Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, goshan_che said:

ஜேவிபி வட கிழக்கு தமிழர்களுக்கு அரசியல் உரிமை எதையும் தராது என்பது எவ்வளவு நிகரான அதே அளவு நிதர்சனம் மலையக மக்களை அடிமை வாழ்வில் இருந்து மீட்காது என்பதும்.

7 hours ago, Justin said:

"நாங்க யாழ்ப்பாணத்தார், எங்கள் றோயல் பிளட் லைன் மலையகத் தமிழர் நிரந்தரமாக வந்து தங்கினால் நஞ்சாகி விடும்"😂 என்ற அச்சம் இரண்டாவது காரணம்.

13 hours ago, வாதவூரான் said:

நீங்கள் எல்லாம் சண்டை பிடியுங்கோ. ஒரு பத்தாயிரம் மலையக மக்களை வன்னிப்பகுதியில் குடியேற்றும் திட்டம் இருப்பதாக (அரசாங்கத்தரப்பில்) கேள்விப்பட்டேன்.

இங்கே யாரும் மலையக்த் தமிழ் மக்களுக்கு எதிரான விதத்தில் ஒரு கருத்தைத் தன்னும் எழுதவில்லை.

ஒரு வேளையில் அவர்கள் வடக்கில் குடியேற்றப்பட்டால் எந்த விதத்தில் அவர்கள் முன்னேற்றம் இருக்கும்..... .

வடக்கு மக்கள் அவர்களை எப்படி அனுசரித்துச் செல்வார்கள்....... .

அவர்கள் ஒருவேளை அழைத்துவரப் பட்டால்.....

தமிழ் அரசியல் வாதிகள் அவர்களுடைய வாழ்வாதாரத்திற்கு உறுதி அளிப்பார்களா .......

அன்றைய கால கட்டத்தில் வீட்டுப் பணிப்பெண்களாக தோட்ட வேலைகளுக்காக வடக்கு மக்கள் அவர்களை அழைத்து வந்து எப்படியான விதத்தில் வேலை வாங்கினார்கள் என்பதையெல்லாம்....... உணர்ந்த வகையில் தான்

இந்த அழைப்பை நாங்கள் நிராகரிக்கின்றோம்.

இதையே மடைமாற்றி அவர்கள் வருவதை இவர்கள் விரும்பவில்லை

அவர்கள் வந்தால் இவர்களுக்கு ஒத்துவராது

இவர்கள் அவர்களை மதிக்காமல் பார்க்கின்றார்கள் என்ற வகையில் கருத்துக்களைத் திரித்து எழுதுவதால் எல்லாம் சரியென்றாகி விடாது.

மலையக மக்கள் மலையகத்தில் சுதந்திரமாக தங்கள் உரிமைகளை அனுபவித்து வாழ வேண்டும் .மலையகம் மலையகத் தமிழர்களுடைய தாயகம் . இதை எந்தக்கொம்பன் வந்தாலும் மாற்ற முடியாது

இலங்கையில் வாழும் தமிழர்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாக வடக்கில் மட்டும் ஒதுக்கி மிகுதி நாடு முழுவதும் சிங்களம் தன் கால்களை அகட்டி வைக்க வசதிகள் செய்து கொடுப்பவர்களை அல்லது அப்படிச் செய்ய நினைப்பவர்களை இனம் கண்டு தமிழர்களின் அரசியலில் இருந்து முழுமையாக ஒதுக்கி வைக்க வேண்டும்

  • Replies 159
  • Views 7.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • Kavi arunasalam
    Kavi arunasalam

    நாற்பது, ஐம்பதுகளின் இலங்கையின் இருந்த பிரதேச பாகுபாடுகள் மலையகத் தமிழர்களின் வாழ்க்கையை ஆழமாக பாதித்திருந்தது. குறிப்பாக யாழ்ப்பாணப் பகுதியில் சில யாழ்ப்பாணத் தமிழர்கள், தேயிலைத் தோட்டங்களில் இருந்து

  • Kavi arunasalam
    Kavi arunasalam

    உங்களது இந்த வரிகள் எனக்கு இதை எழுத வைத்தது. நன்றி goshan_che அறுபதுகளின் நடுப்பகுதியில், ஶ்ரீமாவோ பண்டாரநாயக்கா காலத்தில், விசுவமடு, புதுக்குடியிருப்பு பகுதிகளில் “படித்த வாலிபர் திட்டம்” என்ற பெயர

  • Sasi_varnam
    Sasi_varnam

    என்னை பொறுத்தவரையில் இது எப்போதோ நடந்திருக்க வேண்டிய ஒரு காலக் கடமை. 200 வருட அடிமை சாசன வாழ்க்கையில் அந்த பெருந்தோட்ட மக்கள் கூட்டம் அடைந்த முன்னேற்றம் என்பது ஆமை வேகத்தில் தான் நடந்திருக்கிறது. இன்ற

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kavi arunasalam said:

இந்த வேலையைத்தான் செய்வோம் என்று வெளிநாடுகளுக்கு நாங்கள் யாரும் இடம் பெயர்ந்து வரவில்லை.  எந்த வேலையையும் செய்யத் தயாராகவேதான் இருந்தோம்.

