Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை- அவுஸ்திரேலிய முதல் டெஸ்ட் பிறிஸ்பேனில் இன்று ஆரம்பமாகிறது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை- அவுஸ்திரேலிய முதல் டெஸ்ட் பிறிஸ்பேனில் இன்று ஆரம்பமாகிறது

[08 - November - 2007] [Font Size - A - A - A]

இலங்கை- அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று வியாழக்கிழமை பிறிஸ்பேனில் ஆரம்பமாகிறது.

இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட இத் தொடர் இலங்கை அணிக்கு மிகப்பெரிய சவாலாகவும் இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனுக்கு, சாதனை படைக்கும் தொடராகவும் அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை இவ்விரு அணிகளும் 18 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் அவுஸ்திரேலியா 11 போட்டிகளிலும், இலங்கை ஒரேயொரு டெஸ்ட் போட்டியிலுமே வெற்றி பெற்றுள்ளது. ஆறு போட்டிகள் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்துள்ளன.

அவுஸ்திரேலியாவில் இவ்விரு அணிகளுக்குமிடையே எட்டுப் போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் அவுஸ்திரேலிய அணி 6 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இரு போட்டிகள் வெற்றி- தோல்வியின்றி முடிவடைந்துள்ளன.

இதேநேரம், இலங்கையில் நடைபெற்ற பத்து டெஸ்ட் போட்டிகளில் அவுஸ்திரேலிய அணி ஐந்து போட்டிகளிலும், இலங்கை அணி ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. ஏனைய போட்டிகள் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்துள்ளன.

இன்றைய போட்டி நடைபெறும் பிறிஸ்பேன் மைதானம் வேகப்பந்து வீச்சுக்கு ஏற்ப தயார் செய்யப்பட்டுள்ளதால் ஆடுகளம் அவுஸ்திரேலிய பந்து வீச்சாளர்களுக்கு வாய்ப்பாயிருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், இலங்கை அணியும் நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுடனும் , சுழற்பந்து வீச்சாளர் முரளிதரனுடனும் களமிறங்கவுள்ளது.

துடுப்பாட்டத்தில் சனத் ஜெயசூரியா, கப்டன் மஹேல ஜெயவர்தன சோபிக்கத் தவறி வருவதுடன் காயம் காரணமாக சங்ககார இந்தப் போட்டியில் ஆடாதது அணிக்கு பெரும் பின்னடைவாயுள்ளது.

நடுவரிசை வீரர்களிலியே பெரும்பாலும் அணி துடுப்பாட்டத்திற்கு நம்பியிருக்க வேண்டிய நிலையேற்பட்டுள்ளது.

பந்துவீச்சைப் பொறுத்தவரை சமிந்தவாஸ், டில்ஹாரா பெர்னாண்டோ, லசித்த மலிங்க , பர்வேஷ் மஹ்ரூப் என வேகப்பந்து வீச்சாளர்களும் , சுழற்பந்து வீச்சில் முரளிதரனும் அணிக்கு பெரிதும் கைகொடுப்பார்களென எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் அவுஸ்திரேலிய அணி துடுப்பாட்டம், பந்துவீச்சு , களத்தடுப்பில் மிக வலுவாயிருப்பதால் இலங்கை அணி கடும் நெருக்கடிகளை எதிர்நோக்க வேண்டியிருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது

thinakural.com

இதன் போது முத்தையா முரளிதரன் அவர்கள் அதிக விக்கற்றுக்களை வீழ்த்தி புதிய உலக சாதனை செய்வார் எண்டு எதிர்பார்க்கப்படுகிது.

இந்த உலக மகா சாதனையை மிகுந்த ஆவலுடன் சிறீ லங்கா அரசாங்கம் எதிர்பார்த்து காத்து இருக்கிது.

இந்த அரிய பெரும் சாதனை நிலைநாட்டப்பட்டபின் சிறீ லங்காவில் உள்ள இனப்பிரச்சனை தீர்ந்து சாந்தியும் சமாதானமும் நிலவும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள அணி அவுஸ்திரெலியா அணியிடம் நல்லா அடிவாங்கிக் கொண்டு இருக்கிறது. அவுஸ்திரெலியா அணி தற்பொழுது 4 வீரர்களின் ஆட்டமிழப்புடன் 534 ஒட்டங்களுடன் இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள் அணி தொடர்ந்து அடி வாங்கிக் கொண்டு இருக்கிறது. சிங்களம் 14 - 2, அவுஸ்திரெலியா 551/4.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்ன கந்தப்பு,முத்தையா முரளிதரன் அவுஸ்திரேலியமண்ணில் சாதனை நிகழ்த்தமாட்டார் போல உள்ளது?

