Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டன் தடுப்பு முகாமில் வைத்து கருணா நையப்புடைக்கப்பட்டார்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சீரியசான லிடயம் சம்மந்தப்பட்டவர்கள் கவனத்தில் எடுங்கள்

லண்டனில் பிடிபட்ட கருணாவின்மீது ஏதாவது குற்ரவிசாரணை வந்தால் அதை புலிகள் மீது போட மறைமுகமாக சதி நடக்கிறதா?

இந்த செய்தியை பார்த்த போது இப்படியானதொரு பிரச்சனையை நாங்களே உருவாக்குகின்றோமா என நானும் நினைத்தேன். 1990 க்கு பிறகு தானே கருணாவும் சில சுற்று பேச்சுகளில் பங்குபற்றி குழிபறித்தார். :icon_mrgreen:

Edited by Sabesh

  • Replies 50
  • Views 16.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கருணாவை என்ன சவத்துக்கு இனி.மட்டக்களப்பு ஆக்கிரமிப்புக்கு கருணாவின் தேவை ஏற்பட்டது.இப்போ அவரின் தேவையில்லை.

சட்ட ஆபத்தில் இருந்து தப்ப கருணா அரசியல் தஞ்சம் கோருயுள்ளார் - ஹிந்துஸ்தான் ரைம்ஸ்.

ஜ செவ்வாய்கிழமைஇ 6 நவம்பர் 2007 ஸ ஜ ஜோசெப் ஸ

கருணா ஒட்டுக் குழுவின் தலைவரான விநாயகமூர்த்தி முரளிதரன் பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம் கோரியிருப்பதாக, இந்தியாவின் பிரபல ஆங்கிலப் பத்திரிகையான ஹிந்துஸ்தான் ரைம்ஸ் தெரிவித்துள்ளது. போலியான கடவுச்சீட்டை வைத்திருந்த குற்றச்சாட்டில் ஆயுததாரியான முரளிதரன் கடந்த வெள்ளிக்கிழமை பிரித்தானிய காவல்துறை, மற்றும் குடிவரவு அதிகாரிகளின் கூட்டு நடவடிக்கையில் கைது செய்யப்பட்டிருந்தார். சிறீலங்காவில் தனக்கு பாதுகாப்பு இல்லை என்ற வாதத்தை முன்வைத்து முரளிதரன் அரசியல் தஞ்சம் கோருவதாக கொழும்பிலுள்ள அரச உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். சிறுவர்களை வலுக்கட்டாயமாகப் படையில் இணைத்தமை, மக்களைப் படுகொலை செய்தமை, மனித உரிமை மீறல்கள் போன்ற பல்வேறு குற்றங்களைப் புரிந்துள்ள கருணா என்ற முரளிதரனுக்கு எதிராக போர்க் குற்றத்தின் கீழ் பிரித்தானிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென, நியூயோர்க் மனித உரிமைகள் கண்காணிப்பகம் அழைப்பு விடுத்திருந்தது. முரளிதரனுக்கு பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம் கொடுத்தாலோ, அல்லது சிறீலங்காவிற்கு திருப்பி அனுப்பினாலோ, அவர் தமிழ்த்தேசிய விரோத நடவடிக்கையில் ஈடுபட வாய்ப்பு இருப்பதாகவும், எனவே போர்க் குற்றம் புரிந்த குற்றச்சாட்டின்கீழ் நெதர்லாந்து ஹேக்கிலுள்ள அனைத்துலக நீதிமன்றில் கருணா என்ற முரளிதரன் நிறுத்தப்பட்டு, தண்டனை பெற்றுக்கொடுக்க பிரித்தானிய அரசு முன்வர வேண்டுமென, பிரித்தானியாவிலுள்ள தமிழ் அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன

நிதர்சனம்

சிறிலங்கா அரசாங்கமே போலிக் கடவுச்சீட்டின் உதவியுடன் துணை இராணுவக்குவின் தலைவரான கருணாவை பிரித்தானியாவுக்கு அனுப்பியதற்கான சான்றுகள் கிடைத்துள்ளதாக கொழும்பிலிருந்து வெளிவரும் "த மோர்னிங் லீடர்" வார ஏடு அம்பலப்படுத்தியுள்ளது.