இப்படியான ஒரு கருத்து பொதுவாக எல்லோருக்கும் பொருந்தாது

கலவரத்தால் பாதிக்கப்பட்டு பாடசாலை செல்லப்பயந்து உயிர் அச்சம் கருதி பெற்றோரால் கட்டாயமாக வெளி நாடுகளுக்கு அனுப்பப்பட்டவர்கள் லட்சக்கணக்கில் இருக்கின்றார்கள்.

அவர்கள் வந்தபோது ஜெர்மனி சென்றால் பாத் ரூம் கழுவலாம்

பாரிஸ் சென்றால் தூசு தட்டலாம்

இத்தாலி சென்றால் சாப்பாட்டு மேசை துடைக்கலாம்

என்ற நினைப்பில் வரவில்லை

ஒரு சில காலத்தில் திரும்பவும் நாட்டு நிலைமை சரி வந்துவிடும் 70 களில் ஜேவிபி ஐ அழித்தமாதிரி தமிழர்களின் போராட்டமும் அழிந்துவிடும் என்று நினைத்த பெற்றோர்களும் இருந்தார்கள்

காலப்போக்கில் நிலைமையை உணர்ந்தவர்கள் தான் ஐரோப்பாவில் தங்களுக்கு கிடைத்த வேலைகளை செய்து பணம் ஈட்ட ஆரம்பித்தார்கள் இது என் அனுபவமும் கூட

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, goshan_che said:

இதோ இன்னொருவர் நீ செய், நான் செய்கிறேன் என மடைமாற்றுகிறார்😂.

நான் உங்கள் எவரையும் காணியை கொடுங்கள் என சொல்லவில்லை.

இப்படியான நகர்வு ஒரு நல்ல நகர்வு என கொள்கை அளவிலாவது ஏற்று கொள்ளுங்கள் என்கிறேன்.

ஆனால் அதற்கு உங்கள் மையவாதம் விடுகுதில்லை.

ஆகவே இப்படி மடை மாற்றுகிறீர்கள்.

இன்னொரு டிசைன் மடைமாற்று.

வடக்கில் கடைசி ஏழை இருக்கும் வரை இப்படி மடைமாற்றி கொண்டே இருக்கலாம்.

நாம் கீழ்தரமான யாழ் மையவாதிகள் என வெளிப்படையாக ஒத்து கொள்ள வேண்டி வராது.

மடைமாற்று 3rd prototype😂

உண்மையை சொன்னால்; மடைமாற்று, காவடி, தூக்குகாவடி என்பீர்கள். சுமந்திரனை சொன்னால் ஓடி வந்து காப்பாற்றுவீர்கள். பாவம் ஐயா நீங்கள்! அவர் செய்யும் அரசியலை ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை உங்களால், அவரை விட்டுகொடுக்கவும் முடியவில்லை. உங்கள் பாடு திண்டாட்டந்தான். ஒருவற்கு உதவி செய்யும்போது, அவர்களுக்கு எது தேவை என்பதை கேட்டறிந்து செய்யவேண்டும். நான் விரும்பியதை எல்லாம் சொல்லிவிட்டு, அதுதான் அவர்களது தேவையென வாய் வம்பம் பேசக்கூடாது. இப்போவாவது அவர்களுக்கு என்ன தேவை என பாதிக்கப்பட்ட மக்களைகேட்டு செய்யுங்கள். அடுத்தவேளை தூங்க இடமில்லை, சாப்பிட ஏதுமில்லை, அவர்களை பாசத்துடன் அழைக்கிறோம் வாருங்கள் என்றால் எப்படி? ஏதாவது ஆயத்தங்கள் உண்டா? மலையகம் அவர்களது தாயகம். அங்கு அவர்கள் சுதந்திரமாக நிம்மதியாக வாழவேண்டிய சூழலை உருவாக்குவது அவர்களது பிரதிநிதிகளின் கடமை. தனது மக்களுக்கு செய்ய வேண்டிய கடமையை சரிவர செய்யாமல் அந்த மக்களாலேயே நிராகரிக்கப்பட்டவர், மலையக மக்களுக்கு ஏதோ செய்யபோகிறாராம். இதைச்சொன்னால் மடைமாற்று, காவடி என்று தூக்கிக்கொண்டு, நிதர்சனத்தை ஏற்க மறுத்து ஏதோ ஜாம்பவானாக கயிறு திரிப்பு.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, வாத்தியார் said:

மலையகம் மலையகத் தமிழர்களுடைய தாயகம் . இதை எந்தக்கொம்பன் வந்தாலும் மாற்ற முடியாது

ரத்த திலகம் வைத்த காலங்களில் கூட்டணி தலைவர்கள் உசுபேற்றும் வகையில் பேசுவார்கள் என கேள்விப்பட்டேன்.

டெமோ காட்டியமைக்கு நன்றி.

இத்து போன ஈரோஸ், ஈபி யை தவிர, அவர்களும் பின்னர் இதை கைவிட்டு விட்டார்கள் - எவரும் எந்த காலத்திலும் மலையகம் தமிழர் தாயகம் என கோரியதே இல்லை.

மலையகத்தை விட கொழும்பு மாவட்டத்தில் தமிழர் செறிவு அதிகம். அதற்காக கொழும்பு தமிழர் தாயகமா?

இனவழி, மரபுபழி தாயாகம் என்பது சும்மா புல்டா போண்டா கதை அல்ல.

எழுந்தமானமாக யாழில் வீரவசனம் எழுதுவதால் மட்டும் மலையகம் தமிழர் தாயகம் என ஆகிவிடாது.

