Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, வீரப் பையன்26 said:

ம‌திய‌ பொழுதில் சென்னை மைதான‌த்தில் ர‌ன்ஸ் அடிப்ப‌து சிர‌ம‌ம்..............எப்ப‌டி தான் 182ர‌ன்ஸ்ச‌ அப்கானிஸ்தான் வீர‌ர்க‌ளால் அடிக்க‌ முடிந்த‌து......................

ஆப்கானிஸ்தான் விளையாடியதனை நான் பார்க்கவில்லை, குலாப்டினின் பேட்டியினை பார்த்தேன், ஆடுகளம் இரட்டைத்தன்மையாக உள்ளதாக கூறினார்.

வழமையாக சென்னை ஆடுகளம் (பிட்ச்) சிகப்பு மண்ணில் இருப்பதாக நினைவுள்ளது, இந்த போட்டிக்கு பயன்படுத்திய ஆடுகளம் கறுப்பு/சிகப்பு கலவை கொண்டதாக இருந்தது, ஆடுகளம் 170 - 175 ஓட்டங்கள் வெற்றிக்கான ஓட்டமாக இருக்கும் என கணித்திருந்தேன், ஆனால் ஆப்கானிஸ்தான் 182 ஓட்டங்களை பெற்றிருந்தது, அவர்களது பந்து வீச்சிற்கு இது ஒரு நிச்சயமான வெற்றி மாதிரியாகவே தோன்றியது.

கறுப்பு மண் களிமண் ஈரலிப்பினை தன்னுள்ளே தக்கவைக்கும் சூரிய வெளிச்சத்திற்கு வேகமாக காயாது அதனால் வேகமாக ஆடுகளம் மாற்றம் ஏற்படாது, கறுப்பு மண்ணில் பந்து படும்போது பந்து வழுக்கிகொண்டு வரும் சிகப்பு மண் வேகமாக காயும் பந்து உயர்ந்து வரும் அதே போல திரும்பும்.

சூரிய வெளிச்சத்திற்கு மேல் மண் காயும் போது வேகப்பந்து வீச்சாளருக்கு பந்து சிப்பாகும் ஆனால் சீம் மூமென்ட் குறையும் அதோடு பந்தின் லெதர் சூரிய வெளிச்சத்தின் தாக்கத்தினால் வேகமாக பழசாகும் ரிவேர்ஸ் சுயிங் ஏற்படும்.

சுழல் பந்து வீச்சாளருக்கு மேலதிக கிறிப் கிடைப்பதால் பந்து திரும்பும் அதனால் முதலில் துடுப்பாடுவது என்ற ஆப்கானிஸ்தானின் முடிவு சரியானதாக இருக்கும் என கருதுகிறேன், அத்துடன் அவர்களது பந்து வீச்சு சிறப்பாக இருக்கும்.

8 hours ago, goshan_che said:

அவுஸ் அணித்தேர்வு மிக நியாயமாக நடக்கும். இது ஏன் என விளங்கவே இல்லை.

இதனை ஒரு சர்ச்சையாகவே பார்க்கிறார்கள்.

  • Replies 1.1k
  • Views 34k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • ஈழப்பிரியன்
    ஈழப்பிரியன்

    போட்டியில் கலந்து கொண்டு பரிசில்களைப் பெற உடனே களத்தில் இறங்குங்கள். @மோகன் @இணையவன் @நிழலி @நியானி @கிருபன் @nunavilan @தமிழ் சிறி @ஏராளன் @யாயினி @ஈழப்பிரியன் @நிலாமதி @பெருமாள் @நன்னிச் சோழன் @Ju

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய முதலாவது போட்டியில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட தென்னாபிரிக்கா அணி, ரயான் றிக்கெல்டனின் புயல்வேக 61 (28 பந்துகள்) ஓட்டங்களுடனும், குயின்டன் டி கொக்கின் அதிரடியான 59 (41) ஓட்டங்களுடன் 8 விக்க

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட அயர்லாந்து அணி, அணித்தலைவர் லொர்கன் டக்கரின் ஆட்டமிழக்காத புயல்வேக 94 (51 பந்துகள்) ஓட்டங்களுடனும், கரெத் டெலனியின் புயல்வேக 56 (30 பந

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, vasee said:

ஆப்கானிஸ்தான் விளையாடியதனை நான் பார்க்கவில்லை, குலாப்டினின் பேட்டியினை பார்த்தேன், ஆடுகளம் இரட்டைத்தன்மையாக உள்ளதாக கூறினார்.

