Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, alvayan said:

நானும் எனது விருப்பின் அடிப்படையில்தான் தெரிவுசெய்வேன் ...அவர்களின் திறமையை அப்புறம்தான் பார்ப்பேன்

நிலாமதி அக்காவும் உங்களை போல என்றே நினைக்கிறேன்.

  • Replies 1.1k
  • Views 34k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • ஈழப்பிரியன்
    ஈழப்பிரியன்

    போட்டியில் கலந்து கொண்டு பரிசில்களைப் பெற உடனே களத்தில் இறங்குங்கள். @மோகன் @இணையவன் @நிழலி @நியானி @கிருபன் @nunavilan @தமிழ் சிறி @ஏராளன் @யாயினி @ஈழப்பிரியன் @நிலாமதி @பெருமாள் @நன்னிச் சோழன் @Ju

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய முதலாவது போட்டியில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட தென்னாபிரிக்கா அணி, ரயான் றிக்கெல்டனின் புயல்வேக 61 (28 பந்துகள்) ஓட்டங்களுடனும், குயின்டன் டி கொக்கின் அதிரடியான 59 (41) ஓட்டங்களுடன் 8 விக்க

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட அயர்லாந்து அணி, அணித்தலைவர் லொர்கன் டக்கரின் ஆட்டமிழக்காத புயல்வேக 94 (51 பந்துகள்) ஓட்டங்களுடனும், கரெத் டெலனியின் புயல்வேக 56 (30 பந

  • கருத்துக்கள உறவுகள்

முதல்வர் வீரப்பையனுக்கு வாழ்த்துகள். நான் முன்பு எனது விருப்பத் தேர்வுகளுக்கு முன்னுரிமை கொடுத்தேன். முடிவுகள் தலைகீழாக இருந்தன .இப்பொழது பலமான அணியைத் தெரிவு செய்வதால் அண்மைக்கால போட்டிகளில் ஒரளவுக்கு முன்னேற்றம் இருப்பதை அறிந்தேன். ஆகவே விருப்பத் தேர்வை நிநறுத்தி விட்டேன். தேர்தல் போட்டிகளில் விருப்பத் தேர்வையைே தெரிவு செய்கிறேன். வெல்லும் பக்கத்தில் நிற்பதை விட நிற்கும் பக்கத்தை வெல்ல வைக்க விரும்புவதையே எனது தெரிவாக வைத்திருக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, புலவர் said:

விருப்ப‌த்தின் அடிப்ப‌டையில் 2015ம் ஆண்டு 50ஓவ‌ர் உல‌க‌ கோப்பையை நியுசிலாந் தான் வெல்லும் என‌ விரும்பினேன்

ஆனால் பின‌லில் நியுசிலாந்தை வென்று அவுஸ் கோப்பைய வென்றார்க‌ள்

அதே உல‌க‌ கோப்பையில் இந்தியா வ‌ங்கிளாதேஸ் கூட‌ தோக்கும் என‌ விருப்ப‌த்தின் அடிப்ப‌டையில் தெரிவு செய்தேன் ஆனால் அதில் இந்தியா வென்ற‌து...................

இப்ப‌ நான் ஒவ்வொரு அணியின் க‌ட‌ந்த‌ சில‌ மாத‌ விளையாட்டை க‌வ‌னித்து விட்டு தான் போட்டியில் க‌ல‌ந்து கொண்டேன்....................

இன்னும் ப‌ல‌ போட்டிக‌ள் இருக்கு

ப‌ல‌மான‌ 8அணிக‌ள் சூப்ப‌ர்8க்கு போவ‌து கிட்ட‌ த‌ட்ட‌ உறுதியாகிட்டு

ம‌ற்ற‌ சின்ன‌ அணிக‌ள் வார‌ கிழ‌மையோட‌ நாடு திருப‌ச் ச‌ரி...............

இல‌ங்கையை விட‌ அப்கானிஸ்தான் சிற‌ந்த‌ அணி...........அவ‌ர்க‌ள் இட‌ம் பிடிச்ச‌ அணியில் இர‌ண்டு ப‌ல‌மான‌ அணிக‌ள் இட‌ம் பிடிக்கும் போது அது அப்கானிஸ்தான் அணிக்கு சவாலான‌ போட்டியாய் தான் இருக்கும்.................

இல‌ங்கை

இட‌ம் பிடித்த‌ குருப்பில் அவுஸ் தான் ப‌ல‌மான‌ அணி ம‌ற்ற‌ அணிக‌ள் மெதுவாக‌ வ‌ள‌ந்து வ‌ரும் அணிக‌ள்..............உதார‌ன‌த்துக்கு அய‌ர்லாந் ம‌ற்றும் ஓமான்.................சிம்பாவே அணி இல‌ங்கையை இந்த‌ உல‌க‌ கோப்பையில் வெல்ல‌ சிறு வாய்ப்பு இருக்கு...............சிம்பாவேயிட‌ம் இல‌ங்கை தோத்தால் அவ‌ர்க‌ளால் சூப்ப‌ர்8க்கு போக‌ முடியாது.....................

