இது மட்டுமே அமெரிக்காவில் உணவு உதவி புரியும் திட்டம் என்றும் சொல்ல முடியாது. பல்வேறு தொண்டு அமைப்புகளும், உள்ளூர் அரசு அமைப்புகளும், பள்ளிக் கூடங்களும் கூட குழந்தைகள் பட்டினி கிடக்காமல் இருக்க திட்டங்கள் வைத்திருக்கிறார்கள். தெருவில் நிற்கும் இந்தியர்களை மாடமாளிகையில் வாழும் இந்தியர்கள் பார்த்துக் கொள்வதை விட சிறப்பாக இங்கே வாழும் மக்கள் இத்தகைய திட்டங்களுக்கு நன்கொடை வழங்கி ஏனையோரின் பசி தீர்க்க உதவுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டிய உண்மை, அமெரிக்காவில் (அல்லது எந்த மேற்கு நாட்டிலும்) வருமானம் இல்லா விட்டால் வாழ முடியாது. வருமானம் வேலையின் மூலம் பெற்றுக் கொள்ள முடியாதோர், அல்லது வரும் வருமானம் போதாமல் இருப்போர் ஆகிய தரப்பினருக்காக 60 களில் உருவாக்கப் பட்ட SNAP உணவுத் திட்டத்தைப் பற்றி அபிலாஷ் நுனிப்புல் மேய்ந்திருக்கிறார். இது பணவீக்கம் அதிகரித்தமையால் மக்கள் பட்டினி கிடக்க ஆரம்பித்த பின்னர் உருவான திட்டமல்ல. வறுமைக் கோட்டுக்கு கீழே இருப்போருக்கான உதவித் திட்டம் அவ்வளவு தான். வறுமை இல்லையானால் பெற்றுக் கொள்ள முடியாது.

மற்றபடி இது மட்டுமே அமெரிக்காவில் உணவு உதவி புரியும் திட்டம் என்றும் சொல்ல முடியாது. பல்வேறு தொண்டு அமைப்புகளும், உள்ளூர் அரசு அமைப்புகளும், பள்ளிக் கூடங்களும் கூட குழந்தைகள் பட்டினி கிடக்காமல் இருக்க திட்டங்கள் வைத்திருக்கிறார்கள். தெருவில் நிற்கும் இந்தியர்களை மாடமாளிகையில் வாழும் இந்தியர்கள் பார்த்துக் கொள்வதை விட சிறப்பாக இங்கே வாழும் மக்கள் இத்தகைய திட்டங்களுக்கு நன்கொடை வழங்கி ஏனையோரின் பசி தீர்க்க உதவுகிறார்கள்.

ஆனால் இதே உதவிகளை பெறும் எம்மவர் ஊர் சென்று காட்டும் படம் பற்றி ஏராளன் அறிவது அவசியம்.

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவின் தற்போதய பொருளாதார நெருக்கடியினை Stagflation என கூறுகிறார்கள்,

Investopedia
No image preview

What Is Stagflation, What Causes It, and Why Is It Bad?

Stagflation is the combination of slow economic growth, high unemployment, and a high rate of inflation.

இது வெறும் பணவீக்கம் மட்டுமல்ல வேலை இன்மையும் இணைந்த நிலையாக கூறப்படுகிறது, அமெரிக்க மத்திய வங்கியின் ஆளுனர் (இவருக்கும் ட்ரம்பிற்கும் ஒவ்வாமை உள்ளது) முன்னரே ட்ரம்பின் வரி யுத்தத்தின் விளைவுகள் பற்றி குறிப்பிடும் பொழுது கூறியிருந்தார்.

தொழில்துறை கடந்த கால தரவுகள் கூட அமெரிக்கா ஒரு பொருளாதார சரிவு நோக்கி செல்கிறது என்பதான ஒரு காட்சியினை வலுப்படுத்தியிருந்தது ஆனால் இறுதியாக வந்த PMI முடிவு ஒரு சாதகமான நிலையினை காட்டியுள்ளது (தொழில்துறையின் செலவீடு - இந்த குறியீடு 50 மேல் இருந்தால் பொருளாதாரத்திற்கு சாதகமான நிலை காணப்படும்)

https://tradingeconomics.com/united-states/business-confidence

குறித்த இணையத்தரவில் இறுதியாக வந்த தரவு இல்லை, இறுதியாக 52% வந்துள்ளது.

தற்போது அமெரிக்க அரச பணியக முடக்க நிலை உள்ளதனால் வேலை வாய்ப்பு மாற்றங்கள் பற்றிய அரசின் தரவுகள் வெளியாகவில்லை ஆனால் இந்த மாதத்திற்குரிய ADP NFP தரவுகள் கூட ஒரு சாதகமான விளைவு கொண்டதாக வந்துள்ளது.

https://tradingeconomics.com/united-states/adp-employment-change

இது ஒரு தனியார் ஆய்வறிக்கைதான் ஆனால் சந்தையில் முதலீட்டாளர்கள் இதனடிப்படையில் முஇவுகளை எடுக்கிறார்கள், இது வரை காலமும் இறங்கி செல்கின்ற வேலை வாய்ப்பில் தற்போது ஒரு சிறிய முன்னேற்றம் காணப்படுகிறது.

அமெரிக்க பொருளாதாரம் பெரிதும் எதிர்பார்க்கும் மோசமான இன்னொரு விளைவாக செயற்கை நுண்ணறிவின் மித மிஞ்சிய நீர்குமிழ் நிலை, இந்த நிலையினை டொட் கொம் நீர்குமிழுடன் ஒப்புவமையாக கூறுகிறார்கள் முதலீட்டாளர்கள், இந்த செயற்கை நுண்ணறிவு கூட சில வெள்ளை கொலர் வேலையின்மையினை தூண்டுவதாக கூறுகிறார்கள்.

அமெரிக்க நாணயம் 15% உண்மை விலையினை விட அதிகமாக உள்ளதாகவும் கூறுகிறார்கள், இதனடிப்படைகளிலேயே ஒரு பொருளாதார சுறாவளி வருவதற்கான சாத்தியம் உள்ளதாக கூறுகிறார்கள்.