வழமையாக சென்னை ஆடுகளம் (பிட்ச்) சிகப்பு மண்ணில் இருப்பதாக நினைவுள்ளது, இந்த போட்டிக்கு பயன்படுத்திய ஆடுகளம் கறுப்பு/சிகப்பு கலவை கொண்டதாக இருந்தது, ஆடுகளம் 170 - 175 ஓட்டங்கள் வெற்றிக்கான ஓட்டமாக இருக்கும் என கணித்திருந்தேன், ஆனால் ஆப்கானிஸ்தான் 182 ஓட்டங்களை பெற்றிருந்தது, அவர்களது பந்து வீச்சிற்கு இது ஒரு நிச்சயமான வெற்றி மாதிரியாகவே தோன்றியது.

கறுப்பு மண் களிமண் ஈரலிப்பினை தன்னுள்ளே தக்கவைக்கும் சூரிய வெளிச்சத்திற்கு வேகமாக காயாது அதனால் வேகமாக ஆடுகளம் மாற்றம் ஏற்படாது, கறுப்பு மண்ணில் பந்து படும்போது பந்து வழுக்கிகொண்டு வரும் சிகப்பு மண் வேகமாக காயும் பந்து உயர்ந்து வரும் அதே போல திரும்பும்.

சூரிய வெளிச்சத்திற்கு மேல் மண் காயும் போது வேகப்பந்து வீச்சாளருக்கு பந்து சிப்பாகும் ஆனால் சீம் மூமென்ட் குறையும் அதோடு பந்தின் லெதர் சூரிய வெளிச்சத்தின் தாக்கத்தினால் வேகமாக பழசாகும் ரிவேர்ஸ் சுயிங் ஏற்படும்.

சுழல் பந்து வீச்சாளருக்கு மேலதிக கிறிப் கிடைப்பதால் பந்து திரும்பும் அதனால் முதலில் துடுப்பாடுவது என்ற ஆப்கானிஸ்தானின் முடிவு சரியானதாக இருக்கும் என கருதுகிறேன், அத்துடன் அவர்களது பந்து வீச்சு சிறப்பாக இருக்கும்.

இதனை ஒரு சர்ச்சையாகவே பார்க்கிறார்கள்.

நான் காலையில் எழுந்து விளையாட்டை பார்த்தேன்

அப்கானிஸ்தான் அடிச்ச‌ 182ர‌ன்ஸ் ந‌ல்ல‌ ர‌ன்ஸ் என‌ நினைத்தேன்

எப்ப‌டியும் நியுசிலாந்தை அப்கானிஸ்தான் ம‌ட‌க்கி போடுவின‌ம் என‌ நினைத்தேன்..............சென்னை மைதான‌த்துக்கு 182பெரிய‌ ஸ்கோர்............நியுசிலாந் வீர‌ர்க‌ளின் அதிர‌டி ஆட்ட‌த்தால் 17ஓவ‌ரோட‌ விளையாட்டை முடித்து விட்டின‌ம்.............................

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, வீரப் பையன்26 said:

க‌ன‌டாவுக்கு நாளைக்கு தென் ஆபிரிக்கா சாத்த‌ப் போகுது😁😛.................

எனக்குப் புள்ளீ வரும் ..எந்தெரிவு சவுத் அப்ரிக்க..

  • கருத்துக்கள உறவுகள்

@ரசோதரன்

நீங்க‌ள் தெரிவு செய்த‌ நேபால் அணி க‌ட‌சி க‌ட்ட‌த்தில் எப்ப‌டி அடிச்சு ஆடினார்க‌ள் என்று பாருங்கோ...............என‌க்கு இங்லாந் அணியையும் அதிக‌ம் பிடிக்கும் அதே போல் நேபால் அணியையும் பிடிக்கும்.....................நேபால் வீர‌ர்க‌ளின் ப‌ந்து வீச்சு ம‌ற்றும் ம‌ட்டைய‌டி இர‌ண்டும் அருமை..................என்ன‌ இங்லாந்தை போல் 50க்கு மேல் ப‌ட்ட‌ கிரிக்கேட் மைதான‌ம் நேபாள‌த்தில் இல்லை இருக்கிற‌ ஒன்று இர‌ண்டு மைதான‌த்தில் விளையாடி சர்வ‌தேச‌ப் போட்டியில் சாதிக்கின‌ம்...........................

