Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குருப் Aயில்

இந்தியா

பாக்கிஸ்தான் சூப்ப‌ர்8க்கு போகும் மீத‌ம் அணிக‌ள் நாடு திரும்ப‌ச் ச‌ரி............................

  • Replies 1.1k
  • Views 34k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • ஈழப்பிரியன்
    ஈழப்பிரியன்

    போட்டியில் கலந்து கொண்டு பரிசில்களைப் பெற உடனே களத்தில் இறங்குங்கள். @மோகன் @இணையவன் @நிழலி @நியானி @கிருபன் @nunavilan @தமிழ் சிறி @ஏராளன் @யாயினி @ஈழப்பிரியன் @நிலாமதி @பெருமாள் @நன்னிச் சோழன் @Ju

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய முதலாவது போட்டியில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட தென்னாபிரிக்கா அணி, ரயான் றிக்கெல்டனின் புயல்வேக 61 (28 பந்துகள்) ஓட்டங்களுடனும், குயின்டன் டி கொக்கின் அதிரடியான 59 (41) ஓட்டங்களுடன் 8 விக்க

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட அயர்லாந்து அணி, அணித்தலைவர் லொர்கன் டக்கரின் ஆட்டமிழக்காத புயல்வேக 94 (51 பந்துகள்) ஓட்டங்களுடனும், கரெத் டெலனியின் புயல்வேக 56 (30 பந

  • கருத்துக்கள உறவுகள்

பாக்கிஸ்தான் ப‌ந்து வீச்சு மிக‌ அருமை

ச‌ட‌ப் ஹான் மீண்டும் அணிக்கு திரும்பின‌து பாக்கிஸ்தான் அணிக்கு கூடுத‌ல் ப‌ல‌ம்...........................................

  • கருத்துக்கள உறவுகள்

சிறிய அணிகள் தோற்றவண்ணமே உள்ளனர். உலகக் கோப்பையை விட, அவர்களுக்கு மேலும் சந்தர்ப்பங்கள் அமைய வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, வீரப் பையன்26 said:

இர‌ண்டு ஓவ‌ர் இருக்க‌ த‌க்க‌ நெத‌ர்ந்லாந் ம‌ச்சை வென்று விட்டின‌ம்.................அமோக‌ வெற்றி.......................

ச‌கோத‌ர‌ர் @ஏராளன் இன்று முத‌ல‌மைச்ச‌ர் ஆகிறார் ஹா ஹா😍......................

பையா, ஒருநாள் முதல்வராவதே இலட்சியம்!🤪

ஆனால் எதுவும் நிரந்தரமல்ல...

  • கருத்துக்கள உறவுகள்

காய‌ம் கார‌ன‌மாய் இல‌ங்கை வீர‌ர் வ‌ன்டு ஹ‌ச‌ர‌ங்கா உல‌க‌ கோப்பையில் இருந்து வில‌க‌ள்........................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய முதலாவது போட்டியில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட நமீபியா அணி, ஜான் நிகொல் லொஃப்டி-ஈட்டனின் 42 (38 பந்துகளில்) ஓட்டங்களுடன் 8 விக்கெட்டுகளை இழந்து 156 ஓட்டங்களை எடுத்தது.

பதிலுக்கு 157 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணி, பஸ் டீ லீட்டின் ஆட்டமிழக்காத 72 (48 பந்துகளில்) ஓட்டங்களின் உதவியுடன் 18 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 159 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது.

முடிவு: நெதர்லாந்து அணி 7 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது

நெதர்லாந்து அணி வெல்லும் எனக் கணித்த 17 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கும். நமீபியா அணி வெல்லும் எனக் கணித்த 06 பேருக்குப் புள்ளிகள் இல்லை.

இன்றைய இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அமீரகம் அணி, முஹமட் வஸீம் ஆட்டமிழக்காமல் எடுத்த 66 (45 பந்துகளில்) ஓட்டங்களுடனும், அலிஷான் ஷரஃபுவின் 55 (47 பந்துகளில்) ஓட்டங்களுடனும் 6 விக்கெட்டுகளை இழந்து 173 ஓட்டங்களை எடுத்தது.

பதிலுக்குத் துடுப்பாடிய நியூஸிலாந்து அணி ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான டிம் செய்ஃபேர்ட் மின்னல்வேக 89 (42 பந்துகளில்) ஓட்டங்களுடனும், ஃபின் அலென் ஆட்டமிழக்காமல் அதிரடியாக எடுத்த 84 (50 பந்துகளின்) ஓட்டங்களுடன் 15.2 ஓவர்களிலேயே விக்கெட் இழப்பின்றி 175 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது.