10 hours ago, வாத்தியார் said:

இலங்கையில் வாழும் தமிழர்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாக வடக்கில் மட்டும் ஒதுக்கி மிகுதி நாடு முழுவதும் சிங்களம் தன் கால்களை அகட்டி வைக்க வசதிகள் செய்து கொடுப்பவர்களை அல்லது அப்படிச் செய்ய நினைப்பவர்களை இனம் கண்டு தமிழர்களின் அரசியலில் இருந்து முழுமையாக ஒதுக்கி வைக்க வேண்டும்

சக தமிழனை அடுத்த நூறு ஆண்டுக்கு லைன்களில் கட்டி வைத்து, சிங்கள மேலாண்மையின் ரத்த கூலிகளாக இருக்க வைக்கும் -வடக்கில் தமிழ் இனப்பரம்பல் குறைந்து போனாலும் பரவாயில்லை எனது ஆள் இல்லா காணியில் இன்னொரு தமிழனை (இன்னொரு சாதியை சார்ந்த யாழ்ப்பாண தமிழனை கூட) இருக்க விடேன் எனும் நவீன பொன்னம்பலங்கள் சமூகத்தில் இருந்தே ஒதுக்கி வைக்கப்பட வேண்டியவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, satan said:

உண்மையை சொன்னால்; மடைமாற்று, காவடி, தூக்குகாவடி என்பீர்கள். சுமந்திரனை சொன்னால் ஓடி வந்து காப்பாற்றுவீர்கள். பாவம் ஐயா நீங்கள்! அவர் செய்யும் அரசியலை ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை உங்களால், அவரை விட்டுகொடுக்கவும் முடியவில்லை. உங்கள் பாடு திண்டாட்டந்தான். ஒருவற்கு உதவி செய்யும்போது, அவர்களுக்கு எது தேவை என்பதை கேட்டறிந்து செய்யவேண்டும். நான் விரும்பியதை எல்லாம் சொல்லிவிட்டு, அதுதான் அவர்களது தேவையென வாய் வம்பம் பேசக்கூடாது. இப்போவாவது அவர்களுக்கு என்ன தேவை என பாதிக்கப்பட்ட மக்களைகேட்டு செய்யுங்கள். அடுத்தவேளை தூங்க இடமில்லை, சாப்பிட ஏதுமில்லை, அவர்களை பாசத்துடன் அழைக்கிறோம் வாருங்கள் என்றால் எப்படி? ஏதாவது ஆயத்தங்கள் உண்டா? மலையகம் அவர்களது தாயகம். அங்கு அவர்கள் சுதந்திரமாக நிம்மதியாக வாழவேண்டிய சூழலை உருவாக்குவது அவர்களது பிரதிநிதிகளின் கடமை. தனது மக்களுக்கு செய்ய வேண்டிய கடமையை சரிவர செய்யாமல் அந்த மக்களாலேயே நிராகரிக்கப்பட்டவர், மலையக மக்களுக்கு ஏதோ செய்யபோகிறாராம். இதைச்சொன்னால் மடைமாற்று, காவடி என்று தூக்கிக்கொண்டு, நிதர்சனத்தை ஏற்க மறுத்து ஏதோ ஜாம்பவானாக கயிறு திரிப்பு.

மேலே கு சா அண்ணைக்கு கொடுத்த விளக்கத்தை போய் மீள வாசிக்கவும்😂.

நடைமுறையில் சரி வரும், நாளைக்கே செய்யலாம் என நான் எழுதவில்லை.

கொள்கை அளவில் இது நல்ல விடயம் என்பதை ஏற்றுகொள்ள வேண்டும் என்பது மட்டுமே நான் எழுதியது.

10 hours ago, வாத்தியார் said:

அவர்கள் வந்தபோது ஜெர்மனி சென்றால் பாத் ரூம் கழுவலாம்

பாரிஸ் சென்றால் தூசு தட்டலாம்

இத்தாலி சென்றால் சாப்பாட்டு மேசை துடைக்கலாம்

என்ற நினைப்பில் வரவில்லை

என்ன நினைப்பில் அல்லது மிதப்பில் வந்தாலும் - கிடைத்த வேலை ஒன்றை பழகி, அதில் திறமை காட்டி, மேலேபோய், மேளாளர் ஆகி, பெற்றோல் ஷெட்டையிம் வாங்கினார்களா இல்லையா?

இதையே ஏன் வடக்கில் மலையக மக்கள் செய்ய கூடாது. முடியாது?

ஏன் என்றார் அவர்கள் எம்மை போல் ஊக்கம், திறமை, உந்தல் அற்றவர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, island said:

அவர்களது தற்போதைய modern name „தமிழீழ தேச பக்தர்கள்“.

தயவு செய்து அப்டேட் ஆகவும்.

அதில் பாதிப்பேர் தற்போது அனுர படையணியின் சிறப்பு தளபதிகள்😂

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

என்ன நினைப்பில் அல்லது மிதப்பில் வந்தாலும் - கிடைத்த வேலை ஒன்றை பழகி, அதில் திறமை காட்டி, மேலேபோய், மேளாளர் ஆகி, பெற்றோல் ஷெட்டையிம் வாங்கினார்களா இல்லையா?