தொடர்ந்து வாசிக்க

இறமை இறமை என பீத்திக்கொள்ளும் ஒரு நாடு ஆள் மாறாட்டம் செய்து மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட ஒருவரை வேறொரு நாட்டுக்குள் அனுப்பியுள்ளது

இதற்கு சட்டநடவடிக்கை எடுக்க ஏதாவது வழி வகை உண்டாவென ஏன் நம்மவர்கள் சிந்திக்கக்கூடாது

இவ்வாறு மனித சமுதாயத்திற்கு எதிராக பாரிய குற்றங்களை புரிந்த, சர்வதேச ரீதியில் கண்டிக்கப்பட்ட ஒரு குற்றவாளிக்கு ஒத்துளைப்பு வழங்கிய அரசிடமே அவரை ஒப்படைப்பது மக்களின் பாதுகாப்புக்கு பங்கமானது. எனவே இவரை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தை பெற்றுத்தர நீதியை வலியுறுத்தும் நாடு என்ற வகையில் பிரித்தானியா முன்வரவேண்டும்.

கருணா கைது செய்யப்பட்டதன் பின்னனி என்ன? , ஈ.என்.டி.எல்.எவ் அமைப்பினர் சமூகத்தின் விரோதிகள் என்று மிரட்டுகிறார் ஜெயதேவன்.

ஜ வியாழக்கிழமைஇ 8 நவம்பர் 2007 ஸ ஜ நசார் ஸ

ஈ.என்.டி.எல்.எவ் அமைப்பினர் மக்கள் விரோதிகள் என்றும் லண்டனில் இருந்து நடாத்தபடும் வானொலி தொடர்பாகவும் குறித்த வானொலி உரிமையாளன் தொடர்பாகவும் ஈழபதிஸ்வரன் ஜெயதேவன் காரசாரமாக திட்டித்தீர்துள்ளார்.

மேலும் வாசிக்க

கருணா விரைவில் தனது படுதோல்வியைச் (வாட்டர்லூ) சந்திப்பார்!

ஜ வியாழக்கிழமைஇ 8 நவம்பர் 2007 ஸ ஜ ஜோசெப் ஸ

போர்க் குற்றங்களுக்காக. கர்னல் கருணா அம்மான் என அழைக்கப்டும் விநாயகமூர்த்தி முரளிதரனை விசாரணைக்கு உட்படுத்தும் ஒரு முயற்சியாக முன்னணியில் உள்ள அனைத்துலக மனித உரிமைகள் அமைப்புகள், உயிர்நாடியான சாட்சியங்களைத் திரட்டிக்கொண்டு இருக்கின்றன. அம்னஸ்டி இன்டர்நேசனல் மற்றும் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு உள்ளிட்ட இந்தக் குழுக்கள்- விடுதலைப் கருணா மீது வழக்குத் தொடுக்கக் கூடிய சாட்சியங்களை இணைந்து திரட்டும் நடவடிக்கையிலேயே ஈடுபட்டு வருகின்றன. ரி.எம்.வி.பி இயக்கத்துக்குள்ளேயே வெடித்த உள்கட்சி வன்முறைப் புரட்சி மூலம், கருணா தூக்கி எறியப்பட்டுவிட்டார். அதனைத் தொடர்ந்தே இலண்டன் மாநகருக்கு அவர் தப்பி ஓடினார். இலங்கை நாட்டின் கிழக்கு மாகாணத்தில் குழந்தைகளைக் கூட கடத்தல்கள் செய்து படுகொலை செய்தல் உள்ளிட்ட போர்க்குற்றங்களை கருணாவும். அவருடைய குழுவினரும் புரிந்து வருவதாகத் தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்டு வருகின்றனர். இலங்கையின் கிழக்கு மாகாணம் முழுவதும் சிங்கள ஆட்சியின் பாதுகாப்புப் படையினரால் விடுவிக்கப்பட்ட பிறகு, அங்கே மிக மோசமான நிலைமை திரும்பிவிட்டது. கிழக்கு மாகாணத்தில் தங்களுக்கு எதிரான அரசியல் எதிரிகள் மற்றும் பொதுமக்கள் மீது கருணா குழுவினர் மேற்கொண்டு வரும் பயமுறுத்தல்கள். மிரட்டல் தந்திரங்களைப்பற்றி போர்நிறுத்தக் கண்காணிப்பாளர்கள் தங்களுடைய வாராந்திர அறிக்கைகளில் தொடர்ந்து வெளிப்படுத்தியே வந்தனர். ஆனால், அந்தக் குழுவைப் பற்றி வருகின்ற புகார்களையோ, இலங்கை அரசின் கண்காணிப்பு இயக்கம் கண்களைத் திறந்து பார்க்கவே இல்லை. ஏனெனில், கருணா குழுவினருக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே ஒரு தொடர்பு இருக்கிறது என்று கருதப்படுவதுதான். கருணா குழுவின் போர்ப் படையணியில் குழந்தை வீரர்கள் சேர்க்கப்படுவதைத் தடுத்து நிறுத்தும் பொருட்டு, அதிகார பூர்வமான விசாரணையைத் தொடங்குவதற்கு உரிய சாத்தியக் கூறுகளை ஆராய்கின்ற நடவடிக்கையில், அனைத்துலகப் பொது மன்னிப்புக் கழகம் (அம்னஸ்டி இன்டர்நேசனல்), மனித உரிமைகள் கண்காணிப்பகம்; போன்றவை ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகத்தின் எந்தப் பகுதியில், போர்க் குற்றங்களும் சித்திரைவதைகளும் நடப்பதாகச் சந்தேகங்கள் எழுந்தாலும், அவற்றைப் பற்றிய குற்றச்சாட்டுகளை, யுனைடெட் கிங்டம் (ரு.மு) என்னும் பிரித்தானியா நாட்டில் வழக்காகத் தொடுக்கலாம் என்று கார்டியன் என்னும் ஆங்கில நாளேடு கூறியுள்ளது. அமெரிக்கா நாட்டின் நியுயார்க் நகரில் உள்ள, மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் சட்டம் மற்றும் கொள்கை இயக்குநரான ஜேம்ஸ் ரோஸ் இவ்வாறு