ஆனால் உல்கெங்கும் இதே நிலை இருக்கின்றது அவுஸ்ரேலியாவிலும் வேலையின்மை அதிகரித்துள்ளது ஆனால் அமெரிக்கா போன்று stagflation இல்லை, அமெரிக்காவின் பிரச்சினைக்கு பணவீக்கம் இருந்தாலும் வட்டி விகிதத்தினை குறைத்தாக வேண்டிய கட்டாயத்தில் அரசு உள்ளது, ஆனால் அவ்வாறான கையறு நிலை இன்னமும் அவுஸ்ரேலிய அரசிற்கு ஏற்படவில்லை.

இதனிடையே இரஸ்சிய எரிபொருள் நிலைகளின் மீது உக்கிரேனின் தாக்குதலில் உலகின் 2% எண்ணெய் உற்பத்தி தடை செய்யப்பட்டது குறித்து உலகம் சந்தோசத்தில் உள்ளது.

கெடுவான் கேடு நினைப்பான் என்பது போல உலக இயக்கம் உள்ளதோ என தோன்றுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி இந்தியா நல்ல நாடு என்றால் அங்கு இருக்கலாமே. ஏன் பிளைட் பிடித்து இவ்வளவு இந்தியர்கள் அமெரிக்க வரவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

அது மட்டுமல்ல இந்தியர்கள் பிளைட் பிடித்து வேறு நாடுகளுக்கு சென்று அங்கிருந்து கஷ்டபட்டு அமெரிக்கா செல்கின்றனர். விசாவுக்கு கட்டுபாடுகள் ட்ரம் விதித்த போது இந்தியர்கள் கதறி அழுதார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, விசுகு said:

ஆனால் இதே உதவிகளை பெறும் எம்மவர் ஊர் சென்று காட்டும் படம் பற்றி ஏராளன் அறிவது அவசியம்.

ஏராளனுக்கு இவை தெரிந்தே இருக்குமென நம்புகிறேன்.

ஊரில் இருப்போருக்கு பெரும்பாலானோருக்கு தற்போது நிலைமை விளங்கியிருக்கலாம் என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், போன ஆண்டு இறுதியில் ஒரு நிகழ்வில் ஒருவரைச் சந்தித்த போது அப்படியல்ல என்று புரிந்தது. இலங்கையில் வங்கியில் ஒரு நல்ல வேலையில் இருந்த ஒருவர், அமெரிக்காவிற்கு வந்து சேர்ந்திருந்தார். எப்படி வந்தார் என்று நான் கேட்கவில்லை, ஆனால் குடும்பத்தோடு வந்திருந்தார். வேலை கிடைக்கவில்லை, மருத்துவக் காப்புறுதி இல்லை. நேரடியாக வங்கித் துறையில் வேலை கிடைத்து விடும் என்ற தவறான புரிதலில் வந்தாரோ தெரியவில்லை. மிகவும் கஷ்டப் பட்டார், என்ன செய்தார் என்று தெரியவில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Justin said:

ஏராளனுக்கு இவை தெரிந்தே இருக்குமென நம்புகிறேன்.

ஊரில் இருப்போருக்கு பெரும்பாலானோருக்கு தற்போது நிலைமை விளங்கியிருக்கலாம் என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், போன ஆண்டு இறுதியில் ஒரு நிகழ்வில் ஒருவரைச் சந்தித்த போது அப்படியல்ல என்று புரிந்தது. இலங்கையில் வங்கியில் ஒரு நல்ல வேலையில் இருந்த ஒருவர், அமெரிக்காவிற்கு வந்து சேர்ந்திருந்தார். எப்படி வந்தார் என்று நான் கேட்கவில்லை, ஆனால் குடும்பத்தோடு வந்திருந்தார். வேலை கிடைக்கவில்லை, மருத்துவக் காப்புறுதி இல்லை. நேரடியாக வங்கித் துறையில் வேலை கிடைத்து விடும் என்ற தவறான புரிதலில் வந்தாரோ தெரியவில்லை. மிகவும் கஷ்டப் பட்டார், என்ன செய்தார் என்று தெரியவில்லை.

எப்படியாவது வெளிநாடு சென்றால் போதும் என்ற மனநிலையில் உள்ளவர்களுக்கு எவ்வாறு புரிய வைப்பது அண்ணை?!

வங்கியில் முகாமையாளராக இருந்தவர் குடும்பமாக கனடா சென்று இலங்கையில் உள்ள சொத்துகளை விற்று வாழ்வதை கேட்டபோது அதிர்ச்சியாக இருந்தது.

வெளிநாட்டில் இருப்போர் அங்குள்ள நிலைமைகளை எடுத்து சொன்னால் தாங்கள் அங்கு வந்து முன்னேறிவிடுவோம் என பொறாமைப்படுவதாக நினைக்கிறார்கள்!

இங்க இருந்தும் கேள்விப்படும் செய்திகளை விளங்கப்படுத்தினாலும் யாரும் கேட்பதாக இல்லை! இருந்தாலும் விக்கிரமாதித்தன் போல சொல்லுவோம்.

சமீபத்தில் கோடி ரூபா கொடுத்து பிரான்ஸ் சென்றவர் தாக்குப்பிடிக்க முடியாது ஓராண்டுக்குள் ஊருக்கே திரும்ப வந்த கதையும் இருக்கே!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

ஏராளனுக்கு இவை தெரிந்தே இருக்குமென நம்புகிறேன்.

ஊரில் இருப்போருக்கு பெரும்பாலானோருக்கு தற்போது நிலைமை விளங்கியிருக்கலாம் என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், போன ஆண்டு இறுதியில் ஒரு நிகழ்வில் ஒருவரைச் சந்தித்த போது அப்படியல்ல என்று புரிந்தது. இலங்கையில் வங்கியில் ஒரு நல்ல வேலையில் இருந்த ஒருவர், அமெரிக்காவிற்கு வந்து சேர்ந்திருந்தார். எப்படி வந்தார் என்று நான் கேட்கவில்லை, ஆனால் குடும்பத்தோடு வந்திருந்தார். வேலை கிடைக்கவில்லை, மருத்துவக் காப்புறுதி இல்லை. நேரடியாக வங்கித் துறையில் வேலை கிடைத்து விடும் என்ற தவறான புரிதலில் வந்தாரோ தெரியவில்லை. மிகவும் கஷ்டப் பட்டார், என்ன செய்தார் என்று தெரியவில்லை.

