Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, goshan_che said:

முதல்ல யார் முதல்ல வாறோம்றது முக்கியம் இல்ல..

கடைசில யார் கடைசியா வாறோம் என்றதுதான் முக்கியம்😂

-கோஷான் சே-

ஓம்…ஆனால் இங்கிலாந்துக்கும் ஒரு பாகிஸ்தான் குணம் இருக்கு…3 போட்டி சூப்பராக விளாடினா அடுத்த போட்டியில் சொதப்புவார்கள்.

இலங்கையில் ஒரு சொதப்பல் overdue 😀

முந்தி உல‌க‌ கோபை போட்டியில் நெத‌ர்லாந் அணியிட‌ம் இங்லாந் தோல்வி அடைவின‌ம் ஹா ஹா

அது நேபாள‌த்தோட‌ எடுப‌டாது..............இங்லாந் வீர‌ர்க‌ளின் ம‌ட்டைய‌டி நீள‌ம்😁😛....................

  • Replies 1.1k
  • Views 34k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • ஈழப்பிரியன்
    ஈழப்பிரியன்

    போட்டியில் கலந்து கொண்டு பரிசில்களைப் பெற உடனே களத்தில் இறங்குங்கள். @மோகன் @இணையவன் @நிழலி @நியானி @கிருபன் @nunavilan @தமிழ் சிறி @ஏராளன் @யாயினி @ஈழப்பிரியன் @நிலாமதி @பெருமாள் @நன்னிச் சோழன் @Ju

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய முதலாவது போட்டியில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட தென்னாபிரிக்கா அணி, ரயான் றிக்கெல்டனின் புயல்வேக 61 (28 பந்துகள்) ஓட்டங்களுடனும், குயின்டன் டி கொக்கின் அதிரடியான 59 (41) ஓட்டங்களுடன் 8 விக்க

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட அயர்லாந்து அணி, அணித்தலைவர் லொர்கன் டக்கரின் ஆட்டமிழக்காத புயல்வேக 94 (51 பந்துகள்) ஓட்டங்களுடனும், கரெத் டெலனியின் புயல்வேக 56 (30 பந

  • கருத்துக்கள உறவுகள்

@ஈழப்பிரியன்

ம‌ங்ல‌ இசையோட‌ வ‌ந்து முத‌ல‌மைச்ச‌ருக்கு வாழ்த்து சொல்லும் அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை ஜ‌யாவை காணும் லொள்😛😁...................

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, கிருபன் said:

நாளை ஞாயிறு 08 பெப் பிரித்தானிய நேரப்படி மூன்று போட்டிகள் நடைபெறவுள்ளன.

 

யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

backhand-index-pointing-down_1f447.webp

4) முதல் சுற்று குழு D:ஞாயிறு 08 பெப்: 5:30 AM, சென்னை, ஆப்கானிஸ்தான் எதிர் நியூஸிலாந்து

AFG எதிர் NZ

 

இருவர் மாத்திரம் ஆப்கானிஸ்தான் அணி வெல்வதாகவும்  மற்றைய 21 பேர் நியூஸிலாந்து அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர்.

 

ஆப்கானிஸ்தான்

  • வாதவூரான்

  • ரசோதரன்

 

இப்போட்டியில் போட்டியில்  யாருக்கு முட்டை கிடைக்கும்?  thinking-face_1f914.webp

 

 

backhand-index-pointing-down_1f447.png

5) முதல் சுற்று குழு C:ஞாயிறு 08 பெப்: 9:30 AM, வாங்கெடே, இங்கிலாந்து எதிர் நேபாளம்

ENG எதிர் NEP

22 பேர்  இங்கிலாந்து அணி வெல்லும் எனவும் ஒரே ஒருவர் மாத்திரம் நேபாளம் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர்.