முடிவு: நியூஸிலாந்து அணி 10 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது

அனைவரும் நியூஸிலாந்து அணி வெல்லும் எனக் கணித்தமையால் தலா இரு புள்ளிகள் கிடைக்கும்.

இன்றைய மூன்றாவது போட்டியில் முதலில் துடுப்பாடப் பணிக்கப்பட்ட பாகிஸ்தான் அணி சஹிப்ஸடா பர்ஹானில் அதிரடியான 73 (41 பந்துகளில்) ஓட்டங்களுடனும், பாபர் அஸாமின் 46 (32 பந்துகளில்) ஓட்டங்களுடனும், ஷடாப் கான் மின்னல் வேகத்தில் எடுத்த 30 (12 பந்துகளில்) ஓட்டங்களுடனும் 9 விக்கெட்டுகளை இழந்து 190 ஓட்டங்களை எடுத்தது.

பதிலுக்குத் துடுப்பாடிய ஐக்கிய அமெரிக்கா அணியில் ஷுபம் ரஞ்சனே 51 (30 பந்துகளில்) ஓட்டங்களையும், ஷயான் ஜஹங்கிர் 49 (34 பந்துகளில்) ஓட்டங்களையும் எடுத்திருந்தாலும், இறுதியில் 8 விக்கெட்டுகளை இழந்து 158 ஓட்டங்களை மாத்திரமே எடுக்கமுடிந்தது.

முடிவு: பாகிஸ்தான் அணி 32 ஓட்டங்களால் வெற்றியீட்டியது

பாகிஸ்தான் அணி வெல்லும் எனக் கணித்த 22 பேருக்குத் தலா இரு புள்ளிகள் கிடைக்கும். ஐக்கிய அமெரிக்கா அணி வெல்லும் எனக் கணித்த @நிலாமதி அக்காவுக்குப் புள்ளிகள் இல்லை.

இன்றைய மூன்று போட்டிகளின் முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளார்களின் நிலைகள்:

large.IMG_5139.jpeg

முதல் மூன்று நாட்கள் முதல்வராக இருந்த @செம்பாட்டான் 13வது இடத்திற்கு சறுக்கிவிட்டார்!

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, ஏராளன் said:

பையா, ஒருநாள் முதல்வராவதே இலட்சியம்!🤪

ஆனால் எதுவும் நிரந்தரமல்ல...

மேல‌ கீழ‌ போய் வ‌ருவ‌து வ‌ழ‌க்க‌ம் தானே...............இந்த‌ முறை குண்ட‌க்க‌ ம‌ண்ட‌க்கா கேள்விக்கு என‌க்கு பெரிசா புள்ளி கிடைக்காது போல் தெரியுது..............ஆர‌ம்ப‌ சுற்று போட்டியில் புள்ளிய‌ அள்ள‌னும் அப்ப‌ தான் க‌வுர‌மான‌ புள்ளியோட‌ ந‌டுவை நின்று முக்க‌லாம் லொள்😁😛.......................

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கிருபன் said:

முதல் மூன்று நாட்கள் முதல்வராக இருந்த @செம்பாட்டான் 13வது இடத்திற்கு சறுக்கிவிட்டார்!

அது சறுக்கல் அல்ல. அதள பாதாலத்தில் விழுதல். ஒரே அடி. காணாமல் போயிடுவாய் என்டு சொல்லுவாங்கள். அதுதான் நடந்திருக்கு. இனி மெல்ல மெல்ல....😁

  • கருத்துக்கள உறவுகள்

4நாள் ப‌ரிட்சை வெற்றி க‌ர‌மாய் முடிந்தாலும்

நாளைக்கு தான் உண்மையான‌ ப‌ரிட்சை😁😛.......................

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்ரேலியாவின் முதலாவது போட்டி. என்ன மாதிரியான அணி இறங்கும் என்று தெரியேல.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாளை புதன் 11 பெப் பிரித்தானிய நேரப்படி மூன்று போட்டிகள் நடைபெறவுள்ளன.

யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

backhand-index-pointing-down_1f447.png

13) முதல் சுற்று குழு D:புதன் 11 பெப்: 5:30 AM, அஹமதாபாத், ஆப்கானிஸ்தான் எதிர் தென்னாபிரிக்கா

AFG எதிர் SA

05 பேர் ஆப்கானிஸ்தான் அணி வெல்வதாகவும்  மற்றைய 18 பேர் தென்னாபிரிக்கா அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான்

  • செம்பாட்டான்

  • நியூ பலன்ஸ்

  • வாத்தியார்

  • வாதவூரான்

  • சுவி

இப்போட்டியில் போட்டியில்  யாருக்கு புள்ளிகள் கிடைக்கும்?  dog-face_1f436.webp

backhand-index-pointing-down_1f447.png

14) முதல் சுற்று குழு B:புதன் 11 பெப்: 9:30 AM, கொழும்பு (RPS), அவுஸ்திரேலியா எதிர் அயர்லாந்து

AUS எதிர் IRE

அனைவரும் அவுஸ்திரேலியா அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர்.

இந்தப் போட்டியில் எல்லோருக்கும் புள்ளிகள் கிடைக்குமா அல்லது முட்டைகள் பரிமாறப்படுமா? cooking_1f373.webp

backhand-index-pointing-down_1f447.png

15) முதல் சுற்று குழு C:புதன் 11 பெப்: 1:30 PM, வாங்கெடே, இங்கிலாந்து எதிர் மேற்கிந்தியத் தீவுகள்

ENG எதிர் WI

18 பேர் இங்கிலாந்து அணி வெல்லும் எனவும் 05 பேர் மேற்கிந்தியத் தீவுகள் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர்.

மேற்கிந்தியத் தீவுகள்

  • செம்பாட்டான்

  • வாத்தியார்

  • வீரப் பையன்26

  • சுவி

  • ரசோதரன்

இந்தப் போட்டியில் யார் புள்ளிகள் எடுப்பார்கள்? parrot_1f99c.webp

  • கருத்துக்கள உறவுகள்

மேற்கிந்தியத் தீவுகள்

செம்பாட்டான்

வாத்தியார்

வீரப் பையன்26

சுவி

ரசோதரன்

இந்த‌ ப‌ரிட்சை மிக‌வும் க‌டின‌மான‌து.................நாளை பிழை விட‌க் கூடும்...................

ப‌ந்து வீச்சு தான் சுத‌ப்ப‌ல்

ம‌ட்டைய‌டி வீர‌ர்க‌ள் த‌ங்க‌ளின் க‌ட‌மையை ச‌ரியாக‌ செய்யின‌ம்💪.......................

  • கருத்துக்கள உறவுகள்

அதோட ஆப்கானிஸ்தானின் ஆட்டத்த நாளைக்குப் பார்ப்பியல். சுழல் பந்த வைச்சு சுழல விடுறம்.

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, கிருபன் said:

21..

22...

23....

கோஷான் சொன்னபடியே சாதித்து விட்டார்............. சுவி ஐயா கூட்டிலிருந்து பறந்து விட்டார்............. நந்தனை வரவேற்கின்றோம்...................🤣.

  • கருத்துக்கள உறவுகள்

தென் ஆபிரிக்கா வீர‌ர்க‌ள் நாளைக்கு அப்கானிஸ்தான் வீர‌ர்க‌ளை விர‌ட்டி அடிக்க‌ போகின‌ம்............

அந்த‌ குருப்பில்

நியுசிலாந் ம‌ற்றும் தென் ஆபிரிக்கா சூப்ப‌ர்8க்கு போகும்

அப்கானிஸ்தான் மீத‌ம் இருக்கும் இர‌ண்டு போட்டிய‌ விளையாடி போட்டு நாடு திரும்ப‌ ச‌ரி...........................

  • கருத்துக்கள உறவுகள்

முதலமைச்சர் @ஏராளன் க்கு வாழ்த்துக்கள்.

முதலமைச்சராக இருந்த @செம்பாட்டான் ஊழல் காரணமாக பதவியைவிட்டு ஓடப்போய் எங்கோ ஒழிந்து கொண்டார்.

மிகவும் பலசாலியான @goshan_che எல்லோரையும் தனது தோளில் சுமக்கிறார்.