அண்மையில் நல்ல அரச வேலையில் இருக்கும் எனது உறவினர் ஒருவர் இங்கே தன்னை கூப்பிட்டு விடுமாறு தனது மனைவியின் தமையனை கேட்டிருந்தார். அவர் எனது குடும்ப உறுப்பினர் என்பதால் என்னிடமும் ஒரு பகுதி உதவியை நாடினார்.

கூப்பிட்டு விடலாம் ஆனால் அவருக்கு இங்கே வந்தால் இவை தான் வேலை என்பதை மட்டும் சொல்லி விட்டு கூப்பிட ஏற்பாடு செய் என்றேன். வேலையை சொன்னதும் வரவில்லை என்று விட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்
On 19/11/2025 at 08:39, ஏராளன் said:

இந்தக் கட்டுரை எழுதியவரின் பெயர், விபரங்கள் இல்லாமல் சமூக ஊடகங்களில் வரும் கட்டுரைகள் போன்ற ஒன்றாக இருந்தால், இதை மிக இலகுவாக புறக்கணித்து விட்டு போய்விடலாம். ஆனால் பொறுப்பான ஒரு இடத்தில் இருக்கும், பொதுவெளியில் இயங்கும் அபிலாஷ் போன்ற ஒருவர் இவ்வளவு மேலோட்டமாக, பிழையான அனுமானங்கள் மற்றும் தகவல்களுடன், அவசரகதியில் எழுதியிருப்பது ஆரோக்கியமான ஒன்றல்ல என்றே தோன்றுகின்றது.

என்னுடைய சொந்த அனுபவங்கள் மற்றும் நான் அறிந்தவற்றையும் அடிப்படையாகக் கொண்டு, தேவையான தரவுகளையும் தேடி எடுத்து, அமெரிக்காவின் நிலையையும், இந்தியாவின் நிலையையும் எந்தப் பக்கமும் சாராமல் எழுத ஆரம்பித்தால் அது ஒரு சின்ன புத்தகமாகவே முடியும்.

நான் 95ம் ஆண்டு இங்கு படிக்க வந்தேன். மூன்று மாதங்களின் பின்னர் மனைவியும் வந்தார். அடுத்த அடுத்த மாதங்களில் எங்களின் முதலாவது குழந்தை உண்டாகினார். படிக்கும் போது அமெரிக்க பல்கலைக்கழகமே முழுச் செலவையும் ஏற்றுக் கொண்டிருந்தது. அத்துடன் மாதம் மாதம் ஒரு தொகையை செலவுக்கு கொடுத்தார்கள். அந்தத் தொகை வறுமைக் கோட்டிற்கு மிகவும் கீழேயே இருந்தது. இந்த விடயம் அப்போது எனக்குத் தெரியாது ஏனென்றால் அவர்கள் கொடுத்த தொகையில் அரைவாசிக்கு மேல் மீதமாகிக் கொண்டிருந்தது.

மகப்பேற்று மருத்துவரிடம் போன பொழுது, அவர் எங்களிடம் அமெரிக்க அரசின் வருமானம் குறைந்தவர்களுக்கான சமூகநலத் திட்டங்கள் பற்றி சொல்லிவிட்டு, எங்களை அதில் சேரச் சொன்னார். நாங்களும் சேர்ந்தோம். மாதம் மாதம் உணவு முத்திரைகள் கொடுத்தார்கள். இது நடந்தது 95, 96 மற்றும் 97ம் ஆண்டுகளில். பணவீக்கம், வேலையின்மை போன்ற காரணங்களால் இது இன்று அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு சமூகநலத் திட்டம் அல்ல. நாங்கள் அன்று அமெரிக்க அரசிடம் இருந்து பெற்றுக் கொண்டிருந்தது எங்கள் மூவருக்கும் தேவைக்கும் அதிகமாகவே இருந்தது.

இங்கு மத்திய அரசின் செலவுகள் பிரதிநிதிகளால் ஏற்றுக்கொள்ளப்படவேண்டும். மத்திய அரசின் செலவீனங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி அல்லது கடன் முடிவடையும் தறுவாயில், புதிய நிதி அல்லது கடன் எல்லை பெரும்பான்மையான பிரநிதிகளால் அங்கீகரிக்கப்படவேண்டும். சில சமயங்களில் பிரேரிக்கப்படும் புதிய நிதி அல்லது கடன் எல்லைக்கு பெரும்பான்மை ஆதரவு கிடைப்பதில்லை. அந்த நாட்களில் மத்திய அரசின் திட்டங்களுக்கு புதிய நிதி வழங்குவது தடைப்படும். அரசின் சமூகநலத் திட்டங்களுக்கும் இங்கிருந்தே நிதி போகின்றது. ஆனாலும் நிதி வரப் போவதில்லையே என்று இங்குள்ள நிர்வாகத் துறைகள் இந்த சமூகநலத் திட்டங்களை என்றும் கைவிடுவதில்லை. 'இனிமேல் பூனைக்கறி தான் சாப்பிட வேண்டும்............' என்று சொல்வது நிலைமையின் அவசரத்தை அழுத்திச் சொல்லும் ஒரு முறையே அல்லாமல் அது நிஜம் அல்ல. தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும் விவசாயிகள் எலிக்கறி சாப்பிட்டது உண்மையிலேயே நடந்தது. இந்தியாவில் தொடரும் விவசாயிகளின் தற்கொலைகளும் உண்மையே.