என்ன எண்ணைக் கிணறை விட்டு விட்டீர்கள்😂? பெற்றோல் நிலையம் வாங்கிய புலத் தமிழ் "பிசினஸ் மேக்னற்" கசாக்ஸ்தானில் எண்ணைக் கிணறையும் வாங்கினார் என்று எழுதினால் இன்னும் தூக்கலாக இருக்கும்!

ஆனால், இந்த வளர்ச்சி, சாதனையெல்லாம் யாழ்ப்பாணத் தண்ணீர் குடித்து வளர்ந்தவர்கள் தான் செய்யலாம்! வெளியே இருந்து வந்தால் வீட்டில் வேலைக்குத் தான் வைத்திருப்போம்😎!

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, goshan_che said:

கொள்கை அளவில் இது நல்ல விடயம் என்பதை ஏற்றுகொள்ள வேண்டும் என்பது மட்டுமே நான் எழுதியது.

அதற்கு முன், தனியார் காணிகளில் இருக்கும் இராணுவம் வெளியேறட்டும், ஆக்கிரமித்திருக்கும் விகாரைகள் அகற்றப்படட்டும், சொந்த ஊரிலேயே அகதிகளாக வாழும் மக்கள் தங்கள் சொந்தக்காணிகளில் குடியேறி சுதந்திரமாக நிம்மதியாக வாழட்டும், பின்னர் நடக்கலாம். "மூஞ்சசூறு தான் போக வழியில்லையாம் விளக்குமாத்தையும் தூக்கிக்கொண்டு ஓடிச்சாம்." தனக்குக்கண்டுதான் பிறற்குத்தானம். தனக்கே இல்லையாம் பிறருக்கு எப்படி? உண்மையை ஏற்றுக்கொள்ளாமல் மற்றவரை குற்றம் சாட்டி தாங்கள் ஏதோ பெரு வள்ளல்கள், சாதனையாளர்கள் போல் பாவனை.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, goshan_che said:

இதையே ஏன் வடக்கில் மலையக மக்கள் செய்ய கூடாது. முடியாது?

1826 காலப்பகுதியில் தலைமன்னார் பகுதியில் கொண்டு வந்து இறக்கிய நாள் தொட்டு பெருந்தோட்ட பயிர் செய்யக்கூடிய நிலத்தை நோக்கி பயணப்பட்டு, தாமாகவே பாதைகளையும் உருவாக்கிக் கொண்டு, பற்றை காடுகள், மலை சரிவுகள் கொடிய விஷம் கொண்ட பாம்புகள், அட்டைகள், மலேரியா, அம்மை நோய் இதையெல்லாம் தாண்டி சிலோனை தேயிலைக்கு முதலாம் தர நாடாக மாற்றிய சக தமிழனை வெறுமனே 3 - 4 மணித்தியால நகர்வில் வரும் பாரம்பரிய தமிழர் நிலத்தில் இந்த தமிழர்கள் வந்து எந்த தொழிலை, எப்படி செய்வார்கள்இ அவர்கள் வயிற்றுப பிழைப்பை எப்படி பார்ப்பார்கள் என்று நம்மவர்கள் அதீத கலக்கம் அடைவது மிகவும் கவலைக்குரிய நிலைப்பாடு.

அந்த தமிழ் தோட்டத் தொழிலாளர்கள் இன்னும் கூட பிரதேச சபைஇ கிராமசபை மற்றும் எந்த ஒரு பிரிவுக்குள்ளும் உள்வாங்குப்படவில்லை என்ற உண்மை இவர்களுக்கு தெரியுமா தெரியாது.

நவீன Artificial Intelligence உலகில் பெரிய தோரை, கங்காணி, கணக்குப்பிள்ளை, கிளாக்கரு இவர்களின் தயவில் கூழை கும்பீடு போட்டு வாழ்வது உசிதம் என்றும் நினைக்கிறார்கள் போல உள்ளது.

Edited by Sasi_varnam

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
38 minutes ago, satan said:

அதற்கு முன், தனியார் காணிகளில் இருக்கும் இராணுவம் வெளியேறட்டும், ஆக்கிரமித்திருக்கும் விகாரைகள் அகற்றப்படட்டும், சொந்த ஊரிலேயே அகதிகளாக வாழும் மக்கள் தங்கள் சொந்தக்காணிகளில் குடியேறி சுதந்திரமாக நிம்மதியாக வாழட்டும், பின்னர் நடக்கலாம். "மூஞ்சசூறு தான் போக வழியில்லையாம் விளக்குமாத்தையும் தூக்கிக்கொண்டு ஓடிச்சாம்." தனக்குக்கண்டுதான் பிறற்குத்தானம். தனக்கே இல்லையாம் பிறருக்கு எப்படி? உண்மையை ஏற்றுக்கொள்ளாமல் மற்றவரை குற்றம் சாட்டி தாங்கள் ஏதோ பெரு வள்ளல்கள், சாதனையாளர்கள் போல் பாவனை.