கூறுகிறார்: பிரித்தானியா (யு.கே) அரசிடம் எங்கள் கவலைகளைத் தெரிவித்துள்ளோம். மனித உரிமைகளுக்கு எதிரான தகாத குற்றங்கள் மற்றும் சித்திரவதைகள் போன்ற போர்க் குற்றங்களை இழைத்தமைக்காக, அனைத்துலகச் சட்ட வரம்புக்கு உட்பட்ட முறையில் கருணா மீது வழக்குத் தொடுப்பதற்கு உரிய அடிப்படை ஆதாரங்களைத் கண்டறிய வேண்டும் என்று பிரித்தானியா அரசிடம் தெரிவித்து இருக்கிறோம். இலண்டனில் உள்ள, சிறுவர் படை வீரர்கள் தடுப்பு இயக்கத்தின், ஆசியாக் கண்ட நிகழ்ச்சி மேலாளரான திரு. லூசியா விதர்ஸ் இவ்வாறு கூறியுள்ளார்: கருணாவை கைது செய்வது, மிக நேர்த்தியான வழக்காக இருக்கும். 2007 ஆம் ஆண்டு செப்ரம்பர் மாதம் வரை 395 சிறுவர்களுக்கு மேலான சிறுவர்களை அவருடைய குழுவினர் படையணியில் சேர்த்துள்ளனர். 15 வயதுக்குக் கீழே உள்ள சிறுவர்களை எல்லாம் படையணியில் கருணா சேர்க்கிறார். அந்த அணியில் இருக்கும் பொழுது, நான்கு சிறுவர்கள் கொல்லப்பட்டதும் எங்களுக்குத் தெரியும் என்றும் கூறியுள்ளார்.

நிதர்சனம்

  • கருத்துக்கள உறவுகள்

கருணா பிரிட்டனில் அரசியல் தஞ்சம் கோரும் பட்சத்தில் அவரது கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படுமா? பிரிட்டிஷ் உள்துறை அமைச்சகம் பதில்.