ஏழ்மையை ஒரு குற்றமாக இங்கு அமெரிக்காவில் எவரும் பார்ப்பதில்லை. ஒருவர் ஏழையா, இல்லையா என்று கூட இங்கு தெரிவதில்லை. அரசிடம் உதவி பெறுவதற்கு பலர் தயங்குகின்றார்கள், வெட்கப்படுகின்றார்கள் என்பது உண்மை தான். அது அவர்களின் தன்முனைப்பை, சுயமரியாதையை இழக்கும் ஒரு செயல் என்று அவர்கள் நினைப்பதால் மட்டுமே. அந்த நினைப்பே ஏழ்மையும், இல்லாமையும் தங்களின் தலைவிதி என்று அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் அவற்றை கடந்து முன்னேறும் திறனை அவர்களுக்கு கொடுக்கின்றது. இந்தியாவில் பிறப்பு என்றும், தலைவிதி என்றும் கிடைத்த வாழ்வை ஏற்றுக்கொண்டு அப்படியே தலைமுறை தலைமுறைகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் பல கோடிக்கணக்கான மக்களை அபிலாஷ் போய்ப் பார்க்கவேண்டும்.

இன்றிருப்பதை விட 2008ம் ஆண்டில் இங்கு அமெரிக்காவில் நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. அமெரிக்க வாகனங்கள் தயாரிக்கும் நகரான Detroit மிகவும் நலிவடைந்தது. வாகனங்கள் தயாரிக்கும் மூன்று பெரிய அமெரிக்க நிறுவனங்களில் இருந்தும் ஏராளமானோர் பணி நீக்கம் செய்யப்பட்டார்கள். ஒரு செய்தித் துணுக்கில் ஒரு குடும்பம் வேலை இழந்து, அரசின் சமூகநலத் திட்டத்தில் போய் உதவி பெறும் நிலையை எண்ணி கண்கலங்கி நின்றார்கள். இப்படி அவர்கள் கேட்டது வேலையை மட்டுமே, அரசின் உதவியை அல்ல. பின்னர் அமெரிக்க அரசு ஒவ்வொரு நிறுவனத்துக்கும் பல பில்லியன் டாலர்களை கடனாகக் கொடுத்தது. புதிய வாகனங்கள் தயாரிக்கப்பட்டன. அமெரிக்கர்கள் அவற்றை வாங்கினார்கள். இது ஒரு அலையாக இங்கு நடந்தது. இந்தியர்களோ அல்லது வேறு நாட்டவர்களோ அன்று அமெரிக்க வாகனங்களை வாங்குவது இல்லை என்றே சொல்லலாம். அந்த நிறுவனங்கள் கடன்களை திருப்பிச் செலுத்தினார்கள். அமெரிக்காவும் அதன் மக்களும் மீண்டும் மீண்டும் மீண்டு வருவதற்கான பிரதான காரணம் இதுவே.

100 நாட்கள் வேலைத் திட்டம் பற்றி அறிய வயநாடு போகத் தேவையில்லை. தமிழ்நாட்டிலேயே அது பரவலாக இருக்கின்றது. அடிக்கடி ஊர்மக்கள் நிகழ்த்தும் போராட்டங்கள் செய்திகளில் வருகின்றது. திட்டத்தின் பிரகாரம் வேலை கொடுப்பதில்லை என்றும், கூலி கொடுப்பதில்லை என்றும் போராடுகின்றார்கள். இந்த திட்டத்தால் இதுவரை உற்பத்தி, சேவைகள் அல்லது எந்த மக்களினதும் வாழ்க்கைத்தரமாவது அதிகரித்திருக்கின்றதா. இதுவும் இன்னொரு இலவச உதவி வழங்கும் தேர்தல்கால வாக்குறுதியாகவே இருக்கின்றது.

வேலையில் இருந்து கொண்டே ஏழையாகவும், பரதேசியாகவும் இருக்கும் நிலை அமெரிக்காவில் இருக்கின்றது என்கின்றார். வசந்தபாலனின் 'அங்காடித் தெரு' மற்றும் இவை போன்ற படங்கள் சினிமா அல்ல, அவை நிஜம் என்ற உண்மையை காணத் தவறிவிட்டார்.

அமெரிக்கா பாலும், தேனும் ஓடும் ஒரு தேசம் அல்ல. உலகில் அப்படி ஒரு தேசமுமே கிடையாது. ஆனால் இந்தியா போன்ற சமூகநீதி மறுக்கப்பட்ட, தேர்தல் காலங்களில் அன்றி வேறு எப்போதும் எவ்வகையிலும் மனிதர்களாகவே கருதப்படாத ஏழை எளிய மக்கள் படும் அவலங்களுக்கு பல மடங்குகள் குறைந்த அவலமே அமெரிக்காவிலும், உலகின் பல நாடுகளிலும் இருக்கின்றது.

இந்த மாதம் ஜெயமோகன் அமெரிக்கா வந்தார். அவர் இங்கு வருவது இது ஐந்தாவது தடவை என்று நினைக்கின்றேன். பல வகைகளில் உலகின் சிறந்த தேசம் அமெரிக்காவே என்று ஜெயமோகன் ஒவ்வொரு தடவையும் எழுதுகின்றார். அபிலாஷ் தான் ஜெயமோகனுக்கு எழுத்திலும், சிந்தனையிலும் எதிர்முனை என்பார். இரண்டு முனைகளுக்கு நடுவில் அமெரிக்கா மாட்டுப்பட்டுவிட்டது போல....................🤣.

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, விசுகு said:

கூப்பிட்டு விடலாம் ஆனால் அவருக்கு இங்கே வந்தால் இவை தான் வேலை என்பதை மட்டும் சொல்லி விட்டு கூப்பிட ஏற்பாடு செய் என்றேன். வேலையை சொன்னதும் வரவில்லை என்று விட்டார்.

வங்கி முகாமையாளர் உயர் அதிகாரிகள் ஒரு சிலரை இலங்கையில் தெரிந்து இருக்கின்றேன் அவர்களுக்கு உடம்பு வளையாது 😂 ஏதாவது போய் எடுத்து வர கொடுக்க Peon இருக்கிறார்.