அன்பான நண்பர்களே

தற்பொழுது ஆஸ்திரலியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஸ்ரீலங்கா கிரிகெட் அணியின் போட்டிகளை உணர்வுள்ள ஈழத்தமிழர் எல்லோரும் பகிஸ்கரிக்க வேண்டும். அப்படித்தான் கிரிக்கெட் விளையாட்டைக் காணத்துடிக்கும் அன்பர்கள் எம் தாயகத்தில் எம் உடன்பிறப்புகள அனுபவிக்கும் வேதனைகளுக்கு முக்கிய காரணமான விளங்கும் ஸ்ரீலங்கா அரசின் மனித உரிமை மீறல்களை கண்டிக்கும் விதத்தில் வெளி உலகத்து மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் தன்மான உணர்வுடன் கலந்து கொள்ளவேண்டும் என அல்லற்படும் ஈழத்து உறவுகள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி

மேற்கண்ட விடயத்தினை யாழ் கள வாசகர் ஒருவர் அனுப்பியிருந்தார். தன்னால் களத்தில் இணைந்து பதிய முடிவில்லை எனத் தெரிவித்து, இணைத்து விடும்படி கேட்டிருந்தார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜக்ஸின் சதம், பொண்டிங்கின் அரைச்சதத்தால் முதல் இனிங்ஸில் அவுஸ்திரேலியா வலுவான நிலையில்

[09 - November - 2007] [Font Size - A - A - A]

இலங்கை - அவுஸ்திரேலிய அணிகளிடையே பிறிஸ்பேனில் நேற்று வியாழக்கிழமை ஆரம்பமான முதலாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி தனது முதல் இனிங்ஸில் வலுவான நிலையிலுள்ளது.

2 போட்டிகளைக் கொண்ட இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கை அணித் தலைவர் மஹேல ஜெயவர்தன அவுஸ்திரேலிய அணியை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்தார்.

ஆரம்ப துடுப்பாட்ட வீரர் மத்யூ ஹைடனும் பில் ஜக்ஸும் மிகச் சிறப்பாக ஆடி அணிக்கு வலுவானதொரு அடித்தளத்தையிட்டனர்.

சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த மத்யூ ஹைடன் 43 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் சமிந்த வாஸின் பந்து வீச்சில் முரளிதரனிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

முதலாவது விக்கெட் 108 ஓட்டங்களில் வீழ்த்தப்பட்டது.

இதன்பின் ஜக்ஸுடன் இணைந்த அணித் தலைவர் ரிக்கி பொண்டிங்கும் சிறப்பாக ஆடினார். இரண்டாவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 114 ஓட்டங்களைப் பெற்று அணியின் ஓட்ட எண்ணிக்கை 183 ஆக இருந்த போது 2 ஆவது விக்கெட் வீழ்த்தப்பட்டது.

அரைச் சதமடித்து 56 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் கப்டன் ரிக்கி பொண்டிங் முரளிதரனின் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் பிரசன்ன ஜெயவர்தனாவால் ஸ்ரெம்ப் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார்.

இந்த நிலையில் அவுஸ்திரேலிய அணி 216 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது, மிகவும் சிறப்பாக ஆடி 100 ஓட்டங்களைப் பெற்றிருந்த ஜக்ஸ் முரளிதரனின் பந்துவீச்சில் விக்கெட் காப்பாளர் பிரசன்ன ஜெயவர்தனவால் ஸ்ரெம் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார்.

ஆட்ட நேரம் முடிவடையும் போது அவுஸ்திரேலிய அணி தனது முதல் இனிங்ஸில் 76 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 241 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. மைக்கல் ஹஸி- 28 ஓட்டங்களுடனும் மைக்கல் கிளார்க் 5 ஓட்டங்களுடனும் ஆடிக் கொண்டிருந்தனர்.