என‌க்கு இந்தியா கோப்பை வெல்வ‌தில் பெரிய‌ உட‌ன் பாடு இல்லை..................தென் ஆபிரிக்கா அல்ல‌து நியுசிலாந் வென்றால் ம‌கிழ்ச்சி புல‌வ‌ர் அண்ணா.....................................

  • கருத்துக்கள உறவுகள்

முதலமைச்சர் @வீரப் பையன்26 க்கு வாழ்த்துக்கள்.

பல் நாள் கனவு நனவாகி இருக்கு.

இன்று அப்கானிஸ்தானை தெரிவு செய்த உறவுகளுக்கும் பாராட்டுக்கள்.

போராடித் தோற்றது தோல்வியே இல்லை.

சுமைதாங்கியை பார்த்துக் கொண்டு போகாமல்

முடிந்தவர்கள் தண்ணீர் தெளித்து குளுக்கோஸ் கொடுத்து

விமல் வீரவன்சவின் உண்ணாவிரதத்தில் எப்படி

உசாராக இருந்தாரோ அதேமாதிரி @goshan_che னும் இருக்கணும்.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துகள் வீரப்பையன்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, செம்பாட்டான் said:

நான் விருப்பின் அடிப்படையிலேயெ தெரிவு செய்வேன். புள்ளிக்காக, வேண்டா வெறுப்பா தெரிவு செய்துபோட்டு, குத்துதே குடையுதே என்று என்னால் இருக்க முடியாது. அது சரியும் அல்ல.

1 hour ago, alvayan said:

நானும் எனது விருப்பின் அடிப்படையில்தான் தெரிவுசெய்வேன் ...அவர்களின் திறமையை அப்புறம்தான் பார்ப்பேன்

Yaroslav Trofimov ...

எனக்கு மட்டும் ஏன் இந்த அனுபவம் வரவில்லை?

குருட்டாம் போக்கில் தெரிவு செய்வதோடு சரி.

அடுத்த முறை எனது அட்மினை தெரிவு செய்ய சொல்லவேண்டியதுதான்.🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வீரப் பையன்26 said:

என‌க்கு இந்தியா கோப்பை வெல்வ‌தில் பெரிய‌ உட‌ன் பாடு இல்லை..................தென் ஆபிரிக்கா அல்ல‌து நியுசிலாந் வென்றால் ம‌கிழ்ச்சி புல‌வ‌ர் அண்ணா.....................................

அப்பசரி ...விரைவில் பதவி இறக்கப்படுவீர்கள்.... 🙃

வீரப்பையனாரே..உங்கள் முதல்வர் பதவிக்கு எனது வாழ்த்துக்கள்

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

நிலாமதி அக்காவும் உங்களை போல என்றே நினைக்கிறேன்.

நீங்க எங்கையோ போய்ட்டீங்க...உங்க ஏரியாவில எனக்கு சீற் பிடிச்சு வைச்சிருக்கிறீங்களா...

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

இன்றைய முதலாவது போட்டியில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட தென்னாபிரிக்கா அணி, ரயான் றிக்கெல்டனின் புயல்வேக 61 (28 பந்துகள்) ஓட்டங்களுடனும், குயின்டன் டி கொக்கின் அதிரடியான 59 (41) ஓட்டங்களுடன் 8 விக்கெட்டுகளை இழந்து 187 ஓட்டங்களை எடுத்தது.

பதிலுக்கு 188 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி, ரஹ்மனுல்லா குர்பாஸினின் மின்னல்வேக 84 (42) ஓட்டங்களின் உதவியுடன் 19.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 187 ஓட்டங்களைப் பெற்று போட்டியை சமப்படுத்தியது. லுங்கி என்கிடியும் கேஷவ் மஹராஜும் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர்.

இந்நிலையில் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் சுப்பர் ஓவரில், விக்கெட் இழப்பின்றி 17 ஓட்டங்களை ஆப்கானிஸ்தான் அணி பெற்றது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி ஒரு விக்கெட்டை இழந்து 17 ஓட்டங்களைப் பெற முதலாவது சுப்பர் ஓவர் முடிவிலும் வெற்றியாளர் தீர்மானிக்கப்படவில்லை.

அடுத்த சுப்பர் ஓவரில் விக்கெட் இழப்பின்றி 23 ஓட்டங்களை தென்னாபிரிக்கா அணி பெற்றது. 24 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி, 2 விக்கெட்டுகளை இழந்து 19 ஓட்டங்களையே பெற்றுத் தோல்வியடைந்தது.

முடிவு: தென்னாபிரிக்கா அணி இரண்டாவது சுப்பர் ஓவர் முடிவில் வெற்றியீட்டியது

தென்னாபிரிக்கா அணி வெல்லும் எனக் கணித்த 18 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கும். ஆப்கானிஸ்தான் அணி வெல்லும் எனக் கணித்த 05 பேருக்குப் புள்ளிகள் இல்லை.

இன்றைய இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி, மார்க்கஸ் ஸ்டொய்னிஸின் அதிரடியான 45 (29 பந்துகள்) ஓட்டங்கள், ஜொஷ் இங்லிஸின் மின்னல்வேக 37 (17 பந்துகள்) ஓட்டங்கள், மற் றென்ஷோ 37 (33 பந்துகள்) ஓட்டங்களுடனும் 6 விக்கெட்டுகளை இழந்து 182 ஓட்டங்களை எடுத்தது.

