Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்+

மக்களே, இத்திரியில் இந்திய-தமிழீழப் போர் மூள முன்னர் இந்தியப் படைகள் எமது மண்ணில் செய்த நாச வேலைகள் அனைத்தையும் பதியுங்கள்.

அடுத்த தலைமுறைக்கு வரலாறு சொல்லிச் செல்ல வேண்டும்.

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

முன்னாள் விடுதலைப் போராட்ட வீரனின் வாக்குமூலம்:

  • திலீபனின் உண்ணாவிரதத்தின் முன் முல்லை மாவட்டத்தில் வெலிஓயா சிங்களக் குடியேற்றத்தையும், சிங்கள ஊர்காவற்படையினரின் அட்டகாசத்தை நிறுத்த மக்கள் போராடினார்கள். இப்போராட்டம் மன்னாரில் நடக்கும்போது இந்திய ராணுவத்தால் ஒரு தமிழ் பொதுமகன் சுட்டுக் கொல்லப்பட்டார்.

  • அதன் பின்னர் புளொட் இயக்கத்தினரால் (இந்தியா வளர்த்த கூலிப்படை) கப்டன் தனம் என்ற புலி இயக்கப்போராளி வவுனியாவில் கொல்லப்பட்டார். இதை இந்திய இராணுவம் தடுக்கத் தவறிவிட்டது.

  • இதன் பின் லெப். கேணல் திலீபனின் நியாயமான 5 அம்சக் கோரிக்கைகளையும் நிறைவேற்றத் தவறியமை

  • குமரப்பா, புலேந்திரன் உட்பட 12 போராளிகளையும் கொழும்புக்கு அனுப்ப முற்பட்டமை

இவற்றால்தான் இப் போர் ஏற்பட்டது.

Edited by நன்னிச் சோழன்

  • நன்னிச் சோழன் changed the title to இந்திய- தமிழீழப் போர் மூள முன்னர் இந்தியப்படை செய்த நாசங்கள்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இந்தியா தீட்டிய நாச திட்டங்களும் அவை தமிழரின் பார்வையிலும்:

புலிகளின் காலத்தில் நடந்த வாதங்கள்:

  • கருத்துக்கள உறவுகள்

https://www.facebook.com/reel/1567565054

Edited by Paanch

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நன்னிச் சோழன் said:

நாச வேலைகள்

9 hours ago, நன்னிச் சோழன் said:

இந்திய-தமிழீழப் போர் மூள முன்னர்

வடிவேலு ஜோக் “ஜாமீன் கடல்லையே இல்லையாம்” தான் நினைவுக்கு வந்தது.

புலிகள் ஏக பிரதிநிதிகள் என்பதை உடைக்க இந்தியா பல வேலைகளை செய்தது.

தியாகதீபத்தின் கோரிக்கைகளை அநியாயமாக உதாசீனம் செய்தது.

பன்னிருவேங்கைகள் கொழும்புக்கு மாற்றப்படுவதை வேடிக்கை பார்த்தது.

ஆனால்….

இந்த காலத்தில் தமிழ் மக்கள் மீது இந்திய படையின் அராஜகம் எண்டால் - கிட்டதட்ட குச் நஹி.

ஆனால் இக்காலத்தில் முஸ்லிம்கள் எதிர்காலம் பற்றி கொஞ்சம் பயத்துடனும்…

வெலி ஓயா முதல் பானமை வரை சிங்கள குடியேற்றவாசிகள் அதீத கலக்கத்துடனும் இருந்தனர்.

#வரலாறு முக்கியம்

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

இந்தியப் படையுடனான போர் தொடங்குவதற்கு முன் ஆயுதமில்லாத புலிகள் 22 பேர்வரை இவர்களது கையாட்களால் கொல்லப்பட்டார்கள் என எண்ணுகிறேன்.

( எண்ணிக்கை சரியாக தெரியவில்லை)

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

இந்தியப் படையுடனான போர் தொடங்குவதற்கு முன் ஆயுதமில்லாத புலிகள் 22 பேர்வரை இவர்களது கையாட்களால் கொல்லப்பட்டார்கள் என எண்ணுகிறேன்.

( எண்ணிக்கை சரியாக தெரியவில்லை)

ஓம் ஆங்காங்கே மீள வந்த மாற்று இயக்கங்களால் புலிகள் சிலர் கொல்லப்பட்டது உண்மை.

எனது நினைவு படி இது 10 க்குள் என நினைக்கிறேன்.