Edited by வீரப் பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, alvayan said:

எனக்குப் புள்ளீ வரும் ..எந்தெரிவு சவுத் அப்ரிக்க..

வாழ‌ வைச்ச‌ நாட்டுக்கு ந‌ன்றி விஸ்வாச‌ம் இல்லாத‌ மனித‌ர் ஜ‌யா நீங்க‌ள் லொள்😁😛.......................

  • கருத்துக்கள உறவுகள்

உவ‌ன் வும்ரா இந்த‌ உல‌க‌ கோப்பையில் அதிக‌ விக்கேட் எடுப்பான் என‌ தெரிவு செய்தேன்

முத‌ல் விளையாட்டில் விளையாட‌ வில்லை அடுத்த‌ மைச்சில் விளையாடுவார் என‌ ந‌ம்புகிறேன்..............சின்ன‌ அணி என‌ நினைத்து வும்ராவுக்கு நேற்று ஓய்வு கொடுத்து இருக்க‌ கூடும்..............இனி வ‌ரும் போட்டிக‌ள் அனைத்திலும் விளையாடினால் ம‌கிழ்ச்சி..........................

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வீரப் பையன்26 said:

வாழ‌ வைச்ச‌ நாட்டுக்கு ந‌ன்றி விஸ்வாச‌ம் இல்லாத‌ மனித‌ர் ஜ‌யா நீங்க‌ள் லொள்😁😛.......................

இதை ஒரு பாயிண்டா வைத்து சனம் என்மீது பாயப்போகுது ....அய்யனே இது விளையாட்டுத்திரி...நினவில் கொள்க

இ ங்கு உள்ள நிலைமையில் எப்படா பாதை திறக்கும் என்று சனம் திரியுது..

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, alvayan said:

இதை ஒரு பாயிண்டா வைத்து சனம் என்மீது பாயப்போகுது ....அய்யனே இது விளையாட்டுத்திரி...நினவில் கொள்க

இ ங்கு உள்ள நிலைமையில் எப்படா பாதை திறக்கும் என்று சனம் திரியுது..

நான் சும்மா ப‌ன்னுக்கு எழுதினேன் சீடியேசா எடுக்க‌ வேண்டாம்😁😛..............இங்கையும் சினோ ம‌லை போல் கொட்டிக் கிட‌க்கு வெளியில் போவ‌து சிர‌ம‌ம்.............வார‌ கிழ‌மை ப‌ழைய‌ நிலைக்கு திரும்பும்......................

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வீரப் பையன்26 said:

உவ‌ன் வும்ரா இந்த‌ உல‌க‌ கோப்பையில் அதிக‌ விக்கேட் எடுப்பான் என‌ தெரிவு செய்தேன்

முத‌ல் விளையாட்டில் விளையாட‌ வில்லை அடுத்த‌ மைச்சில் விளையாடுவார் என‌ ந‌ம்புகிறேன்..............சின்ன‌ அணி என‌ நினைத்து வும்ராவுக்கு நேற்று ஓய்வு கொடுத்து இருக்க‌ கூடும்..............இனி வ‌ரும் போட்டிக‌ள் அனைத்திலும் விளையாடினால் ம‌கிழ்ச்சி..........................

சிறு காயம் காரணமாக விளையாடவில்லை. இனிவரும் போட்டிகளில் ஒன்றான இந்தியா பாகிஸ்தான் போட்டியில் பாகிஸ்தான் விளையாட மாட்டுது என்று சொல்கிறார்கள். ஆனால் ஐசிசி. வங்காளதேசம் அணியின் தலைமை பாகிஸ்தானை விளையாடும்படி பாகிஸ்தானுடன் பேச்சு வார்த்தைகள் நடாத்தி வருகிறார்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய மூன்றாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சிறிலங்கா அணி 15 ஆவது ஓவரில் 100 ஓட்டங்களை எடுத்திருந்தாலும் இறுதி ஐந்து ஓவர்களில் அயர்லாந்து இறுக்கமாக பந்து வீசாததாலும் தடுப்பில் தவறுகள் விட்டதாலும், குசல் மெண்டிஸின் ஆட்டமிழக்காது எடுத்த 56 (43 பந்துகளில்) ஓட்டங்களுடனும் கமிண்டு மெண்டிஸின் புயல்வேக 44 (19 பந்துகளில்) ஓட்டங்களுடனும் 6 விக்கெட்டுகளை இழந்து 163 ஓட்டங்களை எடுத்திருந்தது.