பந்து வீச்சில் 2 விக்கெட்டை கைப்பற்றிய முரளிதரன் ஷேன்வோர்னின் அதி கூடிய விக்கெட் சாதனையை முறியடிக்க மேலும் 7 விக்கெட்டுகளை கைப்பற்ற வேண்டியுள்ளது.

http://www.thinakkural.com/news/2007/11/9/...s_page39901.htm

Match Statistics

Australia v Sri Lanka, 1st Test

B.C.G

7 Nov 2007

Umpires: AL Hill , RE Koertzen

Toss won by Sri Lanka, Elected to bowl

Score Summary

Runs Run Rate Overs

Australia 551/4 3.65 151.0

Sri Lanka 124/5 2.76 45.0

Australia inning 1 Sri Lanka inning 1

Australia

Batsman Status Runs Balls 4s 6s FOW

PA Jaques st HAPW Jayawardene b M Muralitharan 100 203 13 0 216/3

ML Hayden ct M Muralitharan b WPUJC Vaas 43 63 5 0 69/1

RT Ponting st HAPW Jayawardene b M Muralitharan 56 85 7 0 183/2

MEK Hussey ct MS Atapattu b CRD Fernando 133 250 13 2 461/4

MJ Clarke not out 145 248 13 1

A Symonds not out 53 57 7 0

AC Gilchrist

SR Clark

B Lee

MG Johnson

SCG MacGill

Total 4 wicket(s); 151.0 over(s) 551

Sri Lanka

Bowler Over MDN Runs Wkts Wide No

WPUJC Vaas 28.0 6 102 1 0 0

MF Maharoof 34.0 7 107 0 0 4

CRD Fernando 34.0 3 130 1 1 0

M Muralitharan 50.0 4 170 2 0 0

MS Atapattu 0.0 0 0 0 0 0

ST Jayasuriya 4.0 0 18 0 0 0

DPMD Jayawardene 0.0 0 0 0 0 0

TT Samaraweera 1.0 0 8 0 0 0

Sri Lanka

Batsman Status Runs Balls 4s 6s FOW

ST Jayasuriya ct AC Gilchrist b B Lee 7 7 1 0 7/1

MS Atapattu not out 42 138 4 0

MG Vandort ct AC Gilchrist b B Lee 0 12 0 0 11/2

DPMD Jayawardene ct AC Gilchrist b SR Clark 14 35 3 0 45/3

TT Samaraweera ct AC Gilchrist b MG Johnson 13 28 2 0 65/4

LPC Silva ct MJ Clarke b SR Clark 40 45 6 0 119/5

HAPW Jayawardene not out 2 8 0 0

TM Dilshan

CRD Fernando

WPUJC Vaas

MF Maharoof

M Muralitharan

Total 5 wicket(s); 45.0 over(s) 124

Australia

Bowler Over MDN Runs Wkts Wide No

B Lee 10.0 6 12 2 1 0

MG Johnson 12.0 1 39 1 0 0

SCG MacGill 11.0 2 40 0 0 0

SR Clark 12.0 2 31 2 0 3

MJ Clarke 0.0 0 0 0 0 0

http://ws-3.willow.tv/EventMgmt/CXTVWeb/In...4&full=true

வெல்டன் பொன்டிங் இனிங்ஸ் வெற்றியை நாம் பெற்றுவிட்டோம் வாழ்த்துகள் :lol: அத்துடன் முரளியின் சாதனையை முறியடிக்காம பண்ணியமை இன்னொரு வெற்றி வாழ்த்துகள் :( பொன்டிங் அத்துடன் அடுத்து தஸ்மேனிவியாவில் இருக்கும் டெஸ்ட் போட்டியிலும் சிறப்பாக விளையாடி வெற்றி பெற வேண்டும் :unsure: அத்துடன் எம் மண்ணில் முரளி சாதனையை முறியடிக்க கூடாது என்பது தான் நம் அவா :( அது தான் உங்களின் அவா என்று தெரியும் பொன்டிங் அதுவும் வெற்றி பெற வாழ்த்துகள்!! :lol:

இப்படிக்கு,

வரும்கால அவுஸ்ரெலிய பிரதமர்,

ஜெனரல் ஜம்மு பேபி!!