ஆனால் பொது சனங்கள் மீது எந்த தாக்குதலும் இல்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+
8 hours ago, goshan_che said:

ஆனால் பொது சனங்கள் மீது எந்த தாக்குதலும் இல்லை.

பொது சனம் ஒராள் இந்திய ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டார், மன்னாரில். ( இரண்டாவது மறுமொழிப் பெட்டியில் தெளிவாக உள்ளது)

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நன்னிச் சோழன் said:

பொது சனம் ஒராள் இந்திய ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டார், மன்னாரில். ( இரண்டாவது மறுமொழிப் பெட்டியில் தெளிவாக உள்ளது)

தகவலுக்கு நன்றி. அந்த காலத்தில் தீபம் என்ற அமைப்பு ஒன்று யாழில் வரும் செய்திதாள்களில் உள்ள முக்கிய செய்திகளை வெட்டி பெரிய ஆவண காப்பு புதங்களில் ஒட்டும் வேலையை செய்து வந்தது.

ஒவ்வொரு நாளின் செய்தியும் பெரிய பெரிய புத்தகங்களில் வெட்டி ஒட்டப்படும்.

இவை பின் தேதிவாரியாக பேணப்பட்டன. 1986-1990 வரை இயங்கியது தெரியும்.

அதன் பின் என்னவானதோ அறியேன்.

பூர்ணலிங்கம் என்பவர் இதை நடத்தினார். புலம் பெயர் முயற்சி என நினைக்கிறேன்.

இவை கிடைத்தால் உங்களுக்கு பொக்கிசம் போல இருக்கும்.

பிகு

மன்னார் சம்பவம் பற்றி லேசாக நினைவு உள்ளது.

அப்போ மக்கள் கொஞ்சம் அதிகமாகவே கம்பிகளுக்கு அப்பால் நிண்ட இந்திய படைகளை சீண்டினார்கள்.

சிப்பாய் ஒருவர் சினமேறி இதை செய்தார் என கேள்விபட்ட, வாசித்த நினைவு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+
44 minutes ago, goshan_che said:

தகவலுக்கு மிக்க நன்றி. நான் தேடிப்பார்க்கிறேன்.

22 hours ago, ஈழப்பிரியன் said:

இந்தியப் படையுடனான போர் தொடங்குவதற்கு முன் ஆயுதமில்லாத புலிகள் 22 பேர்வரை இவர்களது கையாட்களால் கொல்லப்பட்டார்கள் என எண்ணுகிறேன்.

( எண்ணிக்கை சரியாக தெரியவில்லை)

தகவலுக்கு நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
On 30/12/2025 at 10:02, ஈழப்பிரியன் said:

இந்தியப் படையுடனான போர் தொடங்குவதற்கு முன் ஆயுதமில்லாத புலிகள் 22 பேர்வரை இவர்களது கையாட்களால் கொல்லப்பட்டார்கள் என எண்ணுகிறேன்.

நான் அப்போது வட்டுகோட்டை தொழில்நூட்ப கல்லூரியில் படித்துக்கொண்டு இருந்தேன்.

விடுதலை புலிகளின் இளம் போராளிகள் மூவரை வாகனத்தில் செல்லும் போது இந்திய துணை ராணுவ குழு ஒன்று இடைமறித்து தாக்கி கொன்று இருந்தார்கள். பத்திரிகைகளில் படத்தோடு செய்திகள் வாசித்தது ஞாபகம்.

நடந்தது வடமராட்சி, சுழிபுரம் அண்டிய பகுதியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

Edited by Sasi_varnam

  • கருத்துக்கள உறவுகள்
On 30/12/2025 at 01:00, நன்னிச் சோழன் said:

முன்னாள் விடுதலைப் போராட்ட வீரனின் வாக்குமூலம்:

  • திலீபனின் உண்ணாவிரதத்தின் முன் முல்லை மாவட்டத்தில் வெலிஓயா சிங்களக் குடியேற்றத்தையும், சிங்கள ஊர்காவற்படையினரின் அட்டகாசத்தை நிறுத்த மக்கள் போராடினார்கள். இப்போராட்டம் மன்னாரில் நடக்கும்போது இந்திய ராணுவத்தால் ஒரு தமிழ் பொதுமகன் சுட்டுக் கொல்லப்பட்டார்.

  • அதன் பின்னர் புளொட் இயக்கத்தினரால் (இந்தியா வளர்த்த கூலிப்படை) கப்டன் தனம் என்ற புலி இயக்கப்போராளி வவுனியாவில் கொல்லப்பட்டார். இதை இந்திய இராணுவம் தடுக்கத் தவறிவிட்டது.