Edited by ஈழப்பிரியன்

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, alvayan said:

இப்ப அந்ததலையீடுகள் இருப்பதாக தெரியவில்லையே...சிலவேளை இது அமசடக்கமோ...ஒரு தலையீடு மட்டும் பார்த்தேன்...அனுர பாகிஸ்தான் தலைவரிடம் இந்தியாவுடன் விளையாடும்படி கேட்டது....😁

இது ஒருவகை...அதிர்ஸ்டம்...இலங்கை தப்பித்தது

இதுதான் நம்ம ஸ்டைலு...குத்திற இடத்தை குத்துவம் ....பின்னர் பம்மிக்கொண்டு திரிவம்

22 hours ago, வீரப் பையன்26 said:

@vasee

ப‌ல‌ர் மன‌ங்க‌ளில் இது வ‌ந்து போகும்

2010 அந்த‌ கால‌ப் ப‌குதியில் தான் ப‌ல‌ருக்கு தெரியும் அப்கானிஸ்தான் அணி என்ர‌ ஒன்று இருக்கேன்று

1996க‌ளில் முத‌ல் முறை உல‌க‌ கோப்பை தூக்கின‌ இல‌ங்கை அணி கிட்ட‌ த‌ட்ட‌ 20வ‌ருட‌மாய் ம‌லை போல் ப‌ல‌மாய் இருந்த‌ அணி

அப்கானிஸ்தானின் அசுர‌ வ‌ள‌ர்ச்சி இல‌ங்கையின் வீழ்ச்சியாக‌ மாறி விட்ட‌து கிரிக்கேட்டில்

இனி இல‌ங்கை உல‌க‌ கோப்பை வெல்லும் என்று கேட்டால் அது நூற்றுக்கு பூச்சிய‌ம் என‌ தான் சொல்லுவேன்.....................

ம‌லை போல் இருக்கும் இந்தியாவை இப்போது உள்ள‌ ஆசிய‌ நாடுக‌ளால் வெல்ல‌ முடியாது.................

அவுஸ்ரேனியா

தென் ஆபிரிக்கா

இங்லாந்

நியுசிலாந் இந்த‌ நாடுக‌ள் கிரிக்கேட்டில் ந‌ல்ல‌ நிலையில் இருக்கின‌ம்...............

இல‌ங்கை கிரிக்கேட்டை அழித்து நாச‌ம் ஆக்கின‌ பெருமை இல‌ங்கை அர‌சிய‌ல் வாதிக‌ளையே சேரும்......................................

23 hours ago, வீரப் பையன்26 said:

தொட‌க்க‌ வீர‌ர்க‌ள் ந‌ல்ல‌ தொட‌க்க‌ம் கொடுக்காட்டி தோல்வி தான்

நேற்று க‌மெட் மெடிஸ் வ‌ந்து அதிர‌டியா விளையாடின‌ ப‌டியால் தான் 163 ர‌ன்ஸ் அடிக்க‌ முடிஞ்ச‌து

இல‌ங்கை க‌ப்ட‌ன் தொட‌ர்ந்து ர‌ன்ஸ் அடிக்காம‌ அவுட் ஆகிறார்.............

சூப்ப‌ர்8க்கு போவின‌ம்

சிம்பாவேயை வென்றால்

இல்லையே சிம்பாவே சூப்ப‌ர்8க்கு போய் விடும்...................

இலங்கை அணி விளையாடும் குறூப்பில் அவுஸ்ரேலியா உள்ளடங்கலாக அனைத்து அணிகளும் மோசமான அணியாக இருக்கின்றது, ஆப்கானிஸ்தானுக்கு நியுசிலாந்து, தென்னாபிரிக்கா என நல்ல அணிகளுடன் போட்டியினை வைத்து ஒரு நல்ல அணியினை சுப்பர் 8 முன்னமே கழட்டி விடப்போகிறார்கள், இன்றைய போட்டி தென்னாபிரிக்காவுடன் ஆப்கானிஸ்தானுக்கு, இந்திய பிட்ச் மோசமான பிட்ச் இந்த் மோடி பிட்ச் ஒன்றுக்கும் உதவாத செத்த பிட்ச், போட்டி வேறு காலையில் நடக்கவுள்ளது 250 ஓட்டங்கள் போனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இலங்கை அணி சுப்பர் 8 க்கு தகுதியான அணியே இல்லை, சிம்பாவேயிடம் தோற்றால் சிம்பாவே சுப்பர் 8 க்கு போய்விடும் என நினைக்கிறேன்.

19 minutes ago, ஈழப்பிரியன் said:

முதலமைச்சர் @ஏராளன் க்கு வாழ்த்துக்கள்.

முதலமைச்சராக இருந்த @செம்பாட்டான் ஊழல் காரணமாக பதவியைவிட்டு ஓடப்போய் எங்கோ ஒழிந்து கொண்டார்.

மிகவும் பலசாலியான @goshan_che எல்லோரையும் தனது தோளில் சுமக்கிறார்.