பதிலுக்குத் துடுப்பாடிய அயர்லாந்து அணி சிறந்த துவக்கத்துடன் ஆரம்பித்தாலும் தொடர்ச்சியாக விக்கெட்டுகள் சரிந்ததால் 19.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 143 ஓட்டங்களை மாத்திரமே எடுக்கமுடிந்தது.

முடிவு: சிறிலங்கா அணி 20 ஓட்டங்களால் வெற்றியீட்டியது

சிறிலங்கா அணி வெல்லும் எனக் கணித்த 21 பேருக்குத் தலா இரு புள்ளிகள் கிடைக்கும். அயர்லாந்து அணி வெல்லும் எனக் கணித்த இருவருக்கு புள்ளிகள் கிடையாது.

இன்றைய மூன்று போட்டிகளின் முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளார்களின் நிலைகள்:

large.IMG_5124.jpeg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாளை திங்கள் 09 பெப் பிரித்தானிய நேரப்படி மூன்று போட்டிகள் நடைபெறவுள்ளன.

யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

backhand-index-pointing-down_1f447.webp

7) முதல் சுற்று குழு C:திங்கள் 09 பெப்: 5:30 AM, ஏடென் கார்டன்ஸ், ஸ்கொட்லாந்து எதிர் இத்தாலி

SCOT எதிர் ITA

18 பேர் ஸ்கொட்லாந்து அணி வெல்வதாகவும்  மற்றைய ஐந்து பேர் இத்தாலி அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர்.

இத்தாலி

  • சுவைப்பிரியன்

  • வாதவூரான்

  • கிருபன்

  • கோஷான் சே

  • ரசோதரன்

இப்போட்டியில் போட்டியில்  யாருக்கு புள்ளிகள் கிடைக்கும்?  hamster_1f439.png

backhand-index-pointing-down_1f447.png

8) முதல் சுற்று குழு B:திங்கள் 09 பெப்: 9:30 AM, கொழும்பு (SSC), ஓமான் எதிர் ஸிம்பாப்வே

OMA எதிர் ZIM

இருவர் மாத்திரம்  ஓமான் அணி வெல்லும் எனவும் மற்றைய 21 பேரும் ஸிம்பாப்வே அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர்.

ஓமான்

  • சுவி

  • கோஷான் சே

இந்தப் போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்? camel_1f42a.png

backhand-index-pointing-down_1f447.png

9) முதல் சுற்று குழு D:திங்கள் 09 பெப்: 1:30 PM, அஹமதாபாத், கனடா எதிர் தென்னாபிரிக்கா

CAN எதிர் SA

அனைவரும் தென்னாபிரிக்கா அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர்.

இந்தப் போட்டியில் எல்லோருக்கும் புள்ளிகள் கிடைக்குமா அல்லது முட்டைகள் பரிமாறப்படுமா? cooking_1f373.webp

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டாவது நாளாகவும் முதலமைச்சரான @செம்பாட்டான் க்கு வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, alvayan said:

அயர்லாந்து அசத்தலான ரீம் ...களத்தடுப்பும் ...பிடிகளிலும் கவனம் செலுத்துயிருந்தால் ..2 விக்கட் இழப்புடன் போட்டியை வென்று இருப்பினம்

இலங்கையின் இன்றைய களத்தடுப்பு பிரமாதம்.....எப்படியும் எனக்கு வெற்றி புள்ளிகள் வந்திருக்கும்

உண்மைதான். சில பிடிகளை எடுத்து இருந்தால், நிலைமை மாறி இருக்கலாம்.

Edited by செம்பாட்டான்

  • கருத்துக்கள உறவுகள்

இத்தாலியின் கன்னிப் போட்டி. எப்பிடி விளையாடுகிறார்கள் என்று பார்க்க தயாரா. உதை பந்தில் சாதிப்பவர்கள் கிரிக்கட்டிலும் நுழைவது நல்லதே.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, செம்பாட்டான் said:

இத்தாலியின் கன்னிப் போட்டி. எப்பிடி விளையாடுகிறார்கள் என்று பார்க்க தயாரா. உதை பந்தில் சாதிப்பவர்கள் கிரிக்கட்டிலும் நுழைவது நல்லதே.