  • இதன் பின் லெப். கேணல் திலீபனின் நியாயமான 5 அம்சக் கோரிக்கைகளையும் நிறைவேற்றத் தவறியமை

  • குமரப்பா, புலேந்திரன் உட்பட 12 போராளிகளையும் கொழும்புக்கு அனுப்ப முற்பட்டமை

இவற்றால்தான் இப் போர் ஏற்பட்டது.

இன்னும் ஒரு காரணம் யாழ்ப்பாணத்தில் ஈழநாடு பத்திரிகை காரியாலயம் இந்திய ராணுவத்தால் அடித்து நொறுக்கப்பட்டது. அதோடு புலிகளின் தொலை தொடர்பு கோபுரம் ஒன்றையும் குண்டு வைத்து தகர்த்து இருந்தார்கள். இந்த சம்பவங்களின் + திலீபன் அண்ணா, பன்னிரு வேங்கைகள் சம்பவங்களின் பின்னரே போர் மூண்டது.

Edited by Sasi_varnam

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+
24 minutes ago, Sasi_varnam said:

இன்னும் ஒரு காரணம் யாழ்ப்பாணத்தில் ஈழநாடு பத்திரிகை காரியாலயம் இந்திய ராணுவத்தால் அடித்து நொறுக்கப்பட்டது. அதோடு புலிகளின் தொலை தொடர்பு கோபுரம் ஒன்றையும் குண்டு வைத்து தகர்த்து இருந்தார்கள். இந்த சம்பவங்களின் + திலீபன் அண்ணா, பன்னிரு வேங்கைகள் சம்பவங்களின் பின்னரே போர் மூண்டது.

தகவலுக்கு மிக்க நன்றி ...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

@goshan_che @Sasi_varnam @ஈழப்பிரியன்

நீங்கள் மூவரும் கூறியதை வைத்து மாவீரர் பட்டியலினுள் தேடிப் பார்த்தேன்.

மொத்தம் 16 போராளிகள் புளட், இ.என்.டி.எல்.எஃவ்., மற்றும் ரெலோ ஆகிய தேசவிரோத கும்பல்களால் வீரச்சாவடைந்துள்ளனர். அவர்களில் புளட் என்ற கூலிப்படையைச் சேர்ந்தவர்களாலையே அதிகளவான போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் ஓகஸ்ட் 5ம் திகதி புலிகள் தமது ஆயுதங்களை ஒப்படைத்த பின்னரே - ஆயுதமற்றவர்களா பயணித்த போது - இவ்விந்திய கூலிப்படைகளால் தேசத்திற்கு விரோதமான முறையில் கொல்லப்பட்டனர். புலிகள் ஆயுதங்களைக் களைந்த பின்னர் இவர்களிற்கு இந்தியப் படையினர் ஆயுதங்களை வழங்கி புலிகளைக் கொல்ல தூண்டிவிட்டுள்ளனர்.

ஆக மொத்ததில் இந்தியா நரி வேலை செய்துள்ளது. இதையும் அறியாமல் இந்த இந்தியக் கூலிப்படைகள் தமது சொந்த இனத்தின் விடுதலைக்காகப் போராடிய வீரர்கள் ஆயுதமற்றவர்களாக இருந்தபோது கொன்றுள்ளனர். வெட்கித் தலைகுனிய வேண்டிய செயல்!

இவர்களை பின்னாளில் புலிகள் வேட்டையாடியதில் எந்தத் தவறும் இல்லை.

(இவர்கள் தவிர இன்னும் 6 போராளிகள் இதே காலகட்டத்தில் வீரச்சாவடைந்துள்ளனர். எனினும் அவர்களில் நால்வர் எதிர்பாராத வெடி நேர்ச்சிகளிலும் இருவர் தமிழீழக் கடற்பரப்பில் சிறிலங்காக் கடற்படையுடனான சமரிலும் வீரச்சாவடைந்துள்ளனர். மொத்தம் 22, ஈழப்பிரியன் அவர்களின் கணக்குச் சரியே.)