8 hours ago, ஏராளன் said:

சமீபத்தில் கோடி ரூபா கொடுத்து பிரான்ஸ் சென்றவர் தாக்குப்பிடிக்க முடியாது ஓராண்டுக்குள் ஊருக்கே திரும்ப வந்த கதையும் இருக்கே!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, விளங்க நினைப்பவன் said:

வங்கி முகாமையாளர் உயர் அதிகாரிகள் ஒரு சிலரை இலங்கையில் தெரிந்து இருக்கின்றேன் அவர்களுக்கு உடம்பு வளையாது 😂 ஏதாவது போய் எடுத்து வர கொடுக்க Peon இருக்கிறார்.

எந்தப் பெரிய பதவியில் இருந்தாலும் தனது ஆரோக்கியத்திற்கு💪 உடற்பயிற்சி அல்லது வீட்டு, தோட்ட வேலைகள் செய்தே ஆகவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, ரசோதரன் said:

இந்த விடயம் அப்போது எனக்குத் தெரியாது ஏனென்றால் அவர்கள் கொடுத்த தொகையில் அரைவாசிக்கு மேல் மீதமாகிக் கொண்டிருந்தது.

2000 களில் மாணவனாக வந்த, ஒற்றையாளாக இருந்த எனக்கும் இதே அனுபவம் தான். ரியூசன் இலவசம் (50% பணி செய்த காரணத்தால்), மருத்துவ காப்புறுதி 90% இலவசம். வீட்டு வாடகையும், உணவும் தான் செலவு. அமெரிக்காவின் வறுமைக் கோட்டிற்குக் கீழானது என்று எனக்கும் அன்று தெரியாமல் வந்த சம்பளத்தில் ஊருக்கு அப்பாவின் செலவுக்கும் அனுப்பி, எஞ்சிய சேமிப்பில் முதல் வாகனமாக மூவாயிரம் டொலர்களுக்கு ஒரு பழைய காரை வாங்கி அதில் பழகி சாரதி அனுமதிப் பத்திரம் எடுக்கவும் முடிந்தது. இத்தனைக்கும் நான் மாநில அரசின் உணவு உதவியைக் கூட பெற்றுக் கொள்ள முயலவில்லை (ஒரு கௌரவ கவரி மான் சின்ட்றோம் தான்😂!).

இப்படி குடியேறிகளாக வந்த என்னையும் உங்களையும் போன்ற பலரை இலவசங்கள், சலுகைகள் கொடுத்து நிமிர்த்தி விட்டிருக்கிறார்கள். அதே உதவிக் கரங்களை இனி வரும் குடியேறிகளுக்கும் ஓரளவு கொடுப்பதற்கு நாம் ஆதரவாக இருக்கிறோம். ஆனால், எம்மிடையேயும் சிலர் விசித்திரமாக இருக்கிறார்கள். உதாரணமாக, "பெரும்பாலான அமெரிக்கர்களின் வரியை உயர்த்தாமலே, படிப்புக் கடன் -student loan பெற்றவர்களுக்கு அரசு ஒரு பகுதிக் கடனைக் கட்டி அவர்களை மீட்கும்" என்று பைடன் அறிவித்த போது, எதிர்ப்புக் காட்டிய என் ஈழத்தமிழ் அமெரிக்க நண்பர்கள் பலர், இதே சலுகையெல்லாம் அனுபவித்து தற்போது செல்வந்தர்களாக இருப்போர் தான்! "என்ன டிசைனோ?" என்று அடிக்கடி நான் யோசிப்பதுண்டு😂!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

படிப்புக் கடன் -student loan பெற்றவர்களுக்கு அரசு ஒரு பகுதிக் கடனைக் கட்டி அவர்களை மீட்கும்" என்று பைடன் அறிவித்த போது, எதிர்ப்புக் காட்டிய என் ஈழத்தமிழ் அமெரிக்க நண்பர்கள் பலர், இதே சலுகையெல்லாம் அனுபவித்து தற்போது செல்வந்தர்களாக இருப்போர் தான்! "என்ன டிசைனோ?" என்று அடிக்கடி நான் யோசிப்பதுண்டு😂!

🤣...................

அதே தான் ஜஸ்டின்.............. எத்தனை டிசைன்கள்................🤣.

நான் 'லுங்கி டான்ஸ்' போன்ற குறுங்கதைகளை இங்கு களத்தில் எழுதியதற்கு காரணமே இங்கிருக்கும் இப்படியான சில 'டிசைன்கள்' தான்.........................😜. இப்படியான அபத்தங்களை நாசூக்காக சொல்லுவதற்கு இப்படி எழுதுவது நல்ல ஒரு வழி................அபிலாஷ் கூட இது போன்ற நிஜத்தில் நடந்து கொண்டிருக்கும் நம்மவர்களின் அபத்தங்களை எழுதலாம்.....................

  • கருத்துக்கள உறவுகள்



‘இது ஒரு கட்டமைப்பு பொருட்கள் மந்தநிலை’: சீன வர்த்தகம் சரிவதால் அமெரிக்க சரக்கு சந்தை சரியத் தொடங்குகிறது.

வியாழன், நவம்பர் 20, 2025 அன்று வெளியிடப்பட்டது.காலை 8:56 ESTபுதுப்பிக்கப்பட்டது வியாழன், நவம்பர் 20, 2025காலை 11:37 EST

சிறுபடம்

லோரி ஆன் லாரோக்கோ@loriannlarocco @லோரியன்லாரோக்கோ

பகிர்கட்டுரையை Facebook வழியாகப் பகிரவும்ட்விட்டர் வழியாக கட்டுரையைப் பகிரவும்LinkedIn வழியாக கட்டுரையைப் பகிரவும்கட்டுரையை மின்னஞ்சல் வழியாகப் பகிரவும்

முக்கிய புள்ளிகள்

  • லாஸ் ஏஞ்சல்ஸுக்குப் பிறகு நாட்டின் இரண்டாவது பரபரப்பான துறைமுகமான லாங் பீச் துறைமுகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மரியோ கோர்டெரோ, ஜனாதிபதி டிரம்பின் வரிகளால் தூண்டப்பட்ட சரக்கு கொள்கலன் அளவு சாதனை ஆண்டாக சீன இறக்குமதியில் விரைவான சரிவுக்கு வழிவகுத்துள்ளது என்று கூறுகிறார்.