ஜ வெள்ளிக்கிழமைஇ 9 நவம்பர் 2007 ஸ ஜ ஜெயராசா ஸ

லண்டனில் கைதான கருணா பிரிட்டனில் அரசியல் தஞ்சம் கோரியிருக்கிறார் என்று ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. கருணாவை பிரிட்டிஷ் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை குடிவரவு குற்றம் ஒன்றிற்காக தடுத்து வைத்துள்ளனர். இவர் மீது போர்க்குற்றம் புரிந்ததான குற்றச்சாட்டுகள் பதியப்பட்டு வழக்கு தொடரப்படவேண்டும் என்று சர்வதேச மனித உரிமை அமைப்புகள் சில பிரிட்டிஷ் அரசைக் கோரிவருகின்றன. தஞ்சம் கோரும் ஒரு நபர் போர்க்குற்றங்கள் புரிந்தவராகக் காணப்பட்டால் அவருக்கு அரசியல் தஞ்சம் தரமுடியுமா? என்று பிரிட்டிஷ் உள்துறை அமைச்சக அதிகாரியிடம் தொடர்பு கொண்டுகேட்டது, அந்த அதிகாரி ஒரு மின்னஞ்சல் மூலமாக தெரிவித்த கருத்தில், 1951ம் ஆண்டின் அகதிகள் ஒப்பந்தத்தின் படி, ஒரு தனி நபர் பாரிய ஒரு குற்றத்தை அல்லது மற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டார் என்று கருத இடமளிக்ககூடிய பாரிய காரணங்கள் இருக்கும் பட்சத்தில், அவருக்கு தஞ்சம் கிடைக்காமல்போக வழியிருக்கிறது என்று கூறினார். தஞ்சம் கோரும் நபர்கள், அவர்களது நாட்டில் துன்புறுத்தப்படக்கூடிய சந்தர்ப்பம் இருப்பதாக நல்ல முகாந்திரங்களுடன் அஞ்சினாலும், அவர்கள் குற்றங்கள் புரிந்திருப்பதாக முகாந்திரம் இருக்கும் பட்சத்தில், அவர்களை அவர்களது சொந்த நாட்டுக்கே திருப்பி அனுப்ப இந்த அகதிகள் ஒப்பந்தம் அனுமதிக்கிறது என்றும் அவர் மேலும் கூறினார். ஆனால் தனிப்பட்ட வழக்குகளைப்பற்றி தாங்கள் கருத்து தெரிவிப்பதில்லை என்றாலும், போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக ஆதாரம் கிடைத்தால் அது குறித்து விசாரிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். பிரிட்டிஷ் உள்துறை அமைச்சக அதிகாரிகள் கருணா விஷயத்தில் இவ்வாறான் கருத்தை வெளியிட்டுள்ள நிலையில், இலங்கையிலிருந்து வெளியாகும் தினசரி, கருணா பிரிட்டனுக்கு வந்ததற்கு, ஒரு போலி பாஸ்போர்ட் கொடுத்து இலங்கை அரசு உதவியதாக குற்றம் சாட்டியிருக்கிறது. பிரிட்டனுக்கு கருணா வருவதற்கான விசாவைப் பெறுவதற்கான சிபாரிசினை இலங்கை அதிகாரிகளே செய்திருந்தார்கள் என்று கூறப்படுவதை இலங்கை வெளியுறவு அமைச்சின் செயலரான பாலித கோஹன, அவற்றை இலங்கை அரசு மறுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

nitharsanam.com

கருணாவின் போலிக்கடவுச்சீட்டிற்கு பிரத்தானியா வீசா எப்படி வளங்கபட்டது,?, போலி கடவுச்சீட்டை வளங்கியது யார் ?, பிரித்தானிய உள்துறை அமைச்சருடன் பிரித்தானிய வெளியுறவு அவிவிருத்த அமைச்சர் கெரத் தோமஸ் மோதல். - பதில் தரமறுத்தால் பதவி விலுகுமாறு பிரித்தானிய பாராளுமன்றில் கோரிக்கை, பிரித்தானிய ஆழும் கட்சிக்குள் உருவாகியுள்ள மோதல்.