இந்திய நரிவேலையால் மாவீரரான போராளிகள்:

  • வீரவேங்கை யோகன் - 16.08.1987

  • வேப்பங்குளம் பகுதியில் புளொட் கும்பலுடன் ஏற்பட்ட மோதலில் வீரச்சாவு

  • வீரவேங்கை அருச்சுனா, வீரவேங்கை ரஞ்சன், வீரவேங்கை கில்மன் - 26.08.1987

  • நானானட்டான் பகுதியில் புளொட் கும்பலின் வெறியாட்டத்தில் வீரச்சாவு

  • வீரவேங்கை டென்சில் - 02.09.1987

  • பெரியபண்டிவிரிச்சான் பகுதியில் புளொட் கும்பலின் வெறியாட்டத்தில் வீரச்சாவு

  • கப்டன் தனம், 2ம் லெப்டினன்ட் கண்ணன் - 04.09.1987

  • குருமன்காட்டுச் சந்தியில் புளொட் கும்பல் நடத்திய தாக்குதலில் வீரச்சாவு

  • 2ம் லெப்டினன்ட் கைலை, வீரவேங்கை இரத்தினம் (சிவகுமார்) - 04.09.1987

  • பன்றிக்கெய்தகுளம் பகுதியில் புளொட் கும்பல் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் வீரச்சாவு

  • வீரவேங்கை அமீர் (அமல்) - 07.09.1987

  • குளவிசுட்டான் பகுதியில் புளொட் கும்பல் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் வீரச்சாவு

  • லெப்டினன்ட் கொலின்ஸ் (லூக்) - 07.09.1987

  • தம்பனை பகுதியில் புளொட் கும்பல் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு

  • வீரவேங்கை ராஜேந்தர் - 12.09.1987

  • கிளிநொச்சி பகுதியில் ஈ.என்.டி.எல்.எவ் கும்பல் நடத்திய தாக்குதலில் வீரச்சாவு

  • வீரவேங்கை அமலதாஸ் - 26.09.1987

  • ரெலோ கும்பல் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் வீரச்சாவு

  • வீரவேங்கை தாஸ் - 02.10.1987

  • கற்கபுரம் பகுதியில் புளொட் கும்பலின் தாக்குதலில் வீரச்சாவு

  • வீரவேங்கை பாபு - 07.10.1987

  • கற்கபுரத்தில் புளொட் கும்பல் மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவு

  • 2ம் லெப்டினன்ட் விக்கி - 08.10.1987

  • 10ம் வாய்க்கால் பகுதியில் ஈ.என்.டி.எல்.எவ் கும்பல் மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவு

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, நன்னிச் சோழன் said:

மொத்தம் 16 போராளிகள் புளட், இ.என்.டி.எல்.எஃவ்., மற்றும் ரெலோ ஆகிய தேசவிரோத கும்பல்களால் வீரச்சாவடைந்துள்ளனர்.

சுழிபுரத்திலும் அரியாலையிலும் போட்டுத் தள்ளியது புளட் தான்.

மற்றைய விபரங்கள் தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, ஈழப்பிரியன் said:

சுழிபுரத்திலும் அரியாலையிலும் போட்டுத் தள்ளியது புளட் தான்.

மற்றைய விபரங்கள் தெரியவில்லை.

சுழிபுரத்தில் நடந்த அறுவர் படுகொலையைக் குறிப்பிடுகிறீர்களா அண்ணை?

https://padippakam.com/padippakam/document/ltte/fallencadres/Chulipuram01.pdf

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, ஏராளன் said:

சுழிபுரத்தில் நடந்த அறுவர் படுகொலையைக் குறிப்பிடுகிறீர்களா அண்ணை?

https://padippakam.com/padippakam/document/ltte/fallencadres/Chulipuram01.pdf

இந்தியன் ஆமி காலத்தில் நடந்ததை எழுதினேன்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Sasi_varnam said:

இன்னும் ஒரு காரணம் யாழ்ப்பாணத்தில் ஈழநாடு பத்திரிகை காரியாலயம் இந்திய ராணுவத்தால் அடித்து நொறுக்கப்பட்டது. அதோடு புலிகளின் தொலை தொடர்பு கோபுரம் ஒன்றையும் குண்டு வைத்து தகர்த்து இருந்தார்கள். இந்த சம்பவங்களின் + திலீபன் அண்ணா, பன்னிரு வேங்கைகள் சம்பவங்களின் பின்னரே போர் மூண்டது.

சரியான தகவல்.

2 hours ago, நன்னிச் சோழன் said:

@goshan_che @Sasi_varnam @ஈழப்பிரியன்

நீங்கள் மூவரும் கூறியதை வைத்து மாவீரர் பட்டியலினுள் தேடிப் பார்த்தேன்.