நல்லதொரு யதார்த்த கருத்து.👍

தமிழர்பகுதிகளில் சிங்கள இனவாத அரசுகளால் அடாத்தாக நடத்தப்படும் குடியேற்றங்களுக்கும்,விகாரை கட்டல்களுக்கும் கோமா நிலையில் அமைதி காத்தவர்கள் திடீரென மலையக மக்களுக்காக நீலிக்கண்ணீர் வடிப்பது ஏனென்று தெரியவில்லை?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, satan said:

அதற்கு முன், தனியார் காணிகளில் இருக்கும் இராணுவம் வெளியேறட்டும், ஆக்கிரமித்திருக்கும் விகாரைகள் அகற்றப்படட்டும், சொந்த ஊரிலேயே அகதிகளாக வாழும் மக்கள் தங்கள் சொந்தக்காணிகளில் குடியேறி சுதந்திரமாக நிம்மதியாக வாழட்டும், பின்னர் நடக்கலாம். "மூஞ்சசூறு தான் போக வழியில்லையாம் விளக்குமாத்தையும் தூக்கிக்கொண்டு ஓடிச்சாம்." தனக்குக்கண்டுதான் பிறற்குத்தானம். தனக்கே இல்லையாம் பிறருக்கு எப்படி? உண்மையை ஏற்றுக்கொள்ளாமல் மற்றவரை குற்றம் சாட்டி தாங்கள் ஏதோ பெரு வள்ளல்கள், சாதனையாளர்கள் போல் பாவனை.

மடைமாற்று - வாங்கி வீட்டீர்களா?

இப்போ புதிய டிசைனில் கிடைக்கிறது.

2 hours ago, Sasi_varnam said:

1826 காலப்பகுதியில் தலைமன்னார் பகுதியில் கொண்டு வந்து இறக்கிய நாள் தொட்டு பெருந்தோட்ட பயிர் செய்யக்கூடிய நிலத்தை நோக்கி பயணப்பட்டு, தாமாகவே பாதைகளையும் உருவாக்கிக் கொண்டு, பற்றை காடுகள், மலை சரிவுகள் கொடிய விஷம் கொண்ட பாம்புகள், அட்டைகள், மலேரியா, அம்மை நோய் இதையெல்லாம் தாண்டி சிலோனை தேயிலைக்கு முதலாம் தர நாடாக மாற்றிய சக தமிழனை வெறுமனே 3 - 4 மணித்தியால நகர்வில் வரும் பாரம்பரிய தமிழர் நிலத்தில் இந்த தமிழர்கள் வந்து எந்த தொழிலை, எப்படி செய்வார்கள்இ அவர்கள் வயிற்றுப பிழைப்பை எப்படி பார்ப்பார்கள் என்று நம்மவர்கள் அதீத கலக்கம் அடைவது மிகவும் கவலைக்குரிய நிலைப்பாடு.

அந்த தமிழ் தோட்டத் தொழிலாளர்கள் இன்னும் கூட பிரதேச சபைஇ கிராமசபை மற்றும் எந்த ஒரு பிரிவுக்குள்ளும் உள்வாங்குப்படவில்லை என்ற உண்மை இவர்களுக்கு தெரியுமா தெரியாது.

நவீன Artificial Intelligence உலகில் பெரிய தோரை, கங்காணி, கணக்குப்பிள்ளை, கிளாக்கரு இவர்களின் தயவில் கூழை கும்பீடு போட்டு வாழ்வது உசிதம் என்றும் நினைக்கிறார்கள் போல உள்ளது.

செப்பல் ஷாட்👏

2 hours ago, Sasi_varnam said:

அந்த தமிழ் தோட்டத் தொழிலாளர்கள் இன்னும் கூட பிரதேச சபைஇ கிராமசபை மற்றும் எந்த ஒரு பிரிவுக்குள்ளும் உள்வாங்குப்படவில்லை என்ற உண்மை இவர்களுக்கு தெரியுமா தெரியாது.

என்னது மலையக தமிழர் “தாயகத்தில்” இதுவா நிலமை?

# இந்திராகாந்தி செத்துட்டாவா?

இங்கே பலரின் எழுத்தை வைத்து உண்மையில் இவர்கள் இதுகாறும் சக தமிழனின் நிலை பற்றி என்ன அறிந்து வைத்துள்ளார்கள் என்பது விளங்குகிறது.

பலருக்கு மலையக நிலமையை விட, குருதிஸ், உக்ரேன், ரஸ்ய மக்களின் பிரச்சனை பற்றிய அறிவு கூட😂.

அந்தளவுக்கு இவர்கள் இந்த மக்களை, அவர்களின் பிரச்சனைகளை ஒரு பொருட்டாக கூட மதிப்பதில்லை என்பதே உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, goshan_che said:

இங்கே பலரின் எழுத்தை வைத்து உண்மையில் இவர்கள் இதுகாறும் சக தமிழனின் நிலை பற்றி என்ன அறிந்து வைத்துள்ளார்கள் என்பது விளங்குகிறது.

உங்களுக்கு தாயகத்தின் நிலை புரியவில்லை, அவர்கள் தமது சொந்தநிலம் இருந்தும் குடியிருக்க முடியாத நிலையில் போராட்டமே வாழ்வாக போய்க்கொண்டிருக்கிறது, மலையக மக்களையும் இழுத்து வந்து அவர்களது உரிமை அதிகாரத்தையும் கேள்விக்குள்ளாக்க நினைத்து சகட்டுமேனிக்கு கருத்தெழுதி வெறுப்பேற்றுகிறீர்கள்.

14 minutes ago, goshan_che said:

மடைமாற்று - வாங்கி வீட்டீர்களா?