Edited by Jamuna

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இனவாத அவுஸ்திரேலியா குழுக்கு எதிராக முரளி விளையாடி தனது சாதனையை முறியடிக்க வேண்டுமென்பது எனது அவா.முரளியை கிறிக்கட் விளையாட்டு ரசிகர்கள்!!! முதல் அவுஸ்திரேலியா குழு வரை எள்ளி நகையாடியது கண்கூடு.இவர்கட்காக முரளி இவர்களது மண்ணில் செய்து காட்ட வேண்டும்.சிறிலங்கா இனவாத குழுவில் முரளி இருந்தாலும் முரளியை ஒரு தமிழராக, எவ்வகையில் ஒரு சிறந்த வீரர் அவமதிக்கப்படுகிறார் என்ற வகையில் அவர் அவுஸ்திரேலிய மண்ணில் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

நாளைக்கே "கருணாவை" பிரித்தானிய பொலிசார் (நடக்காது :huh: ) ஒருவேளை நக்கல் அடித்து போட்டார்கள் என்றா அது ஒரு இனவாதம் என்று கருணாவிற்கு ஆதரவு கொடுபோம் என்று கொடி தூக்குவார்களா :( ..............அது சரி நம்ம ஆட்கள் தூக்கினாலும் தூக்குவார்கள் "கருணாவை" அவமதித்து போட்டார்கள் என்று :icon_idea: ..........நம்மை பொறுத்தவரைக்கு முரளியும் ஒன்றும் தான் நம்ம "கருணாவும்" ஒன்று தான் :lol: !!ஆகவே பொன்டிங் இவ்வாறான ஒரு துரோகி எங்கள் மண்ணில் சாதனையை முறியடிக்க கூடாது என்று மிகவும் தாழ்மையுடம் கேட்டு கொள்கிறேன்!! :)

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி பஞ்-

"ஒரு பானை சோற்றிற்கு ஒரு சோறு பதம்" :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஜயா நுணாவிலனே அவுஸ்ரெலியாவில் வாழும் தமிழர்களை பொறுத்தவரை சிறிலங்காவில் நடப்பதை போல் ஒரு இனவெறியை சந்தித்ததில்லை இவ்வளவோ இன்னல்களுக்கு மத்தியிலும் இங்கு வந்து வாழ்வதிற்கு வசதி செய்து கொடுத்த இந்த மண்ணிற்கு முதல் விசுவாசமாக இருக்க வேண்டும்,உண்மையா முரளிதரன் தமிழர்களுக்காக குரல் கொடுப்பவராக இருந்தா அவர் தனது கையில் கறுத்தபட்டியை கட்டி ஒரு விளையாட்டிலாவது விளையாட ஏலுமா அப்படி அவர் விளையாடகூடிவராக இருந்தா தமிழன் என்ற ரீதியில் நீங்க கூறுவதை ஏற்று கொள்ளளாம்,தமிழ் பெயர் இருப்பவர் கிரிகேட் டீமில் இருப்பதால் அந்த டீமை நாம் தூக்கிபிடிக்க வேண்டிய அவசியம் இல்லை அவரையும் தூக்கி பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை,ஒரு முரளிதரனுக்காக வக்காலத்து வாங்குவதை பார்க்க 40,000 மேற்பட்ட தமிழர்களுக்கு வாழ்வதிற்கு உரிமை கொடுத்த அவுஸ்ரெலியாவை தூக்கி பிடிப்பது மேல்.நாம் இப்படியான நாட்டில் வாழ்வதால் தான் ஏதாவது சுயமாக கருத்து கூற கூடியதாக இருக்கிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜயா நுணாவிலனே அவுஸ்ரெலியாவில் வாழும் தமிழர்களை பொறுத்தவரை சிறிலங்காவில் நடப்பதை போல் ஒரு இனவெறியை சந்தித்ததில்லை இவ்வளவோ இன்னல்களுக்கு மத்தியிலும் இங்கு வந்து வாழ்வதிற்கு வசதி செய்து கொடுத்த இந்த மண்ணிற்கு முதல் விசுவாசமாக இருக்க வேண்டும்,உண்மையா முரளிதரன் தமிழர்களுக்காக குரல் கொடுப்பவராக இருந்தா அவர் தனது கையில் கறுத்தபட்டியை கட்டி ஒரு விளையாட்டிலாவது விளையாட ஏலுமா அப்படி அவர் விளையாடகூடிவராக இருந்தா தமிழன் என்ற ரீதியில் நீங்க கூறுவதை ஏற்று கொள்ளளாம்,தமிழ் பெயர் இருப்பவர் கிரிகேட் டீமில் இருப்பதால் அந்த டீமை நாம் தூக்கிபிடிக்க வேண்டிய அவசியம் இல்லை அவரையும் தூக்கி பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை,ஒரு முரளிதரனுக்காக வக்காலத்து வாங்குவதை பார்க்க 40,000 மேற்பட்ட தமிழர்களுக்கு வாழ்வதிற்கு உரிமை கொடுத்த அவுஸ்ரெலியாவை தூக்கி பிடிப்பது மேல்.நாம் இப்படியான நாட்டில் வாழ்வதால் தான் ஏதாவது சுயமாக கருத்து கூற கூடியதாக இருக்கிறது