மொத்தம் 16 போராளிகள் புளட், இ.என்.டி.எல்.எஃவ்., மற்றும் ரெலோ ஆகிய தேசவிரோத கும்பல்களால் வீரச்சாவடைந்துள்ளனர். அவர்களில் புளட் என்ற கூலிப்படையைச் சேர்ந்தவர்களாலையே அதிகளவான போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் ஓகஸ்ட் 5ம் திகதி புலிகள் தமது ஆயுதங்களை ஒப்படைத்த பின்னரே - ஆயுதமற்றவர்களா பயணித்த போது - இவ்விந்திய கூலிப்படைகளால் தேசத்திற்கு விரோதமான முறையில் கொல்லப்பட்டனர். புலிகள் ஆயுதங்களைக் களைந்த பின்னர் இவர்களிற்கு இந்தியப் படையினர் ஆயுதங்களை வழங்கி புலிகளைக் கொல்ல தூண்டிவிட்டுள்ளனர்.

ஆக மொத்ததில் இந்தியா நரி வேலை செய்துள்ளது. இதையும் அறியாமல் இந்த இந்தியக் கூலிப்படைகள் தமது சொந்த இனத்தின் விடுதலைக்காகப் போராடிய வீரர்கள் ஆயுதமற்றவர்களாக இருந்தபோது கொன்றுள்ளனர். வெட்கித் தலைகுனிய வேண்டிய செயல்!

இவர்களை பின்னாளில் புலிகள் வேட்டையாடியதில் எந்தத் தவறும் இல்லை.

(இவர்கள் தவிர இன்னும் 6 போராளிகள் இதே காலகட்டத்தில் வீரச்சாவடைந்துள்ளனர். எனினும் அவர்களில் நால்வர் எதிர்பாராத வெடி நேர்ச்சிகளிலும் இருவர் தமிழீழக் கடற்பரப்பில் சிறிலங்காக் கடற்படையுடனான சமரிலும் வீரச்சாவடைந்துள்ளனர். மொத்தம் 22, ஈழப்பிரியன் அவர்களின் கணக்குச் சரியே.)

இந்திய நரிவேலையால் மாவீரரான போராளிகள்:

  • வீரவேங்கை யோகன் - 16.08.1987

  • வேப்பங்குளம் பகுதியில் புளொட் கும்பலுடன் ஏற்பட்ட மோதலில் வீரச்சாவு

  • வீரவேங்கை அருச்சுனா, வீரவேங்கை ரஞ்சன், வீரவேங்கை கில்மன் - 26.08.1987

  • நானானட்டான் பகுதியில் புளொட் கும்பலின் வெறியாட்டத்தில் வீரச்சாவு

  • வீரவேங்கை டென்சில் - 02.09.1987

  • பெரியபண்டிவிரிச்சான் பகுதியில் புளொட் கும்பலின் வெறியாட்டத்தில் வீரச்சாவு

  • கப்டன் தனம், 2ம் லெப்டினன்ட் கண்ணன் - 04.09.1987

  • குருமன்காட்டுச் சந்தியில் புளொட் கும்பல் நடத்திய தாக்குதலில் வீரச்சாவு

  • 2ம் லெப்டினன்ட் கைலை, வீரவேங்கை இரத்தினம் (சிவகுமார்) - 04.09.1987

  • பன்றிக்கெய்தகுளம் பகுதியில் புளொட் கும்பல் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் வீரச்சாவு

  • வீரவேங்கை அமீர் (அமல்) - 07.09.1987

  • குளவிசுட்டான் பகுதியில் புளொட் கும்பல் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் வீரச்சாவு

  • லெப்டினன்ட் கொலின்ஸ் (லூக்) - 07.09.1987

  • தம்பனை பகுதியில் புளொட் கும்பல் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு

  • வீரவேங்கை ராஜேந்தர் - 12.09.1987

  • கிளிநொச்சி பகுதியில் ஈ.என்.டி.எல்.எவ் கும்பல் நடத்திய தாக்குதலில் வீரச்சாவு

  • வீரவேங்கை அமலதாஸ் - 26.09.1987

  • ரெலோ கும்பல் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் வீரச்சாவு

  • வீரவேங்கை தாஸ் - 02.10.1987

  • கற்கபுரம் பகுதியில் புளொட் கும்பலின் தாக்குதலில் வீரச்சாவு

  • வீரவேங்கை பாபு - 07.10.1987

  • கற்கபுரத்தில் புளொட் கும்பல் மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவு

  • 2ம் லெப்டினன்ட் விக்கி - 08.10.1987

  • 10ம் வாய்க்கால் பகுதியில் ஈ.என்.டி.எல்.எவ் கும்பல் மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவு

நேர்த்தி 👍

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.