The Story of the Greek Titan Atlas

கோசான், எனது இடத்தினை தற்காலிகமாக கைப்பற்றியுள்ளார் அவ்வளவே!

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

இன்றைய முதலாவது போட்டியில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட நமீபியா அணி, ஜான் நிகொல் லொஃப்டி-ஈட்டனின் 42 (38 பந்துகளில்) ஓட்டங்களுடன் 8 விக்கெட்டுகளை இழந்து 156 ஓட்டங்களை எடுத்தது.

பதிலுக்கு 157 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணி, பஸ் டீ லீட்டின் ஆட்டமிழக்காத 72 (48 பந்துகளில்) ஓட்டங்களின் உதவியுடன் 18 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 159 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது.

முடிவு: நெதர்லாந்து அணி 7 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது

நெதர்லாந்து அணி வெல்லும் எனக் கணித்த 17 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கும். நமீபியா அணி வெல்லும் எனக் கணித்த 06 பேருக்குப் புள்ளிகள் இல்லை.

இன்றைய இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அமீரகம் அணி, முஹமட் வஸீம் ஆட்டமிழக்காமல் எடுத்த 66 (45 பந்துகளில்) ஓட்டங்களுடனும், அலிஷான் ஷரஃபுவின் 55 (47 பந்துகளில்) ஓட்டங்களுடனும் 6 விக்கெட்டுகளை இழந்து 173 ஓட்டங்களை எடுத்தது.

பதிலுக்குத் துடுப்பாடிய நியூஸிலாந்து அணி ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான டிம் செய்ஃபேர்ட் மின்னல்வேக 89 (42 பந்துகளில்) ஓட்டங்களுடனும், ஃபின் அலென் ஆட்டமிழக்காமல் அதிரடியாக எடுத்த 84 (50 பந்துகளின்) ஓட்டங்களுடன் 15.2 ஓவர்களிலேயே விக்கெட் இழப்பின்றி 175 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது.

முடிவு: நியூஸிலாந்து அணி 10 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது

அனைவரும் நியூஸிலாந்து அணி வெல்லும் எனக் கணித்தமையால் தலா இரு புள்ளிகள் கிடைக்கும்.

இன்றைய மூன்றாவது போட்டியில் முதலில் துடுப்பாடப் பணிக்கப்பட்ட பாகிஸ்தான் அணி சஹிப்ஸடா பர்ஹானில் அதிரடியான 73 (41 பந்துகளில்) ஓட்டங்களுடனும், பாபர் அஸாமின் 46 (32 பந்துகளில்) ஓட்டங்களுடனும், ஷடாப் கான் மின்னல் வேகத்தில் எடுத்த 30 (12 பந்துகளில்) ஓட்டங்களுடனும் 9 விக்கெட்டுகளை இழந்து 190 ஓட்டங்களை எடுத்தது.

பதிலுக்குத் துடுப்பாடிய ஐக்கிய அமெரிக்கா அணியில் ஷுபம் ரஞ்சனே 51 (30 பந்துகளில்) ஓட்டங்களையும், ஷயான் ஜஹங்கிர் 49 (34 பந்துகளில்) ஓட்டங்களையும் எடுத்திருந்தாலும், இறுதியில் 8 விக்கெட்டுகளை இழந்து 158 ஓட்டங்களை மாத்திரமே எடுக்கமுடிந்தது.

முடிவு: பாகிஸ்தான் அணி 32 ஓட்டங்களால் வெற்றியீட்டியது

பாகிஸ்தான் அணி வெல்லும் எனக் கணித்த 22 பேருக்குத் தலா இரு புள்ளிகள் கிடைக்கும். ஐக்கிய அமெரிக்கா அணி வெல்லும் எனக் கணித்த @நிலாமதி அக்காவுக்குப் புள்ளிகள் இல்லை.

இன்றைய மூன்று போட்டிகளின் முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளார்களின் நிலைகள்:

large.IMG_5139.jpeg

முதல் மூன்று நாட்கள் முதல்வராக இருந்த @செம்பாட்டான் 13வது இடத்திற்கு சறுக்கிவிட்டார்!

ரசோ அண்ணா நவ் 😂👇

1 hour ago, செம்பாட்டான் said:

அவுஸ்ரேலியாவின் முதலாவது போட்டி. என்ன மாதிரியான அணி இறங்கும் என்று தெரியேல.