உண்மையை ஜதார்த்தத்தை புரிந்துகொள்ளாமல் மேட்டுக்கு கருத்தெழுதும் உங்களுக்கு மடைமாற்றம், காவடி தான் தெரியும். சரி, எங்களால் முடியவில்லை, தெரியவில்லை. நீங்கள் செய்து காட்டுங்கள், நீங்கள்தான் துணித்தவராயிற்றே! அதன்பின் ஏற்றுக்கொள்கிறோம். திருப்பியும் புளிச்சுப்போன மடைமாற்று என்று வராதீர்கள், திருப்பிக்காட்டுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, satan said:

உங்களுக்கு தாயகத்தின் நிலை புரியவில்லை, அவர்கள் தமது சொந்தநிலம் இருந்தும் குடியிருக்க முடியாத நிலையில் போராட்டமே வாழ்வாக போய்க்கொண்டிருக்கிறது, மலையக மக்களையும் இழுத்து வந்து அவர்களது உரிமை அதிகாரத்தையும் கேள்விக்குள்ளாக்க நினைத்து சகட்டுமேனிக்கு கருத்தெழுதி வெறுப்பேற்றுகிறீர்கள்.

  1. அவர்களை ஏன் போராட சொல்லுவான். அவர்கள் வந்து நாம் கொடுக்கும் உதவிகளில் தம்பாட்டை பார்த்து கொள்வார்கள். நீங்கள் சொன்னது போல் அடிக்கடி கொலிடே போவதால் சொல்கிறேன். தாயகத்தில் அங்கே ஒன்றும் போராட்டங்கங்கள் கனன்று கொண்டு இல்லை. பலர் இராமன் ஆண்டால் என்ன இராவணம் ஆண்டால் என்ன நிலை. கணிசமானோர் உங்களை போல் அனுர காவடிகள். இந்த சூழ்நிலையில் மலையகத்தில் இருந்து வரும் மக்கள் அவர்கள் பாட்டை பார்த்தபடி வாழலாம். தண்ணீரூற்றில், புதுகுடியிருப்பில், சுன்னாகத்தில், சாவக்ச்சேரியில் இன்னும் பல இடங்களில் முஸ்லிம்கள் வந்து குடியேறி வாழ்வதை போல.

  2. நிச்சயம் இதுவும் மடை மச்தெர்ச். முன்பே குசா அண்ணை வெட்டியது. நீங்கள் புது மமபட்டியோடு வந்துள்ளீர்கள். அனால் கருத்து மடைமாற்றுத்தான்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

நீங்கள் சொன்னது போல் அடிக்கடி கொலிடே போவதால் சொல்கிறேன். தாயகத்தில் அங்கே ஒன்றும் போராட்டங்கங்கள் கனன்று கொண்டு இல்லை.

கொலிடே தேடி போகும் உங்களுக்கு வேண்டியதுதான் கண்ணுக்கு தெரியும். ஏன் அங்கே நிரந்தரமாக இருக்க முடியவில்லை உங்களால்? கொலிடே போகிறவர்கள் சாதாரண மக்களின் வாழ்க்கையை ஆராய்ந்து தமது கொலிடேயை பாழாக்க விரும்பமாட்டார்கள்.

1 hour ago, goshan_che said:

இந்த சூழ்நிலையில் மலையகத்தில் இருந்து வரும் மக்கள் அவர்கள் பாட்டை பார்த்தபடி வாழலாம்.

சரி, யாராவது வந்தால், வாழ வழியை காட்டுங்கள். எந்தத் தமிழனும் யாழ்ப்பாணம் வரமாட்டான் என்று நீங்களே சொல்லி விட்டு யாரை குடியேற்றப்போகிறீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
On 16/12/2025 at 00:12, Sasi_varnam said:

இன்று சாதிய மேலாண்மை குறித்து ஆங்காங்கே தனி மனிதர்கள், சமூகங்கள் மத்தியில எழக்கூடிய வக்கிர புக்தியை பொது புத்தியாக பேசத் துணிந்து உள்ளோம்.

ஓம் இன்று சாதி பெயர்கள் சொல்லி தமிழ் தேசியவாதிகள் என்போர் முகநூலில் வெளிப்படையாகவே பிடிக்காதவர்களை ஏசுகின்றனராம்

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, satan said:

கொலிடே தேடி போகும் உங்களுக்கு வேண்டியதுதான் கண்ணுக்கு தெரியும். ஏன் அங்கே நிரந்தரமாக இருக்க முடியவில்லை உங்களால்? கொலிடே போகிறவர்கள் சாதாரண மக்களின் வாழ்க்கையை ஆராய்ந்து தமது கொலிடேயை பாழாக்க விரும்பமாட்டார்கள்

ஏன் அங்கே இருக்க முடியவில்லை?

பிரதான காரணங்களில் ஒன்று, எனக் தேவையான வேதனத்தை, எனது துறையில் தரும் வேலை அங்கே இல்லை.

நீங்கள் நினைப்பது போல் கொலிடே போய் போத்தல் தண்ணீ குடிக்கும் “கனடா” - இல்லை நான்.

ஒவ்வொரு முறை நான் போய் வந்து, கண்டு, கேட்டு, உய்த்து சொல்லும் விடயங்கள் பல அடுத்து நிதர்சனமாவதை யாழ்களம் அறியும்.

உங்களை போல அனுரகாவடிகள் பல யாழில் உருவாகிவிட்டதை கண்டு கொண்டு, ஜேவிபிக்கு யாழில் ஆதரவு பெருகுகிறது என்பதை கடந்த தேர்தலுக்கு ஒரு வருடம் முன்பே யாழில் பதிவு செய்தேன்.