  • அமெரிக்காவிற்கான கடல் சரக்கு போக்குவரத்து குறைந்து வருவதையும், விநியோகச் சங்கிலி முழுவதும் அளவுகள் அழுத்தத்தில் இருப்பதையும் நிகழ்நேர கொள்கலன் கண்காணிப்பு தரவு காட்டுகிறது. ”இது வெறும் பருவகால சரிவு அல்லது தற்காலிக திருத்தம் அல்ல,” என்று சரக்கு தரவு கண்காணிப்பு விசியனின் தலைமை நிர்வாக அதிகாரி கைல் ஹென்டர்சன் கூறினார். ”இது ஒரு கட்டமைப்பு பொருட்கள் மந்தநிலை.”

  • அரசாங்க முடக்கத்தால் ஏற்பட்ட நீண்ட தாமதத்திற்குப் பிறகு புதன்கிழமை வெளியிடப்பட்ட சமீபத்திய அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு வர்த்தக தரவு, குறிப்பிடத்தக்க இறக்குமதி சரிவைக் காட்டியது.

போர்ட் ஆஃப் லாங் பீச்சில் இது ஒரு சாதனை ஆண்டாகும், ஆனால் வர்த்தக ஏற்றம் முடிந்துவிட்டது.

இப்போ பாருங்க

காணொளி 02:46

போர்ட் ஆஃப் லாங் பீச்சில் இது ஒரு சாதனை ஆண்டாகும், ஆனால் வர்த்தக ஏற்றம் முடிந்துவிட்டது.

ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் வரிகளின் தாக்கம் தளவாடங்கள் மற்றும் போக்குவரத்துத் துறைகளில் தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது, இந்த ஆண்டு தொடக்கத்தில் சாதனைகள் படைக்கப்பட்ட பின்னர் முக்கிய துறைமுகங்கள் இறக்குமதியில் செங்குத்தான சரிவைச் சந்தித்தன, மேலும் விநியோகச் சங்கிலி முழுவதும் அளவுகள் உருண்டு வந்தன.

2025 ஆம் ஆண்டில் முதல் முறையாக, அக்டோபரில் வேன், பிளாட்பெட் மற்றும் குளிர்சாதன பெட்டி சுமைகளுக்கான விகிதங்கள் அனைத்தும் ஒரு மாதத்திற்கு ஒரு மாதமாகவும், ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் குறைவாகவும் இருந்தன என்று DAT டிரக்லோட் வால்யூம் இன்டெக்ஸ் தெரிவித்துள்ளது .

″மூன்றாம் காலாண்டு மற்றும் அக்டோபர் மாதங்களில் சரக்கு அளவுகள், பரந்த பொருட்கள் பொருளாதாரத்தில் நாம் காண்பதைப் பிரதிபலிக்கின்றன, ஏற்றுமதியாளர்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் அதிகரித்த சரக்குகளை பயன்படுத்தி, சுங்க வரிகள் மற்றும் பலவீனமான நுகர்வோர் தேவையை குறைத்தனர்,” என்று DAT அனலிட்டிக்ஸ் தலைவர் கென் அடாமோ கூறினார். ”இதன் விளைவாக, பாரம்பரிய உச்ச விடுமுறை கப்பல் போக்குவரத்து சீசன் இந்த ஆண்டு கிட்டத்தட்ட இல்லை என்று தெரிகிறது,” அடாமோ கூறினார்.

செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது வேன் லாரிகளின் எண்ணிக்கை 3% குறைந்துள்ளது, மேலும் ஆண்டுக்கு ஆண்டு 11% குறைந்துள்ளது. குளிர்சாதன பெட்டி லாரிகளின் எண்ணிக்கை மாதத்திற்கு 2% மற்றும் ஆண்டுக்கு ஆண்டு 7% குறைந்துள்ளது. பிளாட்பெட் லாரிகளின் எண்ணிக்கை மாதத்திற்கு 4% மற்றும் ஆண்டுக்கு 3% குறைந்துள்ளது. விநியோகச் சங்கிலி வழியாக தற்போது நகரும் உலர் வேன் மற்றும் வெப்பநிலை கட்டுப்படுத்தப்பட்ட சுமைகளின் குறைக்கப்பட்ட அளவு விநியோக மையங்களிலிருந்து சில்லறை விற்பனையாளர்களுக்கு நகரும் பொருட்கள் ஆகும். வர்த்தக சரிவுக்கான காரணங்கள் வீட்டுவசதி மற்றும் உற்பத்தியில் பலவீனம் முதல் எரிசக்தி செலவுகள் வரை, ஏற்றுமதியாளர்கள் ஆண்டின் தொடக்கத்தில் இறக்குமதியை முன்னோக்கி இழுத்து, கட்டண தாக்கங்களைக் குறைக்க சரக்குகளை உருவாக்குவது வரை உள்ளன.

அரசாங்க முடக்கம் காரணமாக ஒரு மாதத்திற்கும் மேலான தாமதத்திற்குப் பிறகு புதன்கிழமை வெளியிடப்பட்ட சமீபத்திய அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியக தரவு , கூடுதல் வரிகள் அமலுக்கு வந்த பின்னர் ஆகஸ்ட் மாதத்தில் இறக்குமதியில் குறிப்பிடத்தக்க சரிவைக் காட்டியது, இது ஜூலை மாத இறக்குமதி அளவை விட $18.4 பில்லியன் குறைவாகும். மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இறக்குமதி வீழ்ச்சி நாட்டின் வர்த்தக பற்றாக்குறையில் 23% க்கும் அதிகமான சரிவுக்கு பங்களித்தது.