பதிலுக்குத் துடுப்பாடிய அயர்லாந்து அணியில் ஜோர்ஜ் டொக்ரல் 41 (29 பந்துகள்) ஓட்டங்களைத் தவிர பிறர் வேகமாகப் பவிலியனுக்குத் திரும்பியதால் 16.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 115 ஓட்டங்களுடன் சுருண்டுகொண்டது. நாதன் எலிஸும் அடம் ஸாம்பாவும் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர்.

முடிவு: அவுஸ்திரேலியா அணி 67 ஓட்டங்களால் வெற்றியீட்டியது

அனைவரும் அவுஸ்திரேலியா அணி வெல்லும் எனக் கணித்தமையால் தலா இரு புள்ளிகள் கிடைக்கும்.

இன்றைய மூன்றாவது போட்டியில் முதலில் துடுப்பாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் விரைவில் ஆட்டமிழந்தாலும், பின்னர் வந்த வீரர்கள் வேகமாக ஓட்டங்களைப் பெற்றதாலும், ஷேர்ஃபான் ரதர்போர்ட்டின் புயல்வேக 76 (42 பந்துகள்) ஓட்டங்களுடனும் ஜேசன் ஹோல்டரின் மின்னல்வேக 33 (17 பந்துகள்) ஓட்டங்களுடனும் 6 விக்கெட்டுகளை இழந்து 196 ஓட்டங்களை எடுத்தது.

பதிலுக்குத் துடுப்பாடிய இங்கிலாந்து அணியின் வீரர்கள் வேகமாக அடித்தாட முயன்று ஆட்டமிழந்து பவிலியனுக்குத் திரும்பிக்கொண்டதாலும், பின்னணி வீரர்கள் குறைவான ஓட்டங்களுடனேயே ஆட்டமிழந்ததாலும், சாம் கரனின் ஆட்டமிழக்காது எடுத்த 43 (30 பந்துகளில்) ஓட்டங்களுடன் 19 ஓவர்களின் சகல விக்கெட்டுகளையும் இழந்து 166 ஓட்டங்களை மாத்திரமே எடுக்கமுடிந்தது.

முடிவு: மேற்கிந்தியத் தீவுகள் அணி 30 ஓட்டங்களால் வெற்றியீட்டியது

மேற்கிந்தியத் தீவுகள் அணி வெல்லும் எனக் கணித்த 05 பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கும். இங்கிலாந்து அணி வெல்லும் எனக் கணித்த 18 பேருக்குப் புள்ளிகள் இல்லை.

இன்றைய மூன்று போட்டிகளின் முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளார்களின் நிலைகள்:

large.IMG_5140.jpeg

இன்றைய முதல்வராக @வீரப் பையன்26 கதிரையில் வீற்றிருக்கின்றார்!

வீரப்பனுக்கு வாழ்த்துக்கள், பங்குபற்றிய எல்லோருக்கும் வாழ்த்துக்கள், பாராட்டுக்கள். இந்த தடவை சிறியர், குமாரசாமியரை போட்டியில் காணவில்லை. பழைய போட்டிகளில் நொந்து போனார்களோ.

எனது தெரிவுகள் எல்லாம் தர நிலைகளை அடிப்படையாக கொண்டவை. ஆனால், நான் விரும்புவது எல்லாம் ஒவ்வொரு தடவையும் தர நிலையில் குறைவான அணி தர நிலையில் உயர்வான அணியை தோற்கடிக்க வேண்டும் என்பதுதான்.

விளையாட்டை பார்ப்பது எல்லாம் இல்லை. அவ்வப்போது ஓட்டவிபரத்தை பார்ப்பது மட்டும்தான். விளையாடும் பெரும்பாலான வீரர்களின் முகமே எப்படி என தெரியாது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புலவர் said:

முதல்வர் வீரப்பையனுக்கு வாழ்த்துகள். நான் முன்பு எனது விருப்பத் தேர்வுகளுக்கு முன்னுரிமை கொடுத்தேன். முடிவுகள் தலைகீழாக இருந்தன .இப்பொழது பலமான அணியைத் தெரிவு செய்வதால் அண்மைக்கால போட்டிகளில் ஒரளவுக்கு முன்னேற்றம் இருப்பதை அறிந்தேன். ஆகவே விருப்பத் தேர்வை நிநறுத்தி விட்டேன். தேர்தல் போட்டிகளில் விருப்பத் தேர்வையைே தெரிவு செய்கிறேன். வெல்லும் பக்கத்தில் நிற்பதை விட நிற்கும் பக்கத்தை வெல்ல வைக்க விரும்புவதையே எனது தெரிவாக வைத்திருக்கிறேன்.

திறமையின் அடிப்படையில்தான் விருப்பு வரும் ...வெறுப்பின் அடிப்படைலும் விருப்பு வரும் ...உதாரணம்....இந்தியா ...இலங்கைமீதான வெறுப்பிலும் இந்தியா தெரிவாகியது ...முடிவு வெற்றியோ தோல்வியோ தெரியாது..