என்னய்யா புத்தன் இந்த உலகத்தில் வாழ்கின்றீர்களா என்பது கேள்வி குறியாக உள்ளது?

முத்தையா முரளிதரன் அவுஸ்திரிலேலியாவின் பயணத்துக்கு பின்வாங்கியது அவுஸ்திரேலியாவின் இன வாத குழுக்களும் அதன் இன வாத ரசிகர்களும் தான் என்பதை 100/100% மறுக்க முடியாது.

எமது வரலாறை பின் நோக்கி பார்ப்போமானால் தோட்ட தொழிலாளர்களை யாழ்ப்பாண மக்கள் எப்படி நடத்தினார்கள் என்பது கண் கூடு.இதற்கு தமிழ் மக்களின் ஏகோபித்த தலைவர் ஜி ஜி பொன்னம்பலம் இந்தியாவுக்கு தோட்ட தொழிலாலர்களை அனுப்புவதில் தனது ஏகோபித்த வாக்கை அளித்த வள்ளல் என்பதை நாரும் மறைக்கவோ மறுக்கவோ முடியாது.அப்படியாக யாழ்பான மக்களால் நசுக்கப்பட்ட மலையக தமிழ் மகன் என்னத்துக்காக கறுப்பு கொடி காட்ட வேண்டும்.? நிச்சயமாக நாங்கள் சுயநலவாதிகளா?மலையக மக்கள் பற்றி நாங்கள் கதைக்க லாயக்குள்ளவர்களா?ஆக ஒரு தமிழர் (எங்களால் பாதிக்க பட்டவர் கூட)(இலங்கை குழு பற்றி யார் கவலைப்பட்டார்கள்)தனது சாதனையை நிகழ்த்துவதில் உங்களை பாதிக்கிறது?

  • கருத்துக்கள உறவுகள்

என்னய்யா புத்தன் இந்த உலகத்தில் வாழ்கின்றீர்களா என்பது கேள்வி குறியாக உள்ளது?

முத்தையா முரளிதரன் அவுஸ்திரிலேலியாவின் பயணத்துக்கு பின்வாங்கியது அவுஸ்திரேலியாவின் இன வாத குழுக்களும் அதன் இன வாத ரசிகர்களும் தான் என்பதை 100/100% மறுக்க முடியாது.

எமது வரலாறை பின் நோக்கி பார்ப்போமானால் தோட்ட தொழிலாளர்களை யாழ்ப்பாண மக்கள் எப்படி நடத்தினார்கள் என்பது கண் கூடு.இதற்கு தமிழ் மக்களின் ஏகோபித்த தலைவர் ஜி ஜி பொன்னம்பலம் இந்தியாவுக்கு தோட்ட தொழிலாலர்களை அனுப்புவதில் தனது ஏகோபித்த வாக்கை அளித்த வள்ளல் என்பதை நாரும் மறைக்கவோ மறுக்கவோ முடியாது.அப்படியாக யாழ்பான மக்களால் நசுக்கப்பட்ட மலையக தமிழ் மகன் என்னத்துக்காக கறுப்பு கொடி காட்ட வேண்டும்.? நிச்சயமாக நாங்கள் சுயநலவாதிகளா?மலையக மக்கள் பற்றி நாங்கள் கதைக்க லாயக்குள்ளவர்களா?ஆக ஒரு தமிழர் (எங்களால் பாதிக்க பட்டவர் கூட)(இலங்கை குழு பற்றி யார் கவலைப்பட்டார்கள்)தனது சாதனையை நிகழ்த்துவதில் உங்களை பாதிக்கிறது?