ஆகவே கனடாவில் இருந்து கற்பனையில் கிறுக்கும் உங்களை விட எனக்கு நாட்டின் நிலமை சற்று அதிகமாக புரியும் என்பது என் தாழ்மையான கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, satan said:

சரி, யாராவது வந்தால், வாழ வழியை காட்டுங்கள். எந்தத் தமிழனும் யாழ்ப்பாணம் வரமாட்டான் என்று நீங்களே சொல்லி விட்டு யாரை குடியேற்றப்போகிறீர்கள்?

என்ன இது ஏலும் எண்டா எண்ட ஏரியாவுக்கு வா என்ற வடிவேல் ஜோக் அடிக்கிறீர்கள்.

எவனும் வரமாட்டான் - ஏன் என்றால் உங்கள் “சுரண்டல் புத்தி” பற்றியும், தாகத்துக்கு தண்ணீர் கேட்கும் வெளி மாவட்ட ஆட்களுக்கு ஜாம் போத்தலில் தண்ணி கொடுக்கும் உங்கள் தீண்டாமை பற்றியும் அவர்களுக்கு பாட்டன், முப்பாட்டன் காலத்தில் இருந்து வடிவாக தெரியும்.

இந்த மன , செயல் அழுக்குகளை மாற்றி கொண்டு, அவர்களை எம் சொந்தங்கள் என உணர்ந்து அழையுங்கள் என்பதே நான் சொல்வது.

காந்தியம் டேவிட் ஐயா, இன்னும் சிலர் போல், குப்பையில் பூத்த குண்டுமணிகள் இதை முன்பே செய்துள்ளனர். நானோ, மனோவோ, சுமனோ இதை புதிதாக கண்டுபிடிக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

சுமன் லவ்வர்ஸுக்கு ஒரு சிறுகுறிப்பு.

சுமன் வானத்தில் இருந்து வந்தவர் அல்ல. உங்களவர்தான்.

உங்களுக்குரிய அத்தனை “சிறப்பு குணாதிசயங்களையும்” ஒருங்கே சேர்த்து அமைக்கப்பட்ட மாதிரிதான் சுமன்.

சுமனை நீங்கள் இனம் கண்டு வெறுப்பது போலத்தான் இலங்கையில் உள்ள ஏனையவர்கள் உங்களை வெறுப்பதும்.

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, goshan_che said:

சுமன் வானத்தில் இருந்து வந்தவர் அல்ல. உங்களவர்தான்.

இருந்தாலும் வேறுபாடு உள்ளது சுமந்திரன் இலங்கையில் இருப்பவர் மலையக தமிழர்களை யாழ்பாணம் வந்து குடியேறுங்கோ என்று சொன்னார். இவர்கள் வெளிநாட்டில் இருப்பவர்கள் யாழ்பாணத்து காணிகளின் புனிதம் கெட்டுவிடும் என்று அதை விரும்பவில்லை .

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, விளங்க நினைப்பவன் said:

இருந்தாலும் வேறுபாடு உள்ளது சுமந்திரன் இலங்கையில் இருப்பவர் மலையக தமிழர்களை யாழ்பாணம் வந்து குடியேறுங்கோ என்று சொன்னார். இவர்கள் வெளிநாட்டில் இருப்பவர்கள் யாழ்பாணத்து காணிகளின் புனிதம் கெட்டுவிடும் என்று அதை விரும்பவில்லை .

ஒரு காலத்தில் சிங்களவன் ஒட்டுமொத்தமாக ஆளில்லா காணிகள் எல்லாம் “புனித பூமி” என அறிவிப்பான்…அப்ப குய்யோ, முறையோ என கத்துவார்கள்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, satan said:

சரி, யாராவது வந்தால், வாழ வழியை காட்டுங்கள். எந்தத் தமிழனும் யாழ்ப்பாணம் வரமாட்டான் என்று நீங்களே சொல்லி விட்டு யாரை குடியேற்றப்போகிறீர்கள்?

குடும்பத்துக்குள்ளேயே ஏற்றத்தாழ்வு, தராதரம் பார்ப்பவர்கள் நிறைந்த மாவட்டம் யாழ்ப்பாண மாவட்டம். இதற்குள்தான் நானும் பிறந்து வளர்ந்தேன். குறியேறிகளுக்கு தேனீர் கொடுக்கவும் சிரட்டையை நாடுதே என்மனம்.🧐

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

ஒரு காலத்தில் சிங்களவன் ஒட்டுமொத்தமாக ஆளில்லா காணிகள் எல்லாம் “புனித பூமி” என அறிவிப்பான்…அப்ப குய்யோ, முறையோ என கத்துவார்கள்.

இயற்கை அனர்த்தத்தை காரணமாக்கி ஒரு இடத்தில் இரு நூற்றாண்டுகளாக வாழ்ந்த மக்களை வெளியேற்றி

பின்னர் அங்கே ஏற்படும் வெற்றிடத்தை நிரப்ப இங்கேயிருந்து அங்கே மக்களைக் குடியேற்றி எல்லா மக்களின் மனதுகளையும் குழப்பி சலுகைகளைக் கொடுத்து மனதுகளை மாற்றி

இங்கே பார்..... அங்கே பார்..... தெரிகின்றதா ஒளி வட்டம்..... என்று ஆர்ப்பரித்து.........