  • கருத்துக்கள உறவுகள்

இம்முறை நான் விருப்பத்தின் அடிப்படையில் தெரிவு செய்யவில்லை. விருப்பத்தின் அடிப்படையில் தெரிவு செய்து இருந்தால் இந்தியா வெல்லும் என்று விடை எழுதியிருக்க மாட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, செம்பாட்டான் said:

ஆமாம். இலங்கையின் முதலாவது டெஸ்ட் போட்டி இங்குதான் நடந்தது. இலங்கையின் முதலாவது டெஸ்ட் வெற்றியும் இங்குதான். அம்பயரின் உதவியுடன் இந்தியாவை வென்றிருந்தார்கள். கால்ல பந்து பட்டாலே LBW குடுத்தார்கள். மறக்க முடியாத போட்டி அது.

இந்த மைதானம் சிறிய மைதானம். பலேகல்ல மைதானம் வந்தாப் பிறகு, இங்கு சர்வதேசப் போட்டிகள் நடப்பதில்லை. கழகங்களிடையேயான போட்டிகள் இன்றும் நடக்கிறது.

கொழும்பு ஓவல் என்றும் இம்மைதானத்தை அளைப்பார்கள்.

அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் பெரும்பாலோர் இந்தியா அணிக்கே ஆதரவு. கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், சிவராமகிருஷ்ணன் போன்ற தமிழக வீரர்கள் இந்தியா அணியில் இடம் பிடித்தார்கள். இலங்கை வென்றதும் ஜெ ஆர் ஜெயவர்த்தன மறுநாள் அரச விடுமுறையாக அறிவித்தார். இலங்கை நடுவர்கள் அப்பட்டமாக இலங்கை அணிக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கினார்கள். இந்தியா அணித்தலைவர் கபில்தேவ், இலங்கை அணி வெளிநாட்டில் டெஸ்ட் போட்டியில் வெல்லமாட்டார்கள் என்று போட்டி முடிவில் நடைபெற்ற பேட்டி ஒன்றில் கூறியது இப்பொழுதும் ஞாபகத்தில் இருக்கிறது. பிறகு நடந்த ஒருநாள் போட்டி ஒன்றில் இந்தியா வெல்லும் நிலையில் இருக்கும்போது காலநிலை சரியில்லை என்று சொல்லி போட்டியினை இலங்கை நடுவர்கள் நிறுத்தியிருந்தார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, கந்தப்பு said:

இந்த லீவு விட்ட சம்பவம் இரண்டு நடந்ததா....உலக சம்பியனான இந்தியாவை வீழ்த்தியதன் பினர் நடந்த போட்டியில் இலங்கை வென்றது என்பதும் இதுதானோ ..அப்ப விளப்பம் குறைந்த பருவம்....

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, கந்தப்பு said:

அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் பெரும்பாலோர் இந்தியா அணிக்கே ஆதரவு.

அந்தக் காலத்தில் பலரது வீடுகளில் இந்திரா அம்மையாரின் படம் இருந்தது.

அதெல்லாம் ஒரு காலம்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஈழப்பிரியன் said:

அந்தக் காலத்தில் பலரது வீடுகளில் இந்திரா அம்மையாரின் படம் இருந்தது.

அதெல்லாம் ஒரு காலம்.

நான் அந்த நேரம்..இந்திராகாந்தி பட ஆர்ட்டிஸ்ட்....கிளிநொச்சி உருத்திரபுர வாசிகசாலையில் நான் வரைந்தபடம் மாட்டப்பட்டிருந்தது ... பின்னர் இந்தியன் ஆமியிடம் சித்திரவதையும் ...அடியோடையும் இந்தியா வெறுப்பு....இந்திய கிரிகட் வீரர்களின் தனி விருப்பாலும் ....இலங்கை அணி மீதான வெறுப்பாலும் இப்ப இந்திய அணி ஆதரவாளன்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கந்தப்பு said:

அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் பெரும்பாலோர் இந்தியா அணிக்கே ஆதரவு. கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், சிவராமகிருஷ்ணன் போன்ற தமிழக வீரர்கள் இந்தியா அணியில் இடம் பிடித்தார்கள். இலங்கை வென்றதும் ஜெ ஆர் ஜெயவர்த்தன மறுநாள் அரச விடுமுறையாக அறிவித்தார். இலங்கை நடுவர்கள் அப்பட்டமாக இலங்கை அணிக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கினார்கள். இந்தியா அணித்தலைவர் கபில்தேவ், இலங்கை அணி வெளிநாட்டில் டெஸ்ட் போட்டியில் வெல்லமாட்டார்கள் என்று போட்டி முடிவில் நடைபெற்ற பேட்டி ஒன்றில் கூறியது இப்பொழுதும் ஞாபகத்தில் இருக்கிறது. பிறகு நடந்த ஒருநாள் போட்டி ஒன்றில் இந்தியா வெல்லும் நிலையில் இருக்கும்போது காலநிலை சரியில்லை என்று சொல்லி போட்டியினை இலங்கை நடுவர்கள் நிறுத்தியிருந்தார்கள்.