நேபாளம்

  • ரசோதரன்

இந்தப் போட்டியில் @ரசோதரன் புள்ளிகள் எடுக்கும் யோகம் இருக்கின்றதா? ghost_1f47b.gif

backhand-index-pointing-down_1f447.png

6) முதல் சுற்று குழு B:ஞாயிறு 08 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), சிறிலங்கா எதிர் அயர்லாந்து

SL எதிர் IRE

21 பேர்  சிறிலங்கா அணி வெல்லும் எனவும் இருவர் மாத்திரம் அயர்லாந்து அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர்.

அயர்லாந்து

  • நிலாமதி

  • நந்தன்

இந்தப் போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்? see-no-evil-monkey_1f648.png

இதில் உள்ள தெரிவுகளில் ஏதோ உள்குத்து இருக்கிற மாதிரி தெரிகிறது. ஏதோ செல்வச் சந்நதி முருகனுக்கு நேர்த்தி வைச்சு தேர்வு செய்த மாதிரி இருக்கு😁

23 minutes ago, goshan_che said:

எப்போதும் இங்கிலாந்து banana skin எனப்படும் பெரிய அணி சின்ன அணியிடம் அடிவாங்கும் விடயத்தை வேர்ல்ட் கப்பில் அரங்கேற்றும்.

இதில் நேபாளத்தை போடலாம் என நான் கூட யோசித்தேன்.

அச்சொட்டாக…😀

முதலில் நியாயத்தை சொல்ல வந்தாலும்…பிறகு இந்த ரோதனை எனக்கு ஏன் எண்டு ஒரு எஸ், எஸ்சாகினாரே….

சாட்சாத்…😀

நல்ல அனுபவங்கள் போல கிடக்கு. நகைச்சுவையான காணொளி என்றாலும் இப்படியான இடங்களில் இருந்து ஓடிப்போவது தான் புத்திசாலிக்கு அழகு

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வீரப் பையன்26 said:

இந்த‌ பிஞ்சு முக‌த்தை எப்ப‌ ச‌ர்வ‌தேச‌ப் போட்டியில் பார்க்கிற‌து................இந்த‌ உல‌க‌ கோப்பையில் விளையாட‌ விட்டால் கூட‌ பெடிய‌ன் ப‌ட்டைய‌ கில‌ப்புவார்.....................

அதிச‌ய‌ பிற‌வி.....................எதிர்கால‌ கிரிக்கேட்டின் க‌ட‌வுள்😍🙏......................................

Screenshot-20260207-201753-ESPNCricinfo.

ஐபிஎல் இல் விளையாடுவார்.

  • கருத்துக்கள உறவுகள்

பெரிய அணிகளில் எந்த அணி சின்ன அணியிடம் தோக்கும் என்றும் இடக்கு மடக்கான கேள்வி ஒன்று கேட்கலாம் போல இருக்கு.

இங்கே எல்லாரும் நன்றாக ஆரூடம் பார்ப்பினம் போல கிடக்கு. 😉

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, செம்பாட்டான் said:

நல்ல அனுபவங்கள் போல கிடக்கு. நகைச்சுவையான காணொளி என்றாலும் இப்படியான இடங்களில் இருந்து ஓடிப்போவது தான் புத்திசாலிக்கு அழகு

நிஜ வாழ்வில் நான் வசிக்கும் மேலே😂.

யாழில் ஆர் என தெரியாதபடியால் டயரை வெட்ட மாட்டார்கள், பெயிண்டை கீற மாட்டார்கள் என்ற அசட்டு துணிவில் கொஞ்சம் பிரளி பண்ணுவதுண்டு😂.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஈழப்பிரியன் said:

ஐபிஎல் இல் விளையாடுவார்.

போன‌ ஜ‌பிஎல் தொட‌ரில் இருந்து விளையாட‌த் தொட‌ங்கி விட்டார்................ச‌ர்வ‌தேச‌ போட்டியில் இவ‌ரை எப்ப‌ சேர்ப்பினம் அது தான் மேல் ஓட்ட‌மாய் எழுதினேன்..............................