சாமிப்பிள்ளையை சமி பிலே.... ஆக்கி

மயில்வாகனத்தை மல்லி வானே.... யாக்கி

இது புத்தன் இயேசு பிறந்த பூமி என்று மகாவம்சத்தையே மாற்றி.....

இப்படியே மாற்றத்தையே வேண்டும் வேண்டும் என..... மக்களை ஏய்ப்பதே இந்த அரசியல்வாதிகளின் தொழில் .

அதற்கு வக்காலத்து வேறை....... 😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாத்தியார் said:

இயற்கை அனர்த்தத்தை காரணமாக்கி ஒரு இடத்தில் இரு நூற்றாண்டுகளாக வாழ்ந்த மக்களை வெளியேற்றி

இன்றைய இயற்கை அனர்த்தம் இதை பேறு பொருளாக்கி உள்ளது.

ஆனால் இந்த நடவடிக்கைகான தேவை கல்லோயா குடியேற்றத்திட்டம், சிறிமா-சாஸ்திரி உடன்படிக்கை, பின்னர் வந்த தொடர் கலவரங்களின் போதே ஏற்பட்டு விட்டது.

1983 இல் சீனியர் தொண்டா ஒவ்வொரு தோட்டமாக போய் வடக்கு போய்விடாதீர்கள் என மக்களை தடுத்தார். அப்போதே மஹோ, கெக்கிராவ என தோட்டங்களை விட்டு வெளியேறி சிங்கள பகுதியில் கூலி வேலை செய்த பலர் வன்னிக்கு வந்தனர்.

ஆகவே இது 80 ஆண்டுகளாக நடக்காமல் இருக்கின்ற, நடக்க வேண்டிய விடயம்.

1 hour ago, வாத்தியார் said:

பின்னர் அங்கே ஏற்படும் வெற்றிடத்தை நிரப்ப இங்கேயிருந்து அங்கே மக்களைக் குடியேற்றி எல்லா மக்களின் மனதுகளையும் குழப்பி சலுகைகளைக் கொடுத்து மனதுகளை மாற்றி

அங்கே வெற்றிடம் ஏற்பட்டால் அதை நாம் ஏன் நிரவ வேண்டும்? அது சிங்களவரின் பாரம்பரிய தாயகம்.

அங்கே இந்த மக்கள் அடிமைகளாக அதாவது வெறும் வாக்கு, தொழில் செய்யும் இயந்திரங்களாக இருக்காமல் எம்மோடு வந்து விட்டால். அங்கே வேறு தமிழரை கொண்டு நிரவ வேண்டிய தேவை இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாத்தியார் said:

இங்கே பார்..... அங்கே பார்..... தெரிகின்றதா ஒளி வட்டம்..... என்று ஆர்ப்பரித்து.........

சாமிப்பிள்ளையை சமி பிலே.... ஆக்கி

மயில்வாகனத்தை மல்லி வானே.... யாக்கி

இது புத்தன் இயேசு பிறந்த பூமி என்று மகாவம்சத்தையே மாற்றி.....

இப்படியே மாற்றத்தையே வேண்டும் வேண்டும் என..... மக்களை ஏய்ப்பதே இந்த அரசியல்வாதிகளின் தொழில் .

வாத்தியார் என பெயரை வைத்து கொண்டு இப்படி தரவுகளை தலைகீழாக வியாக்கியானம் செய்வது பெயருக்கு அழகல்ல.

ஒரு காலத்தில் - புத்தளம் முதல் - நீர்கொழும்பு வரை தமிழர் நிலம். இப்போதும் ரயில் நிலைய பெயர்களை பார்த்தால் விளங்கும்.

சிங்கள ஏடுகள் கூட தெமல பற்றுவ, தமிழர் பற்று என சொன்ன இடம்.

இன்று?

பெர்ணாந்து பிள்ளை, பெர்ணாண்டோ புள்ளேயாகி நிற்கும் அவலம்.

இரெண்டு தலைமுறைக்குள் இனமும், இடமும் மாற்றப்பட்டுள்ளது.

நாளைக்கு இதே நிலைதான் காரதீப வுக்கும் 😂.

சுதாகரிச்சு கொண்டு இப்போதே தமிழர் எண்ணிகையை சிந்தாமல், சிதறாமல் எமது தாயகத்தில் சேர்க்க வேண்டும்.

இல்லை எண்டால் “ஈழத்து புத்தன்” கோவில் அமைவதை தடுக்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

பெர்ணாந்து பிள்ளை, பெர்ணாண்டோ புள்ளேயாகி நிற்கும் அவலம்.

இரெண்டு தலைமுறைக்குள் இனமும், இடமும் மாற்றப்பட்டுள்ளது.

இந்த பெர்ணாந்து புள்ளேயை “தமிழ் வந்தேறி” என்று சிங்களவர்கள் திட்டுவதில்லையா? 13 ம் நூற்றாண்டு அதாவது 8 நூற்றாண்டுக்கு முன்னர் வந்த வரலாற்றை வைத்து அப்படி முத்திரை குத்தி சிலரை வந்தேறி என்று திட்டும் போது 100 - 200 வருடத்திக்கு முன்னர் சிங்களவராக மாறியவர்களை அப்படி திட்டுவதில் தவறில்லையே!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.