ஜ வெள்ளிக்கிழமைஇ 9 நவம்பர் 2007 ஸ ஜ ஜெயராசா ஸ

கருணாவின் போலிக்கடவுச்சீட்டிற்கு பிரத்தானியா வீசா எப்படி வளங்கபட்டது,?, போலி கடவுச்சீட்டை வளங்கியது யார் ?, பிரித்தானிய உள்துறை அமைச்சருடன் பிரித்தானிய வெளியுறவு அவிவிருத்த அமைச்சர் கெரத் தோமஸ் மோதலில் ஈடுபட்டுள்ளார். பதில் தரமறுத்தால் பதவி விலுகுமாறு பாராளுமன்றில் கோரிக்கை விடக்கபட்டுள்ளது. அண்மையில் பிரித்தானிய உள்துறை அமைச்சரை சந்தித்த கெரத் தோமஸ் கரணாவின் வரகை தொடர்பாக தமிழ் கவன்சிலர் தயா இடைக்காடருடன் இனைந்து எச்சரித்திருந்தார். இதனை தொடர்ந்து இண்று பிரித்தானிய பாராளுமன்றத்திற்கு கருணாவின் போலி கடவுச்சீட்டு விவகாரம் கொண்டு செல்லபட்டுள்ளது. இது தொடர்பாக கொழும்பில் உள்ள பிரித்தானிய தூதுவரம் மற்றும் இலங்கை அரசும் பிரித்தானியாவின் சார்வதேச விசாரனைக் குழுவால் விசாரனைக்கு உட்படுத்தபடலாம் என்று பிரித்தானிய அமைச்சரக வட்டாரங்கள் தெரிவித்தன.

நிதர்சனம்

----------------------------------------------------------------------------------------------------------------------------------------

நம்மவர்கள் கவுன்சலர் இடைக்காடர் மூலம் இதனை ஊக்கிவிக்கவேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

கருணாவின் போலிக்கடவுச்சீட்டிற்கு பிரித்தானியா வீசா எப்படி வழங்கப்பட்டது,?, போலி கடவுச்சீட்டைவழங்கியது யார் ?, பிரித்தானிய உள்துறை அமைச்சருடன் பிரித்தானிய வெளியுறவு அபிவிருத்தி அமைச்சர் கெரத் தோமஸ் மோதல். - பதில் தரமறுத்தால் பதவி விலகுமாறு பிரித்தானிய பாராளுமன்றில் கோரிக்கை, பிரித்தானிய ஆழும் கட்சிக்குள் உருவாகியுள்ள மோதல்.

ஜ வெள்ளிக்கிழமைஇ 9 நவம்பர் 2007 ஸ ஜ ஜெயராசா ஸ

கருணாவின் போலிக்கடவுச்சீட்டிற்கு பிரத்தானியா வீசா எப்படி வழங்கபட்டது,?, போலி கடவுச்சீட்டை வழங்கியது யார் ?, பிரித்தானிய உள்துறை அமைச்சருடன் பிரித்தானிய வெளியுறவு அpபிவிருத்தி அமைச்சர் கெரத் தோமஸ் மோதலில் ஈடுபட்டுள்ளார். பதில் தரமறுத்தால் பதவி விலகுமாறு பாராளுமன்றில் கோரிக்கை விடுக்கபட்டுள்ளது. அண்மையில் பிரித்தானிய உள்துறை அமைச்சரை சந்தித்த கெரத் தோமஸ் கருணாவின் வருகை தொடர்பாக தமிழ் கவுன்சிலர் தயா இடைக்காடருடன் இனைந்து எச்சரித்திருந்தார். இதனை தொடர்ந்து இண்று பிரித்தானிய பாராளுமன்றத்திற்கு கருணாவின் போலி கடவுச்சீட்டு விவகாரம் கொண்டு செல்லபட்டுள்ளது. இது தொடர்பாக கொழும்பில் உள்ள பிரித்தானிய தூதுவராலயம் மற்றும் இலங்கை அரசும் பிரித்தானியாவின் சர்வதேச விசாரனைக் குழுவால் விசாரனைக்கு உட்படுத்தபடலாம் என்று பிரித்தானிய அமைச்சரக வட்டாரங்கள் தெரிவித்தன.

nitharsanam.com

கருணா இலங்கையிலிருந்தவரை இலங்கைக்குப் பிரச்சனை. பிரித்தானியா வந்தபின்பு இங்கு பிரச்சனை. கடடுப்பாட்டுக்குள் இருந்திருந்தால் இந்தப் பிரச்சனைகள் ஏற்பட்டிருக்குமா? பிள்ளையையும் கிள்ளினார்கள் தொட்டிலையும் ஆட்டினார்கள், இன்று தங்களையும் கிள்ளிக் கொண்டார்கள்.

லண்டன் தடுப்பு முகாமில் வைத்து கருணா நையப்புடைக்கப்பட்டார்? உடலில் கண்டல், கீறல் காயங்களாம்!