  • கருத்துக்கள உறவுகள்

முதலமைச்சர் @செம்பாட்டான் க்கு வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, செம்பாட்டான் said:

பெரிய அணிகளில் எந்த அணி சின்ன அணியிடம் தோக்கும் என்றும் இடக்கு மடக்கான கேள்வி ஒன்று கேட்கலாம் போல இருக்கு.

இங்கே எல்லாரும் நன்றாக ஆரூடம் பார்ப்பினம் போல கிடக்கு. 😉

இத்தாலி அணி ந‌ல்ல‌ அணி

நான் அவையின் திற‌மை தெரியாம‌ மாட்டிக் கிட்டேன்😁😛....................

  • கருத்துக்கள உறவுகள்

அப்கானிஸ்தான்

நியுசிலாந் விளையாட்டு நாளை விறுவிறுப்பாக‌ இருக்கும் ம‌ற்ற‌ இர‌ண்டு விளையாட்டும் சும்மா பார்க்க‌ ச‌ரி..............................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

யாழில் ஆர் என தெரியாதபடியால் டயரை வெட்ட மாட்டார்கள், பெயிண்டை கீற மாட்டார்கள் என்ற அசட்டு துணிவில் கொஞ்சம் பிரளி பண்ணுவதுண்டு😂.

நான் கார் ஓடத் தொடங்கின காலத்தில் இருந்து ட்ரைவர் சீட்டுக்குப் பக்கத்தில் ஒரு ஸ்க்ரூ ட்ரைவர் வைச்சிருக்கிறன்😬

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

நாளை ஞாயிறு 08 பெப்

ஆப்கானிஸ்தான்

  • வாதவூரான்

  • ரசோதரன்

 நேபாளம்

  • ரசோதரன்

இந்தப் போட்டியில் @ரசோதரன் புள்ளிகள் எடுக்கும் யோகம் இருக்கின்றதா?

அயர்லாந்து

  • நிலாமதி

  • நந்தன்

நான் அயர்லாந்தையும் தெரிவு செய்திருந்தால், இந்த மூன்று போட்டிகளிலேயே ஒரு ஹாட்ரிக் அடித்து விடுவேன் போல..............🤣.

அடிமுடி, இதில் ஏதோ ஒன்று, இப்பவே தெரியுதே..................😜.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

நிஜ வாழ்வில் நான் வசிக்கும் மேலே😂.

யாழில் ஆர் என தெரியாதபடியால் டயரை வெட்ட மாட்டார்கள், பெயிண்டை கீற மாட்டார்கள் என்ற அசட்டு துணிவில் கொஞ்சம் பிரளி பண்ணுவதுண்டு😂.

யார் சாமி நீங்க. லண்டனுக்கு வந்தா ஒரு எட்டுப் பாத்திட்டு, பேசாமப் போயிடனும் போல கிடக்கு. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

நான் கார் ஓடத் தொடங்கின காலத்தில் இருந்து ட்ரைவர் சீட்டுக்குப் பக்கத்தில் ஒரு ஸ்க்ரூ ட்ரைவர் வைச்சிருக்கிறன்😬

ஏன் ஜி ? அடிக்கடி நட் லூஸ் ஆகுமோ😂?

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, வீரப் பையன்26 said:

இவ‌ரை ராஜ‌ஸ்தான் அணி ஒரு போதும் க‌ல‌ட்டி விடாது.................பெடிய‌ன் அடிக்கிற‌ ப‌ந்து கூட‌ சிக்ஸ்சுக்கு போய் விழுது ஹா ஹா.................கூடிய‌ சீக்கிர‌ம் ச‌ர்வ‌தேச‌ போட்டியில் இட‌ம் பிடிப்பார் என‌ ந‌ம்புகிறேன்...................

அடிச்ச சிக்ஸ்சரில் 3 பந்துகள் காணமல் போயிட்டாம்....( மைதான் வெளிப்புறத்தி வீழ்ந்து) பையன் என்னத்தை சாப்புடுறானோ

3 hours ago, கிருபன் said:

நான் கார் ஓடத் தொடங்கின காலத்தில் இருந்து ட்ரைவர் சீட்டுக்குப் பக்கத்தில் ஒரு ஸ்க்ரூ ட்ரைவர் வைச்சிருக்கிறன்😬

தெரியாமல்தான் கேட்கின்றேன் ..அந்த கார் ஓடுற நேரத்தவிட... இந்த போட்டி நடத்திறதுக்கு ஒரு தில் வேணும் ..அப்ப பக்கத்திலை என்னதை வைத்துக்கொண்டு படுக்கிறியள்...