வணக்கம் நுணாவிலனே இந்த நுணாவிலன் என்ற பெயரிலேயே ஒரு கிராமத்தின் பெயரை கொண்டு இருக்கிறீர்கள் அதுவே ஒரு பிரதேசவாதமாக இருக்கிறது அல்லவா?அதைவிடுவோம் விசயதிற்கு வருவோம் எந்த உலகத்தில் இருக்கிறீர்கள் என்று கேட்டு இருக்கிறீர்கள் 35 வருடதிற்கு முன் இருந்த உலகத்தை பற்றி கூறுகிறேன் தந்தையார் சிங்கள பகுதியில் அரசாங்க உத்தியோகம் பார்த்து கொண்டு இருந்தவர் சகல அரச செல்வாக்கையும் சலுகைகளையும் பெற்று இருந்தவர் அதை போல் ஏனைய தமிழ் அரச உத்தியாகத்தர்களும் பெற்று இருந்தார்கள் அந்த பகுதியில் வாழும் தமிழ் அரச உத்தியாகத்தர்கள் ஒன்று கூடும் போது தென்னை மரத்தில் இருந்து பெறபடும் உற்சாகபானம் அருந்துவார்கள் உற்சாகபானம் உள்ளே சென்ற பிறகு சிலர் செல்வநாயகதிற்கு ஆதரவாகவும் சிலர் ஜீ.ஜீ பொன்னம்பலதிற்கு ஆதரவாகவும் விவாதத்தை தொடங்குவார்கள் சற்று நேரம் சென்ற பின் சிங்களவன் என்று தொடங்கி இனவாதத்தை கக்குவார்கள் சிங்களவனை அடிக்க வேண்டும் குத்த வேண்டும் என்று கதைப்பார்கள் ஆனால் இவர்கள் எல்லாம் அரசாங்க உத்தியாகத்தில் இருந்து கொண்டு இலஞ்சம் வாங்கி தங்களின் செல்வத்தை பெருக்கியதே தவிர உருப்படியாக ஒன்றும் செய்யவில்லை செய்ததெல்லாம் இளம் சமூகத்தினருக்கு வேறுபுணர்ச்சியையும்,இனவாதத்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இல்லையே, நான் துணிந்து எனது ஊரை சொல்வதில் (புனை பெயரிலும் கூட)நான் ஏன் பின்னிக்க வேண்டும்.இது என்ன புது விவாதம்? எத்தனை கவிஞர்கள்,எழுத்தாளர்கள்,கலைஞ

ர்கள் என பலர் தங்களின் பெயருக்கு முன்னால் தமது ஊரின் பெயரை வைப்பது தங்களின் ஊருக்கு பெருமை சேர்ப்பதாகவே கருத முடியும்.உங்களுக்கு உதாரணங்கள் சொல்ல தேவையில்லை.நானே யோசித்ததுண்டு ஏன் ஒரு மீனின் பெயரிலோ அல்லது மரத்தின் பெயரிலோ யாழில் உலாவலாம் என்று.ஏனிந்த முகமூடி?.சொந்த பெயரில் வருவதிலும் பார்க்க சொந்த ஊரின் பெயரில் வருவது எனது கிராமத்தின் சார்பில் சமூகமளிக்கிறேன் என்றொரு பிரமை.எப்படி பிரதேசவாதம் என கூறுகிறீர்கள் என அன்பின் புத்தனை கேட்கிறேன்?

யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற இனத்துக்கு நடந்த கதியை பாருங்கள் புத்தன்.எது எப்படியிருப்பினும் இவ்வளவு பெரிய மனசு பண்ணியதால் தான் இவ்வளவு தூரத்துக்கு கஸ்டப்பட வேண்டியுள்ளது.

ஏதோ எனது வாழ்க்கை பயணத்தில் ஏற்பட்ட அனுபவங்களின் அடிப்படையில் எனது கருத்துக்கள் அமைந்துள்ளன.இனவாதம் இல்லாத உலகை உருவாக்கும் புத்தனின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.(உண்மையான உலகையும் கருத்தில் கொள்வீர்கள் என்பது எனது அவா)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.