ஓம். கபில் சொன்னது ஞாபகம். அவர்களுக்கு வெளிநாட்டில் வெல்ல நீண்ட காலம் எடுத்தது.

இதே விளையாட்டை, அவர்கள் அடுத்து வந்த பாகிஸ்தானிடம் காட்ட, இம்ரான் கான் தங்கள் வீரர்களைக் கூட்டிக் கொண்டுபோய் மைதானத்தின் மத்தியில் இருந்துவிட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, செம்பாட்டான் said:

ஓம். கபில் சொன்னது ஞாபகம். அவர்களுக்கு வெளிநாட்டில் வெல்ல நீண்ட காலம் எடுத்தது.

இதே விளையாட்டை, அவர்கள் அடுத்து வந்த பாகிஸ்தானிடம் காட்ட, இம்ரான் கான் தங்கள் வீரர்களைக் கூட்டிக் கொண்டுபோய் மைதானத்தின் மத்தியில் இருந்துவிட்டார்.

நானும் இந்த போட்டியை தொலைக்காட்சியில் பார்த்தேன். அடுத்த டெஸ்ட் போட்டியில் Javed Miandad விஸ்டன் புத்தகத்தை கொண்டுவந்து இலங்கை நடுவர்களுக்கு கிரிக்கெட் விளையாட்டு விதிகளை விளங்கப்படுத்த சிங்கள சனம் சிங்களத்தில் கூச்சல் போட்டது நினைவுக்கு வருகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் துலீப் மெண்டிஸின் தாயகமாக ஓமன் மாறியது ஏன்?

முன்னாள் இலங்கை கேப்டன், ஓமன் ஒரு கிரிக்கெட் நாடாக எழுச்சி பெறுவதில் முக்கிய பங்கு வகித்துள்ளார்.

மதுஷ்கா பாலசூரியா

பிப்ரவரி 12, 2026, காலை 6:24 • 8 மணி நேரத்திற்கு முன்பு

ஜூன் 2, 2024 அன்று பிரிட்ஜ்டவுன், டி20 உலகக் கோப்பை 2024, நமீபியா vs ஓமான், சூப்பர்-ஓவரில் நமீபியாவிடம் தோல்வியடைந்தபோது ஓமான் தலைமை பயிற்சியாளர் துலீப் மெண்டிஸ் அவர்களைப் பார்க்கிறார்.

தலைமை பயிற்சியாளர் துலீப் மெண்டிஸ் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக பொறுப்பில் உள்ளார் •   ஐ.சி.சி/கெட்டி இமேஜஸ்

துலீப் மெண்டிஸ் முதன்முதலில் மஸ்கட்டில் வந்தபோது , ஒரு வளர்ந்து வரும் நாடு சர்வதேச கிரிக்கெட்டில் கால் பதிக்க உதவினார். அவர் அங்கு தங்கியிருப்பது குறுகிய காலம் மட்டுமே என்று எதிர்பார்த்தார். அது 13 ஆண்டுகளுக்கு முன்பு.

இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறும் 2026 போட்டிகள் ஓமானின் நான்காவது டி20 உலகக் கோப்பையாகும் , மேலும் மெண்டிஸ் இந்தப் பயணம் முழுவதும் விளையாடியுள்ளார். அசோசியேட் கிரிக்கெட்டில் போட்டி சக்தியாக வளர்ந்துள்ள ஒரு பாலைவன நாட்டில் அவர் தங்கி இரண்டாவது வீட்டைக் கண்டுபிடிப்பார் என்று எதிர்பார்க்கவில்லை.

"ஆரம்பத்தில் நான் ஒன்று அல்லது இரண்டு வருடங்கள் அங்கு சென்றேன், இப்போது சுமார் 13 [14] வருடங்கள் அங்கேயே இருக்கிறேன்," என்று ஓமான் தலைமை பயிற்சியாளரான மெண்டிஸ், கொழும்பில் உள்ள தனது பழைய ஸ்டாம்பிங் மைதானத்தில் இருக்கும்போது கூறுகிறார், அங்கு அவர்கள் தங்கள் அனைத்து குரூப் பி போட்டிகளுக்கும் தளமாகக் கொண்டுள்ளனர்.

அவரைச் சுற்றி, டிரஸ்ஸிங் ரூம் பரபரப்பாக இருக்கிறது, வியாழக்கிழமை இலங்கைக்கு எதிரான முக்கியமான போட்டிக்கு வீரர்கள் தயாராகும் போது அவர் வளர்த்த அணி மனப்பான்மையால் நிரம்பியுள்ளது . மேலும் அங்குதான் அவர் ஓமன் கிரிக்கெட்டின் தலைமையுடன் ஒரு உரையாடலை நினைவு கூர்ந்தார், அதுதான் அவர் நிரந்தரமாக நிலைத்திருக்க ஊக்கியாக இருந்தது.