லண்டனில் தடுப்பு முகாம் ஒன்றில் தடுத்துவைக்கப்பட்டிருந்த கருணா அந்தத் தடுப்புக் காவலில் இருந்த வேறு இலங்கைத் தமிழர்களின் குழு ஒன்றினால் கடுமையாகத் தாக்கப்பட்டிருக்கின்றார்.

இதனால் உடலில் கண்டல் மற்றும் கீறல் காயங்களுடன் வேறு பாதுகாப்பான தடுப்புக்காவல் பிரிவுக்கு அவர் மாற்றப் பட்டிருக்கின்றார்.

இவ்வாறு கொழும்பு சிங்கள நாளிதழ் ஒன்று நேற்று செய்தி வெளியிட்டிருக்கின் றது.

சிங்களப்பெயர் ஒன்றுடனேயே கருணா லண்டனில் கைதானார். பின்னர் லண்ட னில் தஞ்சம் கோரியோரைத் தடுத்து வைத் திருக்கும் கேம்பிரிட்ஜ் தடுப்பு முகாமில் அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

அச்சமயமே அங்கு தடுத்து வைக்கப் பட்டிருந்த பிற இலங்கைத் தமிழர்களின் குழு ஒன்றினால் அவர் நையப்புடைக்கப் பட்டிருக்கின்றார் என லண்டன் நகர வட் டாரங்கள் கூறுகின்றன.

இதனையடுத்து முகாமின் வதிவிட டாக்டருக்குப் புறம்பாக வெளியிலிருந்து ஒரு டாக்டர் அழைக்கப்பட்டு கருணா வுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பின்னரே வேறு பாதுகாப்பான தடுப்புக் காவலுக்கு அவர் மாற்றப்பட்டார்.

இப்படி அந்தப் பத்திரிகைச் செய்தி தெரிவித்தது. (சி)

--Uthayan.com-

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடப்பாவமே எங்கள் கிழக்கின் விடிவெள்ளிக்கா இந்த நிலமை!

எங்கள் அம்மானின் விசுவாசிகள் புலிப்பாசறை எங்கும் நிறைந்து இருக்கின்றார்கள் என நினைத்த பிழைப்புக்குத்தான் ஒட்டுமொத்த விசுவாசமான பிள்ளையான் பாசத்தை பொழிந்து தள்ளிவிட்டான். அம்மானைவைத்து பணத்தை சுருட்டிய கூட்டம் எல்லாம் கையை விரித்து விட்டார்களாமே!

பழவினைகளின் கைமேல் பலன் என்பது இதுதானோ?

Edited by தேவன்

  • கருத்துக்கள உறவுகள்

இது பற்றிய ஒரு சிறு பழய நிகழ்வு,

கருணா என்ற துரோகி தலைவரை விட்டு பிரிந்து சென்ற 4 அல்லது 5 நாட்கள் இருக்கும்........

சிட்னியில் உள்ள ஒரு தமிழ்கடைக்கு போயிருந்தேன். அங்கு ஒரு தமிழர்( மட்டக்களப்பைச் சேர்ந்தவர்) அங்கிருந்த வேறு சிலருடன் கடுமயான வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்."இனி எங்களை நீங்கள் ஆள முடியது","எங்களுக்கு என்று ஒருவன் வந்து விட்டான்","யாழ்ப்பாணத்தான் கிழக்கில் போட்ட ஆட்டம் எல்லாம் அடங்கப் போகுது","எங்களின் கிழக்கு மாகாணத்தை நாங்களே ஆளுவோம்" என்றெல்லாம் கடுமயான வார்த்தைகள் பாவிக்கப்பட்டன. சுற்றியிருந்தவர்கள் எல்லாம் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துக்கொண்டிருக்க கடை உரிமையாளர் அந்த நபரை ஒருவாறு சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார்.

இது நடந்து சுமார் இரு வாரங்களில் புலிகளின் விசேட படையணிகள் கருணாவையும் அதன் கும்பலையும் கிழக்கிலிருந்து துரத்தி அடித்தனர். அதன் பின்னும், இந்த நபர் கருணா பற்றி அதீத நம்பிக்கை வைத்திருந்ததுடன் தனது சொந்தக் கடைக்கு வரும் வடபகுதித் தமிழரிடம் தமது வீர ப்ரதாபங்களை கூறத் தவறுவது இல்லை.