நேரம் பிழையாகக் கிடக்கு...தினமும் நித்திரை முழிக்க முடியாதே...நீங்க பார்த்து அனுபவியுங்கள்

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, alvayan said:

நேரம் பிழையாகக் கிடக்கு...தினமும் நித்திரை முழிக்க முடியாதே...நீங்க பார்த்து அனுபவியுங்கள்

உலகம் முழுக்க பரந்து இருக்கிறோம். அவரவர் நேரத்திற்கேற்பதான் எல்லாமே. இதுக்காக எல்லாம் நித்திரை முழிச்சுப் போட்டியைப் பார்க்க முடியாதுதானே. இறுதிப் போட்டி என்றால் முயற்சிக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, alvayan said:

நேபாளிக்காரன்களுக்கு ..சூரியவன்சிதான் கோச் போலகிடக்கு

நேபாளம் அணியின் பயிற்சியாளர் struart law. அவுஸ்திரேலியா நாட்டினை சேர்ந்த இவர் திறமையிருந்தும் அதிஷ்டமில்லாதவர். ஒரே ஒரு டெஸ்ட் போட்டி மட்டுமே விளையாடினார். அதிலும் இவர் ஆட்டமிழக்காமல் 50க்கு மேல் ஓட்டங்கள் இலங்கைக்கு எதிராக பெற்றார். 1995 இல் நடைபெற்ற இந்த போட்டியில்தான் ரிக்கி பொண்டிங்கும் தனது முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடினார். காயமடைந்த வீரர் ஒருவருக்கு பதிலாக விளையாடிய ஸ்டுவர்ட் law, பிறகு அணியில் விளையாட சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. காரணம் அக்காலத்தில் அவுஸ்திரேலியா பலம் பொருந்திய அணி. ஸ்டீவ் வோ, மார்க் வோ இரட்டையர்கள், மார்க் டெய்லர் என பல புகழ்பெற்ற வீரர்கள் விளையாடினார்கள். ஸ்டுவர்ட் லா , இங்கிலாந்து கவுண்டி சாம்பியன் போட்டிகளில் அதிக ஓட்டங்களை பெற்று சாதனை படைத்தார். அக்காலத்தில் இங்கிலாந்து நாசர் குசென் ஒரு பேட்டியின் போது ஸ்டுவர்ட் law இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் என்றால் இங்கிலாந்து அணியில் அவரைத்தான் முதலில் அணியில் எடுத்திருப்பார்கள் என்று சொல்லியிருந்தார் .

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்கொட்லாந்து நல்ல ஆரம்பத்தைக் குடுத்திருக்கிறது. 180க்கு மேல அடிப்பார்கள் போல

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, செம்பாட்டான் said:

ஸ்கொட்லாந்து நல்ல ஆரம்பத்தைக் குடுத்திருக்கிறது. 180க்கு மேல அடிப்பார்கள் போல

இத்தாலி அணியின் அணித்தலைவர் Madsen காயம் காரணமாக இன்றையை போட்டியில் தொடர்ந்து விளையாடாத நிலையில் இருக்கிறார். 42 வயதுடைய இவருக்கும் இத்தாலி நாட்டுக்கும் இன்றைய போட்டிதான் முதலாவது உலக கிண்ண போட்டி.

40 minutes ago, செம்பாட்டான் said:

ஸ்கொட்லாந்து நல்ல ஆரம்பத்தைக் குடுத்திருக்கிறது. 180க்கு மேல அடிப்பார்கள் போல

18 ஓவர் முடிவில் 181-2

Edited by கந்தப்பு

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்காட்லாந்து 207/4

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை அதிக ஓட்டங்களைப் பெற்ற அணியாக ஸ்கொட்லாந்து. 207 ஓட்டங்கள்

இத்தாலியும் ஸ்கொட்லாந்தும் பல முறை மோதியிருக்கிறார்கள். ஸ்கொட்லாந்தைவிட கூடுதல் புள்ளிகளைப் பெற்றுத்தான் இத்தாலி இந்த உலகக் கிண்ணத்துக்கு தகுதி பெற்றது.

இன்று ஸ்கொட்லாந்து இலகுவாக வெல்லப் போகுது

  • கருத்துக்கள உறவுகள்

12 ஓவர் முடிவில் 113-3.

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்காட்லாந்து இலகுவாக வென்று விட்டது!!

ஓமான் தடுமாறுது! 29/5

Edited by Eppothum Thamizhan

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.