"பங்கஜ் [ஓமன் கிரிக்கெட்டின் தலைவர் கிம்ஜி] எவ்வளவு நேரம் நான் தொடர்ந்து விளையாடப் போகிறேன், நான் வந்து செட்டில் ஆக விரும்புகிறேனா என்று கேட்டார்," என்று மெண்டிஸ் கூறுகிறார். "அந்த நேரத்தில், அது சரியான இடம் என்பதை நான் கண்டுபிடித்தேன். மேலும், எல்லாவற்றிற்கும் மேலாக, ஓமன் கிரிக்கெட்டை நிர்வகித்து வந்தவர்கள் அற்புதமானவர்கள் என்று நான் சொல்ல வேண்டும்."

சர்வதேச விளையாட்டில் மெண்டிஸ் கண்டறிந்தது அரிதானது. பல பயிற்சியாளர்கள் குழு தலையீட்டை எதிர்த்துப் போராடினாலும், அவருக்கு "சுதந்திரமான கையை" வழங்க ஒரு தலைவர்கள் குழு இருந்தது.

"அவர்கள் எனக்கு அதிகாரம் கொடுத்ததால், வாரியத்தில் பணிபுரிவது எனக்கு மிகவும் பிடித்திருந்தது... நாங்கள் பல [முன்மொழிவுகளை] முன்னெடுத்துச் சென்றோம். உங்களுக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது, சில சமயங்களில் நாங்கள் தோல்வியடைந்தோம், ஆனால் நீங்கள் அதை சரிசெய்து முன்னேறுங்கள்."

மெண்டிஸின் பதவிக் காலத்தில் ஓமன் கிரிக்கெட்டின் வளர்ச்சியின் அகலத்தையும் ஆழத்தையும் புரிந்து கொள்ள, முதலில் ஒரு படி பின்வாங்க வேண்டும். அவர் தொடங்கியபோது, அவர்களின் உள்கட்டமைப்பு மிகக் குறைவாகவே இருந்தது. 1979 ஆம் ஆண்டு மறைந்த கனக்சி ஜி கிம்ஜியால் நிறுவப்பட்ட ஓமன் கிரிக்கெட், 2000 ஆம் ஆண்டு ஐ.சி.சி.யின் இணைப்பு உறுப்பினரானது, 2015 ஆம் ஆண்டு - மெண்டிஸ் இணைந்த மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு - டி20 அந்தஸ்தையும், 2019 ஆம் ஆண்டு ஒருநாள் அந்தஸ்தையும் பெற்றது. இன்று, மஸ்கட், பெரும்பாலான டெஸ்ட் நாடுகளுடன் போட்டியிடும் உலகத் தரம் வாய்ந்த வசதிகளைக் கொண்டுள்ளது.

இந்த அகாடமி ஏழு பிட்ச்கள் (வேகமான, மெதுவான மற்றும் சாதாரண) கொண்ட அதிநவீன உட்புற வசதியைக் கொண்டுள்ளது, இது முழுமையாக குளிரூட்டப்பட்ட சூழலில் அமைந்துள்ளது, அதே நேரத்தில் தரிசு நிலம் "அழகான பசுமையான" புல்வெளியால் மாற்றப்பட்டுள்ளது, அரசாங்கம் சமீபத்தில் வாரியத்திற்கு மூன்று கூடுதல் மைதானங்களை பரிசாக வழங்கியது.

மஸ்கட்டை மையமாகக் கொண்டிருந்தாலும், கிரிக்கெட் ஒரு தலைநகர-நகர விளையாட்டாக மட்டும் இல்லாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, சலாலா மற்றும் சோஹர் வரை விளையாட்டை எடுத்துச் செல்ல மெண்டிஸ் முயற்சிக்கிறார். இருப்பினும், சர்வதேச கிரிக்கெட்டின் உயர்மட்டப் பிரிவிற்கான பாதை சிக்கல்கள் இல்லாமல் இல்லை.

2024 டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு, "கௌரவ" வாரியத்திலிருந்து தொழில்முறை நிறுவனமாக மாறுவது, அகிப் இலியாஸ் மற்றும் ஜீஷன் மக்சூத் போன்ற நட்சத்திரங்கள் உட்பட 11 மூத்த வீரர்கள், பரிசுத் தொகை செலுத்தப்படாதது தொடர்பாக வாரியத்துடன் மோதியபோது, திருப்புமுனையை அடைந்தது .

இதன் விளைவுகள் கடுமையாக இருந்தன. வாரியம் மத்திய ஒப்பந்தங்களை இடைநிறுத்தியது, மேலும் ஓமானில் வசிப்பது பெரும்பாலும் இந்த விளையாட்டு விசாக்களுடன் தொடர்புடையது என்பதால், பல வீரர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

ஜூலை 2025 க்குள் அனைத்து நிலுவைத் தொகைகளையும் செலுத்துவதாக வாரியம் இறுதியில் உறுதியளித்த போதிலும் , நடைமுறைத் தடைகள் காரணமாக தாமதம் ஏற்பட்டதாகக் கூறி, இந்த சம்பவம் வேகமாக வளர்ந்து வரும் அமைப்பில் உராய்வை எடுத்துக்காட்டுகிறது.

"நல்லதை மட்டுமே செய்ய விரும்பும் உணர்ச்சிவசப்பட்ட நபர்கள்" என்று வாரிய உறுப்பினர்களைக் கருதும் மெண்டிஸுக்கு, இந்தத் தடைகள் பயணத்தின் ஒரு பகுதியாக இருந்தன.