இருவர் மாத்திரம் ஆப்கானிஸ்தான் அணி வெல்வதாகவும்  மற்றைய 21 பேர் நியூஸிலாந்து அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர்.

 

ஆப்கானிஸ்தான்

  • வாதவூரான்

  • ரசோதரன்

இந்த ரசோதரன் கொஞ்சம் வித்தியாசமான பேர்வழி போலகிடக்கு

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

ஆப்கானிஸ்தான் நிறைய சுழல் பந்து வீச்சாளர்களுடன் களமிறங்குகிறது. நியுசிலாந்து என்ன செய்யப் போகிறதோ. ஒரு கூட்டல்தான் நடக்கும் போல.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, வீரப் பையன்26 said:

பாப‌ரிட‌ம் க‌ப்ட‌ன் ப‌த‌வி கொடுக்க‌ப் ப‌ட்டு திரும்ப‌ ப‌றிக்க‌ப் ப‌ட்ட‌து.............பாப‌ர் ரென்ச‌ன் பாட்டி................க‌ப்ட‌னாய் செய‌ல் ப‌ட்ட‌ கால‌த்தில் ச‌க‌ வீர‌ர்க‌ள் சிறு பிழை விட்டாலும் கோவ‌ப் ப‌டுவார்..............வீர‌ர்க‌ளை வ‌ழி ந‌ட‌த்த‌ தெரியாத‌ க‌ப்ட‌ன்...................

பாப‌ர‌ நான் ஒரு நாள் தொட‌ர் ம‌ற்றும் டெஸ்ட் தொட‌ருக்கு குறை சொல்ல‌ மாட்டேன்..................பாப‌ர் 20ஓவ‌ர் விளையாட்டுக்கு அவ‌ரின் விளையாட்டு போக்கை மாற்ற‌னும் இல்லையேன் அணிக்கு தான் பாதிப்பு

இப்ப‌த்த‌ இள‌ம் பாக்கிஸ்தான் வீர‌ர்க‌ளில் பாப‌ர் தான் அதிக‌ செஞ்சேரி அடிச்ச‌ வீர‌ர்..................ம‌ற்ற‌வ‌ர்க‌ள் பாப‌ர் அள‌வுக்கு ர‌ன்ஸ் அடிக்க‌ வில்லை

என‌க்கு பாப‌ர் மீது சிறு வெறுப்பு கூட‌ இல்லை..............பாப‌ர் 20ஓவ‌ர் விளையாட்டில் அதிர‌டி ஆட்ட‌த்தை கையில் எடுக்க‌னும்..................

ஆமைவேக‌ ஆட்ட‌ம் எதிர் அணிக்கு சாத‌க‌மாய் அமைந்து விடும்..............நான் என்ன‌ சொல்ல‌ வ‌ருகிறேன் என‌ இப்ப‌ உங்க‌ளுக்கும் செம்பாட்ட‌ன் அண்ணாக்கும் புரிந்து இருக்கும் என‌ ந‌ம்புகிறேன்😁.................

செம்பாட்டான் கூறுவது, ஒரு தரமான ஆட்டக்காரரை என்றைக்கும் சரிவரமாட்டார் என ஒதுக்கி விடக்கூடாது என்பதே!

நீங்கள் பி பி எல் பார்த்திருப்பீர்கள் அவுஸ்ரேலிய அணியில் விளையாடும் அனைத்து வீரர்களையும் விட சிமித்தான் அதிக ஓட்ட விகிதத்துடன் அதிக ஓட்டங்களை எடுத்திருந்தார் என கருதுகிறேன் (கெட்டும், டேவிட்டும் விளையாடவில்லை).