எந்த கிழக்கு மாகாணத் தமிழர்க்காகப் போராடுகிறேன் என்று சொன்னானோ அதே கிழக்கு மாகாண தமிழர் எத்தனை பேரை கொன்று குவித்தான் ? எத்தனை பேரை கடத்திக் கொண்டுபோய் கப்பம் அறவிடப் பட்டிருக்கும் ? எத்தனை இளைன்சர்கள் காட்டிக்கொடுக்கப்பட்டிருப்

அம்மானுக்கு செகிடு கிளிய அறை விளுந்ததிலை சந்தோசம்.... நீலன் அண்ணாவை கட்டிப்போட்டு கன நாளைக்கு பிறகு சுட்டவ னுக்கு தேவைதான் ஆனால் போதாது...!

  • கருத்துக்கள உறவுகள்

சனி 10-11-2007 21:18 மணி தமிழீழம் [முகிலன்]

பிரித்தானிய சிறையில் அடைக்கப்பட்ட கருணா: ஈழத் தமிழர் ஒருவரால் தாக்கப்பட்டார்

சிறீலங்கா துணை இராணுவக் குழு ஒன்றுக்குத் தலைமைதாக்கும் ஆயுததாரி கருணா ஈழத் தமிழர் ஒருவரால் தாக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன.

கடந்த நவம்பர் 2ஆம் நாளன்று இலண்டனில் கைது பிரித்தானியக் குடிவரவுத் தடுப்பு முகாமில் சிறைவைக்கப்பட்டுள்ள ஆயுததாரி கருணா அங்கு தடுத்து வைக்கப்பட்ட ஈழத் தமிழர் ஒருவரால் தாக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கேம்பிறிச் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்ட கருணா தற்போது வேறு தடுப்பு முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கெடுவான் கேடு நினைப்பான்.

  • கருத்துக்கள உறவுகள்

அடடா பாவிங்களா தப்பு பன்னீட்டியளே!!!!

போட்டிருந்தா கதை முடியிறமாதிரி போட்டிருக்கனும், இப்ப என்னெண்டா பிரித்தானிய நம்பப்போகுது பிரிட்டன் சிறைக்குள்ளேயே கருனாவுக்கு பாதுகாப்பு இல்லை இதுக்க இலங்கைக்கு அனுப்பினால் பாடி பொடியாகிடும் எண்டு நினைச்சு அரசியல் தஞ்சம் குடுத்து சொகுசா வாழவைக்கப்போகுதப்பா... :):)

ஜ ஞாயிற்றுக்கிழமைஇ 11 நவம்பர் 2007 ஸ ஜ நசார் ஸ

லக்கி அல்கமவை கொலை செய்த கருணாமீது வழக்குதாக்கல் செய்ய அல்கமவின் மனைவி முடிவு செய்துள்ளதாக இராணுவ யு.என்.பி வட்டாரங்கள் தெரிவித்தன. குறித்த தாக்குதல் கருணாவால் செய்யபட்டிருந்ததுடன் குறித்த கொலையில் காரணமாக கருணா வர்த்தகமானி அறிவித்தல் கொடுத்து தேடப்படும் நபராக இருந்து வந்தார். கிழக்கில் நடந்த பல கொலைகளில் முன்னர் இவர் சம்மந்தபட்டவர் எனவும், இவர் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்தபோது பல்வேறு பட்ட நடவடிக்கைகளை தானே முன்னின்று நடாத்தியதாக வீரப்பிரதாபம் கூறியிருந்தமை தற்போது அவருக்கே வினையாகி போயுள்ளது எனவும் ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார். இந்த தகவல்களை ஜ.தே.கட்சி வட்டாரங்கள் உறுதிப்படுத்தியதுடன் இந்த சட்டநடவடிக்கைக்கு பக்கதுனையாக இருப்பதாக அறியமுடிகிறது.