நாட்டின் இரண்டாவது பரபரப்பான துறைமுகமான லாங் பீச் துறைமுகத்தால் பகிரப்பட்ட சமீபத்திய சரக்கு கொள்கலன் கண்காணிப்பு தரவு, டிரம்பின் கட்டணங்கள் அமெரிக்காவிற்கு செல்லும் கடல் சரக்குகளில் தொடர்ந்து குறையும் என்பதைக் காட்டுகிறது.

″அமெரிக்காவிற்கு வரும் சீன இறக்குமதியில் 16 சதவீதம் குறைவதை நீங்கள் பார்க்கிறீர்கள்,” என்று லாங் பீச் துறைமுகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மரியோ கோர்டெரோ கூறினார். ”குறைவு பலகை முழுவதும் உள்ளது,” என்று கோர்டெரோ கூறினார்.

லாஸ் ஏஞ்சல்ஸ் துறைமுகமும் அக்டோபரில் கொள்கலன் அளவுகளில் சரிவைப் பதிவு செய்தது.

இந்த சரக்குப் போக்குவரத்தில் மின்னணுவியல், தளபாடங்கள் மற்றும் பொம்மைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன, அதே நேரத்தில் அமெரிக்க தானிய ஏற்றுமதியும் வர்த்தகக் கொள்கையால் பாதிக்கப்பட்டுள்ளது, வர்த்தகப் போரின் போது சீனா பிரேசிலிலிருந்து சோயாபீன்ஸ் வாங்குவதை அதிகரித்துள்ளது. வர்த்தக பதட்டங்களைத் தணிப்பதன் ஒரு பகுதியாக, சீனா சமீபத்தில் அதிக அமெரிக்க சோயாபீன்ஸ் வாங்குவதற்கு உறுதியளித்தது.

செப்டம்பர் 9, 2025 அன்று கலிபோர்னியாவின் லாங் பீச்சில் உள்ள லாங் பீச் துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள ஒரு கப்பலில் போர்த்துகீசியக் கொடியின் பின்னால் சாய்ந்த கப்பல் கொள்கலன்களின் அடுக்குகள் காணப்படுகின்றன.

செப்டம்பர் 9, 2025 அன்று கலிபோர்னியாவின் லாங் பீச்சில் உள்ள லாங் பீச் துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள ஒரு கப்பலில் போர்த்துகீசியக் கொடியின் பின்னால் சாய்ந்த கப்பல் கொள்கலன்களின் அடுக்குகள் காணப்படுகின்றன.

பேட்ரிக் டி. ஃபாலன் | AFP | கெட்டி இமேஜஸ்

சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் பல கட்டண காலக்கெடு மற்றும் விகித மாற்றங்களை வழிநடத்த முயற்சித்ததால், சரக்குகளை முன்கூட்டியே கொண்டு வந்த வர்த்தக முன் ஏற்றுதல் காலத்தைத் தொடர்ந்து கொள்கலன்களின் எண்ணிக்கையில் குறைவு ஏற்பட்டது , இது துறைமுக போக்குவரத்தில் பெரிய ஏற்றங்களுக்கு வழிவகுத்தது. விஜியன் படி, மேற்கு கடற்கரைக்கு உலகளாவிய கொள்கலன்கள் ஆண்டுக்கு ஆண்டு 10% அதிகரித்துள்ளன. சீனாவிலிருந்து அமெரிக்காவிற்கு மேற்கு கடற்கரைக்கு கொள்கலன்கள் ஆண்டுக்கு ஆண்டு 4.6% அதிகரித்துள்ளன, ஏனெனில் இது மிகக் குறைந்த பயண நேரத்தைக் கொண்டிருப்பதால், அமெரிக்காவிற்கு வரும் சீனப் பொருட்களுக்கு வர்த்தக பாதை மிகவும் பிரபலமானது.

ஹூஸ்டன் உள்ளிட்ட கிழக்கு கடற்கரை துறைமுகங்கள், கொள்கலன் அளவுகளில் ஆண்டுக்கு ஆண்டு 2 சதவீதம் மிதமான அதிகரிப்பைக் கண்டுள்ளன. இருப்பினும், சீன கொள்கலன்கள் 12 சதவீதம் குறைந்துள்ளன.

″நல்ல செய்தி என்னவென்றால், நாம் இன்னும் மோசமான சூழ்நிலையில்தான் இருக்கிறோம்,” என்று கோர்டெரோ கூறினார். நான்காவது காலாண்டு சரிவு எதிர்பார்க்கப்படுகிறது என்று அவர் கூறியிருந்தாலும், அடுத்து வருவது மிக முக்கியமானது. ”அமெரிக்க நுகர்வோரின் மீள்தன்மை மற்றும் அவர்களின் செலவு செயல்பாடு, அடுத்த இரண்டு மாதங்கள் அந்த வளர்ச்சியின் சரிவைப் பற்றி உண்மையில் சொல்லும் என்பதைப் பார்க்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.

″மூன்றாம் காலாண்டில் 12% சரிவுக்குப் பிறகு, டிசம்பரில் அமெரிக்க இறக்குமதிகள் ஆண்டுக்கு ஆண்டு கிட்டத்தட்ட 16.6% சரிவை சந்திக்கும் என்று நாங்கள் இப்போது கணித்துள்ளோம்,” என்று நிகழ்நேர கொள்கலன் கண்காணிப்பு தளமான விசியனின் மூலோபாய வணிக மேம்பாட்டு துணைத் தலைவர் பென் டிரேசி கூறினார். ”பார்வையில் எந்த மீட்சியும் இல்லை,” என்று டிரேசி கூறினார்.

உணவு மற்றும் நுகர்வோர் பொருட்களின் பணவீக்கம் காரணமாக நுகர்வோர் பின்வாங்கும் என்ற அச்சம் காரணமாக சில்லறை விற்பனையாளர்களும் உற்பத்தியாளர்களும் வலுவான சரக்கு ஆர்டர்களை நிறுத்தி வைத்துள்ளனர் . இந்த வார சில்லறை விற்பனை வருவாயின் படம் கலவையாக உள்ளது, ஹோம் டிப்போ மற்றும் டார்கெட்டின் மோசமான அறிக்கைகள் ஆனால் வால்மார்ட்டின் வலுவான முடிவுகள் , அதிக நுகர்வோர் மதிப்பில் கவனம் செலுத்துவதாகவும், அதில் அதிக விற்பனை உயர் வருமானம் கொண்ட வாங்குபவர்களிடமிருந்து வருவதாகவும் கூறியது.