சிறந்த ஆட்டக்காரர்கள் போர்மிற்கு வந்தால் அணிக்கு மிக நன்மையாக இருக்கும், சிமித்திற்கு உலக போட்டி அணியில் இடமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, vasee said:

செம்பாட்டான் கூறுவது, ஒரு தரமான ஆட்டக்காரரை என்றைக்கும் சரிவரமாட்டார் என ஒதுக்கி விடக்கூடாது என்பதே!

நீங்கள் பி பி எல் பார்த்திருப்பீர்கள் அவுஸ்ரேலிய அணியில் விளையாடும் அனைத்து வீரர்களையும் விட சிமித்தான் அதிக ஓட்ட விகிதத்துடன் அதிக ஓட்டங்களை எடுத்திருந்தார் என கருதுகிறேன் (கெட்டும், டேவிட்டும் விளையாடவில்லை).

சிறந்த ஆட்டக்காரர்கள் போர்மிற்கு வந்தால் அணிக்கு மிக நன்மையாக இருக்கும், சிமித்திற்கு உலக போட்டி அணியில் இடமில்லை.

உங்களுக்குப் புரியுது. அதுவரையில் மகிழ்ச்சி.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, செம்பாட்டான் said:

ஆப்கானிஸ்தான் நிறைய சுழல் பந்து வீச்சாளர்களுடன் களமிறங்குகிறது. நியுசிலாந்து என்ன செய்யப் போகிறதோ. ஒரு கூட்டல்தான் நடக்கும் போல.

நியூசிலாந்தின் Finn Alan இந்தியாவின் அபிஷேக் சர்மா போல குறைந்த பந்துகளில் கூடிய ஒட்டங்களை பெறக் கூடியவர். தற்போதைய நம்பிக்கை நட்சத்திரம்

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, கந்தப்பு said:

நியூசிலாந்தின் Finn Alan இந்தியாவின் அபிஷேக் சர்மா போல குறைந்த பந்துகளில் கூடிய ஒட்டங்களை பெறக் கூடியவர். தற்போதைய நம்பிக்கை நட்சத்திரம்

இந்த பி பி எல்லில் காட்டடி அடித்தார், இவரது முதல் சர்வதேச போட்டி அவுஸ்ரேலியாவுடனே ஆரம்பமாகியிருந்தது, அப்போதே ஸ்ராக்கின் புதிய பந்தினை இறங்கி வந்து எல்லைக்கோட்டிற்கு முதலாவது பந்தையே தூக்கி அடித்தார், அது ஒரு நாள் ஆட்டம் என நினைக்கிறேன் வேகமான அவரது ஓட்டம் நியுசிலாந்திற்கு போட்டியினை வெல்ல உதவியிருந்தது, அதன் பின்னர் காணாமல் போய்விட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆப்கானிஸ்தான் நல்ல ஓட்டம் அடிக்கப் போகுது. நியுசிலாந்து நிலைமை கவலைக்கிடம் போல.

  • கருத்துக்கள உறவுகள்

182 ஓட்டங்கள். நியுசிலாந்துக்கு இது பெரிய ஓட்டம். அவர்கள் 180க்கு மேல் துரத்தியதில்லை.

ஆப்கானிஸ்தானைத் தெரிவு செய்த அவ்விருவரும் மகிழ்ந்திருப்பார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, செம்பாட்டான் said:

182 ஓட்டங்கள். நியுசிலாந்துக்கு இது பெரிய ஓட்டம். அவர்கள் 180க்கு மேல் துரத்தியதில்லை.

ஆப்கானிஸ்தானைத் தெரிவு செய்த அவ்விருவரும் மகிழ்ந்திருப்பார்கள்

அப்கானிஸ்தான் வெல்வதற்கு அதிக வாய்ப்புக்கள் உள்ளது போலவே உள்ளது, நியுசிலாந்திற்கு இது ஒரு கடினமான இலக்கு, ஆனால் நியுசிலாந்தில் நம்பிக்கையுள்ளது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.