பிந்திய தகவல்களின் படி கிரிகெட் அணிதான் இறங்குமாம்😂

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, vasee said:

இலங்கை அணி விளையாடும் குறூப்பில் அவுஸ்ரேலியா உள்ளடங்கலாக அனைத்து அணிகளும் மோசமான அணியாக இருக்கின்றது, ஆப்கானிஸ்தானுக்கு நியுசிலாந்து, தென்னாபிரிக்கா என நல்ல அணிகளுடன் போட்டியினை வைத்து ஒரு நல்ல அணியினை சுப்பர் 8 முன்னமே கழட்டி விடப்போகிறார்கள், இன்றைய போட்டி தென்னாபிரிக்காவுடன் ஆப்கானிஸ்தானுக்கு, இந்திய பிட்ச் மோசமான பிட்ச் இந்த் மோடி பிட்ச் ஒன்றுக்கும் உதவாத செத்த பிட்ச், போட்டி வேறு காலையில் நடக்கவுள்ளது 250 ஓட்டங்கள் போனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இலங்கை அணி சுப்பர் 8 க்கு தகுதியான அணியே இல்லை, சிம்பாவேயிடம் தோற்றால் சிம்பாவே சுப்பர் 8 க்கு போய்விடும் என நினைக்கிறேன்.

The Story of the Greek Titan Atlas

கோசான், எனது இடத்தினை தற்காலிகமாக கைப்பற்றியுள்ளார் அவ்வளவே!

சிம்பாவேயிட‌ம் இல‌ங்கை ப‌ல‌ வாட்டி தோத்து இருக்கு.................சொந்த‌ ம‌ண்ணில் சிம்பாவேயிட‌ம் தொட‌ரையே தோத்த‌வை

ஜ‌ய‌சூரியா கொச்சா இருப்ப‌தால்

இல‌ங்கை அணிய‌ சூப்ப‌ர்8க்கு எப்ப‌டியாவ‌து ஆலோச‌னை சொல்லி அணிய‌ வெல்ல‌ வைக்க‌ பாப்பார்.................................

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

கோஷான் சொன்னபடியே சாதித்து விட்டார்............. சுவி ஐயா கூட்டிலிருந்து பறந்து விட்டார்............. நந்தனை வரவேற்கின்றோம்...................🤣.

39 minutes ago, ஈழப்பிரியன் said:

முதலமைச்சர் @ஏராளன் க்கு வாழ்த்துக்கள்.

முதலமைச்சராக இருந்த @செம்பாட்டான் ஊழல் காரணமாக பதவியைவிட்டு ஓடப்போய் எங்கோ ஒழிந்து கொண்டார்.

மிகவும் பலசாலியான @goshan_che எல்லோரையும் தனது தோளில் சுமக்கிறார்.

சக்தி கொடு….😂

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, vasee said:

கோசான், எனது இடத்தினை தற்காலிகமாக கைப்பற்றியுள்ளார் அவ்வளவே!

தேவராஜ் ரசோ அண்ணா,

சூர்யா கோஷான்

அமுல் பேபி கலெக்டர் - வசி😂

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, வீரப் பையன்26 said:

மேற்கிந்தியத் தீவுகள்

செம்பாட்டான்

வாத்தியார்

வீரப் பையன்26

சுவி

ரசோதரன்

நாளை கீழே இருப்பவர்கள் மேலே போகவும் மேலே இருப்பவர்கள் கீழே போகவும் வாய்ப்பு இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

தேவராஜ் ரசோ அண்ணா,

சூர்யா கோஷான்

அமுல் பேபி கலெக்டர் - வசி😂

"நீங்கள் வச்சதுதான் சட்டம். இல்லாட்டி அடி உதை. நீங்கள் கூப்பிட்டால் எல்லாரும் முன்னால வந்து நிற்க வேண்டும்."

இந்தப் படம் முழுக்கவே இப்படியான பல காட்சிகள். எத்தினை தடவை இந்தப் படத்தப் பாத்திருப்பன். கண்ணீர் வராமல் படம் முடிஞ்சதில்லை. 🎉

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, புலவர் said:

நாளை கீழே இருப்பவர்கள் மேலே போகவும் மேலே இருப்பவர்கள் கீழே போகவும் வாய்ப்பு இருக்கிறது.

ஓம் புல‌வ‌ர் அண்ணா.........................

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

பிந்திய தகவல்களின் படி கிரிகெட் அணிதான் இறங்குமாம்😂

ஏன் இந்த சோதனை. வேண்டாம் கோபால் வேண்டாம்.

Edited by செம்பாட்டான்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.