ஆயதழச புநநெசயட (சுநவன.) டுரஉமல யுடயபயஅயஇ கழசஅநச ஊhநைக ழக வாந யுசஅல ளுவயகக மடைடநன டில முயசரயெ. ? ஆசள. டுரஉமல யுடயபயஅய pடயnniபெ வழ வயமந டநபயட யஉவழைn யபயiளெவ முயசரயெ? ஆயதழச புநநெசயட டுரஉமல யுடயபயஅயஇ கழசஅநச ஊhநைக ழக வாந யுசஅல ளுவயகக மடைடநன டில முயசரயெ in னுநஉநஅடிநச 18இ 1999. ளுரiஉனைந டிடயளவ hயன உயசசநைன ழரவ டில ஊழடழநெட முயசரயெ ழn ழுppழளவைழைn நடநஉவழைn சயடடல. ஐn வாந ழுppழளவைழைn சயடடல-டிடயளவஇ ஆயதழச புநநெசயட (சுநவன.) டுரஉமல யுடயபயஅயஇ கழசஅநச ஊhநைக ழக வாந யுசஅல ளுவயகக யனெ யழெவாநச pநசளழnஇ ய ஆநஅடிநச ழக Pயசடயைஅநவெஇ றநசந யஅழபெ வாழளந மடைடநன

நிதர்சனம்

கருணாவுக்கு அடிக்கிறது ஒண்டும் பெரிய சாதனையில்லை. அவன் செய்த அநியாயத்திற்கு என்றோ ஒரு நாள் தண்டனையை நிச்சயம் அனுபவிப்பான்.

ஆனால் யேசுநாதர் சொன்னது போல, கருணவை ஒரு திறந்த வெளியில் விட்டு, "உங்களில் எவனாவது புலி அடித்தது, புலியால ஊரில இருக்கமுடியவில்லை என்று அகதிவிண்ணப்பம் செய்யாதவர்கள் இருந்தால் அவர்கள் இந்த துரோகியை கல்லால் அடிக்கலாம்" என்று பிரித்தானியாக்காரன் சொன்னால் எத்தனை பேர் முன்னுக்கு வரமுடியுமோ கடவுளுக்குத்தான் வெளிச்சம்.

ஆனால் யேசுநாதர் சொன்னது போல, கருணவை ஒரு திறந்த வெளியில் விட்டு, "உங்களில் எவனாவது புலி அடித்தது, புலியால ஊரில இருக்கமுடியவில்லை என்று அகதிவிண்ணப்பம் செய்யாதவர்கள் இருந்தால் அவர்கள் இந்த துரோகியை கல்லால் அடிக்கலாம்" என்று பிரித்தானியாக்காரன் சொன்னால் எத்தனை பேர் முன்னுக்கு வரமுடியுமோ கடவுளுக்குத்தான் வெளிச்சம்.

அகதி அந்தஸ்து உங்களின் அரசாங்கத்தால் பிரச்சினை எண்றால் மட்டும்தான் கோடுப்பார்கள்... இல்லை இருவராலும் பிரச்சினை எண்று சொல்லாம்.... ஆனால் புலியாலை பிரச்சினை எண்றால்... அதுக்கு இங்கிலாந்து காறன் சொல்லுவான் உங்களை முதல் வேலையாய் ஊருக்கு போங்கோ உங்கட பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது இலங்கை அரசாங்கம் எண்டு... அப்படித்தான் பதில் வரும்..... அங்கை உங்கட பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டி நாங்கள் வேண்டிய உதவி உங்கட அரசாங்கத்துக்கு செய்கிற்றோம் என்பார்கள்... ( கொழும்பிலை தங்கலாம் அங்க பாதுகாப்பு நல்லா இருக்கு எண்டும் சொல்வார்கள்) :):):D

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

கருணாக்கு அடி விழுந்தது பொய் என்று ஜெயராஜ் அவர்கள் தன்னுடைய கட்டுரை ஒன்றிலே கூறி இருக்கின்றார்........

quote name='SUNDHAL' date='Nov 11 2007, 09:53 AM' post='358996']

கருணாக்கு அடி விழுந்தது பொய் என்று ஜெயராஜ் அவர்கள் தன்னுடைய கட்டுரை ஒன்றிலே கூறி இருக்கின்றார்........

quote name='SUNDHAL' date='Nov 11 2007, 09:53 AM' post='358996']

கருணாக்கு அடி விழுந்தது பொய் என்று ஜெயராஜ் அவர்கள் தன்னுடைய கட்டுரை ஒன்றிலே கூறி இருக்கின்றார்........

டீ பீ எஸ் ஜெயராஜா? கட்டுரையின் இணைப்பை இணைக்கமுடியுமா?

this is the requested link:

http://transcurrents.com/tamiliana/archives/415

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.