″மார்ச் 2023 க்குப் பிறகு முதல் முறையாக, மாதாந்திர இறக்குமதி அளவுகள் தொடர்ந்து 2 மில்லியன் TEU களுக்குக் கீழே குறைவதைக் காண்கிறோம் - இது ஒரு பருவகால சரிவு அல்லது தற்காலிக திருத்தம் மட்டுமல்ல,” என்று விசியனின் தலைமை நிர்வாக அதிகாரி கைல் ஹென்டர்சன் கூறினார். ”இது கட்டண நிச்சயமற்ற தன்மை, உறைந்த வீட்டுச் சந்தைகள் மற்றும் பௌதீகப் பொருட்களிலிருந்து விலகி நுகர்வோர் செலவினங்களில் ஏற்பட்ட அடிப்படை மாற்றம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பால் இயக்கப்படும் ஒரு கட்டமைப்புப் பொருட்களின் மந்தநிலை என்று தரவு காட்டுகிறது,” என்று அவர் கூறினார். 

″தளபாடங்கள் இறக்குமதி 33 சதவிகிதம் சரிந்து, பொம்மை இறக்குமதிகள் - விடுமுறை நாட்களுக்கு முன்னதாக வரலாற்று ரீதியாக 40-50 சதவிகிதம் அதிகரிக்கும் போது - 17 சதவிகிதம் அரிதாகவே உயரும் போது, சில்லறை விற்பனையாளர்கள் பல ஆண்டுகளில் பலவீனமான நுகர்வோர் பருவத்தில் பந்தயம் கட்டுகிறார்கள் என்பதைக் குறிக்கிறது,” என்று அவர் கூறினார்.

கொள்கலன் பயன்பாடு 100 சதவீதத்திலிருந்து 91 சதவீதமாகக் குறைந்துள்ளதாக விசியன் தரவு காட்டுகிறது.

″இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஸ்பாட் ரேட்கள் குறைந்துள்ளன, மேலும் ஒரு தசாப்த கால அதிகப்படியான திறனை நாங்கள் எதிர்நோக்கி வருகிறோம். இது ஒரு தொகுதி குறைவு அல்ல - இது சரக்கு தேவை அடிப்படைகளின் பெரிய மீட்டமைப்பு,” என்று ஹென்டர்சன் கூறினார். ”சரக்கு சந்தை ஏற்கனவே வலியை உணர்கிறது,” என்று அவர் மேலும் கூறினார்.

டிசம்பர் 2025 இல் அமெரிக்க துறைமுகங்களுக்கு வரவிருக்கும் கொள்கலன்கள் 2.19 மில்லியன் இருபது அடிக்கு சமமான அலகுகள் ஆகும், இது கடந்த டிசம்பரில் 2.62 மில்லியன் TEU களாக இருந்தது என்று Vizion தெரிவித்துள்ளது, 430,000 TEU க்கும் அதிகமான அளவு இழப்பு விநியோகச் சங்கிலி முழுவதும் நாக்-ஆன் விளைவை ஏற்படுத்தியது.

சரக்குகளின் இயக்கம் மற்றும் சேமிப்பிலிருந்து வருவாயை ஈட்டும் ரயில் பாதை, லாரிகள் மற்றும் கிடங்குகளுக்கு கூடுதலாக, துறைமுக தொழிலாளர்களும் பாதிக்கப்படுகின்றனர்.

குறைவான சரக்கு என்பது தினசரி நீண்ட கரையோரப் பணியாளர்கள் கொள்கலன்களை நகர்த்துவதற்கான தேவையைக் குறைப்பதைக் குறிக்கிறது.

″தொழிலாளர் முற்றிலும் கவலை கொண்டுள்ளார்,” என்று லாங் பீச் துறைமுகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மரியோ கோர்டெரோ கூறினார். ”இது மீண்டும் வேலை குறைவு, வேலை பதட்டம் என்று செல்கிறது. ... நீங்கள் அளவைக் குறைத்திருந்தால், விநியோகச் சங்கிலியில் உள்ள வேலைகளில், நிச்சயமாக லாங் பீச் துறைமுகத்தில் உள்ள கப்பல்துறைகளில், தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறீர்கள்,” என்று அவர் கூறினார்.

சரக்கு இயக்கத்திற்குப் பொறுப்பான துறைமுகத் தொழிலாளர்களான சர்வதேச லாங்ஷோர்மேன் சங்கம், நகர்த்தப்படும் சரக்குகளின் அளவிற்கு ஆண்டுதோறும் கொள்கலன் போனஸைப் பெறுகிறது.

சீனாவின் வரிகளுக்கு மேலதிகமாக, இந்தியாவின் மீதான வரிகள் இந்த வர்த்தகத்திற்கு சேவை செய்யும் சரக்கு சந்தையை சரித்துவிட்டன என்று விசியன் தெரிவித்துள்ளது. உலகளாவிய வர்த்தக ஆராய்ச்சி முன்முயற்சி, 2025 மே மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடையில் அமெரிக்காவிற்கான ஒட்டுமொத்த இந்திய ஏற்றுமதி மதிப்பில் 37.5% பாரிய சரிவை அறிவித்துள்ளது. இந்தியாவின் ஏற்றுமதிகள் 50% வரியைக் கொண்டுள்ளன.

சீன இறக்குமதி சரிவு தீவிரமடைந்து வருவதால், வர்த்தகக் கண்ணோட்டம் குறித்து லாங் பீச் துறைமுக தலைமை நிர்வாக அதிகாரி: முழு நேர்காணல்



https://www.cnbc.com/2025/11/20/trump-tariffs-trade-china-import-decline-freight-recession.html

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.