"தடைகள் இருந்தன என்று நான் கூறுவேன், நீங்கள் அதைக் கடக்க வேண்டும்," என்று மெண்டிஸ் தத்துவார்த்தமாக கூறுகிறார். "தடைகள் வரும்போது, நாங்கள் அதை ஒரு குழுவாக விவாதித்து ஆக்கபூர்வமான முடிவுகளை எடுக்க முயற்சிக்கிறோம். நாங்கள் ஒரு அசோசியேட் நாடு, அசோசியேட்டிற்கும் டெஸ்டுக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது."

மெண்டிஸ் இந்தப் பிராந்தியத்தில் முன்னுரிமைகள் குறித்து யதார்த்தமானவர். ஓமான் ஒரு பகுதியாக இருக்கும் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலில், அவர்களின் வீரர்கள் குழுவின் பணி அட்டவணைக்கு ஏற்றவாறு வெள்ளை பந்து கிரிக்கெட்டில் கவனம் செலுத்தப்படுகிறது என்பதை அவர் புரிந்துகொள்கிறார்.

"உள்கட்டமைப்பு மற்றும் அனைத்தும் வெள்ளை பந்து விளையாட்டுக்கு ஏற்றதாக உள்ளன," என்று மெண்டிஸ் கூறுகிறார். "அவர்களில் பெரும்பாலோர் வேலைக்காக அங்கு வருகிறார்கள், இருப்பினும் இப்போது அது சற்று மாறி வருகிறது. அணி சிறப்பாக செயல்படும்போது, மக்கள் பேசத் தொடங்குகிறார்கள்... 1996 இல் நாங்கள் [இலங்கை] உலகக் கோப்பையை வென்றது போல."

1970கள் மற்றும் 80களில் உலகின் மிகவும் பயங்கரமான பந்து வீச்சாளர்களை எதிர்கொண்ட ஒரு பேட்ஸ்மேனாக, மெண்டிஸ் நவீன விளையாட்டை ஒரு நுணுக்கமான பார்வையுடன் பார்க்கிறார். அவர் விளையாட்டுத் திறனை வியக்கும்போது, தூய்மையான கலைகளில் சரிவைக் காண்கிறார்.

"நவீன கால கிரிக்கெட் முற்றிலும் வித்தியாசமானது... இது கிட்டத்தட்ட விளையாட்டு வீரர்கள் விளையாடுவது போன்றது. ஆனால் பேட்டிங் நுட்பமும் தரமும் கொஞ்சம் குறைந்துவிட்டன என்று நான் கூறுவேன்."

ஆனால் அதையும் மீறி, நவீன வீரர் தனது சகாப்தத்துடன் ஒப்பிடும்போது கொண்டிருக்கும் பாதுகாப்பை அவர் பொறாமைப்படுகிறார். "இன்று நீங்கள் கிரிக்கெட்டுக்குள் வந்து அதை ஒரு தொழிலாக மாற்றுவேன் என்று சொல்லலாம். அது ஒரு நன்மை."

https://www.espncricinfo.com/story/why-oman-became-home-to-sri-lanka-s-duleep-mendis-1523579

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, alvayan said:

இந்த லீவு விட்ட சம்பவம் இரண்டு நடந்ததா....உலக சம்பியனான இந்தியாவை வீழ்த்தியதன் பினர் நடந்த போட்டியில் இலங்கை வென்றது என்பதும் இதுதானோ ..அப்ப விளப்பம் குறைந்த பருவம்....

83 இல் உலக ஒருநாள் சாம்பியன் இந்தியா . அணித்தலைவர்- கபில் தேவ்

84/85 இல் இங்கிலாந்துடன் 5 டெஸ்ட்போட்டி விளையாடியது. இங்கிலாந்து 2 :1 இல் வென்றது. அசாருதீன் விளையாடிய முதல் 3 போட்டிகளிலும் 100 ஒட்டங்கள் ( இச்சாதனை இன்னும் முறியடியக்கப்படவில்லை) . அணித்தலைவர்- கவாஸ்கர்

பிறகு இலங்கைக்கு கபில் தேவ் தலைமையில் இந்தியா சென்றது

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, alvayan said:

நீங்க எங்கையோ போய்ட்டீங்க...உங்க ஏரியாவில எனக்கு சீற் பிடிச்சு வைச்சிருக்கிறீங்களா...

கூட்டணியில் சீட் இல்லாவிட்டாலிம் இதயத்தில் இடமுண்டு 😂

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, alvayan said:

இந்த லீவு விட்ட சம்பவம் இரண்டு நடந்ததா....உலக சம்பியனான இந்தியாவை வீழ்த்தியதன் பினர் நடந்த போட்டியில் இலங்கை வென்றது என்பதும் இதுதானோ ..அப்ப விளப்பம் குறைந்த பருவம்....

  1. முதலாவது டெஸ்ட் வெற்றிக்கு பின் (இந்தியாவை வென்றது) - ஜேஆர் லீவு விட்டார். மெண்டில் கேப்டன். 1985. அப்போ இந்தியா ஒருநாள் உலக கோப்பை சாம்பியன். டெஸ்டிற்க்கென அப்போ உலக போட்டி (WTC) இருக்கவில்லை. ஆகவே ODI உலக சாம்பியனை Test போட்டியில் இலங்கை வென்றாலும் கூட, உலக சாம்பியன் அணியை வீழ்தியதாக மார்தட்டி கொண்டது.

  2. இதேபோல் ஒரு விடுமுறை 1996 இல், லாகூரில் றணதுங்க தலைமையிலான அணி அவுஸ்ரேலிய அணியை வீழ்த்தி ஒருநாள் உலக கோப்பையை வென்ற போது சந்திரிகாவால் அறிவிக்கப்பட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கந்தப்பு said:

அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் பெரும்பாலோர் இந்தியா அணிக்கே ஆதரவு. கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், சிவராமகிருஷ்ணன் போன்ற தமிழக வீரர்கள் இந்தியா அணியில் இடம் பிடித்தார்கள். இலங்கை வென்றதும் ஜெ ஆர் ஜெயவர்த்தன மறுநாள் அரச விடுமுறையாக அறிவித்தார். இலங்கை நடுவர்கள் அப்பட்டமாக இலங்கை அணிக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கினார்கள். இந்தியா அணித்தலைவர் கபில்தேவ், இலங்கை அணி வெளிநாட்டில் டெஸ்ட் போட்டியில் வெல்லமாட்டார்கள் என்று போட்டி முடிவில் நடைபெற்ற பேட்டி ஒன்றில் கூறியது இப்பொழுதும் ஞாபகத்தில் இருக்கிறது. பிறகு நடந்த ஒருநாள் போட்டி ஒன்றில் இந்தியா வெல்லும் நிலையில் இருக்கும்போது காலநிலை சரியில்லை என்று சொல்லி போட்டியினை இலங்கை நடுவர்கள் நிறுத்தியிருந்தார்கள்.

இந்த தொடரில் இலங்கை நடுவர்களையும் சேர்த்து கொண்டு 13 பேராக களம் இறங்கியது😂.

பின்னர் ஒரு பேட்டியில் காலில் பந்து பட்டாலே எல்பி கொடுப்பார்கள் என்பதால் - தான் காலில் பந்தை முடிந்தளவு படவிடாமலே பேட்டிங் செய்ததாக சிறீகாந்த் கூறினார்😂.

பல்லேகல்வுக்கு முன் அஸ்கிரிய தான் கண்டியின் சர்வதேச மைதானம். அங்கே மலைகளின் நிழல் மைதானத்தில் விழும். இதையும் ஒரு காரணமாக காட்டி - நடுவர்கள் ஒரு போட்டியை பேட்லைட் என நிபாட்டினார்கள் என நினைவு.

எல்லாம் பிளக் அண்ட் வைட் டிவியில் பார்தது.

இதில் ஜோக் என்னெவென்றால் அப்போ இலங்கையின் 4 முக்கிய அம்பயர்களில் 3 பேர் தமிழர். பொன்னுத்துரை, ஆனந்தப்பா, பிரான்சிஸ். இலங்கை வென்ற போட்டியில் பொன்னுத்துரை அம்பயர்.

ஆனந்தப்பாவும், பிரான்சிசும் 90 களின் நடுபகுதி வரை வேலை செய்தனர். பிரான்சிஸ் வெள்ளவத்தையில் வசித்தார். அடிக்கடி பஸ்சில் காண்பதுண்டு.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, alvayan said:

நான் அந்த நேரம்..இந்திராகாந்தி பட ஆர்ட்டிஸ்ட்....கிளிநொச்சி உருத்திரபுர வாசிகசாலையில் நான் வரைந்தபடம் மாட்டப்பட்டிருந்தது ... பின்னர் இந்தியன் ஆமியிடம் சித்திரவதையும் ...அடியோடையும் இந்தியா வெறுப்பு....இந்திய கிரிகட் வீரர்களின் தனி விருப்பாலும் ....இலங்கை அணி மீதான வெறுப்பாலும் இப்ப இந்திய அணி ஆதரவாளன்

எனது ஆதரவு நிலை முழுக்க முழுக்க அரசியல் சார்ந்தே.

1987 வரை இந்திய அணி ஆதரவு.

1987-2009 வரை இலங்கை.

2009 இற்கு பின் ஆப்கானிஸ்தான். அப்போ எம்மை அடிக்காத ஒரு அணியை தேடியபோது, லீக் போட்டிகளில் ஆப்கான் சிறப்பாக ஆடுவதாக என் நண்பி ஒருவர் சொன்னார்.

அப்போ ஜேர்சி போன்ற சிறிய நாடுகளுடம் ஆப்கான் மோதி மேலே வந்து கொண்டிருந்த காலம்.

அப்போதிருந்து ஆப்கானிஸ்தான் ரசிகர்.

2019 உலக கோப்பை இலங்கை-ஆப்கானிஸ்தான் ஆட்டத்தில் Cardiff வரை போய் ஆப்கானிஸ்தானை ஆதரித்தேன்😂.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.